அவன் உலகம் தனி. அதில் அவனும் அவன் ஓட்டமும் மட்டுமே.எந்த புற காரணிகளும் அவனை பாதிக்கவில்லை
Advertisement
தினமும் கர்ம சிரத்தையாய் ஓட்டப் பயிற்சி மேற்கொள்கிறான் தினேஷ்.
உடலோடு மனமும் வலுவுற்றிருந்தது.
ஓட்டம் ஓட்டம் என்று ஓடி கொண்டிருப்பதால் கவனம் சிதறி படிப்பில் சோடை போகவில்லை. படிப்பிலும் இப்போதெல்லாம் முன்னேறி இருந்தான்.
Advertisement
அவனுக்கு இப்போதெல்லாம் புரியத் தொடங்கிவிட்டது படிப்பு தான் வாழ்க்கையை மாற்றும் என்று.
Advertisement
காலை மாலை இரு வேளையும் ஓட்டப் பயிற்சி செய்வான். சனி ஞாயிறுகளில் ஓட்ட தூரம் இன்னும் அதிகரிக்கும்.
தினேஷ் பள்ளியில் விவேகானந்தர் பிறந்த தின விழாவில் நடத்தபட்ட ஓட்ட பந்தயத்தில் வில்லினின்று புறப்பட்ட அம்பாய் சீறி பாய்ந்த தினேஷை கண்ட AEEO வெகுவாய் அவனை பாராட்டி ஐநூறு ரூபாய் பணம் வழங்கி வாழ்த்தினார்.
அவன் குடும்ப சூழல் கேட்டறிந்து தினமும் சத்துணவில் இரண்டு முட்டையும் கொண்டை கடலை சுண்டலும் கொடுக்க சொல்லி தலைமை ஆசிரியையிடம் உத்தரவு பிறப்பித்து சென்றார்.
Advertisement
“—————-“
“இலக்கு நிர்ணயித்து நேரம் நிர்ணயித்து ஓடி பயிற்சி செய்ய வேண்டும்!”என்று மென்மேலும் அவன் ஆர்வத்தை தூண்டிய தங்கப்பன் பி டி ஆசிரியர் தன் சொந்த மாவட்டமான சேலத்திற்கு மாறுதல் பெற்று சென்று விட்டார்.
தனக்கு தூண்டுதலாய் இருந்த ஆசிரியரின் இடமாறுதல் கேட்டு கதறி அழுதான்.
எந்த சூழ்நிலையிலும் பயிற்சியையும் முயற்சியையும் கை விடாதே என்று அறிவுரை பகன்ற ஆசிரியர் ஸ்போர்ட்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்ததோடு எப்போது வேண்டுமானாலும்
தொடர்பு கொள்ளலாம் என்று தன் தொடர்பு எண்ணை கொடுத்து சென்றபோது கண்ணீர் வழிய விடை கொடுத்தான்.
நான் சொல்றேன் கேட்டுக்கோ தினேஷ். உலகமே உன்னை கொண்டாடும் நாள் வரும். அன்னைக்கு நான் பெருமையா சொல்வேன் தினேஷ் என்னோட ஸ்டூடண்ட்.
ஆசிரியரின் பாதம் பணிந்து ஆசிப்பெற்றான்.
இதோ… இப்போது ஏழாம் வகுப்பு மாணவன்… முன்பை விட இப்போது அவனிடம் தெளிவும் முதிர்வும் அதிகம் இருந்தது.
பலர் கிண்டலிலும் சிலர் பாராட்டுதலிலும் அவன் பயிற்சி செவ்வனே சென்று கொண்டு தான் இருக்கிறது.
எட்டாம் வகுப்பு வந்து விட்டான். குறுவட்ட அளவில் வென்று மாவட்ட அளவிற்கு சென்று வருகிறான் வென்றும் வருகிறான்.
பள்ளிக்கு பெருமை தேடி தரும் ஹீரோவாக பார்க்கப் படுகிறான்.
“அந்த புகழ் போதை அவனை தன்னுள் ஈர்த்து கொள்கிறது.”
இன்னும் கடின பயிற்சி மேற்கொள்கிறான்.
இப்போது ஒன்பதாம் வகுப்பிற்கு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சேர்கிறான்.
அங்கு அவனுக்கு போட்டி அதிகம் இருந்தது. பல ஜாம்பாவான் மாணவர்கள் அவனை திணறடித்தனர்.
அவனை பொடியன் என்று அசால்டாய் நினைத்து விட்டனர்.
அங்கு திணறினானே அன்றி துவண்டு பின் வாங்கவில்லை… போட்டி அதிகம் இருக்கவே அவனுக்குள் அதீத உத்வேகம் பிறந்தது.
அவனின் ஆர்வமும் உழைப்பும் கண்ட PET ஆசிரியர் அவனை கண்காணிக்க தொடங்கினார்.
இவனிடம் ஏதோ இருக்கு! அவர் அவ்வளவு உறுதியாக நம்பினார்.
அவன் மீது நம்பிக்கை வலுப்பெற்று அவனுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.
PET ஆசிரியரிடம் நிறைய நுட்பங்களை கற்றான். மூச்சு பயிற்சி, யோகா என்று கற்றுக் கொண்டான்.
அங்கும் அவன் கையே ஓங்கியது. பள்ளிக்கு பல வெற்றிகளை தேடி தந்தான்.
நூறு மீட்டர் இருநூறு மீட்டர் இருபிரிவிலும் கவனம் செலுத்தினான்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் அவன் திறமையை நசுக்கி முடக்க முற்பட்டபோது அரசு பள்ளி ஆசிரியர்கள் சீறிய முனைப்போடு அவனை கை தூக்கி விட முயன்றனர்.
மாவட்ட அளவில் வென்று மாநில அளவில் விளையாட தொடங்கினான்.
ஆசிரியர்கள் அவனுக்கு சத்துள்ள ஆகாரம் கொடுக்க முன்வந்து தங்களுக்குள் நிதி திரட்டி அவனுக்கு கொடுத்து ஆதரவு கரம் நீட்டினார்கள்.
தினேஷ் என்ற பெயரால் பள்ளி பெருமை கொண்டது.
“———-“
பத்தாம் வகுப்பில் இருந்த போதும் படிப்பு,விளையாட்டு இரண்டையும் சமமாக திறம்பட கொண்டு சென்றான்.
மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் முதல் முதலாக தங்கம் வென்று சாதனை படைத்தான்.
தினசரி பத்திரிகையில் அவனது வெற்றி “விளையாட்டு செய்தி பிரிவில்” இடம் பிடித்து மாவட்ட அளவில் கவனம் ஈர்த்தான்.
பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
முதன்மை கல்வி அலுவர் அவர்கள் நினைவு பரிசு வழங்க…. கண்ணீர் மல்க பெற்றவன்… ஸார் தேசிய கீதம் பாட சொல்லுங்க! என்றான்.
அவனுக்கு பரிசை விட தேசிய கீதமே முதன்மையாகப்பட்டது.