Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️5

அக்கா பூஜை பாத்திரம் துலக்கிட்டேன் மஞ்சள் குங்குமம் வச்சிட்டேன்…

சுவாமி படம் எல்லாம் துடைத்து பூ போட்டுட்டேன்.

இங்கே துளசி கிடைக்குமாக்கா… பவித்ரா பேசிக் கொண்டே போக…

பவித்ரா உன் தங்கை கால் பண்றா… லைனில் தான் இருக்கா….மொபைலை நீட்டினாள் சௌமி.



Advertisement

நான் அப்புறம் பேசிக்கிறேன் நீங்க கட் பண்ணிடுங்க!

பவித்ரா பேசு ப்ளீஸ்… ஒரு மாசம் ஆகப்போகுது இங்கே வந்து… உங்கம்மா மூனு முறை எனக்கு கால் பண்ணிட்டாங்க… அவள் கையில் மொபைலை திணித்தாள் சௌமி.

வேறு வழியின்றி மொபைலை வாங்கி கொண்டவள் தன் அறைக்குள் சென்று விட்டாள்.

Advertisement

ஹலோ பவி!

Advertisement

சொல்லு!

ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லும் பவித்ராவின் பேச்சு காயத்ரியை வருத்தம் கொள்ள செய்தது.

பவி நல்லா இருக்கியா?

Advertisement

ம்ம்ம்ம்…. வேறென்ன?

பேச விருப்பமின்றி பதிலுரைக்கும் அக்கா அவளுக்கு புதிது.

அம்மா அழுதுட்டே இருக்காங்க…

துடைத்து விடு!

பவி…. அவள் அதிர்ந்து தான் போனாள்.

நான் என்ன செய்யணும்?

எ… எங்களை வெறுத்துட்டியா?

உனக்கு இப்போ தான் தெரியுமா?

உங்கம்மா அக்கவுண்டுக்கு ஒரு லட்சம் அனுப்பி இருக்கேன். என்ன செய்யணுமோ செய்ய சொல்லு!

பவி….

அடிக்கடி போன் பண்ணி எனக்கு சங்கடத்தை உண்டு பண்ணாதீங்க!

பட்டு கத்தரித்தார் போல் நறுக்காக பேசிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.

“————–“

அக்கா தலையை ஒழுங்கா துடைக்காம என்ன பண்றீங்க? தண்ணி சொட்டுது பாருங்க!

பவி…. அதுக்குள்ள பேசிட்டியா?

ம்ம்ம்ம்… இப்போ வேலை இருக்கு நைட் பேசறேன்னு சொல்லிட்டேன்.

அக்கா பருப்புல நெய் தாளித்து கொட்டிட்டீங்களா?

கொஞ்சமா மிளகு ரசம் வைக்கவா?

பவித்ராவை வினோதமாய் பார்த்து நின்றாள் சௌமி…. உள்ளிருந்து குழந்தை சிணுங்கல் கேட்கவே வேகமாய் ஓடினாள் பவித்ரா.

இந்த பெண்ணுக்கு இவ்வளவு மனோத்திடமா? பிரம்மித்து போனாள் சௌமி.

அவள் மனோதிடத்தில் இல்லை… மனம் வெறுத்து இருக்கிறாள் என்று பிறருக்கு எப்படி புரியும்?

“——————-“

அக்கா இலை போடலாமா?எல்லாம் எடுத்து வச்சிட்டேன்.

இரு பவி… இலை போட்டு காத்திருக்க கூடாது.

சார் வரேன்னு சொல்லி இருக்காங்களா?

இல்ல… ஹரி வருவார்.  நம்ம வீட்டில் சேர்ந்து தான் விரதம் பண்ணுவோம்.

அய்யோ அவன் வருவானா? பவித்ராவின் உள்ளம் நத்தை ஓட்டுக்குள் சுருண்டு கொண்டது.

இன்று புரட்டாசி முதல் சனி… அது தான் விரத சமையல் தயாராகி  இருக்கிறது.

அவங்க வீட்டுல விரதம் பண்ண மாட்டாரா?

அவரை தனியா எதுவும் நாங்க செய்ய விடறது இல்லை… எந்த பண்டிகை விரதம்னாலும் இங்கே சேர்ந்து தான் கொண்டாடுவோம்.

மூனு வருஷமா இப்படி தான்!

அப்படியா?

ஹரிக்கு குல தெய்வமே திருப்பதி ஏழுமலையான் தான்.

அவர் ஆபிஸ் போகலையா?

இல்ல.. இன்னைக்கு லீவ் போல….

கட கடவென சமைத்த பதார்த்தங்களை பவித்ரா எடுத்துக் கொண்டு வந்து சுவாமி அலமாரியின் கீழ் வைக்க…

கதவை தட்டி விட்டு உள்ளே வந்த ஹரி அழகாய் பஞ்சகச்சம் போல் வேட்டி அணிந்து நாமம் தரித்து கம்பீரமாய் நின்றான்.

சௌமி ரெடியா?

ம்ம்ம்ம் இலை போட்டுடலாம்.

அக்கா பாப்பா அழறா நான் பார்க்கிறேன்… அழாத குழந்தையை காரணம் காட்டி அறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஹரி எதையும் கண்டு கொள்ளாது சோஃபாவில் அமர்ந்து கொள்ள…

சௌம்யா நெய் விளக்கேற்றி மூன்று இலை போட்டு சாதம் சாம்பார் பருப்பு நெய் மூன்று வகை பொரியல் பரிமாறி சேமியா பால் பாயசத்தை வெள்ளி கிண்ணத்தில் வைத்து உத்திரணியில் நீர் ஊற்றி ஏலக்காய் பச்சை கற்பூரம் துளசி போட்டு தயாராக வைத்தாள்.

ஹரி வந்து சுவாமி படங்களுக்கு கற்பூர தீபம் காட்டி ஆரத்தியை சௌமியிடம் நீட்டினான்.

ஆரத்தியை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டவள் ஆரத்தி தட்டை எடுத்துக் கொண்டு போய் பவித்ராவிற்கும் குழந்தைகளுக்கும் காண்பித்து வந்தாள்.

நீர் மாற்றி  மூன்று முறை விட்டவன் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து துளசி தீர்த்தம் எடுத்து விரதத்தை முடித்துக் கொண்டான்.

தன் வீட்டில் எவ்வளவு அமர்க்களமான விரதம் நடக்கும் என்று எண்ணி

பார்த்தான். அவர்கள் பூஜை அறையில் தங்க பிரேமிட்ட மிகப்பெரிய பாலாஜி படம் துளசி மாலை ரோஜா மாலையுடன் வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

அப்பா, சித்தப்பா என அனைவரும் பாரம்பரியம் மாறாது பஞ்சகச்சம் உடுத்தி பெரிதாய் நாமம் தரித்து பக்தியுடன் வழிபடுவார்கள்.

எத்தனை விதமான காய் கூட்டு என்று பார்ப்பவர்கள் பிரம்மிக்கும் அளவிற்கு சமையல் இருக்கும்.

ஹரி சாப்பிடு….! சௌமியின் குரல் அவனை நிஜத்திற்கு கொண்டு வந்தது.

அமைதியாய் சாப்பிட அமர்ந்தான்.

என்ன கொரிச்சுட்டு இருக்க… சாம்பார் நல்லா இல்லையா? உன் அளவுக்கு காரம் சேர்க்க மாட்டோம் அது தான் சப்புன்னு இருக்கா…

“பாகுண்ட்டிமா” என்றவன் அள்ளி சாப்பிடத் தொடங்கினான்.

இன்னும் கொஞ்சம் சாதம் வச்சு ரசம் போட்டுக்கோ…!

போதும் சௌமி…. தடுக்க நினைப்பதற்குள் சாதம் வைத்து விட்டாள்.

தோழியை முறைத்துக் கொண்டே சாப்பிட்டான். உனக்கு பிடிச்ச கோங்குரா இருக்கு தயிர் போட்டு கொஞ்சம் சாப்பிடேன்.

போதும் சௌமி… குழந்தைங்க எழுந்துட போறாங்க….நீ சாப்பிடு!

நியாயமா கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள், அறுபது வயசு கடந்தவங்க எல்லாம் விரதம் இருக்க தேவை இல்லைன்னு அவ்வா செப்பேடி.

சரி நான் சாப்பிடறேன் நீ உன் உபண்யாசத்தை நிறுத்து…

சாப்பிட்டு வந்தவள் சிறிய டம்ளரில் பாயசம் கொண்டு வந்து ஹரியிடம் நீட்டினாள்.

பாயசம் ருசிகா உண்டுண்டி.

பவி தான் செய்தா!

ஓ என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

ஹரி….ஆன்ட் mடி பேசினாங்க!

எவரிதி?

தாரிணி ஆன்டி.

நேத்து அங்கே  சாட்டர்டே… வீட்டில் விரதம் பண்ணியிருப்பாங்க. என் ஞாபகம் வந்திருக்கும்.

ம்ம்ம்ம் என்றவள் ஒரு முறை இண்டியா போய் வரலாமில்ல என்றாள்.

போவோம் என்றான்.

உன் தம்பி வைஃப் கன்சீவா இருக்காங்களாம்.

அவுனா? ச்சால சந்தோஷம்.

ஏன் ஹரி இப்படி பண்ற…? உற்ற தோழியாய் மிகுந்த கவலை கொண்டாள்.

தண்ணீர் குடிக்க சமையலறை வந்த பவித்ரா அவனை நிமிர்ந்து பார்க்காமல் உள்ளே சென்று விட்டாள்.

“————-“

கணவனுக்கு இரவுணவு பரிமாறிய சௌமி ஹரி பற்றி பேசிக் கொண்டிருக்க தோசை சுட்டுக் கொண்டே கேட்டுக்கொண்டிருந்தாள் பவித்ரா.

ஏன் இப்படி பண்றாரு…? தாரிணி ஆன்ட்டி அழறாங்க… தம்பி பொண்டாட்டி கன்சீவா இருக்கா இவர் இன்னும் தனியா சுத்திட்டு இருக்காரு.

இவன் கவலையிலே நான் போய் சேர்ந்துடுவேன்… வந்து கொள்ளி வைச்சுட்டு போக சொல்லுன்னு சொல்றாங்க… எனக்கு எப்படி இருக்கும்?

நான் அவனுக்கு அட்வைஸ் பண்ணாம இருக்கேன்னு நினைக்குறியா?

இல்லைங்க உங்க வயசு தானே உங்க பிரண்டுக்கு… முப்பத்தொன்னு ஆகுது.

எல்லாத்துக்கும் ஒரு காலம் இருக்கு… எது எதை எந்த வயசில் செய்யணுமோ அதை செய்துடணும்.

பருவத்தே பயிர் செய்யுன்னு நம்ம ஊரில் சொல்வாங்க தானே…?

ஏன்டி அவன் உனக்கும் பிரண்ட் தானே…. இப்படி என்னை போட்டு பிராண்டுறதை விட அவன் கிட்ட பேச வேண்டியது தானே…?

ம்க்கும்… பேச தைரியம் இருந்தா பேசி இருக்க மாட்டேனா? நொடித்துக் கொண்டே சட்னி ஊற்றினாள்.

அவனை பத்தி நல்லா தெரிந்தும் இப்படி பேசற பாரு… அது தான் வெறியாகுது.

புரியுதுங்க… நம்ம லவ் சக்ஸஸ் ஆகி இன்னைக்கு நாம ஃபேமிலியா இருக்க அவர் தானே காரணம்?

நான் என்னைக்கும்மா இல்லைன்னு சொன்னேன்?

நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது… நாளைக்கு ஹரியோடு பேசறீங்க… அவரை எப்படியாவது ஊருக்கு அனுப்பறீங்க.

அடியேய் நீ எவரஸ்டை தொட சொல்லு, சூரியனுக்கு போக சொல்லு செய்ய ட்ரை பண்றேன்… அவன்கிட்ட ஏன்டி கோத்து விடற?

அவ்வளவு பயமா? குலுங்கி சிரித்தாள்.

அவனுக்குள்ள இருக்க ஹரிசரண் நந்தமூரி எர்ரபள்ளி திடீர்னு வெளியில் வந்துட்டா நான் என்ன பண்ண?

கணவனை முறைத்துக் கொண்டு சௌமி நிற்க அக்கா நீங்களும் சாப்பிடுங்க… தோசையை கொண்டு வந்து வைத்தாள் பவித்ரா.

சரி நீ டென்ஷன் ஆகாம சாப்பிடும்மா நான் பேசி பாக்குறேன்..

“————-“

ஹரி நாளைக்கு அவுட்டிங் போகலாமா?

ம்ம்ம்ம்…. என்றான்.

சௌமியுமா?

இல்ல… குழந்தைகளுக்கு கொஞ்சம் சளியா இருக்கு. நாம மட்டும் போகலாம்.

காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.

அகி எக்கடக்கி வெல்தாமு? (எங்கே போறோம்)

ராதா ராமன் டெம்பிள் ஓகே வா?

உன் பொண்டாட்டி பேச சொல்லி அனுப்பினாளா?

எப்புட்ரா மச்சி….? கல்யாணம் ஆகாம இருந்தா புத்திசாலியா இருக்கலாம்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு…

பேசிக்கொண்டே நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் Bradford ave உள்ள ராதா ராமன் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.

கோயிலுக்குள் நுழைந்த உடனே அப்படி ஒரு அமைதி. நம்ம ஊரு கோயில்கள் போல் கோபுரம் எல்லாம் இல்லை… விஸ்தீரமான இட வசதி இல்லை. எளிமையான கட்டுமான அமைப்பு கொண்ட சிறிய கோயில்.

கோயில்களில் கிறுக்கல் இல்லை, ஹார்ட் இன் இல்லை… குப்பை கூலங்கள் இல்லை. விபூதி குங்குமம் சுவர்களில் கொட்டி கிடக்கவில்லை. ஆங்காங்கே உண்டியல்கள் இல்லை. இப்படி ஏகப்பட்ட இல்லை.

கடவுளரை மனமுருக வழிப்பட்டு அந்த தெய்வீக நிசப்தம் கொடுக்கும் புத்துணர்வை நாடி நரம்புகளில் ஏற்றிக் கொண்டு வெளியில் வந்தனர்.

பக்கவாட்டில் உள்ள அழகிய நந்தவனத்தில் நுழைந்து அங்குள்ள கல் பெஞ்சில் அமர்ந்தனர்.

செப்புறா…

என்ன செப்ப… நண்பனின் தோளில் கை போட்டு அணைத்துக்கொண்டான்.

டேய் ஹரி நான் குடும்பஸ்தன் ஆகி அவஸ்தை படற மாதிரி நீயும் படனும் நான் அதை பார்த்து ரசிக்கணும்.

எனக்கு கல்யாணம் பண்ணி வைத்து பழி வாங்கின உன்னை அதே மாதிரி பதிலுக்கு பதில் உனக்கு கல்யாணம் செய்து வைத்து பழி வாங்கல நான் அகிலன் நந்தகுமார் இல்லடா….

டேய் வரும்போது தானே கல்யாணம் ஆகாம இருந்தா புத்திசாலியா இருக்கலாம்னு சொன்ன…? பட்டென்று அகிலனின் முதுகில் ஒன்று வைத்தான்.

அப்படியா சொன்னேன்…? வலியில் முதுகை தேய்த்துக் கொண்டே நெளிந்தான்.

அகி மேரேஜ் பண்ணிக்கணும்னு ஒரு ஐடியா வரேன்னுமில்ல…

மண்ணாங்கட்டி… ஒவ்வொரு நரைமுடி பல்லை காட்டுது… உனக்கு பதினாறுன்னு நினைப்பா?

அகி ஏண்டா…? நண்பனின் தோள் சாய்ந்து அமைதியாய் கண்களை மூடிக் கொண்டான்.

சாரி ஹரி உன்னை போர்ஸ் பண்ண எனக்கு உரிமை இல்லை…. ஒரு நண்பனா உன் வாழ்க்கை சிறப்பா இருக்கணும் என்ற எண்ணம் எனக்கு இருப்பதில் தவறில்லையே?

ஏன்டா இப்படி பேசற…? நீயும் சௌமியும் எனக்கு நண்பர்களா கிடைத்தது எனக்கு வரம்…!

ஹரி மேரேஜ் விஷயம் கூட அப்புறம் இருக்கட்டும்… நீ ஊருக்கு போய் அம்மாவை பார்த்துட்டு வாடா !

ஏன்டா அவங்க என்னை பார்க்க வரலாம் இல்ல…?

ஆமா டவுன் பஸ்ஸில் ஏறி அடுத்த ஸ்டாப்பில் இறங்குற இடத்தில் நீ இருக்க?

அகி….சுப்ப கிருஷ்ண நந்தமூரி எர்ரபள்ளி பாரியாள் நினைத்தால் என்ன வேணா நடக்கும்…!

விதண்டாவாதம் வேண்டாம் ஹரி… ஊருக்கு போயிட்டு வா!

அகி நான்  அம்மாவோட வீடியோ காலில் பேசிட்டு தானே இருக்கேன்?

வீடியோ காலில் பிள்ளை தலை கோத முடியுமா? உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்க முடியுமா? பிள்ளைக்கு பிடித்த ஹைதராபாத் பிரியாணி ஊட்ட முடியுமா?

அகிலன் பேசிக் கொண்டிருக்க… மூச்சு முட்டிய ஹரி… நெஞ்சை நீவிக் கொண்டே எழுந்து நின்றான்.

எனக்கு அங்கே போக என்ன இருக்கு? விரக்தியாய் சிரித்தான்.

உனக்கு என்னடா இல்ல? நீ எர்ரபள்ளியில் ஒரு மகாராஜாடா…..

ம்க்கும்… பேரு பெத்த பேரு… வாயிற்குள் முணங்கி கொண்டான்.

அகி கிளம்பலாம்… ஹரி நடக்க தொடங்கி விட்டான்.

டேய் நீ பதில் சொல்லலைனா சௌமி என்னை வெளுத்துடுவா…

அப்படியா நான் அந்த கண் கொள்ளா காட்சியை பார்க்கணும்….லைவில் போடு!

ஹரி… சிறு குழந்தை போல் காலை தரையில் உதைத்துக் கொண்டே வந்தான் அகிலன்.

அகி இந்த பொண்ணுகிட்ட நம்ம வாழ்க்கையை ஒப்படைத்தா நல்லா இருக்கும்னு ஒரு எண்ணம் எனக்குள் வரல… யாரை பார்த்து வருதோ  அப்போ கண்டிப்பா உன்கிட்ட தான் சொல்லுவேன்.

அந்த எண்ணம் கூடிய சீக்கிரம் வரும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை.

——-தொடரும் ——–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!