Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 20

 

   உதய் அழைத்த சிறு நிமிடத்திலே கமிஷ்னர் சரவணன் வந்திருந்தான். அவனுடனே ஆதியும் வருகை தந்திருந்தான்.

இருவரையும் கண்ட உதய் வாங்க சார் என்று உள்ளே அழைத்து வந்தான்.

சொல்லுங்க மிஸ்டர் உதய் அந்த பொண்ணு பேரு அப்புறம் அவுங்க டிடைல்ஸ் கொடுங்க என்று சரவணன் கேட்க



Advertisement

ஆதியோ அங்கிருந்த அனைத்து பெண்களிடமும் கேள்விக் கேட்டுக்கொண்டு இருந்தான்..

உதய் உடனே அவனது மொபைலில் இருந்து அவளது புகைப்படத்தை எடுத்து காட்டி இது தான் அந்த பொண்ணு பேரு ஸ்ருதிக்கா இந்த பொண்ணு தான் ஒரு நாளைக்கு முன்னாடி காணாம பொய்ட்டாங்க என்று சொல்ல

அதை வாங்கிய சரவணன் அந்த புகைப்படத்தை அவனது மொபைலிற்கு ஷேர் செய்து கொண்டான்..

Advertisement

இது எப்போ எடுத்தது என்று ஆதி சரவணன் கையில் இருந்த உதயின் மொபைல் வாங்கி கேட்க..

Advertisement

இது ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி சார் கிருஷ்ண ஜெயந்திக்கு எடுத்தது என்றான்..

[the_ad id=”6605″]

சரி என்ற ஆதி உதயிடம் கொடுக்க அதை வாங்கியவன் அந்த பொண்ண எப்படியாவது நீங்க தான் கண்டு பிடிக்கணும் என்றிட..

Advertisement

கண்டிப்பா உதய் நீங்க ஒரு கம்ப்ளெயிண்ட் மட்டும் குடுங்க இத நாங்க பாத்துக்கிறோம் என்று சரவணன் கூற..

இல்ல சரவணன் இத நீங்க அன்ஒஃப்ஷீயலா அந்த பொண்ண தேடி கண்டு பிடிங்க. இந்த விஷியம் வெளிய தெரிஞ்சா அப்புறம் இதுனால  அந்த பொண்ணுக்கும் இங்க இருக்கிற மத்தவுங்களுக்கும் தான் பிரச்சனை வரும் என்று உதய் சொல்ல..

ஆதிக்கும் இது சரியாகவே பட அவன் அதற்கு ஒத்துக் கொள்ள சரவணனும் ஆதியும் அந்த பொண்ணின் அறை கேட்டு அவளது அறைக்கு சென்றனர்…

சரவணன் அந்த அறையையே பார்வை இட ஆதி தான் உதயிடம் வந்து இந்த பொண்ணு எப்போ இங்க வந்து சேர்ந்தாங்க என்றிட…

ஒரு வருஷத்துக்கு முன்னாடி சார் அவுங்க அம்மா அப்பா ஒரு ஆக்சிடன்ட்ல இறந்துட்டாங்க அப்புறம் நாங்க தான் ஸ்ருதிக்காவுக்கு அடைக்கலம் கொடுத்தோம் என்றான்..

ஹோ என்றவன் அவுங்க பேரண்ட்ஸ் பத்தி எதாவது தெரியுமா உதய் என்றிட..

இல்ல சார் அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் பத்தி எதுவும் தெரியாது . அந்த பொண்ணு இந்த இடத்துக்கு வரும்போது அவளுக்கு பழசுலாம் ஞாபகத்துலயே இல்ல சார் என்று முடித்தான்…

அதற்குள் சரவணன் அந்த அறையை பார்த்துவிட்டு வெளியே வர உதயுடன் சேர்ந்து இருவரும் வார்டனிடம் பேசிவிட்டு காவல் நிலையம்  சென்றனர்…

உதய் அங்கேயே சிறிது நேரம் இருந்துவிட்டு இரண்டு பாடி காட்ஸை அவர்களுக்கு துணையாக நியமித்து விட்டு சென்றான்…

  வீட்டிற்கு வந்த போது அங்கே சுமியின் மடியில் நந்தினி சிறிது பயத்துடனே படுத்திருந்தாள் அவளது அறையில்…

இதனை கண்ட உதய் அவளது அறையினுள் நுழைந்து சுமிக்கு மட்டும் கேட்கும் படி நந்தினிக்கு என்ன ஆச்சி என்று கேட்க..

சுமி உதய்யை முறைத்து பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்..

இவ என்ன இப்படி முகத்த தூக்கிக்கிட்டு வச்சிருக்கா அப்படி என்ன நாம தப்பான கேள்வியவா கேட்டுட்டோம் என்று மனதில் நினைத்து விட்டு அவளை நோக்க…

என்ன மிஸ்டர் உதய் என்னையே பாத்துகிட்டு இருக்க ஃப்ர்ஸ்ட் இங்கிருந்து கிளம்பிடு நான் உன் மேல செம்ம கோபத்துல இருக்கேன் பாத்துக்கோ என்று சீற…

அப்படி நான் என்ன மா உன்ன பண்ணேன் இவளுக்கு என்ன ஆச்சின்னு தான கேட்டேன் அதுக்கு போய் இப்படி சீறுற என்றே சிறு பிள்ளை போல் கூற…

அதை கண்டு சிரிப்பு வந்தாலும் ஏன் டா உனக்கு தெரியாதா நந்தினி சின்ன விஷயம் நாளே பயந்துருவான்னு என்று அவனை முறைக்க..

எனக்கு தான் இது எப்பவோ தெரியுமே நான் கேட்ட கேள்விக்கு இது தான் பதிலா சுமி என்றே அவளை பார்க்க…

இவ இப்படி இருக்கிறது நீ தான் டா காரணம் நீ போட்ட சத்தத்துல தான் டா அவ‌ பயந்து போய்ட்டா அவள சமாதானம் பண்ணி இப்போ தான் தூங்க வச்சேன். இதுல அந்த பிசாசு வேற அம்மா அம்மான்னு நந்தினிய பாத்து அழ இப்போ தான் அத சுமதி கூட்டிட்டு போய் இருக்கா என்று கோபத்தில் ஆரம்பித்து வெறுப்பில் முடித்தாள் சுமி…

அவ்வப்போதே அவனுக்கு தான் செய்த தவறு புரிய வர சரி நீ கிளம்பு சுமி நான் பாத்துக்கிறேன் என்று கூறிட

என்னமோ பண்ணு டா என்றவள் நந்தினியின் தலையை மெத்தையில் வைத்து விட்டு  சென்றாள்…

அவள் சென்ற அடுத்த நொடி நந்தினியின் கரம் பற்றி அமர்ந்து அவளது தலையை தனது மடிக்கு மாற்றிய அடுத்த நொடி நந்தினி கிருஷ் என்று கூறி அவனது கரங்களை இருக்க பற்றிக் கொண்டு உறங்கினாள்.

அய்யோ கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கொடுமை ஜானு குழந்தையா இவ குழந்தையானே தெரியலையே என்று புலம்ப ஜானு குட்டி தான் குழந்தை கிருஷ் என்றாள் தூக்கத்தில்…

இதுக்கு மட்டும் நல்லா பதில் சொல்லு ஆனா நான் சொல்ற எந்த விஷயத்தையும் நீ கேக்குறது இல்லல என்று கூறிட…

ஆமாம் நான் கேக்க மாட்டேன் ஏன்னா ஏன்னா என்று கூறியவள் தூங்கி போனாள்…

அவளது முடியை அப்படியே கோதி விட்டவன் சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை விட்டு மறைந்தான்…

வீட்டிற்கு வந்த கங்கா அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமையாக இருக்க அவரது அக்காவை அழைத்துக்கொண்டு ஜோசியரிடம் சென்று நல்ல நாள் குறித்து விட்டு வந்தார்..

ஆனாலும் கங்காவின் மனதில் ஜோசியர் கூறிய ஒரு விடயமே அவள் மனதில் ஓட வேகமாக அவனது திருமணத்தை முடிக்க வேண்டும் முடிவு எடுத்து அந்த மாலையே சம்மந்தி வீட்டினருக்கு அழைப்பு விடுத்தார்…

சிறிது நொடியிலே ஏற்ற ஜெயந்தி ஹலோ சம்மந்தி மா எப்படி இருக்கீங்க என்க

நான் நல்லா இருக்கேன் சம்மந்தி இன்னைக்கு காலைல தான் அக்கா கூட போய் ஜோசியர் பாத்து நல்ல நாள் குறிச்சுட்டு வந்தோம் என்க

ரொம்ப சந்தோஷம் சம்மந்தி என்றவர் என்னைக்கு சம்மந்தி நாள் குறிச்சு குடுத்திருக்காங்க என்றிட

வர வெள்ளிக்கிழமை குறிச்சி குடுத்திருக்காங்க சம்மந்தி மா என்றார் கங்கா..

ஆனா சம்மந்தி அதுக்கு இன்னும் நாளு நாள் தானே இருக்கு சம்மந்தி அதுக்குள்ள எப்படி நிச்சயதார்த்தம் வைக்க முடியும் என்று சந்தேகம் எழுப்ப…

நீங்க என்னோட மருமகளா பத்திரமா மண்டபத்துக்கு கொண்டு வந்து விட்டா மட்டும் போதும் சம்மந்தி எல்லாத்தையும் இங்க நாங்க பாத்துக்கிறோம் என்றிட…

சரிங்க சம்மந்தி  அப்ப நான் எல்லா சொந்த காரங்களுக்கும் விசியத்த சொல்லிடுறேன் என்று சொல்லி போனை வைத்தார்..

இதனை கேட்ட சிவசங்கரனிற்கு கோபமாக தான் வந்தது..ஆனாலும் அமைதியாகவே இருந்தார்…

அடுத்த நாளே கங்காவின் வீட்டில் நிச்சயத்துக்கு தேவையான வேலைகள் எல்லாம் தொடங்கியது… ஜீவாவிற்கு இப்போது சொன்னால் அவனது எதாவது கிளறுபிடி செய்வான் என்றெண்ணி அவனிடம் கூட சொல்லாமல் மறைத்து வைத்தாள் கங்கா.

கீர்த்திக்கு வெங்கட் பத்தின உண்மை தெரிந்ததில் இருந்து அவனை விட்டு விலகியே இருந்தாள்.

இதனை அறிந்த வெங்கட் மட்டும் கீர்த்தியின் செயலை கண்டு புரியாமல் தவித்து போனான்.

கார்த்திக்கும் ராஜிவ்வும் இருவரும் சேர்ந்து ஊட்டிக்கு சென்று வந்தனர்.

இப்போதெல்லாம் கீர்த்தி கார்த்திக்குடன் சகஜமாக பேசத் தொடங்கி இருந்தாள். ராஜிவ் ஒரு பிராஜெக்ட் விசியத்தில் சிறிது பிசியாக இருந்தான்…

நிச்சியத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்க கங்கா ஜீவாவை அழைத்தாள்..

சொல்லுங்க அம்மா என்ன அதிசயமா எனக்கு கால் பண்ணியிருக்கீங்க இல்லன்னா சூர்யா அண்ணா நம்பர்க்கு பதிலா எனக்கு கால் பண்ணிட்டிங்களா என்ன என்று நக்கலாக கேள்வி கேட்க…

டேய் நான் உன் அம்மா டா என்கிட்ட இப்படி தான் பேசுவீயா என்று திட்ட

ஓஓஓ பார் டா உங்களுக்கு ஜீவான்னு ஒரு பையன் இருக்கிறது ஞாபகத்துல இருக்கே இதுவே ஆச்சிரயமான விசியம் தான் பா என்று கூறி சிரிக்க…

யாரு டா உனக்கு இந்த மாதிரி பேச லாம் கத்து குடுக்கிறதோ எல்லாம் அந்த சிறுக்கியா தான் இருக்கும் இப்படி அம்மா புள்ளைய பிடிச்சு விட்டு வேடிக்கை பாக்குறா என்று நந்தினியை திட்ட ஜீவாவிற்கு சுற்றென்றது.

[the_ad id=”6605″]

இங்க பாரு இப்போ எதுக்கு தேவை இல்லாம என்னோட அம்முவ திட்டுற என்று கோபப்பட்ட…

இது சண்ட பேடுவதற்கான சரியான நேரம் இல்லை என்று உணர்ந்த கங்கா சரி டா நான் எதுவும் சொல்லல நான் உனக்கு கால் பண்ணதே முக்கியமான விசியம் சொல்ல தான் கால் பண்ணேன் என்றிட…

சொல்லுங்க அதான்ன பாத்தேன் என்னடா இன்னைக்கு புதுசா இந்த பக்கம் காத்து வீசுதுன்னு என்றே நக்கலடிக்க…

அதை பொறுத்துக்கொண்ட கங்கா இங்க பாரு டா இன்னும் மூன்னு நாள்ல உங்க அண்ணனுக்கு நிச்சயம் வச்சிருக்கு தம்பியா நீ அங்க இருக்கனும் அதுனால இன்னைக்கே கிளம்பி ஊருக்கு வா என்க…

அம்மு இல்லாம நான் எங்கேயும் வர மாட்டேன் அம்மா. நீங்க அவள வர சொல்லுங்க அப்போ தான் வருவேன் இல்லன்னா நான் இல்லாமல்லே உங்க அரும புத்திரனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்று கடுகடுக்க…

நீ திருந்தவே மாட்டியா டா என்றவள் சரி அவளை கூப்பிட்டு தொலையிறேன் இரண்டு பேரும் வந்து துலைங்க என்றே அழைப்பை வைத்தாள்….

ஜீவா அடுத்த நொடியே அம்முவிற்கு அழைத்து விவரத்தை கூற அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தாள்..

அதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று உணர்வு ஏற்பட்டு சுமியை தேட அவளோ வெளியே சென்றிருந்தாள்…

அதே நேரம் உதய் அவனது அறையில் இருந்து ஜானுவுடன் வெளியே வர அவர்களை கண்ட நந்தினி அவர்களிடம் மூச்சிரைக்க ஓடி வந்தாள்…

என்னாச்சி நந்தினி எதுக்கு இப்படி ஓடி வர எதாவது பிரச்சனையா என்றிட அவளோ இல்லை சார் என்க…

அப்போ என்ன ஆச்சி என்று பதற்றமாக கேட்க சார் இப்போ தான் அப்பு கால் பண்ணான் என்று கூறி அவன் சொன்ன விசியத்த கேட்டு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார். அதான் யார் கிட்டயாவது சொல்லான்னு தோனுச்சு சுமி அக்கா இல்ல அதான் உங்க கிட்ட சொல்ல வந்தேன் என்றாள்….

சரி சொல்லு நந்தினி என்ன விஷயம் ஜீவா சொன்னான் என்றே கேட்க…

அது வந்து என்னோட சூர்யா அத்தானுக்கு வர வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் சார் என்று சொல்லி சந்தோஷ பட…

இதை கேட்ட உதய் ஹப்பா ஒரு டிக்கெட் போட்டியிலிருந்து ஔட் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்.

இதனை எதர்த்தமாக அப்போது வீட்டிற்குள் வந்த சுமி கேட்க நேர்ந்தது..இதனை கேட்டவள் வேகமாக அவளது அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டாள்….

ஆதியும் சரவணனும் அந்த பெண்ணை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவள் எப்போதும் செல்லும் வழியில் எல்லாம் சென்று ஏதோ தடயம் இருக்குமா என்றே எண்ணி பார்வை இட அவர்களுக்கு அதில் பெரிதாக ஒன்றும் பதில் கிடைக்கவில்லை…

தேடல் தொடரும்….???

????????????????????

Stay tuned….✌️✌️✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!