தென்றலாய் என் காதல் – 21
தென்றல் – 21
“நான் சொன்னா கேளுங்க புள்ளையலா அவனுங்களை பார்த்தாலே எனக்கு என்னவோ ரொம்ப சந்தேகமா இருக்கு”.
Advertisement
நீங்க அங்க போக வேண்டாம் என்றார் அம்சவேணி.
“அம்மா என்னமா நீங்க?
என் ஃலைப் மா.நீ பயப்படுற அளவிற்கு எதுவும் நடக்காது.நாங்க போய் என்னனு பார்த்துட்டு வந்தறோம். கூப்பிட்டு இருக்கறது நம்ம கல்வி துறை மினிஸ்டர் மா. எப்படி போகாம இருக்குறது” என்றாள் துளசி.
Advertisement
“அதானேடி எனக்கு பயமே.
Advertisement
காலம் கெட்டுப்போய் கிடக்கு”
“நமக்கு படிப்பும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்.
காலாக்காலத்துல உங்க ரெண்டு பேரையும் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்துட்டு இந்த உயிர் போனா போதும்” என்றார் அம்சவேணி.
Advertisement
“அம்மா நாங்க போறோம்”என்றாள் சிந்து.
“வியப்போடு மூவரும் அவளைப்பார்க்க, என்ன அப்படி பாக்குறீங்க?”என்றாள் சிந்து.
“என்னமா நீயே இப்படி சொல்ற”என்றார் அம்சவேணி.
“பின்ன…. பின்ன என்ன செய்ய சொல்ற? அவனுங்க சொன்னதை போலே இதோ இவளை கட்டிக்கொடுத்துரலாமா? சொல்லு மா சொல்லு.”
“தான் ஒருபெரிய டாக்டர் ஆகிவிடலாம்னு எத்தனை கனவோடும் லட்சியத்தோடும் எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சு இருப்பா.”
“ஆனா நீ என்னடானா ரொம்ப ஈஸியா படிப்பும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு சொல்ற.”என்றாள் சிந்து.
“அதுக்கு இல்ல சிந்து. படிப்பை விட மானம் தான் பெருசு. நம்மளைப்போலே ஏழைகளுக்கு படிப்பு என்னைக்குமே எட்டாக்கனி” என்று வருத்தம் கலந்து புன்னகைத்தார்.
அம்மா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ, என் தங்கச்சியை நான் டாக்டராக்காம விடமாட்டேன். யார் குறுக்க வந்தாலும் எத்தனை தடை ஏற்பட்டாளும் நிச்சயம் இது நடந்தே ஆகவேண்டும் என்று லட்சியத்தோடு கூறினாள்.
“பொட்ட பிள்ளைகள் உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நியாயம் கேக்க கூட நமக்கு நாதி இல்ல, சொன்னா கேளுங்கடி” என்றார் அம்சவேணி.
மா பயப்படாத நாங்க ரொம்ப சேப்ஃபா இதை ஹாண்டில் பண்ணிக்கிறோம்.
அது மட்டும் இல்லாம நாங்க மூனு பேர்,
விஜயகாந்த் போலே அடிச்சு தூக்கிருவோம் பார்த்துக்கோ.”
“நீ பயப்படாத அம்சவேணி” என்று குறும்பாக சிரித்தாள்.
நடக்க காத்திருக்கும் விபரீதம் அறியாமல் பேசிக்கொண்டு இருக்கிறாள் சிந்து.
“இனியா வேணும். இனியா வந்தா தான் சாப்பிடுவேன்” என்று அடம் பிடித்துக்கொண்டு இருந்தார் சுசிலா.
“இப்ச்…. இந்த அம்மா வேற. வீட்டுல இருந்தா நிம்மதியே இல்லை” என்று எழுந்துச் சென்றான் விக்ரம்.
“அண்ணே மினிஸ்டர் சார் இருக்காங்களா?” என்று கேட்க, “ஹான் வந்துட்டீங்களாமா உங்களுக்காகத் தான் ஐயா ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்காரு.”
“வாங்க உள்ள வாங்க” என்று அழைத்து சோஃபாவில் அமர வைத்தார்.
“இங்கயே இருங்க ம்மா.. நான் போய் நீங்க வந்து இருக்கீங்கன்னு ஐயாகிட்ட சொல்லிட்டு வந்தறேன்” என்று சென்றான் அவன்.
“சில வினாடிகளில் திரும்பி வந்தவன், ஐயா இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்க. நீங்க அதுவரைக்கும் இங்கே இருங்க. நான் குடிக்க கூல்ரிங்ஸ் கொண்டு வறேன்” என்றான் அவன்.
“ஐயோ…அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அண்ணா. நாங்கள் இப்போது தான் சாப்பிட்டுவிட்டு வந்தோம்” என்றாள் சிந்து.
“பாப்பா ஐயாவுக்கு வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை கவனிக்கலைனா பிடிக்காது. அப்பறம் எங்களை தான் திட்டுவாரு. தயவு செஞ்சி உங்களுக்காக இல்லாட்டினாலும், எங்களுக்காக கொஞ்சமா குடிங்க” என்று அகத்தே சென்றான்.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
பயம் உள்ளுக்குள் இருந்தாலும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
கையை பிசைந்துக்கொண்டு அமர்ந்து இருந்தனர். சுற்றி முற்றிப் பார்த்தனர்.ஆங்காங்கே குண்டர்கள் நின்று இருக்க நெற்றி வியர்த்து காதோரம் வழிந்தது.
கையில் கேமரா ஆன் செய்து ரெகார்ட் மோடில் வைத்து இருந்தாள் ரஞ்சி.
மிளகாப்பொடியை மறைத்து வைத்து இருந்தாள் துளசி.
கையில் சிறிய பிஃளைட்டை தன் துப்பட்டாவின் உள்ளே மறைத்தப்படி வைத்து இருந்தாள்.
நேரம் கடந்தது.
மினிஸ்டர் தன் அறையில் இருந்து வெளியே வந்தார்.
மூவரும் எழுந்து வணங்கினர்.
“உக்காருங்க உக்காருங்க” என்று புன்னகையோடு அமர்ந்தினார்.
அதற்குள் பழச்சாறு கொண்டுவரப்பட்டது.
அவர்கள் வாங்க மறுத்தனர்.
“எடுத்துக்கோங்கம்மா” என்று தான் முதலில் எடுத்து பருகினார் அமைச்சர்.
“என்னங்கமா இன்னும் என்ன தயக்கம் எடுத்து குடிங்க.
பொண்ணுங்கனா இப்படி தான் எல்லா இடத்துலயும் கவனமா இருக்கனும்” என்றார்.
சிந்துக்கு சற்றே நம்பிக்கை வந்தது.
இருவரையும் பார்த்து கண்களால் குடிக்க சொல்லி சைகைக்கொடுக்க மூவரும் இணைந்து அந்த பழச்சாற்றை பருகினர்.
“சரி சொல்லுங்கம்மா…. இப்போ என்ன பிரச்சனை
உங்களுக்கு உங்களுக்காக வழங்கப்பட்ட மெடிக்கல் சீட் வேணும் அவ்ளோ தானே! என்றார் அமைச்சர்.
“ஆமாம் சார்”என்று கூறினாள் துளசி.
“ஹ்ம்ம்…சரி உங்க சீட் உங்களுக்கு கடைக்கும், ஆனா எனக்கு என்ன கிடைக்கும்.”
“சார்…. நீங்க மட்டும் இந்த சீட்டை என் தங்கச்சிக்கு கொடுத்தா நாங்க காலத்துக்கும் உங்களுக்கு நன்றியா இருப்போம்” என்றாள் சிந்து.
கேலியாய் சிரித்தார்.
“உன் நன்றியை வச்சிட்டு நான் என்ன பண்றது” என்றான் அமைச்சர்.
அவர் பேசும் போதே தெரிந்தது அவர் பேச்சு இயல்பாக இல்லை என்று.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “சரி இந்த சீட்டோடா விலை என்னனு உங்களுக்கு தெரியுமா?” என்றார்.
மூவரும் இல்லை என்று தலையாட்டிட, “ஒன்றரைக்கோடி ரூபாய்” என்றார்.
மூவரின் கண்களும் விரிந்தன.
கையில் இருக்கும் அலைபேசியில் அனைத்தையும் காணொளியாக பதிவேற்றம் செய்துக்கொண்டு இருந்தாள் ரஞ்சிதா.
“சரி நீங்க இவ்ளோ அமௌன்ட் தர வேண்டாம் பாவம் நீங்களே ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க.அதனால ஒரு ஐம்பது லட்சம் மட்டும் கொடுங்கள் உங்கள் சீட்டை நான் உங்களுக்கே கொடுத்தறேன். எனக்கு நஷ்டம் தான் ஆனாலும் பரவாயில்லை எனக்கு கஷ்டம்னு சொல்லிட்டா மனசு தாங்காது”என்று ஏதோ பெருந்தன்மையாய் பேசுவதைப்போல் பேசினார் அவர்.
“ஐயோ…என்ன இது அநியாயம். இது எனக்கு வழங்கப்பட்ட சீட். இதுக்கு நாங்க ஏன் உங்களுக்கு பணம் தர வேண்டும்.
எனக்கு நிர்ணயம் செய்த கல்வி கட்டணம் தவிர எங்களால ஒரு பைசா தர முடியாது”என்று ஆவேசப்பட்டாள் துளசி.
“ஹே…பொண்ணே ஐயா கிட்ட எப்படி நடந்துக்கணும் தெரியாது” என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தான் ஒரு ரௌடி.
“ஏய்…”என்ற அமைச்சர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்ததான்.
“என்னடா பொம்பளை பிள்ளைகள் மேல கை வைக்குற. உனக்கு வெக்கமா இல்ல. பெண்கள் எல்லாம் பூ மாதிரிடா ரசிக்கலாமே தவிர அவங்களை காயப்படுத்தி பாக்கக்கூடாது” என்றான்.
“மன்னிச்சிடுங்க ஐயா’ என்றான் பணிவாக.
“போ இங்க இருந்து” என்று கோபத்துடன் கூற அங்கிருந்து சென்று ஒரு ஓரமாய் நின்றான்.
“நீங்க சொல்லுங்கம்மா…. என்ன பேசிகிட்டு இருந்தோம்?” “ஹான்…உங்களுக்கு ஐம்பது லட்சம் கொடுக்க முடிஞ்சா குடுங்க இல்லைனா” என்று வார்த்தையை இழுத்து “இன்னொரு வழி இருக்கு.” “அதை தான் பெரும்பாலும் பெண்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என்றான் குதற்கமாய்.
“அப்படியா என்ன வழி சார் அது சொல்லுங்க” என்று ஆர்வத்தோடு கேட்டாள் ரஞ்சி.
“அவன் சத்தம் இட்டு சிரித்து….. எழுந்து ஒன் நைட் ஜஸ்ட் அட்ஜஸ்ட் பண்ணனும். தனித்தனியாக இருந்தாலும் சரி மூனு பேர் ஒன்னா இருந்தாலும் சரி எனக்கு ஓகே தான்” என்றார் அமைச்சர்.
மூவருக்கும் கோபம் உச்சி அடைந்தது.
“ஏய் உனக்கு அறிவு இல்லை” என்று ஆவேசத்துடன் எழுந்த சிந்துவிற்கு கண்கள் மறைத்தனர்.
“எனக்கு என்ன ஆச்சு” என்று யோசிக்கும் முன் மற்ற இருவரும் மயங்கி இருந்தனர்.
“ஏய்….பொறுக்கி நாயே உனக்கு எவ்ளோ தைரியம்” என்று ஆவேசத்துடன் கையை ஓங்க அவளைத் தடுத்து “உன்ன தாண்டி நான் மொதல்ல முடிக்கணும். ஆளு சும்மா நச்சின்னு இருக்க. அதுலயும் உன் திமிர் இருக்கே….. அது தான் இன்னும் உன் மேல வெறியேத்துது” என்றவன் “அவளை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு ஏய் இவளுகளையும் ரூமுக்கு தூக்கிட்டு வாங்கடா” என்று ஏவினான்.
சிந்து துவண்ட மலர் மாலையாய் அந்த பாவியின் தோளில் கிடக்க மாடி ஏறினான் அமைச்சர்.
சிந்துவைப் படுக்கையில் போட்டவன் அவள் துப்பட்டாவை உருவினான்.
அவள் அறை மயக்கநிலையில் இருந்தாள்.
ஏய்…என்ன விட்டுருடா என்று முன்னாங்கினாள்.
பழச்சாற்றை சிந்து மட்டும் முழுதாய் குடிக்கவில்லை. அதனால் தான் அவள் முழுவதுமாக மயங்கவில்லை.
அவளுக்கு சில பழைய நினைவுகள் தூண்டப்பட்டது.
ஆக்ரோசமாய் கத்தினாள்.
அவன் தோளை கடித்தாள். இரத்தம் வழிய துவங்கியது. ஏய்…. என்று அவளை கன்னத்தில் அறைந்தவன் போதை வஸ்த்துக்களை அவள் வாயில் திணித்தான்.
அவள் முழுவதுமாய் செய்யலிழந்தாள்.
மெல்ல கண்ணை மூடினாள். அவள் இதழை அசைத்து காப்பாத்துங்க என்றாள். அவள் மூடப்பட்டது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அவன் கைகள் சிந்துவின் அந்தரங்கங்களை களவாட எண்ணி தீண்ட, முதுகில் ஓங்கி விழுந்தது ஒரு உதை.
அவளை விட்டு தூரம் சென்று விழுந்தான் அவன்.
“டேய்…யாருடா நீ” என்று தரையில் இருந்து எழுந்தவன் கேட்க,
“ஹான்…உன் அப்பேன்” என்றான் விக்ரம்.
ஏய்…. என்று அவனை தாக்க முயல விக்ரம் அவனை பாய்ந்து அடித்தான்.
இருவருக்கும் இடையே பலத்த மோதல்.
விக்ரமின் அடியை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தான் அமைச்சர்.
“அவன் நெஞ்சில் கால் வைத்து ஏண்டா உன் பொண்ணு வயசு இருக்குமா இந்த பொண்ணுங்களுக்கு சீ நீ எல்லாம் உயிரோட இருக்கவே தகுதி இல்லாதவன்.”
இதுல கல்வித்துறை அமைச்சர் வேற, இனி எந்த பொண்ணு மேலயாச்சும் கை வச்ச அவ்ளோ தான் என்று மிரட்டி விட்டு
சிந்துவை கண்டவன் அவள் உடைகளை சரி செய்தான்.
அவளைப் பார்க்க பாவமாய் இருந்தது.
அவளின் துப்பட்டாவை தேடி கண்டுப்பிடித்து அவள் மீது போர்த்தி விட்டவன், அவளை அள்ளித் தூக்கினான்.
அதற்குள் போலீஸ் அங்கு வரவழைக்கப்பட்டது.
மருத்துவ குழுக்கள் முன் கூட்டியே அங்கு வந்து இருக்க துளசி மற்றும் ரஞ்சிதாவிற்கு சிகிச்சை நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
சார் என்ன ஆச்சு என்று பதறி ஓடினான் ஆதவ்.
!ஒன்னும் இல்லை ஆதவ்”. பயப்படாதீங்க அதுக்குள்ள நான் போய் காப்பாத்திட்டேன் என்றப்படி மருத்துவக்குழுவிடம் ஒப்படைத்தான்.
மேற்படி அவளுக்கும் சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது.
“என் ரஞ்சிதா எங்கே அவளுக்கு இப்போ எப்படி இருக்கு என்றான் விக்ரம்.
டிரீட்மென்ட் போயிட்டு இருக்கு சார். டாக்டர் சொன்னாதான் என்னனு தெரியும்”என்றான் ஆதவ்.
“சரி இந்த விஷயம் மீடியாவிற்கு தெரிய வேண்டாம் பொண்ணுங்க விவகாரம் ஊதி பெருசாக்குவானுங்க” என்றான் விக்ரம்.
“ஹ்ம்ம்…சரிங்க விக்ரம் சார்.
சார் ஒரு டவுட். எப்படி கரெக்ட்டா நீங்க அவங்க இங்க தான் இருக்கீங்கன்னு கண்டுப்பிடிச்சீங்க?
அதுவும் கரெக்ட் டைம்ல.
மனசு சரியில்லைனு வெளியே வந்த நான் ரஞ்சிதாவை அழைக்க வரலாம் என்று கோயம்பத்தூர் கிளம்பினேன்.”
“அச்சமயம் ரஞ்சிதா மொபைல்ல இருந்து வீடியோ சென்ட் ஆச்சு.
லொக்கேசனும் அனுப்பிவச்சங்க. அதனால தான் என்னால இங்க சரியான நேரத்துக்கு வர முடிஞ்சது.
ஹ்ம்ம்…அதானே சார் நான் அப்போவே யோசிச்சேன் ஜெட் எடுத்துட்டு போகற அளவுக்கு அப்படி என்ன தான் நடக்குது” என்று கூறி சிரித்தான் ஆதவ்.
“நான் என்ன ஆதவ் சூப்பர் மேனா ஸ்பைடர் மென்னா காத்துல பறக்கறதுக்கு.
போ ஆதவ்…போய் அவங்களுக்கு எப்படி இருக்கு. இங்க ஏன் வந்தாங்க எல்லாத்தையும் போய் விசாரி. எல்லாம் அந்த அடங்கா பிடாரி வேலையா தான் இருக்கும்”என்றான்.
ஆதவிற்கு யாரை சொல்கிறான் என்று நன்கு புரிந்தது.
ஆனால் தடுக்க முடியாத சூழ்நிலையில் அமைதியை இருந்தான் ஆதவ்.
தென்றல் மீண்டும் வீசும்….

