Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 23

தென்றல் – 23

 

“அப்போ நாங்க கிளம்பறோம். இனிமேயாச்சும் பார்த்து நடந்துக்கோங்க” என்று கிளம்பினான் விக்ரம்.

“தம்பி என்ன தம்பி நீங்க எங்களுக்கு இவ்ளோ உதவி செய்துட்டு இப்படி உடனே கிளம்பறேன் சொன்னா எப்படி.”



Advertisement

“எங்க வீட்டுக்கு வாங்க தம்பி. எங்க மனச குளிரவச்சவுகள நான் எப்படி வெறுசா அனுப்ப முடியும்”.

“எங்க வீட்டுக்கு வாங்க தம்பி” என்று அழைத்தார் அம்சவேணி.

“ஆதவ் தம்பி நீங்களும் வாங்க.”

Advertisement

இருவரும் யோசித்தனர்.

Advertisement

என்ன தம்பி யோசனை “இப்போவே சாயும் காலம் ஆயிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிரும்.

நாளைக்கு காலைல வெரசா எழுந்து போய்க்கலாம் தம்பி” என்றார்.

“இல்லை, அம்மாவை கீதாவால் தனியாக சமாளிக்க முடியாது. நான் போய் தான் ஆக வேண்டும்” என்றான் விக்ரம்.

Advertisement

“அம்சவேணியின் முகம் சற்றே வாடியது.

என்ன அண்ணா, எங்களுக்கு இவ்ளோ பெரிய உதவி செஞ்சி இருக்கீங்க. இப்படி எங்க அன்பை, உபசரிப்பை ஏத்துக்காம போறிங்களே.”

“அப்போ நீங்க இதை உதவியாய் செய்யல, பிச்சையாய்” என்று கண்கள் கலங்கினாள் துளசி.

“அட என்னமா நீ”, என்றவன் தன் அலைபேசியில் கீதாவை அழைத்தான்.

“ஹலோ…கீதா அம்மா இப்போ எப்படி இருக்காங்க?”

“அம்மா தூங்கறாங்க தம்பி. டாக்டர் இப்போ தான் வந்து பார்த்துட்டு போனாங்க. இன்ஜெக்ஷன் போட்டு இருக்காங்க. நல்லா தூங்கறாங்க தம்பி” என்றார்.

“ஹ்ம்ம்…சரி. பத்திரமா அம்மாவை பார்த்துக்கோங்க நான் காலைல தான் வருவேன்” என்றான்.

“ஹ்ம்ம்…சரிங்க தம்பி” என்றார் கீதா.

துளசிக்கும், அம்சவேணிக்கும் முகம் மலர்ந்தது.

ஆனால் சிந்துவிற்கும், ரஞ்சிதாவிற்கும் கண்கள் விரிந்தன. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து பயத்தோடு எச்சிலை விழுங்கினர்.

“கடவுளே இந்த ஆளு அப்ப அப்ப வந்துட்டு போனாலே விழி பிதுங்கிவிடும். இதில் ஒரு நாள் இரவு முழுக்க ஒன்றாக, அதுவும் பேசாமல் எப்படி சமாளிக்க போகிறோம் ஆஞ்சிநேயா” என்று மனதோடுப் பேசினாள்.

எல்லாம் உன்னால தான்டி” என்று ரஞ்சியை பார்க்க யாரும் காணா வண்ணம் கையெடுத்து கும்பிட்டு கண்களாலே கெஞ்சினாள் ரஞ்சிதா.

அனைவரும் விக்ரமின் காரில் சிந்துவின் வீட்டுக்குச் சென்றனர்.

“தம்பி இவ்ளோ பெரிய வண்டி வீதிக்குள்ள போகாது. அதனால வண்டியை இங்கயே ஒரு ஓரமாய் நிறுத்திரலாம்.”

“ரெண்டு அடில வீடு வந்துரும்”, என்று காரை விட்டு இறங்கிக் கொண்டார் அம்சவேணி.

அவரை தொடர்ந்து அனைவரும் இறங்கினர்.

அது ஒரு ஒற்றையடிப் பாதை. இரு புரங்களிலும் கருவேல மரக்காடு.

எங்கு பார்த்தாலும் காய்ந்த வறட்சியான பொட்டல் காடு.

அதில். எங்கேன்னும் பச்சை தாவரம் கிடைக்குமா என்று ஆவளோடு தேடித் தேடி மேய்ந்துக் கொண்டு இருக்கும் ஆடுகள்.

அதற்கு காவல் காப்பதாய் கூறி ஆங்காங்கே அமர்ந்து வெட்டிக் கதைப் பேசிக்கொண்டிருக்கும் ஆயாக்கள் என பார்க்கவே அரசின் நகரமாக்கலின் ஒரு சிறு துளி நல திட்டம் கூட இந்த கிராமத்திற்கு கிடைக்காமல் அசல் கிராமத்து சாயலில் இருந்தது அந்த குக்கிராமம்.

அந்தி சாயும் நேரம் என்பதால் சிலர் தன் பட்டி செம்மறியாடுகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினர்.

 

விக்ரம் நடந்து நடந்து தளர்ந்தான்.

வரிசையாக அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நடந்தனர்.

“ஆதவ்……என்ன இன்னுமா இவங்க வீடு வரல. ரெண்டடி எடுத்து வச்சா வீடு வந்துரும்னு சொன்னாங்க. ஆனா இப்போவே ரெண்டு கிலோ மீட்டர் நடந்து இருப்போம். அந்த அம்மா கிட்ட கேளு” என்றான் விக்ரம்.

“சார் எனக்கும் முடியல சார்” என்று திரும்ப சிந்துவின் நெற்றியில் முட்டிக்கொண்டான்.

“ஆ…”என்றவளை பார்த்து “சாரிங்க” என்றான்.

அவள் மென்மையாய் புன்னகைத்து தலையசைத்தாள்.

அதை விக்ரம் பார்த்து விட்டான்.

“ஆதவ்…. “என்று அழைக்க,

“சொல்லுங்க சார்” என்றான்.

“நீ முன்னாடி வா” என்று ஏவினான்.

“ஏன் சார்” என்றான் ஆதவ் சந்தேகமாய்.

“ஏன் சாருக்கு காரணம் வேற சொல்லணுமோ” என்று கோபமாய் கூற, காதை குடைந்துக்கொண்டே முன்னே நடந்தான்.

சிந்துவின் முன்னே விக்ரம் நடந்தான்.

“என்ன மனுஷனோ?” என்று மனதில் செல்லமாய் கோபித்தவள் அவன் குணத்தை ரசித்தாள்.

அவன் கோபம், அவ்வப்போது அனைவரின் மீதான அக்கறை, எப்போதாவது அத்தி பூத்தாற்போல் சிரிக்கும் அவன் புன்னகை என அனைத்தையும் அணுவணுவாய் ரசித்தாள் ரஞ்சிதா.

இருள துவங்க…ஒருவழியாய் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

அது ஒரு அழகான தென்னை ஓலையால் உருவாக்கப்பட்ட சிறிய குடிசை வீடு.

மின் விலக்கு கூட ஒன்றே ஒன்று தான் தொங்கி கொண்டு இருந்தது. அதுவும் வெளிச்சமே இன்றி இப்பவோ, அப்பாவோ என்று அணைவதற்கு தயாராக இருந்தது.

விக்ரம், மற்றும் ஆதவ் இதை வியப்புடன் பார்த்தனர்.

ரஞ்சி அடிக்கடி சிந்துவை பார்க்க வீட்டுக்கு வந்துச் செல்வதால் அவளுக்கு சிந்துவின் நிலை என்ன என்பது தெரியும்.

“என்ன தம்பி அங்கையே நிக்குறிங்க உள்ளே வாங்க” என்று அழைத்தார் அம்சவேணி.

“ஹான் இதோ வறோம்” என்று ஆதவ் முன் போக சுற்றும் முற்றும் பார்த்தப்படி வீட்டுற்குள் சென்றான் விக்ரம்.

ஆதவ் வாசல் திண்டில் சென்று அமர்ந்துக்கொண்டான்.

ஒரு இரும்பு துருப்பிடித்த நாற்காலி இருக்க அதை ஓடி சென்று எடுத்து போட்டாள் துளசி.

“உக்காருங்க அண்ணே” என்றாள்.

“ஹ்ம்ம்…”என்று மெலிதாய் புன்னகைத்து அந்த நாற்காலியில் அமர்ந்தான்.

சிந்து தண்ணீரை எடுத்து வந்து ரஞ்சியின் கையில் கொடுத்து கொடுக்க சொன்னாள்.

அதை வாங்கி கொண்டவன் “தேங்க் யூ” என்று அருந்தினான்.

பின் ஆதவிற்கும் வழங்க அவனும் அதை வாங்கி அருந்தினான்.

“ஏய்…சிந்து போ போய் டீ போடு” என்று ஏவினார் அம்சவேணி.

விக்ரமின் புருவங்கள் சுருங்கியது. ஏன் ரஞ்சி இருக்கும்போது இவளை ஏவுகிறார்.

கீதா கூட அடிக்கடி சிந்து சிந்து என்ற பெயரை சொல்லி கேட்டு இருக்கிறேன். ஒரே குழப்பமாய் இருக்கிறதே என்று ஆலோசித்தான்.

அதை உணர்ந்து கொண்டவள் ரஞ்சியை கண்களால் ஏவினாள். அவளும் அதை புரிந்துக்கொண்டு அடக்களைக்குள் புகுந்தாள்.

“என்ன ரஞ்சி…நீ என்று அவளை கேட்க” அம்சவேணியின் கையை பிடித்து இழுத்தாள் சிந்து.

“மா…. கொஞ்சம் சும்மா இரு” என்று அடக்கப்பட்ட வார்த்தையில் கூறினாள்.

விக்ரம் நிம்மதி புன்னகைப் புரிந்தான்.

“என்னம்மா…ரஞ்சிக்கு சிந்துக்கற இன்னொரு பேரும் இருக்கா”என்றான்.

புரியாமல் சிந்துவைப் பார்த்தார் அம்சவேணி.

“காலை மெதுவாய் மிதித்து ஆமாம்னு சொல்லு மா” என்றாள். அவள் கூறுகையில் இதழ் கூட அசையவில்லை.

“ஏய்…இங்க என்னடி நடக்குது” என்றார்.

“மா…நான் எல்லாம் அப்பறம் சொல்றேன். சமாளி” என்றாள் சிந்து.

“ஹான்….ஆமாம் தம்பி ரஞ்சிதா சிந்து, சிந்து தான் ரஞ்சி ஈ…”என்றார்.

“சரி.. அதுக்கு எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க” என்றான்.

துளசி அம்சவேணி சொல்வதை பார்த்து விட்டு சற்றே அமைதிக்காத்தாள். ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்று அவளுக்கு புரிந்தது.

தேநீர் தயார் செய்து வந்து ரஞ்சிக்கொடுக்க அதை வாங்கி கொண்டு வெளியே சென்றான் விக்ரம்.

“ஆத்தாடி…. “இப்படி வசமா என்ன சிக்க வச்சிட்டீங்களே சாமிகளா!

உங்க குடும்பத்துக்கே ஒரு கும்பிடு” என்றாள் ரஞ்சிதா.

“ஏய்…வாலுங்களா? என்ன நடக்குது இங்க” என்று காதை திருகினார் அம்சவேணி.

“இருவரும்…. அம்மா.. அம்மா…நாங்க சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்று நடந்ததை கூற வாயைப் பிழந்தார் அம்சவேணி.

“ஏய்….நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ பெரிய தப்பு பண்றிங்க தெரியுமா?

அந்த தம்பி நமக்கு எவ்ளோ உதவி பண்ணி இருக்கு. இப்படி நீங்க ஏமாத்தலாமா?”

“சொல்றதை கேளுங்க ஒழுங்கு மறுவாதையா எல்லா உண்மையையும் சொல்லுங்க.”

“அந்த தம்பி உங்களை எவ்ளோ நம்புது.”

“இப்போ நீங்க சொல்லப்பபோறீங்களா இல்லை நானே போய் சொல்லட்டுமா” என்றார் அம்சவேணி.

“அம்மா…. “என்று அழைத்தான் ஆதவ்.

“தம்பி இந்த விஷயம் உங்களுக்கும் தெரியுமா?”என்றார்.

“ஹ்ம்ம்…தெரியும்.

என்ன தம்பி நீங்க உங்களுக்கு இதைப் பற்றி முன்னாடியே தெரிந்து இருந்தும் நீங்க ஏன் தம்பி இவளுளுக்கு ஆதரவு கொடுக்குறீங்க.”

“நான் இப்போவே போய் சொல்றேன் நகருங்க என்று செல்ல,

அம்மா ஒரு நிமிஷம், ரஞ்சிதாவும், சிந்துவும் வேண்டும் என்றோ இல்லை விக்ரம் சாரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவோ இந்த பொய்யை சொல்லல”.

“உங்கள் குடும்ப சூழ்நிலைக்கு அந்த வேலை மிகவும் அவசியமாக இருந்தது.”

“அதனால் தான் அவர்கள் இந்த பொய்யை சொல்லினார்கள். ஆனால் அது இந்த அளவுக்கு வரும் என்று அவர்களுக்கே தெரியாதும்மா.

இப்போதைக்கு இந்த உண்மை சாருக்கு தெரிய வேண்டாம்.

நேரம் வரும் போது ரஞ்சி, சிந்து இருவருமே தன் தவறை ஒத்துக்கொள்வார்கள்.” “அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்க அம்மா. நீங்களே உங்க பொண்ணை காட்டிக்கொடுத்துறாதீங்க.”

“அவங்க இவ்ளோ பண்ணது உங்களுக்காகத் தான்.அதை மொதல்ல புரிஞ்சுக்கோங்க”என்றான் ஆதவ்.

“ஆதவ்…சொல்றது உண்மை தான் அம்மா” என்றாள் ரஞ்சிதா.

“கொஞ்ச நாள். நாங்களே எல்லா விஷயத்தையும் விக்ரம் சார்கிட்ட சொல்லிறோம்” என்றாள்..

துளசி கண்களில் கண்ணீரோடு தன் அக்காளைப் பார்த்தாள்.

“அக்கா எனக்காக இவ்ளோ கஷ்டப்படுற. வாழ்க்கையில் பொய்யே பேசாதவள் நீ.

எனக்காக…. என் வாழ்க்கை கனவுக்காக எத்தனை கஷ்டம் உன்ன என் அக்கானு சொல்லிக்கவே ரொம்ப பெருமையா இருக்கு அக்கா” என்று அழுதாள் துளசி.

அச்சமயம் விக்ரம் உள்ளே வர துளசி அழுவதைக் கண்டான்.

அவன் முகம் கருத்தது.

“ஏய்…உனக்கு என்ன தான் பிரச்சனை. இப்போ ஏன் துளசியை அழவச்ச. வந்த இடத்துல உன் வேலையை காட்டிட்டியா?

நீ இருக்குற இடம் எப்படி சந்தோசமா இருக்கும்.

இவ்ளோ நேரம் சந்தோசமா சிரிச்சுகிட்டு இருந்தாப் பொண்ணு இப்போ ஒரு பத்து நிமிஷம் வெளியே போயிட்டு வரதுக்குள்ள அழ வச்சிட்ட…. சீ போ இங்க இருந்து” என்று சாடினான் விக்ரம்.

சிந்துவிற்கு அவன் கடும்ச் சொல்லை தாங்க முடியவில்லை. அழுகை வர அங்கிருந்து வெளியே ஓடினாள்.

தென்றல் மீண்டும் வீசும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!