உடம்பை கவனிச்சுக்கோம்மா…. இவ்வளவு பலகீனமா இருக்க…! பாசத்துடன் மருமகள் கன்னம் வழித்தார் தாரணி.
அவருக்கு அவ்வளவு நிம்மதி. செல்ல(வ) மகன் மனதிற்கு பிடித்தவளை கை பிடிக்க போகிறானே…
சுப்புவிற்கும் மட்டற்ற மகிழ்ச்சி. தலை மகனின் விவாகம் அவர் கனவல்லவா?
சுப்பு இப்படி இறங்கி வந்து சம்மந்தம் பேசி இருப்பது பாலாஜி குடும்பத்திற்கு இன்னும் நம்ப இயலாத ஒன்றாகவே இருக்கிறது.
Advertisement
எப்படிபட்ட பாரம்பரியமான குடும்பம்! எவ்விதத்திலும் இணையில்லாத குடும்பத்தில் பெண் எடுக்க முன்வந்தது மகனின் ஆசைக்கு அவர் கொடுத்த மரியாதை.
மருமகளை வாஞ்சையுடன் பார்க்கும் தாரணியை கண்டு கொஞ்சம் மனம் கனிந்தது தமயந்திக்கு.
அவர்களின் ஆடை அணிகலன் அச்சுறுத்தினாலும் அலட்டல் இல்லாத பேச்சு அவரை கொஞ்சம் தெளிய வைத்திருந்தது.
Advertisement
வதின வதின என்று தத்துபித்து தமிழில் நிவேதா ஒட்டி உறவாடுவதும்,தெலுங்கில் அவளிடம் பேசி அவளை கொஞ்சம் கலவரப்படுத்தும் ஷியாம்மாவும்,மருமகள் கரம் பற்றி மென்மையாய் பார்த்து ரசிக்கும் தன் தாயும், இங்கிலீஷ், தெலுங்கு, தமிழ் என்று கலந்து கட்டி கலாய்க்கும் தேவ்….இதயம் பொங்கியது ஹரிக்கு. தன் குடும்பம் பவியை கொண்டாடுவது கண்டு அவ்வளவு பூரிப்பு.
Advertisement
இதை தானே அவன் விரும்பினான். இப்படியான உறவுகள் கூடி உவகையுடன் நடத்தும் விவாகம் தானே அவன் பெரு விருப்பம். இதற்காக தானே இவ்வளவு வலி, ஏக்கம், தவிப்பு.
மொத்த பாரம் இறங்கி மனம் பஞ்சு பஞ்சாய் மிக லேசாய் அலைமோதியது . அவன் குலாபியின் ஓரப்பார்வை அவனை மயிலறகாய் வருடியது.
“——————-“
Advertisement
இடம் நேரம் எல்லாம் நீங்க உறுதிப்படுத்திட்டு சொல்லுங்க என்றார் சுப்பு.
வந்தவங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து கொடும்மா என்றார் சுசிலா.
வெற்றிலை பாக்கு பூ பழம் வைத்து ஜெயலட்சுமியை அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுக்க சொன்னார் தமயந்தி.
எலிசபெத் ராணியின் கிரீடம் தன் தலைக்கு வந்து விட்டது போன்ற ஒரு இறுமாப்பு ஜெயலட்சுமிக்கு.
பரமு ரெண்டு பேருமா சேர்ந்து கொடுங்க என்றார் சுசிலா.
பரமசிவம் ஜெயலட்சுமி தம்பதிகள் தாம்பூலம் கொடுக்க சுப்ப கிருஷ்ணா, விஜயதாரணி தம்பதிகள் பெற்றுக் கொண்டனர்.
மருமகளுக்கு புடவை வாங்க நல்ல நாள் பார்த்து லேடீஸ்களை அனுப்பி வைக்கிறேன் என்றார் சுப்பு.
இப்போ தான் புடவை வாங்கி வந்தீங்களே என்றார் மணவாளன்.
இது சும்மா வெறுங்கையோட மருமகளை பார்க்க வரக்கூடாதுன்னு வாங்கிட்டு வந்தது.
சரி நாங்க கிளம்புறோம்…! பெரியவர்கள் விடைபெற்றனர்.
அண்ணையா…. வதினவை பார்த்து பேசிட்டு பை சொல்லிட்டு வரலாமே… குறும்புடன் கிசுகிசுத்தான் தேவ்.
நானெல்லாம் ஹரி அண்ணையா ரூட்டை தான் ஃபாலோ பண்ணப் போறேன்.
நார்த் இண்டியா சைடில் ஒரு பொண்ணை பார்த்து திகட்ட திகட்ட லவ் பண்ணி வீட்டுல ஃபைட் பண்ணி கெஞ்சி கொஞ்சி காம்பர்மைஸ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கப் போறேன். தேவ் தனது கனவு திட்டத்தை விவரிக்க…
டேய் நீ பேசறது பார்த்தால் ஆல்ரெடி பார்த்து வச்சுட்ட மாதிரியே இருக்கே… ராம் அவனை ஊன்றி கவனித்து பார்வையால் கொக்கி போட்டான்.
ஒரு வாரம் ஆகிவிட்டது பவித்ராவும் அழைக்கவில்லை, ஹரியும் அழைத்து பேசவில்லை.
திருமணம் அமைந்து விட்டது என்று பெரிதாய் மகிழ்ச்சியில் பொங்கவில்லை… எப்போதும் போலவே இயல்பாக அமைதியாக இருந்து கொண்டாள் பவித்ரா.
இவளுக்கு ஏன் தான் இவ்வளவு பிடிவாதம்? ஒரு மெசேஜ் கூடவா போடக்கூடாது… நொந்து கொண்டான் ஹரி. அவன் அனுப்பிய மெசேஜுக்கு பதில் இல்லாத போது அவன் என்ன செய்ய முடியும்?
யுவிக்கு அழைத்து சத்தம் போட்டான். என்னடா உங்கக்கா போன் வச்சிருக்காளா இல்லையா?
வச்சிருக்கு மாமா….!
பத்திரமா வைக்க சொல்லு! நாளைக்கு வெள்ளிக்கிழமை சூடம் ஏத்தி சாம்பிராணி போட சொல்லு!
சரிங்க மாமா…!
டேய்….. பல்லை கடித்தான்.
அவளுக்கு ஒழுங்கா சாப்பாடு போடுங்கடா… கருவாடு மாதிரி இருக்கா.
அவ்வளவு அக்கறைன்னா நீங்க ஸ்விக்கில ஆர்டர் போடுங்க!
“——————–“
யுவி யாருன்னு பாரு….!
நான் தான் மேட்ச் பார்க்கிறேன் இல்ல.. காயு நீ போய் பாரேன்.
யாருங்க?
ஃபுட் டெலிவரி பண்ணனும்.
ஃபுட்டா…? யாரு ஆர்டர் பண்ணினது? இந்த பழக்கம் புதிது அல்லவா… குழம்பி போனாள்.
யுவராஜ் பண்ணி இருக்காரு.
டேய் யுவா… என்னடா இது புது பழக்கம்?
புரிந்து போனது யுவிக்கு.
காயு இது நமக்கு இல்லை.
என்னடா சொல்ற?
இரு வந்து சொல்றேன்… உணவு பார்சலை பெற்றுக் கொண்டு டெலிவரி பாயை அனுப்பி வைத்தான்.
பவிக்காக்கு ஹரி மாமா அனுப்பி இருக்காரு… நடந்ததை கூறினான்.
அய்ய… ரொம்ப தான் சீன் போடறீங்க… என்னமோ பண்ணிதொலைங்க…! லேசாய் நொடித்துக் கொண்டாள்.
என்னடா சத்தம்? கன்றுக்குட்டிக்கு புல் போட்டு தண்ணீர் வைத்து விட்டு வந்தாள் பவித்ரா.
உனக்கு தான் பார்சல்!
எனக்கா? ஸ்விக்கி கவரை பார்த்து புருவம் நெறித்தாள்.
பாவா அனுப்பி இருக்காரு.
என்னடா சொல்ற?
இந்த நல்லதுக்குடி கிராமத்து வரலாற்றில் முதல் முறை ஸ்விக்கியில் புட் வந்தது நம்ம வீட்டுக்கு தான்.
யுவி என்ன இதெல்லாம் அசிங்கமான பழக்கம்? முகம் சுழித்தாள் பவித்ரா.
மண்டபத்துக்கு கரண்ட், தண்ணி, கியாஸ் எல்லாம் தனி பில்… எப்படியும் ஒரு லட்சத்தை தாண்டும்.ஸ்டேஜ் டெகரேஷன் தனி அது நம்ம தான் பார்த்துக்கணும், மேளம், ஐயர் அதெல்லாம் பார்க்கணும். சாப்பாடு செலவு பெருசா இழுக்கும், மாப்பிள்ளைக்கு துணி, நகை வாங்கணும். தாம்பூலம் கொடுக்கணும். போட்டோ, வீடியோ அது ஒரு பெரிய செலவு.
எப்படியும் ஏழு, எட்டு லட்சம் ஆகிடும்ம்மா.
செய்து தானே ஆகணும்!
இன்னொரு பொண்ணு இருக்கு அதையும் யோசித்து செய்!
நீ சொல்றது சரிதாண்ணே… இப்போதைக்கு இந்த விசேஷம் நல்ல படியா முடியட்டும்..காயத்ரிக்கு ரெண்டு வருஷம் போகட்டும்.
இப்போ FD எடுத்து அஞ்சரை லட்சம் இருக்கு. இதை வைத்து செலவு பார்ப்போம்.என் தாலிக்கொடி அஞ்சு பவுன் இருக்கு அதை மாத்தி மாப்பிள்ளைக்கு செயினோ, பிரேஸ்லெட்டோ வாங்கிடுவோம்.
மாப்பிள்ளைக்கு துணி வாங்க இருபதாயிரம் கையில் கொடுத்துடுவோம்.
ரொம்ப செலவை இழுக்கிறன்னு தோணுது. கொஞ்சம் வருத்தம் தான் மணவாளனுக்கு.
அவங்க சொந்த பந்தம் ஆகா ஓகோன்னு புகழலைனாலும் பரவாயில்லை. முகம் சுழிக்க கூடாது.
செலவு அதிகமா போயிட்டா நகை ஏதாவது அடகு வச்சு சமாளிக்கலாம்.
சாப்பாடு திருப்தியா இருக்கட்டுண்ணே கை மீறி செலவு போனா கூட பரவாயில்லை காசி அல்வா, ட்ரை புரூட் லட்டு இலையில் வைக்கணும். ஏதோ பன்னீர் புலவ், நவரத்தின குருமாவாம் யுவி சொன்னான் அவன் பிரண்டோட அக்கா கல்யாணத்துல போட்டாங்களாம்.
தங்கையை புரிந்து கொள்ள இயலாது திகைத்து நின்றார் மணவாளன்.
நடுத்தர வர்க்கத்து குடும்ப நிலை இது தானே…?
பெருமையாய் செய்யவும் ஆசை, ஆனால் எண்ணி எண்ணி திட்டமிட்டு செலவு செய்யும் சூழ்நிலை.
“————————“
கடு கடுத்து நின்றாள் பவித்ரா.
இரண்டாவது முறையாக ரிங் போய் கொண்டே இருக்கிறது அவன் எடுக்கவில்லையே…?
அடித்து ஓயும் முன் ஹலோ என்றான்.
என்ன பண்றீங்க?
இப்போ தான் குளிச்சுட்டு வரேன்…!
பொய்… வேணும்னே நீங்க அட்டன் பண்ணல…
அப்படியா?
ரொம்ப திமிரு தான்… கோபம் அவளுக்கு தகித்தது.
பத்து நாளைக்கு அப்புறம் கால் பண்ணியே… நல்லா இருக்கீங்களா? வீட்டுல எப்படி இருக்காங்கன்னு கேட்காம வாயாடிட்டு இருக்க…
இருக்க கோபத்துக்கு உங்களை என்ன பண்ணலாம்ணு யோசிக்கிறேன்.
என்ன வேணாம் பண்ணலாம்… உனக்கு இல்லாத உரிமையா…? ஆயிரம் முத்தம் கொடுக்கலாம்.என்னை கொஞ்சி தாலாட்டலாம்… மெல்லிய குரலில் கசிந்துருகினான்.
அது தான் இப்போ குறைச்சல்!
ராஜேஷ் கையை ஏன் உடைச்சீங்க?
ராஜேஷா?
ஹலோ நடிக்க வேண்டாம்… என் அத்தை மகன் ராஜேஷ் கையை உடைத்தது யாரு?
இதென்ன வம்பு… நான் ஹைதராபாத்தில் இருக்கேன் என்னை கேட்கிற…
ரொம்ப நடிக்காதீங்க….! எனக்கு தெரியும் இது உங்க வேலை தான்.
தெரியும் இல்ல அப்புறம் என்னடி டவுட் உனக்கு? சிடு சிடுப்பு அவனுக்கு.
ஏன் இப்படி அசிங்கமா நடந்துக்கறீங்க? தளர்ந்து விட்டாள்.
எது அசிங்கமா? என் பொண்டாட்டி ஆகப் போறவ கையை புடிச்சு கலாட்டா பண்ணுவான்… நான் ரசித்து பாராட்டணுமா?
அதுக்கு?
அதுக்கு ஒரு டேஷூம் இல்லை… போடி வேலையை பார்த்துகிட்டு.
———தொடரும் ——
பிரண்ட்ஸ் எல்லோரும் கிளம்பி கும்பகோணம் வந்துடுங்க… பெரிய இடத்து விசேஷம் நல்லா மேக்கப் பண்ணிட்டு நகை நட்டெல்லாம் போட்டுட்டு பளிச்சுன்னு வாங்க… மண்டபத்தில் சந்திப்போம்