Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 15 2

“என்  கிட்ட நீ பேசாத  ஆபிதாவுக்கு ஏதாவது ஆச்சு, உன்ன  கொலை கூட  பண்ணியிருவேன்  போயிரு, இங்கே இருக்காத” என்று முபாரக்கை மஹாமுது திட்ட..

 விக்ரம் ஆஷிக்கை பார்க்க தன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு பானுமா, பானுமா என்று அழ.. ஆஷிக் அழுவதை பார்த்த சிவாக்குட்டி,   “அண்ணா அழாத பானுமா ஊசி போட்டு  வருவாங்க அழாதண்ணா ”  என்று சமாதானம் பண்ணிய மகளை பார்த்த விக்ரம்.



Advertisement

மகளை தூக்கி தன் மடிமீது வைத்து கொண்டவன். ஆஷிக்கை அணைத்து கொண்டான் “உன் பானு அம்மாவுக்கு   ஒன்னு  ஆகாது, அவ நம்ம கிட்ட நல்ல படியா  வருவா, என்றான்,.

முபாரக்   விக்ரம்  அவனோடு  ஆஷிக்கை அணைத்து வைத்து   கொண்டு இருப்பதை  பார்த்தவன், ஆபிதாவும் எப்பொழுதும் ஆஷிக்கை இப்படி தான் அணைத்து வைத்து இருப்பாள்.  அதே போல் விக்ரமும் ஆஷிக்கை அணைத்து வைத்திருப்பதை பார்த்தவன், இவன் கண்டிப்பாக ஆஷிக்கை  நன்றாக பார்த்து கொள்வான் என்று  நம்பிக்கை வர..

Advertisement

அவனிடம் சென்று “விக்ரம்”  என்று அழைக்க..

Advertisement

அவனோ “ஒன்னும் சொல்ல வேண்டாம் என் பல்லவியை, இனிமே  நான் பாத்துப்பேன். அவளுக்கு  ஒன்னும் ஆகாது ”  என்றவன். உன்கிட்ட பேச கூட எனக்கு பிடிக்கவில்லை என்று  அவன்  சொல்லில் காண்பித்தவன்..

Advertisement

வாஜிதா பானுவை அழைத்தவன்  தன் பிள்ளைகளை அவளிடம்   தந்து பாத்துக்கோமா  என்றவன்.

டாக்டர் அறை நோக்கி  சென்றான்..

டாக்டரிடம்  சென்று “பல்லவிக்கு வேற  எதாவது டிரிட்மென்ட் குடுத்த  இந்த இரத்தம் வர்ரது நின்னுறுமா, வேற ஹாஸ்பெட்டல இது விட  பெஸ்ட் ட்டிரிட்மென்ட் கிடைக்குமா, என்று கேட்க..

 “நீங்க யாரு?. என்று டாக்டர் கேட்க..

“நான் ஆபிதா  வோட ஹஸ்பெண்ட் விக்ரம் ”  என்றான்..

“ஆபிதாவுக்கு  உடம்புல வேற  எந்த பிரச்சனையும் இல்ல விக்ரம், அவங்க ரொம்ப ஹெல்தீயா இருக்காங்க.. ஆபிதாவுக்கு  காதில் இருந்து வரும் இரத்தம் நின்னா போதும். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல”..

 “நான்  என்ன பண்ணனும் டாக்டர்”  என்றான்..

“நீங்க   கடவுள்கிட்ட  பிரார்த்தனை பண்ணுங்க, அத தவிற ஒன்னும் சொல்ல  முடியாது, பாக்கலாம்” என்று டாக்டர்  சொல்ல..

 “நான்  ஆபிதாவை பாக்கலாமா”  என்றான்..

“உம் பாக்கலாம்  குழந்தைகளை மட்டும் கூட்டிட்டு போக வேண்டாம்”  என்றார்..

 விக்ரம் ஆபிதா பானுவை  சாரி (பல்லவியை)  பார்க்க  ஐ, சி, யூ  ரூம் சென்றான்..

ஆபிதாபானு  பச்சை கலர் மருத்துவ உடையில், ஒரு கையில் இரத்தம் ஏறிக்கொண்டு இருக்க, இன்னொரு கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டு  இருந்தது.. முகத்தில்  ஆக்சிஜன்  மாஸ்க் பொருத்தி இருக்க. அவளின் இதய துடிப்பை  அளக்கும், மெஜின் சத்தம் போட்டு  கொண்டே  இருக்க..

பல்லவி எந்த ஒரு அசைவும் இல்லாமல், அமைதியாக உறங்குவது  போல்  தெரிந்தாள்..

விக்ரம்  மெல்ல அவள் பக்கதில்  போய் அமர்ந்து கொண்டவன். பல்லவியின்  முகத்தை மட்டும் பார்த்து இருந்தான்.. பல்லவியின் காதில்  இருந்து  மெல்ல இரத்தம் வர  நர்ஸ்  இரத்தத்தை   துடைக்கும் முன் அங்கே  இருந்த ஒரு காட்டன் துணியில் அவள் காதில்  இருந்து  வரும் இரத்தத்தை துடைத்தான்.

நர்ஸ் “10  மினிட்ஸ் ஒரு வாட்டி  இப்படி இரத்தம் வரும் சார்” என்று சொன்னவள்..

“மேடமுக்கு  சீக்கிரம் இரத்தம்  நின்னுரும்  சார் கவலை  படாதீங்க”  என்றாள், விக்ரமனின் வேதனையான முகத்தை பார்த்து..

 விக்ரம் பல்லவியுடன்  மனதில்  பேசிக்கொண்டு இருந்தான். “வேகமாக   வா பல்லவி, உனக்கு எனக்கு  நிறைய வேலை இருக்கு பல்லவி,,. உன்ன நம்பி நாங்க நாலு பேர் இருக்கோம் வேகமாக எழுந்து வாடி..

 உன்ன இந்த மாதிரி நிலமையில பாக்க முடியல. உன்னை இப்படி பாக்கவா  நான் உன்னை கண்டு பிடிச்சேன். வா பல்லவி என்னால முடியல, நம்ம பிள்ளைகள் உன்ன தேடுவாங்க சீக்கிரம் வா” என்றவன்.

 அவளின் விரலை பிடித்துக்கொண்டு  காதில் இருந்து வரும் இரத்தத்தை  துடைத்த படியே ஐ, சி, யூ விலே அமர்ந்து இருக்க..

ஒரு  மணி நேரம்  கழித்தும் விக்ரமை ஐ. சி. யூ விலே  இருக்க. “சார் டைம் ஆச்சு  வெளியில் போங்க  சார்” என்று நர்ஸ் சொல்ல..

 அவனோ பல்லவியின் காதில் இருந்து வந்த இரத்தத்தை  துடைத்தவன். “நான் போயிட்டா  என் பல்லவியின்  காதில் இருந்து வரும் இரத்தத்தை  யார் துடைப்பது” என்றான்..

 “நாங்க  பாத்துக்குறோம் சார்  நீங்க  போங்க ” என்றாள்  நர்ஸ்..

விக்ரமோ நீ என்னவேணா  சொல்லிக்கொள்  என்பது போல், நர்ஸ்  போங்க என்று சொல்வதை காதில்  வாங்காமல்  பல்லவியுடன்  பேசிக்கொண்டு வேற உலகில் இருந்தான்..

நர்ஸ் பெரிய டாக்ரிடம் கம்பிளைன்ட் பண்ண.

“நான் வந்து  பேசுறேன்” என்று  நர்ஸை அனுப்பி வைத்தான்..

  டாக்டர்  ஐ. சி. யூ வந்து விக்ரமை  பார்க்க..

அவனோ  டாக்டர் வந்தது கூட தெரியாமல்.. பல்லவியிடன்  “என் மீது  அவ்வளவு  லவ்வா பல்லவிமா” என்று அவளின்  காதில் அருகில் பேசிக்கொண்டு இருந்தான்..

நர்ஸ்  டாக்டரிடம் ஏதோ  சொல்ல வர..

நர்ஸ் சொல்லுவதை  தடுத்த  டாக்டர், “அவர்  இங்கேயே  இருக்கட்டும் ”  என்று  சொல்ல.

டாக்டர் ஆபிதாவை செக் பண்ண, விக்ரம் எழுந்து நின்றான்..

விக்ரமிடம்  “சிட்”  என்றவர் “பார்த்துக்கலாம்   நீங்க  அவங்க பக்கத்துல இருந்தே பேசுங்க, அவங்க கோமாவுல  இருந்தாலும், நீங்க பேசுறது கேட்கும்  அவங்களுக்கு”  என்று விக்ரமுக்கு  தைரியம் சொல்லி சென்றார்..

ஆபிதா பானுவை  நல்லா பாத்துக்கோங்க, பிளட், டிரிப்ஸ்  ஏறிக்கிட்டே  இருக்கனும், இரத்தம் நின்னா எனக்கு இன்பாம் பண்ணுங்க.. மினிமம் 24 ஹவர்ஸ்ச பிளட் நிக்கனும்.. அப்படி இல்லன்னா  36  ஹவர்ஸ் இல்ல, 40 ஹவர்ஸ் தான் உயிரோட இருப்பாங்க, அது  வரைக்கும்  அவங்க ஹஸ்பென்ட்  கூட  இருக்கட்டும்..

36  ஹவர்ஸ் மேல இரத்தம் வந்தா, விக்ரம் கிட்ட சைன் வாங்கிக்கோங்க. அவங்க இறந்து  போக நிறைய  வாய்ப்பு இருக்கு  என்று நர்ஸ்சிடம்  சொல்லி சென்றார்..

 ஒரு நாள் முழுவதும் பல்லவியின்   பக்கத்திலே அமர்ந்து இருந்தான் விக்ரம். ஒவ்வொரு முறை பல்லவியின் காதில் இருந்து இரத்தம் வரும் போது  விக்ரமுக்கு  தன் மார்பில் இரத்தம் கசிவது போல் வலி எடுக்க.. கனந்த மனத்துடன் அமர்ந்திருந்தான்..

மறுநாள்  டாக்டர் வந்து ஆபிதாவை செக் பண்ணும்போது  இரத்தம் இன்னும் நிற்காமல் வர..

 இது வரை இந்த மாதிரியான  பேசன்ட்டுகள் 26  மணி நேரம் கூட உயிரோடு இருந்தது இல்லை. பல்லவிக்கு  35  மணிநேரம் ஆகியும், இரத்தம் கசிந்தும் உயிரோடு இருப்பது ஆச்சரியமாக  இருக்க..

பல்லவியை  இன்னும் அக்கரை எடுத்து பார்த்து கொள்ள. மறுநாளில் இருந்தது இரத்தம் வடிவது கொஞ்சம், கொஞ்சமாக நின்று விட..

நர்ஸ் டாக்டரிடம் சென்று  சார் ஆபிதா மேம்முக்கு இரத்தம் நின்னுருச்சு என்றாள்..

ஆச்சரியபட்ட  டாக்டர் வந்து  ஆபிதாவை செக் பண்ணியவர், அவளின் மூளைக்கு போகும் இரத்தம் சரியாக செல்வதை பார்த்தவர்.. இன்னும் இரண்டு நாள்ல கண் முளித்து விடுவாள் ஆபிதா என்றவர்..

 ஆபிதாவின் கையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த   விக்ரமை எழுந்த நிற்க சொன்னார்..

விக்ரமனின்  கை பிடித்து கொண்ட டாக்டர் “உங்க பிராத்தனையால் தான் ஆபிதாபானு பொழச்சாங்க..

 என்  சர்வீஸ்ல ஆபிதாமாதிரி எத்தனையோ பேரை பாத்து இருக்கேன்..  மினிமம் 24  ஹவர்ஸ  இல்ல 30  ஹவர்ஸ்ல இரத்தம் வந்தாலே  இறந்திடுவாங்க. ஆனா இரண்டு நாள் இரத்தம் வந்தும். இப்போ இரத்தம் நின்னு ஆபிதா பிழச்சிட்டாங்க, எல்லாம் உங்களால தான் விக்ரம் சச்யா ஒன்டர் புல் ஹஸ்பென்ட  யூ ஆர். ஆபிதா ரொம்ப அதிஷ்டம்  பண்ணி இருக்காங்க, நீங்க இந்த டூ டேச தண்ணி மட்டும் குடிச்சுட்டு  இங்கே உட்கார்ந்து உங்க  மனைவி உயிர  காப்பாத்தி கொண்டு வந்து இருக்கீங்க. என்றவர் விக்ரமை கட்டி அணைத்தவர் இன்னும் இரண்டு நாள்ல  சரியாகிறுவாங்க” என்றார்..

விக்ரமோ  டாக்டர் சொன்னதை கேட்டு “என் பல்லவிக்கு  ஒன்னும் ஆகாது தானே, அவ என்கிட்ட வந்துருவா தானே”  என்க…

” கண்டிப்பா விக்ரம்  இன்னும் 2  டேஸ்சுல  கண்முழிச்சுருவாங்க, ஆபிதாவை  செக் பண்ணிட்டு கூட்டிட்டு போகலாம் ”  என்றார்.

“தாங்யூ, டாக்டர்”  என்றவன், ஐ. சி. யூ வை விட்டு வெளியே சென்று மஹாமுது, ஷேக்தாவுத்திடம், “பல்லவிக்கு  ஒன்னும் ஆகாது  நம்மகிட்ட  வந்துருவா” என்றவன்.

பிள்ளைகள் எங்கே என்று கேட்க. அந்த ஹாஸ்பெட்டலில்   உள்ள ஒரு  அறையில் வாஜிதா பானு பிள்ளைகளை வைத்து பார்த்து கொண்டு இருந்தார். அந்த அறைக்கு சென்றவன். தன் பிள்ளைகள் அணைத்து கொண்டு “அம்மாவுக்கு  ஒன்னும்  ஆகாது”  என்றவன். பிள்ளைகளை  அழைத்து கொண்டு தூரத்தில் இருந்து  பல்லவியை  காண்பிக்க..

சிவகாமி “அம்மாட்டா”  என்றாள்..

“இன்னும்  இரண்டு நாளுல அம்மா வந்துருவா ”  என்றவன்.

ஆஷிக்கை பார்க்க  அவன்னோ  “ஆபிமா, ஆபிமா”  என்று கண்கலங்கி  நின்றான்..

சிவகாமியை  இறக்கி விட்டவன். ஆஷிக்கை  தூக்கி  ஆபிதாவை காண்பிக்க, ” ஆபிதாம்மா  எப்போ  என்கிட்ட பேசுவாங்க?  அங்கிள்”  என்றான்..

விக்ரம் ஆஷிக்கின் கண்களை துடைத்து விட்டவன். “நான்  உனக்கு  அங்கிள்  இல்லைடா அப்பா, அப்பா  சொல்லு, ஆபிதாமா உனக்கு  அம்மான்னா  நான் உனக்கு அப்பா”  என்றான்..

 ஆஷிக் முதலில் தயங்கியவன்  பின்பு  சிவாவை பார்க்க..

அவளோ “ஆஷிக்  அண்ணா, அல்லா நமக்கு அப்பாவை  அனுப்பி  வச்சு  இருக்காரு,  விக்ரம் அப்பாவை, அப்பா சொல்லு ”  என்றாள் சிவாக்குட்டி…

விக்ரம் ஆஷிக்கிடம் “அப்பா  சொல்லுடா உனக்கு  இனிமே  எது  வேணுமுன்னாலும்  என்னை கேளு. உனக்கு அப்பா  நான் இருக்கேன் ”  என்று விக்ரம்  சொல்ல..

ஆஷிக் ” அப்பா… ” என்று அழைத்திருந்தான்..

அவன் அப்பா என்று அழைத்ததும்  அவனை அணைத்துக்கொள்ள.. விக்ரமனின்  கீழே  நின்று இருந்த சிவாக்குட்டி  அப்பா நானு தூக்கு என்று கேட்க..

அவளையும் சேர்த்து தூக்கி கொண்டான்.. “ஐ அப்பா ” என்று விக்ரம் மேல் ஏறிக்கொண்டாள் சிவாக்குட்டி..

மூன்று பேரும் சேர்ந்து பல்லவி கண் விழிப்பதற்காக  காத்து  இருந்தனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!