Skip to content
Post Views: 2,433
அத்தியாயம் 6
“வெற்றி மாமாவ இப்படி தான் மீட் பண்ணினேன் டாடி..!” என்ற கனிகாவின் வார்த்தையில்,
“சுத்தம்.. ஆரம்பமே ரணகளமா தான் ஆரம்பிச்சையா..? வாயே அடங்காதாடீ உனக்கு..?” என திட்டிய செந்தமிழின் வார்த்தைகளை காதுக்கு வெளியிலேயே, ‘எக்க்ஷிட் போர்ட்’ போட்டு நிறுத்திய கனிகா,
“மாமாவ பார்த்தப்பவே எனக்கு டவுட் தான் டாடி. இதுக்கு முன்னாடியே எங்கையோ இவர பார்த்திருக்கோமேன்னு. அப்போ எனக்கு ஸ்ட்ரைக் ஆகவே இல்ல…” என்றதும்,
“அப்போ எப்படி வெற்றிய.. மாறனோட பையன்னு கண்டுபிடிச்சே..?” என கேட்ட பிரகாஷூக்கு,
“அதுவா டாடி.. மாமாவ பார்த்துட்டு அவர பத்தி டீட்டெயில்ஸ் உடனே கூகுள் மூலமா கலெக்ட் பண்ணாலும்.. என்கூட வந்துச்சே அந்த பயந்தாங்கோழி ஷாலு.. அவளால அவர அப்பவே போய் பார்க்க முடியாம இருந்தேன்.
அவளால அடுத்த நாள் போலாமுன்னு டிசைட் பண்ணி.. நா அவரோட ஆஃபீஸூக்கு போயிட்டு இருந்த அப்போ.. அதுக்கு அவசியமே இல்லாம மாமாவ அத்தம்மாவோட ஒரு ட்ராஃபிக் சிக்னல்ல வச்சு பார்த்தேன்.
அத்தம்மாவ அடையாளம் தெரிஞ்சதால, அவங்கள அப்படியே ஃபாலோ பண்ணி போய்.. அவங்க வீட்டையும் கண்டுபிடிச்சிட்டேன்.
வீட்டுக்கு வெளியே காவலுக்கு நிற்கறவங்கள தாண்டி அத்தம்மாவ சந்திக்கறது சாத்தியமே இல்லன்னு பார்த்ததுமே புரிஞ்சது..
Advertisement
நா யாருன்னு மாமாக்கு முன்னாடி அத்தம்மாக்கு தெரியனுமுன்னு நினைச்சேன். அதனால அவங்கள வீட்டுல வச்சு எப்படி சந்திக்கன்னு தெரியல.
என்ன பண்ணறதுன்னு தெரியாம.. அவங்க வீட்ட அப்ப அப்போ சுத்தி வந்துட்டு இருந்தேன் அத்தம்மாவ சந்திக்க எதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமான்னு..
அப்போ அத்தம்மாவ பார்க்க முடியலன்னாலும்.. வெற்றி மாமா பண்ணற சில ப்ராடு தனம் எனக்கு தெரிய வந்துச்சு..” என்றவள்,
Advertisement
அவன் ஒவ்வொரு முறையும் தனது திருமணத்தை நடத்த சந்திரா எடுக்கும் முயற்சிகளை எப்படியெல்லாம் தடுத்து நிறுத்தினான்.. என்பதையும்,
Advertisement
இப்போது சமீபத்தில் ஜோசியரை தலைகீழாக கட்டி வைத்தது வரை தான் கண்டறிந்ததை.. பெரிய சாதனையாய் எண்ணி கூறும் மகளை வெட்டவா.. குத்தவா.. எனும் நோக்கில் செந்தமிழ் பார்த்தார் எனில், பிரகாஷ் யோசனையோ வேறாக இருந்தது.
தனது மகளின் குணத்தை நன்கு அறிந்தவர்.. என்பதால் அவளின் எதிர்காலம் குறித்த பயம் எப்போதுமே பிரகாஷூக்கு உண்டு.
அவளின் செயலில் விளையாட்டுதனம் இருந்தாலும் நிச்சயம் அவள் தப்பாகவோ, அடுத்தவருக்கு வேதனையை தரக்கூடியதையோ செய்பவள் இல்லை.
அதே நேரம் தனக்கு தேவையானதை பிடிவாதமாக சரியாக நிறைவேற்றிக் கொள்ளவும் தெரிந்தவள்.. என்பதால் இந்த கல்யாண விசயத்திலும் அவள் நிச்சயமாக பின்வாங்க வாய்ப்பில்லை.
இந்த திருமணம் நடந்து.. அந்த வீட்டுற்கு கனிகா சென்றால், அவளை சிறுவயதிலேயே பார்த்து பழகியதால் சந்திராவின் குணத்திற்கும்.. தனது மகளுக்கும் நன்றாகவே ஒத்துபோகும்.
Advertisement
ஆனால், இதில் வெற்றியின் நிலைப்பாடு..? அதுவே அவரின் பெரும் யோசனை.
அவரின் அமைதியான யோசனை பாவத்தை பார்த்த கனிகா, “என்ன டாடி.. யோசனை ரொம்ப பலமா இருக்கு. எப்படி மாமாவ இவகிட்ட இருந்து எஸ்கேப் ஆக வைக்கலாமின்னா..?” என கேட்டவள்,
“அப்படி நினச்சிருந்தா அந்த நினப்ப பெட்ரோல் ஊத்தி கொளித்திடுங்க.
இந்த ஜென்மத்துல உங்களுக்கு வாய்ச்ச மருமகன் வெற்றிவேல் செழியன் தான்.
சின்ன வயசுல என்னை அவ்வளவு பாசமா பார்த்திக்கிட்ட மாமா, இப்ப மட்டும் பார்த்துக்க மாட்டாரா என்ன..?
அத்தம்மாவ மீட் பண்ணி பேசினா எல்லாமே சரியா நடக்கும்.
அவரோட பிடிவாதத்த பார்த்தா.. அவருக்கு வேற பொண்ணு பார்த்து அத்தம்மா கல்யாணம் செய்யணுமின்னா அது அவரோட 60 வதாங் கல்யாணமா கூட இருக்காது.
அவ்வளவு தீவிரமா இருக்காரு கல்யாணம் பண்ணாம எஸ்கேப் ஆகுறதுல..” என தீவிர பாவனையில் கனி கூறவும்,
செந்தமிழ், “ஏன்டீ கனி, அந்த தம்பிக்கே கல்யாணத்துல சுத்தமா ஆர்வம் இல்லாம இருக்கும் போது, வழிய போய் கட்டிக்க பார்க்கறையே இது சரி வருமா..?
இதனால அந்த புள்ள வாழ்க்கை மட்டுமில்ல உன்னோட வாழ்க்கையும் சேர்ந்து வீணா போயிடும்.
ஒரு வேளை அவருக்கு ஏற்கனவே காதல் கீதல் இருந்து.. அது கைவிட்டு போன விரக்தியில கூட இப்போ கல்யாணம் வேணாமின்னு இருக்கலாம்.
எதையும் யோசிச்சு முடிவு செய்யலாம்..” என்றதை கேட்டவள்,
“ஹா.. ஹா..” என சிரித்தபடியே,
“என்னதூ.. அந்த விருமாண்டி சுந்தரத்துக்கு லவ்வா..? வாய்ப்பே இல்ல மம்மி.
அவர் சரியான ரிஷிம்மா. அவர் போய் சைட் அடிச்சு பிகர கரெக்ட் பண்ணியிருக்க ச்சான்சே இல்ல.
சும்மா இப்படி பேசி காமெடி பண்ணாதம்மா..” என்றதும்,
கடுப்பான செந்தமிழோ, “எது.. நா பேசறது காமெடியா..?
நீ தான் டி உன் வாழ்க்கைய காமெடியாக்கிட்டு இருக்கே.
கல்யாணம் வாழ்க்கைங்கறது.. நீ படுச்சிட்டு மூடி வச்சிட்டு வர்றையே அது மாதிரி நாவல் இல்ல..
லைஃப்.. அது ஒருதடவ தப்பா போனா அத மாத்திக்க முடியாது..” என்றதும்,
பிரகாஷிடம் திரும்பிய கனிகா சம்மந்தமே இல்லாது, “டாடி, இதுக்கு தான் நா சொன்னேன்.. செட்ஆஃப் பாக்ஸ்ல வர்ற சேனல் பேக்கேஜ்ல சில சேனல்ஸ் வர்றத தூக்கிடலாமின்னு கேட்டீங்களா..?” என சொல்லிட,
குழப்பமாய் அவளை பார்த்தவருக்கு விடையாக, “இப்போ பாருங்க இந்த அம்மாவ.. அந்த சேன்ல்ஸ்ல வர்ற ஒரு சீரியல் விடாம பார்த்துட்டு அதுல வர்றங்க மாதிரியே பக்கம் பக்கமா அட்வைஸ் கொடுக்கறாங்க..” என்றதும்,
பிரகாஷூம் தனது யோசனையை விடுத்து, “கனிம்மா, இந்த விசயத்துல அம்மா சொல்லறது சரி தானேடா..
வெற்றிக்கு இஷ்டமில்லாம இந்த கல்யாணம் சரி வருமா..?” என கேட்க,
“டாடி.. நீங்க சொல்லறது எல்லாமே புரியாத அளவு பேபியா நா..?
அன்னைக்கு மாமா கண்ணுல இருந்த ஏதோ ஒண்ணு.. அது என்னைய அவருக்கு பிடிக்க வைக்குமின்னு என் உள்மனசுக்கு சொல்லுதுப்பா.
அதோட என்னோட சேவை மனப்பான்மைக்கு மாமா தான் கரெக்ட் சாய்ஸ்.
நம்ம வீட்டுல நடந்தது அவருக்கும் நல்லா தெரியும். சோ, அவர் அதுக்கு சப்போர்ட் தான் பண்ணுவாரே ஒழிய தடை போட மாட்டார்.
வேற யாரா இருந்தாலும் நா இப்படி நேரம் கெட்ட நேரத்துல கூட வெளிய போக வர இருக்க முடியுமா..?
அத்தம்மாவும் எனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருப்பாங்க.
அவரோட வேலையும் எனக்கு நிச்சயமா பாதுகாப்பானதா இருக்கும்.
என்னோட லைஃப்பை எப்பவும் தப்பா போக விடமாட்டேன்.
ப்ளீஸ் டாடி, எனக்காக அத்தம்மாகிட்ட நேர்ல ஒரு தடவ வந்து பேசுங்க.
அதுக்கு அப்புறம் மத்ததை பத்தி பார்க்கலாம்..” என பேசி சரி செய்தவள்,
சந்திராவை சந்திக்க ஏதுவாக அவர் எப்போதும் வரும் கோவிலை செலக்ட் செய்தாள்.
அவர்களின் நல்ல நேரம் எப்போதும் தாயை உடன் அழைத்து வந்து.. அவருடனே இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லும் வெற்றிவேலுக்கு அன்று கோவில் வாசலுக்கு வரும் போதே ஏதோ ஒரு அவசர அழைப்பு வர,
“அம்மா முக்கியமான வேலை.. நா போயே ஆகனும். நீங்க வாங்க.. நா வீட்டுல உங்கள விட்டுட்டு போறேன்.
இன்னொரு நாள் வந்து சாமி கும்பிட்டுக்கலாம்..” என்றிட,
“கண்ணா.. கோவில் வாசல்வரை வந்துட்டு உள்ள போகாம இருந்தா சரி வராதுடா.
நீ போய் உன் வேலைய பாரு. நா சாமி கும்பிட்டு ஆட்டோல போயிக்கறேன் வீட்டுக்கு..” என சொல்லிட,
“அம்மா.. அது ரிஸ்க் ம்மா.. அதனால நானே..” என சொல்லிக் கொண்டிருந்தவனை முடிக்க விடாது,
“டேய்.. ஏன்டா இப்படி இம்சை பண்ணற..?
ஸ்கூல் போற குழந்தைய விட மோசமா இருக்குடா நீ என்ன நடத்தறது.
அதெல்லாம் நா பத்திரமா வீட்டுக்கு போயிடுவேன்.
நீ, உன் வேலைய போய் பாரு. ச்சும்மா நொய்யி நொய்யின்னு..” என பொறிந்து தள்ள,
விட்டு செல்ல மனம் இல்லா விட்டாலும் செல்ல வேண்டிய அவசியம் உணர்ந்து, ஆயிரம் பத்திரம் சொல்லி,
“ம்மா வீட்டுக்கு வந்ததும் எனக்கு மறக்காம போன் பண்ணிடனும்..” என்ற கட்டளையோடு விடை பெற்ற வெற்றியை பார்த்த போது தான் நிம்மதியானது கனிகாவிற்கு.
சந்திரா சாமி தரிசனம் பார்த்து.. கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் வரை அவரையே பார்த்தபடி அவருக்காக காத்திருந்தவர்கள், அவர் ஓய்வாக அமர இடம் பார்க்கும் நேரம் அவரை நெருங்கி வந்தனர்.
அவரை நோக்கி வந்த பிரகாஷையும் செந்தமிழையும் பார்த்ததும்.. நீண்ட வருடங்களுக்கு பிறகு தன் சொந்தங்களை பார்த்த சந்தோஷம் அவரின் முகத்தில் தெரிந்தது.
அதுவே முதலில் பிரகாஷூக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது.
ஏனென்றால் மணிமாறன் இருந்தவரை சரி, ஆனாலும் இப்போது இன்னும் வளர்ந்திருக்கும் அவர்களின் வசதிவாய்ப்பும், மகனின் உத்யோகமும் அவரை மாற்றியிருந்தால்… என்ற சிறு தயக்கம் அவருள் எழாமல் இல்லை.
அதை தன் முதல் பார்வையிலேயே கலைந்திருந்தார் சந்திரா.
பார்த்த நொடி வேகமாய் நெருங்கி ஆதரவாய் தமிழின் கரம் பற்றியவர், “அண்ணா.. அண்ணி எப்படி இருக்கீங்க..? பார்த்தே ரொம்ப வருஷம் ஆகிடுச்சு..” என்று சொல்லும் போதே,
கண்ணீல் நீர் நிறைய குரல் தழுதழுக்க பேசியவரின் பேச்சிலேயே.. நீண்ட வருடம் கடந்து விட்ட போதும் இப்போதும் தன் குடும்பத்தின் மீதும், தனது கணவர் மீதும் அன்பு கொண்டவரை பார்த்ததன் தாக்கம் நன்றாகவே தெரிந்தது செந்தமிழுக்கும்.
“சந்திரா, நாங்க ரொம்ப நல்லா இருக்கோம். நீ எப்படிம்மா இருக்கே..?
மாறன் போனதும் நீங்க உங்க பொறந்த ஊர் பக்கம் போனதால, சுத்தமா போக்குவரத்தே இல்லாம போச்சு.
அதோட நாங்களும் அந்த ஏரியவுல இருந்து மாறி வந்துட்டோம்.
இத்தன வருஷம் கழிச்சு நம்ம சந்திக்கணுமின்னு இருந்திருக்கு..” என்றவர்,
அவர்களின் கடந்தகாலத்தை பற்றி சிறிது நேரம் பேசியவர்களிடம் நினைவு வந்தவராக சந்திரா,
“அண்ணா, எங்க என்னோட மருமக..? சின்ன குழந்தையில அத்தம்மா.. அத்தம்மான்னு முந்தனைய பிடிச்சிட்டு சுத்திட்டே பூனைக்குட்டி மாதிரி திரிவா..
மாமாவே என் பொண்டாட்டி முந்தனையில எனக்கு பதிலா உன்னைய முடுச்சு போட்டு வச்சிருக்காளா..? ன்னு கேலி செய்யற மாதிரி செஞ்சிட்டு இருப்பா துறுதுறுன்னு..” என பழைய கனியை மனதில் வைத்து கேட்க,
“அண்ணி, இப்போ அவ செய்யற சேட்டைய பார்த்தா நீங்களே நாலு போடுவீங்க. அவ்வளவு குறும்பு. வாய தொறந்தா மூடுறதே இல்ல..” என எப்போதும் போல தமிழ் கனியை பற்றிய குற்றப்பத்திரிகை வாசிக்க,
அதுவரை அவர்களின் பாச பிணைப்பை தூரம் இருந்தே பார்த்து ரசித்த படி இருந்த கனிகா, சந்திரா தன்னை பற்றி கேட்கவும் அவரிடம் வர.. சரியாக அப்போது தமிழின் பேச்சை கேட்டவள்,
“பாருங்க அத்தம்மா.. நீங்க என்கூட இல்லாததால இந்த அம்மா என்ன பத்தி எப்படியெல்லாம் சொல்லி.. என் இமேஜை டேமேஜ் பண்ணறதே வேலைய வச்சிருக்குன்னு..
எனக்கு சப்போர்ட் பண்ண அப்போ அப்போ இந்த டாடி வந்தாலும்.. அவரையும் சேர்ந்தே திட்டறாங்க..” என சலுகையாக சொல்லி அவரின் தோள் சாய்ந்த கனியை வாஞ்சையோடு கன்னம் தடவியவர்,
“என் ராசாத்தி.. எம்புட்டு வளர்ந்திட்டே.. ரொம்ப அழகா இருக்கடா..” என நெட்டி முறித்தவர்,
அவளை அணைத்துக்கொண்டு, “இனி யாராச்சும் என் மருமகள எதாவது சொல்லி பாருங்க.. அப்புறம் என் பையன் கிட்ட சொல்லி தூக்கி உள்ள வச்சு முட்டிக்கு முட்டி தட்ட சொல்றேன்..” என மற்றவரை பார்த்து சொல்லிவிட்டு,
“இப்ப ஓகே வாடா..?” என கனிகாவிடம் கேட்க,
கெத்தாய் தனது சுடிதாரின் காலரை தூக்கி விட்ட கனிகா, “எப்புடி.. இனி வாய திறந்தா நீ காலி தமிழூ..!” என தாயை மிரட்டினாள் தனக்கு துணை கிடைத்த சந்தோஷத்தில்.
“அடிங்க.. பொட்ட கழுத. அடங்க மாட்டாம திரியறது.. இதுல சப்போர்ட்டுக்கு ஆள் வரவும் பேர் சொல்லி வம்பிழுக்கற அளவுக்கு ஆகிட்டே..” என கையை ஓங்கிட,
“அண்ணி.. எதுக்கு குழந்தைய அடிக்க வர்றீங்க..? அவ ஏதோ விளையாட்டுக்கு சொல்லறா.. அதப்போய் பெருசா எடுத்துட்டு..
பேர் சொன்னா என்ன தப்பு..?. ‘பேர் சொல்லும் பிள்ளை..’ கேள்விபட்டதில்ல..?” எனவும்,
“அப்படி சொல்லுங்க அத்தம்மா..” என அவருக்கு Hi-fi அடித்தவளை அணைத்துக்கொண்ட சந்திரா,
“வாங்கண்ணா, அப்படி உக்கார்ந்து பேசலாம்..” என கூறி கோவில் பிரகாரத்தை தாண்டி ஓரிடத்தில் அமர்ந்தனர்.
error: Content is protected !!