Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️31

அவள் மௌனியாய் நிற்பது அவனை இன்னும் கோபப்படுத்தியது.

எங்கம்மாட்ட என்ன பேசினேன்னு கேட்டேன்…? அவள் கன்னத்தை இறுக்கி பிடித்தான்.

தவறா ஒன்னும் பேசலை… திக்கி திணறினாள்.

எது…தவறா பேசலையா…? இன்னும் பிடியை இறுக்கினான்.



Advertisement

வலி உயிர் போனது… தாடை எலும்புகள் நொறுங்கிக் கொண்டிருக்கிறதோ என்று அஞ்சியவளின் கண்ணில் நீர் பெருக்கு

உன்னை யாருடி என் அம்மாட்ட பேச சொன்னது?

நீங்க என் மாமாட்ட பேசினீங்களே அது?

Advertisement

அதுவும் இதுவும் ஒன்னா…?

Advertisement

அவளுக்கு சட்டென்று பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.

அடி பைத்தித்தியக்காரி… நீ என் தேவதைன்னு சொன்னேன்…! நீ எர்ரபள்ளிக்கே மகாராணின்னு சொன்னேன்… உன்னை உயிரில் கலந்து வச்சிருக்கேன்னு சொன்னேன்… நீ மட்டும் போதும்னு சொன்னேன்! இனி உன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கும்னு சொன்னேன்! யாராலும் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாதுன்னு சொன்னேன்… என் மூச்சு உள்ளவரைக்கும் என் பங்காரமா உன்னை தாங்குவேன்னு பிராமிஸ் பண்ணினேன்.

ஆனா நீ…. என் அம்மாட்ட… நீ இப்படி எல்லாம் பேசுவியா? சத்தியமா என்னால் நம்ப முடியல… வெறி கூடியது அவனுக்கு. ஆத்திரம் தீரும் மட்டும் அறைந்து தள்ளிவிடும் அளவிற்கு வெறி.

Advertisement

பயத்துடன் விழி இமைகள் படபடக்க அவனை பார்த்திருந்தாள்.

என் அம்மா அழுதாங்க… பிள்ளையை சரியா வளர்க்க தெரியலையன்னு கேட்டியாமே…? என் மேல அம்மாக்கு தனிப் பிரியம். அவங்க செல்ல பிள்ளை நான்.

அவங்களை பொறுத்தவரை நான் ரொம்ப சரியானவன் நான் என்ன செய்தாலும் சரியா இருக்கும்னு சொல்வாங்க. அப்படிப்பட்டவங்கட்ட என்னை சரியா வளர்க்கலைன்னு சொல்லி காட்டி இருக்க…

நீ என் பிள்ளையை நல்லா வளர்த்து காமி … ரெடியா…. ஏற்பாடு பண்ணிடுவோமா?அவள் முடியை பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.

உங்க பிள்ளைக்கு ஒரு தங்கச்சி இருந்து அவளை எவனாவது இப்படி தொந்தரவு பண்ணினா உங்க பிள்ளை சும்மா இருப்பாரான்னு கேட்டியாமே…

ஆமா கேட்டேன்… துணிந்து விட்டாள்…சாண் போனால் என்ன முழம் போனால் என்னவென்று … அவன் உக்கிரம் அதிகம் கொண்டு அவள் மீது பாய்ந்து விட்டான்.

எனக்கு தங்கச்சி இருந்து அவளையே உலகம்னு நினைச்சு அவளை உயிரா சுமக்கிறவன் கிடைத்தால் அவன் காலில் விழுந்து என் தங்கச்சியை கட்டி கொடுப்பேன்.

சீப்பா பிஹேவ் பண்றேன்னு சொல்லியிருக்க…! எந்த அம்மா இதை கேட்டு தாங்கிப்பாங்க?

நீங்க நடந்துகிட்ட முறையை தானே சொன்னேன்…?

நான் நடந்துகிட்டதா…? உன்னை என்ன பண்ணியிருக்கேன்? அதீத அன்பில் முத்தம் கொடுத்திருக்கேன். அது தவறா எனக்கு தோனினதே இல்லை.

உங்களுக்கு எது தான் தவறுன்னு பட்டிருக்கு? சொன்னா கோபம் வருது… என்ன வளர்த்திருக்காங்கன்னு மறுபடியும் நினைக்கத் தோணுது…

வேங்கையென அவளை சுவற்றில் சாய்த்தான்.

அவளால் அசைய முடியவில்லை… அவன் இரும்பை ஒத்த மேனியை அவளால் விலக்கி தள்ளவும் முடியவில்லை.

இதுக்கு பேர் என்ன? சிவந்த விழி உருட்டி சீறினாள்.

இதுக்கு பேர் தானே சீப்பா நடந்துக்கிறது..? நக்கலாய் சிரித்தவன் அப்போ சீப்பா நடந்துற வேண்டியது தான்… குடும்பம் பண்ணிட்டு தாலி கட்டிக்கலாம்…அவள் முகம் நோக்கி குனிந்தவன் கண்ணீரில் கரையும் காரிகையின் பால்முகம் கண்டு உள்ளம் வெதும்பினான்.

சட்டென விலகி நகர்ந்தவன் கண்களை அழுந்த மூடிக் கொண்டான்.

ஏன் கண்ணியவான் மாதிரி நடிக்கிறீங்க…? குடும்பம் பண்ண வேண்டியது தானே…? அழுகையும் ஆத்திரமுமாய் வெடித்து வந்தது.

அவன் அமைதியாக அவளுக்கு முதுகு காட்டி நின்றான்.

உங்களால் எல்லாம் முடியும்! உங்கட்ட பணம் இருக்கு… ஆண்பிள்ளை என்ற திமிரு இருக்கு…!

ஒரு சாதாரண குடும்பத்து பொண்ணு தானே… இவளால் என்ன பண்ண முடியும்னு தானே இப்படி என்னை துரத்தி துரத்தி சந்தோஷப்படறீங்க..? கேட்க நாதியில்லைன்ற தைரியம் தானே இப்படி நடந்துக்க வைக்குது? இது என்ன சேடிஸ்ட் புத்தி?

அவனுக்கு எதிரில் ஆவேசமாய் நின்றவள்… உங்களுக்கு என்ன என்னோட குடும்பம் நடத்தணும்… அவ்வளவு தானே… வாங்க…! அப்புறம் என்னை நிம்மதியா விட்டுடுவீங்க தானே… சரி வாங்க நான் ரெடி தான்… வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

என்னடி பேசுற… அவளை வாரி எடுத்து தன்னுள் இறுக்கிக் கொண்டான்.

இப்படி எல்லாம் பேசுவியா… வாயில் சுரீரென்று அடித்தான்.

ஒன் டே ஸ்பென்ட் பண்ண நீயும் அந்த மாதிரி பொண்ணு இல்லை…. நானும் இளமையை தனித்துக்க ஆள் தேடுறவன் இல்லை…. இனி இப்படி பேசின சத்தியமா கொன்னுடுவேன்!

வலியுடன் சுவற்றில் குத்தினான். அவனுக்கு ஜீரணிக்க முடியவில்லை. சட்டென்று இமைக்கும் நேரத்தில் அவன் காலில் விழுந்தாள்.

ஏய்… என்ன பண்ற… பதறி விலகினான்.

செல்லம் எழுந்துரு! எழுந்துருரா முதல்ல… கலங்கிதான் போனான்.

உங்கம்மாட்ட கொஞ்சம் கோபமா பேசிட்டேன்… தப்பு தான்… உணர்ச்சி வேகத்தில் வார்த்தையை கொட்டிட்டேன். கரம் கூப்பினாள்.

“——————“

புது எண்ணில் இருந்து அழைப்பு வரவே ஹலோ…எவரிதோ மாட்லாடிதினாவு… என்றார் விஜயதாரணி.

நான் பவித்ரா என்றாள்.

பவித்ரா… எவரிதி?புரியாமல் கேட்டார். உண்மையில் அவருக்கு பவித்ரா யாரென்று தெரியவில்லை.ஹரி ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று மட்டுமே சொல்லி இருக்கிறான். அவள் பெயரையோ, அவள் பற்றிய விபரத்தையோ சொன்னதில்லை.

அம்மா எனக்கு தெலுங்கு தெரியாது. உங்க மகன் ஹரிசரணை பற்றி பேசணும் என்றாள்.

இப்போது புரிந்து கொண்டார். நாக்கு தமிழும் பாக அர்த்தம் அவுதுன்டிரா (தமிழ் எனக்கு நல்லாவே புரியும் )

நூவு தமிழ்நாடு அம்மாயியா?

ம்ம்ம்ம்ம் என்றாள்.

மீறு அமெரிக்காவில நுண்டி மாட்லாட்டிதினாரா?

இல்லம்மா ராஜஸ்தானில் இருந்து பேசுறேன்!

ராஜஸ்தானிலோ?

ஆமா உங்க பிள்ளைக்கு பயந்து ஓடிவந்தேன்… இங்கேயும் என்னை தேடி வந்துட்டாரு.

அம்மா நாங்க உங்க அளவிற்கு பெரிய ஆளுங்க இல்லை. எங்க குடும்ப சூழ்நிலைக்கு உங்க மகனை ஏத்துக்குறது சரிவராது.

அம்மாயி நா கொடுக்கும் எவரையும் பலவந்தம் செய்யாடு. மகனை விட்டுக் கொடுக்காது அந்த தாய் பேச… அவளுக்கு சுர்ரென்று ஏறிவிட்டது.

நான் பொய் சொல்றேனா? நல்லா தான் பிள்ளை வளர்த்து விட்டுருக்கீங்க…

விருப்பம் இல்லைங்கிற பெண்ணை துறத்தி துறத்தி டார்ச்சர் பண்றாரு…என்ன நல்லதை சொல்லி வளர்த்தீங்களோ… பணத்தை காட்டி வளர்த்த அளவுக்கு பண்பை சொல்லி கொடுத்து வளர்க்கலையே

அவள் வீசிய வார்த்தை நெருப்புகள் அவருக்கு நன்றாகவே புரிந்தது. உள்ளம் வருந்தினார்.

நுவ்வு சின்டிஞ்சக்கு. நேனு நா கொடுக்குட்டோ மாட்டிலடாதான்னு ( நீ கவலை படாதே என் மகனிடம் நான் பேசுகிறேன் )

உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவகிட்ட யாராவது இப்படி நடந்திருந்தா இவருக்கு எப்படி இருக்கும்?

பணக்கார பசங்களுக்கு இது ஒரு பொழுது போக்கு.

தாய் தகப்பன் எதையும் கண்டுக்கிறதும் இல்லை.. கண்டிக்கிறதும் இல்லை… என்ன குடும்பமோ என்ன வளர்ப்போ….?

இவள் சகட்டு மேனிக்கு தமிழில் பேச அவருக்கு புரியவில்லை.

ஆனால் ஹரி அந்த பெண்ணை வற்புறுத்துகிறான் என்று மட்டும் புரிந்தது.

அழுது அரற்றி புலம்பியவளுக்கு வாக்குறுதி கொடுத்தார். என் மகன் இனி உன்னை தொந்தரவு செய்ய மாட்டான் என்று.

விருப்பம் இல்லாத பெண்ணை விரட்டி பணியவைப்பது என்ன காதல்…? அவர் மனம் வருந்தினார்.

உடனே மகனுக்கு அழைத்துவிட்டார்.

ஹரி எவிட உன்னாரு?

ம்ம்மா…. நேனு.. நேனு…

செப்புறா…

ராஜஸ்தானிலோ…?

ம்ம்ம்ம்ம்…!

அவர் காச் மூச்சென்று கத்தி தீர்த்து விட்டார்.

பவித்ரா கால் பண்ணியது முதல் அவள் முறையிட்டு அழுதது வரை கூறியவர். நாளைக்கு ஆந்திராக்கு வந்து சேரணும் என்றார் உறுதியான குரலில்.

அந்த பொண்ணுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது. உனக்கு பொண்ணு கொடுக்க நா நீன்னு போட்டி போடுறாங்க… நீ ஏன் ஒரு பொண்ணுகிட்ட வம்படியா நடந்துக்குற?

அந்த பொண்ணு என்ன பேச்சு பேசுறா… என் வளர்ப்பு தவறா போச்சே… நான் நம்பின எதுவும் சரியா அமையலையே… அம்மா வேணும்னா வந்து சேரு  அழுதுவிட்டார்.

சில விஷயங்களை விளக்கி கூறி புரியவைத்தான். பரவாயில்லம்மா மருமக தமிழை நீங்க புரிஞ்சுக்கிறதென்ன… உங்க தெலுங்கை அவ புரிஞ்சுக்கிறதென்ன… கேலி செய்து சிரித்தான்.

மீண்டும் மீண்டும் மகனிடம் வற்புறுத்தினார் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தாதே என்று.

அந்த பொண்ணு பேசினது எனக்கு அவ்வளவு வலிச்சுது என்று கலங்கி போனார்.

அந்த ஆவேசத்தில் தான் வந்து நின்றுவிட்டான் அவள் தங்கியிருக்கும் இடத்திற்கு.

என்னை விட்டுருங்க! உங்க செல்வாக்கு என்னன்னு என்னை தேடி கண்டுப்பிடித்ததிலே புரிஞ்சுக்கிட்டேன். என்னை நிம்மதியா விட்டுடுங்க… நான் இந்த உலகத்தில் ஒரு மூலையில் வாழ்ந்துட்டு போறேன்.

காலை பற்றிக் கொண்டு கதறியவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

நான் உன்னை விட்டுட்டா நீ தாங்குவியாரா குலாபி ? அவள் தலை கோதினான்.

தீபட்டாற் போல் விலகி நின்றாள்.

உன்னை தான் கேட்குறேன்… நான் விலகிட்டா நீ ராஜேஷை கல்யாணம் பண்ணிக்கிறியா?

அவள் தலை நிமிரவே இல்லை… தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.

உன்னை தான் கேட்டுக்குறேன் பவி…. பசப்பாம பதில் சொல்லு!

அ… அது… என் விருப்பம்…யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவேன் பண்ணிக்காமலே கூட இருப்பேன். உங்களுக்கு ஏன் அதெல்லாம்?

அப்போ உனக்கு நான் வேண்டாம்…!

ம்ம்ம்ம்ம்…. என்று குனிந்திருந்தவளின் தலை மட்டும் ஆடியது.

நான் இல்லாம உன்னால் இருந்துட முடியும்… மீண்டும் அழுத்தி கேட்டான்.

அவன் கேட்ட விதம் அவளை அச்சுறுத்தியது.

என் முகத்தைப் பார்த்து பதில் சொல்லுங்க மிஸ் பவித்ரா… சட்டமாய் கை கட்டிக் கொண்டு குறுகுறுவென அவளையே பார்த்து நின்றான்.

அவள் அமைதியாய் இருக்க… குலாபி என் கேள்விக்கு என் முகத்தை பார்த்து பதில் சொல்லும்மா மீண்டும் கேட்டான்.

முடியும்,முடியும்… யாரு இல்லைனாலும் என்னால இருக்க முடியும்! என் அப்பா போயிட்டாரே கூடவே போயிட்டேனா…?

நீங்க இல்லைனா இருக்க மாட்டேனா? கலங்கி சிவந்த விழிகளுடன் அவன் முகம் பார்த்து கத்தினாள்.

மாட்ட…. நான் இல்லாம நீ இருக்க மாட்ட.. நீ நீயா இருக்க மாட்ட…எனக்குத் தெரியும். உன்னால இருக்க முடியாது..

என்ன தெரியும்? பதட்டத்தில் இதயம் ஒரு விநாடி நின்று பிறகு எக்குத்தப்பாய் துடித்தது.

என் குலாபி நான் இல்லாம இருக்க மாட்டா… நளினமாய் புன்னகை புரிந்தான்.

இருப்பேன்… இருப்பேன்… போதுமா… ஆவேசமாய் கத்தியவளை அலேக்காய் தூக்கி சுற்றினான்.

பொய் சொல்லாதரா பங்காரம், என் செல்லக்குட்டி இதழ் கடித்து கண்சிமிட்டியவனை படபடப்புடன் அவள் நோக்க… குலாபிக்கு பாவான்னா சால இஷ்டம் என்று  நெற்றி முட்டி கண் சிமிட்டி சிரித்தான்.

என்ன சொல்றீங்க?

எனக்கு எல்லாம் தெரியும்!­

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!