“எல்லாரும் என்னை ரொம்ப திட்டறாங்க சார்.. நான் என் அப்பாவையும் பார்க்கணும், அதே சமயம் மயூம்மாவோட கனவும் கெட்டுடக் கூடாதுன்னு தான் அந்த விநாயகத்தைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்!
அதுக்குள்ள நீங்க வந்து அதை தடுத்துட்டீங்க, நான் நிஜமா யாருக்கும் கெடுதல் நினைக்கல ஜீவா சார். அப்புறம் ஏன் இப்படி..” உதடு பிதுக்கி அழுதாள் வெண்ணிலா!
“சரி. விடு.. ஆனா நீ அந்த சமயம் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம், அதான் உன் மாமாக்கள் அக்காக்கள் எல்லாம் பேசி சரி பண்றேன்னு சொன்னாங்கல்ல,
உன்னை சொல்றேன், நானும் தான் அந்த சமயம் ரொம்ப எமொசனலா டிசிசன் எடுத்துட்டேன்!
Advertisement
மயூவை பத்தி நான் இன்னும் யோசிச்சு இருக்கணும்!
அப்போ, உன்னை இழந்துடக் கூடாதுன்ற டென்சன் தான் ரொம்ப இருந்துச்சு! என்ன செய்றது எல்லாம் நம்ம பேட்(Fate)!”
ஜீவா என்ன சொல்லியும் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை!
“வா, நிலா.. நாங்க மேட்ரிமோனியலல்ல ஜீவாவுக்கு வந்த பொண்ணுங்க ப்ரோபைல எல்லாம் பார்த்துட்டு இருக்கோம்! நீயும் வா, உன் செலக்சன் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்!”
“ஆமாடிம்மா, வா, வந்து நீ கொஞ்சம் பாரு, நான் பார்த்து ஓகே பண்ணினேன் ஒருத்தியை, கடைசியில பார்த்தா அந்த பொண்ணு தான் ஒரு சோசியல் ட்ரிங்கர்ன்னு மென்சன் பண்ணியிருக்கு!
அய்யோடா, மயூ, இப்படி குடிகார மருமகள எல்லாம் தாங்க மாட்டா?” சொல்லி சிரித்தார் மாமி!
மயூவின் கண்கள் நிலாவை ஆராய்ந்தன!
அதில் தெரிந்த வலி! நிலா மயூவை நினைத்து வருத்தப்பட, மயூவோ அவள் ஜீவாவுக்கு வேறு பெண் பார்ப்பதால் பீல் பண்ணுகிறாள் என்று நினைத்துக் கொண்டு, “அப்படி வழிக்கு வாடி என் ராசாத்தி.. இரு நான் உன்னையை சீக்கிரம் இங்க மருமகளா கொண்டு வரேன்!” என்று நினைத்துக் கொண்டாள்!
“சரி” என்று சொல்லி விட்டு தளர்ந்து போய் உள்ளே போன நிலாவை, பார்த்து விட்டு, அவர்கள் அர்த்தம் பண்ணிக் கொண்ட விதத்தில் எண்ணிக் கொண்டு புன்னகைத்தார்கள் மாமியும் மயூவும்!
அதுக்கு ரெடியாக சொல்லு, நான் கொஞ்சம் முன்னாடியே அவங்க வீட்டுக்குப் போய்டுவேன் என்று காலையில் சொல்லியிருந்தாள் மயூ!
செலின் அக்காவுக்கு அடுத்த பிளாக்கில் அவளே ஒரு பிளாட் வாங்கி கிப்ட் பண்ணியிருந்தாள், ஆரம்பத்தில் இருந்தே அவள் வழக்கைப் பார்த்துக் கொண்ட, அவளுக்கு பக்க பலமாக இருந்து வழி நடத்திய அவள் கணவன் தமிழ்செல்வனுக்காக!
“நான் ரெடி ஆகணும்” என்றாள் வெண்ணிலா.
“ம்ம். ரெடியாகு” என்றான் லாப்டாப்பில் இருந்து தலையை நிமிர்த்தாமல்!
“ட்ரெஸ் சேன்ஜ் பண்ணனும்!”
“பண்ணு..”
“நீங்க இருக்கும் போது எப்படி?”
“ஓ.. சாரி.. சாரி” என்று சொல்லியவாறு தன் லாப்டாப்பைத் தூக்கிக்கொண்டு வெளியேறினான் ஜீவா!
வெண்ணிலா டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள்.
சென்றவள் குளித்து விட்டு வந்து எடுத்து வைத்திருந்த சாரியை எடுத்து கட்ட முனைந்த போது, சட்டென அவள் இடுப்பை சுற்றி வளைத்தன இரு கரங்கள்!
ஜீவாவின் கரங்கள் தான்!
“சார்.. என்ன இது?” வெண்ணிலா அதிர்ந்தாள்!
“ஏன் இவ்வளவு ஷாக் ஆகுற நிலா, இப்ப நான் உன் புருசன் தானே? நமக்கு தான் இப்ப கல்யாணம் ஆகிடுச்சே?”
“கல்யாணம் ஆகிடுச்சு தான், ஆனா நாம இன்னும் மயூம்மா கிட்ட இத பத்தி சொல்லல!
அவங்க சம்மதம், ஆசிர்வாதம் இல்லாம நாம இப்படி நம்ம வாழ்க்கையைத் தொடங்க கூடாது! ஒரு வாட்டி நான் தப்பு பண்ணினேன், இனியும் அதை தொடரக்கூடாது” வெண்ணிலா அழற மாதிரி சொன்னாள்.
“மை டியர் பொண்டாட்டி, உன் புருசனுக்கு அது கூடவா தெரியாது! நம்ம விசயம் மயூவுக்கு நாம சொல்லாமலே தெரிஞ்சுடுச்சு!”
“இங்க பாரு..” அவன் தன் கன்னத்தைக் காட்டினான்! அதில் அவனின் அந்த ட்ரிம் செய்யப்பட்ட தாடியை மீறி தெரிந்தன கை அச்சு!
“எப்படி ஆச்சு இது? யார் உங்களை இப்படி அடிச்சா?” வெண்ணிலா பதறினாள்.
“வேற யாரு எல்லாம் உன் அருமை மாமியார் தான்!
வேற யாருக்கு இவ்வளவு தைரியம் வரும்?
ஆனா நான் பிறந்ததிலிருந்தே ஒரு நாள் கூட மயூ என்னை அடிச்சது இல்ல! இது தான் முதல் அடி! ஆனா என்னா அடி?
மயூவோட ஆதார் கூட வேலிடேட் பண்ணிடலாம் அப்படி பதிஞ்சு போய் இருக்கு பிங்கர் ப்ரிண்ட்ஸ்!”
“அவங்களுக்கு தெரியாம நாம இப்படி கல்யாணம் பண்ணினா, பின்ன கொஞ்சவா செய்வாங்க?”
“மயூவுக்கு அதை விட இன்னொரு விசயத்துல தான் ரொம்ப கோபம்!”
“இன்னொரு விஷயமா? என்ன அது? என் மேலயா?”
“ரெண்டு பேத்து மேலயும் தான்!
நாம கல்யாணம் பண்ணிட்டு வந்து இன்னும் அதைப் பத்தி வாயை திறக்காம இருந்திருக்கோம்னு தான் ரொம்ப கோபம்!
இது தெரியாம நான் வேறே மேட்ரிமோனியல்ல வந்த பொண்ணுங்க பத்தி எல்லாம் பேசி அவளைக் காயப்படுத்திட்டேன்னு ஒரே கோபம்!” என்றான் ஜீவா!
இதைக் கேட்டவுடன், இந்த அளவு கூட ஒரு பெண் இருக்க முடியுமா? நாம பண்ணி வச்சுருக்கிற வேலை என்ன?
எவ்வளவு பெரிய ஏமாற்றம் அவங்களுக்கு?
அதைக் கூட நினைக்காம, என் மனசைப் பத்தி யோசிக்கிற அவங்க நிச்சயமா ஒரு பெண்ணே இல்லை! தெய்வம் தான்! எண்ணி எண்ணி அழுகை வந்தது வெண்ணிலாவுக்கு!
அழுதுக் கொண்டே கேட்டாள், “எப்படி தெரிஞ்சது அவங்களுக்கு?”
“உங்க பேமிலி மொத்தமும் இங்க வந்து மயூவைப் பார்த்து விவரம் சொல்லி மன்னிப்பு கேட்டுருக்காங்க! இப்பயும் இங்க சென்னையில தான் இருக்காங்க!”
“சரிடா.. விடு.. உங்க சூழ்நிலை புரியுது.. மாமி கூட கேட்டாங்க, ஒரு வீடியோ கால் பண்ணியாச்சும் உங்க கல்யாணத்தைக் காட்டி இருக்கலாமேன்னு?
விடுங்க மாமி அந்த நேரம் அவங்களுக்கு இந்த யோசனை தோணி இருக்காதுன்னு சொல்லிட்டேன்!
அடுத்தவங்களுக்கு ஆயிரம் ஐடியா சொல்லலாம், நமக்குன்னு வர போது பதட்டத்தில் இது தோணாது தான்!”
“இல்ல மயூம்மா, நீங்க ஜீவா சார் கல்யாணம் பத்தி எவ்வளவு கனவு கண்டிங்க, இப்ப அதெல்லாம் ஒண்ணுமில்லாத பண்ணிட்டோமே நாங்க! இது எவ்வளவு பெரிய ஏமாற்றம்! வலி உங்களுக்கு!” என்று சொல்லி நிலா அழ,
“வலி, ஏமாற்றம் இல்லவே இல்லன்னு பொய் சொல்ல விரும்பல நிலா!
ஆனா அந்த வலியை போக்குறதும் உங்க ரெண்டு பேர் கையில தான் இருக்கு!
நீங்க நல்லபடியா வாழ்ந்தா, ஊர் மெச்ச, நல்லா குழந்தை குட்டின்னு நல்லபடியா வாழ்ந்து தான் என்னோட இந்த வலியைப் போக்கணும்! என்ன சரியா?” மயூ கேட்க
“சரி” என்று சொன்னாள் நிலா!
“சரின்னு சொல்லிட்டு இன்னும் என்னையவே கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருந்தா எப்படி?
நாம் இப்படி இருக்குறத பார்த்தா, எல்லோரும் என்ன சீரியல்ல வர ஐடியல் மாமியார் மருமகளான்னு கிண்டல் பண்ணிடுவாங்க! கிளம்பு” என்றவளின் காலில் விழுந்து ஆசிப் பெற்று திரும்பினார்கள் இருவரும்!
அங்கே ஜீவாவின் அறையில் அவர்களின் சாந்தி முஹூர்த்தத்திற்கான எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருக்க, வெண்ணிலா சொன்ன ஒவ்வொரு ஜீவா சாருக்கும் பனிஷ்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தான் ஜீவா!
“சார்ன்னு கூப்பிடாதேன்னு சொன்னேன்ல” என்று சொல்லி சொல்லி அப்படி சொன்ன அவளின் இதழ்களை கடித்து வைத்து தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தான் ஜீவா!
அங்கே பார்ட்டியில், தன்னைக் காணாது தேடிக் கொண்டிருக்கும் வசந்தாவை நோக்கி சென்றாள் மயூ!