Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 10

    நாட்கள் பந்தையமாக ஓட அதில் நாட்கள்கள் எல்லாம் கலந்து கொண்டு வேகமாக ஓட தொடங்கியிருந்தது.

இன்றோடு நந்தினி ஊட்டிக்கு வந்து ஒரு மாதம் காலம் ஆனது. ஜீவா அவளை விட்டுவிட்டு ஒருவாரத்தில் கோவைக்கு சென்று கல்லூரியில் சேர்ந்து விட்டான்…

மரகதத்திற்கு எல்லா உதவிகளையும் முன்னின்று செய்தாள்.ஜான்வியையும் கவனிக்க தொடங்கி இருந்தாள்..



Advertisement

அவளது அம்மா என்ற அழைப்பில் தாய்மை அடையா விட்டாலும் அவள் தாய்மை அடைந்தது போல் உணர்ந்தாள்…

கேம்ப் சென்று வந்த அடுத்த நாளிலேயே கார்த்திக் வேலைக்கு திரும்ப அந்த நாள் முழுதும் அவன் பிசியாக இருந்ததால் நந்தினி இல்லாதது அவனுக்கு அது பெரிதாக தெரியவில்லை .அதன் பிறகு வந்த நாட்களே அவனது மூலைக்கு நந்தினி இல்லாதது உரைக்க யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருந்தான்.

தன்னிடம் கேட்காமல் அவளை எங்கே அனுப்பி வைத்தனர். இன்றுடன் தான் ஊருக்கு வந்தே ஒரு மாத காலம் முடிய போகுதே இன்னும் அவள் வேலைக்கு வர வில்லை.‌அவளுக்கு ஏதாவது ஆபத்து நேர்திருக்குமோ அவளுக்கு என்ன ஆயிருக்கும் எதுவாக இருந்தாலும் அவர் எனக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருப்பாரே இதுநாள் வரை எனக்கு எந்த அழைப்பும் அவரிடமிருந்து வரவில்லையே . இது சரியில்லை நானே அவருக்கு போன் பண்ணி கேக்குறேன் என்று போன் போட போக அதற்குள் அவனது கேபின் கதவை தட்ட உள்ள வாங்க என்று கூறி மொபைலையே சீரியசாக பார்த்துக் கொண்டு இருக்க

Advertisement

என்ன நான் வந்தது கூட தெரியாம ஃபோனையே பார்த்துட்டு இருக்க என்ற குரல் வர உடனே தலையை அந்த குரலுக்கு சொந்த காரையை பார்த்த கார்த்திக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றது போல் இருந்தது.

Advertisement

உள்ள வா ராஜிவ் ஏன் வெளியவே நிக்கிற என்க அவனும் உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தான்..

என்னடா நான் உள்ள வரது கூட தெரியாம ஃபோன்ன பாத்துட்டு இருக்க என்ன விஷயம் எனி குட் நீயூஸ் என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல டா சீஃப் டாக்டர் கால் பண்றேன்னு சொன்னாரு அதான் பாத்திட்டு இருந்தேன் என்றான்..

எப்போ டா உன் வொர்க் முடிச்சுட்டு ஊருக்கு வந்த என்று ராஜிவ் கேட்க ஒன் மந்த் இருக்கும் டா இங்க வந்தோன்ன உன்ன பாக்கனும்னு நினைச்சேன் ஆனா இங்கே அதிகமான வேலை இருந்ததுனால‌ என்னால எங்கேயும் வர முடியல டா என்றான்..

Advertisement

சரி கார்த்திக் நீ உன்னோட வேலைய பாரு என்று விட்டு ராஜிவ் வெளியே செல்ல எத்தனிக்க அதே நேரம் உள்ளே நுழைந்தான் வெங்கட்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு ராஜிவ் வெளியவும் வெங்கட் உள்ளேயும் பாதை அமைந்தது..

 

[the_ad id=”6605″]

 

யாரு கார்த்திக் அது என்று கேட்டபடி இருக்கையில் அமர அவன் பேர் ராஜிவ் என்னோட கசின் என்றான்..

அதன் பின் இருவரும் சேர்ந்து கேண்டின் சென்று காஃபி குடித்தனர்.

அதேநேரம் ராஜிவ் கீர்த்தியை அழைத்துக்கொண்டு கேண்டின் வந்தான்..

இருவரும் அவர்களுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து எதையோ தீவிரமாக பேசினர்..

தீடிரென்று கீர்த்தி அழுக அவளது அழுகையை ராஜிவ் கட்டு படுத்தி அவளின் பக்கத்தில் உட்கார்ந்து அவளை சமாதானம் படுத்தினான்..

அவளும் சிறிது நேரத்திலே அழுகையை நிறுத்தி விட்டு அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்..

இதையெல்லாம் பார்த்த‌ வெங்கட்க்கு மனது ஒருமாதிரியாக இருந்தது…

நந்தினி குழந்தையை கவனிப்பதிலும் மரகத்தத்தை பார்த்துக் கொள்வதிலும் நேரத்தை அதிக படியாக‌ செலவழித்தாள்.

ஜான்வி தூங்கிக் கொண்டு இருந்த நேரம் பக்கத்தில் இருந்த புத்தக அறைக்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கலாம் என்று செல்ல ..

அறைக்குள் சென்றவள் அங்கே சுமி எதையோ தீவிரமாக தேடிக் கொண்டு இருக்க சுமியை பார்த்த நந்தினி எதுக்கு தேவையில்லாத வம்பு என்று திரும்பி செல்ல பார்க்க ஆனால் அவள் மனமோ அவளுக்கு உதவி என்று எடுத்துரைக்க வெளியே செல்ல திரும்பியவள் சுமிக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவள் புறம் சென்றாள்..

சுமித்ரா மேடம் என்று மென்மையாக அளிக்க அவள் கூறியது சுமியின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.‌ அவள் பாட்டிற்கு தேடிக்கொண்டே இருந்தாள்…

மீண்டும் ஒருமுறை சுமித்ராவை அழைக்க அந்த முறை அவள் திரும்பி பார்த்து என்ன வேணும் நந்தினி எதுக்கு இப்போ என்ன கூப்பிட்ட என்று கேட்டவாறே தேடுதலில் ஈடுபட…

மேடம் நீங்க ரொம்ப நேரமா எதையோ தீவிரமா தேடிட்டு இருக்கீங்க அதான் நீங்க என்ன தேடுறீங்கன்னு சொன்னா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன் என்றே கூற அவளை ஒரு முறை பார்த்தவள் வேணாம் நானே பாத்துக்கிறேன் என்றாள்..

இல்ல மேடம் நானும் ஹெல்ப் பண்றேன்னே என்க நான் தான் வேண்டாம்னு சொல்றேன் ல உன் வேலைய பாத்துட்டு போ என்று எறிந்து விழ அவள் எதுவும் கூறாமல் திரும்பி போக பார்க்க ஏய் நில்லு நீ எதுக்கு இந்த ரூமுக்கு வந்த என்று புருவத்தை உயர்த்த அவளோ இல்ல மேடம் ஜானு குட்டி தூங்குறா அதான் எதாவது புக் எடுத்து படிக்கிலாம்னு வந்தேன் அப்போ தான் நீங்க எதையோ தேடிட்டு இருக்கிறத பாத்தேன் அதான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு என்று சொல்லிட

எந்த புக் வேணுமோ அத எடுத்துட்டு போ அந்த குட்டி சாத்தான் பேர என் முன்னாடி சொல்லாத சரியா என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..

இதை அனைத்தையும் வெளியே இருந்து யாரும் பார்க்காத இடத்தில் ஒளிந்து கொண்டு உதய் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சை வெளியே விட்டு நகர்ந்தான்…

நந்தினி சிறு நிமிடத்திலே ஒரு புத்தகத்தை எடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்…

 

[the_ad id=”6605″]

 

அந்த புத்தகத்தில் நடுப்பகுதியில் இருந்த புகைப்படம் ஒன்று வெளியே எட்டி பார்த்தது..அதிலே ஆண்களுக்கே உரிய உடர்கட்டுடன் அடுத்தவர்களை மயக்கம் விதமாக சிரித்துக் கொண்டு இருந்தான்…

அதை கவனிக்காமல் அந்த புத்தகத்தை எடுத்து படிக்க துவங்கினாள்.‌சிறிது நேரத்திலே ஜானு எழுந்து கொள்ள அம்மா என்று கூறி நந்தினியை அணைத்துக் கொண்டாள்…

அதனை கண்ட சுமி வேகமாக அறைக்குள் வந்து அவளை கீழே தள்ளி விட்டாள்..

எல்லாம் அப்பன போலவே பண்ணுது என்று ஆத்திரத்தில் கீழே விழுந்த ஜான்வியை அடிக்க போக அதனை தடுத்து ஜான்வியை தூக்கி எதாவது அடிப்பட்டிருக்கிறதா என்று பார்க்க தொடங்கினாள் நந்தினி..

நந்தினி நீ உன் வேலைய பாத்துட்டு போ என்று அவளையும் அடித்து தள்ளி விட கீழே விழ போனவளை உதய் தாங்கினான்.

அவளை விலக்கி பக்கத்தில் நிற்க்க வைத்தவன் வேகமாக சுமித்ராவை நோக்கி சென்று அவளை இழுத்து கண்ணத்தில் பளார் என்று அடித்தான்.

உனக்கு எத்தன தடவ சொல்றது என்னோட பொண்ண காயபடுத்தறது என்ன நீ உயிரோட கொல்ற மாதிரின்னு உனக்கு சொன்னா புரியாதா என்று கத்திவிட்டு அப்பா அப்பா என்று அழுகும் குழந்தையை கையில் ஏந்தியவன் இது தான் லாஸ்டா இருக்கனும் இன்னொரு தடவ ஜான்விய அடிக்கிறத பாத்தேன் அவ்வுளவு தான் என்று மிரட்டி விட்டு நந்தினியின் கையை பிடித்து அவளையும் அவனுடன் அழைத்துச் சென்றான்..

மூவரும் லைப்ரரி அறைக்கு வர..,,ஜான்வியை நந்தினியின் கையில் ஒப்படைத்து விட்டு வேகமாக அவளது அறைக்கு சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்தான்..

அப்பா என்று நந்தினியின் மடியில் இருந்து தாவி உதய்யை கட்டிக்கொள்ள அவளை தூக்கியவன் குட்டிமா ரொம்ப தைரியமான பொண்ணு தான நீங்க ஒன்னும் நந்தினி அம்மா மாதிரி அழுதுகிட்டு இருக்க மாட்டிங்கள என்று கேட்க அப்போதும் ஜான்வி அழுதுகொண்டே இருக்க எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிக்க..

ஜானு குட்டி நீங்க நல்ல பிள்ளை தான இப்போ நீங்க அழுகை நிறுத்தினீங்கனா நான் இந்த சாக்லேட் தருவேன்னா என்று சொல்லிட உடனே ஜான்வி அழுகையை நிறுத்தி சிரிக்க அவளுக்கு நந்தினி சாக்லேட்டை ஊட்டி விட்டு கண்ணத்தில் முத்தமிட்டாள்..

அதன் பிறகு அவளுக்கு அடிப்பட்ட இடத்தில் மருந்தை தடவ அந்த குழந்தையோ அம்மா அம்மா என்று நந்தினியை காட்டி சொல்ல..

இருவரும் எதுவும் புரியாமல் முழிக்க..

ஜான்வியே உதய்யை இழுத்து அன்னை பக்கத்தில் வந்து அவளது கால் விரலை காட்டிட அப்போது தான் இருவருமே கவனித்தனர். அங்கு நந்தினியின் தோல் பிந்து அதில் இரத்தம் வந்துகொண்டிருந்தது .

நந்தினி கால காட்டு என்று கடுமையான குரலில் சொல்லிட அவளோ இல்ல சார் வேணாம் நானே போட்டுக்கிறேன் என்றாள்…

அப்பா நீ போது அம்மா போதாது என்று மழலை குரலில் சொல்ல இங்க பாரு ஜான்வி குட்டி சொல்றால ஒழுங்கா கால்ல காட்டு மருந்து போட்டுவிட்டுட்டு போறேன் என்று இறுக்கமாக குரலில் கூறிட அவளும் மெதுவாக கால்லை காட்டினாள்..

அவளது பாதங்களை மென்மையாக பிடித்து அவள் காலில் வழிந்த இரத்தத்தை துடைத்து மருந்திட்டான்.

அந்த நிகழ்வை மருகதம் பார்த்து இவர்களுக்கு திருமணம் நடந்தால் இவர்கள் வாழ்வு நன்முறையில் செல்லும் என்று தோன்றியது..

அதே நேரம் இதனை கண்ட மஹாலிங்கம் மனதில் சுமியின் வாழ்வை கெடுக்க வந்துருக்கா இந்த பொண்ணு இவள சீக்கிரமா இந்த வீட்ட விட்டு அனுப்பனும் நினைத்துக் கொண்டார்…

சுமியோ வேகமாக வேலட்டை எடுத்து விட்டு கார் கீயை இறுக்கிய படி வேகமாக அறையில் இருந்து வந்தவள் அதே காரை எடுத்துக் கொண்டு வேகமாக எங்கோ சென்றாள்.

உதய் ஜான்வியை அவனது அறைக்கு அழைத்து செல்ல அவளோ நந்தினியின் கையை இருக்கமாக பிடித்திருந்தாள்..

 

[the_ad id=”6605″]

 

அவளது கையை நந்தினி உறுவ முயல‌ ஆனால் அவளால் முடியவில்லை..

அதன் பின் உதய் குழந்தையை நந்தினியிடமே கொடுத்து விட்டு அவளை பார்த்து முறைத்து விட்டு அவனது அறைக்கு சென்று படார் என்று சாற்றிக் கொண்டான்..

கட்டில் ஜான்வியை படுக்க வைத்தவள் அவளுக்கு பக்கத்தில்லே அமர்ந்து கொண்டாள்…

காரை வேகமாக எடுத்துச் சென்றவள் நேராக பப்புக்கு வண்டியை விட்டாள்..

தனக்கு கோபம் தீரும் வரை குடித்தவள் உதய்யின் ஞாபகம் வர தல்லாடிய படியே இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்…

அடுத்தநாள் விடியலுக்காக கங்காவும் சூர்யாவும் காத்திருந்தனர்…

தேடல் தொடரும்

Stay tuned…✌️✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!