Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

35. Dayani Shalokshan - ஹார்ட் பீட் திருடன்

ஹார்ட் பீட் திருடன் -02

திருடன் -02

இப்படியே நாட்களும் செல்ல பயிற்சியும் முடிவடைந்து அவர்களுக்கான குழுவுடன் வேலையில் இணைத்துக் கொண்டனர்.வேலைச் சூழலிற்கு வந்த பின் எப்படி யாரோடும் பேசாது ஒதுங்குவது அனைத்தையும் கடக்கத் தானே வேண்டும. மகியும் அப்படித் தான். அன்று வேலை முடிந்து எழுந்து கொள்ள அவளிற்கு முன் வந்து நின்றாள் மகியும் டீம் லீடர் மகியும் அவளை கேள்வியாய் நோக்க என்வலப் கவரை நீட்டினாள்” இது உங்க ரெயினிங் அலவன்ஸ்” என்று  கொடுக்க  கைகள் நடுங்க அதை வாங்கியவள் “தாங்ஸ்”; என்றாள்.

டீம் லீடரான பிரியாவோ நட்புடனேயே சிரித்துப் பேசுவாள்.அவள் சிரித்து பேசியே வேலை வாங்கிவிடுவாள் அவர்களது பிரிவில் ஆறு பேர் உள்ளனர் லீடர் பிரியாவோடு சேர்த்து.மகிஷா, ரோய், பிரபா, ஹீரோஷினி, தேவ் ஆகியோர் உள்ளனர்.  கரண் வேறு ஒரு டீமில் உள்ளான்.

பிரியாவிற்கு மகி பற்றி முன் கூட்டியே தெரியுமெல்பதால்  அவளும் சற்று அனுசரனையுடனேயே அவளுடன் பழகுவாள். “மேடம் ஒரு ஹெல்ப்” என்றாள் மகிஷா.  அவளும் “ என்ன மகிஷா சொல்லு” என்றாள்  இயல்பாக “ அது வந்து இங்க ஆபிஸ்க்கு ஏற்ற போல டிரஸ் வாங்கனும” என்றாள் தயக்கமாக தன்னுடையைப் குனிந்து பார்த்தபடி.



Advertisement

பிரயாவும் சிரித்தபடி “நானும் சொல்லனும்னு நினைச்சன்” என்றவள். “ வா போலாம்” என அவளை தனது காரில் ஏற்றிக் கொண்டு ஷாப்பிங் மாலிற்குச் சென்றாள் காரை பார்கிங்கில் விட்டு இருவரும் உள் நுழைந்தனர்.மகிஷாவோ அணைத்தையும் விழிவிரித்துப் பார்த்தபடி வந்தாள்.ஒரு கடைக்குள் இருவரும் நுழைந்து கொண்டனர் மகிஷாவும் ஆபில் செல்வதற்க பொருத்தமான உடைகளைகளை வாங்கினாள். “ம்;ம் நைஸ் சாய்ஸ்”  என்றாள்.  சிநிது நேரத்தில் இருவரம் ஷாப்பிங் மாலை விட்டு வெளியேறினர். “மகி எங்க தங்கியிருக்க ஜீ.கே லேடீஸ் ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்கன்”;

“ஓஓ நம்ம கம்பனி குவாட்டஸ் இருக்கே ஒகே நாளைக்குப பார்ப்போம” என்றபடி பிரியா மகியை ஹாஸ்டலில் விட்டுக் கிளம்பினாள். மகியும் தான் வாங்கிய பொருட்களுடன் அறைக்குள் சென்றவள் குளித்து உடை மாற்றி இரவுணவிற்கு கீழிறங்கிச் சென்றாள்.

இரவுணவை மகி உண்ணும் போது அவ்விடம் வந்த வார்டன் “மகிஷா தேவியம்மா கால் பண்ணாங்க” என்றார். அவளும் முகத்தில் புன்னகை படற எழுந்தவள் வார்டனை பின் தொடர்ந்தாள்.” தேவியம்மாவிற்கு அங்கிருந்த லேண்ட் லைனில் இருந்து அழைப்பெடுக்க அவரும் அழைப்பையேற்றார்.

Advertisement

“ஹலோ அம்மா எப்படிமா இருக்கீங்க “ம்ம் மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ “சரிமா” என்றவள் அவருடன் சிறிது நேரம் உடையாடிவிட்டு அழைப்பைத் துண்டித்ததாள்.’ தேவியம்மாட குரல் சரியில்லாம இருக்கே என தனக்குள் எண்ணிக் கொண்டவள் தனதறைக்கு வந்தவள் “சிறிது  நேரத்தில் தூங்கியும் போனாள்.

Advertisement

மறுநாள் காலையில் குளித்து தயாராகிய மகிஷா வாங்கிய புது ஆடையை அணிந்தவள் கண்ணாடியில் தன்னை பார்க்க அவ்வாடை அவளுக்கென தைத்தது போல் கச்சிதமாக பொருந்தியது தனது நீல கூந்தலை போனிட்டேயில் போட்டவள் அலுவதற்கு செல்ல கிளம்பி விட்டாள் ஹாஸ்டலில் விட்டு வெளியே  வந்தவளுக்கு எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் ஒரு பிரமை உண்மையில் யாரும் யாரையும் பார்க்க கூட முடியாத அளவிற்கு சென்னை மா நகர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

மகிஷாவும் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள்.ரிசப்ஷினிஸ்டோ மகிஷாவை விழிகளை விரித்து ஆச்சரியமாக பார்க்க.    மகிஷாவும் அவளுக்கு கண் சிமிட்டியபடி தனது கேப்பினுள் நுழைந்து கொண்டாள். அன்றைய நாள் வெகு உற்சாகமாக சென்றது. மதிய உணவு இடைவேளையில் தான் கர னை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. “ஹாய் மகி  யு சோ பியூட்டிஃபுல்.” மகியும்  புன்னகையுடன் இருக்க “இப்போ தான் போமுக்கு வந்திருக்க” என்றான் சிரித்தபடி. “கரண் எனக்கு போன் ஒன்னும் வாங்கணும்” என்றாள்.

“ஓகே ஓகே ஆபீஸ் முடிஞ்சு வாங்குவோம்” என்றபடி இருவரும் உணவை உண்டு விட்டு தங்களது கேபினுக்குள் சென்றனர். அன்று மாலை டீமில் லீடர் பிரியாவை சந்தித்த மகி  “மேடம்”  “வா மகி இப்போதான் இந்த பீல்டுக்கு ஏத்த போல இருக்க என்றாள் மகியின்  ஆடையை பார்த்தபடி. “குவாட்டஸ் பத்தி சொல்றேன்னு சொன்னீங்க” “ஆமாண்டா. இந்த ப்ரொஜெக்ட் டென்ஷன்ல மறந்துட்டேன், கொஞ்சம் வெயிட் பண்ணு” என்றவள் ஒரு பெல்லை அழுத்த. “எஸ் மேடம் என்றபடி வந்தான் பிரதீப். மகிஷாவை ஒரு பார்வை பார்த்தவன் பிரியா பக்கம் திரும்ப.  குவாட்டஸ் ஏதும் அபைலபிளா  இருக்கா.? தனது கையில் இருந்த டப்பை பார்த்தவன். “ஆமாம் மேடம்”. “ஓகே பிரதீப் ,மகி இன்னைக்கு ஷிப்ட் ஆகவா?” என ப்ரியா கேட்க “இல்ல மேடம்  ஹாஸ்டல்ல சொல்லி திங்க்ஸ் எல்லாம் எடுக்கணும் நாளைக்கு ஷிப்ட் ஆகுறன்” என்றாள். “ஓகே மா உன்னோட விருப்பம்” என்ற ப்ரியா, “பிரதீப் ஹீய கொடுத்துடு” என்றாள். மதியும் “தேங்க்யூ மேடம்” என்றவள் பிரதீப்பை தொடர அவனும் ரிசப்ஷனில். சாவியை வாங்கி கொடுத்தான். “தேங்க்ஸ்”  என்றவள் அலுவலகத்தை விட்டு கிளம்பி வெளியே வர கரன் “எங்க மகி போன எவ்வளவு நேரம் வெயிட் பண்றேன்”. “சாரிடா ப்ரியா மேடம் கிட்ட குவார்ட்ஸ் பற்றி பேசினேன் கிடைச்சிடுச்சு என்றாள் சாவியை காட்டியபடி.

Advertisement

“வாவ் நானும் எடுத்திருக்கேன்”. என்றான் அவன் . “ஆமா கரன் அங்க சேஃப்டி, ஆபீஸ்க்கு அடுத்த பக்கம் தானே நடந்தே வந்துடுடாலாம்  அதோட ஹாஸ்டலுக்கு கொடுக்கிற பணத்தை இல்லத்திற்கு  கொடுத்திடுவேன் என்றாள்.

இவரும் பேசியபடி மொபைல் ஷாப் வந்தனர். தன்னிடம் இருக்கும் பணத்தில் ஓரளவு தனது தேவைக்கு ஏற்றவாறு அலைபேசி வாங்கிக் கொண்டு இருவரும் புறப்பட்டனர்.

அன்பு இல்லத்திலோ தேவி அம்மா தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தார். கடந்த மாதம் பிள்ளைகளின் செலவிற்கு பணம் தேவைப்பட தெரிந்த சிலரிடம் உதவி கேட்க அவர்கள் ஐம்பது ,  நூறு என உதவி செய்தனர். ஐம்பது  நூறு  பிள்ளைகளின் உணவு, மருத்துவம் போன்ற அன்றாட தேவைக்கு போதுமானதாக இல்லையே. இனி  என்ன செய்வது. பணத்தை வட்டிக்கு வாங்கி விட்டார். டொனேஷன்  கிடைத்தால் கொடுக்கலாம் எனும் நம்பிக்கையில். உண்மையில் டொனேஷன் ஏதும் கிடைக்காத நிலையில் கடனுக்கான வட்டியையும் அவரால் செலுத்த முடியாது போனது.. வட்டிக்கு கொடுத்தவன்  மாலையில் வந்து சத்தமிட்டு சென்றதால் கவலை, அவமானம் என தவித்தவர்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மாடியில் இருந்தே தெரிந்தவர்களுக்கெல்லாம் அழைப்பெடுத்து உதவி கேட்க கிடைத்த பணத்தை. எண்ணிக் கொண்டிருக்கையில் அவர் மேசையில் இருந்த போஃன் இசைத்தது. அழைப்பை ஏற்றவரோ  ‘ஹலோ”  என்று சொல்ல. “ஹலோ அம்மா நான் மகிஷா பேசுறேன், இதான் என்னோட நம்பர் இதுல இனி கூப்பிடுங்க” என்றாள். “சரி மா சாப்பிட்டியா?” எப்படி இருக்க?” “ஓ நான் சாப்பிட்டேன்மா, நல்லாத்தான் இருக்கேன், நீங்க  எப்படியிருக்கீங்க ? அப்புறம்  மீனுக்குட்டி   எப்படி இருக்கா?” மறுபுறம்  என்ன சொல்லப்பட்டதோ  குவாட்டஸ் தந்திருக்காங்க என்றவள்  அவருடன் பேச்சைத் தொடர தேவி அம்மாவிற்கோ வட்டிக்குக் கொடுத்தவன்   கொண்டு சென்ற காணிப்பாத்திரமே தலைக்குள் ஓடியது.

தேவி அம்மாவின் பேச்சில் சுரத்தே இல்லாத இருக்க. “அம்மா லைன்லயா  இருக்கீங்க?, உடம்பு சரி இல்லையா” என அவள் வினவ. “இல்லம்மா என்றவர் அவளுடன் பேசி விட்டு அழைப்பை துண்டித்தார்.

இரவே தனது உடமைகளை தயார் செய்து வைத்துக் விட்டு தூங்கி போனாள் மகி. அடுத்த நாள். அலுவலகத்திற்கு தயாராகிய மகிஷா தனது பொருட்களை எடுத்துக் கொண்டு. அரை மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்திற்கு சென்றாள் நேற்று  அலுவலகம் இருந்து வந்ததும் வார்டனிடம் .  தான் ஹாஸ்டலில் இருந்து செல்வதாக சொல்லிவிட்டாள். ஒரு மாத வாடகையோடு வந்தவள். எண்ணி பத்தே நாட்களில் ஹாஸ்டலில் இருந்து செல்வதால் வாடனும் கிடைத்தவரை லாபம் என எதுவும் பேசவில்லை. மகிஷாவும்  குவாட்டர்ஸ் வர அவளையும் அவள் பேக்கையும் பார்த்த செக்யூரிட்டி கார்ட். “என்னமா” என வினவ. குவாட்டஸ் பற்றி அவளும் சொல்ல அவரும் கேட்டை திறந்து விட்டார். உள்ளே நுழைந்த மகி தனது சாவியை இருந்த எண்னைக் கொண்டு குவாட்டசைத் திறக்க அதுவே நீட்டாக அழகாக பராமரிக்கப்பட்டு இருந்தது. முதலில் சிறிய ஹாலும் அதை ஒட்டி சமையலறையும். சமையலறையோடு இணைந்து படியும் இருந்தது மேலே ஒரு அறையும் அரையொட்டி பாத்ரூம். மறுபக்க  கதவைத் திறக்க  சிறிய பால்கனியும்  இருந்தது. ஒரு குடும்பம் இருக்க அது போதுமான வசதியோடு இருந்தது அவள் ஒருவளுக்கு அது அதிகமே.

இது தான் வாழ்க்கை எனவாகிய பின் அதில் தன்னை முற்று முழுதாக உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா அறையில் தனது பொருட்களை வைத்து குவார்ட்ஸை பூட்டிக் கொண்டு தனது ஹேன்ட் பேக்குடன் வெளியே  வர அவளது குவார்ட்ஸ் போலவே இருபதிற்கு அதிகமான வீடுகள் இருந்தன.

அலுவலகத்தில் கண்ட பெண்கள் சிலரும் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

” கரன் எங்கயிருக்க , அவன் என்ன சொன்னானோ “ஆமா இரு வாரன்”  என்றவள்  ஆஃபிஸ் கேடிண்னை நோக்கிச் சென்றாள்.  கரனும் அவளுக்கும் சேர்த்து உணவை வாங்கி வைத்துக் கொண்டிருந்தான். அவளும் ” ரொம்பக் நேரமா வந்து “இப்ப தான் வந்தேன்”  “ஓகே குவாட்டர்ஸ் மூவாகிடியா மகி”, “ஆமா கரன்  குவாட்டர்ஸுக்கு போயிட்டு தான் வாரன்” என்றாள்.

மகியும் கையில் இருப்புக் குறைவாக இருப்பதால் தனது தேவைகளை குறைத்துக் கொண்டாள். சம்பளம் கிடைக்கும் வரை இதை வைத்துத் தான் சமாளிக்க வேண்டும்.

சமையல் செய்வதற்கு தேவையான  பொருட்களை வாங்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

அப்படியே மகிஷாவின் நாட்கள் ஆஃபிஸ்,வேலை  எனச் சென்று ஒரு மாதம் கடந்த நிலையில்  அன்று அனைவருக்கும் சம்பளம் அக்கவுண்ட்டிற்கு போட்டிருந்தனர்.

முதல் சம்பளம் கிடைத்த அந்த நொடி அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி அந்த வாரக் கடைசியில் அன்பா இல்லத்திற்கு செல்ல முடிவெடுத்த இருந்தாள் சம்பளத்தில் ஒரு பகுதியை தேவியம்மாவிடம் கொடுக்கும் பொருட்டு.

அடுத்த நாள் விடுமுறை என்பதால் ” ஹலோ மகி நான் ஊருக்குப் போறன் திங்கட்கிழமை தான் வருவன்” என்றான் கரன். “சரிடா  நானும்  இல்லத்திற்குப்  போகத்தான்”  என பதிலளித்தவள்,சென்னையில் இருந்து இல்லத்திற்கு செல்ல பஸ்ஸில் புறப்பட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!