Skip to content
Post Views: 2,303
யாதுமாகி #36
நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் புகழ்பெற்ற மகாலட்சுமி மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜோதி.
அதிகப்படியான ரத்த இழப்பு, விழுந்த அதிர்ச்சி,கைகால் சிராய்ப்பு.
ஆங்காங்கே வயர்கள் சொருகப்பட்டு சுவாசம் மானிட்டர் செய்யப்பட்டு கொண்டிருந்தது.
Advertisement
தலைகீழாய் ஸ்டாண்டில் தொங்கிய பாட்டிலில் இருந்து சொட்டு சொட்டாக ரத்தம் கை நரம்பு வழியே இறங்கிக் கொண்டிருந்தது.
வேணு கலங்கி போனார். என்ன இருந்தாலும் கட்டிய மனைவி அல்லவா?
வாலிபத்தில் உடலை சமன்படுத்தவும், வயோதிகத்தில் உள்ளத்தை சமன்படுத்தவும் துணை தேவை அல்லவா?
Advertisement
விஷ்ணுவுமே பதறிப் போனான். எத்தனை வயதானாலும் தாய் தாய் தானே…?
Advertisement
அன்னம் மருமகள் மீது வருத்தம் கொண்டிருந்தாலும் அவர் உலகை விட்டு போய்விட வேண்டும் என்று நினைக்கும் கல் நெஞ்சம் கொண்ட மாமியார் அல்ல.
வேணு நீ மனம் தளராதே ஐயா! இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் பொண்டாட்டி பக்குனு எழுந்து உட்கார்ந்துடுவா பாரு! மகனுக்கு ஆறுதல் சொன்னார்.
எம்ஆர்ஐ ஸ்கேன் பார்த்து தான் முடிவு சொல்ல முடியும் என்று டாக்டர் ராமச்சந்திரன் கூறிவிட்டார்.
Advertisement
மிகவும் ராசியான மருத்துவர் என்று அந்த வட்டாரத்தில் பெயரெடுத்தவர்.கண்டிப்பாக தன் மனைவியை காப்பாற்றி ஒப்படைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் தான் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்ததே.
தகவல் கிடைத்த உடனே ஆஃபீஸிலிருந்து நேரே மருத்துவமனைக்கு வெங்கடாசலம் வந்து சேர்ந்தார்.
சம்பந்தி என்னாச்சு? கரிசனையாய் கேட்டார்.
வெங்கிக்கு சம்மந்தி அம்மாவை பிடிக்காது தான், அதற்காக “உன் ஆணவத்திற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று இரக்கமற்று யோசிக்கும் ராட்சச குணம் அவருக்கு இல்லை. இகட்டான நேரத்தில் நேசக்கரம் நீட்டுவது தானே மானுடப் பண்பு.
சம்மந்தி ஒன்னும் ஆகாது கவலைப்படாதீங்க! டாக்டர் ராமசந்திரன் ட்ரீட்மென்ட் கொடுத்தால் கன்பாரம் பேஷன்ட் ஸேஃப். அவ்வளவு கைராசியான டாக்டர். நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட டாக்டர். நீங்க தைரியமா இருங்க. வேணுவின் கரம் பற்றி ஆறுதல் கூறினார்.
நேத்ராக்கு விஷயத்தை சொல்லலையா? மருமகன் முகம் பார்த்துக் கொண்டே தனது மொபைலை கையில் எடுத்தார்.
இல்லை அவளுக்கு சொல்ல வேண்டாம்! ரொம்ப பயந்துடுவா.. அம்மா கண் விழித்ததும் சொல்லிக்கலாம் மாமனாரிடம் மறுப்பாய் சொன்னான்.
இல்லை அது தப்பு…வீட்டு மருமகள், அவளுக்கு சொல்லிடனும். அதுதான் முறை, என்ற வெங்கி மகளுக்கு அழைத்து தகவல் சொன்னார்.
அரை மணி நேரத்தில் நேத்ராவும் வேதமும் வாரி சுருட்டி கொண்டு ஓடி வந்தனர்.
ஐ சி யூ வில் படுத்திருக்கும் மாமியாரைக் கண்டு அழுகை முட்டியது நேத்ராவுக்கு. பளிச்சென்று உடை உடுத்தி படோபடமாய் நடமாடும் மாமியார் உணர்வின்றி படுத்திருப்பது அவள் நெஞ்சை பிசைந்தது.
ஆயிரம் வருத்தம் அவர் மீது உண்டு தான். அதற்காக அவர் நிலையை எண்ணி குரூரமாய் ரசிக்கும் குணம் அவளுக்கு இல்லை.
பூஞ்சை மனம் கொண்டவளுக்கு ஐசியூவில் இருக்கும் மாமியாருக்கு என்ன ஆகுமோ என்ற பதட்டத்தில் உடல் நடுங்கியது. கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
நடுங்கும் மனையாளை தன் தோளில் சாய்த்துக் கொண்டவன், இதுக்கு தான் அவ வரவேண்டாம்னு சொன்னேன்.விஷ்ணு மாமனாரை முறைத்தான்.
மூளையில் எந்த பாதிப்பும் இல்லை,உயிருக்கு ஆபத்தில்லை, அதிர்ச்சியால் உண்டான மயக்கம் தான். என்று மருத்துவர் கூறவே…அனைவரும் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
நேத்ரா வா கேன்டீனுக்கு போகலாம்! என்று அவள் கரம் பற்றி அழைத்து வந்த விஷ்ணு காபி வாங்கி குடிக்க வைத்தான்.
நேத்ரா அம்மாக்கு ஒன்னும் இல்லை.டாக்டரே பயமில்லைன்னு சொல்லிட்டார். கலவரமான அவள் முகம் கண்டு ஆறுதல் சொன்னான்.
மற்றவர்களுக்கு ஃப்ளாஸ்க்கில் காபி வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள்.
ஹாஸ்பிடல் சூழல் குழந்தைக்கு பிடிக்காமல் போக அழுது கொண்டே இருந்தான்.
வேதம் பேரனை எவ்வளவு சமாதானம் செய்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.
குழந்தையை வாங்கி தோளில் போட்டு தட்டிக் கொண்டே நேத்ரா நீங்க கிளம்புங்க என்றான் விஷ்ணு.
இல்லங்க…நாங்க இங்கேயே…
ஒன்னும் வேண்டாம்!குழந்தை அழறான் பாரு. அத்தை கிளம்புங்க! குழந்தையை வேதத்திடம் கொடுத்தான்.
கைக்குழந்தையை வைத்துக்கொண்டு ஏன் வந்தீங்க?குழந்தைக்கு இன்பெக்சன் ஆகிட போகுது. டியூட்டி டாக்டர் பார்த்தால் எங்களை திட்டுவாங்க. நர்ஸ் சிடு சிடுத்தார்.
நேத்ரா கிளம்பு!அம்மா கண் விழித்த பிறகு வந்து பாரு. மனைவியை கிளம்ப சொல்லி துரிதப்படுத்தினான்.
இல்லை தம்பி… சம்மந்தி அம்மா இப்படி இருக்கும்போது… வேதம் மிகவும் தயங்கினார்.
என்ன பேச்சு பேசுறீங்க? குழந்தையை வச்சிக்கிட்டு கொசுக்கடியில் இங்கே இருக்க முடியுமா? அன்னம் அதட்டினார்.
யாராவது ஒருத்தர் தான் அட்டெண்டர் இருக்கணுமாம் நர்ஸ் சொல்லிட்டாங்க. நீங்க கிளம்புங்க என்றார் வேணு.
நைட் டிபன் கொடுத்து அனுப்புறேன் என்றார் வேதம்.
இல்லத்தை, அப்பாவும் பாட்டியும் இப்போ வீட்டுக்கு கிளம்பிடுவாங்க.
என் ஒரு ஆளுக்கு என்ன? நான் ஹோட்டலில் சாப்பிட்டுக்கிறேன். நீங்க சிரமப்பட வேண்டாம். என்று அனைவரையும் அனுப்பி வைத்தான் விஷ்ணு.
“——————–”
நள்ளிரவில் கண் விழித்த ஜோதி வலியில் அனத்த..மருத்துவர் பரிசோதித்து பெயின் கில்லர் கொடுத்து தூங்க வைத்து விட்டுப் போனார்.
மருந்தின் வீரியத்தில் அயர்ந்து உறங்கி காலை 8 மணி வாக்கில் கண் விழித்தவர் சுற்றிலும் பார்வையை சுழற்றினார்.
கை காலில் கடுமையான வலி. தலையில் வின் என்று வலி தெறித்தது.தலையில் பதினாறு தையல் போடப்பட்டிருந்தது.தலைபாரம் தாளாமல் கையால் தலையை தொட முயன்று… கையில் டிரிப்ஸ் இறங்கவே,முனகிக் கொண்டிருந்தார்.
நர்ஸ் போய் மருத்துவரை அழைத்து வந்தார்.
ஜோதியை பரிசோதித்த மருத்துவர் அவரிடம் பேச்சு கொடுத்தார்.
உங்களுக்கு என்ன ஆச்சு ஞாபகம் இருக்கா? BP பரிசோதித்துக் கொண்டே இயல்பு போல் விசாரித்தார்.
ஏன் ஞாபகம் இல்லாம? நேற்று நடந்தது ஒன்று விடாமல் கில்லியாக சொல்லி முடித்தார்.
“————–”
விஷ்ணுவை அழைத்த மருத்துவர் பேஷன்ட் நல்லா இருக்காங்க. 12 மணிக்கு மேல் நார்மல் வார்டுக்கு ஷிப்ட் பண்ணிடலாம் என்றார்.
தாய்க்கு அடிபட்ட செய்தி கேட்டு இரவோடு இரவாக பெங்களூருவில் இருந்து அடித்து பிடித்து வந்து சேர்ந்தாள் வினிதா.
சென்னையில் மருத்துவம் படிக்கும் அஸ்விதாவும் அலறி அழுது ஓடி வந்தாள்.
மாமியார் கண்விழித்த செய்தி கேட்டு பூஜை அறையில் விளக்கேற்றி இறைவனுக்கு நன்றி சொன்னாள் நேத்ரா.
மாமனாருக்கு அழைத்து ஹோட்டலில் உணவு வாங்க வேண்டாம் நாங்க லஞ்ச் செய்து கொண்டு வருகிறோம் என்று சொல்லி இருந்தாள்.
நாத்தனார்கள் வேறு மருத்துவமனையில் இருப்பதால் அனைவருக்குமாய் பெரிய கேரியரில் கொண்டு போக வேண்டும் என்று அன்னையை தொணத்தி எடுத்தாள்.
பிறந்த வீட்டு மனிதர்கள் மீது மகள் காட்டும் அக்கறையை கண்டு பெருமையாய் சிரித்தார் வேதம்.
“——————”
மகள்கள் இருவரும் தாயின் தலைமாட்டில் இருபுறமும் அமர்ந்திருந்தனர். இரு மகள்கள் கண்ணிலும் கண்ணீர் வெள்ளம்.
தங்கைகளுக்கும்,தாய்க்கும் ஜூஸ் வாங்கி வந்தான் விஷ்ணு.
வேணு மனைவியின் எதிரில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். இப்போதுதான் அவருக்கு நிம்மதியாக இருந்தது. நடுத்தர வயதில் துணையை இழப்பதை விடவும் கொடுமை இந்த உலகில் எதுவும் இல்லை என்பது அவருக்கு அனுபவத்தில் தெரியும்.
அம்ம்மா…தாயின் கரம் பற்றி விம்மினாள் வினிதா.
அம்மா, செய்தி கேட்டு துடிச்சு போயிட்டேன் தெரியுமா?தேம்பி அழுதாள் அஸ்விதா.
அம்மாக்கு ஒன்னும் இல்லை. உங்களையெல்லாம் விட்டுட்டு போயிடுவேனா? மகள்கள் தரம் பற்றி தைரியம் சொன்னார்.
ஆமாம் நான் பெத்த பொண்ணுங்க நீங்க பதறி அடிச்சு ஓடி வந்து இருக்கீங்க. இந்த வீட்டுக்கு வாழ வந்த தேவதையை காணும்?
நேத்ரா நேத்தே வந்தா. நீங்க ஐசியூவில் இருந்தீங்க! குழந்தையை வச்சிக்கிட்டு இங்கே வேண்டாம் என்று நாங்க தான் அனுப்பிட்டோம்.விஷ்ணு பொறுமையாய் சொன்னான்.
சார் என்ற குரலில் விஷ்ணு வாயிலை நோக்க… அவனிடம் பயிற்சி பெறும் ஜூனியர் மூவர் வந்திருந்தனர்.
வாங்கி வந்திருந்த பழம், ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டு ஜோதியை நலம் விசாரித்து விட்டு வேணுமிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
அவ அப்படியே அக்கறையா மாமியாரை பார்க்க வந்துட்டாலும்… நான் இதை நம்பனுமா ?அவளுக்கு இப்ப சந்தோஷமா இருக்குமே? ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடியிருப்பாளே?
இருக்கும் இடம் உணர்ந்து நாகரிகமாய் பேசாமல் நேத்ரா தான் அவரை கீழே தள்ளிவிட்டது போல் கரித்து கொட்டினார்.
தெரியாம பேசாதீங்க.அவங்க அம்மா, அப்பா கூட வந்தாங்க. மூணு மணி நேரத்துக்கு மேல் ஹாஸ்பிடலில் இருந்தாங்க. குழந்தைக்கு இன்பெக்சன் ஆகிடப்போதுன்னு நான் தான் அனுப்பி வைத்தேன். பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
ஊர் உலகத்தில் இல்லாத குழந்தை பெற்று வைத்திருக்கா.இன்ஃபெக்சன் ஆகிடுமாம், இன்ஃபெக்சன். முகத்தை முறுக்கி கொண்டார்.
அவரது தேள் கொடுக்கு நாக்கில் இருந்து உதிர்ந்த கொடும் நஞ்சு சொற்களை கேட்டவன் கொதித்துப் போனான்.
அற்ப பதறே… என்பது போல் கோபமாய் தாயை கண்டான்.
அவ ஆத்தா அப்பனுக்கு நான் படுக்கையில் கிடக்கிறது கொண்டாட்டமா இருக்குமே? ஜோதி சம்பந்திகளை வறுத்து தீர்த்தார்.
ம்மா என்ன பேசுற நீ? நீ எல்லாம் திருந்தவே மாட்டியா… வினிதா தாயை அதட்டினாள்.
ஜோதியின் குத்தல் மொழியும் விஷ்ணுவின் பொறுமையும் கண்டு வந்திருந்த ஜூனியர் நாசுக்காய் விடை பெற்று கிளம்பினர்.
மனைவியிடம் வந்த வேணு இப்போ உனக்கு என்ன பிரச்சனை? நேத்ரா வந்துச்சு. உன் குணம் தெரிந்துதான் அந்த பொண்ணு இங்கேயே இருக்கேன்னு சொல்லுச்சு. நாங்க தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வச்சோம்.
ப்பா எத்தனை வாய் சப்போர்ட் பேசுது! வெறுப்புடன் கணவனை நோக்கினார் ஜோதி.
இந்த நிலையிலுமா உன் புத்தி மாறல? எல்லாருக்கும் லஞ்ச் கொண்டு வரேன்னு இப்போ கூட மருமகள் அவ்வளவு அக்கறையா பேசுச்சு.புயலை அடக்கிய அமைதியுடன் பேசினார்.
யாருக்கு வேணும் அவ வீட்டு சோறு?அவ கையில் சோறு சாப்பிடறதை விட விஷத்தை சாப்பிடலாம்.
அவ எதுக்கு என்னை பார்க்க வரப்போறா? ஏன் சாகலைன்னு பார்க்க வராளா ?
என்ன கேரக்டர் நீங்க? வந்தாலும் பேசுவீங்க,வரலைன்னாலும் பேசுவீங்க… அப்படித்தானே?
உங்களுக்கு எந்த நிலையிலும் புத்தி வராதா ?.வந்திருந்த ஜூனியர் எல்லாம் கேவலமா பார்த்துட்டு போறான். உங்களுக்கு கௌரவம் அசிங்கம் எல்லாம் தெரிந்தால் தானே..? கோபமாய் கத்திவிட்டு வெளியே வந்தான் விஷ்ணு.
இவளுக்கு வாயில் அடிபட்டு பேச முடியாமல் இருந்திருக்கலாம் என்று மனதார எண்ணினார் வேணு.
இந்த நிலையில் என்ன பேச என்று மகள்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்குமே தாயின் பேச்சு பிடிக்கவில்லை.
ரிசப்ஷனில் தலையை பற்றி கொண்டு அமர்ந்தவனை போன் அழைத்தது.
என்னங்க நீங்க எங்கே இருக்கீங்க? அத்தைக்கு இளநீர் கொடுக்கலாமா? அம்மா இளநீர் எடுத்துட்டு போகலாம்னு சொல்றாங்க. லஞ்ச் ரெடி பண்ணிட்டோம். இன்னும் கால் மணி நேரத்தில் வந்து விடுவோம்.
அந்த அம்மாக்கு விஷத்தை கொண்டு வந்து கொடு!சுள் என்று எரிந்து விழுந்தான்.
என்னங்க ஏதாவது ப்ராப்ளமா? பயத்துடன் எச்சில் விழுங்கினாள்.
யாரும் இங்கே வர வேண்டாம்.
இல்லை…சமைத்து பேக் பண்ணிட்டோம். அவள் பயந்து பயந்து கூற…
சமைத்ததை நாய்க்கு போடுங்க! என்றான் சலிப்புடன்.
என்னங்க…
ஏய் சொன்னதை செய்! இங்கே யாரும் வரக்கூடாது.
என்னங்க ஆச்சு?
தொண தொணன்னு உயிரை வாங்காம போனை வைடி! எரிந்து விழுந்தவன் காரை முடுக்கி அதி வேகமாய் பறந்தான்.
error: Content is protected !!