Skip to content
Post Views: 3,071
மானுவின் போனையும், அவள் கூட படிக்கும் முதல்வருட மாணவிகள் இரண்டு பேரின் போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டு, கேள்வி கேள்வியாக கேட்டு, ராகிங் பண்ணிக் கொண்டிருந்தார்கள், சீனியர்கள்.
அதை கொஞ்சம் தூரத்திலேயே பார்த்து விட்டு தான் ரித்து அருகில் வந்தான்.
அவன் வருவதை மானுவும் பார்த்து விட்டாள்!
அருகே அவன் வந்தவுடன், “ரித்தூ” என்று அவன் பெயரை சொல்லியபடி, அவனிடம் ஓடிச்சென்று. எதையும் யோசிக்காது, அவன் முழங்கையை தன் கையுடன் கோர்த்துக் கொண்டு அவனருகில் ஒண்டிக் கொண்டாள்.
Advertisement
ரித்துவிற்கு ஒரே ஆச்சர்யமாக போய் விட்டது!
இது என்ன இவள், இப்படி எல்லோர் முன்னும் இப்படி.. அவனுக்குள் கொஞ்சம் ஆச்சர்யம், கொஞ்சம் வெட்கம், நிறைய சந்தோசம், கர்வம்! கூடவே கொஞ்சம் செல்லமான கோபமும் கூட!
ஏண்டி.. இப்படி? ஒருத்தன் வீக்னெஸ் தெரியாம, இப்படி வந்து ஓட்டிகிட்டு நிக்கிற?
Advertisement
நான் இப்ப உன்னையும் தள்ள முடியாது, சீனியர் கெத்தையும், ஸ்டுடென்ட் யூனியன் தலைவர் கெத்தையும் மெயின்டெயின் பண்ணனும்!
Advertisement
ஆனா குட்டிமா.. நீ.. இருக்கியே, என்னைப் படுத்தன்னே பிறவி எடுத்து வந்தவடி நீ.. உள்ளுக்குள் அவள் செல்லமாக திட்டிக் கொண்டே, வெளியில் கொஞ்சம் கெத்துக் காட்டி,
“என்ன இங்க பிரச்சினை?” என்று அந்த முதல்வருட பிஜி மாணவர்களைப் பார்த்துக் கேட்டான்.
“ஒன்னுமில்ல சீனியர், சும்மா பேர் என்ன? எந்த டிபார்ட்மென்ட்டுன்னு கேட்டுட்டு இருந்தோம்” என்றார்கள் அவர்கள்.
Advertisement
“சொல்லிட்டீங்களா, அப்ப கிளாஸ்க்கு போங்க” என்று சொல்லி மானுவையும் அவள் கூட இருந்தவர்களையும் அனுப்பி வைத்தான்.
“யார் சீனியர், அந்த பொண்ணு?”
“ம்ம். என் மாமா பொண்ணு. கொஞ்சம் தூரத்து சொந்தம்!” என்றிட,
“பார்த்தால் அப்படி தெரியலையே , கிட்டத்து சொந்தம் மாதிரியில்ல இருக்கு!” என்று அவர்கள் அவனை கலாய்க்க,
“டேய்.. உதைப்படுவீங்க!” என்று அவன் அவர்கள் பொய்யாக மிரட்டினான்!
அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்த மானுவின் காதிலும் ரித்து சொன்ன, அந்த “மாமா பொண்ணு” என்ற வார்த்தை காதில் விழுந்து, ஒரு வெட்க சிரிப்பைக் கொடுத்தது!
அவள் அப்படி சிரிப்பதை ரித்துவும் பார்த்து விட்டு, இப்படி சிரிச்சு, சிரிச்சே என்னைப் பைத்தியம் ஆக்கிடுடி நீ என்று நினைத்துக் கொண்டான் சந்தோசமாக!
ரித்துவும் மானுவும் படிக்கும் அந்த இருபாலர் கலைக் கல்லூரி, கொஞ்சம் பழைய காலத்து கல்லூரி.
இப்போது இருக்கும் நிர்வாகம், மூன்றாம் தலைமுறை.
தாளாளரின் தாத்தா காலத்தில் ஆரம்பித்தது. அப்போது நன்றாக இருந்த நிர்வாகம் அடுத்த தலைமுறை அப்பா காலத்தில், அவர் வேறு பல தொழில்கள் நடத்தியதால், வேறு ஆட்களைக் கொண்டு நிர்வகிக்க, அது சரியில்லாமல் போய், கல்லூரியின் மதிப்பு குறைந்து போனது!
பார்டரில் பாஸ் ஆனவர்கள், விரும்பிய பிரிவு வேறு கல்லூரிகளில் கிடைக்காதவர்கள், ரித்துவைப் போல் கடைசி நேரத்தில் வந்து சேர்பவர்களின் புகலிடமாக இருந்தது அந்த கல்லூரி!
ஆனால் இப்போது பல்வேறு முறைகளில் நிர்வாகம் சரி செய்யப்பட்டு, கடந்த சில வருடங்களாக நன்மதிப்பை மீட்டுக் கொண்டிருந்தது.
கல்லூரி நிர்வாகத்தோடு, ரித்துக் குடும்பத்திற்கு தலைமுறை தலைமுறையாக நட்பு இருந்தது!
அதனால் தான் அவன் சஷிபாலா அவனை இங்கு சேர்த்ததே!
சேரும்போதே ரித்து சொல்லி விட்டான். குடும்ப பின்னணிப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று!
ஆனாலும் தாளாளர் அவ்வபோது அவனை அழைத்துப் பேசுவார்.
நிர்வாகத்தில் கூட அவனின் சில கருத்துக்கள் கேட்பதுண்டு.
முக்கியமாக, கல்லூரியில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டிய இடங்களை அவன் கருத்துகளைக் கேட்டே வைத்தார்.
அவனும், மாணவர்கள் எந்தெந்த மறைவான இடங்களில் நின்று தம் அடிப்பது போன்ற வேண்டாத செயல்களில் ஈடுபடுவர் என்று சொல்லி, அங்கெல்லாம் கேமரா வைக்க சொன்னான்.
அப்படியே வைக்க ஏற்பாடு செய்தார், தாளாளர்.
அப்படியும், அவன் சொன்ன இடங்களில் இன்னமும் சில இடங்கள் பாக்கி இருக்கவே செய்தன.
ஒரு நாள் தாளாளர் அவனை அழைத்துப் பேசினார்.
“நம் கல்லூரி விளம்பர ப்ளெக்ஸ்கள சிட்டியில இருக்கிற எல்லா பஸ் ஸ்டாப் ஷெல்டர் டாப்பில் வைக்கப் போறோம்.
விளம்பர ஏஜென்சிக் கம்பெனியில, மாடல்களை போட்டோ எடுத்துப் போடுவதற்கு பதில், நம் காலேஜ் ஸ்டுடென்ட்களையே போட்டு விடலாம் என்று சொல்கிறார்கள். முக்கியமாக முதல் வருட மாணவிகளை!
அதனால், நாம் சில பேரை ஷார்ட் லிஸ்ட் செய்து, அவர்களிடம் வீட்டில் பேரெண்ட்ஸ் அனுமதி கடிதம் வாங்கி வர சொல்லியிருக்கிறோம்” என்று சொல்லி, மாணவிகள் பெயர் மற்றும் போட்டோக்கள் அடங்கிய லிஸ்டைக் காண்பித்தார்.
வாங்கிப் பார்த்த, ரித்துவிற்கு அதிர்ச்சி!
அதில் தன் கன்னங்குழி சிரிப்புடன் அவனின் குட்டிமாவும்!
அந்த விளம்பர படத்தில் தோன்றுவது அப்படி ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை தான், அதுவும் சோசியல் மீடியாக்களில் அப்பா, அம்மா குழந்தைகள், மாமியார், மருமகள் என்று வீடியோக்கள் போட்டு வரும் இந்த காலத்தில்!
என்றாலும், அவனுக்கு அவனின் குட்டிமா இப்படி போஸ்டரில் வருவது கொஞ்சமும் பிடிக்கவில்லை!
அவரிடம் ஒன்றும் சொல்லாது, வெளியே வந்தவன், நேரே அவளைத் தேடினான்.
அவளோ, ரித்து கேமரா வைக்க சொல்லி பரிந்துரைத்து, இன்னமும் அது வைக்கப்படாத, ஒரு மறைவான இடத்தில் இருந்த ஒரு ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு ஏதோ எழுதிக் கொண்டு இருந்தாள்.
பக்கி.. இதுக்கு உட்கார வேற இடமே கிடைக்கலையா? இங்க போய் உட்கார்ந்து இருக்கு பாரு. அவளை,, என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவளருகே சென்றான்.
“குட்டிமா..” என்று கோபக்குரலை நிமிர்ந்தவள், ரித்துவைக் கண்டு தன் ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்க, சிரிக்காதடி.. என்று உள்ளுக்குள் திட்டிக் கொண்டே,
“ஆமாம், யாரைக் கேட்டு உன் பேரை காலேஜ் ஆட்(Ad) க்கு கொடுத்த?”
அவள் முகம் சுருக்கி அவனைப் பார்த்தாள்.
“என்ன பார்க்குற? காலேஜ் ஆட்ல நீ வர்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல!”
என்ன அவனுக்குப் பிடிக்கலையா? ஆச்சர்யப் பார்வைப் பார்த்தாள் மானு.
உரிமையாய் அவன் கோபித்துக் கொண்டது அவளுக்கும் பிடித்தது.
ஆனால் அவள் எத்தனை முறை அவனிடம் பேச முயற்சிக்கும் போதெல்லாம், பேசாது போய் விட்டு, இப்போது வந்து கோபத்தில் குதிக்கிறதைப் பாரு.. என்று நினைத்தவள், அவனிடம் பேச்சை வளர்க்க எண்ணியே,
“ஆனா, எனக்குப் பிடிச்சுருக்கே!” என்றாள்.
“உன் அப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டார்!”
“அதெல்லாம் எங்க மேடம் அவர்கிட்ட பேசுறேன்னு சொல்லியிருக்காங்க!”
“வேணாம்னு சொல்றேன் கேக்க மாட்டியா?”
“கேக்க மாட்டேனே!” அவள் வேண்டுமென்றே அடம் பிடிக்க,
“சொன்னா கேக்க மாட்டே அப்ப?”
“ஆமா.. கண்டிப்பா கேக்க மாட்டேன்!”
ஏய் அந்த ஆட்(Ad)ல உன்னைப் பார்த்துட்டு, பசங்க யாராவது கமென்ட் பண்ணுவாங்க! அதெல்லாம் என்னால பார்த்துட்டு இருக்க முடியாது. வேணாம்!”
“பண்ணினா பண்ணட்டும்” அவள் திரும்பி நடக்க, சட்டென்று அவளை நிறுத்தி, கொஞ்சம் உள்பக்கமாக தள்ளிக் கொண்டுப் போய், அவள் கன்னங்களை அழுத்திப் பிடித்து சொன்னான்.
“வேணாம்னு சொல்லி உன் பேரை எடுக்க சொல்லு..”
“மாட்டேன்”
“எனக்குப் பிடிக்கலைன்னு, நான் இவ்வளவு சொல்லியும் நீ கேக்க மாட்ட?
எனக்குப் பிடிக்காதத நீ செஞ்சா, உனக்கு பிடிக்காதத நான் செய்வேன்” என்று சொல்லி, சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்து விட்டு அவள் இதழ்களில் வன்மையாக முத்தமிட்டான் ரித்து!
அதிர்ந்து போய் விட்டாள் மானு.
இத்தனை தூரம் ரித்து துணிவான் என்று அவள் நினைக்கவில்லை!
அவன் கோபத்தைக் கிளப்பிவிட்டது அவள்தானே!
ஆனால் இவ்வளவு கோவம் ஏன்? தன் மேல் பொசசிவ்நெஸ் வந்து விட்டதோ!
அவளுக்குள் இனித்தது!
அவளும் தானே ரித்துவை விரும்புகிறாள்!
விரைவிலேயே தன் நிலை உணர்ந்த ரித்து, கொஞ்சம் வருத்தப்பட்டான்.
தானா இப்படி நடந்து கொண்டது!
இதில் மற்ற மாணவர்கள் ஒழுக்கம் காக்க, கல்லூரி நிர்வாகம் இவனை கருத்து கேட்கிறது!
அப்புறம் மானு, என்னதான், தான் அவளை விரும்பினாலும், அவளின் விருப்பம் தெரியாது இப்படி நடந்து கொண்டது தப்பு தானே!
அவன் அமைதியாக அவளை விட்டு, நகர்ந்து மெல்லிய குரலில் “சாரி” சொல்லியபடி அந்த இடத்தை விட்டுப் போனான்.
அவன் பின்னால் குட்டிமாவின் குரல் கேட்டது!
“ஹலோ பாஸ்.. என்னமோ எனக்குப் பிடிக்காதத செய்யப் போறதா சொன்னீங்க? ஆனா எனக்குப் பிடிச்சதை தானே செஞ்சுருக்கீங்க! ஒன்ஸ்மோர் செய்வீங்களா?”
“ஹேய்.. உன்னை..” பின்னால் திரும்பி பத்திரம் காட்டி விட்டுப் போனான் ரித்து!
இப்போது அவனுள்ளும் குற்றஉணர்வு போய், சந்தோஷம் வந்தது!
ஆனால் மானு அவனை அத்தோடு விடவில்லை!
அதற்கப்புறம் காலேஜில் அவனைப் பார்க்கும் நேரங்களில் எல்லாம், ஒரு படத்தில் பஸ் கண்டக்டரிடம் , “சார்.. அந்த இரண்டு அம்பது..” என்று மீதி சில்லறை கேட்கும் வடிவேலு போல,
“பாஸ்.. ஒன்ஸ்மோர்..” என்று பார்வையாலேயே கேட்டாள்!
குறும்பாக சிரித்தாள்!
“மவளே, கையில் வாகா சிக்கினே அப்ப தெரியும், ரித்து யாருன்னு?” அவனும் அவளை செல்லமாக எச்சரித்தான்.
எல்லாம் கண் ஜாடைகளில் தாம்!
ஒரு நாள் கல்லூரி முடிந்து பஸ் ஸ்டாப்பில் தனியாக நின்று கொண்டிருந்த மானுவின் அருகில் ஓர் பைக் வேகமாக வந்து நின்றது!
ஹெல்மெட்டின் கண்ணாடியைத் தூக்கி விட்டு, “ம்ம். ஏறு” என்றான் ரித்து.
மானு ஒன்றும் சொல்லாமல் ஏறிக் கொண்டாள்.
“எங்கன்னு எல்லாம் கேக்க மாட்டியா?”
“உன்கூட தான வர்றேன், அதான் கேக்கல!”
பைக் அவள் வீடு இருக்கும் பக்கம் செல்லாமல், வேறு திசையில் சென்ற போதும் அவள் கேட்கவே இல்லை!
அவன் அவளைக் கூட்டிக்கொண்டு போனது அவனது ப்ளாட்டுக்கு!
அது ஏர்போர்ட் இருக்கும் ஏரியா அருகில் புதிதாக கட்டிப்பட்டிருந்த ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு!
அவன் அம்மா தான் ஒவ்வொரு முறை கும்பகோணத்தில் இருந்து ஏர்போர்ட் செல்லுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று, இந்த வீட்டை வாங்கினார்.
இப்போது ரித்து இந்த வீட்டில் தங்கிக் கொண்டு தான் கல்லூரி சென்று வருகிறான்.
“நாம எங்க வந்திருக்கோம்?”
“ம்ம். வா சொல்றேன்” என்று அவளை அவன் வீட்டுக்கு அழைத்துப் போய் கதவை திறந்தான்.
“ஓ. இது தான் உன் வீடா?” என்றபடி அவளும் உள்ளே வந்தாள்.
உள்ளே வந்தவள் நேரே போய், பிரிட்ஜை திறந்து தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.
ரித்து, கதவை உட்புறமாக தாழிட்டவன், சட்டை பட்டனை திறந்து கொண்டு அவள் அருகில் வந்தான்.
அவளோ கொஞ்சம் கூட பயப்படாது, “தண்ணீர் வேணுமா, உள்ளே வச்சுடட்டுமா?” என்றாள்.
“ஏண்டி.. உனக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா?”
“பயமா, எனக்கா? உன்னைப் பார்த்தா? வேற யாரையாவது பார்த்து பயமா இருந்தா உன்கிட்ட வருவேன்! உன்னைப் பார்த்தே பயப்படுவேனா?”
“அப்ப என்னைப் பார்த்து உனக்கு பயமா இல்லையா?”
“இல்ல, எனக்கு உன் கூட இருந்தா செக்யூர்டா தான் பீல் பண்ணுவேன்!”
“ஆமா.. ஒன்ஸ்மோர் வேணுமின்னு கேட்டியே, அத இப்ப தரலாம்னு தான், இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்!
என்ன உனக்கு ஓகேயா?”
மானு இப்போது முகம் சிவந்தாள். கல்லூரியில் இருந்த தைரியம், இப்போது தனிமையில் இல்லை!
வெட்கமாக சிரித்து தலை குனிந்தாள்.
“இப்படி சிரிச்சு, சிரிச்சு, இந்த கன்னத்து குழியில் என்னை தலைக் குப்புற விழ வச்சுட்ட இல்ல.. உன்னை..” என்று அவளின் ஒன்ஸ்மோர் ஆசையை தீர்த்தான்.
அவள் முகத்தை அவன் புறம் திருப்பி அவள் கன்னக்குழியில் மெல்ல கடித்தான்!
“வலிக்குது ரித்து”.
அவள் முகம் பார்க்க, அவள் மீண்டும் வெட்கத்தில் தலை குனிய, அப்படியே இறுக அணைத்துக் கொண்டான் அவனின் குட்டிம்மாவை!
ஏற்கனவே, கல்லூரி முதல் நாள், அவளை மீண்டும் பாரத்தவுடன், அதிலும் அவள் உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டபோதே, அவனுள் தீர்மானம்!
இனி குட்டிமாதான் எல்லாம் அவனுக்கு! இனி வேண்டுமா, வேணாமா என்ற கேள்வியே கிடையாது!
எது வந்தாலும் எதிர்கொள்ளதான் வேண்டும்!
அவனின் அம்மாவை சரிக்கட்டும் வழிமுறையை தான் அவன் கற்று வைத்திருக்கிறானே!
அத்தனை வருடங்கள், சைக்கிளோ பைக்கோ வாங்கித் தராத அம்மாவை, இப்போது அவன் கையாள கற்றுக் கொண்டு விட்டான்!
பைக் ஆசையை நிறைவேற்றிக் கொண்டதைப் போல, குட்டிமாவை ஏற்கவும் வைத்து விடலாம் என்று அவனுள் நம்பிக்கை!
எனவே, அவன் ஒரு முடிவோடு தான் இருந்தான்.
எக்காரணம் கொண்டு, அவனால் குட்டிமாவை விட்டு வர முடியாது! அவள் தான் அவன் வாழ்க்கை!
தனக்கும் அவளுக்கும் படிப்பு நல்லபடியாக முடிய வேண்டும்!
பின் மற்றவை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நடத்தி விடுவோம்!
அப்படி அவன் தீர்மானித்து இருக்கும் போது தான், கல்லூரி விளம்பரத்தில் மானுவின் பெயரும் இருப்பதைக் கண்டு கோபப்பட்டது, பின் மறுத்து பேசிய ஆத்திரத்தில் முத்தமிட்டதும்!
எனவே தான் துணிந்து அவளைத் தன் வீட்டுக்கே கூட்டி வந்தான் அன்று.
கட்டிக்கொண்ட ரித்துவைப் பார்த்து, மானு கேட்டாள்.
“அப்போ, நாம லவ் பண்ணிட்டு இருக்கோமா ரித்து?”
“ம்ம். இல்ல.. சாமி கும்பிட்டுகிட்டு இருக்கோம்!” அவள் தலையில் மெல்ல குட்டினான்.
“வலிக்குது ரித்து”.
அவளை அழைத்து சென்று சோபாவில் அமர்ந்து அவளைத் தன்கை வளைவில் வைத்துக் கொண்டு கேட்டான்.
“ஏய்.. குட்டிமா, எனக்கு உன்னை முதல் நாள் பார்த்தவுடனேயே பிடிச்சு போச்சு, அன்னிக்கே ஐயா, இந்த குட்டிமாகிட்ட சரண்டர்!
உனக்கு எப்போடி என்னைப் பிடிக்க ஆரம்பிச்சுது?”
“ம்ம். அன்னிக்கு நான் ஸ்கூல் லேபில் உடம்பு சரியில்லாம வாமிட் பண்ணிட்டு இருந்தப்போ, நீ வந்து தாங்கிப் பிடிச்சியே, அப்போதிலிருந்து தான்!
எனக்கு அன்னிக்கு உன் தோளில் சாஞ்சுட்டப்போ ரொம்ப பாதுகாப்பா பீல் பண்ணினேன்! என் அப்பா கிட்ட பீல் பண்ற மாதிரி!
உனக்கு தான் என் அம்மாவைப் பத்தி தெரியுமே! அவங்களே ஒரு குழந்தை மாதிரி தான்! நான் தான் அவங்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன்!
அப்பா, நான் பெரியவளா ஆனப்புறம் கொஞ்சம் விலக ஆரம்பிச்சுட்டார்!
வீட்டிலும் நான் தான் எப்பவும் பொறுப்பா இருக்கணும்.
அப்பா இல்லாத நாட்களில்!
எனக்கு விவரம் தெரிஞ்ச நாட்களில் இருந்தே, நான் என் வயசுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் ப்ரீயா இருந்ததே இல்ல!
எப்பவும் உள்ளுக்குள் ஒரு அலர்ட்! அம்மா எல்லாம் பார்த்துப்பாங்கன்னு நினைச்சு ப்ரீயா, ரிலாக்ஸா இருக்க முடியாது!
அது இப்ப எல்லாம் கொஞ்சம் அலுத்துப் போய் விட்டது!
என்னை, என் அப்பா என் அம்மாவைப் பார்த்துக்கிற மாதிரி கேரிங்கான ஒரு ஆளை தான் நான் கல்யாணம் செய்துக்கணும்னு நினைப்பேன்!
அன்னிக்கு உன் தோள் சாஞ்சப்போ, எனக்கு அந்த பீல் வந்தது!
அப்புறம், நீ என் அம்மாவை அவங்க இயல்போட மதிச்சு நடந்தது, இதுவும் ஒரு முக்கியமான காரணம்!” என்றாள் மானு!
“இந்த கடவுளோட டிசைன் பார்த்தியா? அம்மாவோட கேர் கிடைக்கலன்னு நீ வருத்தப்படுற!
என் அம்மா அப்படியே ஆப்போசிட்! ஓவரா கேர் பண்ணுவாங்க என்னை! அது தான் எனக்கு ப்ராப்ளமா தெரியுது!
சரி விடு. என் குட்டிமாவுக்கு எந்த கவலையும் வேண்டாம்! உன்னைப் பார்த்துக்க உன் ரித்து இருக்கேன். சரியா, இப்ப கிளம்பு நேரமாகிடுச்சு உன்னை வீட்டு தெருமுனையில் இறக்கி விடுறேன்!”
அதன் பின், வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம், அவளை அவன் வீட்டுக்கு கூட்டி வந்தான்.
ஒரு நாள், அவளை முத்தமிட்டு விட்டு கேட்டான்.
“ஏய். குட்டிமா, உனக்கு பயமாவே இல்லையா? இப்போ உனக்கு தெரிஞ்சிருக்கும் நான் கொஞ்சம் வசதியான வீட்டுப் பையன்னு.
இப்போ உன்னை இப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன். நமக்குள்ள எதாச்சும் கசமுசா நடந்து, அப்புறம் நான் விட்டுட்டு போயிட்டேன்னா என்ன பண்ணுவ?”
“நீயா? என்னை விட்டுட்டு போய்டுவியா? சான்சே இல்லை!
உன் மனசு பூரா, இந்த குட்டிமா தான் இருக்கா!
அதில் வேற யாருக்கும் இடமில்ல!
உன் பெத்த உன் அம்மா, அப்புறம் நாம் பெறப்போகும் பொண்ணு தவிர இனி உன் வாழ்க்கையில வேற பொம்பளங்க யாரும் கிடையாது!
நான் உன் மேல வச்சுருக்கிற நம்பிக்கை.. அது ஒரு ஸ்ட்ராங்கான ஒரு பீல்! அத வார்த்தையால எல்லாம் எனக்கு சொல்ல தெரியல!
அதே மாதிரி பணக்காரங்க எல்லாம் கெட்டவங்க, ஏழைகள் எல்லாம் நல்லவங்கன்னு எல்லாம் ஒன்னுமில்ல!
நல்லவங்களும் கெட்டவங்களும் எல்லா இடத்துலயும் தான் இருப்பாங்க!
அதனால எனக்கு என் ரித்து கிட்ட எந்த அவநம்பிக்கையும் ஒரு நாளும் ஏற்படாது!
போதுமா, சும்மா இதே கேள்வி கேட்டு கேட்டு என்னை போரடிக்காதே!” என்று சொல்லி செல்லமாக அவன் நெஞ்சில் குத்தினாள்.
“யப்பா. .நீ இருக்கியே, பேச ஆரம்பிச்சா போதும் நீ குட்டிமாவே இல்ல! பெரியம்மா..” அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
“வலிக்குது ரித்து” என்றாள் மானு.
அடுத்த வாரம் திருவோணம் வந்தது.
அவர்கள் கல்லூரியில் கொஞ்சம் முன்னதாகவே ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள்!
எல்லா மாணவிகளும் சொல்லி வைத்துக் கொண்டு கேரளா சாரி கட்டிக் கொண்டு வந்தார்கள்!
விழா முடிந்து, கேரளா மாணவர்கள் ஊருக்கு செல்ல வசதியாக அன்று மதியம் கல்லூரி விடுமுறை!
வழக்கம் போல, மானுவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு போனான் ரித்து.
“கொல்லுறடி குட்டிமா, இந்த சாரியில்..” அவளைக் கட்டிக் கொண்டு சொன்னான் ரித்து.
அவன் என்ன தான் அவளை வீட்டுக்கே அழைத்து வந்தாலும் அவளிடம் கட்டிக் கொள்வதையும் முத்தமிடுவது தவிர அத்து மீறாமல் தான் நடந்து கொண்டான்.
இருவருக்கும் படிப்பு முக்கியம்!
ஒரு வேளை மம்மி ஒத்துக் கொள்ளாவிட்டால், வேலைக்குப் போய் குட்டிமாவை பார்த்துக் கொள்ள வேண்டும்!
அதற்கு படிப்பு முக்கியம் என்று அவன் அதில் மிகவும் தெளிவாக தான் இருந்தான்!
ஆனால், இன்று அவள் அவனை மிகவும் சோதித்தாள்.
சும்மா தான் கேட்டான் அவளிடம்.
“குட்டிமா, உன்னை அப்படியே கடிச்சு சாப்பிடணும் போல இருக்கு! நீ ஏன் இப்படி சாரி எல்லாம் கட்டிட்டு வர்ற?” அவளை செல்லமாக கோபித்தான்.
அவள் அருகே வந்து கேட்டாள்.
“ரொம்ப ஆசையா இருக்கா ரித்து?
அப்போ, நான் ரெடி தான்!” என்று அவன் எதிர்பாராத நிலையில் அவளின் சாரி பின்னை எடுத்து விட்டு அவன் முன் நின்றாள்.
ரித்து நிதானமானான்!
“ஏய்.. லூஸு. லூஸு.. போடி.. நான் சும்மா ஏதோ சொன்னேன். அதுக்காக இப்படியெல்லாம் செய்வியா?
போ. உள்ளே போய் சாரியை நல்லா கட்டிக்கிட்டு வா.” அவளை ரூமிற்குள் அனுப்பி விட்டு, ஹாலில் காத்திருந்தான்.
ரொம்ப நேரமாகியும் அவள் வெளியே வர வில்லை.
“குட்டிமா, இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க உள்ளே?”
“ரித்து. கொஞ்சம் உள்ள வாயேன். என்ன பண்ணினாலும் எனக்கு சாரி கட்ட வர மாட்டேங்குது”
“ஏய். உனக்கு சாரி கட்ட தெரியுமா தெரியாதா?”
“தெரியாது. வீட்டில் அம்மா கட்டி விட்டாங்க. அப்புறம் அது ஓல்ட் ஸ்டைல்ல இருக்குன்னு, பிரண்ட்ஸ் கட்டி விட்டாங்க. எனக்கு தானா எல்லாம் கட்டிக்க தெரியாதே!”
“அப்புறம் என்ன டேஸ்க்கு.. பெரிய இவளாட்டம்..” அவன் பல்லைக் கடித்தான்.
“குரங்கு..குரங்கு..அறிவிருக்கா உனக்கு?” தலையில் குட்டினான்.
வலிக்குது ரித்து.
போனை எடுத்து யூயூபில் ஹவ் டு ப்ளீட் சாரி என்று பார்த்தான் குட்டிமாவின் ரித்து.
error: Content is protected !!