Skip to content
Post Views: 3,144
அவசர சிகிச்சைப் பிரிவு வாசல் அருகே இருந்த இருக்கைகளில் அமர்ந்து இருந்தாள் சஷிபாலா.
அழுதழுது வீங்கிய கண்களுடன். வசந்தின் தோள்களில் சாய்ந்து கொண்டு, வெறித்தப் பார்வையுடன்.
அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளியிருந்த ஒரு சேரில் அமர்ந்து கடும் அதிர்ச்சியில் உறைந்துப் போய் பைத்தியக்காரன் போல் அமர்ந்து இருந்தான் சதீஷ்.
உள்ளே இருந்து, ஒரு நர்ஸ் வேகமாக நடந்து வெளியே சென்றார்.
Advertisement
“என்னாச்சு சிஸ்டர்?” என்ற வசந்தின் கேள்விக்கு அவர் பதில் ஒன்றும் சொல்லாமல் வேகமாக சென்று விட்டார்!
அடுத்த சில நிமிடங்களில் ஒரு டாக்டர் குழுவே உள்ளே அவசரமாக சென்றது!
வேகமாக உள்ளே சென்று கதவை சார்த்திக் கொண்டார்கள்.
Advertisement
அவர்கள் பதற்றத்தைக் கண்டு தன் நினைவுக்கு வந்த சஷி பாலாவும் அதிர்ச்சியுடனே வாசலைப் பார்த்துக் கொண்டிருக்க, வெளியே வந்த, தலைமை டாக்டர்,
Advertisement
“என்னாச்சு டாக்டர்? என்று பதறியபடி கேட்ட வசந்திடம்,
“பேசன்ட்டோட, பிபி, பல்ஸ் எல்லாம் லோ ஆகிட்டுது. அவங்க ஹார்ட் பங்க்சன் ஆறதுக்கு நாங்க மருந்து கொடுத்துருக்கோம். வெயிட் பண்ணிப் பார்க்கலாம். டிரஸ்ட் இன் காட்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.
வெளியே கண்ணை மூடி வேண்டிக் கொண்டிருந்தாள் சஷி பாலா.
Advertisement
கொஞ்ச நேரம் சென்று, உள்ளே இருந்து வந்த டாக்டர்,
“சாரிம்மா.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவங்க நிலைமை கொஞ்சம் க்ரிடிக்கலா இருந்துச்சு. கோமாவில் இருந்து நினைவு திரும்பாமலே, அவங்களுக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்து விட்டது. நாங்க கொடுத்த மருந்து அவங்களுக்கு பலன் அளிக்க வில்லை! அவங்க இறந்துட்டாங்க” என்று சொல்லி சென்று விட்டார்.
“ரிஷி..” என்று அலறி மயங்கி விட்டாள் சஷி பாலா.
அவளைப் பிடித்துக் கொண்டான் வசந்த்.
சதீஷ் நிலைமையோ சொல்லுவதற்கில்லை!
உள்ளே விரைந்து போனான்.
“இல்ல..இல்ல.. என் ரிஷி என்னை விட்டுப் போயிருக்க மாட்டா, இவங்க எல்லாம் பொய் சொல்றாங்க. ஆமா பொய் தான் சொல்றாங்க. பாருங்க அவ மூச்சு விட்டுட்டு இருக்கா!” மூக்கில் விரல் வைத்து சொன்னான்.
அவனை வெளியே இழுத்துக் கொண்டு வந்தான் வசந்த்.
“நான் வர மாட்டேன். என் ரிஷி என்னைத் தேடுவா.. நான் இங்கயே இருக்கேன்” வர மறுத்தான் அவன்!
“வாடா..” என்று இழுத்த வசந்தின் கைகளை உதறி விட்டு,
“ரிஷி வீட்டில் இருக்கா. ஸ்வெட்டர் பின்னிட்டு இருக்கா. உல்லன் த்ரெட் பத்தலைன்னு சொன்னா.. நான் வாங்கப் போறேன். என்னை விடு” என்று சொல்லி பின் அவனாக ஏதோ ஏதோ பினாத்திக் கொண்டும், தலையை தலையை ஆட்டிக் கொண்டும் அந்த இடத்தை விட்டு வெளியே போய் விட்டான்!
அதற்குள் “சார்..” என்று உள்ளே இருந்து நர்ஸ் அழைக்க, அங்கே பார்த்தால், மயங்கி கிடந்தாள் சஷி!
சஷி முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினான் வசந்த்.
அவ்வளவு தான்!
அங்கேயே உருண்டு புரண்டு கதறி தீர்த்து விட்டாள் சஷி.
வசந்த் வீட்டிற்கு போன் செய்து தகவல் சொன்னான்.
கொஞ்ச நேரத்தில் சஷிபாலா பெற்றோர், வசந்த் பெற்றோர் சஷியின் உடன்பிறப்புகள் அனைவரும் வந்து விட்டனர்.
ரிஷி பாலாவின் உடலை அவர்கள் வீட்டுக்கே கொண்டு போய் விட்டனர்.
சதீஷை அவர்கள் உள்ளேயே விட வில்லை.
சஷி பாலாவின் கெஞ்சுதலுக்காகவும் வசந்தின் கெஞ்சுதலுக்காகவும் ஒரு வழியாக அனுமதித்தனர்.
அவன் அன்று இருந்த நிலைமையிலே தான் அங்கும் இருந்தான்.
“நான் பார்த்துப் பார்த்து கட்டி வச்ச கூடு. அத அழிச்சுபுட்டாங்க பாவிங்க!” என்று சதா புலம்பிக் கொண்டிருந்தான்!
இப்படியே நான்கு நாட்கள் செல்ல, ரிஷி பாலாவின் குழந்தையை சேர்த்திருந்த மருத்துவமனையில் இருந்து போன் பண்ணி விட்டார்கள். வந்து குழந்தையை அழைத்து செல்லுங்கள் என்று.
வசந்துடன் அங்கு சென்றாள் சஷி.
அன்று இருந்த நிலைமையில் என்ன குழந்தை என்று கூட யாரும் கேட்டிருக்க வில்லை!
ஆண் குழந்தை!
ரித்தீஷ்!
குழந்தையைக் கையில் வாங்கினாள் சஷி.
அது வேகமாக தலையை அவள் மார்பு அருகே சென்று முட்டி பால் குடிக்க முனைந்தது!
அவ்வளவு தான்!
பெற்றால் தான் பிள்ளையா?
சஷிக்குள் தாய்மை உணர்வு பீறிட்டு எழுந்தது! கண்ணீருடன் அதை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்!
ரிஷிக்கு நாள் தள்ளிப் போனதில் ஆரம்பித்து, ரிஷி வயிற்றில் அவனை சுமந்தாள் என்றால், இவள் மனதில் அல்லவா சுமந்து கொண்டிருந்தாள் இவ்வளவு நாட்களாக!
குழந்தையுடன் சஷியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான் வசந்த்.
சஷியின் வீட்டில் ஒருவர் கூட குழந்தையைத் தூக்க வில்லை! அவள் அம்மா அப்பா கூட!
“போ.. போய் அவன் அப்பன் கிட்ட கொடு இதை!” என்றான் அவளின் பெரிய அண்ணன் கீர்த்தி.
“எங்கே , அவன் தான் ரோடு ரோடா சுத்திட்டு இருக்கானே! எந்த கடையில பூசணிக்காய் உடைச்சாலும் போய் பொறுக்கிக்கிட்டு!” என்றான் நடு அண்ணன் கிரி!
“அது மட்டுமில்ல, திருஷ்டி சுத்தப் போறவங்க கிட்ட சண்டைக்கும் போய் இருக்கான். அவங்க இவனை அடிக்கவே போய்ட்டாங்க. வசந்த் தான் போய் கூட்டிட்டு வந்தாப்ல!: என்றான் மூன்றாவது ஆள்!
குழந்தைக்கு டாக்டர் எழுதி தந்திருந்த பார்முலா பால் அவர்கள் கிராமத்தில் கிடைக்காது போகவே, திருச்சியில் இருந்தே பால் பவுடர், மற்றும் குழந்தைக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்து கொண்டிருந்தான் வசந்த்.
அவன் அப்பா இதையெல்லாம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்!
ரிஷியின் காரியம் முடிந்து சில நாட்களில் வசந்திற்கு மத்திய அரசு வேலை ஒன்றிற்கு நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்தது.
அவன் அதற்காக சென்னை சென்று இருந்த சமயம், இங்கே தனியே இருந்த சதீஷ், அவனுக்கு தினம் ஒன்றாக வசந்த் கொடுத்து தூங்க வைத்துக் கொண்டிருந்த மாத்திரைகளை முழுவதுமாக எடுத்துக் கொண்டு தன் ரிஷியுடனே சென்று சேர்ந்து விட்டான்!
வசந்த் ஓடோடி வந்திருக்க, எல்லாம் முடிந்து இருந்தது!
அடுத்த சில மாதங்களில் வசந்திற்கு ராமேஸ்வரத்தில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்வோர் நலனுக்கான மத்திய அரசின் அமைப்பு ஒன்றில் வேலை கிடைத்து விட்டது!
அதற்கிடையில், ரித்தீஷ் கொஞ்சம் குறை மாதக் குழந்தையாக பிறந்து விட்டதால், ஒவ்வொரு உறுப்பும் சரியான வளர்ச்சியில் தான் இருக்கிறதா என்று பரிசோதனைகள் பண்ண வேண்டியிருந்தது!
அங்கு சென்று வந்து விட்டு, கலர் கலரான பலூன்களை கட்டி வைத்து அவன் கண்களுக்கு பயிற்சி கொடுத்தாள் சஷி.
அதற்காக கண்களுக்கு என்று ஒரு முறை மதுரை சென்று வந்தார்கள்.
குழந்தையை விட்டு சற்று தூரத்தில் இருந்து கொண்டு கைகளைத் தட்டி தட்டி காதுகளை பரிசோதித்துப் பார்ப்பாள்!
இரவு பகல் பாராமல் குழந்தைக்கு பால் கலந்து புகட்டி, சுத்தம் செய்து என்று கண் துஞ்சாது பார்த்துக் கொண்டாள் சஷி!
மேலும் இதயத்திற்கு, செவித்திறன் சரியாக உள்ளதா என்று அறிய தஞ்சைக்கும் திருச்சிக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சஷி பாலாவுடன் அலைந்து கொண்டிருந்த வசந்த்தை அவன் அப்பா திட்ட ஆரம்பித்து விட்டார்.
போதாதற்கு, சஷியின் அண்ணன்மார்கள் வேறு அவருக்கு தூபம் போட்டார்கள்!
அவர்களுக்கு வேறு ஜாதிக்காரனின் வாரிசு அவர்கள் வீட்டில் வளர்வது கொஞ்சமும் பிடிக்க வில்லை!
அதிலும் ஒருவன், சஷி வசந்தைக் கல்யாணம் செய்து கொண்டு வரும்போது இந்த பிள்ளையோடு தான் வருவாள் என்று சொல்லி வசந்தின் அப்பாவை ஏற்றி விட,
இன்னொருவனோ இன்னும் ஒரு படி மேலே போய், “அவள் இனி பிள்ளையே பெத்துக்க மாட்டாளாம். இதை தான் தன் குழந்தையா வளர்க்கப் போறாளாம்!” என்று இன்னொரு பிட்டைப் போட்டு வைத்தான்.
அவர்கள் எண்ணம் எல்லாம் சஷி வசந்த்தைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், குழந்தையை எங்காவது ஆசிரமத்தில் விட்டு விட வேண்டும் என்று வசந்தின் அப்பா மூலம் அவளை நிர்ப்பந்திப்பதே!
அவரும், அவர்கள் சொன்னபடியே ஆடினார்.
சஷியை அழைத்துத் தனியே பேசினார்.
அவள் ஒத்துக் கொள்ளவில்லை!
“அப்படின்னா, என் பையனை விட்டுடு! நாங்க வேற இடம் பாத்துக்கிறோம்!”
சஷி அதிர்ந்தாள்.
“அதுக்கு உங்க மகன் சம்மதிப்பாரா?”
“அது எங்க பிரச்சினை! நீ என்ன சொல்ற?”
“ஒருநாளும் ரித்தீஷை விட்டுப் பிரிய மாட்டேன்!”
“அப்போ எங்கள விட்டுடு!”
ஒரு முறை மூச்சை ஆழ இழுத்து விட்டவள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “சரி” என்று சொல்லி விட்டாள்.
அதன் பின் வசந்த் எவ்வளவு முயன்றும் அவளுடன் பேச முடிய வில்லை!
ஒரே நாளில் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு விட்டாள்!
“சாரி, வசந்த். உன் அம்மா அப்பா பார்க்கிற பெண்ணைக் கட்டிக்கிட்டு உங்க லைப பாருங்க! இனி என் வாழ்க்கை என் மகன் ரித்தீஷோடு மட்டுமே!” என்று சொல்லி வைராக்கியமாக ஒதுங்கி விட்டாள்!
அதற்கு பிறகு, அவனின் பரத் சர்டிபிகேட் முதற்கொண்டு சஷி பாலா தான் ரித்தீஷ் அம்மா!
வீட்டில் அவள் பெற்றோரிடமும் ஆணித்தரமாக பேசி விட்டாள்!
“இனி எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணக் கூடாது. ரிஷி பாலாவின் குழந்தை தான் இவன் என்று யாரும் இவனிடம் சொல்லி விடக் கூடாது! அவன் என் மகன்! அவன் என்னுடன் தான் இருப்பான். இந்த வீட்டில் தான் இருப்பான். இது உங்க யாருக்கு சம்மதமில்லை என்றாலும் நான் வீட்டை விட்டு வெளியே போய்விடுவேன்! பின் குடும்ப மானம் போய்டுச்சுன்னு என்னை குத்தம் சொல்லக் கூடாது!”
ஏற்கனவே ஒரு மகள், அதுவும் மூன்று ஆண் குழந்தைகளுக்கு அப்புறம் கடவுள் கொடுத்த தேவதைகள் மாதிரி இருந்த ஆசை மகள்களில் ஒருவளை அறிவீனமாக இழந்து விட்டோம். இனி இருப்பவளையும் இழந்து விடக் கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அவளின் பெற்றோர்!
அப்புறமும் மறுத்த சகோதரர்களிடம், “இதுக்கு ஒத்துக்கலன்னா, என்னோட சொத்தைப் பிரிச்சுக் கொடுத்துடுங்க! நான் வெளியே போய்டுறேன்” என்று சொல்லி விட்டாள்!
அது கொஞ்சம் நன்றாகவே வேலை செய்தது!
கூடவே சஷி அவளின் அண்ணன்களிடம், ரித்தீஷ் பிறப்புப் பற்றிய இந்த உண்மைகளை யாரும் அவனுக்கு சொல்லி விடக் கூடாது என்று அவர்கள் பெற்றோர்கள் மீது தலையில் அடித்து சத்தியமும் வாங்கிக் கொண்டாள்.
அவர்களுக்கும் பெற்றோர் மீது அன்பு இருந்ததால், அந்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டார்கள்!
அப்போது மூவருக்குமே திருமணம் ஆகியிருக்க வில்லை!
எனவே அவர்களின் மனைவி மார்களுக்கும் ரிஷிபாலாவின் குழந்தை தான் ரித்தீஷ் என்பதே தெரியாது!
அவர்களுக்கும் பின்னாளில் ரித்தீஷுக்கு சொல்லப்பட்ட அவன் அப்பாவும் சித்தியும் பைக்கில் சென்றபோது நடந்த விபத்து என்ற கதையே சொல்லப்பட்டது!
இந்த உண்மை, அவர்களின் மாமனார் மாமியார் அடுத்தடுத்து இறந்த பின் பொது சொத்துக்களைப் பிரிக்கும் வரை அவர்களுக்கு தெரியவில்லை!
சொத்துப் பிரிக்கும் போது ரிஷி பாலாவின் மகன் என்ற முறையில் அவளது பங்கும், சஷிபாலாவுக்கும் அவனே வளர்ப்பு மகன் என்பதால் அவளது பங்குமாக ரித்தீஷுக்கு இரண்டு பங்கு சொத்துக்கள் கிடைக்க இருக்க, ஆண் மக்களுக்கோ ஆளுக்கொரு பங்கு மட்டுமே என்ற நிலை!
மேலும் அவர்கள் ரொம்பவும் இளக்காரமாக நினைத்து கண்டு கொள்ளாமல் இருந்த சஷியின் அசுர வேக தொழில் வளர்ச்சி! அதன் மூலமாக பெருகியிருந்த சொத்துக்களின் மதிப்பு!
இதையெல்லாம் மனதில் கொண்டே அவள் அண்ணிமார்கள், ரித்தீஷுக்கு பெண் கொடுக்க போட்டிப் போட்டார்கள்!
சஷி, அப்போதைக்கு அவர்கள் வாயை அடைக்க எண்ணி, ஜாதகம் பொருந்தியிருந்தால் பார்க்கலாம் என்று சொல்லி தள்ளிப் போட்டாள்!
இந்த நிலைமையில் சதீஷ் வழியே வேறு ஒரு சொத்தும் அவனுக்கு கிடைத்திருப்பதை எப்படியோ அறிந்து கொண்டு விட்டார்கள் அவர்கள்!
அதிலும் ரித்தீஷ் ஒரு பெண்ணோடு சுத்துகிறான் என்பதை தெரிந்து கொண்ட பின் அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை
ரமேஷை அழைத்துக் கொண்டு போய் மானுவின் அப்பாவை மிரட்டி விட்டு வந்தார்கள்!
அதற்கு பிறகும் அவன் காதலை தொடரவே, தங்கையின் காதில் போட்டு வைத்தார்கள்!
ரித்தீஷ் பணத்திற்கு ஆசைப்பட்டு, அந்த பெண் அவனை மயக்கி இருக்கிறாள் என்று மேலும் பலவற்றை சொல்லி அவளைக் குழப்பியிருந்தார்கள்.
மேலும் சஷியின் தொழில் தொடர்பில் இருந்த ஒருவரின் மூலம் அவன் தனக்கு கிடைத்து இருக்கும் வீட்டை அவள் பெயருக்கு மாற்ற முயன்று கொண்டிருந்தது பற்றியும் அறிந்த பின், அவள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானாள்!
எப்படியாவது அந்த பெண்ணை அவனிடமிருந்து விலக்கி விட்டு விட வேண்டும் என்ற முனைப்பில் அவள் அண்ணன்களோடு மானுவை கல்லூரி தாளாளர் அறைக்கு வர வைத்துப் பேசினார்கள்.
ரித்துவை வேலை சொல்லி வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டு!
எடுத்த எடுப்பில் மானுவை மிரட்டத் தொடங்கி விட்டார்கள் அவளின் அண்ணன்மார்கள்!
ஆனால் மானு அதற்கு கொஞ்சமும் பயப்பட வில்லை!
ஏற்கனவே ரித்து அவளுக்கு எச்சரித்து தைரியமும் கொடுத்து இருந்ததால்!
கொஞ்சமும் பயமில்லாது அவர்களிடம் பேசி விட்டு எழுந்து வந்து விட்டவளை, அதுவரை மவுனமாக இருந்த சஷி அவளை காருக்கு அழைத்து சென்று தனியே பேசினாள்.
“நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா. நான் இங்க உன்னோட பினான்சியல் ஸ்டேட்ஸ் பத்தி எல்லாம் பேசல! ஆனா என் பையனுக்கு ஏற்கனவே அப்பா இல்ல! அவனும் சின்ன பையன்! அவனுக்கு உன் பாமிலி சைட்ல இருந்து மாரல் சப்போர்ட் கொடுக்க யார் இருக்கா? நான் உன் குடும்பத்தைப் பத்தி விசாரிச்சேன். உன் அம்மா பத்தி சொன்னாங்க.
உன் மாமா வீட்டைப் பத்தியும் சொன்னாங்க.
நான், என் பையன் கல்யாணம் செய்துக்க போற பொண்ணோட வீட்டு சப்போர்ட்டும் அவனுக்கு வேணுமின்னு நினைக்கிறேன்!
பொண்ணை மட்டும் பிடிச்சு இருந்தா பத்தாது. அவ பாமிலியையும் பிடிக்கணும். அவ பாமிலி அவனுக்கு நல்ல சப்போர்ட் கொடுக்கணும் எல்லா நேரத்திலும்!
நான் ஒண்ணும் என் அண்ணன்களோட பொண்ணுங்க அவனுக்கு கட்டி வைக்க நினைச்சு சொல்லல! நிஜமா என் பையன் எதிர்காலத்தை நினைச்சு தான் சொல்றேன்!
நீயே நினைச்சுப் பாரு, உன்னைக் கல்யாணம் செய்துகிட்டா, அவனுக்கு எப்படி நல்லதொரு பியூச்சர் கிடைக்கும்! நீ உன் அம்மாவையும் கூட்டிட்டு வருவ! அவங்கள விட்டுட்டு வரவும் முடியாது! வரும் போதே சுமையோட வர உன்னைக் கட்டிகிட்டா அவனுக்கு லைப் எப்படி ஸ்மூத்தா போகும்?
பத்தாததுக்கு அவன் மாமாக்களின் பகையையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும்! டே டு டே லைபே போராட்டமா போய்டும் அவனுக்கு!
நீ உண்மையிலே அவனை டீப்பா லவ் பண்றன்னா, அவனை விட்டுட்டு போய்டு! அவனுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கணும் வேண்டிக்கோ” என்று சொல்லி முடித்தாள்.
அதுவரை கேட்டுக் கொண்டிருந்த மானுவின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது!
“நீங்க நினைக்கிற மாதிரியே ரித்துவுக்கு லைப் அமைச்சுக் கொடுங்க! நான் அதுக்கு ஒரு நாளும் தடையா இருக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் மானு!
உண்மையில் இதை சஷி எதிர்பார்த்திருக்க வில்லை!
அவள் ரித்துவை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டாள் என்றே நினைத்து இருக்க, அவளோ கொடுத்த வாக்கின் படி ஊரையே காலி செய்து கொண்டு போய் விட்டிருந்தாள்! மேலும் அவனோடு இருந்த அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு!
அதன் பின் தான் மானுவின் மேல் மரியாதை ஏற்பட்டு விட்டிருந்தது சஷிக்கு!
தான் அவசரப்பட்டு விட்டோமோ என்றும் தோன்றியது!
அவளும் தன் தொடர்பில் உள்ள ஆட்களின் மூலம் அவளை கண்டுபிடிக்க முயற்சியும் செய்தாள்.
அப்போது பார்த்து கொரானா லாக்டவுன் வேறு வந்து விட அந்த பணி தடைப்பட்டு விட்டது!
அதன் பின் தேடினாலும், ஒருவேளை அவளுக்கு வேறு யாரோடும் திருமணம் ஆகிவிட்டிருந்தால், தானே போய் அவள் வாழ்க்கையை கெடுத்து விட்ட மாதிரி ஆகி விடக் கூடாது என்பதனால் பின் அந்த முயற்சியை விட்டு விட்டாள்.
இப்போது அந்த பெண்ணோடு ரித்து!
அதுவும் அவளுக்கு திருமணம் ஆகி கையில் ஒரு குழந்தையோடு இருக்கும் நிலையில் அவர்கள் மீண்டும் நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதை சஷியால் ஜீரணிக்கவே முடியவில்லை!
என் ரித்து அப்படி பட்டவன் கிடையாது!
அந்த பெண்ணும் அப்படிப்பட்டவளாக இருக்க மாட்டாள் என்றே தோன்றுகிறது!
நான் புதைத்து வைத்திருந்த ரகசியம் போல இவர்களுக்கும் எதோ இருக்கிறது அது என்ன?
ரொம்ப நேரம் பழையதையும் இப்போது நடப்பதையும் யோசித்துக் கொண்டே படுத்துக் கொண்டிருந்ததில் தலை வலித்தது சஷிக்கு.
பானுவோடு உள்ளே வந்தாள் மானு.
சஷியை தூங்க வைக்க கையில் ஊசி மருந்தோடு!
அதற்குள் மானு டாக்டரிடம் பேசி ஆலோசனைப் பெற்று இருந்தாள்!
வந்தவள் சஷிக்கு ஊசியைப் போட்டு விட்டு, தன் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
இள வயது சஷியை போலவே தோன்றினாள் மானு சஷிக்கு.
“கொஞ்சம் நில்லும்மா” என்றாள் சஷி!
error: Content is protected !!