Skip to content
Post Views: 665
டீசர்…
“அப்பா நல்லா நல்லி எலும்பா வாங்கிட்டு வா பா…”என்ற மகனை வெட்டவா குத்தவா என்ற வகையில் பார்த்திருந்தார் சாரதா.
“மகனே…”மனைவியின் பார்வையிலே அவருக்கு புரிந்து போனது. இன்று தன்னை தான் தாயும் மகனும் சேர்ந்து நல்லி எலும்பாக மாற்றப் போகிறார்கள் என்று.
“என்னப்பா? நீ தானே சொன்ன நல்லா நல்லி எலும்பா சாப்பிட்டா கை சீக்கிரமே குணமாகிடும்னு. கை சீக்கிரமா குணமானே தான நான் மேட்ச் ஆட முடியும்” பச்ச பிள்ளை போலான பாவனையில் ஏதும் அறியாதது போல் டீவியில் கவனத்தை வைத்தவாறே சொன்னான்.
Advertisement
சாரதா மேலும் கண்களை இடுங்க மகனையும் கணவனையும் முறைக்க, இருவரையும் பாவமாய் பார்த்து வைத்த அருணகிரி யார் பக்கம் பேச என புரியாது நின்றார்.
“என்னங்க இது? உங்க வேலை தானா ? இன்னைக்கு என்ன கிழமைன்னு தெரியும் தானே? தெரிஞ்சிருந்தும் உங்க மகனுக்கு இப்படி சொல்லியிருக்கீங்க?”
“என்ன சாரதா மா இப்படி சொல்லிட்ட, நான் போய் அவன் கிட்ட அப்படி சொல்லுவேண்ணா? அந்த பையன் பொய் சொல்றான் நம்பாத” மனைவியை சமாதானம் செய்ய முயல, அவர்கள் பெற்ற தொல்லைக்கு இதழோரத்தில் இளநகை உதிர்த்தன.
Advertisement
“உங்களை பத்தி தெரிஞ்சதுனால தான் கேக்கவே செய்றேன். இவனை கெடுத்ததே நீங்க தான். என் பையனோட இந்த நிலைக்கு உங்க பாலாப்போன ஆசை தான் காரணமே” கோபம் கொண்டு கணவரிடம் சீற, மனைவியின் கோபம் தலை தூக்கவுமே அடங்கி போனார்.
Advertisement
“எனக்கும் என் பையன் இப்படி ஆகனும் அப்படி ஆகனும்னு ஆசை தான். ஆனா அவன் அந்த கை காலை உடச்சிக்கிற கிரிக்கெட்டை தான் விளையாடுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறான். ஒரு அம்மாவா என் மகன் ஒவ்வொரு தடவையும் அடிப்பட்டு வீடு வந்து சேரும்போது உயிரே இருக்க மாட்டேங்குது. என்னோட கவலை உங்களுக்கெல்லாம் ஒரு விளையாட்டா போச்சில” கோபமாய் ஆரம்பித்தவர் இறுதியில் வேதனையில் கண்ணீர் மல்க முடித்திருந்தார்.
“அம்மா…” என ஜனா அவர் பக்கத்தில் வந்து அணைத்து கொள்ள, அவன் கைகளை தட்டி விட்டார்.
அதில் அவனுக்கு அடிப்பட்டிருந்த கையில் வலி எடுக்க,’ஸ்ஸ்’ என முணங்கினான்.
Advertisement
“வலிக்குதா ஜனா. அம்மாவை மன்னிச்சிடு டா. வா வந்து உட்காரு” பதறியவர் அவரின் நியாய தர்மங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து மகனை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.
******
அந்த பெரிய மாளிகை போன்ற வீட்டில் ஒரு ஓரமாய் யாருக்கோ வந்த விருந்துபோல் அமர்ந்திருந்த ஷான்வி திவாரியை சுற்றி அனைவரும் அங்குமிங்கும் அலைந்தவாறே இருந்தனர்.
அங்கே அவளொருவள் இருக்கிறாள் என்பதை கூட அங்கிருந்தோர் யாரும் மதிக்கவில்லை.
பணக்கார வீட்டு விஷேசம் என்பதால் பணமும் பகட்டும் அங்கே நன்கு தெரிந்தது.
தான் தான் மேல் என்ற அடிப்படையில் தனக்கு கீழான நபர்களை அவமதிப்பு செய்வதை எல்லாம் அவளால் காண முடியவில்லை.
பணக்கார வீட்டு வர்க்கம் தான் இவள் என்றாலும், இவளின் வளர்ப்பில் பணம் பகட்டிற்கு எல்லாம் இவளின் பாட்டி தாத்தா இடம் தந்ததே இல்லை.
‘பாட்டி நான் உங்களை இப்போ ரொம்பவே மிஸ் பண்றேன்.நீங்க என்னோட இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் ‘ நினைக்கையிலே விழியோரம் நீர் கோர்த்து விட உடல் தளர்ந்த நிலையில் அதை துடைக்க மனமின்றி தேமே என இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
சரியாக அவளது விழிநீர் வெளிவரும் நேரத்தில் ஒரு வலிய கரம் அதனை துடைத்தது.
யாரோ தன்னை தொடுவது உணர்ந்து அந்த கரத்தை தட்டி விட, அத்தனை நேரம் அவளை கண்டுக்காது இருந்தவர்கள் இப்போது முற்றிலுமாக சூழ்ந்து நின்றனர்.
காலடி சத்தங்களும் பேச்சின் ஆர்ப்பாட்டத்தையும் வைத்தே அது யாரென்று யூகித்த ஷான்வியின் உடல் விறைத்து இறுக்கம் கொண்டது.
சற்று தள்ளி தன் முன்னே கைகளை கட்டி தன்னை கூர் முனையோடு பார்வை குத்திட்டு நிற்பதை உணர்ந்தவளுக்கு அங்கிருந்து நகர கூட முடியவில்லை.
எழுந்துக்க கூட முடியாத வகையில் அவளை நசுக்கி தள்ளியது அந்த விசிறிகள் கூட்டம்.
அவனின் ரசிகர்களிடமிருந்து எப்படியோ தப்பிய ஜனா, அவளை நெருங்க அவனின் இதய துடிப்பு பன்மடங்கானது.
துடிக்கும் இதயத்துடனே அவளை நெருங்கி கைகளை அவள் புறம் நீட்ட, அதை தட்டி விட்டவள் எழுந்து நின்றாள்.
தன் முன்னே அழகே இந்த அழகு யாரென்று கேட்குமளவிற்கு பேரழகியாய் நெஞ்சை நிமிர்த்தி நேர் கொண்ட பார்வையுடன் ஷான் நிற்கவுமே, மன்னவன் அங்கேயே மீண்டுமொரு முறை வீழ்ந்தான்.
காதல் அவனை படுத்தியது என்றால் அவனின் முன்னாள் காதலியோ அவனை உயிரோடே வதைத்தாள்.
“ஹாய் மிஸ் எக்ஸ் லவ்வர்!!!” நக்கலாக அழைக்க,அந்த எக்ஸில் அத்தனை அழுத்தம் கொடுத்திருந்தான்.
“எக்ஸ் கிட்ட பேசினா உங்க கரண்ட் லவ்வர் கோவிச்சுக்க போகுது. அதனால பாய் மிஸ்டர். ஐனார்த்தனன் அருணகிரி” என்று டாடா காட்டி நகர்ந்து விட்டாள்.
போகும் தன் முன்னாள் காதலியை பார்த்திருந்தவனின் கண்களில் அவளை இழந்த வலி, தவிப்பு, ஏக்கம், ஆற்றாமை என பல உணர்வுகளுக்குள் சிக்கி போராட, அந்த தவிப்புக்கு உரியவளோ முற்றிலுமாக அவனை தவிர்த்தாள்.
பக்கம் இருந்தும் தொலைதூரத்தில் எட்டாக்கனியாய் தெரியும் காதலை அடைய வழி தெரியாது தவித்தான் ஜனா.
இரண்டு காதலில் ஒன்றை தேர்ந்தெடுத்தவன், இப்போதோ ஷான்வியின் ஒற்றை காதல் பார்வைக்கு ஏங்கி தவித்து நிற்கிறான்.
*****
error: Content is protected !!