Skip to content
Post Views: 736

அழகர்சாமி ஆண்டாள் தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் மூத்தவர் ராஜதுரை இரண்டாவது தான் அம்பிகா… ராஜதுரைக்கு ஊர் மக்கள் தான் முக்கியம்… ஊர் ஊரின் நலன் என்று அதன் பின் மட்டுமே ஓடுவார்… தாயிடம் மட்டுமே சிரித்து பேசுவார்… அழகர்சாமியிடம் கூட மரியாதையுடன் ஒரு சில வார்த்தையுடன் முடித்து கொள்வார்…
அம்பிகாவுடன் பேச கூட .. சிறு வயதில் தங்கை என்று பாசம் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவர் செய்யும் செயல் எதுவும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… அதனால் ஒதுங்கி கொண்டார்… அதன் பின் தான் அவர் திமிர் அதிகம் ஆகியது…
Advertisement
ஆண்டாள் எவ்வளவு கூறியும் அவர் அடங்குவதாய் இல்லை… அழகர்சாமியும் அடித்தும் பார்த்து விட்டார் பொறுமையாக கூறியும் விட்டார்… ஆனால் அம்பிகா தான் கேட்பதாய் இல்லை…
இதற்கிடையில் ஆண்டாளின் பிடிவாதத்தால் ராஜதுரைக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது… ராஜதுரையை விட அம்பிகா பதின்னொன்று வருடம் சிறியவர் என்பதால் முதலில் ராஜதுரைக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது…
Advertisement
Advertisement
ராஜதுரைக்கு பார்த்த பெண் நாச்சியார்…. ராஜதுரைக்கு ஏற்ற பெண் தான்.. திருமணம் முடிந்த பின் ஆண்டாளின் வேலையை பாதியாய் குறைத்து விட்டார்… அம்பிகாவை அழகாக கையாண்டார்… அதுவே ஆண்டாளுக்கு நிம்மதியாய் இருந்தது… அமைதியாய் இருந்தாலும் அழுத்தமாய் இருந்து அவரை அடக்கி இருந்தார்…
மூன்று மாதங்கள் சென்று இருக்க நாச்சியார் கருவுற்று இருந்தார்… அம்பிகாவை தவிர்த்து குடும்பமே அவரை தலையில் வைத்து கொண்டாடியது…. அதை பார்த்தும் அம்பிகாவிற்கு வயிறு எரிந்தது…. இருந்தும் அந்த குழந்தையை எதாவது செய்ய நினைத்தால் ராஜதுரை கையில் அடி வாங்கி சாக நேரிடும் என்று நினைத்து அமைதியாகிவிட்டார்.
Advertisement
அடுத்த எட்டு மாதத்தில் தீனா பிறந்து இருக்க ராஜதுரையின் சாயலை உரித்து வைத்தவாறு பிறந்து இருந்தான்… அவன் பிறந்ததை ஊரே கொண்டாடியது… தீனா வளர வளர அந்த ஊரின் பொருளாதாரமும் அசுர வளர்ச்சியாய் இருந்தது…
வருடங்கள் உருண்டோட தீனாவிற்கு ஏழு வயது ஆன போது அம்பிகா கேட்டதை பார்த்து அழகர் சாமியே அடித்து பிரித்து விட்டார்…. ஆனால் அவர் கேட்டதில் உறுதியாக இருக்க யாருக்கும் என்ன கூறுவது என்றே தெரியவில்லை…
அவர் கேட்டது பொருளோ நகையோ எதுவுமில்லை… உயிருள்ள மனிதனை அதுவும் காதலிப்பதாக கூறினார்… காதலிப்பது ஒன்றும் குற்றமில்லை… ஆனால் அவர் காதலிப்பவரை யோசிக்க வேண்டியதாய் போயிற்று… அவர் காதலிப்பது திருமணமானவர்… அதுவும் ராஜதுரையின் நண்பர் கருணாவை…
கருணாவிற்கு மைதிலி என்பருடன் திருமணமாகி இருந்தது… அதுவும் காதல் திருமணம்… இருவரை போல் ஒற்றுமையான தம்பதியை யாரும் பார்த்திருக்க முடியாது…
ராஜதுரை நாச்சியாரை விட மிகவும் அன்பான தம்பதியினர்… கருணா இதுவரை மைதிலியை இதுவரை அதட்டியது கூட கிடையாது… அவர் ஒரு அரசு அதிகாரி.. அடிக்கடி மாற்றல் வந்து கொண்டே இருக்கும்… இப்போது தான் சொந்த ஊருக்கே மாற்றல் வாங்கி கொண்டு வந்துள்ளார்…
தன் காதல் மனைவியை தன் சொந்த ஊரில் இழப்போம் என தெரிந்து இருந்தால் இங்கு வந்து இருக்க மாட்டாரோ என்னவோ…
முதலில் அம்பிகா இவரை கவனிக்கவில்லை… அதன்பின் இருவரும் ஜோடியாக சுற்றுவதை பார்த்து அதுவும் கருணாவின் மைதிலி மேல் வைத்துள்ள அளவு கடந்த காதல் அவர்பால் சாய வைத்தது… ஆனால் கருணாவிற்கோ அம்பிகாவை ராஜதுரையின் தங்கை என்பது வரை மட்டுமே தெரியும்…
கருணாவிடமே அவர் மேல் காதல் உள்ளது என்பதை அவர் கூறி இருக்க அவர் பெண்னென்றும் காணாமல் அறைந்து இருந்தார்… அவர் அருகில் தான் மைதிலியும் அங்கு தான் இருந்தார்… அம்பிகா இவ்வாறு கூறியதும் மிகவும் பயந்து கருணாவை தான் பார்த்தார்…
அவர் அறைந்ததும் இன்னும் பயந்த மைதிலி அவரை இழுத்து கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்… அங்கு வடிவாம்பாள் கருணா மைதிலி மகன் விஷ்ணுவிற்கு கதை சொல்லி கொண்டு இருந்தார்….
கருணா கோவமாகவும் மைதிலி அழுது கொண்டே வருவதை பார்த்தவர் என்னவென்று கேட்டார்… மைதிலி அவரை “அத்தம்மா” என்று கூறி கொண்டே அணைத்தவர் நடந்த அனைத்தையும் கூறி இருந்தார்…
அதை கேட்டு கோவமடைந்தவர் “அந்த எடுபட்ட சிறுமிக்கு அவ்வளவு திமிரா… அந்த நல்ல மனுஷங்களுக்கு இந்த மாதிரி ஒருத்தியா மகளா வரணும்… நீ ஏன் அவனை கூட்டிட்டு வந்த அந்த சிறுமியை நாலு சாத்து சாத்திட்டு வந்து இருக்கனும்… அழுதுட்டே வந்து இருக்க… என் புருஷன் கிட்ட இப்படி பேசுவியானு சொல்லி அடிக்காம பயந்துட்டு அடிச்சவனை கூட்டிட்டு வந்து இருக்க… இருக்கு அந்த சிறுக்கிக்கு நாலு வார்த்தை நறுக்குனு கேட்டுட்டு வந்தா தான் அவளுக்கு எல்லாம் புத்தி வரும்…” என்று கோவமாக புறப்பட்டவரை கருணா தான் நிறுத்தினார்…
“அம்மா அமைதியா இருங்க… நீங்க கோவப்படாதீங்க… மயிலு பயப்படாத நான் துரை கிட்ட பேசிக்குறேன்… இனிமே அந்த வார்த்தை கூட நம்ம வீட்டுக்குள்ள வர கூடாது…” என்று கூறியவர் ராஜதுரைக்கு அழைத்து ராஜதுரையின் தோட்டத்திற்கு வர கூறினார்…
ராஜதுரை எப்போதும் போல் தோட்டத்திற்கு வந்தவர் அங்கு யோசனையுடன் அமர்ந்து இருக்கும் நண்பனை நெருங்கினார்…
“என்ன கருணா என்ன யோசனை.. முகம் வேற கோவமா இருக்கு… தங்கச்சி கிட்ட சண்டை போட மாட்டியே நீ.. உன் அம்மா கூட சண்டையா… ஆபீஸ்ல எதோ பிரச்சனையா” என்று கேட்டார்…
இல்லை என்று தலையாட்டியவர் அம்பிகா கூறியதை கூறிவிட்டார்… “நான் இதை எதிர்பாக்கல துரை.. நான் உன் தங்கச்சியை என் தங்கச்சியா தான் பாத்தேன்.. அவ இப்படி பண்ணுவா நான் நினைக்க கூட இல்லை… கண்டிச்சு வை டா… நானா இருக்க போய் உங்கிட்ட சொல்லிட்டேன்… வேற யாராவதா இருந்தா என்ன ஆகி இருக்கும்… மைதிலி வேற பயந்து போய் இருக்கா… பாத்துக்கோ டா..” என்று துறையின் தோளில் தட்டி கொடுத்தவர் வேறு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்…
கருணா சென்ற பின்னும் இறுகி போய் நின்ற ராஜதுரை அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டிற்கு சென்றார்… அவர் வண்டி நிறுத்திய வேகத்தில் பயந்த நாச்சியார் அவர் அருகில் செல்வதற்குள் அம்பிகாவை போட்டு அடிக்க ஆரம்பித்துவிட்டார்….
சத்தம் கேட்டு வந்த ஆண்டாள் ராஜதுரை அடிப்பதை பார்த்து “ஐயா… என்ன பண்ணா இவ.. எதோ தப்பு பண்ணிட்டாளா.. விடு ஐயா வேற வீட்டுக்கு போற புள்ள எதோ ஆகிட போகுது…” என்று கூறி தடுக்க பார்த்தார்…. ஆனால் ராஜதுரை எதையும் காதில் வாங்காமல் அடித்து பிரிந்துவிட்டார்..
நாச்சியாரும் ஆண்டாளும் எவ்வளவு தடுத்தும் ராஜதுரை நிறுத்தவில்லை… அம்பிகா அவ்வளவு அடித்தும் கத்தாமல் கல் போன்று நின்றார்… ராஜதுரைக்கே வெறுத்து விட்டது… அம்பிகா கத்தாமல் நிற்பதை பார்த்து ராஜதுரைக்கு இன்னும் இன்னும் கோவம் அதிகம் தான் ஆகியது….
ஆண்டாள் ராஜதுரையிடம் “ஐயா இந்த சிறுக்கி என்ன தப்பு பண்ணா…” என்று கேட்டார்…
அவர் கோவமாகவே நடந்த அனைத்தையும் கூறியவர் “நாம இவளை நல்லா தான் ம்மா வளர்த்தோம்… ஆனா இவ ஏன் ம்மா இப்படி வளர்ந்து இருக்கா… எனக்கு அவன் முன்னாடி நிற்கவே முடியல ம்மா… உன் தங்கச்சி இப்படி பண்றா மச்சா… பாத்துக்கோ… அப்படினு சொன்னான் ம்மா… என்னால கருணா முன்னாடி நிக்க முடியல ம்மா… எல்லாம் இவளால தான் ம்மா….” என்று கோவமாக மீண்டும் அடிக்க பார்க்க நாச்சியார் தான் அவரை தடுத்து “மாமா அமைதியாகுங்க… அவ சின்ன பொண்ணு பொறுமையா சொன்னா புரிஞ்சிப்பா….” என்று கூறினார்…
ஆனால் அம்பிகாவோ “நீங்க என்ன சொன்னாலும் என் முடிவுல இருந்து மாற மாட்டேன்.. எனக்கு அவரு வேணும்” என்று பிடிதிவாதமாக கூறினார்… அதை கேட்டு அனைவருக்கும் எரிச்சல் தான் மூண்டது…
விஷயம் அழகர்சாமிக்கு தெரிந்து அவர் சொல்லியும் கேட்காமல் அடித்தும் கேட்காமல் கருணா தான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார்…
error: Content is protected !!