தென்றலாய் என் காதல் 6

அத்தியாயம் – 6
குருவிகளின் கீச்…. கீச்…கானம் விக்ரமின் தூக்கத்தை கலைத்தது.
வேகமாக எழுந்தவன் கடிகாரத்தை பார்த்தான்.
Advertisement
“மணி…ஏழு ஆயிடுச்சா?ஓ மை காட்.
எப்படி இவ்ளோ நேரம் தூங்கினேன்” என்று அவசரமாக எழுந்தவன் தன் அன்னையை ஒருமுறை அன்பாக பார்த்தான்.
காலையில் வழக்கம் போல் அவசரமாக கிளம்பினான் விக்ரம்.
Advertisement
கீதா…விக்ரமிற்கு காலை உணவை டேபிளில் எடுத்து வைத்தார்.
Advertisement
அவசரமாக வந்து அமர்ந்தவன் தானே பரிமாறிக்கொண்டான்.
தம்பி நான் பரிமாறுகிறேன்.
“வேண்டாம்”….என்றவன் உணவில் கவனத்தை வைத்துக்கொண்டு
Advertisement
“அப்பறம் அம்மா நல்லா தூங்கிட்டு இருக்காங்க, அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.அவங்களா எழும் போது சாப்பாடு கொடுத்தால் போதும்”.
“ஏன்னா அம்மா இப்படி நிம்மதியா தூங்கி நான் பார்த்ததே இல்லை”.
“எப்போதும் இரவில் விழித்து அழுவார். ஆனால் இன்று ஒரு சின்ன சிணுங்கள் கூட இல்லாமல் ஆழ்ந்து உறங்கினார்.அதனால் தான் சொல்கிறேன்” என்றான் விக்ரம்.
“ஹ்ம்ம்…சரிங்க தம்பி” என்றார் கீதா.
“அப்பறம் இன்னொரு விஷயம் இன்னைக்கு அந்த பொண்ணு வந்துச்சுனா நான் வர வரைக்கும் வெயிட் பண்ண சொல்லுங்க”.
“நான் அவங்கள பார்க்கணும்.அவங்க கிட்ட நான் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு”.
கீதா நீங்களும் அம்மாவை பார்த்துக்கோங்க அவங்க இருக்காங்கனு மெத்தனமா இருக்காதீங்க,
ஒன்னுக்கு ரெண்டு பேரை வேலைக்கு வைப்பது அவரின் பாதுக்காப்பிற்காக தான்”.
“அம்மாவை பற்றி உங்களுக்கே நன்கு தெரியும் அல்லவா, எப்போதும் கவனமாய் இருங்கள்” என்றான் விக்ரம்.
“சரிங்க தம்பி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்றார் கீதா.
விக்ரம் தன் காரில் அலுவலகம் கிளம்பிச்சென்றான்.
சிந்துவின் கை பேசி ஒலித்தது.கண்களை திறக்க முடியாமல் உறக்கத்தோடு எடுத்து
ஹலோ என்றாள்.
“மேம் நாங்க விக்ரம் சார் ஆஃபீஸ்ல இருந்து மேனேஜர் ஆதவ் பேசறேன்.
நீங்க இனி வேலைக்கு வர வேண்டாம்” என்றான் ஆதவ்.
“சார் என்ன ஆச்சு?”
“நான் என்ன தப்பு பண்ணேன்” என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே
எந்த பதிலும் கூறாமல் அழைப்பை துண்டித்தான் ஆதவ்.
“சார்…சார்”…
இதை கவனித்த ரஞ்சிதா…
“என்ன ஆச்சு சிந்து.
ஏன் ஒரு மாதிரி இருக்க”.
“போன்ல யாரு?”என்று கேட்டாள் ரஞ்சிதா.
“விக்ரம் சார் ஆஃபீஸ்ல இருந்து கால்”.
“ஆஃபீஸ்ல இருந்தா?”என்று வார்த்தையை இழுத்தவள்
ஓ…ஆமால…நான் ரெஸ்யும்ல உன் நம்பர் தான் கொடுத்து இருந்தேன்.
“சரி…டி,ஆஃபீஸ் இருந்து யார் பேசுனா?” என்றால் ரஞ்சிதா.
“வேற யாரு மேனேஜர் தான்” என்றாள் சிந்து.
“என்னவாம் அவருக்கு”.
இனி வேலைக்கு வர வேண்டாம் என்கிறார் ” என்றாள் சிந்து.
“வாட்…?பட் ஒய்?”
“யாருக்கு தெரியும்.எல்லாம் என் நேரம்.யாரை நான் நொந்து கொள்வது சொல்”.
“சரி விடு சிந்து. நான் வேறு எங்காவது வேலை தேடுகிறேன்”.
“இங்கு கை நிறைந்த சம்பளம் என்பதால் தான்,நானே உனக்காக இத்தனை ரிஸ்க் எடுத்தேன். ஆனா என்ன ரீசன் கூட சொல்லாம, சரி விடு சிந்து டோன்ட் பீல் டி” என்று ஆறுதல் கூறினாள் ரஞ்சிதா.
“ரஞ்சி இப்போ எனக்கு டைம் ரொம்ப குறைவா இருக்கு”.
“உனக்கே தெரியும் என் தங்கச்சி நீட் எழுதி மாநிலத்தில் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறாள்”.
“மெடிக்கல் சீட் அத்தனை எளிதல்ல”.
“அதுவும் நம்மை போன்றவற்கு அது ஒரு சிகரத்தின் உச்சி”.
“என் தங்கை துளசி அதை போராடி எட்டி பிடித்திருக்கிறாள்”.
“இப்போது கல்லூரியில் அரசு வழங்கிய காலர் ஷிப் போக மீதி பணமே லக்ஷகணக்கில் தேவைப்படுகிறது”.
“கடன் கேட்கும் இடத்தில் எல்லாம் இந்த ஆண் வர்க்கம் என் உடம்பை கூறு போட துடிக்கிறது”.
“என்ன செய்வேன் ரஞ்சி.
நானும் இந்த வாழ்வோடும்,இந்த ஆண் இனத்தோடும் எவ்வளவு தான் போராடுவேன்”.
“என்னால் முடியவில்லையடி. என் மனம் மிகுந்த வேதனையில் இருக்கிறது”.
“நான் என்ன தான் செய்வேன்.
பெண்ணாக பிறந்தது ஒரு குற்றமா?”.
“இல்லை நான் பிறந்ததே குற்றமா”
“எங்கு என்றாலும், ஆண்களின் இந்த வக்கிர பார்வையில் இருந்து என்னால் தப்பிக்கவே முடியவில்லையே!”
“பார்வையாலே கற்பழித்து விடுகின்றனர். உடல் கூசுகிறது”.
“சிறு வயதில் இருந்தே அத்தனை கைகளும் என் அங்கங்களை வருடவே துரத்தியது.
“ஓடி ஓடி அயர்ந்துவிட்டேனடி தோழி”.
“யாரை நம்புவது?
ஆண்களை கண்டாலே பயம் எனக்கு”.
“என் குணத்தை மாற்றிக்கொண்டேன், என் சொற்களில் கடுமையை கூட்டினேன்”.
“ஆண்களை கண்டாலே எரிந்து விழுந்தேன்”.
“இனியும் நான் எப்படி போராடுவேன்”.
“இந்த வாழ்வோடும் இந்த மனித இனத்தோடும் தொற்றுவிட்டேன்னடி.. நான் தொற்றுவிட்டேன்” என்று ரஞ்சிதாவை கட்டிக் கொண்டு கதறி அழுதாள் சிந்து.
“ப்ளீஸ்…டி சிந்து. நீ அழாத”.
இதை நீ மட்டும் இல்லை. எல்லா பெண்களும் தன் வாழ்வில் ஒருநாளாவது எதிர்கொண்டு இருப்பார்கள்.
“என்ன செய்வது பெண் இனத்தின் சாபக்கேடு இது”.
“வீட்டின் ஆண் துணை இல்லாமல் வாழும் அனைவருக்கும் இவ்வுலகம் ஒரு நரகம் தான் சிந்து”.
“நடந்ததை எல்லாம் மறந்துவிடு.
கொஞ்சம் ரிலேக்ஸ்சாகுடி”என்று தன் தோழியை தேற்றினாள் ரஞ்சிதா.
தன்னில் இருந்து பிரித்து “மொதல்ல அழுவதை நிறுத்து” என்றவள் கண்ணை துடைத்துவிட்டாள்.
“இனி இப்படி நடந்ததையே நினைச்சிட்டு இருக்க கூடாது”.
“மீண்டு வா சிந்து. எதிர்காலம் நம் கையில் தான் இருக்கிறது” என்றவள்
“ஹே…இப்போ தாண்டி நியாபகம் வருது, எங்க ஆபீஸ்ல ரிசப்சன்னிஸ்ட் வேலை ஒன்னு காலியா இருக்கு.
நீ வேணும்னா ஜோயின் பண்ணிக்கிறியா சொல்லு”.
“எங்க பாஸ் நான் சொன்னா கேப்பாரு.
என்ன ஒன்னு சாலரி தான் கொஞ்சம் கம்மி.
இப்போதைக்கு வேற நல்ல வேலை கிடைக்குற வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.அதுக்கு அப்பறம் பாத்துக்கலாம் என்ன சொல்ற” என்றாள் ரஞ்சிதா.
“சரி ரஞ்சி. இப்போதைக்கு எனக்கு பணம் ரொம்ப முக்கியம்..
உனக்கு தெரியாதா என்ன?
கிடைக்குற வேலையையும் விட்டா எப்படி ரஞ்சி” என்றாள் சிந்து.
சரி டி நான் இன்னைக்கு சார் கிட்ட பேசறேன் என்றாள்.
ரொம்ப தேங்க்ஸ் டி என்றவள் உன் உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்று மீண்டும் அழ துவங்கியவளை
“ஏய் இப்போ தானே சொன்னேன் அழக்கூடாதுனு” என்றதும் கண்ணை விரைந்து துடைத்து கொண்டாள் சிந்து.
“ஹ்ம்ம்…குட். சரி டி ஆஃபீஸ் டைம் ஆச்சு. நான் போய் வருகிறேன் நீ வீட்டின் கதவை பூட்டிக்கொள்” என்று விடைப்பெற்றாள்.
நேரம் கடந்தோடியது.
ஆஃபீஸ்சில் மீடிங் நடந்து கொண்டிருக்க
விக்ரமின் அலைபேசி வைப்ரேட் ஆனது.
அவன் பார்த்து விட்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தார்.மீண்டும் விடாமல் அடித்தது.
எரிச்சளோடு அதை எடுத்து,எஸ் கியூஸ் மீ என்று கேபினை விட்டு வெளியே சென்றான்.
“கீதா என்ன?
ஏன் இப்படி ஓயாம போன் அடிச்சு டிஸ்டர்ப் பண்றிங்க?
ஒன் டைம் அட்டெட் பண்ணலைனா பிஸியா இருக்கேன் புரிஞ்சுக்க மாட்டீங்க”
“சொல்லுங்க என்ன விஷயம்”என்றான் எரிச்சலுடன்.
“தம்பி…மன்னிச்சிருங்க.அம்மா சாப்பிடாம அடம் பிடிக்குறாங்க. அது மட்டும் இல்ல ரொம்ப ஆக்ரோசமா நடந்துக்கறாங்க கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வாங்க தம்பி” என்று பரிதவித்தார் கீதா.
“இப்ச்…அம்மா…ஆ..என்று பற்களை கடித்தான் விக்ரம்.
“அந்த பொண்ணு என்ன ஆச்சு?”
“அந்த பொண்ண தான் நீங்க வேற வேண்டான்னு சொல்லிட்டீங்கனு ஆதவ் தம்பி சொன்னிச்சு” என்றார்.
“ஷிட்…இந்த அறிவு கெட்ட ஆதவ், எத நியாபகம் வைக்கணுமோ அதை நினைவில் வைத்து கொள்ளாது.
எதை மறக்கணுமோ அதை மட்டும் கரெக்ட்டா நியாபகம் வச்சுக்கும்”.
சரி நான் பாத்துக்கறேன் என்று அழைப்பை துண்டித்தான் விக்ரம்.
ஆதவிற்கு அழைத்தான்.
“ஹலோ…சொல்லுங்க பாஸ்”என்றான் ஆதவ்.
“ஆதவ்…உன்ன யாரு அந்த பொண்ண வேலைக்கு வர வேண்டான்னு சொல்ல சொன்னது” என்றான் கோபத்துடன்.
“நீங்க தான் பாஸ்”என்றான் அடுத்த நொடி.
சரி…ஈ…. அதை நேத்து தானே சொன்னேன்.
“இன்னைக்கு ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம்ல” என்றான்.
“இல்ல பாஸ் காலையிலையே கால் பண்ணா திட்டுவீங்க அதனால தான்”.
“இதோ இப்போவே நான் அந்த பொண்ணுக்கு கால் பண்ணி வர சொல்றேன் பாஸ்” என்றான் ஆதவ்.
“நீ ஒன்னும் பண்ணவேண்டாம்.
எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
நீ எதுவும் பண்ணாம இருக்குறது தான் நல்லது” என்று அழைப்பை தூண்டித்தான் விக்ரம்.
“சார் இப்போ எதுக்கு இப்படி கோபப்படறாரு?
அவர் சொன்னதை தானே நான் செஞ்சேன்”…..
“ஹ்ம்ம்.. இவரை புரிஞ்சுக்கவே முடிய”ல என்று அவன் ஃபையில்களை புரட்டினான்.
“மீண்டும் அவன் அலைபேசி ஒலிக்க, சார்” என்றான்.
“அந்த பொண்ணு நம்பர் எனக்கு வாட்ஸ் ஆப் பண்ணி விடு” என்று கட் செய்தான்.
சில நொடிகளில் வாட்ஸாப்ப்பில் அவள் என் வர அதற்கு தொடர்பு கொண்டான்.
“ஹலோ…சொல்லுங்க” என்றாள் தன் தேன் பாயும் குரலில்.
“அவன் காதுகள் ஏதோ இன்னிசை சங்கமத்தை உணர்ந்ததை போலே மெய் மறந்தது”.
“இந்த குரல்…இந்த குரல் எனக்கு நன்கு பரிஜய பட்ட குரல் போல் இருக்கிறது” என்று ஆழ்ந்து சிந்தித்தான் விக்ரம்.
“ஹலோ…. ஹலோ…கேக்குதா?சார் யாரு பேசுறீங்க? லைன்னில் இருக்கீங்களா? என்ற சப்தத்தில் ஹான்…லைன்னில் தான் இருக்கேன்”.
“நான் விக்ரம்,ஏன் நீ வேலைக்கு வரவில்லை?”
“ஓ.. நீங்களா? சார்.
நீங்க தான் என்ன வேலைக்கு வர வேண்டான்னு சொன்னதா சொன்னாங்க, இப்போ என்னடானா நீங்களே என்ன கேள்வி கேக்குறீங்க” என்றாள் சிந்து.
“சரி…போகட்டும்.
சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு போ.
அங்க அம்மா ரொம்ப முரண்டு பிடிக்குறாங்க” என்றான் உரிமையாக.
“சார்…ர். என்ன சார்…நான் என்னவோ உங்க பொண்டாட்டி மாதிரி அதிகாரம் பண்றிங்க”.
“இந்த அதிகாரம் பண்ற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம்”என்றாள் நெற்றி அடியாய்.
“உங்களுக்கு வேணும்னா நாங்க வந்து வேலை செய்யணும், போக சொன்னா எந்த கேள்வியும் கேட்காமல் போய்டணும் அப்படி தானே?”
“நாங்க ஒன்னும் ஆடு மாடு இல்ல சார்.
மனுசங்க என்றாள் சிந்து”.
“இப்ச்….இப்போ எதுக்கு சம்மந்தம் இல்லாம பேசிகிட்டு இருக்க”.
“உன்னால வேலைக்கு வர முடியுமா முடியாதா?”
“முடியாது சார்”
தென்றல் மீண்டும் வீசும்….*
