Skip to content
Post Views: 4,492
தேவை… பாவை பார்வை – 10
பக்கத்திலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று விட்டு, அப்போது தான் வீட்டிற்கு வந்தனர் பத்மாவும் கீழ் வீட்டு சுதாவும்.
சரி சுதா, நான் போய்ட்டு இதை வச்சிட்டு, ராத்திரிக்கு என்ன சமைக்குறதுன்னு பாக்குறேன். ,
அதுக்கு இன்னும் நேரமிருக்கு, அதுக்குள்ள என்னத்த சமைக்க போற, வா இப்படி வந்து உக்காரு. ரெண்டு பேருக்கு சமைக்க எவ்வளவு நேரம் ஆகப்போது சொல்லு… என்று சுதா சொல்ல,
Advertisement
சரி இரு, இதை நான் வச்சிட்டு வரேன் என்று தன் சாமிகூடயை உள்ளே வைக்க சென்றார்.
சுதா அவ்வீட்டின் உரிமையாளர்… சுதாவும் முருகன் பக்தை என்பதனால், அதன் தொடக்கம் தொட்டே இருவரும் சிநேகிதி ஆனார்கள்.
சுதாவிடம் மட்டுமே, தன் ஆதங்கத்தை எல்லாம் சொல்லுவார் பத்மா. அந்த அளவிற்கு இருவரும் நெருக்கம்.
Advertisement
சுதாவும் அவரின் கணவர் மட்டுமே அவ்வீட்டில்… பெற்ற இரு பெண் பிள்ளைகளுக்கும் சிறப்பாக திருமணத்தை முடித்து வைத்து, முதுமை காலத்தை ரசித்து வாழ்கின்றனர். அவரின் கணவர் அந்த சிறிய முருகன் கோவிலின் தர்மகர்த்தா.
Advertisement
கூடையை வைத்துவிட்டு, வந்த பத்மாவை பார்த்து,
“வாடியம்மா… என்ன தான் சொல்லுறா உன் பொண்ணு…” என்று சுதா வினவ,
“எங்க?… நான் அன்னைக்கு பேசுனத்துக்கு அப்பறம் வாயையே திறக்கலை…” என்று அவர் அங்கலாய்ப்பாக பேச,
Advertisement
“ஒடனே நீ அப்படியே விட்டுட்டியா?…”
“அப்பறம் நான் என்ன பண்ணுறது…” என்று சொல்ல,
“இங்க பாரு பத்மா, நீ கொஞ்சம் விடாப்பிடியா கேட்டா தான், வாணி ஏதாவது அவ வாழ்க்கையை கொஞ்சம் யோசிக்கும்… பொண்ணை சந்தோசமா வாழுறதை பாக்கணும் தானே…”
“எனக்கு அந்த ஆசை இல்லைனு சொல்லுறியா…”
“நீ விட்டுலாம் பிடிக்காத… என்னனு கண்டிப்போடு நில்லு… அப்போதான் அவ வாழ்க்கைக்கு ஒரு வழி பிறக்கும்… தினமும் அந்த முருகனை வேண்டுனா மட்டும் போதாது… நாம ஏதாவது பண்ணுனா தான், அந்த முருகன் நமக்கு துணை நிப்பார்…” என்று பத்மாவின், மகளின் வாழ்க்கை பற்றி பேச,
“அது என்னமோ சரிதான்… ஆனா அவ என்ன நினைப்புல இருக்கான்னு கூட தெரிய மாட்டேங்குது…”
“கடைசி வரைக்கும் உன்கூடவே இருந்தடலாம்னு இருக்கா… அதுதான் வேறென்ன…”என்று சொல்ல,
“என்ன சுதா இப்படி சொல்லுற…” என்று பத்மா ஆயாசமாக கேட்க,
“அதுதான் அவ நினைக்குறா… அன்னைக்கு நான் பாத்தேன் பையன… நல்ல பையனாதான் இருக்கான்… எப்படியாவது அவன் கூட சேர்ந்து வாழணும்னு அந்த முருகனை வேண்டிக்கிட்டு, அதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணு… அவ்வளோதான் சொல்லிட்டேன்…” என்று அறிவுரை சொல்ல,
“ஈஸ்வர், நல்லவன் தான்… அவனை பிடிக்கலைன்னு சொல்லிடுவாளோன்னு பயமா வேற இருக்கு… அதுக்கு தான் அடுத்து என்னனு பேசாம இருக்கேன் நான்…” என்று கொஞ்சம் படபடப்புடன் பேச,
“எனக்கு தெரிஞ்சி அப்படிலாம் இருக்காது பத்மா… இல்லனா, இவ்வளோ நாள் அதை பத்தி பேசிருப்பா… நீ இதுக்கு பயந்துலாம் கேக்காத இருக்காத…”
“அப்படினா வேற எதுக்கு இவ இப்படி இருக்கான்னு தெரியலையே… அன்னைக்கு ஈஸ்வர் வந்த போது கூட முகங்குடுத்து பேசல…” என்று யோசித்து பேச,
“அப்படினா வேற எதோ காரணம் இருக்கும் கண்டிப்பா… அதை என்னனு கேளு இல்லனா…” என்று அவர் எடுத்துச்சொல்ல,
பத்மா பதில் பேசாமல் எதையோ யோசித்தவாறே இருக்க,
“ரொம்ப யோசிக்காத பத்மா, வாணிகிட்டயே பொறுமையா என்னனு கேளு… நானும் ரெண்டு பொண்ணை பெத்தவதானே, அதுனால உன் மனசு எனக்கு புரியுது… எல்லாம் கண்டிப்பா நல்லபடியா நடக்கும்…” என்று பத்மாவுக்கு ஆதரவாக பேச,
“நீ சொல்லுறபடியே நடக்கட்டும்னு வேண்டிக்கிறேன்…”
“வேண்டுதல் இருக்கட்டும்… நான் உனக்காக எதுவும் செய்யணும்னாலும் சொல்லு, கண்டிப்பா வாணியோட வாழ்க்கைக்காக பண்ணுறேன்…”
“நீ இப்படி சொல்லுறதே எனக்கு ரொம்ப சந்தோசம் சுதா… கண்டிப்பா, உங்கிட்ட கேக்காம வேற யார்கிட்ட கேப்பேன் சொல்லு…” என்று சொன்னார் மென்னகையுடன்.
” அப்போ சரி… சீக்கிரமே வாணி வாழ்க்கை சரியாகிடும்…” என்று சொல்ல,
“சரி பண்ணனும்… முருகன் தான் துணையிருக்கணும்…” என்று தன் முருகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.
சுதா, “ராத்திரிக்கு என்ன செய்ய போற?…” என்று அப்பேச்சினை விடுத்து நடப்புக்கு வர,
“மணியாகிட்டா?… மாவு இல்ல, ஊரபோடனும். அதுனால உப்மா இல்லனா கிச்சடி செய்யலாம்னு இருக்கேன்..” என்று சொல்லிக்கொண்டிருக்க,
அப்போது வண்டியுடன் வாசலில் நுழைந்தாள், மதுரவாணி.
இருவரும் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு, “என்ன முருகனை பார்த்துட்டு வந்துட்டு இங்க மீட்டிங் ஆஹ்…” என்று பொதுவாக கேட்க,
“அப்பறம் எங்களுக்கு பொழுது போக வேண்டாமா?…” என்று சுதா கேட்க,
“கண்டிப்பா… மீட்டிங் இல்லனா பொழுது போகாது தான்…” என்று பதில் சொல்ல,
“என்ன மது இன்னைக்கு சீக்கரம் வந்துட்ட?…” என்று அன்னை கேட்க,
“ம்ம்… ஆமாம்மா… மீட்டிங் முடிஞ்சித போலாமா…” என்று தாயிடம் வினவ,
“சரி சுதா… நீ பாரு… நானும் இவளோட கிளம்புறேன்…” என்று விடைபெற்று வாணியுடன் அவரின் வீட்டிற்கு சென்றார்.
தன்னை சுத்தம் செய்துவிட்டு, அன்னை கிட்சேனுள் இருப்பதை பார்த்துவிட்டு, அங்கே சென்று
“என்னம்மா உப்மா வா…” என்று இழுக்க,
“மாவு இல்ல… அதுனால உப்புமா தான்…” என்று பதில் சொல்ல,
“இதை முன்னாடியே சொன்னா, நான் வேற ஏதாது நான் பண்ணிருப்பேன்ல…” என்று நொடிப்பாக சொல்ல,
“ஏன் உப்மா சாப்பிட்டா, குடல் வெளில வந்துடுமா?…” என்று சூடாக கேட்க,
“ஆமா, எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும், வேணும்னே இந்த குருணை கோதுமை உப்மா பண்ணிருக்கீங்க… அதுக்கு பதிலா அரிசி உப்புமாவாது பண்ணிருக்க வேண்டியது தானே…”
“இதுதான் முதல்ல இருந்தது… அதுனால இதை பண்ணுனேன்…” என்றார் அவளிடம் விளக்கமாக,
“ம்மா… நீங்க வர வர எனக்கு பிடிக்காதது எல்லாம் வேணும்னே பண்றீங்க…” என்றாள் வாணி புகாராக,
“அப்படின்னா நீ நடந்துக்குறது கூட தான் எனக்கு பிடிக்கல… அப்போ இனிமே நீ, எனக்கு பிடிக்குற மாறி நடந்துக்கோ…” என்று பத்மாவும், மகளுக்கு இணையாக சொல்ல,
“நீங்க என்ன தான் மனசுல வச்சிட்டு பேசுறீங்கன்னு சொல்லிடுங்க ம்மா…”
“அதே தான் நானும் கேக்குறேன் உங்கிட்ட, உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு…” என்றார் அவரும் விடாமல்,
“என் மனசுல என்னம்மா இருக்கு… ஒண்ணுமே இல்ல…” என்று தளர்வாக சொல்ல,
“அப்படி ஒண்ணுமே இல்லனா சரிதான்…” என்றுவிட்டு,
“நான் யோசிச்சி சொல்லுன்னு உன்கிட்ட சொல்லி எத்தனை நாளாச்சு… நீயா சொல்லுவன்னு நானும் பாக்குறேன்… ஆனா, நீ வாய இறுக்கி மூடிட்டு இருந்தா என்ன அர்த்தம்…” என்று அடுத்து சற்று கடினமாக கேட்க,
“ம்மா… அதை விடவே மாட்டீங்களா… ப்ளீஸ் ம்மா…”
“உன் வாழ்க்கை எனக்கு முக்கியம் வாணி… இவ்வளோ நாள் ஈஸ்வர் இல்ல… அதுனால தான், நான் பொறுமையா இருந்தேன்… இப்போ அவனே வந்து பேசியும், நீ இப்படி இருந்தா, நான் என்னனு நினைக்குறது…” என்று விடாமல் பேச,
“எனக்கு அந்த லைப் வேணாம் ம்மா… நான்…” என்று வாணி சொல்லி முடிக்கவில்லை…
அதற்குள், “அப்போ வேணாம்னா, அவன் போட்ட தாலியை மட்டும் எதுக்கு போட்டுட்டு இருக்க… அதையும் கழட்டி அவன்கிட்ட கொடுத்திருக்க வேண்டியது தானே…” என்று ஆவேசமாக கேட்க,
“ம்மா…ஆஆ” என்றாள் அதிர்வாக,
“இப்போ எதுக்கு நீ அதிருர, உனக்கு பிடிக்கலைன்னு சொன்னா, நீ அதை தானே செய்யணும்….” என்று விடாப்பிடியாக நிற்க,
“ம்மாஆ… ப்ளீஸ்…. என்னைய கொஞ்ச பேச விடுங்க…” என்று கெஞ்சலாக சொல்ல,
“போதும் வாணி… உனக்கு அந்த லைப் வேணாம்ன்னு சொல்லிட்டள்ள, அப்போ அடுத்து என்னனு தான், நான் பாக்கமுடியும்… நீயே வேணாம்ன்னு சொல்லும் போது, என் அண்ணன் பையனாவே இருந்தாலும், நான் உனக்கு பிடிக்காம அவன் கூட வாழ சொல்ல மாட்டேன்… நான் அப்போ வேற மாப்பிள்ளை பாக்குறேன்…” என்று முடிவாக பேச,
“ம்மா… என்னம்மா…” என்று திரும்பி அதிர,
“நீ தானே சொன்னா வாணி… அப்பறம் என்னம்மா- ன்னு கேட்டா, என்ன அர்த்தம்…” எண்டு கேட்டுவிட்டு,
“ஒருவேளை நான் உன்கிட்ட அடுத்த கல்யாணம் பத்தி பேசுவேன்னு தான், இந்த தாலியை இன்னும் போற்றுகியோ?…” என்று கேட்டு அவளை அதிர செய்ய,
“ம்மாஆ….” என்று விழிகள் அதிர அன்னையை பார்க்க,
“உன்னோட அம்மா தான்… பதில் சொல்லு வாணி… எனக்கு என்னனு தெரிஞ்சே ஆகணும்…” என்று பேச,
“நான் எதுமே யோசிச்சதில்லை ம்மா… ப்ளீஸ் நம்புங்க… வாழ்க்கைல ஒரு முறை தான் கல்யாணம், அது மட்டும் உறுதியா சொல்றேன்… அதுவும் நடந்து முடிஞ்சிட்டு… அவ்வளோதான் ம்மா…” என்று பதிலை உதிக்க,
“ஏன் வாணி… ரெண்டாவது கல்யாணம் பண்ணவங்களாம் நல்லா வாழமாட்டாங்களா?… அப்படின்னா உன் அம்மா கூட ரெண்டாம் தாரம் தான்… நான் நல்லா வாழலைன்னு சொல்லுவியா?…” என்று ஆராய்ச்சியாக அவளை பார்த்துக் கொண்டே கேள்வியை கேக்க,
தாயின் கேள்வியில் அதிர்ச்சிக்குள்ளாகி, அவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், தான் இந்த முடிவெடுத்த காரணத்தை சொல்லமுடியாமல், மனதில் திண்டாடி,
“ம்மா… ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்களேன்…” என்று கெஞ்ச,
மகளின் மனதில் என்னவோ நிச்சயமாக இருக்குறது என்று தன் மனதில் உறுதிபட நினைத்து, வெளியில் அவளிடம்
“இவ்வளோ நாள் இருந்துச்சே வாணி, உனக்கு டைம்… இதுல இன்னும் டைம் கொடுங்கன்னு கேக்குற… உனக்கு முடிவா இன்னும் ரெண்டு நாள் தரேன்… அதுக்குள்ள நீ அவன்கிட்ட பேசுவியோ, இல்ல தாலியை குடுத்து வந்தாலும் பரவால்லை… என்னனு உன் முடிவை சொல்லு…” என்று சொல்லிவிட்டு,
“உனக்கு பிடிக்காத உப்மா தான் இன்னைக்கு சாப்பாடு… வாழ்க்கை கூட உப்மா மாறித்தான், பிடிக்காததும் இருக்கும்…” என்று சொல்லிவிட்டு சென்றார்.
அன்னை செய்து வைத்த உப்புமாவை பார்த்தபடியே, கிட்சேனுள் நின்றாள்.
– – – – – –
தனது வீட்டின் சோபாவில் அமர்ந்து, எப்படி மதுவிடம் பேசலாமென்று தீவிர சிந்தனையில் இருந்தான் பிரகதீஸ்வரன்.
ஏற்கனவே அவ நம்ம இருந்தாலும், ஒருமுறை கூட நம்மள திரும்பியும் பாத்தது இல்ல… இதுல மாமா பையன் வேற… இந்த கொடுமையை நான் எங்கன்னு போய் சொல்ல… என்று அவனுக்கு அவனே கேட்டுக் கொள்ள,
“அப்போ நீ அவளை பாத்துருக்கியா…” என்று அவனின் மனசாட்சி கேள்வியெழுப்ப,
“ஹ்ம் பாத்துருக்கேன்னே… அவ என்னைய பாக்குறளான்னு பாப்பேன்…” என்று அதற்க்கு பதில் சொல்லி,
“உன்னைய நான் இப்போ கூப்பிட்டேனா…நான் யோசிக்குறேன், நீ கிளம்பு…” என்று அதனை விரட்டினான்.
மறுபடியும் அவன் தீவிரமாக யோசிக்க, இம்முறை அவனின் தொலைபேசி சத்தமெழுப்ப,
“கொஞ்ச நேரம் யோசிக்க விடுறாங்களா…” என்று சொல்லிக்கொண்டே போனை எடுத்து பார்த்தான்.
அதில் அம்மா கால்லிங் என்று வர,
அதனை பார்த்து யோசனையுடன், அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.
“தம்பி, எப்படிப்பா இருக்க…” என்று அன்னையின் குரல் காதில் ஒலிக்க,
எதுக்கு இப்போ எனக்கு பேசுறாங்க?, இவங்க இப்படிலாம் பேசுற ஆள் இல்லையே என்று தன் அன்னை காமாட்சியை பற்றி யோசிக்க,
அதற்குள் “தம்பி… ஹலோ தம்பி… இருக்கியா சாமி…” என்று கேக்க,
“ம்ம்… சொல்லுங்க ம்மா… என்று அவனின் யோசனையை விடாது கேட்க,
“அது தம்பி… நான் உங்கூட செத்த பேசலாம்ன்னு தான் கூப்புட்டேன் சாமி…” என்று அவரின் குரல் மெலிந்து வர,
“சரி சொல்லுங்க ம்மா…” என்று இவன் அவரிடம் விஷயத்தை கேட்க,
“இல்ல தம்பி… நான் அங்க வந்து உன்னைய பாக்கலாம்னு கேட்டதுக்கும், நீங்க வரணும்னா சொல்லுறேன்னு சொல்லிட்ட, சும்மா உன்ட பேசலாம்னு தான் தம்பி…” என்று பேச,
“சரி… அப்பறம் சொல்லுங்க…” என்று சொல்ல,
“லீவு எல்லாம் இல்லையா தம்பி, ஓரெட்டு ஊருக்கு போலாம்ல சாமி…” என்று பாசமாக கேக்க,
“ம்மா… என்ன விசயம்ன்னு சொல்லுங்க… எதுக்கு இப்போ இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க… நீங்க இப்படி பேசுற ஆள் இல்லனு எனக்கு நல்லாவே தெரியும்…” என்று பட்டென்று பேச,
“அது இல்ல தம்பி… அக்காவும் உன்னைய விசாரிச்சா, நீ அவளுக்கு இங்க வந்து பேசலன்னு, குறையா என்கிட்டே பேசுனா… என்ன இருந்தாலும் உன்னோட அக்கா தானே தம்பி…” என்று சொல்லிவிட்டு, அவன் பதில் சொல்ல காத்திருக்க,
அவனோ, “சரி… அடுத்து என்னன்னு முழுசா சொல்லி முடிங்க…”
“அது வந்து தம்பி… அக்கா பிரியப்படுறா…” என்று சொல்லி நிறுத்த,
“இன்னும் முடிக்கலையே என்னனு…” என்று சற்று கோவமாக கேட்க,
அவளோட நந்தனாரை உனக்கு முடிக்கலாம்னு கேக்குறா தம்பி என்று சொல்ல,
“ரொம்ப நல்லது… அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க?…” என்று அவன் வார்த்தையை விடாமல் பேச,
மகன் எடுத்தெறிந்து பேசாமல், இப்படி கேட்டது கொஞ்சம் தைரியத்தை தர,
நீயும் ஒத்தைல அங்க இருந்து கஷ்டப்படுற, அந்த சிங்காரி வாணி… உங்கிட்ட தாலியை வாங்கிட்டு, அவ பாட்டுக்கே சொல்லாம கொள்ளாம கிளம்பி போயிட்டா… நம்ம வம்சம் தழைக்கணும்ல தம்பி… என்று பேச,
பொறுமையை இழுத்து பிடித்து, “இப்போ என்ன சொல்ல வாரீங்கன்னு சொல்லுங்க…” என்று அவரிடம் கேக்க,
“அதுதான் தம்பி, போனவ போனவாளே இருக்கட்டும்… அவளை அத்துவிட்டுட்டு…” என்று காமாட்சி முடிக்க கூட இல்லை,
“உங்களை அம்மான்னு பாக்குறேன்… இல்லைன்னு வைங்க…” என்று இவன் போனில் கர்ஜிக்க,
அவனின் பேச்சில்… பீதியாக எச்சிலை விழுங்கி கொண்டே, “தம்பி நான்…” என்று ஆரம்பிக்க,
“நீங்க எனக்கு கால் பண்ணும்போதே, என்னடான்னு யோசிச்சேன்… உங்களை எல்லாம் என்னனு நான் சொல்லுறது… அத்துவிட்டுன்னு பேசுறீங்க… நீங்களும் ஒரு பொண்ணு தானே… என்னை பேச வைக்காதீங்க சொல்லிட்டேன்…” என்று போனில் கத்த,
மறுமுனையில் சத்தமே இல்லாமல் இருக்க,
“இன்னமுட்டும் பேசுனீங்களே… இப்போ பேச வேண்டியது தானே…” என்று சொல்லி,
“அத்தையை மட்டும் ரெண்டாம் தரம்ன்னு பேசுவீங்க, இப்போ நான் மட்டும் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கலாம்… அதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல அப்படிதானே…” என்று கோவமாக இறைந்துவிட்டு,
“இனிமே இப்படி என்கிட்டே பேசணும்னு கூட உங்களுக்கு நினைப்பு வர கூடாது… நீங்க அப்பறம் உங்க பொண்ணு என்னலாம் அவளை பேசிருக்கீங்கன்னு எனக்கு தெரியும்…” என்று சொல்லிவிட்டு,
“நான் மது கூட வாழ்ந்தாலும், இல்லனாலும் அவ மட்டும் தான் என்னோட மனைவி… உங்களுக்கு புரியுதா…” என்று அழுத்தி சொல்லிவிட்டு போனை வைத்தான்..
பார்வை வீசும்…
error: Content is protected !!