Skip to content
Post Views: 2,416
யாதுமாகி #11
ஒரு சாக்லேட்டை பிரித்து வாயில் போடுவதைப் போல சுவைபட சுலபமாக சொல்லிவிட்டாள் வினிதா.
தனி குடித்தனம் போவது எல்லாம் நடக்கிற காரியமா?
விஷ்ணு விலாவாரியாக எல்லாம் சொல்லி இருக்கிறானே… அன்று காதல் கொண்ட மனம் நிதர்சனத்தை ஏற்க விழையவில்லை, இன்று அதை எண்ணி புலம்பாத நாளில்லை.
Advertisement
என்ன அண்ணி அமைதியா இருக்கீங்க? உங்களுக்கும் செல்ஃப் ரெஸ்பெக்ட் இருக்கு! அம்மா கூட அட்ஜஸ்ட் பண்ணி எவ்வளவு காலம் வாழ்ந்திட முடியும்? நேத்ராவின் நிலையை புரிந்து கவலை கொண்டாள் வினிதா…
உங்க அண்ணனுக்கு தனி குடித்தனம் என்ற வார்த்தையே பிடிக்காது! வலியுடன் சிரித்தாள்.
ஆம்… விஷ்ணு நிலை அப்படி! போட்டது போட்டபடி குடும்ப பொறுப்புகளை உதறி தள்ளிவிட்டு அவன் போய் விட முடியாது. அதை அவன் அன்றே எடுத்து சொல்லி விட்டான். அவனை இப்போது குற்றம் சொல்லவும் முடியாது.
Advertisement
இது பற்றி அன்றே நிறைய பேசினார்கள்.
Advertisement
விஷ்ணு மனம் விட்டு பேசினான். தங்கள் குடும்பத்திற்கு ஊருக்குள் இருக்கும் செல்வாக்கு பற்றி….தன் தந்தைக்குப் பிறகு கங்கு கரையின்றி பறந்து விரிந்து கிடக்கும் நிலப்புலன்களை பராமரித்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பது பற்றி….ஒற்றைப் பிள்ளையான தான் ஒருபோதும் தன் பெற்றவர்களை பிரிந்து வர முடியாது என்பது பற்றி எல்லாமும் எடுத்து சொல்லி இருந்தான்.
என்னை திருமணம் செய்து கிராமத்து வாழ்க்கை சூழலில் சிக்கிக் கொண்டால் உன்னால் அதிலிருந்து கரைசேர முடியாது! திட்டவட்டமாக எடுத்துக் கூறினான்.
என் அம்மா குணம் உனக்கு எதிர்மாறு! தினமும் கூட்டுவாங்க. உன்னால் தாக்கு பிடிக்க முடியாது.படித்து படித்து சொன்னான்.
Advertisement
எனக்கு கிராமம் ரொம்ப பிடிக்கும்! என்ன நடந்தாலும் நான் சமாளிப்பேன்.அத்தை என்ன சிங்கமா புலியா?இப்படி பயமுறுத்தி என்கிட்ட இருந்து தப்பிக்க பாக்குறீங்களா? இமைக்கொட்டி வியந்தாள்.
அவன் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை.அசால்டாய் உதறித்தள்ளினாள்.காதல் கொண்ட மனதிற்கு கடினம் அப்போது புரியவில்லை.
நேத்ரா,வெங்கடாசலம்,வேதவள்ளியின் ஏகப்புதல்வி. அவள் தந்தை நெய்வேலி அனல் மின் நிலையத்தில் சீனியர் என்ஜீனியர்.
அவர்கள் சொந்த ஊர் சேலம்.நேத்ராவின் தாத்தா நடேசன் பிழைப்பிற்காக நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தின கூலிக்கு லேபர் சப்ளையில் வேலை செய்தவர். தன் மகனை நன்கு படிக்க வைத்து என் எல் சி யில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இன்ஜினியர் ஆக்கினார்.
வெங்கடாசலம்,வேதவள்ளி தம்பதிக்கு முதல் இரண்டு குழந்தை கருவிலேயே கலைந்து போனது.
கோயில் கோயிலாக ஏறி இறங்கி,மண்சோறு தின்று, மடிப்பிச்சை கேட்டு வரமாய் பிறந்த தேவதை தான் நேத்ரா.
ஒற்றைப் பெண் குழந்தை என்பதால் அதீத செல்லம், நிரம்ப பிடிவாதம் அவளுக்கு.
நெய்வேலியில் புகழ்பெற்ற பள்ளியான க்ளூனியில் மேல்நிலை வரை படித்து, ஆங்கில இலக்கியத்தின் மீது கொண்ட மோகத்தால் அழுது அடம் பிடித்து சென்னையில் கல்லூரி படிப்பை தொடங்கினாள்.
வேணுகோபாலன் ஜோதி இவர்களின் அருந்தவ புதல்வன் விஷ்ணு.
விஷ்ணுவிற்கு இரண்டு தங்கைகள் வினிதா மற்றும் அஸ்விதா.
வினிதா சாப்ட்வேர் இன்ஜினியர் சந்தோஷை மணம் முடித்து பெங்களூரில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.
இளையவள் அஸ்விதா சென்னை மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவி.
விஷ்ணுவின் தாத்தா பொன்னுசாமி கவுண்டர் அவரின் தந்தை முனுசாமிக்கு ஒரே ஆண்வாரிசு. பொன்னுசாமி கவுண்டர் அன்னலட்சுமி தம்பதிக்கு வேணுகோபாலன் ஒரே ஆண்வாரிசு. அதேபோல் வாழையடி வாழையாக வேணுகோபாலனுக்கும் விஷ்ணு ஒரே ஆண் வாரிசு!
ஆக அவர்கள் பரம்பரையில் ஐந்தாவது தலைமுறையாக ஒரு ஆண் வாரிசு யோகம் மட்டுமே இருக்கிறது.
அவர்கள் வாழ்வு முறை…நாட்டாமை ஊர் மரியாதை, பரம்பரை கௌரவம் என்று வாழ்ந்து விட்டார்கள்.
விஷ்ணுவும் அப்படியே வளர்க்கப்பட்டவன். அவன் வாழும் சூழல் அவனை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது. அவன் வளர்ந்த விதம் அதை இயல்பாக ஏற்றுக் கொண்டது.
தன்னிச்சையாய் வாழும் நேத்ராவிற்கு தன் குடும்ப அமைப்பு ஒத்து வராது என்று தெளிவாக உணர்ந்து கொண்டவன் அவளுக்கு புரிய வைக்க முயன்றான். எவ்வளவு முயன்றும் அவனால் இறுதிவரை அவளை தெளிவிக்க முடியவில்லை.
இறுதியாக விதி வசம் முடிவை விட்டுவிட்டு அவனுக்காக உயிரை விட துணிந்த நேத்ராவை மணந்து கொண்டான்.
விஷ்ணுவின் மாங்கல்யம் நேத்ராவின் கழுத்தில் ஏறும் இறுதி நொடி வரை போராடி பார்த்தார் ஜோதி. அந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட….இறைவன் சித்தம் விஷ்ணுவிற்கு நேத்ரா தான் என்று எழுதி இருந்தது.
“—————–”
அணுவின் துகள்களை விட நுண்ணிய அளவிற்கு கூட ஜோதிக்கு நேத்ராவை பிடிக்கவில்லை.
ஒருவரை எடுத்த எடுப்பில் பிடிக்கவில்லை என்று மனதில் பதித்துக் கொண்டால் இறுதிவரை பிடிக்காமல் தான் போகும்.
ஜோதிக்கு நேத்ரா மீது டன் கணக்கில் வெறுப்பு மண்டி கிடந்தது!இப்போது அது மாறிவிடுமா என்ன?
அதனால் தான் அவள் வாழ வந்து ஒரு பிள்ளை பெற்ற பின்னும் வார்த்தை ஈட்டியால் குத்தி குதறி அவளை ரணப்படுத்தி ரசிக்கிறார்.
“——————–”
என்ன அண்ணி நெடுநேரம் யோசனை பண்றீங்க? வினிதா அவள் தறிக்கெட்ட சிந்தனைக்கு கடிவாளம் இட்டாள்…
ஒன்னும் இல்ல அண்ணி, கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு ஒருத்தி பெறாத பிள்ளைக்கு பெயர் வைக்கிற மாதிரி இருக்கு உங்க தனி குடித்தன யோசனை! விரக்தியாக சிரித்தாள்.
உண்மையில் நேத்ராவின் கூற்றில் உடைந்து போனது வினிதாவின் மனது.
அண்ணி பாவம் என்று உள்ளுக்குள் வருந்தினாள். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று எண்ணிக் கொண்டாள் (தாயை தான்)
தனக்காக முகம் வாடும் நாத்தனாரை பெருமிதமாக பார்த்துக் கொண்டே “போகப்போக சரியாகிடும் அண்ணி “ என்று அவள் கரம் பற்றிக் கொண்டாள்.
அப்புறம் அண்ணி “எனக்காக உங்க அம்மா கூட சண்டை போட வேண்டாம் ப்ளீஸ்!” நீங்க வருஷத்துக்கு நாலு முறை வருவதே பெருசு, வந்த இடத்தில் நாலு நாள் நிம்மதியா தங்கிட்டு போங்க! உணர்வுகளை மறைத்து அடுத்த வேலை பார்க்க கிளம்பினாள்.
.நேத்ராவின் நற்பண்புகளை அறிந்தவள் அப்படியே சங்கடத்துடன் அமர்ந்திருக்க…
அண்ணி போனவாரம் youtube பார்த்து ரசகுல்லா செய்ய ட்ரை பண்ணினேன் சூப்பரா வந்துச்சு. இன்னைக்கு செய்வோமா? இயல்பாக கேட்டு சூழலை இலகுவாக்க முயன்றாள் நேத்ரா.
“—————–”
அன்னம் பாட்டிக்கு விஷ்ணு மீது எவ்வளவு அன்பு இருக்கிறதோ அதே அளவிற்கு வினிதாவின் மீதும் கொள்ளை பிரியம்! முதல் பேத்தி அல்லவா? அது மட்டும் இன்றி குணத்தில் அவள் அன்னத்தின் நகல்.
எல்லா மனிதர்களிடமும் பாரபட்சம் பாராது அன்பு காட்டுவாள்.அவள் முகம் என்றுமே கடுகடு என்று இருந்ததில்லை.அமைதியான,சாந்தமான, சிரித்த முகம் அவளுக்கு. அதுவே அசாத்திய அழகை அள்ளி கொடுத்திருந்தது.
அவளது குணத்தால் கவரப்பட்டு தான் விஷ்ணுவின் நெருங்கிய தோழன் அதாவது சேலம் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் அவனோடு படித்த தோழன் பிரசாத் தன் அண்ணன் சந்தோஷிற்கு வினிதாவை பெண் கேட்டு தனது அண்ணியாக்கிக் கொண்டான்.
எப்போது வந்தாலும் பாட்டியோடு நேரம் ஒதுக்கி அவரோடு பேசி சிரித்து,ஊர் உலக கதைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து,பாட்டியிடம் சமையல்,கை வைத்தியம் பற்றி எல்லாம் கேட்டு அறிந்து கொள்வாள்.
இன்றும் அப்படித்தான்…என்ன பாட்டி கொஞ்சம் டல்லாகிட்டிங்க? பாட்டியின் காலடியில் அமர்ந்து சுருங்கிய அவர் வளைக்கரம் பற்றி தன் கரத்தோடு அன்புடன் பற்றி கொண்டாள்.
வயசு எழுபத்தாறு ஆகப்போகுதேடா தங்கம்…பரிவுடன் அவள் தலை கோதினார்.
சந்தோஷமா இருக்கியாடா தங்கம்?
ரொம்ப நல்லா இருக்கேன் பாட்டி.எந்த குறையும் இல்ல! உள்ளங்கையில் தாங்குற புருஷன்,பெஸ்ட் பிரண்டா என் மாமியார், அருமையான நாத்தனார்,கொழுந்தனார்,
அமோகமா இருக்கேன் பாட்டி.ஆனால் நம்ம வீட்டுக்கு வந்த நேத்ரா நிம்மதியா இல்லையே…
ஆமாண்டா வினி! காலம் எவ்வளவு மாறிட்டு வருது.உங்க அம்மாகாரி இன்னும் கடுகடு சிடுசிடு மாமியாரா தான் இருக்கா…பெருமூச்சு விட்டார்.
அன்னம் அந்த கால மனுஷி என்றாலும் இன்றைய தலைமுறையினரோடு இணங்கி போக கற்றுக் கொண்டார். அதுதானே சிறப்பு! கால மாற்றத்தை ஏற்றுக் கொள்வதுதான் மானுட பண்பு.
அடுத்த தலைமுறையினர் வாழ வழிவிட்டு விலகி நின்று வழிநடத்த வேண்டியதுதான் மூத்த தலைமுறையின் கடமை.
ஜோதி சிறுவயதில் இருந்தே ஆணவம் கொண்டவர்தான்.
தஞ்சாவூர் அருகே வல்லம் என்ற ஊரை சார்ந்தவர். ஜோதியின் கொள்ளு தாத்தாவிற்கு 9 ஆண் குழந்தைகள்.அடுத்து அடுத்து பெண் குழந்தையாக இருக்கும் என்று எதிர்பார்த்து ஒன்பது ஆணை பெற்றார்களாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் அப்பா தலைமுறையில் அப்பாவோடு பிறந்த ஐந்து ஆண்களில் யாருக்குமே பெண் குழந்தை இல்லை என்பது வினோதம்.
ஜோதி மட்டுமே மூன்று தலைமுறை கடந்து பிறந்த ஒரே பெண் குழந்தை என்பதால் குடும்பமே குலதெய்வமாய் கொண்டாடியது. அவரது அழகு,துடிப்பு,வாய்சவடால் எல்லாவற்றையும் ரசித்து ரசித்து வளர்த்தனர்.அவர் சொல்வதே சட்டம்,அவர் எடுப்பதே முடிவு.
நல்ல வசதியான குடும்பம் தான் ஜோதியின் வீடும்.உறவினர் வீட்டு திருமணத்தில் ஜோதியை பார்த்துவிட்டு,கட்டினால் இந்த பெண்ணை தான் கட்டுவேன் என்று விடாப்பிடியாய் நின்றார் வேணுகோபாலன்.
தன் வசதிக்கு இணையான இடம் இது இல்லை என்று பொன்னுசாமி திட்டவட்டமாக மறுத்தார்.
அன்னம் தான் தன் ஒற்றை மகனின் ஆசைக்காக கணவரிடம் கெஞ்சி கூத்தாடி அவர் மனதை கரைத்தார்.
தஞ்சாவூர் ஜில்லாவில் பெயர் பெற்ற குடும்பம் ஜோதியின் குடும்பம் என்றாலும் பொன்னுசாமி கவுண்டர் வசதிக்கு அருகில் கூட அவர்களால் நெருங்க முடியாது.
வேணுகோபாலன் அப்படி ஒன்றும் லட்சணம் இல்லை ஆயினும் கோடி கோடியாய் சொத்து சுகம் இருப்பதைக் கண்டு ஜோதி வீட்டினர் பெண் கொடுக்க இசைந்தனர்.
பெண் பார்க்க போகும் போதே ஜோதியின் அலட்டலும் தான் என்ற அகந்தையும் சுத்தமாய் பிடிக்கவில்லை அன்னத்திற்கு.
தன் செல்ல மகன் ஆசைக்கு இடையூறு வேண்டாம் என்று மனதை தேற்றிக்கொண்டு சம்பந்தம் பேசி முடித்தார்.
மருமகளாய் நுழைந்த மறுநாளே தன் ராஜ்ஜிய பரிபாலனத்தை ஆரம்பித்து விட்டார் ஜோதி.
இங்குதான் அன்னம் உயர்வாக நடந்து கொண்டார்! அதிகாரத்திலிருந்து விலகியது தெரியாமல் விலகி தன் கௌரவத்திற்கு பங்கம் வராமல் நாசுக்காய் நடந்து கொண்டார்.
அந்த வழியை நேத்ரா விஷயத்தில் ஜோதி கடைபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
error: Content is protected !!