தென்றலாய் என் காதல் – 25
தென்றல் -25
இரவு முழுவதும் சிந்துவிற்கு நாளைய பற்றிய கவலை மட்டும் தான்.
Advertisement
உண்மை தெரிந்தால் விக்ரமின் மன நிலை என்னவாக இருக்கும்.தன்னை ஏற்கவே வெகுவாக வெறுப்பவன் இப்போது இந்த நிலை அறிந்தால் என்ன நேரிடும்.
ஒரே குழப்பமாக இருந்தது.
“என்ன சிந்து யோசிக்கிற எதையும் நினைக்காத எல்லாம் என்னால தானே. உன் இந்த நிலைமைக்கு காரணம் நான் தான். நீ கவலைப்படதே விக்ரம் சார் கிட்ட நான் தான் எல்லாத்துக்கும் காரணம் நடந்த உண்மையை நான் சொல்றேன். நீ எதுக்கும் கவலைப்படைதே நான் இருக்கேன் சிந்து உனக்காக என்று ஆறுதல் கூறினாள் ரஞ்சிதா.
Advertisement
ஹ்ம்ம்…என்றவள் ரஞ்சியின் மடியில் தலை சாய்ந்துப் படுத்தாள்.
Advertisement
அலைப்பேசி ஒலிக்க மனம் படபடத்தது.
ஹே…. அவர் தான் கூப்பிடறாரு. இப்போ என்ன பண்றது என்றாள் சிந்து.
என்னனு கேளுடி. அட்டென்ட் பண்ணி பேசு எனக் கூறினாள் ரஞ்சிதா.
Advertisement
எனக்கு…. எனக்கு பயமா இருக்கு ரஞ்சி.
இதுல பயப்பட என்ன இருக்கு அவர் என்ன நெருலையா இருக்காரு. ஃபோன் தானே தைரியாம பேசு என்று கூற அழைப்பை எற்றாள்.
ஹேலோ….
ஹே…ரஞ்சி சாரி தூங்கிட்டிங்களா?
எதுவும் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னா என்றான் விக்ரம்.
அட பாவி மணி பதின்னொன்னு ஆகுது.
இப்போ ஃபோன் பண்ணி துகிட்டியா கேக்குறானே என்று அவள் மனம் அவனை கடிந்தது.
ஆனாலும் வெளியே சற்று கனிவுடன்.
ஹா…. ன்…அதெல்லாம் ஒன்னும் இல்லை சார். சொல்லுங்க எனி எமர்ஜென்சி என்றாள்.
ரஞ்சி……(பெரிய இடைவெளி )
ஹ்ம்ம்…சொல்லுங்க சார் (மௌனம் )
“என்ன உங்களுக்கு பிடிக்குமா?”என்றான்.
“ஹ்ம்ம்…பிடிக்கும் சார்”.
“ஏன்?”
“நீங்க ரொம்ப நல்லவரு, ஜென்னியுன் பர்சன். இந்த காலத்துலயும் இப்படி அம்மாவை நேசிக்கிற ஒரு நல்ல மகன். பெண்களை மதிக்கிற ஒரு நல்ல ஆண் மகன் அதனால உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்”என்றாள்.
அவன் இதழ் மெல்லிதாய் விரிந்தது.
“ஹ்ம்ம்…தேங்க்ஸ் ரஞ்சி”.
“அதை தாண்டி உங்களுக்கு என்னை பிடிக்குமா?”
(மௌனம்)
அவள் உடல் நடுக்கம் கண்டது. குளிர் எடுத்தது. ஆனால் முகம் ஏனோ வியர்த்துக்கொட்டியது.
முகத்தை தன் துப்பட்டாவால் அழுந்த துடைத்தாள்.
மூச்சு விட சிரம் ஏற்பட்டது.
பழைய நினைவுகள் அவள் மனதை ஒரு நிமிடம் படை சூழ்ந்தது.
உதடுகள் உளர்ந்து தவித்தது.
இதை ரஞ்சி கவனிக்காமல் இல்லை.
“என்ன ரஞ்சிதா பதிலையே காணோம்”.
“அது…. அது…வந்து…விக்ரம் சார்.. அது” என்று திணறினாள்.
“சரி சரி…. டோன்ட் பேனிக். ஜஸ்ட் சில் அவுட்”என்றான்.
அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது.
கண்களில் மங்கிய ஒளி மீண்டும் பிரகாசித்தது.
“அப்பறம் ஒரு சின்ன ரெக்வஸ்ட்…
நாளைக்கு நான் அனுப்பி வைக்கிற புடவையை கட்டிட்டு வாங்க.
அதை மட்டும் நீங்க செஞ்சீங்கனா நான்…. நான்…. உண்மையாகவே ரொம்ப சந்தோசப்படுவேன் ரஞ்சி.
என் இத்தனை வருஷ வாழ்க்கையில நான் யார் கிட்டையும் எதையும் எப்போதும் ரெக்வஸ்ட் பண்ணி கேட்டதில்லை. ஆனா முதல் வாட்டி உங்க கிட்ட கேக்குறேன். எனக்காக பண்ணுவிங்களா? ப்ளீஸ் ரஞ்சிதா நோனு மட்டும் சொல்லிராதீங்க.
என்னால அதைத் தாங்க முடியாது”என்றான்.
அவளோ என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதிக் காக்க,
சொல்லுங்க ரஞ்சி செய்விங்களா என்றான்.
அவன் குரலில் அத்தனை அன்பு தெரிந்தது.
அதில் ஒருவகை ஏக்கத்தையும் உணர்ந்தாள்.
“ரஞ்சி உங்க மௌனம் தான் என்னை இப்படி கொல்லாம கொல்லுது.
என் அம்மா கிட்ட கூட நான் இப்படி எல்லாம் அன்புக்காக ஏங்கினது இல்லை.
ஆனா உங்க கிட்ட இப்படி கெஞ்சிக்கிட்டு இருக்கேன். எனக்கே இது புதுசா தான் இருக்கு.
என்னை மாற்றியாதே நீங்க தான் ரஞ்சி….. நான்…. உங்க…”என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினான்.
சிந்துவிற்கு விக்ரமின் பேச்சு மனதின் அடி ஆழம் வரை எட்டிப்பார்த்தது.
சில வினாடி அமைதிக்கு பின் எதிர் முனையில் இருந்து “ஹ்ம்ம்…”என்ற ஒற்றை ஓசைக் கேட்டது.
அவள் கூறிய அந்த ஹ்ம்ம்…என்ற வார்த்தை தான் பல நூறு கவிஞர்கள் எழுதிய கவிதையை தோற்கடித்தது.
“தேங்க்ஸ்…. தேங்க்ஸ்…. ரஞ்சி”என்றான். அவன் குரலில் அத்தனை நிம்மதி அடங்கி இருந்தது.
“சரி ரஞ்சி நாளைக்கு உங்களுக்காக நான் காத்திருப்பேன். எப்ப இந்த இரவு சீக்கிரம் கரையும் தெரியவில்லை.
அது என்னவோ தெரியல ரஞ்சி காத்திருக்கும் போது தான் காலம் தாமதமாகும்.
என் பொறுமையை இந்த இரவு ரொம்ப சோதிக்கிது.”
“ஹ்ம்ம்….சரி…. ரஞ்சி நீங்க நிம்மதியா தூங்குங்க. நானும் தூங்க ட்ரைப் பண்றேன்” என்று அழைப்பைத் துண்டித்தான் விக்ரம்.
அவள் யோசனையோடு அலைபேசியை காதில் இருந்து எடுத்தாள்.
“ஏய்…சிந்து நீ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கன்னு உனக்கு தெரியுதா?
இது எவ்ளோ பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா? “
“சொன்னா கேளு சிந்து இதை இப்படியே விட்டுரு.
நாளைக்கு விக்ரம் சொன்ன மாதிரி நான் புடவை கட்டிட்டு போனாள் என்ன நடக்கும் உனக்கு புரியுதா.
அவர் ஒன்றும் என்னை நேசிக்கல சிந்து.
அவர் உன் குரலையும் உன் அன்பான பேச்சையும் தான் நேசிக்கிறார்.
அதை மொதல்ல நீ புரிஞ்சிக்கோ. அதை விட்டுட்டு நீ என்னடானா அவர் மனசு புரியாம எல்லாத்துக்கும் சரி சரினு சொல்லிட்டு இருக்க.
என்னால இதை பண்ண முடியாது சிந்து”. “இதனால் நமக்குள் எத்தனை பெரிய பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை. நான் இதற்கு ஒத்துக்கவே மாட்டேன்” என்றாள் ரஞ்சிதா.
“ரஞ்சி ப்ளீஸ். நான் சொல்வதை கேளு.
அவர் கேட்கும் போது என்னால மறுக்கவே முடியவில்லை” என்றாள் சிந்து.
“அதான் ஏன்?”
சிந்து முகத்தை திருப்பிகொண்டாள்.
“ஏய்…சிந்து கேக்குறதற்கு பதில் சொல்லு. அவர் தான் அப்படி சொல்றாருன்னா நீ ஏன் சரினு சம்மதிச்ச?
நோ சொல்ல வேண்டியது தானே”என்றாள்.
“அது…. அது…வந்து அவர் கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியல”என்றாள் சிந்து.
“அது தான் ஏன் கேக்குறேன்.”
“உனக்கு தான் ஆண்களையே பிடிக்காதே பின்ன எப்படி விக்ரம் மேல இத்தனை இரக்கம்”.
அப்போ…நீ அவரை காதலிக்கிறியா என்றாள் ரஞ்சி.
சிந்துவின் உடல் வெடவெடத்தது.
படுக்கையில் தளர்ந்து அமர்ந்தாள்.
கண்கள் அங்கும் இங்கும் அழைப்பாய்ந்தது. கண்ணீர் திரலாய் கூடியது.
“சிந்து பதில் சொல்லு எதற்காக இந்த மௌனம், பரிதவிப்பு.
என்ன என்று சொல்லு உன் மனசுல என்ன இருக்கு.
விக்ரமை நீ விரும்புறியா” என்று அதட்டினாள்.
“தெ…. தெ…தெரியல ரஞ்சி. அவரை விரும்புவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கு.”
“நான்…. எப்படி அவரை நேசிக்க முடியும்” என்றாள் வலியோடு.
“ஏன் நீ ஏன் அவரை நேசிக்க கூடாது.
நீ ரொம்ப நல்லப்பொண்ணு சிந்து.
யாரையும் மனசால கூட ஏமாத்த துரோகம் நினைக்க மாட்ட இதை விட என்ன தகுதி வேணும்” என்றாள் ரஞ்சி.
“என்ன ரஞ்சி இப்படி பேசுற?
உனக்கு என் பிரச்சனை என்னனு தெரியாதா?
நான் கடமைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
எனக்கு இந்த காதல் கல்யாணம் இதெல்லாம் சரி வராது. என்னால் ஒருவரை தெரிந்தே ஏமாற்றவும் முடியாது.
நான் அவரை நேசிக்கவில்லை ரஞ்சி,நான் அவரை நேசிக்கவில்லை” என்று முகத்தை பொத்திக்கொண்டு அழுதாள்.
“சிந்து இப்படி உன்னை நீயே ஏன் ஏமாற்றிக்கொள்கிறாய்.
உன் மனசு என்ன சொல்லுதோ அதை கேளு. சும்மா நடந்ததையே நினச்சு நினச்சு இப்படி உன் வாழ்க்கை முழுவதையும் வீணடிச்சுக்காதா.”
“அது மட்டும் இல்லை நடந்தது எதுக்குமே நீ காரணம் இல்லை. இதுல உன் தப்பு எதுவும் இல்லை. அந்த கில்ட்டி பீல்ல இருந்து வெளியவா சிந்து.” “இன்னும் எத்தனை வருசத்துக்கு தான் நீ இப்படி பண்ணாத தப்புக்காக தண்டனை அனுபவிப்ப.
அதில் இருந்து மீண்டுவா சிந்து. விக்ரம் ரொம்ப நல்லவரு நடந்ததை எடுத்து சொன்னா கண்டிப்பா அவர் உன்னை புரிஞ்சுப்பாரு.
விக்ரம் சார் தான் உனக்கு சரியான ஜோடி.”
“நீ உன் கடந்த காலத்தைப் பற்றி விக்ரமிடம் எதையும் சொல்லாத சிந்து. அதை எல்லாம் ஒரு கெட்ட கனவாய் நினைத்து மறந்துவிடு” என்றாள் ரஞ்சிதா.
“இல்லை…. இல்லை…. ரஞ்சி
என்னால யாரையும் ஏமாற்ற முடியாது.இப்போ மட்டும் இல்லை எப்போதும் நான் அந்த தப்ப பண்ண மாட்டேன். நான் என் வாழ்க்கையில் முதல் முறை ஒரு விசயத்துல ஒருவர ஏமாத்துறேன்னா அது இந்த வேலைக்காக மட்டும் தான்.”
“அதுவும் இனி நடக்காது”. “என்ன நடந்தாலும் சரி நான் இந்த உண்மையை அவர் கிட்ட சொல்லிட்டு அவர் வாழ்க்கையை விட்டே விளகிருவேன்” என்றாள் சிந்து.
சிந்துவின் இந்த நல்ல குணத்தால் தான் இப்படி கஷ்டப்படுகிறாள்.
ஆனாலும் தன் குணத்தை துளியும் மாற்றாதவள் சிந்து.
மன வேதனையுடன் ரஞ்சி அப்பறம் உன் விருப்பம் என்று சென்று படுத்தாள்.
அவ்விரவு மெல்ல மெல்ல நீண்டுக்கொண்டே போனது.
யார் கண்களிலும் சிறு உறக்கம்மில்லை.
இவ்விரவிற்கு துளி இரக்கமும் இல்லை.
படுக்கையில் புரண்டு புரண்டுப் படித்த விக்ரம், சிந்துவின் நினைவில் உறக்கம் இன்றி தவித்தான்.
படுக்கையை விட்டு எழுந்து ஜன்னல் திரையை விழக்கி காயும் நிலவை வெறித்தான்.
அழகான அந்த பூங்காற்று அவனை இதமாய் வருட,
“தென்றலாய் என் தேகம் தொட்ட என் காதல்”
“நீ அறியாமல் உடல் சிலிர்த்துதே நீ அறிவாயோ”
“உன் கரம் தீண்டும் வரம் கேட்டு நிற்கும் மலர்களின் வரிசையில் தவம் கிடைக்குறேன்.
எதையும் கண்டுக்கொள்ளாமல், சறுகென உதறி எறிகிறாய்”
என் இதயம் அது உனது பெயரை சொல்லி துடிக்க, என்னை நீ மறுக்க நினைத்தாயோ?
தென்றலாய் என்றும் உனை தீண்டும் என் காதல் உன் சுவாசத்தில் என்றும் கலந்தே தீரும்”.
அவன் உள்ளம் அவளை நினைத்து ஏங்கியது.
தென்றல் மீண்டும் வீசும்…..

