Skip to content
Post Views: 7,835
காதல் இன்று
மறுநாள் காலை.
வாசலில் தன் டூவீலர் பால் வண்டியில் இருந்தவாறு, அதில் கட்டப்பட்டிருந்த மணியை அடித்தாள் வெண்ணிலா.
அன்று சனிக்கிழமை. அவளுக்கு பள்ளி விடுமுறை!
Advertisement
அதனால் அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுத்து விட்டு, வெண்ணிலா பால் சப்ளை செய்ய கிளம்பி விட்டாள்.
ஆரம்பத்தில் ஒரு தனியார் பால் நிறுவனத்திற்கு அப்படியே மொத்தமாக அவர்களின் கலெக்சன் சென்டரில் கொண்டு போய் தான் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவர்கள் நிர்ணயம் செய்து இருந்த விலை மிகவும் குறைவாக இருந்தது!
Advertisement
அதோடு பேமெண்டும் டிலே பண்ணி பண்ணி தான் கொடுத்தார்கள்!
Advertisement
காரணம் அந்த கம்பெனியின் அக்கவுண்டன்ட் வெண்ணிலா குடும்பத்தின் மேல் காட்டிய பாரபட்சம்! காழ்ப்புணர்ச்சி!
அவன் தராதரம் இல்லாது வசந்தாவிடமும் வழிவான், வெண்ணிலாவிடமும் வழிவான்! இருவருமே அவனிடம் கடுப்படித்து விட்டார்கள்!
அதனால் அவர்களுக்கு மட்டும் வேண்டுமென்றே லேட் பண்ணிக் கொண்டிருந்தான்.
Advertisement
ஆனால் இவர்கள் புண்ணாக்கும் தீவனமும் வாங்கும் கடைக்கு சரியான நேரத்தில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது!
அதனால், கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று அவர்களே தினப்படி பால் வாடிக்கையாளர்களை பக்கத்து பெரிய கிராமத்தில் பிடித்து விட்டார்கள்.
வெண்ணிலா மீண்டும் பெல்லை அடித்தாள்.
“நேரமாகுது, இந்த அம்மா அப்படி என்ன தான் பண்ணுமோ உள்ள?” அவளுக்கு கோபம் வந்தது!
அவளுக்கு அடுத்து வேலைகள் இருந்தன. இதை முடித்து விட்டு குளிக்க வேண்டும். முடித்து விட்டு ஆன்லைனில் அபாகஸ் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கிறது!
அதற்கு என்று ஒரு ரூமில் தேவையான செட்அப்கள் எல்லாம் அன்புவின் துணையுடன் பஜாரில் கிடைத்த பொருட்களை வைத்தே செய்து வைத்திருந்தாள்!
என்ன இந்த ஊரில் நெட்வொர்க் சில சமயம் சொதப்பி விடும்! நன்கு சிக்னல் கிடைக்கும் இடமாக பார்த்து தான் இந்த செட்டப் பண்ணி வைத்து இருந்தாலும்!
நேற்றே லிங்க் அனுப்பி விட்டாள் அவளின் வெளியூர் மாணவர்களுக்கு!
“சீக்கிரம் சப்ளையை முடிக்க விடாமல் இந்த அம்மா வேறே லேட் பண்ணுது” என்று கடுப்பானாள் வெண்ணிலா!
“யாரு வசந்தா பொண்ணா? ஏன் வசந்தா வரல?” என்று கேட்டபடியே அந்த பண்ணை வீட்டில் இருந்து ஆடி அசைந்து தன் பருமனான உடலைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார் அந்த வயதான பெண்மணி!
“ஆமா பாட்டியம்மா, கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்று அவரின் பால் பாத்திரத்தில் பாலை ஊற்றியவள், வண்டியின் பக்கவாட்டில் மாட்டியிருந்த ஒரு தூக்கு வாளியை அவரிடம் கொடுத்து,
“இதில சீம்பால் இருக்கு அம்மா கொடுக்க சொன்னாங்க.” என்று கொடுத்தாள்.
“சீம்பாலா, கொடு கொடு, என் பேத்திக்கு ரொம்ப பிடிக்கும், எங்க நம்ம வீட்டில் மாடுகள் இருந்தப்போ அடிக்கடி கிடைக்கும். ஒண்ணு மாத்தி ஒண்ணு கன்னுப் போட்டுட்டே இருக்கும்!
இப்ப தான் மாட்டை எல்லாம் கொடுத்துட்டாங்களே, நாங்களே இப்ப உன் அம்மா கிட்ட தான் விலைக்கு வாங்குறோம்!” என்றபடி பெற்றுக் கொண்டார் அவர்.
பெற்றுக் கொண்ட அவர் அதோடு விடவில்லை!
“நீ படிக்கிறியா என்ன படிக்கிற?” என்று கேட்டார்.
வெண்ணிலாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது!
போன முறை வந்த போதே கூட இதே கேள்விக் கேட்டது இந்த கிழவி! அப்போதே தான் டீச்சர் வேலைப் பார்ப்பதாக சொன்னாள்.
“எங்க பால்வாடி ஸ்கூலிலா?”
“இல்ல”, என்று அவள் வேலைப் பார்க்கும் அந்த பெரிய பிரபலமான பள்ளியின் பெயரை சொன்னாள்!
“ஓ அப்படியா என்ன படிச்சிருக்க?”
“எம் சி ஏ”
இதைக் கேட்டவுடன் அவர் முகம் பொறாமையில் ஒரு கணம் கறுத்து மீண்டது!
“ஓ, பரவாயில்ல, வசந்தா தான் கஷ்டப்பட்டாலும் பொண்ண நல்லா படிக்க வச்சுட்டா!
நீயாவது அவ சொல்ற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணி அவளுக்கு நல்ல பேரை வாங்கிக் கொடு!
நிறைய படிச்சுருக்கோம்னு தாயாரை மதிக்காம போய்டாதே!
யாரு அந்த அன்பு தானே உன்னைக் கட்டிக்க போறவன்! அவன் குறையை எல்லாம் மனசுல வச்சுக்காம நீ தான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கணும்!
பரவாயில்ல நீயாவது டீச்சர் வேலைக்கு போறே, உன் அக்கா, டவுனுக்கு போய் கடையில் முடி வெட்டும் வேலைக்குப் போறாளாமே!” என்று சொல்லி அவளை அன்று கடுப்பேற்றி விட்டு இன்று மீண்டும் அதே கேள்வி!
இத்தனைக்கும் அவர்கள் வீட்டு ஹிஸ்டரி ஜியாக்ரபி எல்லாம் அந்த அம்மாவுக்கு அத்துபடி!
வசந்தாவின் வீட்டு விஷயம் மட்டுமில்லை!
ஊர் விசயமே அந்தம்மா விரல் நுனியில்!
ஆனாலும் வேண்டுமென்றே தெரியாதது போல கேக்கும்!
அப்புறம் அவர் வளர்மதியைப் பற்றி அப்படி கீழாக சொன்னதும் அவளுக்கு கோபத்தை உண்டாக்கியது!
வளர்மதி புகழ்பெற்ற ஒரு யூனிசெக்ஸ் பியூட்டி பார்லரில் பியூட்டிசியனாக வேலைப் பார்க்கிறாள்.
அந்த பார்லரின் யூனிபார்ம் ஜீன்ஸும் டி ஷர்ட்டும்! கண்டிப்பாக லிப்ஸ்டிக் போட்டே ஆக வேண்டும் என்பது அங்குள்ள ட்ரெஸ் கோட்!
அந்த கிராமத்தில் இருந்து கொண்டு அதுவும் கொஞ்சம் கஷ்டப்படுகிற பேமிலியில் இருந்து கொண்டு ஒரு பெண் நல்ல நிறமாக, மாடர்ன் உடையெல்லாம் அணிந்து கொண்டு லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு போவதை அந்த அம்மாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
ஆரம்பத்தில் வளரின் மாமியாரிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இதைப் பற்றி சொல்லி வம்பு இழுக்கப் பார்த்தது!
ஆனால் வளருக்கு அவள் கணவனின் சப்போர்ட் இருந்ததால் அந்த பருப்பு வேக வில்லை!
அந்த கடுப்பில் தான் இப்படியொரு கமென்ட்!
என்ன புத்தி இது! இவர்கள் குடும்பம் தான் படித்து இருக்க வேண்டும், இவர்கள் பிள்ளைகள் தான் மாடர்ன் ட்ரெஸ் போடா வேண்டும், இவர்கள் தான் இங்கிலிஷ் பேச வேண்டும்! என்ன புத்தி ச்சே!
அவள் கோபத்துடன் “இல்ல வேலைப் பார்க்கிறேன், எனக்கு வேலை இருக்கு, இந்தாங்க பிடிங்க” , என்று சொல்ல,
“இந்த காலத்துப் பிள்ளைங்களுக்கு மரியாதையே தெரிய மாட்டேங்குது போ!” என்ற படியே தூக்கை வாங்கிக் கொண்டார் அவர்!
வெண்ணிலாவுக்கு அவருக்கு ஏதாவது பதிலுக்கு கொடுத்து விட்டே வர வேண்டும் என்று தோன்றியது!
உடனே அவள், “பாட்டியம்மா, ஒரு நிமிஷம்! இந்த சீம்பால், ஹை பேட் (High Fat) கன்டென்ட் உள்ளது! வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கொடுங்க, நீங்க சாப்பிடாதீங்க, ஏற்கனவே உங்களுக்கு அது நிறைய இருக்கு!”
“ஹை பேட் ன்னா, என்ன சுகர் ஏறிடுமா?” அவர் கேட்க.
“ஆமா, கூடவே இன்னும் கொழுப்பும்!” என்று மெதுவாக சொல்லி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தாள்!
அவள் மெதுவாக சொன்னாலும் , குழந்த்தைகளுக்கு கிளாஸ் எடுத்துப் பழகி விட்டதால், அவள் குரல் இயல்பாகவே ஓங்கி கொஞ்சம் சத்தம் அதிகமாக தான் கேட்கும் அவள் மெதுவாக பேசினாலும்!
அவள் சொன்னது அந்த அம்மா காதிலும் விழுந்து விட்டது!
அவர் முறைத்த படியே உள்ளே போனார்!
வெண்ணிலா வண்டியைத் திருப்ப, எதிரில் வந்தார்கள் ஜீவாவும் சுபாசினியும்!
ஜீவா ட்ராக் சூட்டில் ஜாகிங் போய் விட்டு திரும்பிருந்தான். சுபா கையில் பக் (Pug) ஜாதி நாய்!
ஜீவா அவளைப் பார்த்து சிநேகமுடம் புன்னகைத்து , “ஹாய் வெண்ணிலா” என்றான்!
“ஹலோ சார்!” என்றாள் வெண்ணிலாவும்!
“ஏய்.. நீ அந்த ஆடு மேய்க்கிற பொண்ணு இல்ல?” பாட்டிக்குத் தப்பாமல் பிறந்தா சுபா!
“சுபா, அவங்க ஆடு மேய்க்கிற பொண்ணு இல்ல அவங்க ஒரு டீச்சர், பிஜி முடிச்சவங்க! அதுவும் கோல்ட் மெடலிஸ்ட்!”
இது எல்லாமும் அந்த சுபாவுக்கும் தெரியும்! அவள் வேண்டுமென்றே தான் வெண்ணிலாவைக் கேவலப்படுத்தவென்று அப்படி சொன்னாள்!
“எம் சி ஏ படிச்சுட்டு அப்புறம் ஏன் ஆடு மேய்க்கிற?” என்றாள் நக்கலாக!
“அது பக்கத்து வீட்டு மலரக்காவோட ஆடு. அவங்க ப்ரக்னண்டா இருக்காங்க. அவங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் நான் அன்னிக்கு ஆட்டை ஓட்டிக் கொண்டு போனேன், அது தானா அவுத்துக்கிட்டு ஓடி வந்திட்டதால!
பை த வே, பி ஈ படிச்சுட்டு இருக்கிற உங்களுக்கு நாய் மேய்க்கிறது பேசன் (Passion) போல, எனக்கு ஆடு மேய்க்கிறது ஒரு பேசன் னு வச்சுக்கோங்களேன்!”
இதைக் கேட்ட பின் அந்த சுபாவுக்கு முகம் கறுத்து போய் விட, “நீங்க பேசிட்டு வாங்க, நான் உள்ளப் போறேன்” என்று விருட்டென்று உள்ளே போய் விட்டாள்!
வெண்ணிலாவின் பதிலடியை வெகுவாக ரசித்துப் பார்த்து கொண்டிருந்த ஜீவாவிடம்,
“சாரி சார்! என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியல, இப்ப இவ்வளவு நேரம் அவங்க பாட்டி இப்படி தான் இன்சல்ட்டிங் ஆ பேசினாங்க! இப்ப இவங்க!
அவங்களாவது மூத்த ஜெனரேசன், இனிமே எல்லாம் திருத்த முடியாதுன்னு விட்டுடலாம், இவங்க யங் ஜெனரேசன்! இவங்களும் இப்படி பேசினா. எனக்கு கோபம் கோபமா தான் வருது!
இத்தனைக்கும் நான், எங்கயுமே இவங்களுக்கு போட்டியா இல்ல!
எனக்கும் இவங்களுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை! இருந்தும் தேவை யில்லாம இப்படி பொறாமை படுறாங்க, இன்சல்ட் பண்ணுறாங்க!” என்றாள் ஒரு ஆதங்கத்துடன்!
அந்த ஜீவாவும் அவர்கள் வீட்டு விருந்தாளி என்பதை மறந்து விட்டு!
அவளுக்கு என்னமோ அவனைக் கண்ட முதல் ஒரு சினேக பாவமும், மரியாதை உணர்வும் தான் தோன்றிக் கொண்டே இருந்தது!
“ஒருத்தவங்க, அதுவும் சம்பந்தம் இல்லாத ஒருத்தவங்க கிட்ட இருந்து இந்த மாதிரி ரியாக்சன்கள் வந்துட்டு இருந்தா, நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்கன்னு அர்த்தம் வெண்ணிலா!
அது உங்களுக்கே தெரியல!
முதல்ல உங்க ஸ்ட்ரென்த் என்னன்னு நீங்களே ஸெல்ப் இவாலுவேட் பண்ணுங்க, அப்புறம் அதை இன்னும் எப்படி இன்னும் ஸ்ட்ராங் ஆக்கலாம்னு பாருங்க.
இவங்களுக்கு எல்லாம் உங்க பேன்ட்வித்தை(Bandwidth) நேரத்தை செலவு பண்ண வேணாம்!
நீங்க மேல மேல டெவலப் ஆகிப் போறது ஒண்ணு தான் இவங்களுக்கு நீங்க கொடுக்கிற நோஸ் கட்!” என்று சிரித்த படி சொல்லி விட்டு அவளிடம் விடைப் பெற்று உள்ளே போனான் ஜீவா.
உள்ளே போகும் போது அவனுள் யோசனை!
“அய்யோ மயூ, முதல்ல இவங்க வீட்டுல இருந்து முதல்ல கிளம்பனும் போல! இத்தனை பேட் வைப்ஸ் இருக்கு இவங்க மனசுல!
வசதி கம்மியா இருந்தாலும் இங்க வேற ஒரு வீட்டைப் பார்த்துக்கணும்.
இந்த ப்ராஜெக்ட் முடிய குறைந்தது மூணு மாசாமாவது ஆகும் போல.
அது வரைக்கும் எப்படி இவங்க வீட்டுலே இருக்கிறது! ஒரு ரெபரன்ஸ்க்கு இவங்க வீட்டைக் காண்பித்தாயிற்று!
இல்லை என்றால் கிராமத்தில் வீடு தர மாட்டார்கள்!
போதும். இனி வெளியே போய்டணும்!”
மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டான் அவன்!
———-
ஒரு வாரம் சென்று.
ஜீவா இப்போது அந்த கிராமத்தில் இருந்த எஞ்சினியர் ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து கொண்டு விட்டான்.
அவர் வெளியூரில் குடியேறி விட்டாலும், குலதெய்வம் கோவில் மற்ற விசேசங்களுக்கு வந்து தங்கிப் போகவென்று அவரின் அந்த பூர்வீக வீட்டை நன்றாக புதுப்பித்து சகல வசதிகளுடன் பராமரித்து வந்தார்.
ஒரு நண்பரின் உதவியால் அவனுக்கு அந்த வீடு கிடைத்தது.
ஜீவாவின் பேக் க்ரவுண்ட் பற்றித் தெரிந்து கொண்டதாலும், சில மாதங்கள் மட்டுமே தங்க இருப்பதாலும் அவர் சந்தோசமாகவே வீட்டைக் கொடுத்திருந்தார்!
அன்று மாலை ஒரு வேலையும் இல்லாததால், அந்த கிராமத்தில் பொழுது போகாததால் ஜீவா காரை எடுத்துக் கொண்டு அப்படியே மனம் போன போக்கில் போய்க் கொண்டிருந்தான்.
அப்போது நகரின் எல்லையில் இருந்த அந்த பெரிய கிராமம் ஒன்றில் இருந்த அந்த ஒரு தனியார் பள்ளி ஒன்றில் மிகப் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டு வெகு சிறப்பாக பள்ளி ஆண்டு விழா நடந்து கொண்டிருந்தது!
அதன் தாளாளர் ஒரு பிரமாண்ட பிரியர்!
பள்ளி ஆண்டு விழா தானே என்று நினைக்க முடியாத அளவு இருந்தது அந்த ஆண்டு விழா!
ஆச்சரியமாக அதைப் பார்த்த ஜீவா, காரை ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே போய் சேர் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு விழாவைக் காண ஆரம்பித்தான்.
அங்கே தன் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அந்த விழாவை ஹோஸ்ட் செய்து கொண்டிருந்தாள் வெண்ணிலா!
பக்கத்தில் இருந்த இருவர் பேசி கொண்டிருந்தார்கள்.
“யாருப்பா இந்த பொண்ணு, சென்னையில இருந்து கூட்டிட்டு வந்திருக்காங்க போல! என்னமா பேசுது, அப்படியே டிவி சேனல்ல வர மாதிரி!
“இந்த கரஸ்பாண்டன்ட் செஞ்சாலும் செய்வாரு! அவருக்கு எல்லாமே அப்படியே சங்கர் பட இபேக்ட் வேணும்!” என்றார் ஒருவர்!
“இல்லப்பா, இது இந்த ஸ்கூல் டீச்சர் தான்” என்றார் இன்னொருவர்!
“அடேயப்பா, என்னா போடு போடுது இந்த பொண்ணு!” பாராட்டிப் பேசினார் முன்னவர்.
வெண்ணிலா பேச்சோடு , இவர்கள் பேச்சையும் கேட்டு ஆச்சர்யம் அடைந்தவர்கள் இருவர். இல்லை மூவர்!
ஆச்சர்யத்துடன் கூடவே வேறுவேறு எண்ணங்களும்!
ஒருவன் நம் ஜீவா.
“இந்த பொண்ணுக்கு இருக்கிற ஸ்கில்ஸ்க்கு , இன்னும் நல்லா வருவா, முடிஞ்சா நாம இதுக்கு ஏதாவது சப்போர்ட் பண்ண முடியுமான்னு பார்ப்போம்.
மயூகிட்ட இவளை[ பத்தி சொன்னா, அவளும் கட்டாயம் அதை தான் சொல்வா” என்று நினைத்துக் கொண்டிருந்தான் ஜீவா.
அவன் இப்படி நினைத்துக் கொண்டிருக்க அந்த ரெண்டாவது ஆள் அன்பு!
அவனும் அதே பள்ளியில் தானே டிரைவர் வேலையும் பார்க்கிறான். அவனும் அங்கு தான் இருந்தான்.
“இந்த பொண்ணை நாம கட்ட தான் வேண்டுமா, இது எங்கியாவது வேற நல்ல பணக்கார வீட்டில் பிறந்து இருந்தா இதோட ரேன்ஞ்சே வேறே மாதிரி இருந்திருக்கும்!
மேலே மேலே பறக்க வேண்டிய ஒரு பறவையை சிறகை ஒடித்து கூட்டில் அடைப்பது போல இருக்கும் தான் அவளைக் கல்யாணம் செய்தால்!” இப்படியாக அவனுள் யோசனைகள்!
அந்த இன்னொருவன் வக்கீல் வினய் என்கிற விநாயக மூர்த்தி!
அவனுக்கு வெண்ணிலாவின் ஒரு கண் எப்போதும்! ஆனால் தடையாக இந்த அன்பு இருக்கிறானே!
அன்பு அவனின் கிளையன்ட் தான்! அவன் கிளையன்ட் ஆனது வேறே ஒரு தனிக் கதை!
வினய் இப்போது அவளைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தான்.
இவர்கள் தவிர இன்னொரு ஆளும் அதே விழாவில்!
அவள் சுதா. குண்டு சுதா என்று அடை மொழியுடன் அழைக்கப்படும் அன்புவின் வேன் கிளீனர் எனப்படும் ஆயா!
ஆயா என்றால் வயதானவள் இல்லை! இளம்பெண்!
அவள் பார்த்துக் கொண்டிருந்து அன்புவை!
error: Content is protected !!