Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -10

 

அத்தியாயம் – 10

கதிரவனின் இந்த மாற்றங்களை கருப்பசாமியின் மூலம் வேலுசாமி தெரிந்துக் கொண்டார். அவர் கனடா செல்லும் முன்பே கருப்புவிடம் கதிரவனின் நடவடிக்கைகளை கவனித்து தன்னிடம் சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு தான் சென்றார்.

 



Advertisement

மேலும் அவர் மாதம் ஒரு முறை கருப்புசாமிக்கு போன் செய்து கதிரவனை பற்றி கேட்டு தெரிந்து கொள்வர்.கருப்பசாமியின் மூலம் கதிரவனின் மாற்றங்கள் பற்றியும் கடையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றியும். கதிரவன் ரஞ்சனி காதல் பற்றியும் தெரிந்து கொண்டார்.

 

கதிரவனின் மாற்றம் அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. இருப்பினும் அவனுடைய காதல் வேலுசாமி அவர்களுக்கு சிறிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

Advertisement

 

Advertisement

“ரஞ்சு தீபாவளி வருதுடி உனக்கு என்ன வேணும் சொல்லு நான் வாங்கி தாரேன்”.

 

“எனக்கு எதும் வேண்டாம் கதிர், தீபாவளிக்கு கூட அப்பா, அண்ணா ரெண்டு பெரும் டிரஸ் வாங்கி தந்துட்டாங்க, இதுக்கு மேல வேற என்னடா நான் வாங்க போறேன் “.

Advertisement

 

“எதுக்கு ரஞ்சு என்ன ஒதுக்கியே வைக்குற, என்கிட்ட உரிமை எடுத்து ஏதுவும் கேக்க மாட்டேன்கிற. நானே வாங்கி தரேன்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்லுற”

 

“என்னோட உயிரே நீ தான்டி. நீயே என்ன ஒதுக்கி வைக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி” என்று கூறி கண்ணீர் வடித்தான்.

 

“டேய் மாமு என்னடா சின்ன பிள்ளை மாதிரி அழுகுற. உன்ன நான் ஏன்டா ஒதுக்கி வைக்க போறேன். நிஜமாவே உங்கிட்ட என்ன கேக்கணு தெரியலடா, சரி நீயே ஏதாவது வாங்கி குடு ஆன என்னால அதை வீட்டுக்குலாம் கொண்டு போக முடியாது நீ தான் வாச்சிக்கணும் ஓகே வா “

 

“செல்லம் என்னடி புதுசா மாமுலாம் கூப்புடுற “

 

“ஏன்டா நல்லா இல்லையா சரி விடு உன்ன கதிர்னு மட்டும்கூப்பிடுறேன்”.

 

“லூசு நல்லா தாண்டி இருக்கு அப்படியே கூப்புடு, சரி வா ஜவுளிக்கடைக்கு போலாம் உனக்கு டிரஸ் வாங்க “.

 

“உனக்கு நான் செலக்ட் பண்ணுறேன். எனக்கு நீ பண்ணு ஓகே வா. அதிக விலைல எடுக்காதடா கொஞ்சம் கம்மி விலைலயே எடு “என்றாள்.

 

கதிர் உன்கிட்ட நிறைய பணம் இருக்கா.எழுபதாயிரம் இருக்குடி உனக்கு வேண்டியதை வாங்கிக்கோ என்றான். உடனே அனு கதிரவனை பட்டு சேலை எடுக்க அழைத்து சென்றால். அங்கு லட்சுமி மட்டும் கனிமொழிக்கு சேலை வாங்கினால் கதிர் ஏதுவும் சொல்லாமல் அனு செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.அவர்கள் இருவருக்கு மட்டுமே அனு சேலை வாங்கினால்.

 

என் ரஞ்சு இப்படிலாம் பண்ணுற நீ. அவங்களுக்கு மட்டும் வாங்குற உனக்கும் ஒரு சேலை வாங்க வேண்டியது தானடி. டேய் இப்போ தானடா வேண்டாம்னு சொல்ல சொல்ல கேக்காம ஒன்னுக்கு ரெண்டா சுடிதார் எடுத்து குடுத்த அதுவே போதும் கதிர் ஸாரிலாம் வேண்டாம். எனக்கு கட்ட கூட தெரியாதுடா.

 

லூசு ஒழுங்கா அங்க போய் உக்காரு நானே உனக்கு ஸாரி எடுத்துக்குறேன். சொன்ன பேச்ச கேக்கவே மாட்டையாடா எரும, பன்னி, கழுதை என்று அனு கதிரை திட்டினால். லூசு ஒழுங்கா அங்க போய் உக்காருடி போடி என்றான்.

 

அனுவிற்கு மூவாயிரம் ரூபாய்க்கு இளம்பச்சை நிறத்தில் பட்டுச்சேலை ஒன்றை எடுத்தான். அனு கதிரவனிடம் கூறி வேலுசாமி மகேஷ் ஆகியோருக்கும் டிரஸ் எடுக்க செய்தால்.

 

 தீபாவளி அன்று கதிர் பள்ளப்பட்டி சென்று ரஞ்சுவின் வீட்டிற்கு சற்று தொலைவில் நின்று அவளை பார்த்துவிட்டு திரும்பி வந்து விட்டான்.

 

அனு கதிரவனை பார்த்து விட்டு திரும்பும் போதும் எதிரில் பேய்மாஸ்க் போட்டிருந்த சுஜியை பார்த்து பயந்து அனுவிற்கு அருகில் நின்றுந்த அகிலனை கட்டிப் பிடித்து விட்டாள். அகிலன் சிறக்கில்லாமல் வானத்தில் பறந்தான்.

 

அகிலன் ராமசந்திரனின் தங்கை ராஜலட்சுமியின் மகன், கீதாவின் அண்ணன். அகிலன் அழகு, அறிவு, படிப்பு, வேலை என்று அனைத்திலும் சிறந்து விளங்குபவன். அகில் எம்.இ முடித்துவிட்டு இப்பொழுது ஜெர்மனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறான். மாதம் ரெண்டு லட்சம் சம்பளம் வாங்குகிறான்.

 

அகிலனுக்கு அனு என்றாள் சிறுவயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். அனுவை யாரும் திட்டாமல் அடிக்காமல் பார்த்துக்கொள்வன். அகிலனின் அப்பா மாதவன் குடித்து விட்டு வந்து ராஜலட்சுமியிடம் சண்டை போடுவதை பார்த்துவிட்டு அகிலன் அழும் போது எல்லாம் அனு தான் தன் குறும்புத்தனங்களால் அவனை சிரிக்க வைப்பாள்.

 

அகிலனின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் அவளை அறியாமளே அவனுடன் இருந்தால் அவள்.அனு அவனை தவிர யாருடனும் பேச கூடாது விளையாடக் கூடாது என்று நினைப்பான். அனுவின் மீது மிகவும் போசஷிவாக இருப்பான். அகிலனுக்கு சிறுவயதில் அவள் மீது அன்பு மட்டுமே இருந்தது.

 

அனு வயதிற்குவந்து புனிதநிராட்டு விழா நடத்தப்பட்ட பொழுது அனுவிற்கு முறை மாப்பிளையாக அகிலனே அனைத்து சடங்குகளும் செய்தான். திருமணத்தில் நடைப் பெரும் நிகழ்வுகள் போலவே அனைத்தும் நடைப்பெற்றன. அந்த விழா அகிலனின் மனதில் காதலை ஏற்படுத்தியது. அனுவை தன் மனைவியாகவே எண்ண வைத்தது. பதினெட்டு வயதில் ஏற்பட்ட காதல் இருபத்திஐந்து வயதிலும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

 

 அனுவின் மேல் கொண்ட காதலால் அகில் பைத்தியமாகவே மாறி போனான்.இரண்டு வருடங்களுக்கு முன்பு அனுவிற்கு ஒரு பையன் லவ் லெட்டர் குடுக்க அதை கேள்விப்பட்ட அகிலன் அனுவிற்கு தெரியாமல் அந்த பையனை அடி வெளுத்து விட்டான்.அகிலன் அனுவை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான்.

 

சுஜியின் சிரிப்பு சத்தத்தில் கண் விழித்த அனு தான் யாரையோ கட்டி படித்துள்ளோம் தெரிந்து. உடனே இரண்டு அடி பின்னால் சென்று அவர் முகத்தை பார்த்தால். அகிலின் முகத்தை பார்த்ததும் அனு மகிழ்ச்சியுடன் அகில் அத்தான் எப்போ வந்திங்க. எப்படி இருக்கீங்க. ஜெர்மனி போனதுக்கு அப்பறம் எங்களலாம் மறந்துட்டீங்க போல.

 

என்ன அனு இப்படி சொல்லிட இந்த அந்தான் எங்க போனாலும் சரி என் குட்டிமாவ மாறாகவே மாட்டேன் என்றான் அவளின் தலையில் கைவைத்து தலையை தடவி கொடுத்தான் பாசமாக.அகில் அனு பிறந்ததில் இருந்தே அவளை குட்டிமா என்று தான் அழைப்பான்.

 

அனு வா கீழே போகலாம் அத்தான் நமக்காக நிறைய திங்ஸ் வாங்கிட்டு வந்துருக்காங்க அதை போய் பாக்கலாம். நீ போடி நான் அத்தான் கூட பேசிட்டு வாரேன் என்றாள் அனு . அத்தான் கூட அப்பறமா பேசுடி இப்போ வா கீழ போலாம். நிறைய சாக்லேட் இருக்கு நீ வரலைனா நானே எல்லாத்தையும் எடுத்துப்பேன் அப்பறம் உனக்கு தரமாட்டேன் என்றாள் சுஜி.

சுஜிமா நீ போடா நாங்க பேசிட்டு வாறோம் என்றான் அகில். அத்தான் ப்ளீஸ் எனக்காக நீங்க வாங்கிட்டு வந்ததை எடுத்து தாங்க இப்போவே ப்ளீஸ் ப்ளீஸ் என்றாள் சுஜி. அத்தான் இவ தொல்லை தாங்க முடியல வாங்க போலாம் நாம அப்பறமா பேசலாம் சரியா என்றாள் அனு.

அகிலுக்கு கொஞ்சம் வருத்தமா இருந்தாலும் அனு அவன் கையை பிடித்துக்கொண்டு கீழே அழைத்து சென்றது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.அனுவின் வீட்டில் இருந்த அனைவருக்கும் அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்கிவந்திருந்தான். கார்த்திக்கு போன், ராமசந்திரனுக்கு வாட்ச், கீதா மற்றும் சாந்திக்கு தங்கநகை, சுஜிக்கு மேக்கப் கிட் கிப்ட்டாக கொடுத்தான்.

 

அனுவிற்கு மிகுந்த வேலைபாடுகள் செய்யப்பட்ட பிரேஸ்லேட் வாங்கி வந்திருந்தான் அதை அவளிடம் கொடுக்க ராஜலட்சுமி அகில் நீயே அனு கைல போட்டுவிடு என்று கூற அகிலும் போட்டுவிட்டான். அனுவும் அகிலும் குழந்தையில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள் என்பதால் அனு இதை சாதாரணமாகவே நினைத்தால்.அனு அறியவில்லை இந்த அகிலனால் அவளுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை அவள் அனுபவிக்க போகிறாள் என்று.

 

கதிரவன் சக்கரவர்த்தி மற்றும் அகிலன் இந்த இரு ஆண்மகன் களினால் அனுரஞ்சனி என்ற அப்பாவி பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாற போகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!