அணைந்திருந்த விளக்குகள் அனைத்தும் உயிரூட்டப்பட்டதிலேயே வெற்றி உறங்காது இருப்பது புரிய அவன் இருக்கும் திசையில் திரும்பாது, கதவையே பார்த்தபடி கண்ணுக்கே தெரியாத கடவுள் அவள் முன் இருப்பது போல நினைத்து,
‘இப்படி சொதப்பிட்டையே கடவுளே.. முதல் தடவ ஒரு குழந்த புள்ள கேட்குதேன்னு.. கொஞ்ச மாச்சும் ஈவு இறக்கமில்ல.. உனக்கு. நீயெல்லாம் ஒரு God-ஆ..?
Advertisement
இப்படி வந்து வாண்ட்டேடா மாட்டி விட்டுட்டையே..’ என கெஞ்சும் முகபாவத்தில் கேட்டவள்,
‘இனி உனக்கும் எனக்கும் நோ டீல்.. கனி உன் கூட டூ விட்டாச்சு..’ என கோபவமாய் முகத்தை வைத்துக் கொண்டு இல்லாத கடவுளோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தவளை,
Advertisement
Advertisement
“க்ஹுக்கும்…” என்ற வெற்றியின் கனைப்பு சத்தம் நிஜத்திற்கு அழைத்து வர,
‘ஈ..’ என அனைத்து பற்களும் தெரியும் படி அசட்டு சிரிப்போடு வெற்றியை பார்த்தவள்,
இப்படி தூக்கம் கெட்டா.. உங்க உடம்பு என்னத்துக்கு ஆகும்.. சொல்லுங்க.
போங்க.. போய் தூங்குங்க.. முதல்ல..” என கடகடவென பேசிவிட்டு அவனை கடந்து செல்ல போனவளின் கையை பிடித்தவன்,
“நா உன்கிட்ட என்ன சொல்லிட்டு மேல வந்தேன்..?
நீ வர்ற நேரத்த பார்த்தீயா..?” என கடிந்த பற்களுக்கு இடையே அழுத்தமாய் கேட்க,
“அது வந்து.. மாமா.. அத்தம்மா.. தனியா.. நானு.. கூட..” என அவன் கைகளுக்குள் மாட்டியிருக்கும் தனது கையை உருவி எடுக்கும் முயற்சியோடே விட்டு விட்டு பேசியவளை சுண்டி இழுத்து தன் மேல் விழச்செய்த வெற்றி மெல்ல அவளை அணைத்து,
“ஏன்டீ அராத்து.. உன்னோட அத்தம்மா தனியா இருக்காங்கன்னு அவங்களுக்கு கம்பெனி கொடுக்கற..!
அதே அத்தம்மா பெத்த பையனும் இங்கே தனியா தான் இருக்கான்..
அவனுக்கு கம்பெனி கொடுக்கணுமின்னு தோணுதா உனக்கு..?” என,
கனிகாவின் காதுமடலில் தனது கற்றை மீசை உரச சொன்னவனின் மெல்லிய குரலில், கனியின் மேனியெங்கும் சிலிர்ப்போடு கூடிய நடுக்கத்தை காட்ட அவளின் காதிற்கும், கன்னத்திற்கும் இடையே முத்தத்தை தந்தவன் அவளை விட்டு விலகி அவளின் முகம் பார்த்தான்.
கனிகாவின் சிவந்த நிறம் கொண்ட முகம் வெற்றியின் செயலில் இப்போது மேலும் சிவந்து இருக்க, ஒரு வித அவஸ்தையில் அவள் இருப்பதை காட்டியது பச்சையாய்.
தனது உதடை கடைவாயில் கடித்த படி மெல்ல உதடுபிரியாது சிரித்தவன், “அராத்து.. இப்படி அமைதியா நிக்கறத பார்த்தா.. மெயின் ஸ்விட்ச் அங்க தான் போல..” என கண்ணடித்து கூற,
அவன் அவளை விட்டு விலகி நின்ற அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சட்டென அவனிடமிருந்து நழுவி தூரம் சென்றவள்,
“மாமா லேட் ஆகிடுச்சு எனக்கு தூக்கம் வருது..” என, அவன் தந்த முத்தத்தால் எழுந்த அவஸ்த்தையோடு, கால்கள் தடதடக்க சொன்னவளின் நிலையை புரிந்து கொண்ட வெற்றி.. இதுவரை இருந்த மயக்க நிலையை மாற்றிக்கொண்டு,
“கனி.. எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. ஜஸ்ட் பேசவாச்சும் செய்யலாமா..?” என கேட்க,
‘ஜஸ்ட் பேச்சு..!’ என்றதில் கொஞ்சம் இயல்புக்கு வந்தவள், “ஓ.. தாராளமா பேசலாமே.. மாமா.. அதெல்லாம் பிரச்சினையே இல்ல..” எனக் கூற,
‘இவள வச்சுட்டு என்ன செய்ய..? பேசலாமின்னா குதிச்சிட்டு வர்றா.. பேச்சை விட்டு செயல்ல இறங்கினா ஓடி ஒழியறது.. இல்ல கவுந்தடுச்சு தூங்கறேன்னு சொல்றது.
வெற்றி உன் பாடு ரொம்ப திண்டாட்டம் தான்..!’ என அவனுக்குள்ளேயே நொந்து கொண்டவன் நெற்றியில் மானசீகமாய் அறைந்தும் கொண்டான்.
“கனி.. நா சொல்ற விசயத்தை கொஞ்சம் சீரியஸ்ஸா கேளு..” என்றதும்,
“ஹாஸ்பிடல் போகணுமா.. மாமா..?” என கனிகா கேட்க,
“அங்க எதுக்கு..?” என கேட்க வந்தவன்,
அவளின் பேச்சை, ‘எப்படி கனெக்ட் செய்ய வேண்டும்’ என்ற முந்தைய அனுபவத்தில் தெரிந்திருந்ததால் அந்த கேள்வியை கேட்காது, கனியை பார்த்து முறைக்க,
“ஹீ…” என பல்லை காட்டியவள், “நீங்க கன்டின்யூ பண்ணுங்க மாமா…” என சொல்லிட,
“உன்னையெல்லாம்…” என்ற படியே, “இங்க பாரு கனி.. எனக்கு பஸ்ட் இப்படி குறுக்க பேசறது பிடிக்காது. அதனால நா பேசி முடிக்கற வரை அமைதியா கேளு..” என அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தபடி சொன்னான்.
அவனின் அந்த பார்வைக்கு பயந்தவளாய்(?!) தனது கைகளை கட்டி, ஒரு விரலை வாய் மீது வைத்து, மெத்தையில் சம்மணம் போட்டு அமர்ந்து,
“ஓகே வா.. மாமா..” என்பதாய் தலையசைத்தவளை கண்டவனுக்கு சிரிப்பு வந்தாலும், இப்போது சிரித்தால்.. அவனை நிச்சயமாக இன்று பேசவே விடமாட்டாள் என்பது நன்றாக தெரிந்ததால் முகத்தை சீரியஸ்ஸாகவே வைத்துக்கொண்டு,
“கனி, எனக்கு கல்யாணம் பண்ணிக்கறதுல சுத்தமா இன்ட்ரஸ்ட்டே இல்லாம தான் இருந்தேன்.
அது ஏன்னு தெரியுமா..” என அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே,
“அதான் எனக்கு நல்லா தெரியுமே.. மாமா..” என கனிகா இடையில் புகுந்து சொல்ல,
“என்ன.. தெரியுமா..? என்ன தெரியும்..?” என்றவனின் மனமோ,
‘தன் மனதிற்குள் இருப்பது, இவளுக்கு.. எப்படி தெரிந்திருக்கும்..? அந்த அளவு என்னை அவள் நேசிக்கிறாளா..?’ என்ற ஆச்சர்யத்தில் துள்ளியது.
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாது மெத்தையிலிருந்து, தாவி குதித்து இறங்கியவள், ஜன்னல் புறம் செல்ல புரியாது குழம்பிப்போன வெற்றி,
“கனி, என்ன கேட்டதுக்கு பதில் சொல்லாம அங்க எங்க போற..?” எனக் கேட்க,
“அட இருங்க பாஸ்.. ஒரு பெசிஷன்ல நின்னுட்டு சொன்னா தான்.. ஏப்ட்டா இருக்கும்.
நீங்க என்ன பண்ணறீங்கன்னா.. அதோ அந்த சேரை நகர்த்தி இப்படி போட்டு அப்படியே உக்காந்துக்கோங்க.. சரியா..?
அப்ப தான் ஃபீல் பண்ணி பார்க்க சரியா இருக்கும்..” என சொல்ல,
வெற்றிக்கு அப்போதே தெரிந்து போனது, ‘இவ லூசு தனமா.. எதையோ சொல்லி நம்மள கடுப்பேத்த போறா..’ என்பது.
அவனின் எண்ணத்தை வீணாக்காமல் அந்த ஜன்னல் கம்பியை பிடித்தபடியே சீரியஸ்ஸாக முகத்தை வைக்க முயன்று வெளியே தெரிந்த நிலவை பார்த்தவளை கண்டு வெற்றியின் நிலை தான் படுபயங்கரமாக மாறிக்கொண்டிருந்தது.
வெற்றி பேசுவதை போல, “கனி, நா காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ணை உருண்டு பொறண்டு லவ் பண்ணேன்.
அவளும் என்ன லவ் பண்ணா.. ஆனா… அவ என்கிட்ட பொய்யா.. நடுச்சிருக்கான்னு எனக்கு அவ பிரிஞ்சு போனப்பா தான், தெருஞ்சுதும்மா… தெருச்சுது.
ஆனா பாரு.. நீ வந்த நேரம், எல்லாமே.. மாறிடுச்சு…” என நெஞ்சில் கரம் வைத்து நடிகர் திலகம் சிவாஜி எபெக்ட்டை கொண்டு வந்து கதை சொன்னவளை பார்த்தவன்,
‘அவ்வளவு தானா..?’ என்பது போன்ற முறைப்பான பார்வை பார்த்திருக்க,
திரும்பி அவனை பார்த்தவள், “ஓ.. அப்படி இல்லையா மாமா..!
இப்ப சரியா சொல்றேன் பாருங்க..” என்ற படி மீண்டும், அதே போல் நின்றவள்,
“கனி, நா காலேஜ் படிக்கும் போது விக்கி விக்கின்னு.. ஒரு ப்ரண்ட் இருந்தான்.
அவன்னா எனக்கு உயிரு.. அவன ஒரு பொண்ணு காதலிச்சு ஏமாத்திட்டா..
அவன் என் கண்ணு முன்னாடியே.. ‘அவதான் என் சாவுக்கு காரணமின்னு..’ சொல்லிட்டு, சூசைட் பண்ணிட்டான்..” என்றவள், கண்ணீர் வடிவது போலவும், அதை துடைப்பது போலவும் பாவனை காட்டிவிட்டு,
“அப்போ ஒரு முடிவு செஞ்சேன்.. பொண்ணுங்கன்னா.. பக்கா சுயநலவாதிங்க.. அவங்க பொழுதுபோக்குக்காக எதையும் செய்வாங்கன்னு..
அப்படிபட்ட பொண்ணுங்களுக்கு என் வாழ்க்கையில இடமே இல்ல… இல்ல.. இல்ல..” என எக்கோ டைப்பில் சொல்லி திரும்பியவள்,
வெற்றி பார்த்த பார்வையில், ‘அச்சோ…! கருப்புசாமி கன்னை எடுக்க போகுதோ…?’ என்ற படபடப்போடு நின்றாள்.
அவளின் அந்த கருப்புசாமி எடுக்க போகும் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்…?!