Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தேவை... பாவை பார்வை...

தேவை… பாவை பார்வை – 11 .1

தேவை… பாவை பார்வை – 11 .1

நிர்மலின் கேபினில்,

“என்னடா மதுக்கூட பேசிட்டியா…” என்று வந்ததும் நிர்மல் கேக்க,

“அடேய், இதுக்கு தான் இப்போ இழுத்து வந்தியா… இன்னைக்கு தான் அவளே என்னைய பாத்தா… அதுக்குள்ள நீ இழுத்துட்டு வந்துட்ட…” என்று அவனை திட்ட,



Advertisement

“சாரிடா மச்சான்… என்னோட டென்ஷன்ல, நீ என்ன பண்ணுனனு கேக்கவே இல்லல… அதான் மதுவை பாத்ததும், உன்கிட்ட கேட்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்…”

“போடா எரும… இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா, அவ என்ன நினைக்குறன்னு கண்டு பிடிக்க முடியுதான்னு பாத்துருப்பேன்… இழுத்துட்டு வந்துட்டு பேசுறான் பாரு…” என்று முறைக்க,

“ம்க்கும்… இவ்வளோ நாள் இல்லாம, இன்னைக்கு தான் நீ கண்டுபிடிக்கவே போறியா… போடா எரும…”

Advertisement

“உனக்கென்னடா குழந்தையும் பொறந்துடிச்சி… நீ பேச தான் செய்வ…” உர்ரென்று பிரகதீஷ் சொல்ல,

Advertisement

“ஹா ஹா… உன்னிலைமையை பாத்தியா… நீ எப்போ கண்டுபிடிச்சி, பேசி, அடுத்த கட்டத்துக்கு போகுறது…” என்று நிர்மல் வெறுப்பேற்ற,

“அடிங்க… உன்னைய…” என்று அவனின் மண்டையில் கொட்ட,

“மதுவை கரெக்ட் பண்றதை விட்டுட்டு என்னைய அடிக்க வந்துட்டான்… தள்ளுடா…”

Advertisement

“நீ பேசுடா, இன்னும் என்னலாம் பேசுறேன்னு நானும் பாக்குறேன்…”

“என்னைய பாக்குறதை விட்டுட்டு மதுவை பாருடா…” என்று சொல்லி நிர்மல்  சிரிக்க,

“நீ சிரிச்சிக்கோ… இப்போ எனக்கு கிளைண்ட் மீட்டிங் இருக்கு… உன்னைய அப்பறம் வந்து பேசிக்குறேன்…” என்று மணியை பார்த்து விட்டு அவனிடம்  சொல்லி, தனது கேபினிற்கு சென்றான் பிரகதீஷ்.

– – – – – –

அவர்கள் சென்றதும், மூவர் கூட்டணி, பேசிய படியே உணவுண்ண,

“எனக்கு போதும் ரேகா… நீ இதுல கொஞ்சம் எடுத்துக்கோயேன்…” என்று மது, தனது வெஜ் பிரைட் ரைஸ்ஸை கொஞ்சம் எடுத்துக்க சொல்ல,

“நான் செம்ம புல் மது… விமல் கிட்ட கேளு…”

“நோ நோ… நோ வெஜ்… ஒன்லி நான்- வெஜ் …” என்று ஸ்டைல் ஆக விமல் சொல்ல,

“ம்க்கும்… சரி விடு மது, முடிஞ்ச அளவு சாப்பிடு… பேலன்ஸ், நான் அப்பறம் சாப்ட்டுக்குறேன்…” என்று ரேகா சொல்ல,

மூவரும் பேசிக்கொண்டு சாப்பிட்டு முடிக்க, அப்போது டேபிளில் இருந்த போன் ஒலியெழுப்ப,

ரேகா அதை பார்த்துவிட்டு, “ஹே பிரகதீஷ், போனை வச்சிட்டு போயிட்டாங்க…” என்று சொல்ல,

மதுவும் சடுதியில் அவனிடம் பேசிவிட முடிவெடுத்து, போனை எடுத்துக்கொண்டு, நான் போயிட்டு குடுத்துவரேன் என்று சொல்லிவிட்டு சென்றாள்.

ரேகாவோ, “என்னடா விம், இவ இப்படிலாம் செய்ய மாட்டாளே…” என்று அவனிடம் ஆச்சர்யாமாக சொல்ல,

“அவ புருஷன் போனை தானே எடுத்துட்டு போறா…” என்று விமல் கூலாக பதில் சொல்ல,

“என்ன!…” என்று ஷாக்குடன் அவனை பார்க்க,

“ஆமா, அவளோட ஈஸ்வர் தான் இந்த பிரகதீஸ்வர்…” என்று சொல்ல,

“என்கிட்ட சொல்லவே இல்ல பாருடா…” என்று சோகமாக சொல்ல,

“என்கிட்டே மட்டும் சொன்னாளா என்ன?, நானே தான் கண்டுபிடிச்சேன்…” என்று சொல்லி,

“அதுமாறி நானும் உன்னைய… என்று விமல் தன் காதலை அவளிடம் சொல்ல வர,

அவனை பேசவிடாமல் கைநீட்டி தடுத்து, “நீ இப்போ எதுவும் சொல்லாத விம்… நான் அவகிட்ட பேசமாட்டேன்… செம்ம கோவமா இருக்கேன்… நீ சொல்லிடு…” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

“ஆண்டவா… இவகிட்ட நான் பேசுறதை மட்டும் கேட்கக்கூடாதுன்னு எழுதி வச்சிட்டியோ…” என்று அவள் எழுந்து சென்றதை பார்த்து புலம்ப மட்டுமே முடிந்தது.

– — – – –

பிரகதீஷின் கேபினை தட்டிக்கொண்டு மது உள்ளே நுழைய,

அவனோ இவளை கவனிக்காமல், ஸிஸ்டெமில் கண்ணை பதித்து, சற்றுமுன் நடந்த மீட்டிங்ல், ஹெட் சொன்ன கரெக்ஷன்ஸ் பார்த்துக்கொண்டு, தலையை கம்ப்யூட்டரில் இருந்து எடுக்காமல், பைவ் மினிட்ஸ் ப்ளீஸ் என்று மட்டும் சொல்லி தன் வேலையை பார்க்க,

மதுவோ, “இவன் வேணும்னே பன்றானோ…” என்ற ரீதியில் அவனை பார்த்துவிட்டு,

ஒரு நிமிடம் சென்று, தான் வந்ததை தெரிவிக்க, டேபிளை தட்ட,

ஸிஸ்டெமில் கவனமா இருந்தவன், தற்போது யாரென்று நிறமிர்து பார்க்க, அங்கே மதுவை பார்த்தவுடன் ஆச்சரியமாக, பின்பு “சொல்லு மது…” என்று கேட்க,

அவளோ தான் கொண்டு வந்த அவனது மொபைலை டேபிளில் வைக்க,

“ஓஹ் தேங்க்ஸ்… மறந்து வச்சிட்டு வந்துட்டேன்…” என்று சொல்லிவிட்டு அவளை பார்க்க,

அவளும் அவனை தான் யோசனையுடன் பாத்துக்கொண்டிருந்தாள்.

“இவ என்ன… இன்னைக்கு நம்பலை நெறைய வாட்டி பாத்துட்டே இருக்கா…” என்று நினைத்து,

“மது…” என்று அழைக்க,

அவள் நிமிர்ந்து,” பேசணும்…” என்றாள் மொட்டையாக,

“ஓஹ் இதுக்குதான் அம்மணி இப்படி பாத்தாங்களா!…” என்று எண்ணிவிட்டு,

“நாம பேசலாம் மது… கண்டிப்பா பேசணும்…” என்று கூறிவிட்டு,

இப்போ எனக்கு ஒர்க் இருக்கு… நான் அதை பாக்கணுமே…” என்று சொல்லி அவளை பார்க்க,

மது அவனை முறைத்து பார்க்க,

அதானே, ” இன்னைக்கு முறைச்சு பாக்கலையேன்னு பாத்தேன்… இந்தா வந்துடிச்சி பாரு முறைப்பு…” என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு,

“நீ முறைச்சு பாத்தாலும்… அது தான் உண்மை…” என்று சொல்லிவிட்டு,

“என்ன பண்ணலாம் சொல்லு…” என்று இப்போது அவளிடமே கேட்க,

அவள் பதில் சொல்லாமல் இருக்க,

“பேசணும்னு சொல்லிட்டு, நீ ஒண்ணுத்தையும் பேசாம, என்னையே முறைச்சு பாத்தா, நான் என்ன பண்ணுறது…” என்று கேட்க,

“இப்போ என்ன சொல்ல வர…” என்று முறைப்பாக கேக்க,

எப்படியும் இங்க நம்மால பேசமுடியாது… நீ எப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு சொல்லமுடியாது…” என்று சொல்லி, நிறுத்திவிட்டு அவளை பார்க்க,

மதுவோ எரித்துவிடுவது போல் பார்க்க,

“நீ இப்போ பாக்குற பாத்தியா… இதை தான் சொல்லுறேன்… இது ஆபீஸ், நம்ம விஷயம் இன்னும் யாருக்கும் தெரியாது… தெரிஞ்சதுக்கு அப்பறம், நீ என்ன பண்ணாலும், ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல…” என்று பேச,

“நீ ரொம்ப ஓவர் ஆஹ் பேசுற…” என்று பல்லை கடித்துக்கொண்டு அவனை பேசவிடாமல் சொல்ல,

“இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற… உண்மையா தானே சொல்லுறேன்…”

“உங்கிட்ட பேசலாம்னு வந்தேன்ல, என்னை சொல்லணும்…”

“மது, லிசன்… இப்போ எனக்கு ஒர்க் இருக்கு… நம்ம பேசணும் தான்… பட் இங்க சரி வராது… நான் சரியா தான் சொல்லுறேன்னு உனக்கும் தெரியும்… இருந்தாலும், நீ பிடிவாதமா நிக்குற…” என்று சொல்லி,

மது வாயை திறந்து, எதுவோ சொல்ல வர,

இரு நான் சொல்லி முடிச்சிடுறேன் என்று மதுவை, பேச விடாமல் பிரகதீஷ் சொல்ல,

அவளும் முறைப்புடன் அவனை பார்க்க,

“ஒன்னும் உன்னோட வீட்டுல பேசலாம்… இல்லனா என்னோட வீட்டுல பேசலாம்… வெளில கூட நம்ம விஷயம் பேச முடியும் தோணல எனக்கு… எங்கன்னு யோசிச்சி சொல்லு… அவ்ளோதான் இப்போ சொல்ல முடியும்…” என்று அவளிடம் சொல்ல,

அவள் அழுத்தமாக பார்க்க,

“நீ இன்னைக்கு நெறைய தடவை என்னை பாத்துட்ட… போதும் பாத்தது…”

“ப்ளீஸ் மது, அண்டர்ஸ்டாண்ட்… நான் இந்த ஒர்க்ல கரெக்ஷன்ஸ் பாத்து சீக்கரம் மெயில் சென்ட் பண்ணனும்…” என்று அவளுக்கு புரியும் படி சொல்ல,

“என்னவோ பண்ணிக்கோ… இதுக்கு மேல நான் பேசலாம்னு வரமாட்டேன் சொல்லிட்டேன்…” என்று அவனிடம் சொல்லிவிட்டு வெளியேறினாள்.

“போடி… இன்னைக்கு தான் இவளுக்கு பேச நேரம் கிடைச்சிருக்கு… ” என்று பிரகதீஷ் அவளை கடிந்துக்கொண்டே தன் வேலையை தொடர்ந்தான்.

இவர்கள் பேசுவதற்கு முன்பே, இவர்களின் உறவை பற்றி அறிவிக்க நல்ல  நேரத்தை பார்த்துக்கொண்டிருந்தான் ஒருவன்.

பார்வை வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!