Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் – 6

அத்தியாயம் – 6

கதிரவன் பாபுவின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தான்.

“என்ன வார்த்தைடா பேசுற , உன் விட்டு பொண்ண இருந்தா இப்படி தான் ஆடுகாலி அது இதுனு பேசுவியா “.

 



Advertisement

“பாருடா அந்த பொண்ணுங்கள எப்படி சூப்பரா ஆடுறாங்கன்னு உன்னால இந்த மாதிரி ஆட முடியுமா”

 

“அவங்க திறமைய பாராட்டல னாலும்,பரவாயில்லை, இப்படி மட்டம் தட்டமா இருங்க “

Advertisement

 

Advertisement

“அவங்களுக்கு பிடிச்சிருக்கு ஆடுறாங்க இதுல நீ யாருடா அவங்களுக்கு பட்டம் குடுக்க.”

 

“இனிமேல் எந்த பொண்ணையாது தப்பா பேசுறத பாத்தேன் வாயில பல்லு இருக்காது. தெரியும்ல என்ன பத்தி சொன்ன செய்வேன் “.

Advertisement

 

“சாரி கதிரவா இனிமேல் இப்படி பேசமாட்டேன் “என்றான் பாபு.

 

அவங்க ஜாலியா ஆடடும் நீ சத்தம் போடாம வா போலாம். போகும் முன் அனுரஞ்சனியை பார்த்து சிரித்துவிட்டு சென்றான்.

 

இவர்கள் இருவரும் வந்தது, இவர்களை பார்த்தது பெண்கள் யாருக்கும் தெரியாது.

 

கதிரவன் இப்பொழுது தான் முதல் முதலாக அனுரஞ்சனியை பார்க்கிறான்.

 

 ராமச்சந்திரன், சாந்தி தம்பதி களுக்கு ஒரு ஆண்,இரண்டு பெண் என்று மூன்று குழந்தைகள், மூத்த மகன் கார்த்திகேயன் அரசு அதிகாரிய வேலை பார்த்து வருகிறான், இவனுக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது மனைவி கிதா,இரண்டாவது பெண் அனுரஞ்சனி கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள், கடைசி மகள் சுஜிதா பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.

 

ராமசந்திரன் சொந்த ஊரான பள்ளப்பட்டியில் இயங்கி கொண்டு இருக்கும்.தொழிற்சாலையில் மேனேஜராக உள்ளார். இவர் மிகவும் அமைதியானா குணம் கொண்டவர். எந்த தீயப் பழக்கங்களும் இல்லாதவர். தான் மகனையும் அப்படியே வளர்த்துள்ளார்.

 

அனுவிற்கு அவளுடைய அப்பா என்றாள் மிகவும் பிடிக்கும்,தனக்கு வரப்போகும் கணவர் அப்பாவை போல் அமைதியாகவும், தீயப் பழக்கம் இல்லாதவராக இருக்கவேண்டும் என்று ஆசை பட்டால்.

 

அனு பள்ளப்பட்டியில் இருந்து நாற்பது நிமிஷம் பஸ்சில் பயணம் செய்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள கல்லூரிக்கு சென்று வருகிறாள்.

 

கதிரவனின் அப்பா வேலுசாமி ஓட்டன்சத்திரத்தில் ஸ்டார் வேர்ல்ட் என்ற பேரில் ஒரு வாட்ச்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் பழைய வாட்ச் பழுது நிக்கி தரப்படும். அனைத்து வகையான புதிய வாட்ச்களும் இங்கு கிடைக்கும். மேலும் நோட், பென், பென்சில் போன்ற அனைத்தும் கிடைக்கும்.

 

கதிரவன், அனுரஞ்சனி இருவரின் குடும்பமும் நடுத்தரவர்க்கத்தை சார்ந்த குடும்பங்கள் தான்.

 

ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு நாள்

ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ்ஸில் அனு தோழிகளுடன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தால் அப்பொழுது பஸ்ஸில் ஏதோ சத்தம் கேட்டு அனைவரும் பின்னால் பார்த்தனர். அங்கு கதிரவன் ஒரு பையனை போட்டு அடித்துக்கொண்டிருந்தான்.

 

 ” நானும் ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கேன் அந்த பொண்ண இடிச்சிகிட்டே வர, உன்கூடவும் அக்கா தங்கச்சி பொறந்துருப்பாங்கள அவங்களையும் இப்படி தான் இடிப்பையா “என்று கேட்டு கொண்டே அடி வெளுத்துவிட்டான்.

 

” பின் அந்த பொண்ணுயிடம் திரும்பி அந்த பொறுக்கி பையன் தான் இடிக்குறானு தெரியுதுல அவன் கன்னத்துல நாலு அறை விட வேண்டியது தானா. எப்பவும் ஏதாவது பிரச்சனைன யாராவது உதவி செய்வாங்கணு எதிர்பார்க்க கூடாது. தன் கையே தனக்கு உதவி புரிஞ்சதா” என்றான் கதிரவன்.

 

“அவங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்களா என்றாள் அனு தோழிகளிடம்.”

 

மற்றொரு நாள் அனு கல்லூரி முடிந்து தோழிகளுடன் வந்துகொண்டிருந்தால் அப்பொழுது கதிரவன் இரு கைகளிலும் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு பாரினுள் சென்று கொண்டிருந்தான்.

அதை பார்த்த அனுவின் தோழி நந்தினி.

 

“அங்க பாருடி அஞ்சு மணி கூட ஆகல அதுக்குள்ள பாட்டிலும் கையுமா இருக்குறான். பயங்கரமான குடிகாரனா இருப்பான் போல”என்றாள்.

 

அனு எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்று விட்டாள்.

 

மற்றொரு நாள் அனு பஸ்ஸ்டாபில் நின்று கொண்டிருந்தாள், அவளுக்கு சற்று தள்ளி ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். கதிரவன் வண்டில் வேகமா வந்து அந்த பெண் முன்னாள் வண்டியை நிறுத்தினான்.

 

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றான் “

 

“சொல்லுங்க ” என்றாள் அந்த பெண்.

 

“இந்த லெட்டர் நீங்க குடுத்தது தானா “என்றான்

 

“ஆமாம் என்றாள் தலை அசைத்து “

 

“சாரி மா எனக்கு லவ்லலாம் இன்ட்ரெஸ்ட் இல்ல, இந்த லெட்டரை நீயே கிழிச்சி போட்டுரு அதோட என்ன பத்தின எண்ணத்தையும்” என்று கூறிவிட்டு சென்றான். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த அனுவை பார்த்து சிரித்து விட்டு சென்றான்.

 

அனு புரியாமல் பார்த்து கொண்டிருந்தாள். இதை போல் இரண்டு மூன்று முறை ஏதர்ச்சையாக சந்திக்க நேர்ந்தது அப்பொழுது கதிரவன் அனுவை பார்த்து சிரித்தான். பொறுமை இழந்த அனு கதிரவனை பார்த்து

 

“ஹலோ ஹலோ ஒரு நிமிஷம் நில்லுங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் அனு.

 

“என் பேரு ஒன்னும் ஹலோ இல்ல கதிரவன் சக்கரவர்த்தி என்றான் “

 

இவளோ பெரிய பேரா என்று மனதுக்குள்ள நினைத்துக் கொண்டால்.

” எதுக்கு எப்போ பார்த்தாலும் என்ன பார்த்து சிரிக்கிறீங்க என்றாள் “

 

கதிரவன் சற்று நேரம் யோசித்தான், பின் நியாபகம் வந்தவனாக மீண்டும் சிரித்தான்

 

அனு அவனை பார்த்து முறைத்தால்

 

” இப்படிலாம் முறைக்காதமா எனக்கு பயமா இருக்கு என்று கிண்டல் செய்தான் ” பின் “அன்னைக்கு காலேஜ்ல நீ குத்து டான்ஸ் ஆடிட்டு இருந்தாலே அதை நான் பார்த்தேன் வேணுன்னு பாக்கல பந்து எடுக்க வந்தப்போ எதார்த்தமா பாத்தேன் “.

 

“உன்ன பாக்குறப்போலாம் அன்னைக்கு நீ ஆடுன டான்ஸ் தான் நியாபகம் வருது அதான் சிரிச்சேன். சாரி இனிமேல் சிரிக்க மாட்டேன்” என்றான் கதிரவன்.

 

“பரவாயில்லை இனிமேல் சிரிக்காதிங்க நான் கிளம்புறேன் ” என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

 

அதன் பிறகு ஒரு மாதம் படிப்பதற்கான விடுமுறை தேர்வு தேர்வு விடுமுறை என்று ஓடிவிட்டது. அனு கதிரவனை இந்த ஒரு மாதத்தில் சந்திக்கவே இல்லை.

 

 கல்லூரிக்கு செல்லும் மினி பஸ்ஸிற் காக அனு காத்துக்கொண்டு இருந்தால் அப்பொழுது கதிரவன் அந்த வழிய போனில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தான்.

 

அவனின் நடை மிகவும் துவண்டு போய் இருந்தது. அவன் பார்ப்பதற்கு கூட மிகவும் சோர்வா தெரிந்தான். அன்று அந்த சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது.

 

கதிரவனின் பின்னால் லாரி ஓன்று வந்து கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் கதிரவன் போனில் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தான் மெதுவாக. லாரியின் ஹாரன் சத்தத்தைக் கூட அவன் கவனிக்க வில்லை.

 

அனு அதை பார்த்து விட்டு கதிர் கதிர் என்று கத்தி கூப்பிட்டால் அதையும் அவன் கவனிக்கவில்லை. அனு ஓடி சென்று அவனை பிடித்து வேகமாக இழுத்தால் அதில் நிலை தடுமாறி இருவரும் அருகருக்கே விழுந்தனார்.

 

விழுந்ததில் அனுவின் இடது கை முட்டில் ஒரு பெரிய கல் இடித்து ரத்தம் வந்து விட்டது. அந்த லாரி அவர்களை உரசுவது போல் கடந்து சென்றது.

 

அருகில் இருந்த மக்கள் இவர்களை தூங்கி விட்டனர். என் தம்பி பார்த்து வர கூடாது. இந்த பொண்ணு மட்டும் உன்ன இழுக்கமா இருந்திருந்தால் இப்போ அந்த லாரி உன்ன இடிச்சிடு போயிருக்கும் என்றார் கூடத்தில் இருந்த பெரியவர் ஒருவர்.

 

அனுவின் தோழிகள் அவளை அழைத்து சென்றனர். கதிரவன் அவளுக்கு நன்றி சொல்லக்கூட தோன்றாமல் அதிர்ச்சியில் நின்று விட்டான்.

 

அனு அவனிடம் ரோட்டில் பார்த்து நடந்து போங்க என்றாள் சிறுகுழந்தைக்கு சொல்லுவது போலவே.

ரஞ்சனி கைல ரத்தம் வருது வா ஹாஸ்பிடல் போலாம் என்று கூறி அழைத்து சென்றனர். அங்கு ரஞ்சனி க்கு முதலுதவி செய்யப்பட்டது.

 

ரஞ்சனி அங்கிருந்து சென்ற பின் தான் கதிரவனுக்கு தோன்றியது அவளுக்கு தான் நன்றி சொல்ல வில்லை என்று.

 

இரவு கதிரவன் குருவிடம் போனில் பேசி கொண்டிருந்தான்.

“மச்சான் அந்த பொண்ணு லாரில அடிபடாமா என்ன காப்பாத்திருக் காடா ஆன நான் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம வந்துட்டேன்டா.”என்றான் சோகத்துடன்.

 

“அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா,எப்பவும் துருதுருனு இருப்பா எதையாவது பேசி கூட இருக்குறவங்கள சிரிக்க வச்சிட்டே இருப்படா, அந்த பொண்ண பார்த்தாலோ பேசுனாலோ மனசு சந்தோசமா இருக்குற மாதிரி இருக்குடா “என்றான் கதிரவன்.

 

“அந்த பொண்ண லவ் பண்ணுரையாட” என்றான் குரு.

 

“அந்த மாதிரிலாம் எதும் இல்லடா. அந்த பொண்ண பிடிக்கும் அவளோ தான் மத்தபடி எதும் இல்லை ” என்றான் கதிரவன்.

 

 

கதிரவன் மிகவும் திறமைசாலி, அன்பானவன், கோவக்காரணும் கூட. இவன் திறமைச்சாலியாக இருந்தும் குடிப்பழக்கம் இவன் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறது. 

 

தீய நண்பர்களின் சகவாசத்தால் விளையாட்டாக ஆரம்பித்த குடிப்பழக்கம். இன்று அவனை பெரும் குடிகாரனாக மாற்றிவிட்டது.

 

ஒருநாள் கதிரவன் குடித்துவிட்டு விட்டிற்கு வந்தான் , வேலுசாமி இவனை கண்டித்தார், இருவருக்கும் இடையில் பேசுவார்த்தை அதிகரித்தது, கடைசியில் கதிரவன் வேலுசாமியை அடிக்க கை ஓங்கிவிட்டான். அன்றிலிருந்து இன்றுவரை வேலுசாமி கதிரவனிடம் பேசுவது இல்லை.

 

ஒரு வாரத்திற்கு முன் வேலுசாமியும், லட்சுமியும் தன் மகளை பார்க்க கனடா சென்றுவிட்டனர். கனிமொழி மாசமாக இருந்து. அக்கரு இரண்டு மாதத்தில் கலைந்துவிட்டது. இப்பொழுது மீண்டும் மாசமா இருக்கிறாள்.

கனிமொழியின் உடல்நிலை சரி இல்லாததால் அவளை உடன் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. மகேஷ் வற்புறுத்தி கேட்டதால் கிளம்பி சென்றனர்.

லட்சுமிக்கு கதிரவனை தனியாக விட்டு செல்ல மனம் வரவில்லை. வேலுசாமி தான் அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றார்.

 

கடையை கதிரவன் பார்த்து கொள்ளுமாறும் அதில் வரும் வருமானத்தில் அவனுடைய செலவுகளை பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டார் வேலுசாமி. கடையில் வேலுசாமிக்கு துணையாக ஒரு பணியாளர் இருப்பார். இப்போது அவருடன் சேர்ந்து கதிரவன் கடையை பார்த்து கொள்கிறான்.

 

வீட்டில் இருந்த அமைதி தனிமை கதிரவனை மிகவும் பதித்தது. அவன் பிறந்ததில் இருந்து இதுவரை இப்படி தனியாக இருந்தது இல்லை. அது கதிரவனின் மனநிலையை பதித்தது, ஒழுங்காக சாப்பிடாமல் சரியாக தூங்காமல் இருந்தான்.

 

இப்படி இருந்தாதன் விளைவு தான் விபத்து நடக்க இருந்தது.

 

குடிப்பழக்கம் கதிரவனின் வாழ்க்கை யை அழித்துக் கொண்டிருந்தது. இவன் அந்த பழக்கத்திலிருந்து வெளி வருவானா , மகிழ்ச்சியுடன் வாழ்வானா காலம்தான் பதில் கூற வேண்டும்.🙏🙏🙏🙏

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!