Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 29

தென்றல் – 29

 

“உங்களுக்கு சிந்துவைப் பற்றி என்ன தெரியும். அவ கோபம் மட்டும் தான் உங்களுக்கு தெரியும். ஆனா அந்த கோபத்துக்குள்ள மறைஞ்சு கிடைக்குற வலி உங்களுக்கு தெரியுமா?”

“சிந்து கடந்தது வந்த பாதை ஒரு முள் பாதை. அதில் உங்களால் ஒரு அடிக் கூட எடுத்து வைக்க முடியாது.



Advertisement

உண்மை என்னனு தெரிஞ்சுக்காம நீங்க என்னடானா அவளை எப்போ பார்த்தாலும் தப்பாவே புரிஞ்சுக்கிட்டு தேள் மாதிரி வார்த்தையால் கொட்டுறிங்க.

ஆனா அவ என்னைக்காச்சும் உங்க மேல கோபத்தை காட்டி இருக்காளா!

ஏன்…. உங்களுக்கு தெரியுமா?”

Advertisement

“தெரிம்சுக்காம இருக்கறது தான் நல்லது.

Advertisement

உங்க அம்மாவை நான் ஒன்னும் பார்த்துக்கல.

இவ்ளோ அன்பாவும் அக்கறையாகவும் பார்த்துகிட்டது சிந்து தானே தவிர நான் கிடையாது”.

“உங்க அம்மாக்கு கூட சிந்துவோட நல்ல மனசு புரியுது. ஆனா உங்களோட ஈகோ அவ நல்ல விஷயங்களை பார்க்க மறுக்குது.

Advertisement

போதும் சார் இனியும் அவளை வார்த்தையாள வதைக்காதீங்க.” “இனி அவளுக்கு உங்க வேலையும் வேணாம், உங்க குடும்பமும் வேண்டாம்.

நான் தான் சிந்துவை இந்த விளையாட்டுல மாட்டி விட்டேன். இப்போ நானே முடிச்சு வைக்குறேன்.

என்ன மன்னிச்சிருங்க.

அவளை விட்டுடுங்க”என்று கையெடுத்துக் கும்பிட்டாள் ரஞ்சிதா.

விக்ரம் ரஞ்சிதா பேசியதை வாய்யடைத்துக் கேட்டுக்கொண்டு இருந்தான்.

“இனியா……”என்ற சுசிலாவின் அலறல் வீடு எங்கும் எதிர் ஒலித்தது.

அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு என்று விக்ரம் கத்திக்கொண்டே ஓடினான்.

அவன் பின்னே ரஞ்சியும் ஓடினாள்

காற்றில் கலந்து அந்த தாலாட்டுப் பாடல் ஒலித்தது.

சிந்துவின் குரல் அனைவரின் பதஸ்டத்தையும் குறைத்து சற்று நிம்மதி பெருமூச்சை விடச் செய்தது.

விக்ரமின் கால்கள் மெல்ல அந்த பாடல் ஒலிக்கும் திசை நோக்கி நகர்ந்தது.

 

“ஹ்ம்….. லாலா…. லாலா…

அழகு நிலவே….

ஆயிரம் சூரியனே…

சில்லென்ற பூங்காற்றே…”

 

“என் இரவின் ஒளி நீ,

பகலின் நிழல் நீ!

சோலை நிறைந்த மலர் நீ, மலரின் வாசமும் நீ

மலர் தரும் தேன் அமுதும் நீ

இசையும் நீ, அதன் சந்தமும்

நீ

ஆதி நீ அந்தம் நீ

கால் நனைக்கு அலை நீ,

அமைதியாய் உறங்கும் ஆழியும் நீ.

எண்ணம் நீ, வண்ணம் நீ என் உயிரில் கடைந்து எடுத்த உயிர் ஓவியம் நீ…

நீ அழ தாங்கிடுமோ இந்த தாய்மை உள்ளம்.

ஒரு நொடி விலகினாள் தீ பற்றும் என் உலகு

நிரந்தர தீயில் கருக்கியதோ பூஞ்சிறகு….என்ற பாடல் காற்றோடு கலந்து ஒலிக்க விக்ரம் அந்த கீதத்தில் மதி மயங்கி நின்றான்.

சிந்து சுசிலாவின் கையை பற்றிக்கொண்டு அவரை சமாதானம் செய்யும் வகையில் ஆடி, பாடி மகிழ்வித்தாள்.

சுசிலாவின் பயம் தெளிந்து முகத்தில் சாந்தம் பரவியது.

சிந்துவை கண்கள் இமைக்காமல் பார்த்தான் விக்ரம்.

“சுசிலா அம்மா உங்களுக்கு என்ன பயம். அதான் நான் உங்க கூடவே இருக்கேன்ல” என்றதும், அவளைக் கட்டிக்கொண்டு “இனியா என்ன விட்டு போகாதா.”

“நீ எப்பவும் என் கூடவே தான் இருக்கனும்.

என்ன விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்றார் சுசிலா.

“தயக்கதோடு….அது.. அது.. வந்து…நான்…”என்று சத்தியம் செய்யாமல் யோசித்தாள்.

“உங்க இனியா இனி உங்க கூட தான் இருப்பாங்க. நீங்க கவலைப்படாதீங்க அம்மா” என்றான் விக்ரம்.

சுசிலாவின் முகம் மலர்ந்தது.

சிந்து கண்கள் விரிய விக்ரமை நோக்கினாள்.

ரஞ்சிதா, ஆதவ் மற்றும் அங்கு இருந்த அனைவரும் நடப்பதை வியந்து பார்த்தனர்.

அவன் சிந்துவை நோக்கி நகர்ந்து சென்றான்.

விக்ரம் அவள் அருகில் சென்றதும் சிந்துவின் கண்கள் அலைப்பாய்ந்தன.அவனை ஏற்றெடுத்தும் பார்க்காமல் பார்வையை வேறு எங்கெங்கோ செலுத்தினாள்.

“என்ன சிந்து நான் சொல்றது சரி தானே. அம்மாவை விட்டு எங்கையும் போக மாட்ட தானே என்றான் விக்ரம்.

அவள் சன்றென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.”

அவன் விழியோடு விழியைக் கலக்க விட்டாள்.

“இங்க பாரு சிந்து நீ பொய்யோ, உண்மையோ அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு அவசியமும் இல்லை.

ஆனா எனக்கு தெரிஞ்சது எல்லாம் ஒன்னு மட்டும் தான் அது என் அம்மா. அவங்க சந்தோசம் மன நிம்மதி தான் எனக்கு முக்கியம். சோ நீ இங்கயே கண்டினியுப் பண்ணலாம்.”

“அதுக்காக நீ என்ன ஏமாத்தி வேலையில் சேர்ந்ததை நான் மன்னிச்சிட்டேன் அர்த்தமில்லை.

இனியாவது கொஞ்சம் உண்மையா இருங்க என்று அவளை ஆழ்ந்து பார்த்தான்.

சிந்துவிற்கு தான் காண்பது என்ன கனவா இல்லை நினைவா என்று தெரியாமல் விழித்தாள்.

விக்ரம்…குறும்பு நிறைந்த புன்னகையோடு அவளை விட்டு அகன்றான்.

“ஹே…சிந்து என்னடி அப்படியே நிக்குற?

சார் சொன்னதை கேட்டியா? அவர் உன்ன இங்கையே இருக்க சொல்லறாரு. பாரு நீ எவ்ளோ பயந்த ஆனா விக்ரம் சார் எவ்ளோ நல்லவர் பார்த்தியா” என்றாள் ரஞ்சி.

போகும் அவனை ஆழ்ந்து பார்த்து “எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு ரஞ்சி. விக்ரம் அவ்ளோ சீக்கிரம் எதையும் மன்னிக்குற ஆள் இல்லை.

இதுல ஏதோ ஒரு சூச்சமம் இருக்கு” என்று கூட்டினாள்.

“அடிப் போடி உனக்கு எப்போ பார்த்தாலும் இதே வேலைதான். வாழ்க்கைல நம்பிக்கை கொஞ்சம்மாச்சும் வேணும்”என்றாள் ரஞ்சி.

அவள் ஒன்றும் பேசாமல் ஆலோசித்து நிற்க…

“லேடீஸ் அண்ட் ஜெண்டில் மென்” என்ற விக்ரமின் குரலில் அனைவரும் மேடையை கவனித்தனர்.

“இன்னைக்கு என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்.

என் அம்மாவோட பிறந்தநாள்.எல்லா வருசமும் என் அம்மாவோட பிறந்தநாள் அன்று ஏதாவது ஒரு மாற்றத்தை, முடிவை என் வாழ்க்கையில் எடுப்பேன் அது உங்க எல்லாருக்கும் தெரியும். “இந்த நாள்ல நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான செய்தியை சேர் பண்ணனும்னு ஆசைப்படறேன்” என்றான்.

அனைவரும்…. அமைதியாக கவனித்தனர்.

ரஞ்சிதாவும், சிந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“அட என்ன எல்லாரும் இப்படி பாக்குறீங்க?

இப்போ நான் சொல்லப்போற செய்தி ரொம்ப ஹாப்பியான செய்தி தான்.

யாரும் பேனிக் ஆகாதீங்க” என்றான் விக்ரம்.

“என்னவா…இருக்கும். சார் எதைப்பத்தி சொல்லப்போறாரு.

அப்படி என்ன சந்தோசமான விஷயம்”என்று அலுவலக பணியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு இருந்தனர்.

“சரி…சரி…இனியும் நான் உங்களை காக்க வைக்க விரும்பல என்ன விஷயம் என்பதை தாமதிக்காம நான் சொல்லிறேன்.

நான் கல்யாணம் பண்ணிக்கலாம்”என்று முடிவு செஞ்சி இருக்கிறேன் என்று கூறினான் விக்ரம்.

சிந்து எந்த உணர்வையும் காட்டாமல் சாதாரணமாக நின்றிருந்தாள்.

அனைவரும் கையைத் தட்டினர்.

“சரி…சரி…என்னோட வழித்துணை யாருன்னு உங்களுக்கு எல்லாருக்கும் தெரிய வேண்டாமா?

அவங்க இங்க தான் இருக்காங்க” என்றான் விக்ரம்.

“அனைவரும்…யாரு சார் அந்த லக்கி பெர்சன். ஹூ…”என்று ஆராவாரம் செய்ய…

அவன் புன்னகைத்தான். அந்த புன்னகை சாதாரணமானது இல்லை

கையை ரஞ்சிதாவின் நேரே நீட்ட அனைவரும் ரஞ்சிதாவின் மீது பார்வையை பதிக்க, ரஞ்சிதாவிற்கு என்னவோ போலே இருந்தது.

சிந்து வியப்பில் விழித்து நின்றாள்.

இச்…ச்…என்று சத்தம் செய்தவன் அவள் அருகில் நின்று இருந்த சிந்துவின் பக்கம் நகர்ந்தது அவன் நீட்டப்பட்ட கரம்.

“சிந்து…. “

சிந்து தான் என் மனைவி. அவள் தான் என் வருங்கால ஃவைப். இன்னும் சில மாதங்கல்ல எனக்கும் சிந்துவிற்கும் கல்யாணம் ரொம்ப கிராண்ட்டா நடக்கப்போகுது. இதே போலே அத்தனைப்பேரும் எங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கும் வந்து வாழ்த்தனும்”என்றான் விக்ரம்.

சிந்து என்ன நடக்கிறது என்று புரியாமல் வைத்த கண் வாங்கமல் பார்த்து இருந்தாள்.

“லெட்ஸ் வெல்கம் டு ஸ்டேஜ் ப்ளீஸ் மை டியர் லவ்லி கேர்ள் பிரண்ட்”என்று அழைக்க, அனைவரதுப் பார்வையும் அவள் மீது திரும்பியது.

“என்ன சிந்து, என்ன யோசிக்கிரிங்க சார் தான் கூப்பிடறாருல போங்க”

கங்ராஜ் மிஸ் சிந்து. யுவர் சோ லக்கி என்றனர் கூட்டத்தில் பலர்.

அவள் போக மறுத்தாள்.

“இதில் என்னவோ பெரிய சதி இருக்கிறது.

ரஞ்சி நான் சொன்னேன்ல பார்த்தியா, அவர் எதையோ திட்டம் தீட்டிட்டாரு.”

என்ன பழிவாங்க இப்போ இந்த “கல்யாண விஷயத்தை ஆயுதமாக எடுக்கறாரு.

எனக்கு பயமா இருக்கு ரஞ்சி என்று பதஷ்டத்துடன் கூறினாள் சிந்து.

ஹே…சிந்து என்ன பேசுற நீ…அவர் ரொம்ப ஜெனியூன். நீ நினைக்குற மாதிரி தான் எல்லாம் ஒன்னும் இல்லை.”

“சிந்து ப்ளீஸ் கம் ஆன் இன்த ஸ்டேஜ் ப்ளீஸ்” என்று மீண்டும் அழைக்க, ரஞ்சி சிந்துவை பிடித்து முன்னோக்கி தள்ளி,பயப்படாத போ என்றாள்.

ஆதவ்…. சிந்துவை கண்ணீர் மழ்க பார்த்தான்.

அடிமேல் அடி வைத்து மேடையை நோக்கி நகர்ந்தாள்.

விக்ரம் அவளை நேருக்கு நேர் பார்த்து புன்னகைத்தான்.

 

கீதா அம்மாவை கூட்டிட்டு வாங்க என்றதும், இதோ வறேன் சார் என்று சுசிலாவை மேடைக்கு கூட்டி சென்றார் அவர்.

 

தென்றல் மீண்டும் வீசும்……

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!