Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

டிங் டாங் காதல்

டிங் டாங் – 12.1

மருமகள் பேசியதில் வாய் விட்டு சிரித்தவர், “என்ன வைஷு வில்லி மாதிரி பேசுற?”

“பின்ன உங்க பையன் பண்றது ஓவரா தான் இருக்கு. உங்ககிட்ட ப்ரப்போஸ் பண்ண மாதிரி அவர்கிட்டையும் ப்ரப்போஸ் பண்ணேன். அதுக்குன்னு இப்படியா பயந்துட்டு ஓடுறது?”

“என்ன அவன்கிட்டயும் பேசிட்டியா? ஏன்டா” இதை கேட்டு தான் மகன் ஓடுகிறானோ என்ற எண்ணம் அவருக்கு.

“ஆமா ரெண்டு வீட்டு ஆளுங்கள பொறுத்தவரை இது அரேஞ்ட் மேரேஜா இருக்கனும் அத நீங்க பாத்துக்கோங்க, ஆனா அவருக்கு தெரியணும் நான் அவரை விரும்பி தான் கல்யாணம் பண்ண போறேன்னு”



Advertisement

“கார்த்தி ஒரு பிடிவாதக்காரன் வைஷு மா… அவனுக்கு ஒரு விசியம் புடிக்கலைனா யார் என்ன சொன்னாலும் செய்ய மாட்டான்” அவர் கூறியதை கேட்டு வைஷ்ணவிக்கு முகம் வாடியது.

“வைஷ்ணவி..” பெரியவரின் குரலில் ம்ம்ம் கொட்டியவள் இப்பொழுதும் அமைதியாக இருக்க, “எனக்கு உன்ன புடிச்சிருக்கு ஆனா அதே சமயம் கார்த்தி விருப்பமும் எனக்கு முக்கியமல்ல? இத பத்தி அவன் உன்கிட்ட பேசுறப்ப மூஞ்சில அடிச்ச மாதிரி வேணாம்னு சொல்ற ஆள். அப்ப உன் மனசு கஷ்டப்பட கூடாது அதுக்கு தான் நானே இப்ப சொல்றேன்”

“சமையல் என்கிட்டே பேசுச்சு… இப்போ தான். வேணாம் வேணாம்னு சொல்றாரே தவற புடிக்கலைனு ஒரு வார்த்தை சொல்லல அத்தை. அப்ப அவருக்கு என் மேல ஒரு ஆசை இல்லனாலும் வேணாம்னு சொல்ல தோனலல?” அவருக்கும் அந்த யோசனை அவள் கூறியதும் தான் வந்தது.

Advertisement

“ஆமா தான்டா… ஆனா எனக்கு நீ ரொம்ப ஆசையா வளக்குறது புடிக்கல”

Advertisement

அவளும் யோசித்து, “சரி நீங்க சொல்ற மாதிரி இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்க யோசனைக்கு ஒரு டெஸ்ட். உங்க பையன்கிட்ட உங்க அண்ணன் பொண்ண அவருக்கு பொண்ணு பாக்கலாம்னு கேளுங்க. எனக்கு சொன்ன மாதிரி யோசிக்கலாம் பாக்கலாம்னு சொன்னா அவரை விட்டு அமைதியா இருக்கேன்.

அப்டி வேணாம்னு சொன்னா உங்க பையன் என்கிட்ட சிக்கிட்டதா வச்சுக்கோங்க. அத நீங்களே நெனச்சாலும் இனி மாத்த முடியாது”

“என் அண்ணன் பொண்ண வேணாம்னு சொன்னா அவனை நான் விடுவேனா என்ன?” வைஷ்ணவியை வம்பிற்கு இழுக்க முயன்றார்.

Advertisement

“என்ன பண்ணுவிங்க? என் அவரு மேல கை வச்சிங்க ஒரு பிரளயமே வெடிக்கும் சொல்லிட்டேன்”

“ம்ம் உன் அவுரு அப்டியே எனக்கு பயந்துட்டாலும்” என மாமியார் சிரித்தவர்,

“நாளைக்கே உனக்கு ரிசல்ட் சொல்றேன்டா” என்றவர் இணைப்பை துண்டித்துவிட்டார். வைஷ்ணவியோ அவனின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் இருக்குமோ என்ற யோசனையிலே மஞ்சத்தில் வீழ்ந்தாள்.

மறுநாள் சனிக்கிழமையாக போக வைஷ்ணவிக்கும் ஷெர்லினுக்கும் சுந்தர் விடுமுறை தந்துவிடுவான். காலையில் மெதுவாக சோம்பலுடன் எழுந்து பல் துலக்கி கீழே வந்த வைஷ்ணவியின் காதுகளில் எதிர் வீட்டில் இருந்து வழக்கத்தை விட அதிகமாக வந்த சத்தம் புருவத்தை உயர்த்த செய்தது.

மாடியை பார்த்தவள் அவன் வீட்டின் வாயிலையும் பார்த்து கீழே செல்ல அவளுடைய தந்தை வழக்கத்தை மாற்றாமல் செய்தித்தாளை வாயிலில் அமர்ந்து பிடித்தபடியே மகளை பார்த்தார்.

ஒரு மாதமாகவே அவளை பார்க்கும் அதே கேள்வி பார்வை தான். திடீரென இவளுக்கு எப்படி வேலைக்கு செல்லும் அளவிற்கு பொறுப்பு வந்தது என்று.

“என்ன வாத்தி, பார்வை எல்லாம் பலமா இருக்கே” தந்தையை சீண்ட அவர் கையிலிருந்த நாளிதழை பிடிங்கி வாசல் படியில் அமர்ந்து பார்க்க, “என்ன நேத்து போட்ட அதே நியூஸ் மாதிரி இருக்கே” சந்தேகமாய் தாழை கீழிறக்கி தந்தையை பார்த்தாள்.

மகளை பார்த்து வெற்றி சிரிப்போடு, “நீ கதவை தொறந்த ஒடனே நான் நேத்து நியூஸ்பேப்பர் மாத்தி வச்சிட்டேன் திடீர் என்ஜினீயர் அவர்களே” தன்னுடைய முதுகிற்கு பின்னால் இருந்து இன்றைய நாளிதழை எடுத்து மகளுக்கு காட்டினார்.

தந்தையின் சிரிப்பில் கோவமாக சுளித்தவள், “பேரு தான் எ.ஹச்.எம் ஆனா பண்றதெல்லாம் இந்த நாய் மாதிரி” அமைதியாக தனக்கு இரண்டடி தள்ளி படுத்திருந்த அந்த வாயில்லா ஜீவன் வயிற்றை பிடித்து வைஷ்ணவி நசுக்க கதறிக்கொண்டு அது அடித்து ஓடியது.

மகள் தன் கணவனை பேசவும் உள்ளிருந்து வந்த மஹேஸ்வரி கரண்டியை அவள் முதுகில் வைத்து அழுத்த, “ஆஆஆ” வென ஊரையே கூட்டும்படி கத்த, அதற்கும் அன்னையிடமிருந்து முதுகில் கையால் ஒரு அடி கிடைத்தது.

“இப்டி தான் அப்பாவை பேசுவியா?”

மகளை கண்டிக்க, “அதுக்கு ஏன் மஹேஷு இப்டி சூடி வச்ச. பாவம் பிள்ளை துடிச்சிடுச்சு” தந்தையானவர் மகளின் காயத்தை பார்த்து மனைவியை ஏசினார் சுந்தரம்.

“அவ நடிக்கிறாங்க. சூடு இல்ல தொட்டு பாத்துட்டு தான் வந்தேன். அவ பண்ற எல்லாத்துக்கும் நீங்களும் துணை போங்க. (Klonopin) நல்லா வந்துருக்கீங்க அப்பாவும் மகளும்” தந்தை செல்லமாய் மகளை முறைக்க பல்லை காட்டி,

“ஹிஹி… ஜஸ்ட் பார் பன் டாடி. என் மேல பாசம் எவ்ளோ இருக்குன்னு டெஸ்ட் பண்ணேன்”

நைசாக எழுந்து அன்னையிடம் சென்று அவரை சில நிமிடங்கள் உதவி என்னும் பெயரில் தொந்தரவு செய்தவளை வெளியில் அனுப்ப மஹேஸ்வரி பட்ட பாடு அவருக்கும் வெளியில் இருவரின் பேச்சையும் கேட்டு சிரித்தபடி கேட்ட சுந்தருக்கு தான் புரியும்.

இது தான் பல வருடங்களாக இந்த வீட்டில் நடக்கும். வீட்டின் ஆண் பிள்ளை வார இறுதி நாட்களில் வருபவன் வந்த சுவடே தெறியாமல் கிளம்பிவிடுவான். இப்பொழுது கூட உள்ளே அமைதியாக படுத்து உறங்குபவனின் வருகை சகோதரிக்கு தெரியாது. அவ்வளவு அமைதி அவன்.

“சரி என்ன எதுத்த வீட்டுல ஒரே சத்தம்?” கடலை சட்னிக்காக உரித்து வைத்திருந்த கடலையை எடுத்து உண்டவள் கையில் ஒரு அடி போட்டு தட்டி எடுத்த மஹேஸ்வரி, “மஹாலக்ஷ்மி அண்ணன் பேமிலி வந்துருக்காங்க போல…” என்றார் அவள் அன்னை.

வைஷ்ணவியின் வாய் அசை போடுவதை நிறுத்தி ஒரு நிமிடம் யோசிக்க, “அந்த பொண்ணு உன்ன விட ஒரு வயசு சின்ன பொண்ணு போல வைஷ்ணவி. அழகா இருந்தா. ஒருவேளை கார்த்திக்கு பேச வந்துருப்பாங்களோ”

‘இருக்குமோ?’ என்ற யோசனை வர என்ன செய்யலாம் என்று யோசித்த வைஷ்ணவிக்கு அவளுடைய மாமியாரின் எண்ணம் வந்து நிம்மதியானது.

‘ஒருவேளை மனசு மாறிட்டா?’ மற்றொரு எண்ணம் உடனே வர, “மகேஷ்… நான் குளிச்சிட்டு வர்றேன். அதுக்குள்ள மசாலா தோசை ரெடி பண்ணி வச்சிரு”

என்றவள் மாடி ஏறி அவசர குளியல் ஒன்றை போட்டு எளிமையான இரவு உடையில் அறையை விட்டு எதிர் வீட்டை நோட்டம்விட தலையை காய வைக்கிறேன் என்னும் பெயரில் வந்தவள் தலையை ஆட்டி, ‘ஓ ஹோ’ என்னும் விதமாய் நின்றனர் கார்த்தியும் அவன் மாமன் மகளும். பார்த்த உடனே புரிந்துகொண்டாள் வைஷ்ணவி.

மொட்டை மாடியின் இறுதியில் நின்று ஏதோ தீவிரமான உரையாடலில் இருந்தனர். கார்த்தி வைஷ்ணவியை நோக்கி சுற்று சுவரில் ஏதுவாக அமர்ந்திருக்க, அவன் மாமன் மகள் அவனை பார்த்து அவனுக்கு அருகில் ஒரு சாய்ந்து நின்றாள். கிட்ட தட்ட கார்த்தியின் மடியில் சென்று அமர்வது போல் இருந்தது.

உள்ளுக்குள் பொறாமை தீயோடு அவள் செய்யும் அனைத்தையும் எந்த வித எதிர்வினையையும் காட்டாமல் அமைதியாய் அவள் பேசுவதை கேட்கும் கார்த்தி மேல் கோவமும் வந்தது.

ஆனாலும், ‘நீ நடந்து ராஜா’ என்று அமைதியாய் வேடிக்கை பார்த்தாள்.

அஸ்வினி. அழகாய் இன்றைய ஆண்களின் கனவு கன்னி எப்படி இருப்பார்களோ அப்படியே இருந்தாள். குட்டி உருவம். கழுத்துக்கு சற்று கீழே இருந்த கூந்தல் காற்றில் அசைந்தாடிய பொழுது அது கூந்தலா இல்லை பறவையின் சிறகா என்னும் அளவிற்கு பார்க்கவே பஞ்சாக தெரிந்தது.

ஜீன்ஸ், தொடை வர இருந்த முக்கால் கை குர்தா என மார்டன் ரதி தான். ஒரு பக்கமாக பார்க்க முகமும் லட்சணமாக தன்னை விட சிறிது கலரும் அதிகமாக தான் இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!