Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 24

தென்றல் – 24

 

சிந்துவை விக்ரம் இப்படி பேசியது அனைவருக்கும் வருத்தமாக இருந்தது.



Advertisement

ஆதவ்…. சிந்துவை தேடிச் சென்றான்.

சிந்துவோ வீட்டுக்கு பின் இருக்கும் அந்த சிறு ஓடையின் கரையில் அமர்ந்திருந்தாள்.

சிந்து என்று அழைக்க கண்களை அவசரமாகத் துடைத்து வராத சிரிப்பை வரவழைத்தாள்.

Advertisement

சொல்லுங்க சார் என்று தன்னையும் மீறி வரும் கண்ணீரை இமையணைக் கட்டி தடுத்தாள்.

Advertisement

என்ன சிந்து விக்ரம் சார் பேசுனது ரொம்ப கஷ்டமா இருக்கா.

அவரை பற்றித் தான் உனக்கு தெரியும்ல என்றான்.

ச்ச…ச்ச…எனக்கு என்ன வருத்தம். இந்த சின்ன விசயத்துக்கு போய் யாராச்சும் வருத்தப்பாடுவாங்க என்று தன் சோகத்தை மறைத்தாள் சிந்து.

Advertisement

ஆனால் ஆதவிற்கு அவள் வலி நன்கு புரிந்தது.

சிந்து……ஏன் இப்படி நடிக்கிறிங்க!

இங்க யாரும் இல்லை. நீங்க அழரதா இருந்தா அழலாம். நான் ஒன்னும் உங்கள வீக்கான பொண்ணுன்னு எல்லாம் நினைக்க மாட்டேன் நீங்க ரொம்ப ஸ்ட்ரோங், தைரியசாலி உங்களுக்கு யாரோட அனுதாபமோ, அடைக்கலாமோ தேவைப்படாதுனு தெரியும். ஆனா அதுக்காக அழ கூடாதுனு ஒன்னும் இல்லை. அழுதுருங்க சிந்து.

மனசை விட்டு ஆளுங்க. இல்லைனா பைத்தியம் பிடிச்சிரும். மனிதனுக்கு சிரிப்பை போலே அழுகையும் ரொம்ப அவசியம்.

இப்படியே மனசு முழுக்க வலியையும் வேதனையும் சுமந்து சுமந்து ஒரு கட்டத்துக்கு மேல அதை உங்களால தாங்கவே முடியாமால் சின்ன பிரச்னைனா கூட அதை பேஸ் பண்ண முடியாம போய்டும்.

அழறது தப்பில்லை சிந்து. என் முன்னாடி அழ உங்களுக்கு விருப்பம் இல்லைனா நான் வேணும்னா இங்க இருந்து போய்டறேன். பட் நீங்க சோகத்தை சேமித்து வச்சு மனசை கெடுத்துக்காதீங்க. அது ரொம்ப ஆபத்து என்று நகர அவன் கையை பிடித்து நிறுத்தினாள் சிந்து.

அவன் அவளை திரும்பி பார்க்க அவள் அவன் கையில் அழுத்தம் கொடுத்து அழ துவங்கினாள்.

மனம் விட்டு கதறி அழுதாள்.

அவன் கைகள் அவள் கண்ணீரால் நனைந்தது.

ஆதவ் அவள் தலையை மெல்ல வருடினான்.

ஏதேச்சையாய் வெளியே வந்தான் விக்ரம்.

இந்த காட்சியை கண்டதும் திரும்பிக்கொண்டான்.

சீ…இவ எவ்ளோ மோசமான பொண்ணு. அவ வாய் தான் ஓவரா பேசுவான்னு பார்த்தேன். இப்போ தான் புரியுது அவ எந்த மாதிரி பொண்ணுன்னு என்று முகத்தை சுழித்து உள்ளே சென்றான்.

சிந்துவை எப்போது அவன் பார்க்க நேர்ந்தாலும் தவறான சூழ்நிலையாகவே அமைகிறது.

அழுது அழுது தளர்ந்தவளை தன் கை கொண்டு நிமிர்த்தி கன்னங்களை பற்றி இனி நீங்க அழவே கூடாது சிந்து என்றான்.நீங்க தனி ஆள் இல்லை. நான் இருக்கேன். இப்ப மட்டும் இல்லை எப்பவும்.

இனி உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பா, ஒரு நல்ல பிரண்ட்டா இருப்பேன்.

கண்ணீரால் நனைந்த கண்களால் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள் .

அந்த கண்களில் பொய் என்பதே கிடையாது. உண்மையான அக்கறை தெரிந்தது.

ஆனாலும் அவனை அவள் நம்ப மறுத்தாள்.

ஆதவின் பிடியில் இருந்து தன்னை விலக்கி கொண்டவளின் மன நிலை அவனுக்கு நன்கு புரிந்தது.

எனக்குத் தெரியும் சிந்து. உங்களுக்கு ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை.

ஆனா நீங்க என்ன தாராளமா நம்பலாம்.நான் மற்ற ஆண்களைப் போல இல்லை. உங்களுக்கு என்னை நம்புறது கஷ்டமா இருக்கலாம். ஆனா நீங்க கொஞ்சம் காலம் எடுத்துக்கோங்க என் குணம் என்னனு உங்களுக்கு புரியும் என்று அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் செல்வதை உணர்ந்து மெல்ல அவன் போகும் திசை திரும்பி அவனை ரசிதுப்பார்த்தாள்.அவன் வீட்டிற்குள் நுழைய வாசல் திண்ணையில் அமர்ந்து இருந்தவன் என்ன ஆதவ் ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சதா என்றான்.

சார்…நீங்க என்ன சொல்றிங்க? என்று குழப்பதோடு கேட்டான்.

என்ன ஆதவ் புரியாத மாதிரி நடிக்குற என்றான் விக்ரம்.

சார் உண்மையாகவே நீங்க என்ன சொல்ல வரிங்கனு எனக்கு புரியல என்றான்.

நாற்காலியை விட்டு எழுந்தவன் நான் பார்த்துட்டேன் ஆதவ். நீயும் அந்த பொண்ணும் சீ….. உன் மேல நான் ரொம்ப நம்பிக்கை வைத்து இருந்தேன் ஆதவ் ஆனா நீ இவ்ளோ கேவலமானவனா?

இல்லை அந்த பொண்ணுகூட பழகுனதுக்கு அப்பறம் நீ கேவலமானவனாய் மாறிட்டியா? என்றான் விக்ரம்.

சார் ப்ளீஸ். உங்க கிட்ட நான் வேலை பாக்குறீங்கற காரணத்துக்காக நீங்க இப்படி எல்லாம் அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டு இந்த மாதிரி எல்லாம் என்ன பேசாதீங்க. அதுக்கு உங்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்றான்.

 

என்ன இப்படி பேசுனா கூட பரவாயில்லை சார். பாவம் அந்த அப்பாவிப்பொண்ணு அவங்களைப் போய் ச்ச என்று முகத்தை திருப்பிக்கொண்டான் ஆதவ்.

அதே சமயம் முகத்தில் ஆதவ் அளித்த நம்பிக்கையால் முகம் முழுக்க சிரிப்புடன் வந்தாள் சிந்து.

இருவர்களின் வாக்கு வாதம் அவள் காதுகளில் சில வார்த்தைகள் மட்டும் விழுந்தன.

என்ன ரெண்டு பேரும் ரொம்ப கோபமா பேசிக்குற மாதிரி இருக்கு.

ஆனா ஏன்? என்று யோசனையோடு அவர்களை நோக்கி நெருங்கினாள் சிந்து.

இங்க பாருங்க சார், இனி ஒரு வார்த்தைக்கூட அந்தப் பொண்ணை தப்பா நீங்க பேசக்கூடாது.எனக்கு உங்க வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ஆவேசமாக பேசி அங்கிருந்து சென்றான் ஆதவ்.

அவன் சிந்துவை கவனிக்கவில்லை.

சார் என்று விக்ரமை அழைக்க, கோபத்தோடு என்ன என்றான்.

என்ன ஆச்சு?

ஆதவ் சார் ஏன் இப்படி கோபமா போறாங்க. எதுவும் பிரச்சனையா என்று வினாவினாரள் .

தெரியாத மாதிரி ரொம்ப நடிக்காத பிரச்சனையே நீ தான் நீ மட்டும் தான். ஏன் என் ரஞ்சி கூடவே இருக்க. அவ நிழலை மிதிக்க கூட உனக்கு தகுதியில்லை.அவளை விட்டு உன்னால எவ்ளோ சீக்கிரம் போக முடியுமோ அவ்ளோ சீக்கிரம் போ. ஏன்னா அவ என்னவள். அவளை நான் நேசிக்கிறேன். அவக் கூட நீ இருக்குற வரைக்கும் என் ரஞ்சிதாவிற்கு எந்த நல்லதும் நடக்காது.

நீ ரஞ்சிதாவை மட்டும் இல்லை இதோ இந்த குடும்பத்தை விட்டும் நிரந்தரமா போய்டு உனக்கு எவ்ளோ பணம் வேணும் சொல்லு என்றான்.

இப்போது தான் ஆதவ் அவளை தேற்றினான். ஆனால் மீண்டும் அவளை அவன் வார்த்தை வாளால் வெட்டி எறிந்தான்.

துக்கம் தொண்டையை அடைக்க வார்த்தை தடுமாறியபடி என்ன…. என்ன…சொன்னிங்க. நான் இந்த குடும்பத்தை விட்டு போகணுமா?

நான் உங்க நிம்மதி எல்லாத்தையும் பறிக்கிறேனா?என்ன சார் பேசறீங்க நீங்க?

வாய் இருக்குனு என்ன வேணும்னா பேசலாம், பணம் இருக்குன்னா என்ன வேணும்னா பண்ணலாம் நினைச்சீங்களா சார்.

ஏதோ ஓர் இரு வாட்டி நம் சந்திப்பில் சற்று மோதல் இருந்து இருக்கலாம்.

அதற்காக என்னை இப்படியா சார் ரிவேஞ்ச் எடுப்பிங்க.

போதும் சார் இதோட இப்படி என் கிட்ட நடந்துக்கறதை நிறுத்துங்க.

என்ன பார்த்தாலே ஏதோ எதிரியை பார்க்குற மாதிரி பாக்குறீங்க?

அப்படி என்ன சார் நான் உங்களுக்கு பண்ணிட்டேன் என்றவளை ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைந்தான்.

தயவு செஞ்சி இனிமே நான் என்ன பண்றேன்?

நான் யார் கூட பேசறேன் அப்படிங்கறத விட்டு உங்க வேலையைப் பார்த்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்.

நானும் ஓரு ஹியூமன் தான் சார். எனக்கும் மனசு இருக்கு அதுல பீலிங்ஸ் இருக்கு.

நான் ஒன்னும் கல்லோ, ஜடமோ கிடையாது. எனக்கும் வலிக்கும் சார் என்று நெற்றியடியாய் பேசினாள்.

பாவம் அவளும் எத்தனை தான் தாங்குவாள்.

ஏய்…சும்மா சத்தமா பேசுனா உன்னை நல்லவனு நம்பிருவேனா?

உன்னப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.

நீ ஓரு ஆழகால விஷம் என்றான் விக்ரம்.

ஆதவின் ஆதரவான வார்த்தைகளால் உளர்ந்த அவள் கண்கள் மீண்டும் விக்ரமின் அவமான பேச்சிகளால் மீண்டும் அருவியாய் பொழிந்தது.

ஏய்…சும்மா அழுது நடிக்காத.

உன் கண்ணீருக்கு எல்லா ஆம்பளைகளும் மயங்க மாட்டாங்க. ஆதவ் ரொம்ப நல்லவன் எங்கே நீ அவனை இப்படி ஏதாவது நடித்து ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காகத் தான் அவனை எச்சரித்தேன்.

ஆனால் அவன் கண்மூடித்தனமாக உன்னை நம்புகிறான்.

உனக்கு ஏமாற்ற வேற ஆண்கள் ஏராளம்.

ஆதவை விட்டு விலகிவிடு என்றான்.

இனி விக்ரமிடம் பேசி எந்த பயனும் இல்லை. ஏன் என்றால் தான் என்ன செய்தாலும், சொன்னாலும் குற்றமாக பார்ப்பவனை என்ன செய்ய முடியும்.

அமைதியாய் அவனைக் கண்டந்து செல்ல, தென்னை மரக் கீற்று அசைய தென்றல் இதமாய் வீசியது.

அந்த இளம் காற்றில் அவள் சுடித்தார் துப்பட்டா பறந்து அவன் முகத்தில் பட்டது.

அவள் இதை கவனிக்கவும் இல்லை.

அவள் ஜிமிக்கி அவள் நடையால் மெல்ல ஊஞ்சலாய் அசைந்தது, அவள் அழகிய பட்டு கூந்தல் தென்றலால் அலை அலையாய் அசைய்ந்தது.

தன் முகத்தில் விழுந்த துப்பட்டாவை விழக்க

இயற்கை அவ்ளோடு விளையாடுவதைக் கண்டு வியந்தான்.

இத்தனை நேரம் அவளை திட்டியவன் தன்னை அறியாமல் கல்லத்தனமாய் ரசித்தான்..

ஆ…. என்று தன் துப்பட்டா விழகிய போது கை கொண்டு பிடித்து தடுத்தாள்.

அவன் புரம் திரும்ப அவன் கையில் இருந்தது.

புரியாமல் அவனைப் பார்க்க சாரி என்றான்.

அவள் அதை காதில் கூட வாங்கவில்லை. மீண்டும் அவள் நகர தென்றலில் கலந்து அவன் நாசியை தொட்டது அவள் தேக வாசனை.

அதை தன் உயிரில் நுகர்ந்தவன் கண்களை மெல்ல அடைத்து அவள் வாசனையில் லயிதான்.

ச்ச…என்ன நான் இப்படி பண்றேன். என் ரஞ்சி கால் தூசிக்கு சமம் ஆவாளா? எதுக்கும் இவ பக்கத்துல இருக்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும், இப்போ தான் தெரியுது ஆத்தாவோட நிலைமை. யாரா இருந்தாலும் மயக்கிருவா என்று தலையை வேகமாக அசைத்து தன் மயக்கத்தை போக்கினான் விக்ரம்.

தென்றல் மீண்டும் வீசும்…..

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!