Skip to content
Post Views: 963
இதயக்கமலம் கோலம் பூஜை அறையில் வரைந்துக் கொண்டிருந்தாள் ரேணு. காவி இட்டபடி அருகில் அமர்ந்திருந்தாள் ரம்பா.
“அக்கா நீங்க அழகா வரையறீங்க. எனக்கு இப்படிலாம் கோலம் போட வராது…”
Advertisement
“அதான் அழகா காவி போடறியே”
“இருந்தாலும்..”
Advertisement
Advertisement
“கண்ணு பாத்தா தானா கை செய்ய வரப்போகுது.” காஞ்சனா வந்து சொல்ல,
“அத்தை, முதல்ல எனக்கு இந்தளவு பொறுமை இல்ல. அக்காக்கு ஹெல்ப் பண்ணனும்னு தான் இங்க இருக்கேன். அப்புறமா மாதவனை பாத்தீங்களா. காலைல இருந்தே காணல”
Advertisement
“ஏன் உங்கிட்ட சொல்லிட்டு போகலையா.?”
“இல்லத்த. நான் எந்திரிக்கப்பவே அவர் அங்க இல்ல.”
“அவரும் மாமாவுமே காலைலயே போயிருக்காங்க என்ன விஷயம் அத்தை.? மாதவனும் ஒரு வேளை அவங்களோட போயிருக்காரோ?”
“ அஞ்சு மணிக்கே விடுதலை அண்ணன் வாசல்ல நின்னுட்டு இருந்தாரு. காபி போட்டு தர சொன்னாரு மாமா..அப்போ பாத்தப்ப மருதனும், மாதவனும் கூட நின்னுட்டு இருந்தாங்க. ஆனா வெளில போனதை நான் பாக்கலையே” காஞ்சனா சொல்லும் போதே ரேணுவின் அலைபேசி அழைத்தது.
“ ரேணு.. அப்பாக்கும் இங்க சங்கத்து ஆளுங்களுக்கும் கொஞ்சம் கைகலப்பா ஆயிருச்சு. அப்பாவை தள்ளி விட்டுட்டாங்க. கீழ விழுந்ததுல அப்பாக்கு தலைல அடிப்பட்டிருச்சு. நான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன். நீ வீட்டை கலவரப்படுத்தாத.. நான் ஹாஸ்பிட்டல்ல பாத்துட்டு சொல்றேன்.”
“என்னப்பா.. பயப்பட ஒன்னும் இல்லையே..”
“இப்பத்தானே சொன்னேன். அம்மாங்ககிட்ட விவரம் முழுசா சொல்லாத” என்று வைத்து விட்டான்.
ரேணு பேசியதை பார்த்ததும் அனைவரின் முகமும் விவரம் தெரியுமுன்னே கலவரமானது.
“என்ன ரேணு. எதாவது பிரச்சினையா..”
“இல்ல.. அது. சஙகத்துல பிரச்சினையாம். அதான்”
“யாருக்காவது எதாவது ஆயிருச்சா.. “
“அதெல்லாம் ஒன்னும் இல்லத்த”
அவளுக்குமே வியர்த்து கொட்டியது.
ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
“சாதாரணமாத்தான் டா பேசிட்டு இருந்தாங்க.. ஆனா மானியம் வரதுல இருக்க பிரச்சினையை ஊரைக் கூட்டி கையெழுத்து வாங்கி ஏன் கவர்ன்மெண்ட்க்கு அனுப்பலன்னு கேட்டதுக்கு அப்பா, கொஞ்சம் வாயை விட்டிட்டார்டா. அதான் எலக்ஷன் வரப்போகுது, அப்ப எங்க கிட்ட தானே வந்து நின்னாகனும்னு கேட்டாங்க. இவர் சும்மா இல்லாம என்னைத்தவிர யாருக்கு நீங்க ஓட்டுப்போடுவீங்க, அப்படி போட்டா அக்ரிமெண்ட் விஷயத்தை பெருசாக்கினா ஒருத்தனும் தறி நடத்த முடியாதுன்னு சொல்லிட்டார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில பழனிவேல் அண்ணன் அப்பாவை நெஞ்சில கையை வச்சு தள்ளிட்டார். அப்படியே பின்னாடி விழுந்துட்டார் டா ஒரு செகண்ட்ல. எனக்கு என்ன நடந்ததுன்னு புரியறதுக்குள்ள ரத்தம் அதிகமா வர ஆரம்பிச்சிருச்சு. நல்லகாலம் விடுதலை அண்ணன் சொன்னதால மாதவனும் கூட வந்தான். உடனே ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு வந்துட்டோம். பிளட் அதிகமாகத்தான் போயிருக்கு டா. நானும் மாதவனும் ப்ளட் குடுக்க ரெடியாத்தான் இருக்கோம். நீ வர வேணாம். வீட்ல எல்லாரையும் பாத்துக்க..” மாறனிடம் மருதன் விவரத்தை சொன்னான்.
“அண்ணே. எதுனாலும் எனக்கு கூப்பிடுங்க..” என்று அவனும் சொல்ல,
“என்ன ஆச்சு. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.” ரதி அவனை கேட்டாள்.
அவள் முகமே வீங்கிப்போய் குரல் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் கேட்டது.
“பரிதாபம் பாத்து இருந்தா இப்படி ஆயிருக்காது.. இப்போ பாவம் வேலை செய்ய ஆரம்பிருச்சு போல”
“என்ன.. புரியற மாதிரி பேசுங்களேன்”. நடந்ததை சொன்னான்.
“ஏன் இப்படில்லாம் நடக்குது. அடி மேல அடி விழுகுது. நல்லவங்களுக்கு காலமே இல்ல.”
“தாரா வேணா நல்லவங்க ரதி. அப்பா யாருக்கும் நல்லதே நினைச்சது இல்ல.”
“அதுக்காக அவருக்கு எது வேணா நடந்தா பரவால்லன்னு சொல்ல முடியுமா..”
“அப்படி சொல்லல. இது மாதிரி எதாவது நடந்திடும்னு தான் இத்தனை நாள் சொல்லிட்டே இருந்தோம். இப்ப நடந்ததுக்கு அவரே முழு காரணம்.”
அடுத்த ஒரு வாரம் மருத்துவமனை அலைச்சலே பெரிதாக இருந்தது.
மருதனின் கடையை ரேணு பார்த்துக் கொண்டாள். மாதவன் கடை ரம்பா வசம்.
ரதி ஓரளவு அவளது துக்கத்தில் இருந்து மீண்டு இருந்தாள்.
அன்றுதான் ராமச்சந்திரன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பார்க்க அன்புச் செல்வனும், திருத்தாண்டவமும் வந்திருந்தார்கள்.
“ஏப்பா. இன்னும் எதுக்கு இந்த சங்கத்தை கட்டிட்டு அழுதுட்டு இருக்க. வயசான காலத்துல நிம்மதியை தான் தேடனும். வம்பை விலைக்கு வாங்க அலையக்கூடாது..” அன்புச் செல்வன் கேட்டதும்,
“உன்னால் உன் பதவியை விட்டுத் தர முடியுமா.? அதே மாதிரித்தாண்டா இதுவும். எனக்கு அடுத்து மருதன் தான் இந்த ஊருக்கு தலைவரா வரனும். அதுக்கு தான் இத்தனை பேச்சு.. அடிதடி.”
“என்னமோ எம்.எல்.ஏ பதவியை வாங்கித்தர மாதிரி பேசற. என் பையன் இருக்கற இடம் தெரியல. நான் என்ன பண்ணுவேன்.. என் மாப்பிள்ளையை அடுத்து ஸ்டேட் எலக்ஷன்ல இழுத்து விட்டா அவர் எங்கோ போகப் போறார். நீ எதுக்கு இந்த துக்கடா பதவிக்கு இவ்வளவு போராடற.. நீ கவலையை விடு. நான் பார்த்துக்கறேன்.”
ராமச்சந்திரன் அவர் நண்பரையும் மருதனையும் மாற்றி மாற்றி பார்த்தார்.
“அப்புறமா. சொல்ல நினைச்சேன். அடுத்து எலக்ஷன் வரப்போறதால நம்ம சொத்துலாம் கணக்கு வழக்கு பாத்து நம்ம ஆளுங்க மேல் மாத்தனும். குறிப்பிட்ட அளவு தான் கணக்கு காமிக்க முடியும். அதனால மாப்பிள்ளைக்கும் ரேணுவுக்கும் வாங்கின வீடு, சொத்து எல்லாம் கணக்கு பாத்துட்டு..”
“அட நீ எப்போ கையெழுத்து போடனும்னு சொல்லு நானும், காஞ்சனா, கற்பகமும் வந்திடறோம்.”
“அட அதான் போன எலக்ஷன்ல மாத்தினதே இன்னும் ரேணு பேருக்கு மாத்தலையே. அதான் இந்த முறை மாறன், ரதி பேர்ல மாத்தி எழுதிட்டு அப்புறமா வாங்கிக்கலாம்னு இருக்கேன்..”
“எதே. அவன் வீட்டை விட்டு போய்ட்டான் தெரியுமில்ல. அந்த ஒன்னும் இல்லாதவ பேர்ல எழுதப்போறியா..?”
“தற்காலிகமாத்தானே.. எலக்ஷன் முடிஞ்சதும் மாத்தி எழுதிக்கலாம்..”
“அப்போ எல்லாத்துலயும் முடிவாத் தான் இருக்கியா..?”
“ஆமாப்பா. என் பொண்ணு வாழ்க்கை எப்படி இருக்கனும்னு நான் தீர்மானிக்கனும் இல்ல..மருதன் எலக்ஷன்ல நிக்கத்தான் போறாரு..”
நீண்ட பெருமூச்சு வந்தது ராமச்சந்திரனுக்கு.
மருதனை பார்த்தார். அவன் எவ்வித சலனமும் இல்லாமல் இருந்தான்.
திருத்தாண்டவம் அடுத்து ஆரம்பித்தார்.
“சம்பந்தி நீங்க இனிமே ஓய்வுல தான் இருக்கனும். தேவையில்லாம இந்த சங்கம் அது இதுன்னு அலையாதீங்க.”
“அது யோசிக்கிறேன்.. நீங்க நம்ம மாதவனுக்கு எதாவது வழி பண்ணுங்க. அவன் தரிசா கிடக்கற நிலத்தை எதோ பயிர் வைக்கனும்னு அலையறான். அது சரியா வராது. அவன் படிச்சதுக்கு விவசாயம் தான் சரின்னு உங்களுக்கு தோணுச்சுன்னா ஒரு நூறு ஏக்கர் நிலம் வாங்கி தந்தா அவன் பண்ணை கிண்ணை வச்சு அப்படியே டெவலப் ஆயிருவான்.. நீங்கதான் அந்த கோயமுத்தூர்க்காரங்களுக்கே முப்பது கோடி தரேன்னீங்களே..” தனது கிடுக்குப்பிடியை போட்டார்.
“ரம்பா சொல்லுச்சு சம்பந்தி. ஆனா நான் வீட்ல பேசினதும் அவங்க சொன்ன ஒரே வார்த்தை, முதல்ல மாப்பிள்ளை அவரை நிரூபிக்கட்டும். இல்ல நம்ம வீட்டுக்கு வந்து இங்க எல்லா சொத்தையும் பாத்துக்கட்டும்னு… ரம்பா பிடிவாதத்தால தான் இன்னும் இங்க விட்டு வச்சிருக்கோம்.. இல்ல அப்பவே மாப்பிள்ளையை அங்கேயே நிறுத்தியிருப்போம்.”
அத்தனை பேரும் அதிர்ந்து அவரை பார்த்தனர்.
மாதவன் பல்லை கடித்தபடி நின்றிருந்தான்.
“ஏங்க. நாம ஒன்னும் மாப்பிள்ளை வீட்டோட இருக்கனும்னு ஒன்னும் பேசிக்கலையே..”
“அது பேசல தான். ஆனா அத்தனை சொத்தையும் என் பிள்ளை அனாதை இல்லத்துக்கு குடுத்துருங்கன்னு சொல்றப்ப என் மனசு என்ன பாடுபடும். என் சொந்தக்காரங்களுக்கு பிரிச்சது போக மீதி சொத்தெல்லாம் என் பொண்ணுக்கு தான். அவளுக்கு பிறக்க போற பிள்ளை தான் என் சாம்ராஜ்யத்துக்கு அடுத்த இளவரசன். அப்ப அவங்க ரெண்டு பேரும் அங்க இருக்கறது தானே நியாயம். பொறுப்பத்து சுத்தற உங்க பையனை நம்பி அவ்ளோ பணம் போட்டா சரியா வருமா சொல்லுங்க. அங்கன்னா நானும் என் ஆளுங்களும் கூடவே இருப்போம். மாப்பிள்ளைக்கு நெளிவு சுளிவுலாம் சொல்லித் தந்து பாத்துப்போம்.. “
ராமச்சந்திரனுக்கு ஒன்று புரிந்தது. தான் சரியாக இருந்தவரை யாருக்கும் இப்படி பேச துணிவில்லை. ஆனால் தன் தலை சாய்ந்தால் இந்த குடும்பம் சின்னா பின்னமாகும் என்று புரிந்தது.
அவர் மௌனமானார். பிள்ளைகள் இருவரும் வாய் திறக்காததில் அவருக்கு வருத்தம்.
அனைவரும் கிளம்பி போனதும் அண்ணன் தம்பிகள் தங்கள் மனைவியருடன் பேச்சு வார்த்தைக்கு ரதி வீட்டுக்கு வந்தனர்.
“அப்போ நீங்க அரசியலுக்கு போகப்போறீங்க.. மாதவன் மாமியார் வீட்டுக்கு போகப் போறான்.” மாறன் சொன்னதும்,
“டேய் சத்தியமா எனக்கு அரசியல்லாம் வராதுடா. நான் இப்படியே இருந்திடறேன். அப்பா பேசி பிரச்சினையானதால எனக்கு அடுத்த சங்க எலக்ஷன்ல கூட நிக்க முடியாது. நான் என் கடை, என் குடும்பம்னு இருந்துக்கறேன்.”
“நானும் இவ வீட்டுக்கெல்லாம் போக மாட்டேன் டா.. அப்பா சேர்த்து வச்ச சொத்தே போதும்டா.. கண்டவங்க சொத்து எனக்கெதுக்கு.”
ரம்பா அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.
“அண்ணி.. நீங்க சொல்லுங்க. அண்ணன் சொல்றதுக்கா… உங்கப்பா சொல்றதுக்கா உங்க ஓட்டு எதுக்கு..?”
“எனக்கு ரெண்டுமே ஓகே தான் மாறா. அப்பா சொன்னா மாதிரி போனா யார் தயவும் தேவையில்லை. அவருக்கும் ஒரு அரசியல் வாரிசை உருவாக்கின திருப்தி இருக்கும். உங்கண்ணா சொல்ற மாதிரி அவர் கடை, அவர் குடும்பம்னு இருந்தா அவர் நிம்மதியா இருப்பார்.”
“இது நோட்டாக்கு ஓட்டு போடற மாதிரி இருக்கு.. நீ என்னம்மா சொல்ற.. மாதவன் என்ன பண்ணனும்னு ஆசை.”
“எங்கப்பா காசும் வேணாம். உங்கப்பா காசும் வேணாம். இவரா உழைச்சு சம்பாதிக்கற காசு தான் எனக்கு வேணும். எங்கப்பா என் பிள்ளையை சாமராஜயத்துக்கு இளவரசனாக ஆக்குவார்னு தெரியும்.. ஆனா தகப்பனா இவர் என்ன பண்ணுவார்..?”
ரதி அத்தனை பேரையும் முழுதாக கவனித்தாள்.
“அண்ணா. நீங்க சொல்ற மாதிரி இப்போ கடையை கவனிக்க. எலக்ஷனுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு. அப்போதைய கதையை அப்போ பாத்துக்கலாம். மாதவா நீ ரம்பா சொல்ற மாதிரி நம்ம நிலத்தை முதல்ல விளைச்சலுக்கு ரெடி பண்ணு. நீ உன்னை நிரூபி. அப்புறமா மீதியெல்லாம் பாத்துக்கலாம்.”
“இத்தனை நாள் நானும் ஏதோ இருந்திட்டேன்டா. இனி இவ்வளோ கீழ்த்தரமா எல்லாரும் என்னை நினைச்ச பிறகு என் உழைப்பு இவங்களுக்கு பதில் சொல்லும்.முக்கியமா இவங்கப்பனுக்கு…”
மாதவன் ரம்பாவை முறைத்தப்படி சொன்னான். ஆனால் அவளோ ஒரு புன்முறுவலை பதிலாக அவனுக்கு தந்தாள்.
“டேய் நீ ஸ்டார்ட் அப் கம்பெனிக்கு என்ன பண்ணியிருக்க..”
“அண்ணா.. தாரா விஷயம் சொன்னேன் இல்ல. இனி இந்த ஊர்ல சாயக்கழிவுன்னு ஒன்னு இல்லாத நிலையை கொண்டு வரனும்..அதுக்கான ப்ராஜெக்ட் தான் பாத்துட்டு இருக்கேன். அப்புறமா சாயமே இல்லாம பட்டுப்புடவை நெய்யறதுக்கும் நெட்ல விவரம்லாம் தேடிட்டு இருக்கேன்.. அதுல முதல் விஷயம் கிடைச்சது வாழை நார் பட்டு. பனானா ஃபைபர்ல ஸீரோ வாட்டர் யூஸ் ல புடவை நெய்யலாம். நேச்சுரல் டையும் அதுல ஈசியா தோய்க்கலாமாம்.”
“வாழைநாரா.. அதுல எப்படிடா அந்த ஸ்மூத்னஸெ கொண்டு வரது...”
“அதுக்குத்தான் ணா. நிறைய விஷயங்களை கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன்..”
“மாறா.. இப்போதான் நியாபகம் வருது. ரதி.. கோவில்ல உனக்கு ஒரு புடவை தந்தாங்க இல்ல. அது அப்பாவோட ஃப்ரெண்ட் தான் கோவிலுக்கு புடவை சாத்தினாங்க. அவங்க சின்னாளப்பட்டிக்காரங்க. அவங்க தான் வாழை நார் புடவைன்னு அதை சொன்னாங்க. பார்ரா.. ரதி நான் சொன்னேன் இல்ல.. இந்த பிரபஞ்சம் நமக்கு முன்கூட்டியே எல்லாத்துக்கும் ஒரு க்ளூ கொடுக்கும். உனக்கே அந்த புடவை வந்திருக்கு பாரு..”
“ஆமாக்கா… சோ சர்ப்பரைஸிங்.. ரதி நீங்க இதைத்தான் பிஸ்னஸா எடுக்க போறீங்கன்னு முன்னாடியே உங்களுக்கு ஒரு தகவலா அந்த புடவை வந்திருக்கு பாருங்க.” ரம்பா அவளது கண்களை விரித்து சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு ரதியை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
மாதவன் முகத்தில் ஒரு சின்ன
நெகிழ்ச்சி வந்தது.
“எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் நம்ம கூட தொடர்புபடுத்திக்குது.” ரதி ஒரு துளி கண்ணீருடன் சொன்னாள்.
“அண்ணி.. நான் நெட்ல தேடினப்ப சின்னாளப்பட்டிக்காரங்க தான் முதல்ல வாழைநார் புடவையை நெஞ்சிருக்காங்க. ரதி அப்பாட்ட சொன்னேன். இங்க வாழவச்சனூர் வாழைகளை பத்தி சொன்னார்.. நம்ம மாவட்டத்துல அதிக உற்பத்தி அங்க தானாய். வேஸ்ட்டா போற அடி மரத்தை நாம மொத்தமா வாங்கிக்கறோம்னு சொன்னா கண்டிப்பா நமக்கு ஒரு நல்ல லாபத்துல ரா மெட்டீரியல் கிடைக்கும்.”
“டேய்.. அது முதல்ல அங்க வாங்குங்க. நான் நம்ம நிலத்தை பண்படுத்தினா லாழவச்சனூர்லயே கண்ணுங்களை வாங்கிட்டு வந்து நடவு செஞ்சிடலாம். அப்புறமா எதுக்கு வேற ஊருக்கு போனும்.. வாழவைக்கும் ஊர்ல இருந்து வாங்கிட்டு வந்து நாம வாழ ஆரம்பிப்போம் டா..இதுவே ஒரு நல்ல ஆரம்பம் மாதிரி தெரியுது... ”
“பரவால்லடா இவ்வளவு விஷயம் பாத்து வச்சிருக்கியே. மாதவா நீ சொன்னதும் சரியான விஷயம்டா..ஆரம்பிங்க. ரதி சில்க்ஸ்னு ஒரு கடை ஆரம்பிச்சிருவோம்..”
“அண்ணா.. அப்படி ஒரு வேளை அதை ஆரம்பிச்சா, நீங்கதான் அதை மார்க்கெட் பண்ணனும். நாங்க தயாரிக்கறதோட எங்க வேலயை நிறுத்திப்போம்” ரதி சொல்ல ஆச்சர்யம் மருதனுக்கு.
“ஏம்மா.. உங்க உழைப்பு.. நீங்க அதை வித்தா தானே நல்ல லாபம் கிடைக்கும்.”
“அண்ணா.. அவங்கவங்களுக்கு என்ன தெரியுமோ, அதை செஞ்சா தான் ணா அதுல வெற்றி பெற முடியும்..”
“ம்ம்.. நானும் வேற எதாவது தான் பண்ணனும்னு நினைச்சிட்டு இருந்தேன், கடைசியில் நீ இதுக்கு ஒரு வழியை காமிச்சிட்ட.. நம்ம இனி நல்லபடியா வாழ நீ முதல் அடியை எடுத்து கொடுத்துருக்க..இது மூலமா அத்தனை பேரோட வாழ்க்கையும் மாறப்போகுது..உனக்கு நன்றி சொல்ல தான் வார்த்தையில்ல..”
“அண்ணா.. நான் என்ன கதைகள்ல வர கதாநாயகியா.. வீட்டுல இருக்க பிரச்சினையெல்லாம் என் மூலமா சரியாக்க.. இது எங்களோட ஐடியா. இது டிரையல் அண்ட் எர்ரர் மெத்தட் தான்.. லாபமோ நஷ்டமோ எது வேணா வரலாம். ஆனா அதுல இருந்து நாம நம்ம பாதையை வகுத்துக்கனும்…”
வானம் நிறைய நட்சத்திரங்களை ஒளி வீச செய்தது. தூரத்து அரைநிலா இது ஒரு வளரும் பருவம் என்று அவர்களுக்கு ஒரு சமிக்ஞையை தந்தது.
ரதியின் கைகள் இப்போது மாறனின் கைகளுக்குள் இருந்தது.
“ரதி.. அண்ணனை இந்த விஷயத்தில் நம்ம கூட சேர்த்துக்கனும்னு எனக்கு தோணவே இல்ல.. அவருக்காக நீ யோச்சிதுக்கு நான் உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல..”
“அவரால தானே நான் இன்னிக்கு இங்க இருக்கேன். உங்கப்பா ஒரு விதத்தில் என்னை மிரட்டினார். ஆனா உங்க அண்ணா தான் எனக்கு நம்பிக்கைய தந்தார். இந்த வீட்ல நாங்க எப்பவும் உனக்கு துணையா இருப்போம்னு. அதுவும் ஒரு காரணம் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க.”
“ஓ.. இந்த வீட்ல நீ கல்யாணம் பண்ணிட்டு வந்ததுக்கு நீ அப்போ சந்தோஷப்படறியா..”
“ம்ம்.. எனக்கு ஒரு நல்ல ஆன்மாவை துணையா கொடுத்ததுக்கு என்னிக்கும் நான் சந்தோஷப்பட்டுக்குவேன்.”
“ம்ம்..” என்று யோசித்தவன் ஒரு நொடியில் அதன் அர்த்தம் புரிந்தவனாய் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.
“நிஜமா என்னை துணையா ஏத்துக்கிட்டியா ரதி..” அவனது குரல் குழலை போல் குழைந்தது..
“ம்ம்.. எனக்காக யோசிக்கிற, எனக்காக கண்ணீர் சிந்தற, எனக்காக தன் குறிக்கோளை மாத்திக்கிட்ட, என் அப்பாவுக்காக யோசிக்கிற ஒருத்தரை துணையா கிடைக்க நான் சந்தோஷம் தானே படனும்.”
“ரதி..” அவனது ஒற்றை விரல் அவளின் இதழ்களின் குறுக்காக நின்றது.
“நீ கிடைச்சதுக்கு நான் தான் சந்தோஷப்படனும்.. நீண்ட கால கனவு இல்ல நீண்ட கால தவம்னு தான் சொல்லனும். நீ என் வாழ்க்கைல கிடைச்ச வரம்..”
“நீண்ட காலமா?”
“ம்ம்.. அப்படித்தான் வச்சுக்கோயேன்.”
“அப்பப்ப புரியாம பேசறதே வேலையா போச்சு..”
“ஓ.. புரியற மாதிரி பேசவா..”
“ம்ம்.. பெட்டர். “
“ஆனா அது சத்தம் வராத பேச்சு..”
“அப்ப எப்படி புரியுமா.?”
“இப்படி” என்றபடி அவளது இதழ்களை நோக்கி அவன் இதழ்களை நகர்த்தினான். ரதியின் கண்கள் இமைக்க மறந்தன...
அவனது அத்தனை வருடக் காதலை அந்த இதழ்களால் அவளின் இதழ்களுக்கு கடத்தினான். மெல்ல அவள் கண்களை இறுக்கி மூடி, அவனது காதலில் அவள் தன்னை தொலைக்க ஆர்மபித்தாள்.
அவனது விரல்கள் அவளின் கழுத்தில் இருந்து கன்னம் வரை கோலங்கள் வரைய ஆர்மபித்தன..
மாறனின் காதல் அம்புகள் அவளின் உடலில் ஒவ்வொரு அணுக்களிலும் அவனின் காதலை தைக்க ஆரம்பித்தன.
புது உறவில் ஒரு புதிய அனுபவம் அவளுக்கு வாழ்வில் முதல் முறையாக நிகழ ஆரம்பித்தது.. அவளின் தாத்தா சொன்ன அற்புதம் அவளின் வாழ்வில் ஒரு நொடியில் தொடங்கி மணிக்கணக்கில் நீள ஆரம்பித்ததற்கு அந்த நீல வானும், நிலவும் சாட்சி..
error: Content is protected !!