Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 1.1

அவரின் நிலையை கண்டு அவரின் எண்ணம் உணர்ந்த வெற்றி.. சிறு புன்னகையோடு அவரை நெருங்க, தன் மகனின் முகம் பற்றி குனிய வைத்தவர், 

அவன் நெற்றியில் இதழ் பதித்து விலக.. அவரை தன் தோளோடு அணைத்தவன், 

“இப்ப ஹேப்பியா ம்மா..?” என கேட்க, 

மகிழ்ச்சியில் வார்த்தை வராது கண்ணிரோடு தலையை, “ஆம்” என அசைத்தார்.



Advertisement

அவன் தந்தையின் மரணத்திற்கு பின் தனக்காகவே வாழும் தாயின் இந்த மலர்ந்த முகத்தை பார்த்த போது, இந்த சந்தோஷத்தை தர மறுத்து.. இதுவரை அவரை தவிக்க வைத்த குற்ற உணர்வு வெற்றிவேல் செழியனுள் எழுந்த போதும், அதை இப்போது சரி செய்து விட்ட நிம்மதி அவனின் முகத்தையும் மலரவே செய்தது. 

அதை கண்டு ஆசையாய் மீண்டும் மகனின் முகத்தை கையால் வருடி நெட்டி முறித்தவர், 

“கண்ணா.. ஐயர் கூப்பிடறார். சதீஷ், நீ உன் ப்ரண்ட மணமேடைக்கு கூட்டிட்டு போப்பா. 

Advertisement

நா போய் கனி ரெடியாகிட்டாளான்னு பார்த்துட்டு அழச்சிட்டு வர்றேன்..” என்றவர், 

Advertisement

மகனிடம் தலையசைத்து விட்டு வேகமாய் மணமகள் அறைக்கு சென்றார்.

மணமகள் அறையில் அழகோவியமாய் முழு அலங்காரத்தில் தனது தோழிகளிடம் வம்பளந்து கொண்டிருந்த கனிகாவை பார்த்தவர் வேகமாய் அந்த அறையின் கதவை அடைத்தார்.

அதில் அவரின் புறம் திரும்பிய கனிகாவை நெருங்கிய சந்திரா, “கனிம்மா.. காரியத்த கெடுத்த போ. 

Advertisement

அவன்கிட்ட என்னத்த சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கியிருக்கோம். 

நீ பாட்டுக்கு இப்படி ஜாலியா கூத்தடுச்சிட்டு இருக்கறத பார்த்தா பயபுள்ள உசாராகிடுவான்..” என பதட்டத்தோடு சொல்ல,

“அத்தம்மா, டோண்ட் வொரி. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. 

நா இப்படி தான்னு உங்க புள்ளைக்கு நல்லாவே தெரியும்.

பட்..! இந்த கல்யாணத்துக்காக நம்ம சொன்ன ரீஷன் தான்..  கொஞ்சம்.. ஓவரோன்னு தோணுது. 

உண்மை தெரியும் போது மாமா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோன்னு நினைச்சா கொஞ்சம் திக்குன்னு தான் இருக்கு.. அத்தம்மா. 

விடுங்க. எவ்வளவோ பார்த்தாச்சு.. இத பார்க்க மாட்டோமா..?.

இப்ப என்ன பண்ணறீங்க.. அப்படியே குக் பண்ணற இடத்துக்கு கூலா போய்.. ஒரு ஜுஸ் கொண்டு வாங்க குடிக்க. 

பேசிப்பேசி வாய் வரண்டு போச்சு..”  என சொல்லிவிட்டு அழகாய் கண்சிமிட்டியவளை நெட்டி முறித்து சிரித்த சந்திரா, 

“அழகு ராசாத்தி..” என்று விட்டு, தன் கண்மையை அவளின் காதுக்கு பின் வைத்தவர், “இருடா.. போய் அத்தை உனக்கு எடுத்துட்டு வர்றேன்..” என்று சொல்லி சென்றார். 

“கொடுத்து வச்சவடீ நீ.. எங்களுக்குந்தான் வாச்சிருக்குங்க மாமியாருன்னு.. 

எப்ப பாத்தாலும் மிலிட்டரி ஆபிசர் மாதிரி வெரப்பா சுத்துக்கிட்டு.. சந்திராம்மா.. சோ ஸ்வீட்..” என்று கனிகாவின் தோழிகளில் ஒருத்தி சொல்ல, மற்றவர்களும் அதையே வழிமொழிந்தனர்.

அதில் பெருமிதமாய் உணர்ந்த கனிகாவும் அதை புன்னகைத்து ஆமோதிக்க, மீண்டும் அங்கே அழகான பேச்சு வார்த்தை தொடர்ந்தது.

டைனிங் ஹால் சென்று ஜூஸை வாங்கிக்கொண்டு.. மீண்டும் மணமகள் அறைக்கு செல்லும் சந்திராவை, 

மணமேடையில் ஐயர் சொன்னதை செய்து கொண்டே கவனித்த வெற்றிவேலின் முகத்திலும் அதே கனிவு வந்தது. 

உண்மை நிலை தெரிய வரும் போது அதே கனிவு நிலைக்குமா..?!.

“நேரமாச்சு. பொண்ண அழச்சிட்டு வாங்க..” என்ற ஐயரின் குரலுக்கு,

கனிகாவை அழைத்துவர அவளின் தாய் செந்தமிழ் செல்ல, 

அங்கு தன் அத்தையோடு செல்லம் கொஞ்சிக் கொண்டு ஜுஸ் அருந்தும் மகளை பார்த்தவர், 

‘யாருக்கு கிடைக்கும் இப்படியொரு மாமியார், மாமனார்..?

ஆனால் புருஷன்..?!’  என்ற எண்ணம் வந்தாலும், 

தன் மகள் மீதான நம்பிக்கையில், ‘அனைத்தும் சரியாகிடும்..’ என மனதை தேற்றிக்கொண்டாலும்,

‘இவங்க எல்லாரும் சேர்ந்து போட்டுட்டு இருக்கற ட்ராமா மட்டும் மாப்பிள்ளைக்கு தெரிஞ்சா..?!’ என நினைத்தவர்,

‘ஆண்டவா..! நீ தான் என் பொண்ணு வாழ்க்கையில எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கணும். 

அவ மட்டும் வெற்றி மேல ஆசபடாம இருந்திருந்தா வேற யாருக்காச்சும் கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். 

இவ கட்டுனா அவனத்தான் கட்டுவேன்னு பிடிவாதமில்ல பிடிச்சா..! 

இதுல இவ அப்பா வேற.. பொண்ணு ஆசைக்கு ஜால்ரா தட்டவே ஜென்மம் எடுத்த மாதிரி.. எல்லாத்துக்கும் ஓவரா ஜால்ரா தட்டியே உசுப்பேத்தி, உசுப்பேத்தி இப்ப கல்யாணத்துல கூட சிக்கல உருவாக்கி வச்சு, அவ பிடிவாதத்துல நடக்கற மாதிரி செஞ்சாச்சு. ஹும்..!’ என பெருமூச்சை வெளிவிட்டு,

“அண்ணி.. கனிய மேடைக்கு வரசொல்றாங்க..” என சொல்லிவிட்டு,

“கனிகா, உன் செல்லம் கொஞ்சற வேலைய அப்புறமா வச்சிக்கோ. இப்ப கிளம்பு..” என்றதும்,

சந்திரா, “என்ன அண்ணி.. குழந்த வாயெல்லாம் வறண்டு போச்சின்னு இப்ப தான் ஆசையா கேட்டு குடிக்க போனா. அதை குடிச்சிட்டு மெல்ல போகட்டும்.

ஒரு ரெண்டு நிமிஷம் லேட் ஆனா தப்பில்ல. ராஜாத்தி நீ குடுச்சிட்டு வாடா..” என்றவர், 

அவள் அதை குடித்து முடித்த பின்னரே அழைத்து செல்ல அனுமதித்தார் மணமேடைக்கு.

வெற்றிவேல்செழியன், மணமகள் அறையிலிருந்து வெளிவந்த கனிகாவை பார்த்தவன் மனது மிகவும் நிறைவாய் உணர்ந்தது.

‘அவளின் மெல்லிய புன்னகையோடு கூடிய அழகு முகம்.. என்றும் வாடாமல் எப்போதும் இப்படியே மலர்ந்திருக்க தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும்..’ என நிறைவாய் நினைத்தான். 

“ராசா இந்த முடிவு இன்னும் கொஞ்ச நேரத்துல ராக்கெட் பிடிச்சு பக்கத்து தேசத்துக்கு போக போகுதே. அப்ப என்ன பண்ணுவே..?” என அவனுக்கு மேல சுற்றும் விதியின் வார்த்தை, கனிகாவின் மேல் இருந்த கவனத்தால் அவனின் கருத்தில் பதியவில்லையே..!!

வெற்றியருகே வந்து அமர்ந்த கனிகா.. மெல்ல அவனின் முகம் பார்க்க அவளையே கண் சிமிட்டாமல் பார்த்த வெற்றியின் பார்வையில்,

முகம் சிவக்க நாணத்தோடு தலைகுனிந்தவளின் செய்கையில் அவனின் புன்னகை விரிய அழகாய் இந்த நிகழ்வு புகைப்படமானது.

கல்யாண சடங்குகள் தொடர, அதற்காக வளர்க்கப்பட்ட யாககுண்டத்து புகை, கனிகாவின் கண்களில் நீரையும், இருமலையும் கொடுக்க,

பதறி போன வெற்றி, “ஐயரே போதும். இத கொஞ்சம் குறைங்க.. 

பாருங்க.. அவளுக்கு எப்படி இருமல் வருதுன்னு..” என்றவன், 

தனது கைகுட்டை கொண்டு அவளின் கண்ணிர் துடைத்து, “கொஞ்ச நேரம்டா.. அப்புறம் இதெல்லாம் இருக்காது. சரியா..? அதுவரை மேனேஜ் பண்ணிப்ப தானே..?” என அக்கரையாய் கேட்க, 

அவனின் கரிசனத்தை பார்த்த நண்பர் படை, “வெற்றி, இப்பவே இப்படியா..?”

“நீயாடா இப்படி..?!”  

“மச்சான சாச்சுப்புட்டாங்கடா..” என ஆளாளுக்கு ஓட்டி எடுக்க, 

அதை சிறிதும் சட்டை செய்யாமல் ஐயரை அவசரபடுத்தி மாங்கல்யத்தை வாங்கி.. அவள் கழுத்தில் நிறைவோடு மூன்று முடிச்சிட்டு தனது சரிபாதியாய் ஏற்றுக்கொண்டான் வெற்றிவேல்செழியன்.

அடுத்த அடுத்த சடங்குகளின் போதும் அவளிடம், “இப்ப ஓகேவா..?” 

“டையர்டா இல்லையே..?”.. 

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறையா..?” என கேட்டுக் கேட்டு, அவளை கவனித்தவனை கேலி செய்தே ஓய்ந்து போயினர் அவனின் நண்பர்கள்.

திருமண சடங்குகள் முடிந்து, காலை உணவும் முடிந்ததும், ‘ரிசப்ஷன் என தனியாக ஏற்பாடு செய்து கனிகாவை கஷ்டப்படுத்த கூடாது..’ என்ற வெற்றிவேல் செழியனின் கட்டளையால், அங்கேயே அடுத்து அது ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

அதன் பொருட்டு அறைக்கு சென்று லேசான அலங்காரத்தை சீர்படுத்தி மீண்டும் மேடை ஏறினர் புதுமணத்தம்பதிகள்.

மணமக்கள் மீண்டும் மேடை ஏறியதும் அவர்களின் உறவுகளும், நட்புக்களும் மேடைக்கு வர அவர்களோடு நன் முறையில் சிரித்து பேசி புகைபடத்திற்கு போஸ் கொடுத்தாலும், 

கனிகாவிற்கு அவ்வப்போது எதாவது குடிக்க கொடுப்பதும், சிறிது நேரம் அமர வைப்பதுமாக அவன் செய்வதை தூர இருந்து பார்த்த பெரியவர்கள் மூவரின் மனதிலும் எழுந்த கேள்வி இது தான்.. 

“பயபுள்ளக்கு உண்மை தெரிஞ்சா இதே ரியாக்க்ஷன் கொடுக்குமா..?!” என்பதே.

ஊடல் உண்டாகுமா..??!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!