Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

டிங் டாங் காதல்

டிங் டாங் – 12.2

‘அய்யய்யோ கரெக்ட் பண்ணிடுவாளோ? இவன் வேற கரி கடைல நிக்கிற நாய் மாதிரியே பாக்குறானே’ தன்னை குனிந்து பார்த்தாள். ‘ச்சை வைசு அவ எவ்ளோ அழகா டிரஸ் பண்ணிருக்கா… நீ என்னடி நயிட்டி போட்டு நிக்கிற?’

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தன்னிடம் இருந்த அழகிய நைட் பாண்ட் செட் ஒன்றை அணைந்து வந்த பொழுதும் இடம் சிறிதும் மாறாமல் அதே இடத்தில ஒட்டி நின்ற அவன் மாமன் மகளின் எண்ணம் இங்கிருந்து பார்த்த வைஷ்ணவிகே புரிந்தது.

இனியும் பொறுக்க முடியாதென்று இங்கிருந்து இரண்டு கைகளையும் அசைத்து அவனின் கவனத்தை ஈர்க்க முயன்று தோற்றவள், தன்னுடைய அறையில் இருக்கும் கனமான Windchime hanging bell எடுத்து வந்து வேண்டும் என்றே கையில் வைத்து ஆட்ட, அந்த மெல்லிய மணி சத்தத்தில் கார்த்தியின் கண்கள் அவள் மேல் விழ, தன்னை முறைத்து பார்த்து புருவத்தை உயர்த்தும் அவள் பாவனையில் புரியாமல் விழித்த கார்த்தி பார்வையை திருப்பிய பொழுது மீண்டும் மணி சத்தம்

‘டிங் டாங்… டிங் டாங்… டிங்’ .



Advertisement

தன்னை தான் அவள் அழைக்கிறாள் என்று உணர்ந்தவன் அஸ்வினியின் பார்வையை உறுத்தாமல் வைஷ்ணவியை பார்க்க, அவளோ அஸ்வினியை கை காட்டி விலகி நிறுத்துமாறு சைகை செய்தாள்.

அவள் கூறியதை புரிந்துகொண்டவன் இது என்ன செயல் என்று பார்க்க, மீண்டும் அஸ்வினியை கட்டி தள்ளி நிற்க கூறினாள். இந்த முறை அவளை வேண்டும் என்றே வெறுப்பேற்ற அஸ்வினியின் கையை தானே கார்த்தி பற்றி தட்டிக்கொடுக்க அஸ்வினிக்கு ஆச்சிரியம் தாளவில்லை. நம்ப முடியாமல் அவனை பார்த்தவளுக்கு ஏதோ பெரிய சொல்ல முடியாத மகிழ்ச்சி.

கண்களில் சிரிப்போடு வைஷ்ணவியை கண்டவன் கவனத்தை அஸ்வினி ஈர்த்தாள் அவன் கை மேல் தன்னுடைய கையை அழுத்தி பிடித்து. இது அவனுக்கே அதிர்ச்சி தான். கையை தட்டிவிட்டு எடுக்க தான் நினைத்தான். அஸ்வினி வேறு ஒரு பிளான் வைத்திருந்தாள் என்று அவன் அப்பொழுது உணரவில்லை.

Advertisement

அவள் கை இறுக்கத்தில் தான் வைஷ்ணவியை மடக்க எண்ணி தானே அஸ்வினி கையில் மாட்டியது தெரிந்தது. பதட்டத்தை காட்டாமல் வைஷ்ணவியை பார்க்க அவள் கையை ஓங்கி ஏதோ ஏறிய தயாராக இருந்தாள்.

Advertisement

இறுதி எச்சரிக்கையாக, ‘யோவ் சமயலு கைய எடுயா’ என்று முணுமுணுத்தது அவள் நா.

அவன் என்ன மாட்டேன் என்றா நிற்கிறான், அஸ்வினி விட்டால் தானே. தர்மசங்கடமாக இருந்தது அஸ்வினி கையை பிடிக்க. கையை உருவ பார்த்தான், அஸ்வினி ஏதேதோ கதையை பேசுகிறேன் என்று அவன் கையை இன்னும் பத்திரமாக தன்னுடைய கைக்குள் வைத்தாள்.

வைஷ்ணவி பொறாமையில் என்ன செய்வதென்று தெரியாமல் மஹாலக்ஷ்மி எண்ணிற்கு அழைத்தாள்.

Advertisement

“சொல்லு டா” உற்சாகமாக இருந்தது அவர் குரல்.

“என்ன உங்க பையன பொண்ணு பாக்கவா வந்துருக்காங்க? இப்டி தனியா பேச விட்ருக்கீங்க?”

வரவேற்பறையிலிருந்து வெளியே வந்தவர், “வெளிய தானே நின்னு பேசுவாங்கனு நெனச்சேன். மாடிலயா இருக்கான்?” அவளிடமே மீண்டும் கேள்வியை வைத்தார்.

“மாமியாரே… உங்க புள்ள இங்க உங்க அண்ணன் மகளோட கொஞ்சி கொழாவிட்டு இருக்கார். நீங்க வந்து அவள கீழ கூட்டிட்டு போகல, வீடு ஏறி வந்து சண்டை போடுவேன் பாத்துக்கோங்க”

“டேய் வைஷ்ணவி” அவள் குரலின் மாற்றத்தில் சிரித்தார் அவர்.

“சிரிக்காதிங்க யத்தைய்ய்ய்…”

வைஷ்ணவியின் சிணுங்களில் மாடி ஏறியவர், “சரி நான் பாத்துக்குறேன். நீ போன வை டா” ஒன்றும் நடவாதது போல் சென்று வெயிலில் தலை முடியை உலரவைக்கும் வேலையில் இறங்கினாள்.

மாடி ஏறி வந்த மஹாலக்ஷ்மி மருமகளை பார்த்து கண் சிமிட்டி, மகனிடம் சென்றார்.

“அஸ்வினி…” அன்னையின் அழைப்பில் விழித்தவன் இதையே சாக்காக வைத்து அவளிடமிருந்து கையை பிரித்து சற்று இடைவெளிவிட்டு நின்றான்.

“என்னடா இங்க வந்துட்ட… அத்தை உன்ன கீழ ரொம்ப நேரமா தேடிட்டு இருந்தேன்”

“சும்மா மாமாகிட்ட பேச வந்தேன் அத்தை. நேரம் போனதே தெரியல”

“சரிடா நீ கீழ வா. அத்தை உனக்கு புடிச்ச ஜிலேபி செஞ்சு வச்சேன்”

“இல்லை அத்தை, அப்றம் வர்றேன். மாமாகிட்ட இப்டி நேர்ல பேசியே ரொம்ப நாள் ஆச்சு” மீண்டும் கார்த்தியின் கை மேல் தன்னுடைய கையை வைத்து அஸ்வினி கார்த்தியை பார்த்து சிரிக்க, அவனும் சன்னமாய் சிரித்தான்.

இருவரின் கையை பார்த்த மகாலட்சுமிக்கு சற்று சங்கடமாகி போக, “சூடா இருக்கு அஸ்வினி. வா நீ ஒடனே” பிடிவாதமாய் அவர் நிற்பது கூட மகனுக்கு சந்தோசமாக தான் இருந்தது.

வைஷ்ணவியின் முறைப்படி நினைத்து அஞ்சவில்லை அவன். ஏனோ அஸ்வினியின் செயல் இன்று விசித்திரமாக உணர்ந்தான். கீழே இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியவனிடம் வந்து பேசியவள் அப்படியே அவனை மாடிக்கு இழுத்து வந்து ஒரு அடி நகர விடாமல் நிறுத்தி பிடித்தாள்.

“போ அஸ்வினி, நானும் சைட்க்கு கெளம்பனும்” என்கவும் தான் அரை மனதாய் அத்தையுடன் கீழே வர தயாரானாள்.

அப்பொழுதும் விடாமல், “மாமா நானும் உங்க சைட்க்கு வரவா?” என அவனிடம் வந்து மீண்டும் நின்றாள்.

“அதெலாம் மொத்தமா கடை ரெடி ஆனதும் பாத்துக்கலாம் டா. இப்போ ஆளுங்க எல்லாம் அதிகம் இருப்பாங்க. வா நீ”

என கையேடு இழுத்து சென்றவர் படி இறங்கும் பொழுது நின்றவர், “உனக்கு வைஷ்ணவியை தெரியாதுல?” என்றவர் எதிர் வீட்டை பார்த்து,

“வைஷ்ணவிமா” எதார்த்தமாக பார்ப்பது போல் உற்சாகமாக முதலில் மஹாலக்ஷ்மி பின்னால் நின்ற கார்த்தியை பார்த்து தான் கை அசைத்தவள் பிறகு மாமியாரை பார்த்தாள்.

“ஹாய் ஆண்ட்டி” என்றாள் அருகில் இருந்த அஸ்வினியை பார்க்காமல்.

“வைஷு இது தான்டா என் அண்ணன் பொண்ணு… அஸ்வினி இது வைஷ்ணவி. ரொம்ப நல்ல பொண்ணு” கூடுதலாக ஒரு சர்டிபிகேட் மகனுக்கும் சேர்த்து வாசித்தார்.

“ஹாய் வைஷ்ணவி” தேன் குரலில் தன்னிடம் பேசிய அஸ்வினியை பார்த்து மனத்தினுள்ளே, ‘வாடி என் சகாளத்தி’ என்ற மனம் வெளியில், ஒரு சிறிய ஹாய் மட்டும் கூறி நிறுத்தியது.

அதன் பிறகு என்ன நினைத்தாளோ அஸ்வினியே தானாக கீழே சென்றுவிட மஹாலக்ஷ்மி மகனிடம் திரும்பி, “இன்னைக்கு ஒன்னும் சைட்க்கு போக வேணாம். நாளைக்கு போ மாமா அத்தை எல்லாம் வீட்டுக்கு வந்துருக்காங்க” இன்னும் கோவமாகவே இருந்தவரின் உணர்வு புரிந்து சரி என்று அமைதியாகிவிட்டான்.

மஹாலக்ஷ்மி கீழே சென்றதும் கார்த்திக்கை அழைத்த வைஷ்ணவி, “என்ன உங்களுக்கு வேணும்? எனக்கு பொறாமைய தூண்டி விட தான் பண்ணிங்களா?”

“உங்கள பொறாமை படுத்த நான் ஏன் இதெல்லாம் பண்ண போறேன்?” இதென்ன வம்பு என்று கார்த்திக்கு சலிப்பு.

“நேத்து நான் பேசுனது உங்கள ஏதோ அபக்ட் பண்ணிருக்கு அதான் இப்டி பண்றீங்க”

திடுக்கிட்டான், “அது எதுக்குங்க என்ன அபக்ட் பண்ணனும்? நான் எப்பவும் போல நல்லா தான் இருக்கேன். யாருக்காகவும் நான் மாறணும்னு அவசியம் இல்லையே”

“அப்டி அவசியம் இல்லனா ஏன் ஆறு மாசம் பாரின் போற ஐடியா? நான் உங்கள ஏதோ அபக்ட் பண்றேன். அந்த பயம் தானே?”

அவளின் பெருமை சிரிப்பை அலட்டல் எதிர்கொண்டவன், “கற்பனை அதிகமோ?”

“இதுநாள் வர இல்ல, ஆனா இப்போ அதிகமா வருது. உங்களால…” இதழின் ஓரம் தோன்றிய சிரிப்பை பற்கள் கடித்து உள் இழுத்தவள் அவன் பதிலுக்கு காத்திருக்க அவனோ சற்று தடுமாறி தான் போனான் அவளின் ஆளை விழுங்கும் பார்வையில்.

மேலும், “அப்டி என்ன வீட்டுல இருக்க எல்லாரோட மனசையும் கஷ்டப்படுத்தி போகணும்?”

“உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லங்க எனக்கு” கடுகடுத்தான் கார்த்தி.

அவள் இன்னும் திடமாய், “சொல்லணும்ங்க. என் மனச உங்ககிட்ட இழுக்க தெரிஞ்சதுல? அப்ப அது கேக்குற கேள்விக்கும் நீங்க தானே பதில் சொல்லியாகணும்?” குரலை சற்று உயர்த்திய வைஷ்ணவியைப் பார்த்து எவருக்கேனும் கேட்டுவிட்டால் என்ற பயம் வர வீணாக எதற்கு வம்பு என்று கீழே முடிவெடுத்தவனை அதட்டி நிற்க வைத்தாள் பெண் ரவுடி.

“பேசாம போனீங்க என்கிட்ட ப்ரப்போஸ் பண்ணி லவ் பண்ண போர்ஸ் பண்றிங்கன்னு உங்க அம்மாகிட்ட சொல்லுவேன்”

சோர்ந்து அவளை பார்த்து திரும்பியவன், “தமிழ் நாட்டுல ஷார்ட்லிஸ்ட் ஆகியிருக்க மூணே மூணுபேர்ல நானும் ஒருத்தன். என்னோட திறமையை வளத்துக்க எனக்கு ஆசை இருக்கும்ங்க. வீட்டுல தான் புரிஞ்சுக்காம ஹர்ட் பண்றங்கனா நீங்களும் தேவையில்லாம பேசி ஹர்ட் பன்னாதிங்க”

சோர்ந்த முகத்துடன் அறைக்குள் சென்று பதுங்கியவன் நிலையை பார்த்த வைஷ்ணவிக்கு அந்த அப்பாவி ஜீவன் மேல் சிறு இரக்கமும் பிறந்தது.

Click here to join in my group of facebook to get updates on my stories directly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!