Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 431

சுமியின் கையில் ஒரு கடிதம் இருக்க அதை வாங்கிய உதய் படிக்க ஆரம்பித்தான்.

” மாமா நான் போனா கண்டிப்பா நந்தினி அக்காவையும் கீர்த்தி அக்காவையும் கொண்டு அவுங்க விட்டுருவாங்க மாமா. அவுங்களுக்கு வேண்டியது நான் தான் மாமா நந்தினி அக்காவும் கீர்த்தி அக்காவும் இல்ல. நான் போகலன்னா அவுங்க அவுங்க ரெண்டு பேரையும் கொன்னுடுவாங்க மாமா .எனக்கு ரொம்ப பயமா இருக்கு எப்போதும் கவி தான் பயப்படுவா ஆனா இப்போ எனக்கு பயமா இருக்கு மாமா. அக்காங்க ரெண்டு பேரையும் காப்பாத்திடுங்க மாமா நான் போறேன் ” என்று எழுதி இருந்தாள்.

இதனை படித்த உதய்க்கு கல்லில் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. யார் இதை செய்து இருப்பார்கள் என்று யோசிக்க யோசிக்க தலையே வெடிப்பது போல் இருக்க உடனே கவியிடம் சென்றான் உதய்..



Advertisement

கவியோ பயந்து ஜீவாவின் கையை இறுக பற்றி நின்றிருந்தாள்.

” கவி மா பயப்பிடமா இந்த மாமா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லனும் சரியா ” என்க

” சரி மாமா ” என்று தலையாட்டினாள்.

Advertisement

” உனக்கு எதாச்சும் தெரியுமா கவி இந்த லெட்டர பத்தி ஏன் கேக்குறேன்னா நீ தான் எப்போதும் அவ கூடவே இருப்ப ” என்று கேட்க

Advertisement

கவி அமைதியாகவே இருக்க ஜீவா அவளின் கையை இறுக்க பற்றி ” உனக்கு தெரிஞ்சத சொல்லு கவி இப்போ மூணு பேரோட உயிர் ஆபத்துல மாட்டிகிட்டு இருக்க ” என்க

” மாமா நிச்சயத்துக்கு மொத நாள் கீர்த்தி அக்கா சுஜிக்கு கால் பண்ணி இருந்தாங்க ” என்க

” கீர்த்தி எதுக்கு சுஜிக்கு கால் பண்ணா ” என்று வெங்கி யோசனையில் கேட்க

Advertisement

” தெரியல  எனக்கு ஆனா ஏதோ ஹெல்ப் கேட்டு தான் கால் பண்ணி இருந்தாங்க . பேசி முடிச்சவ என்கிட்ட வந்து நான் கீர்த்தி அக்கா காதலுக்கு ஹெல்ப் பண்ண போறேன் .இந்த விஷியத்த யார் கிட்டயும் சொல்லாதேன்னு சொல்லிட்டு எங்கேயோ வெளிய பொயிட்டு வந்தா மாமா ” என்றாள் அவளுக்கு தெரிந்ததை…

இதனை கேட்ட கார்த்திக்கிற்கு இன்று ராஜிவ் ஊரில் இல்லாதது ஏதோ தவறாக பட்டது

” ஆனா மாமா அன்னைக்கு அவ போகும் போது இருந்த மனநிலை வரும் போது இல்ல மாமா . ஃபோன்னும் கையுமாவே இருப்பா மா யாரு டின்னு கேட்டா கீர்த்தி அக்கா பேர சொல்லிடுவா அதுனால நானும் பெருசா எடுத்துக்கல .காலையில நீங்க வீட்டுக்கு வரும்போது கூட அவ ஃபோன் தான் பேசிட்டு இருந்தா ” என்ற கவி அழுகத் தொடங்கினாள்.

அவள் சொன்னதை அனைத்தையும் கேட்டவர்களுக்கு தன் பிள்ளைகள் மீது கவனத்தை செலுத்தாதே இத்தனைக்கும் காரணம்…

அவளை சமாதானப்படுத்த ஜீவா எவ்வளவு முயன்றும் அது முடியாமல் போக சூர்யா ஒரு அதட்டு அதட்டவும் அமைதியாகி போனாள்..

ஹரி கட்டிலில் அமர்ந்தபடி அந்த லெட்டரை படிக்க அது கைத் தவறி கீழே விழுந்ததால் அதை எடுக்க குமிந்த ஹரியின் கண்ணில் பட்டது அந்த செல்ஃபோன்.

அதை எடுத்தவன் ” அண்ணா கீழ ஒரு ஃபோன் இருக்கு ” என்று நீட்ட திக்பிரம்மை போல் நின்றிருந்த உதய்க்கு அது தெம்பாக இருந்தது.

அவன் அதை உயிர்பிக்க முயல‌ அது முடியாமல் போனதும் உடனே சார்ஜ் போட்டு விட்டு காத்திருந்தான்.

இதற்கிடையில் சரவணன் உதய்க்கு அழைக்க அதனை எடுத்த உதய் ” சொல்லுங்க சரவணன் “என்றான் சுரத்தே இல்லாமல்..

அவனின் குரலிலேயே தவறாக பட ” என்ன ஆச்சி உதய் எனி ப்ராப்ளம் ” என்க

” நோ ப்ராப்ளம் சரவணன். நீங்க எதுக்கு கால் பண்ணிங்க ” என்று கேட்க

” அது ஸ்ருதிக்கு நினைவு திரும்படுச்சி. அப்புறம் அவள கடத்துனது யாருனும் தெரிஞ்சிருச்சி ” என்று சரவணன் சொல்ல சுஜியின் மொபைல் ஆன் ஆனது…

” யாரு சரவணன் ஸ்ருத்தியோட இந்த நிலைம்க்கு காரணமானது ” என்று சொல்லி கேட்க

அதற்குள் டையல்ட் கால் லிஸ்ட் பார்த்தவனின் இதழ்கள் ராஜிவ் என்றது. அதே நேரம் சரவணனும் ராஜிவ் என்றான்…

இருவருக்கும் அதிர்ச்சி இருந்தாலும் இருட்டு காட்டில் வெளிச்சம் வந்தது போல் உணர்ந்தான் உதய்.

” அப்போ அது கீர்த்தி காதலிச்ச பையன் தான் இதுக்கு காரணமா ” என்று வெங்கட் கேட்க

உடனே சரவணனிடம் அனைத்தையும் கூற உடனே மொபைலை ஸ்ருத்தியிடம் கொடுத்தான்.

அப்போது கார்த்திக் ”  நாம தேட ஆரம்பிக்கலாம் அவுங்களுக்கு எதாவது ஆகுறதுக்குள்ள ” என்று துரித படுத்த அதுவும் சரியாக படவே உதய் ப்ளுடுத்தை மாட்டியவன் ஸ்ருதிக்காவுடன் பேச தொடங்கினான்..

கார்த்திக் வேகமாக ஹரியை அழைத்துக் கொண்டு தேட சென்று விட்டான்.

வெங்கட் சூர்யாவுடன் சென்றான். ஜீவா உதயுடனே இருந்தான். மஹாலிங்கமும் சிவசங்கரனும் வீட்டிலே இருந்தனர் பெண்களுக்கு துணையாக…

கார்த்திக் ராஜிவிற்கு அழைத்தவாறே காரை ஓட்ட அவன் எடுத்த பாடில்லை.

” ஸ்ருதி உன்ன கிட்னாப் பண்ணது ராஜிவா எதுக்காக உன்ன கிட்னாப் பண்ணாங்க ” என்று கேட்க

” ஆமா அண்ணா என்ன கிட்னாப் பண்ணது ராஜிவ் தான் . அவுங்க எதுக்காக என்ன கடத்துனாங்கனா ” என்று சொல்ல வரும்போதே கண்ணீர் வந்தது.

” ஸ்ருதி அழுகாத மா நீ இப்போ உண்மைய சொன்னா தான் எங்களால முணு பேத்ததோட வாழ்க்கைய காப்பாற்ற முடியும் ” என்க

அழுகையை அடக்கியவள் ” அவுங்க கடத்துனதுக்கு காரணம் பொண்ணுங்கல விக்கிரதுக்காக தான் அண்ணா . அங்க அத தான் வியாபாரமா பண்றாங்க அண்ணா. யாரும் இல்லாத அனாத பொண்ணுங்களா பாத்து கடத்தி வத்துருவாங்க அண்ணா. என்னையும் சேர்த்து கிட்டத்தட்ட முப்பது பொண்ணுங்கள அன்னைக்கு வெளிநாட்டுக்கு விக்கிரதா இருந்தாங்க அண்ணா. நான் அங்க இருந்து எப்படியோ தப்புச்சி வந்துட்டு இருக்கும் போது தான் அவுங்க ஆளுங்க என்ன லாரியை வச்சி ஏத்திட்டாங்க அண்ணா ” என்றாள் அழுகையுடன்…

இதனை கேட்ட உதய்க்கு உயிரே போனது. சரவணன் அவளின் அழுகையை அடக்கினான்.

வேகமாக ஸ்ருதி கூறிய இடத்திற்கு புறப்பட்டனர். ஸ்ருதி கூறிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாள் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆகும். அதற்குள் மூவருக்கும் எதாவது ஆகிவிட்டால் என்ன பண்ணுவது என்று வேகமெடுத்தான் காரை…

வெங்கிக்கும் கார்த்திக்கும் விவரம் சொல்லப் பட அவர்களும் அந்த இடத்திற்கு சென்றனர். சரவணனும் தன் போலிஸ் படையுடன் அங்கு சென்றான்..

அவர்களின் வியாபாரம் எப்போதும் விடியலில் தான் நடக்கும் என்பதால் அவர்கள் அந்த இடத்தை அடையும் போது சரியாக இருந்தது…

ஒவ்வொரு இடமாக அனைவரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அது போன்ற இடமாக இருக்கவும் இரண்டு இரண்டு பேராக பிரிந்து தேடினர்.

கார்த்திக்கும் ஹரியும் ஒருபுறம் தேடினர். உதயும் ஜீவாவும் மேற்கு பக்கம் போக மற்‌ற இவரும் வடக்கு பக்கம் சென்றனர்.

நடு காடு வரை வந்த அவர்களுக்கு பறவைகளின் சத்தம் நன்றாக கேட்க உதயும் ஜீவாவும் அவர்களின் ஓட்டத்தில் வேகத்தை கூட்டினர்.

அங்கு சென்று பார்த்தால் சராசரி மார்க்கெட்டிங் போல் இருந்தது..

மையான அமைதி நிலவ அதிரடியாக உள்ளே நுழைந்தனர் அனைவரும். போலிஸும் வந்துவிட அவர்களை சுற்றி ரவுண்டப் பண்ணியது..

அதன்பின் அங்கு இருந்த கடத்தப்பட்ட பெண்களை காப்பாற்றி நந்தினியையும் கீர்த்தியையும் தேடினர்..

ஆனால் அவர்கள் அங்கு வந்தது போல் எந்த ஒரு துப்புரவும் கிடைக்க வில்லை…

தீடிரென்று துப்பாக்கி சத்தம் கேட்க அந்த சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்றனர்.

அது வீடு போல் தோன்றமளிக்க அங்கு சென்றார்கள்.உள்ளே நுழைந்தவர்கள்  கண்டது என்னமோ எரிந்துக் கொண்டிருந்த ஏம குண்டத்தை தான் பக்கத்தில் திருமணம் நடக்க தேவையுற்ற பொருட்கள் எல்லாம் இருந்தது. ஆனால் தாலி மட்டும் இல்லாமல் இருந்தது..

வெங்கட்க்கு பயமாக இருந்தது எங்கே ராஜிவ் தான் கட்டிய தாலியை கலட்டி அவன் கட்டிருப்பானோ என்று…

மீண்டும் துப்பாக்கி சத்தம் வர சத்தம் வந்த அறைக்குள் நுழைந்தனர். அங்கே ராஜிவ் கையில் துப்பாக்கி இருக்க  சுஜி மயக்கத்தில் இருந்தாள்.

ராஜிவ் மெதுவாக கார்த்திக் இருக்கும் இடத்திற்கு செல்ல சரியாக அவன் காலை பிடித்து வாரி விட்டான்.

அவன் கீழே விழ போக அவனின் மண்டையில் நங்கென்ன அடித்தான் ஹரி அப்போது கைத்தவறி சுட்டான் கேட்ட சத்தத்தில் தான் இவர்கள் உள்ளே வந்தது.

ராஜிவ் மயங்கி விழுகவும் அவனை மேலும் நாலு அடி அடித்து நந்தினி எங்கே என்று கேட்டான் உதய். அதற்குள் முழுதாக மயங்கி விழுந்தான்…

கண் விழித்து பார்த்த ராஜிவ் ஒரு இருட்டு அறையில் கைகளை கட்டப் பட்ட நிலையில் இருந்தான்..

அவன் முழித்தததை அறிந்த உதய் உள்ளே வந்தான்..

அவனின் தலையை பிடித்தவன் ” எங்க டா நந்தினியும் கீர்த்தியும் அவுங்கள எங்க மறைச்சி வச்சிருக்க ” என்று கேட்க

” எனக்கு தெரியாது ” என்றான்..

” உண்மைய சொல்லுடா எங்க அவுங்க ரெண்டு பேரும் ” என்று கோபத்தின் உச்சியில் கேட்க

” எனக்கு தெரியாது ” என்றான் மீண்டும்..

அவனின் பதிலில் கோபம் கொண்ட வெங்கி அவனை அடிக்க ” சொல்லு டா ” என்றே அவனை அடிக்க

” எனக்கு தெரியாது ” என்றான்…

” உனக்கு தெரியாதுன்னா எதுக்கு சுஜி கிட்ட உங்க அக்காவையும் கீர்த்தியையும் கடத்திடன்னு சொல்லி எதுக்கு அவள இங்க வர வச்ச சொல்லு ” என்று மிரட்ட

அவன் அமைதியாக இருக்கவும் அவனின் சுண்டு விரலை வுட் கட்டரை வைத்து அவனது சுண்டு விரலை வெட்டினான் வெங்கி..

” இப்போ சொல்ல போறியா இல்ல இன்னொரு விரலையும் இலக்க போறியா ” என்று ஜீவா மிரட்டளிட

வலியில் சொல்றேன் என்று சொல்லத் தொடங்கினான்…

“அன்னைக்கு ஒருநாள் என்னத் தேடி சுஜித்ரா வந்தா கீர்த்தி தான் அனுப்பி விட்டுருந்தா. அவள பாத்ததும் அவளோட அழகுல மயங்கிட்டேன். அவள அடைய ஆசப் பட்டேன். அந்த ஆசை எனக்குள்ள காதலா உருவாச்சி அவ கிட்ட காதல சொன்னதுக்கு என்ன அடிச்சிட்டு பொய்ட்டா. அதுக்காக தான் அவளுக்கு போன் பண்ணி நீ என்ன கல்யாணம் பண்ண சம்மதிக்கலைன்னா ரெண்டு பேரையும் கடத்திடுவேன்னு பயமுறுத்துன்னேன். ஆனா நான் அந்த மாதிரி எதுவும் செயல காலைல அவளே எனக்கு கால் பண்ணி எதுக்கு என்னோட அக்காங்க ரெண்டு பேத்தையும் கடத்துனன்னு கேட்டா. நான் கடத்தலை என்றாலும் இந்த பயந்த எனக்கு சாதகமாக்கிக்க நினைச்சேன். அவளும் அக்காவுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு என் கூட வந்தா. சரியா கல்யாணம் பண்ற நேரத்துல கார்த்திக் வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டான் .ஆனா நான் அவுங்க ரெண்டு பேரையும் கடத்தல ” என்றான்…

அவன் சொல்லி முடிக்கவும் வெங்கி அவனது கட்டை விரலையும் கட் செய்தான். வலியில் ராஜிவ் துடி துடித்து போனான்…

அவனை மேலும் துடிக்க வைக்க அவனது உடம்பில் கம்பிளி பூச்சியை ஏவி விட்டு  வெளியே வந்தனர்…

” அப்போ யாரு தான் அவுங்கள கடத்துனது ” என்று சூர்யா கேட்க

” நிது ” என்று அந்த இடமே அதிரும் அளவிற்கு கத்தினான் உதய்….

மயக்கத்தில் இருந்த நந்தினி ” கிருஷ் ” என்றாள்…

தேடல் தொடரும்….

Stay tuned….✌️✌️✌️✌️✌️

Next epi dhan last epiii…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!