Skip to content
Post Views: 2,696
இசையீர்ப்பு விசைக்கொண்டு எனக்குள்ளே மாயம் செய்கிறாய் நீ
வசமிழந்து எனை மறந்து உன் பெயர் கூவிக் கிடக்கிறேன் நான்.
அதே நேரத்தில் என்னையும் அவளையும் மாற்றி மாற்றி பார்த்தான் ஷ்யாம்.
“மேடம் யாரு பாப்பா?” இயல்பாக கேட்டான் அவன்.
Advertisement
“பாப்பாவா? அது சரி இவங்களுக்கே…” அவள் துவங்க அவள் அடுத்த வார்த்தை சொல்வதற்குள் நான் இடை மறித்திருந்தேன்.
“இவங்க என்னோட ஃப்ரெண்ட். சித்தாராவோட அசிஸ்டன்ட்”
“அப்படியா? குட். இங்கே என்ன பண்றாங்க?”
Advertisement
“நான் நீலவண்ணன் சார் ட்ரூப்லே வீணை வாசிக்கிறேன்” என்றாள் அவன் முகம் பார்த்து.
Advertisement
“குட் வெரி குட்” ஷ்யாம் சொல்ல
“அப்புறம் எல்லாரும் சௌக்கியமா?” என்று எனது வயிற்றை மெல்ல வருடினாள் நிரஞ்சனா
சற்று விக்கித்து போனேன் நான். அவனுக்கு கண்டிப்பாக புரிந்து போகும் என நான் அவன் பக்கம் திரும்ப, அந்த நேரத்தில் அவன் சற்றே நகர்ந்து சென்று வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். ஒரு வித நிம்மதி இழைகள் கூடின எனக்குள்ளே.
Advertisement
ஆனாலும் ஏனோ இன்றைய பொழுது எல்லா ரகசியங்களும் உடைந்துவிடும் என்றே தோன்றிக்கொண்டிருந்தது எனக்கு.
“ஆங் எல்லாரும் சௌக்கியம்” என அவள் கையை இயல்பாக விலக்கினேன்.
“மேம் உங்க கிட்டே ஒரு சின்ன ரிக்வெஸ்ட் மேம்” சற்றே இழுத்தாள் நிரஞ்சனா.
“சொல்லுங்க”
“எங்க மேம் என் மேலே ரொம்ப கோபமா இருக்காங்க. உங்க லைஃப்தான் செட்டில் ஆகிடிச்சு இல்ல. கொஞ்சம் அவங்ககிட்டே பேசி எனக்கு வேலையை திரும்ப வாங்கிக் கொடுங்க மேம். இங்கே சம்பளம் எல்லாம் அவ்வளவு இல்லை. நிரந்தரமும் இல்லை” நிரஞ்சனா கெஞ்சலாக கேட்டாள்.
“எனது வாழ்க்கை செட்டில் ஆகி விட்டதா? யார் சொன்னார்கள்?” சிரித்துக்கொண்டேன் எனக்குள்ளே. ஆனாலும் அவளிடம் எதையும் வெளிப் படுத்திக்கொள்ளவில்லை.
ஷ்யாம் எங்களை கவனிக்கவில்லை. ஒரு நட்பான புன்னகையுடன் அவள் கரம் பிடித்துக்கொண்டேன்
“நடந்த தப்புக்கு முழுக் காரணம் நான்தானே. நானே அதை கண்டிப்பா சரி பண்றேன். ஒரு ரெண்டு மூணு மாசம் மட்டும் பொறுத்துக்கோங்க. குழந்தை பிறந்ததும் நான் சித்தாராகிட்டே கண்டிப்பா பேசறேன். உங்களுக்கு நிச்சியம் வேலை உண்டு. தைரியமா இருங்க” உறுதி அளித்தேன் அவளுக்கு.
இனி அவளால் எனக்கு ஆபத்து இல்லை என்று ஒரு நிம்மதி எனக்குள்ளே. சந்தோஷமாக விடைப்பெற்றாள் பெண். நாங்களும் மறுபடியும் எங்கள் ஒத்திகையை தொடராலானோம்.
சில நிமிடங்கள் கழித்து வந்து சங்கீதாவும், மற்ற சில பாடகர்களும் கூட எங்களுடன் இணைந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு பாடலாக நாங்கள் பாடிக்கொண்டிருந்தோம். எங்கள் இசைக் கலைஞர்களும் எங்களோடு உருகி இழைந்துக் கொண்டிருந்தார்கள். அவன் இசைக்குள் நானும் எனது இசைக்குள் அவனும் மூழ்கிக் கொண்டிருந்தோம்.
சில மணி நேரங்கள் கழித்து அனைவரும் ஒரு சிறு இடைவேளை எடுத்துக்கொள்ள எங்களுக்கென அங்கே வந்த பழச்சாற்றை பருகிக்கொண்டே நான் ஷ்யாம் முகம் பார்த்தேன்.
அவன் கைப்பேசியில் மூழ்கி இருந்தான். என் முகம் பார்ப்பதை தவிர்ப்பதைப் போல் ஒரு எண்ணம் எனக்கு. தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள அவன் நிறையவே முயலுவதைப் போல் தோன்றியது
“ஷ்யாம்”
“ம்?” நிமிரவில்லை அவன்.
‘எல்லாரும் கேட்கறாங்க மலரே மௌனமா ஒரு தடவை ப்ராக்டிஸ் பண்ணிடுவோம் ஷ்யாம்” இது நான்.
“வேண்டாம் பாப்பா”
“ஏன் ஷ்யாம்?”
“இல்ல நாம ஸ்டேஜ்லே பார்த்துக்கலாம் பாப்பா”
“ஒரு தடவை ஷ்யாம்”
……………………………………
“இல்ல ஷ்யாம். அங்கே போய் நான் ஏதாவது சொதப்பிட்டேன்னா கஷ்டம்” நான் கொஞ்சம் கவலையுடன் சொல்ல
“சொதப்புவியா? நீயா?” நிமிர்ந்து என் முகம் பார்த்தான் அவன் “பாப்பா நீ பாடுற பாட்டிலே நான் அப்படியே மயங்கிப் போறேன். என்னையே நான் இழக்குற மாதிரி இருக்கு.” அவன் வார்த்தைகளில் எனக்குள்ளே அப்படி ஒரு வியப்பு.
“ஐ ஆம் டோட்டலி லூசிங் மைசெல்ஃப்.” என்றான் கண்களை மூடிக்கொண்டு “ப்ளீஸ் பாப்பா. இப்போ பாட வேண்டாம் பாப்பா. ஈவினிங் பார்த்துக்கலாம்”
ஏசியின் சில்லிப்போடு சேர்ந்து மெலிதாக சிலிர்த்தது எனது உடல். அந்த கோபக்கார மனதின் ரகசிய பகுதி மெல்ல எட்டிப் பார்ப்பதைப் போல் தோன்றியது எனக்கு. ஆனால் இது நீண்ட நேரம் நீடிக்காது என எச்சரித்த எனது உள் மனதை புறம் தள்ள இயலவில்லை என்னால்.
பேச வார்த்தைகள் எழாமல் நான் சரியென தலையசைக்க அப்போது சிணுங்கியது அவனது கைப்பேசி. ஏதோ ஒரு குறுஞ்செய்தி வந்திருக்க வேண்டும். அதை பார்த்தவுடன் அவன் முகம் அப்படியே மாற்றம் கொண்டது.
“என்னாச்சு ஷ்யாம்?” எதுவும் ப்ராப்ளமா?”
“தனாவுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கு. ரொம்ப காய்ச்சலா இருக்காம். சாரு மெசேஜ் பண்றா” என்றபடி எழுந்திருந்தான்.
“அவனுக்கு திடீர்னு என்னாச்சுன்னு தெரியலையே. அதோட இந்த வாய் பேச முடியாத பொண்ணு என்ன பண்ணுதோ பாவம்” அவன் குரலில் கவலை ரேகைகள்.
“நான் உடனே போகணும் பாப்பா. ஈவினிங் ப்ரோக்ராம்குள்ளே வந்திடுவேன். அப்படி ஒரு வேளை லேட் ஆச்சுன்னா நீ நம்ம ட்ரூப் கொஞ்சம் ஆர்கனைஸ் பண்ணி பாட ஆரம்பிச்சிடு”
“அய்யோ ஷ்யாம் நான் எப்படி?” நான் பதற
“ஏன் என்ன பிரச்சனை? நாம எத்தனை ஸ்டேஜ் ப்ரோக்ராம் பண்ணி இருக்கோம்? இது என்ன புதுசா? தைரியமா பண்ணு. நான் அதுக்குள்ளே வர பார்க்கிறேன். வந்து ஜாயின் பண்ணிக்குவேன் ”
“ஷ்யாம்… என்ன ஷ்யாம் இப்படி திடீர்னு?”
“இல்ல பாப்பா. வெரி சாரி. நீ என்னை தப்பா நினைக்காதே. எனக்கு இது எல்லாத்தையும் விட தனா ரொம்ப முக்கியம்” முடித்திருந்தான் அவன்.
அடுத்த சில நிமிடங்களில் மடமடவென எங்கள் குழுவினர் எல்லாருக்கும் ஆணைகளை கொடுத்துவிட்டு கிளம்பியிருந்தான் அவன். மறுபடியும் ஒத்திகைகள் துவங்கின.
“எனக்கு தனா ரொம்ப முக்கியம்” அவன் வார்த்தைகள் இப்போதும் எனக்குள்ளே ஓடிக்கொண்டிருந்தன. அவன் சொல்வது கண்டிப்பாக நியாயம்தான். அவர்கள் பந்தத்தை வெறும் நட்பென சொல்லி விட முடியாதுதான்.
முன்பொரு முறை, கிட்டத்தட்ட நான்கு நான்கரை வருடங்களுக்கு முன்னால் ஷ்யாம் வாழ்கையின் மிக மிக அழுத்தமான நாளில், பல நூறு பேர் அவனுக்கு எதிராக நின்றிருந்த அந்த நாளில் பத்திரிக்கையாளர்கள் முன்னால் அவனது தோள்களை அணைத்து நின்ற தனாவை என்னால் மறக்க முடியாது.
அன்று பத்திரிக்கையாளர்கள் முன்னால் ஷ்யாமின் தோள்களை அணைத்துக்கொண்டு சொன்னானே தனா “ஷ்யாம் என்னோட நண்பன். அவன் கண்டிப்பா இதுக்கு காரணமா இருக்க முடியாது. இருக்க முடியாது என்ன? இருக்க மாட்டான். அவனாலே தப்பே செய்ய முடியாது. இழப்பு எங்களோடது. அதை நாங்க சரி செய்துப்போம். இப்போ நீங்க எல்லாரும் கலைந்து போகலாம்.”
அது நான் ஷ்யாமுடன் நேரில் அறிமுகம் ஆகியிராத காலம். அதுதான் அவன் தடுமாறி விழுந்த காலம்.
நடந்தவைகளை ஷ்யாமின் ரசிகையாக டி.வி.யில் பார்த்திருந்தேன். அதன் பிறகு சித்த்தாரவின் மாமன் மகன் அவன் என்பதால் அவளும் நடந்தவைகளை என்னிடம் பகிர்ந்திருந்தாள்.
அந்த காலத்தில் தனது இழப்பையும் மறந்து அவனுக்கு முழுவதுமாக தோள் கொடுத்தவன் தனா என்று சொன்னால் அது மிகையில்லை. அப்படிப்பட்ட தனாதான் அவனுக்கு எல்லா வகையிலும் முக்கியம் என்று ஷ்யாம் கருதுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
நேரம் மாலை நான்கு மணியை தொட்டிருந்தது. இன்னமும் வந்து சேரவில்லை ஷ்யாம். நான்கைந்து முறை யோசித்துவிட்டே அவனை அழைத்தேன்.
“இன்னும் காய்ச்சல் இறங்கலை பாப்பா. கொஞ்சம் இறங்கினதும் நான் வந்திடறேன். நீங்க எல்லாரும் ஸ்டார்ட் பண்ணுங்க” முடிவெடுத்து விட்டிருந்தான் அவன். இனி மாற மாட்டான்.
வெங்காய நிறத்தில் ஜரிகை வேலைகள் செய்யப்பட்ட பட்டுச்சேலையும், காதிலாடும் நீண்ட ஜிமிக்கிகளும், ஒற்றை கிளிப்பினிடையே விரிந்திருந்த கூந்தலும் எனத் தயாராகி இருந்தேன் நான்.
பல இசையமைப்பாளர்கள் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சி என்பதால் இருந்த ஐயாயிரம் இருக்கைகளும் நிரம்பி இருந்தன.
முதலில் மூத்த இசையமைப்பாளர்கள் சிலரின் பாடல்கள் நிறைவடைந்திருந்தன. அவன் இன்னமும் வந்து சேரவில்லை. அவனை மறுபடி மறுபடி அழைக்கவும் மனமில்லை.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஷ்யாமை பற்றி கேட்க கேள்விகளை எப்படியோ சமாளித்தேன். மேடையை சுற்றிலும் இசைக்கருவிகள் அணிவகுத்து நிற்க, எங்கள் இசைக்குழுவினர் தயாராக இருக்க .அந்த பிரம்மாண்ட மேடையில் வந்து நின்றேன் நான்.
எங்களின் பின்னால் இருந்த ஒளித்திரைகள் பச்சை, நீலம் சிகப்பு என பல ஒளிகளை எங்களின் மீது பாய்ச்சிக் கொண்டிருந்தன. கண் முன்னே மக்கள் சாகரம். இத்தனை பெரிய மேடையில் நான் இதுவரை பாடியது இல்லைதான்
எங்கள் குழுவின் எல்லா இசைக் கலைஞர்களை அறிமுகப் படுத்திவிட்டு பாடத் துவங்கினேன். ஒரு இசையமைப்பாளராக அடுத்து வந்த பாடல்களையும் வழி நடத்திக் கொண்டிருந்தேன். எல்லாம் அவன் கற்றுக் கொடுத்த பாடங்கள்.
“தாங்க் யூ ஷ்யாம்” சொல்லிக் கொண்டேன் நான்.
கரகோஷம் அரங்கத்தை நிறைத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் “வேர் இஸ் ஷ்யாம்?” கீழிருந்து குரல்கள் எழ ஆரம்பிக்க
அவர் இன்னும் கொஞ்ச நேரத்திலே வருவார். “ஹீ இஸ் ஆன் தி வே” என்று ஒவ்வொரு குரலையும் சமாளித்துக் கொண்டிருந்த போதிலும் எனது மனதிற்குள் மெலிதாக ஒரு ஏமாற்றம்.
எங்களுக்கான நேரம் இன்னும் இருபது நிமிடங்களே மீதமிருந்தன. அடுத்து மற்ற இசையமைப்பாளர்களின் நேரம்.
“இன்று மலரே மௌனமா இல்லையா?”
“ப்ளீஸ் ஷ்யாம் சீக்கிரம் வாங்களேன்” நான் மானசீகமாக கெஞ்சிக்கொண்டே நிகழ்சியை நான் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் எனக்குள்ளே எழுந்தது அந்த ஆனந்த பேரலை.
மடித்துவிடப்பட்ட சந்தன நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற பேண்டுமாக மேடையில் வந்து நின்றான் ஷ்யாம்.
அவனை பார்த்த மாத்திரத்தில் அரங்கத்தில். ஒளிவெள்ளமும், உற்சாக கரகோஷங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்க என் விழிகளின் ஓரத்தில் சந்தோஷ நீர்த்துளிகள்.
“வர மாட்டேன்னு நினைச்சிட்டியா பாப்பா” என்றான் ரகசிய குரலில்.
எனது விழி நீர் அவன் விழிகளிலும் தொற்றிக்கொண்டதைப் போலவே தோன்றியது. “மலரே மௌனமா கண்டிப்பா உண்டு பாப்பா” கண் சிமிட்டினான் அவன்.
என்னால் அந்த நிலையில் புன்னகைக்க மட்டுமே முடிந்தது.
“ஷ்யாம்.. ஷ்யாம்..” என ரசிகர்களிடமிருந்து உற்சாக கோஷங்கள் எழ
“எல்லாருக்கும் வணக்கம்” துவங்கினான் அவன்
அடுத்து அந்தப் பாடலின் முகப்பு இசை துவங்கும் போதே அரங்கம் முழுவதும் கரகோஷம். எழ ஆரம்பித்தது.
“மழைத் தேடி காத்திருந்தேன்…… காத்திருந்தேன்……. “ துவங்கினான் ஷ்யாம்.
பாடல் கரைந்து ஓட அவனது முத்த சத்தம் அரங்கமெங்கும் எதிரொலித்தது சின்ன சிரிப்புடன் திரும்பிய எனது பார்வையில் அப்போதுதான் விழுந்தாள் முதல் வரிசையில் இருந்த சாரு. அவளையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தான் போலும்.
அவனது ஒவ்வொரு பாடலுக்கும் உற்சாகமாக கை தட்டிக் கொண்டிருந்தாள் பெண். அவனே அறியாமல் அவனை இசையால் முத்தமிட்டுக் கொண்டிருந்தேன் நான்.
அடுத்து புல்லாங்குழலும், வயலினும் ஒன்றோடு ஒன்று உரசி விளையாட பல நாட்களுக்கு பிறகு வந்தது அந்த மலரே மௌனமா நேரம்.
மேடையில் ஒளி மழை எங்கள் இருவரையும் தழுவிக் கொண்டிருக்க, அரங்கத்தில் உற்சாக சத்தங்கள் எழுந்துக்கொண்டிருக்க அந்த பிண்ணனி இசையோடு கூடி நாங்கள் இருவரும் எங்களை மறந்து கொண்டிருந்தோம். அவனும் உணர்ச்சி வசப்பட்டிருப்பது நன்றாக புரிந்தது எனக்கு.
“ஏதோ சுகம் உள்ளுருதே.”..
ஏனோ மனம் தள்ளாடுதே”
இதயம் விம்மும் உணர்வுகளின் பிடியில் பாடிக்கொண்டே நான் திரும்ப அவன் வேறு பக்கம் திரும்பிகொண்டான். அவன் கண்கள் நிரம்பியிருக்கக் கூடுமோ என்று கூட ஒரு சந்தேகம்.
ஓடிச்சென்று அவன் தோள் சாய்ந்துவிட பரிதவித்த மனதை கஷ்டப்பட்டு கட்டுப் படுத்திக்கொண்டேன் நான்.
வயிற்றுக்குள் எனது மகன் ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருக்க, உணர்வுகளின் பிடியில் அகப்பட்டு சுழன்று, அந்தப் பாடலை பாடி முடித்தோம். படபடவென உற்சாக மிகுதியில் கை தட்டிக் கொண்டிருந்தாள் சாரு.
“ஒன்ஸ் மோர்” கீழிருந்து எதிரொலியாய் எழுந்தன குரல்கள்.
“உங்கள் அன்புக்கு நன்றிகள். ஆனால் இன்னைக்கு இந்தப்பாட்டை மறுபடியும் பாட முடியாத சூழ்நிலையில் நான் இருக்கேன். சம் அதர் டைம்.” மைக்கில் சொன்னான் ஷ்யாம்
நான் அவனையே பார்த்திருந்தேன். அவன் மனம் எனக்கு புரியாமல் இல்லை
“வீ வான்ட் ஒன்ஸ் மோர். வீ வான்ட் ஒன்ஸ் மோர்” கீழிருந்து ரசிகர்களின் பிடிவாத குரல்கள்.
“இல்ல இல்ல ப்ளீஸ் என்னைக் கட்டாயப் படுத்தாதீங்க. வேறே ஏதாவது பாட்டு சொல்லுங்க பாடுவோம்”
சில நொடிகளில் “காதல் கவிதைகள் படித்திடும் நேரம்” அரங்கத்தில் எழுந்தன குரல்கள்.
“ஒகே. டன். ரெடியா சந்தியா?” அவன் என்னைப் பார்த்துக் கேட்க தலையசைத்தேன் நான். எதையும் பேசும் நிலையில் நானில்லை.
அந்தப் பாடலுக்கு தாயாரனோம். அடுத்த நொடி கண்களை மூடிக்கொண்டு கத்தினேன் நான்.
“எஸ். ஐ லவ் திஸ் இடியட். ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்” அந்தப் பாடலின் துவக்கம் அப்படிதானே!
சத்தமாக ஆசைத் தீர கத்தினேன் நான். எனது மனதை அந்த அரங்கத்தில் வெளிப்படையாக அறிவித்ததைப் போல் இருந்தது. மனம் நிறைந்து வழிந்தது.
“எனது காதலை இந்த பரபஞ்சதிற்கு மனதார அறிவித்து விட்டேன். இது போதும் எனக்கு.”
யாருக்கு என்ன புரிந்ததோ புரியவில்லையோ தெரியவில்லை. அரங்கம் முழுவதும் ஆரவார சத்தங்கள்.
அடுத்த நொடி முகப்பு இசையாக வயலின்கள் இசைக்க ஆரம்பிக்க, இமைக்க மறந்து என்னையே பார்த்திருந்தான் ஷ்யாம். நான் எனது கண்களின் ஓரத்தில் இருந்த நீர்த்துளிகளை யாருமறியாத வண்ணம் துடைத்துக் கொண்டு திரும்பிக்கொண்டேன்.
வெகு இயல்பாய் அவன் பாடலுக்குள் நுழைந்து விட்டாலும் அவன் அவனாக இல்லை என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது.
அன்றைய நிகழ்ச்சி முடிந்து நாங்கள் ஹோட்டலுக்கு திரும்ப நேரம் இரவு பத்தரையை தொட்டிருந்தது. அதுவரை எங்களுக்கு தனிமை கிடைக்கவில்லைதான். சாருவை அவளது ஹோடேலில் விட்டுவிட்டு திரும்பியிருந்தோம் நாங்கள்
ஹோடேலை அடைந்ததும் “ரொம்ப தூக்கம் வருதா பாப்பா? என்றான் ஷ்யாம். “உன்கிட்டே கொஞ்ச நேரம் பேசணும் போலே இருக்கு”
“இல்ல. தூக்கம் எல்லாம் பேசலாம் ஷ்யாம்” பரபரத்தேன் இதை விட ஒரு ஆனந்தம் எனக்கு இருக்குமா தெரியவில்லை.
அடுத்த சில நிமிடங்களின் எங்களது ஹோடேலின் ஐம்பத்தி ஏழாவது மாடியில் உள்ள அந்த பிரம்மாண்ட நீச்சல் குளத்தின் முன் நின்றிருந்தோம். மின் தூக்கியில் வந்தாலும் அத்தனை மாடிகள் ஏறி வந்தது எனக்கு லேசான .தலை சுற்றலை தந்திருந்தது.
அதைப் பொருட்படுத்தாமல் அந்த இரவு நேரத்தில் அந்த ஐம்பத்தி ஏழாவது மாடியிலிருந்து தெரிந்த, இரவு விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்த சிங்கப்பூரை பார்த்துக்கொண்டிருந்தேன் நான. எனது மனதைப் போலவே வண்ண மின் விளக்குகளின் ஒளியில் சலசலத்துக்கொண்டிருந்தது அந்த நீச்சல் குளம்.
பதினோரு மணியுடன் அங்கே நீச்சல் அடிக்கும் அனுமதி நிறைவடையும் என்பதால் அந்த வேளையில் அங்கே கூட்டம் அதிகமில்லை. வானில் இருந்த நிலவு மட்டும் எங்கள் இருவரையும் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது. இருவரும் அங்கே இருந்த ஒரு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தோம்
“மலரே மௌனமா பாடினது சந்தோஷமா பாப்பா?” என்றான் மெதுவாக.
“நிறையவே ஷ்யாம்” புன்னகைத்தேன் நான்.
“அது எப்படி அது? எஸ். ஐ லவ் திஸ் இடியட். ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்” சொல்லிவிட்டு ஒரு ஆழ் மூச்சுடன் என்னை பார்த்தான் ஷ்யாம். “பட் தட் இடியட் இஸ் நாட் இன் அ பொசிஷன் டு லவ் யூ பாப்பா”
“இஸ் நாட் இன் அ பொசிஷன் டு லவ் யூ” என்றால் என்ன பொருளாம்? “காதலிக்கும் மனமிருக்கிறது ஆனால் சூழ்நிலை இல்லை என்பதா?” அவனிடம் கேட்டுக் கொள்ளவில்லை நான்.
“அப்படியா யாரந்த இடியட்?” நான் பதில் தெரிந்துக்கொண்டே விளையாட்டுத் தனமாய் கேட்க
“அவன் ஒரு இடியட். அதிர்ஷ்டம் இல்லாத இடியட்” என்றான் அந்த நீச்சல் குளத்தை வெறித்து பார்த்தபடி.
சட்டென அவன் கரம் பிடித்து அழுத்தினேன் “ஏன் ஷ்யாம்? எங்க ஷ்யாம் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது. எப்பவும் கோவமா இருக்கணும். சட்டு சட்டுன்னு திட்டணும். பார்வையாலேயே எரிக்கணும். அதுதான் நல்லா இருக்கும்” அவனை சமாதானப் படுத்த முயன்றேன்.
இதனிடையே எனது தலை சுற்றல் சற்றே அதிகமானது. அடுத்து எதுவும் விபரீதம் வரப்போகிறதோ? எதனால் இது? மேலே வந்ததாலா? அல்லது இன்று முழுவதும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தததாலா தெரியவில்லை.
“இல்ல பாப்பா. ரெண்டு நாளா நான் நானாகவே இல்லை பாப்பா. உன் கண்ணீர் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது”
அவனது மனது எனக்காக துடிக்கிறது எனும் எண்ணம் என்னை மகிழ்ச்சியாக்கிய அதே நேரத்தில் எனது சுவாசம் தடுமாற ஆரம்பித்தது. கண்கள் இருட்ட ஆரம்பித்தன
”தனா என்னோட உயிர்மா. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாவே விளையாடி, ஒண்ணாவே படிச்சு, ஒண்ணாவே வளர்ந்து அவனில்லைன்னா நான் இல்லை அப்படிங்கிற மாதிரித்தான் இருந்தோம் பாப்பா. என் மேலே அவனுக்கு எப்பவும் நிறைய நம்பிக்கை உண்டு. அதனாலேதான் அவன் தங்கையை எனக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்தான்”
“தெ…தெரியும்.. ஷ்யாம்… என..க்கு லவ் எல்லாம் இல்லை…” சொல்லிக்கொண்டே நான் மயங்கி….
அதன் பிறகு நான் கஷ்டப்பட்டு கண் விழிக்க முயன்று கொண்டிருந்த போது ஷ்யாமிடம் என்னை பரிசோதித்துக்கொண்டிருந்த பெண் மருத்துவர் பேசிக் கொண்டிருந்தார்
“அவங்க கர்ப்பமா இருக்காங்களா மிஸ்டர் ஷ்யாம்?”
“கர்ப்பமா? எனக்குத் தெரியலையே டாக்டர்”
“இல்ல ஐ ஆம் ஷூர். ஷீ இஸ் பிரெக்னென்ட்!”
தொடரும்
error: Content is protected !!