Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தாரமாய் வந்த தேவதையே

தாரமாய் வந்த தேவதையே💜✨ 6

அவள் அடித்தாலும் அதை பொருட்படுத்தாது “டாக்டர் என்ன சொன்னாங்க தியா தம்பி எப்படி இருக்கான்….” என்று பரிதவிப்போது கேட்க அவள் அதற்கு பதில் சொல்லாமல் “நீ ஏன் டா என் வாழ்க்கைல திரும்பியும் வந்த… நீ வேண்டாம்னு தானு உன்னை விட்டு போனேன்… திரும்பியும் ஏன்டா வந்த இப்போ உன்னால மட்டும் தான் என் பையன் இப்போ இப்படி இருக்கான்… போயிடு எங்களை விட்டு போயிடு எனக்கும் என் பையனுக்கும் நீ வேண்டாம்…”  என்று கூறி அவனை தள்ளிவிட்டவள் அங்கேயே சரிந்து அமர்ந்து அழுக ஆரம்பித்துவிட்டாள்….

தீனா அவளை நெருங்க முற்படும் போது டாக்டர் வெளியே வர சத்யா எழுந்து அவர் அருகில் செல்ல “டோன்ட் ஓரி டாக்டர் சத்யா உங்க பையன் இப்போ ஓகே… நரம்பு எல்லாம் கட்  ஆகல… பட் கொஞ்சம் ஆழமா இருக்கு…  ஒன் வீக் பேச விடாம செய்ங்க… குழந்தை பேசுனா கழுத்துல அசைவு ஏற்படும் அதுல வலிக்க வாய்ப்பு இருக்கு… அதே மாதிரி  குழந்தை தானு லிக்விட்(liquid) பூட் மட்டும் தாங்க ஒன் வீக்… அப்றம் கொஞ்சம் கொஞ்சமா சாலிட்(solid)  பூட் குடுங்க… நாளைக்கு மார்னிங் வரைக்கும் ஹாஸ்பிடல்ல இருக்கட்டும்…. மார்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க… ஒருத்தர் மட்டும் குழந்தை கூட இருங்க… ஹாஸ்பிடல்ல கூட்டம் வேண்டாம்…” என்று கூறி கிளம்பிவிட்டார்…



Advertisement

குழந்தை கண் விழித்ததும் பயந்து இருந்தவன் சத்யாவை விட்டு நகரவில்லை… எப்போதும் அப்பா அப்பா என்று கூறி கொண்டு இருப்பவன் அவன் அழைத்த போதும் அவனிடம் செல்லாமல் சத்யாவை அணைத்து கொண்டான்.. அவனை டாக்டர் பேச வேண்டாம் என கூறி இருக்க சத்யாவிற்கு அவனை பேச விடாமல் செய்வதே பெரிய வேலையாய் இருந்தது….

Advertisement

மெல்ல மெல்ல அவனுக்கு எடுத்து கூறி அவனை பேச விடாமல் செய்தாள்… சத்யாவை தவிர்த்து மற்ற மூவரும் அங்கிருந்து கிளம்பி இருக்க தீனா இங்கேயே இருக்கிறேன் என்று கூறினான்…

Advertisement

ஆனால் விஷ்ணு கோவமாக அவனிடம் பேசாமல் மகிமாவிடம் “அவன் செஞ்சு வெச்ச வேலைக்கு அவன் வீட்டுல ரெண்டு பிசாசுங்க ஆடிட்டு இருக்கும்.. முதல்ல அதை போய் பாக்க சொல்லு… அதுக்கு அப்பறம் இங்க வந்து இருப்பானாம்…. இங்க காவலுக்கு நான் ஆளு ஏற்பாடு பண்ணிட்டேன்… முதல்ல வீட்டுக்கு கிளம்ப சொல்லு” என அவன் கூறி அவளை அழைத்து கொண்டு முன்னால் செல்ல தீனா அவன் பின்னால் வண்டி எடுத்து கொண்டு சென்றான்…

சத்யா அவனை திட்டி அடித்து அனுப்பி இருந்தாலும் அவளின் மனது அவனின் அருகாமையை மிகவும் தேடியது… அவள் மிகவும் பயந்து போய் இருந்தாள்… அதுவும் அபி மயங்கியதும் மிகவும் பயந்து இருந்தாள்… அவனுக்கு எதுவும் இல்லை என்று மருத்துவர் கூறிய பின் தான் அவளுக்கு பயம் போனது… ஆனாலும் அவள் மனம் மிகவும் துவண்டு போய் இருந்தது… அவளுக்கு அவள் கவலையை தீர்க்க ஒரு தோள் வேண்டும்… அது அவளவனாக இருக்க வேண்டும் என்று அவள் மனம் மிகவும் ஏங்கியது….

Advertisement

அந்த நேரம் தூங்கி கொண்டு இருந்த அபி அசைய அவனை தன்னுடன் அணைத்து அவனை தட்டி கொடுத்து கொண்டே அவளும் உறங்கி இருந்தாள்…

விஷ்ணு கூறியதை போல் ஜானகியும் அவள் அம்மா அம்பிகாவும்  பஞ்சாயத்தை  கூட்டி அழுது கொண்டு இருந்தனர்… விஷ்ணுவும் அவன் மனைவியும் சொத்திற்காக தன் மகளை அடித்து துன்புறுத்தியதாகவும் அது மட்டுமின்றி அவன் தோப்பில் சத்யாவுடன் இருந்ததாக கூறினார்… அது மட்டுமின்றி தீனாவின் பரம்பரை நகை அவளின் மகனின் கழுத்தில் இருந்ததையும் கூறினார்…

அதோடு “எனக்கு என் மருமகன் மேல எல்லாம் சந்தேகம் இல்லை… விஷ்ணு மேல தான் சந்தேகமா இருக்கு… அவன் தான் மருமகன் கூட எப்பயும் இருக்கான்… அவன் தான் திருடி அந்த குழந்தைக்கு போட்டு இருப்பான்” என்று   இருக்கும் போதே மூவரும் வந்தனர்…

அவர் கூறியதை கேட்ட விஷ்ணுவின் பாட்டி வடிவாம்பாள் “ஏய் இஷ்டத்துக்கு என்னடி பேசிட்டு இருக்க… என் பேரன் திருடனா போய் உன் மருமகனை போய் கேளு… எப்படி உங்க குடும்ப சங்கிலி அந்த மினுக்கி மகன் கிட்ட போச்சுனு கேளு… வந்துட்டா பெரிய இவ மாதிரி… நீ இன்னும் எனக்கு மருமகள் தான்… நீ எப்படி என் குடும்பத்துக்கு வந்தனு தெரியும்ல… நீ என்ன ஒழுக்கமா….” என்று கேட்கும் போது தான் விஷ்ணுவை பார்த்தார்…

“ஐயா இங்க பாரு உன் சின்னம்மா என்ன சொல்றா பாரு…. இதுக்கு தான் சொன்னேன் அந்த மேனாமினுக்கி வீட்டுக்கு போகாதனு… பாரு உன்னை தப்பா சொல்றா…. எல்லாம் அவளால தான்…” என்று அவர் தேவை இல்லாமல் சத்யாவை பத்தி பேச ஆரம்பித்தார்…

ஊர் மக்கள் அனைவரும் சத்யாவை தப்பாக பேச ஆரம்பிக்க தீனாவால் அதை கேட்க முடியாமல் “போதும் நிறுத்துங்க…” என்று சத்தமாக கூறினான்… அவனை யாரும் தப்பாக பேசவில்லை… ஆனால் சத்யாவை பேசுவது அவனால் கேட்க முடியவில்லை…. அது தான் கத்தி இருந்தான்…

அவன் கத்துவதை பார்த்த ஊர் மக்கள் அமைதியாகிவிட்டனர்…. “போதும் போதும் இனிமே நான் அமைதியா இருக்கறதுனால எந்த பயனும் இல்ல… நீங்க இத்தனை நாளா தப்பா பேசிட்டு இருந்த சத்யவதி என் மனைவி… நான் என் கையால தொட்டு தாலி கட்டுன மனைவி…. என் அப்பா அம்மா ஆசீர்வாதத்துல நடந்த கல்யாணம்… அபிமன்யூ எங்க காதால உருவான குழந்தை…. இனிமே அவங்களை பத்தி ஒரு வார்த்தை பேசுனா ஒருத்தரையும் உயிரோட விட மாட்டேன்….” என்று கோவமாக கர்ஜித்தான்…

இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகி விட அம்பிகா தான் “ஐயோ என் பொண்ணு வாழ்க்கை போச்சே… அண்ணன் பையன் நல்லா பாத்துப்பான் அப்படினு நம்பி தானு அதிகமா என் பொண்ணை படிக்க கூட வைக்கல…. இப்போ என் பொண்ணை யார் கட்டிப்பா… ஐயோ என் அண்ணனும் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணி இருக்கானே… இது தான் பெரிய குடும்பத்தோட லட்சணமா… என் பொண்ணோட வாழ்க்கையே போச்சே… சின்ன வயசுல இருந்தே இவன் என் பொண்ணோட புருஷன்னு சொல்லி சொல்லி வளர்த்து அசைய வளர்த்தி விட்டுட்டேனே….” என்று தலையில் அடித்து கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டார்….

அதை கேட்டு கொண்டு இருந்த ஆண்டாள் பாட்டி “போதும் நிறுத்துடி.. என் பையனை பேச உனக்கு என்ன அருகதை இருக்கு… உன்னை பெத்துக்கு பெத்துக்காம இருந்து இருக்கலாம்… பெத்துட்டோமேனு உன்னை என் பொண்ணுனு வளர்த்தா உன் வாழ்க்கையும் நீயே கெடுத்துகிட்ட…. ச்சீ போய் தொலை…. நீ பண்ணது எல்லாம் சொன்னா அவ்வளவு தான்… இது வரைக்கும் உன் பொண்ணுக்கு எங்க பேரனை தரோம்னு நானும் உன் அப்பாவும் சொல்லி இருக்கோமா… இல்லை உன் அண்ணன் அண்ணி தான் சொல்லி இருக்காங்களா… நீயே அப்படி  சொல்லிட்டு எங்களை குத்தம் சொல்ற…” என்று ஆங்காரமாய் கத்தினார்… கோவத்தில் அவர் முகமே சிவக்க ஆரம்பித்து இருந்தது…

எப்போ இப்படி பேசுனியோ இனிமே உன்னை பத்தி மறைக்க ஒன்னும் இல்லை… என்று அவர் செய்ததை கூற ஆரம்பிக்க அம்பிகா முகம் வெளிற ஆரம்பித்தது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!