Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்20(1)

அத்தியாயம் – 20 – 1
அடுத்த நாள் காலையில் மஞ்சரி எழுந்ததும் வழக்கம் போல எல்லோருக்கும் காலை வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள். நிலா வேலைக்குச் செல்வதால், தேன்மொழியிடம் தான் குழந்தை வார நாட்களில் எல்லாம் செய்து கொள்வாள்.
அன்றைக்கு விடுமுறை என்பதால் நிலாவே குழந்தையை தயார் செய்துக் கொண்டிருந்தாள். அவளிடம் எழிலன் வருவதை எல்லாம் சொல்லாமல், வெளியில் போகிறாய் என மட்டும் கூறினாள் நிலா.
மஞ்சரி தன் மாமனோடு செல்வதாக நினைத்துக் கொண்டாள். பின்க் கலர், எல்லோ கலர் என நிலாவைக் குழப்பிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் டிரஸ் கலரில் டாய்ஸ் கேட்டால் கிடைக்கும் என நன்கு தெரிந்துக் கொண்டிருந்தாள் மஞ்சுக் குட்டி.


Advertisement

மஞ்சரி எழுந்ததும் அதியமான் ஃபோன் செய்து விட, எழிலன் நிலாவின் வீட்டிற்கு அவனின் புல்லட் எடுத்துக் கொண்டு வந்தான். கேட் வாட்ச்மேனிடம் அதியமான் ஏற்கனவே சொல்லியிருக்க, எழிலன் வந்ததும் திறந்து விட்டார்.
எழிலன் தயங்கினாலும், உள்ளே வந்தான். நிலவன் முறைத்தபடி சோபாவில் அமர்ந்திருக்க, அதியமான் “வாங்க மாப்பிள்ளை” என வரவேற்றார். அவரின் குரல் கேட்டதும் தேன்மொழி உள்ளிருந்து வந்தவர் “வாங்க வாங்க மாப்பிள்ளை” எனச் சத்தமாகவே கூறினார். கையோடு நிலவனை முறைக்க, நிலவன் “வாங்க” என முணுமுணுத்தான்.
அதற்குள் மஞ்சரி தன் அறையில் இருந்து வெளியே வந்தவள், தந்தையைக் கண்டதும் “அப்பா” என கட்டிக் கொண்டாள். நிலாவும் தயங்கியபடி “வாங்க” என்றாள்.

Advertisement

மஞ்சரி ஓடி வந்து அணைத்ததுப் பாரதத்தும் நிலவன் கண்களில் சிறு ஏமாற்றம் தெரிந்தது. அந்த இரத்தம் தானே என தனக்குள் நினைத்துக் கொண்டான். அவனிடத்திலும் சில மாற்றங்கள் தான். நிலாவிற்காகவாது சரியாக நடந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தான்.

Advertisement

எழிலன் கைகளில் ஹெல்மெட் பார்த்து விட்டு “அப்பா, வண்டியில் டூர் போறோமா” எனக் கேட்டாள் மஞ்சரி.
பெரியவர்கள் வியப்புடன் பார்க்க, நிலவன் மட்டும் “குழந்தை புல்லட்லே எல்லாம் கூட்டிட்டுப் போக வேண்டாம். சேஃப்டி இல்லை. வீட்டில் இருக்கிற காரை எடுத்துட்டுப் போங்க” என எங்கோ பார்த்தபடிக் கூறினான்.
எழிலன் “பயப்பட வேண்டாம். குழந்தைக்கும் ஹெல்மெட் இருக்கு, அதோட பேபி பெல்ட்டும் இருக்கு. என்னோட சேர்த்துக் கட்டிப்பேன்” எனச் சாதாரணமாகக் கூறினான்.

Advertisement

தேன்மொழி தலையில் அடித்துக் கொண்டார். இந்த நிலவனுக்கு அறிவே வளராது என நினைத்தார்.
பின் தானே “நிலவா, அவர் பொண்ணை அவர் பத்திரமா கூட்டிட்டுப் போவார். நீ எதுவும் சொல்லக் கூடாது” என்றார்.
நிலவனுக்கு “இதுக்குதான் ..” என ஏதோ சொல்ல வந்தவன், தந்தையின் முறைப்பில் “சரி” எனக் கூறிவிட்டு அமர்ந்தான்.
எழிலன் மனதிற்குள் ‘பாருடா. இந்த புலியும் பூனை ஆகுது” என எண்ணினான். ஆனால் வெளியில் சொல்லவில்லை. ஏற்கனவே இப்படிப் பேசித்தான் இத்தனை வருடங்கள் இழந்தாகி விட்டது என பெருமூச்சு விட்டான்.
தேன்மொழி “நிலா, அவருக்கு என்ன வேணும்ணு கேளு” என்றார்.
“ஒண்ணும் வேண்டாம். நான் மஞ்சரியை வெயிலுக்கு முன் கூட்டிட்டுப் போயிட்டு வரேன்” எனக் கூறிவிட்டு “மஞ்சு குட்டி எல்லாருக்கும் பை சொல்லுங்க” என்றான்.
மஞ்சரியும் “தாத்தா பை, மாமா பை, பாட்டி பை, நிலாமா பை” எனக் கூறிவிட்டுக் கிளம்பினாள்.
வீட்டில் எல்லோரும் வாசலுக்கு வந்தனர். எழிலன் குழந்தையை முன்னால்  அமரவைத்து, தலையில் குட்டி ஹெல்மெட் மாட்டி விட்டான். பின் தான் அமர்ந்து கொண்டு சீட் பெல்ட் போன்ற ஒன்றை இருவருக்கும் மாட்டிக் கொண்டு தானும் ஹெல்மெட் அணிந்து கிளம்பினான். குழந்தையின் தேவைகளைக் கொண்ட பேக்கை தனக்குப் பின்னால் மாட்டிக் கொண்டான்.
பார்த்திருந்த எல்லோருக்கும் கண்கள் கலங்கியது. நிலவனுக்கு இனி எழிலன் குழந்தையை விட மாட்டான் எனத் தோன்றியது. பெரியவர்களுக்கும் அதே உணர்வே. நிலா மட்டும் தானும் அவனோடு செல்ல முடியவில்லையே என ஏக்கம் கொண்டாள்.
பின் அவரவர் வேலைகளைப் பார்த்தனர். எழிலன் கூறியபடி மதிய உணவு வேளையின் போது அழைத்து வந்துவிட்டான். இப்போதும் எழிலனை உணவருந்துமாறு கேட்க, அவன் வீட்டில் காலையில் செய்து விட்டேன் என்றான்.
எழிலன் கிளம்பும்போது மஞ்சரி “அப்பா, அம்மாவையும் டூரர் போலாமா” எனக் கேட்டாள். எல்லோருக்கும் சந்தோஷமாக இருந்தது. எழிலனும் “அம்மா வந்தால் கண்டிப்பா போலாம்டா குட்டி. ஆனா உங்க மாமா பர்மிஷன் தரணுமே” என அப்போதும் நிலவனை வம்பிழுத்தான் எழிலன்.
நிலவன் வேகமாக “நான் ஒன்றும் “ கூறும்போதே, மஞ்சு “மாமா, அப்பா கூட அம்மா டூரர் போலாம்” என உத்தரவாகக் கூற, நிலவன் “சரிடா குட்டிமா” என்றான்.
எழிலன் கிண்டலாகச் சிரிக்க, நிலா முறைத்தாள். நிலவன் குழந்தை எதிரே எதுவும் காட்டிக் கொள்ளாமல் நின்றான்.
அந்த காட்சி அப்படியே பெரியவர்கள் மனதில் இன்பமாகப் பதிந்தது.
அன்றைக்கு எழிலன் வீட்டிற்கு வந்தாலும், அடிக்கடி எல்லாம் வருவதில்லை. ஆனால் இப்போது மீண்டும் நிலாவிற்கு பாடல் மட்டும் தனியாக வந்துக் கொண்டிருந்தது.
அன்றைக்கு ‘நிலவே முகம் காட்டு. எனைப் பார்த்து ஒளி வீசு” என பாடி அனுப்ப, நிலாவிற்கு முகம் சிவந்தது.
நாட்கள் கடந்திருக்க, பேருந்து நிறுத்ததில் ஆதிரா, நிலா, எழிலன் அவ்வப்போது பேசுவது வழக்கமாக இருந்தது. எழிலன் பெர்சனல் அதிகம் தெரியாத ஆதிரா, எப்படி எல்லாமோ கேட்டுப் பார்க்க, அவன் நழுவி விடுவான். நிலாவிடம் எழிலன் பற்றி விசாரித்தால் அதற்கு மேல் பதில் கூறுவாள்.
நிலாவிற்கும், எழிலனுக்கும் நடுவில் ஆதிராவை வைத்துக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டுப் பிடித்து இருந்தது.
நாட்கள் வேகமாக நகர, எழிலன் சென்னை வந்து மூன்று மாதங்கள் கடந்து இருந்தது. கொஞ்ச நாட்களாக எழிலனின் அன்னை மலர்விழி, அடுத்து என்ன எனக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது நிலாவோடும் பேசிக் கொண்டு இருக்கிறார்.
அன்று மதியம் வரை நிலாவிற்கு அடுத்தடுத்து வகுப்புகள் இருக்கவே, உணவு இடைவேளையில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டாள். ஆதிரா வந்ததும் சாப்பிடலாம் எனக் காத்திருந்தாள் நிலா. பதினைந்து நிமிடங்கள் கழித்து ஆதிரா வந்தாள்.
“என்ன மேடம் லேட்?” எனக் கேட்டபடி தனது உணவை எடுத்து வைத்தாள் நிலா.
“நம்ம எழிலன் சர் வழியில் நின்னு பேசிட்டு இருந்தார். அதான் லேட்?”
“சாப்பாடா கிளாசானு கேட்டா சாப்பாடு முக்கியம் பிகிலுனு பெல் அடிச்ச அடுத்த செகண்ட் ஓடி வந்திடுவ. பிரின்சிபால் கூப்பிட்டாக் கூட சாப்பிட்டு வந்திடுறேன்னு சொல்லுவ. இது என்ன புதுசா இருக்கு?”
“சோறு முக்கியம் தான் நிலா மேடம். அதை விட நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கு வந்திருக்கிற கியூட்டிபை கிட்டே குளோஸ் ஆகுறது ரொம்ப முக்கியம் நிலவே” என்றாள் ஆதிரா.
“ஆதிரா நீங்க ஸ்டூடண்ட் இல்லை. புரொஃபசர். நியாபகம் இருக்கா? பசங்க மாதிரி பேசிட்டு இருக்க?”
“புரொஃபசரா இருந்தா என்ன? நமக்கும் ஒரு ஆசை இருக்கும் தானே?”
“அதுக்காக இப்படி பேசுவியா?”
“சோ வாட். கிடைக்கிற வரை அனுபவிப்போமே” என்றாள் ஆதிரா.
“அதுக்கு ஆப்போஸிட் பார்ட்டி பர்மிஷன் வேணும் தெரியும் தானே”
“அட நிலவழகி, சைட் அடிக்க எல்லாம் பர்மிஷன் கேட்டா, நாட்டில் மழையே இருக்காது. உன் அண்ணனைத் தான் சைட் அடிக்க நீயும் விட மாட்ட. அவரும் அதுக்கு மேலே. எழிலன் சர் பற்றி நீ ஏன் கவலைப்படறே” என்றாள் ஆதிரா.
“நீ திருந்த மாட்ட” எனும்போதே, எழிலனும் ஸ்டாஃப் ரூம் வந்தான். எழிலன் ரெஸ்ட் ரூம் போய்விட்டு வருவதற்குள்,ஏதோ ஃபோன் வர, மேஜையில் இருந்த போனை எட்டிப் பார்த்தாள் ஆதிரா. நிலா அவள் கையில் அடிக்க, ஆதிரா அதை லட்சியம் செய்யவில்லை.
ஃபோன் அடித்து நின்றதும் பேக் ஸ்கிரீன் செல்ல, ஆதிராவிற்கு புரையேறியது. ஏன் என்றால் அது நிலா, மஞ்சு ஸ்டேட்டஸ் வைத்திருந்த போட்டோ.  குழந்தை போட்டோ மட்டும் இருந்தால் கூட ஆதிராவிற்கு இத்தனை அதிர்ச்சி இருந்திருக்காது. நிலாவின் போட்டோவும் இருக்கவே, திகைத்து விட்டாள்.
நிலா என்னவெனப் பார்க்க, ஆதிரா அவளை முறைத்தாள். பின்தான் நிலவனின் ஃபோனைக் கவனித்தாள். நிலா என்ன சொல்ல என நினைக்கும் நேரம், எழிலன் வந்துவிட்டான்.
ஆதிரா எதுவும் பேசாமல் சாப்பிட்டு எழுந்து சென்று விட்டாள்.
எழிலன் யோசனையோடு நிலாவைப் பார்க்க, “ஆதிரா உங்க ஃபோன் ஸ்கிரீன் பார்த்திட்டா” எனக் கூறவும் எழிலனும் லேசாகச் சங்கடமடைந்தான். அதற்கு பின் வழக்கம்போல் கல்லூரி முடிந்ததும் பேருந்தில் ஏற, அப்போதும் ஆதிரா எதுவும் பேசவில்லை.
இவர்கள் ஏரியா பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போதும், ஆதிரா வேகமாக தனது கியூட்டியை எடுக்கச் சென்றுவிட்டாள். நிலா வருத்தத்தோடு நிற்க, எழிலன் வந்துவிட்டான்.
ஆதிரா வரவும், “ஆதிரா மேடம்” என எழிலன் அழைக்க நின்றாள்.
“அது நிலா என்னோட வொய்ஃப்” எனக் கூற, “அது எல்லாம் போட்டோ பார்த்ததும் தெரிஞ்சது. நிலா நீங்க வெளியூர்லே வேலைப் பார்க்கறீங்கனு மட்டும் சொன்னபோதே சரி ஏதோ இஷ்யுனு புரிஞ்சிக்கிட்டேன். உங்க பெர்சனல் எல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறம் அந்த பாஷா பாய் கிட்டே என்னாலே வாங்கிக் கட்ட முடியாது. ஆனால் உங்க நிலவழகி மேடம் ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கலாம். நிறைய சொதப்பி வச்சிருக்கேன்” என்றாள் ஆதிரா.
நிலா அவளை அணைக்க, எழிலன் புரிந்துக் கொண்டு சிரித்தான். அப்போது நிலவன் கார் வர, மூவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து வேகமாக அருகில் வந்தான்.
“அடியே நிலா, எனக்கு இன்னிக்கு கம்பத்தடி வாங்கிக் கொடுக்காம விடமாட்டியாடி” என்றாள்.
பின் “ஹலோ சர்” எனக் கூறிவிட்டு, “நிலா, எழிலன் சர், நான் கிளம்பறேன்” எனப் பறந்து விட்டாள்.
எழிலன், நிலா இருவரும் இணைந்து சிரிக்க, பார்த்த நிலவனின் முகத்திலும் புன்னகை.
நிலவன் மெதுவாக “எழிலன், எப்போ நிலாவை உங்க கூட கூப்பிட்டுக்கப் போறீங்க?” எனக் கேட்டான்.
நிலா, எழிலன் இருவரும் திகைத்துப் பார்த்தனர். நிலவன் மீண்டும் “அம்மா, உங்களை நெருக்கக் கூடாதுனு தான் சொன்னாங்க. ஆனால் இப்படி நீங்க வெளியில் பேசிக்கிறது கூட தப்பாப் போகும். அதோட என்னிக்கு இருந்தாலும் நிலாவும், மஞ்சரியும் உங்க சொத்து தான். அதை உங்ககிட்டே ஒப்படைக்கிறது தானே முறை” என்றான் நிலவன்.
அவனின் பேச்சில் தெரிந்த முதிர்ச்சி, நிலாவிற்கு ஏதோ செய்ய, அண்ணனின் தோளில் சாய்ந்தாள்.
எழிலன் வழக்கம் போல் ‘இவ அண்ணன் திருந்தினாலும், இவ திருத்தமாட்டா’ என நினைத்துக் கொண்டான்.
பின் “அப்பா, அம்மா கிட்டே பேசறேன்” என நிலவனுக்குப் பதில் கூறினான் எழிலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!