Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தேவை... பாவை பார்வை...

தேவை… பாவை பார்வை – 14

தேவை… பாவை பார்வை – 14

காலையில் எட்டு மணியளவில் வீட்டின் காலிங் பெல் அடிக்க,

சமையலில் ஈடுபட்டிருந்த பத்மா, “வாணி யாருன்னு போயி பாரு…” என்று அங்கிருந்த குரல் கொடுக்க,

“பூ இல்ல காய் வேணும்னு வர சொல்லிருந்துகளா ம்மா…?…” என்று அன்னையிடம்  கேட்டுக்கொண்டே சென்று சென்று கதவை திறக்க,



Advertisement

அங்கு நின்றவனை சுத்தமாய் எதிர்பாக்கவில்லை, அதுவும் கலையிலையே  என்று அவளின் முகமே அதை கூற,

ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்க்க,

“முறைக்காம பாக்குறா…” என்று முணுமுணுத்து, வாசலுக்கு வெளியில் நின்ற பிரகதீஷும் அவளையே பார்க்க,

Advertisement

“யாரு வாணி…” என்று உள்ளிருந்து கேட்க,

Advertisement

அப்போது தான் சுயம் பெற்று, அவனை இங்க எதுக்கு வந்த என்பது போல் பார்க்க,

“நான் உள்ள வந்ததுக்கு அப்பறம் பாத்துக்கோ என்னைய…” என்று அவன் பேச,

அதற்குள், “வாணி, யாருன்னு கேக்குறேன்…. என்ன பண்ணிட்டு இருக்க…” என்று கேட்டுக்கொண்டே சமையலறையிலிருந்து வெளியே வர,

Advertisement

அங்கு நின்ற அண்ணன் மகனை அவரும் எதிர்பாக்காமல், ஆச்சரிய பாவத்தோடு, “வா ஈஸ்வர்… ஏன் அங்கேயே நிக்குற…” என்று வரவேற்க,

“அத்தை பெத்த ரத்தினம் வழியை மறச்சிட்டு நிக்குறாங்களே…” என்று உதட்டை பிதுக்கியப்படி சொல்ல,

மதுவோ ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்ல,

“கொஞ்சம் முன்னேற்றம் தான்… வாயை திறக்காம போறா…” என்று நினைத்துக்கொண்டே உள்ளே வர,

அண்ணன் மகனின் வரவு, ஒரு புறம் சந்தோசமாகவும், மறுபுறம் கலக்கமாகவும் இருக்க,

சிந்தனையுடனே என்ன விஷயமென்று கேட்க தோணினாலும், என்ன வருமோமென்று அவனையே பார்த்து நிற்க,

அத்தை தன்னையே பார்த்து நிற்பதை பார்த்து, அவரை இலகுவாக்க,

“என்ன அத்தை, என்னையவே பார்த்துட்டு நிக்குறீங்க… நல்லா இருக்கேனா?…” என்று சிரிப்புடன் வினவ ,

அவன் அப்படி கேட்டதும், சுதாரித்து புன்னகையுடன், ” என் அண்ணன் பையனுக்கு என்ன, சும்மா மாப்பிளை மாறி எப்பவும் போல ஜம்முன்னு இருக்க…” என்று கூற,

அத்தை சொன்னதும், தத்தையின் முகத்தை பார்க்க,

அவளோ தன் கையில் உள்ள நகத்தையே மும்மரமாக பார்க்க,

“ம்க்கும்… இவளை உண்மையாவே எனக்கு என்ன பண்றதுனே தெரியலடா சாமி…” என்று முணுமுணுத்து,

“ஒருவேளை இவ அவளா இருப்பாளோ…” என்று அவனின் மூளை தாறுமாறாக கற்பனை செய்ய,

“இரு ஈஸ்வர்… நான் காபி எடுத்து வரேன்…” என்று சொல்லிவிட்டு பத்மா, மகளை ஒரு பார்வை பார்த்து உள்ளே செல்ல,

இன்னமும் தான் வந்த காரணத்தை சொல்லாமல் அவன் இருப்பதை பார்த்து,

மதுவோ, “இவ்வளோ காலைலயே பேச வந்திருக்கானா?….” என்று யோசனையாய் அவனை பார்க்க,

அவள் பார்த்தபடி இருப்பதை பார்த்து, “என்ன?…” என்று புருவமுயர்த்தி கேட்க,

“ஐயோ… இவன் நம்மளை தான் பார்த்துட்டு இருந்தானா…” என்று வாயை பிளந்து பார்க்க,

உள்ளிருந்து காபியுடன் பத்மா வர,

அதை வாங்கிக்கொண்டு, “தேங்க்ஸ் அத்தை…” என்று சொல்லி அதில் ஒரு சிப் அருந்திவிட்டு,

“மது, உன்னை கூட்டிட்டு போலாம்னு தான் வந்தேன்… ஒரு இடத்துக்கு போனும்…” என்று தான் வந்த காரணத்தை கடைசியாக சொல்ல,

மது வாயை திறந்து, என்னவோ சொல்ல வர,

அதற்குள் பத்மாவோ முந்திக்கொண்டு, “போ வாணி… சீக்கரம் கிளம்பி வா…”

“எப்படி வந்து லாக் பண்ணி, என்னைய கூப்பிடுறான் பாரு…” என்று அவனை முறைத்து பார்க்க,

“இந்தா முறைச்சிட்டா பாரு…” என்று அவனும் அவளை போடி என்பது போல் பார்த்துவிட்டு,

அப்பறம் அத்தை, என்று அவரிடம் பிரகதீஷ் பேச தொடங்கிவிட,

தன் அன்னையின் முன்பு ஒன்றும் அவனை ஒன்றும் செய்ய முடியாமல், கிளம்ப சென்றாள்.

சிறிது நேரம் கழித்து, அவளும் கிளம்பி வர,

அவள் வெளிய வந்ததும், இவனும் எழுந்து, “சரி அத்தை… நாங்க கிளம்புறோம்…” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

இவர்கள் இருவரும் காரில் ஏறியதை பார்த்ததும்,

பத்மா, “முருகா… சீக்கரம் இவங்க சேரனும்…” என்று வேண்டிவிட்டு, தன் அண்ணனிற்கு இந்த செய்தியை பகிர்வதற்க்காக, அவரை தொடர்புகொண்டார்.

– – – – –

காரில் ஏறியதிலிருந்து ஒன்றும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு வந்த மதுவை பார்த்த, பிரகதீஷ்ஷோ “இப்படி இருந்தா இவளை எப்படி நான் கரெக்ட் பண்றது…” என்று அவனுக்கு அவனே பேசிக்கொண்டு,

காரில் பாட்டை ஓடவிட,

                      “தந்தன தத்தன தைய்யன தத்தன தான

                            தத்தன தான தையன்ன தந்தனா

                            சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

                            திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி”

என்று பாடல் பாட,

பாட்டினை ரசித்தபடியே ஸ்டெரிங்கில் தாளம் தட்டிக்கொண்டு, அவன் காரினை ஓட்ட, 

மதுவும் கொஞ்சம் கொஞ்சமா பாட்டினில் லயித்து, அவளும் பாடிக்கொண்டே வர,

மங்கையும் சேர்ந்து பாடியதில், ஆச்சரியமாக திரும்பி பார்க்க, அவளோ பாட்டினோடு ஒன்றிவிட்டாள்.

“பாருடா… மதுவுக்கு இந்த பாட்டுல்லாம் உனக்கு தெரியுமா…” என்று அவன் கேட்க,

அவளும் இயல்பாக, ஹ்ம்… தெரியுமே… எனக்கு பிடிக்கும் இந்த பாட்டு…” என்று பதில் சொல்ல,

“சூப்பரா பாடுற…” என்று அவன் பாராட்ட,   

“ஹ்ம்… தேங்க்ஸ்… ரொம்ப நாள் ஆச்சு இப்படி பாடியெல்லாம்…” என்று அவளே பகிர,

அப்போது,  

                    “தானே தானே தான

                        அப்படியா ம் தேவை பாவை பார்வை…”

என்ற பாடல் வரிகள் வர, அவனும் பாடிக்கொண்டே அவளை பார்க்க,

அவளோ தன் கவனம் முழுவதும் பாட்டினில் வைக்க, 

இவளுக்குதான் பாட்டு ரொம்ப பிடிக்கும்ல… இனிமே இவளை இப்படி பாட்டு பேக்கிரௌண்ட்ல போட்டுவிட்டு தான் பேசணும் என்று எண்ணிக்கொண்டு,

திரும்பி அவனே, “எந்த மியூசிக் டைரக்டர் பிடிக்கும்?…” என்று ஆரம்பிக்க,

“அப்படிலாம் எதுவும் இல்ல… எல்லா டைரக்டர் சாங்கும் கேப்பேன்… “

“ஹ்ம் குட்…” என்று சொல்லிக்கொண்டே சிறிது தூரம் சென்று ஒரு மருத்துவமனையின் முன்பு காரை நிறுத்த, இங்க எதுக்கு என்ற கேள்வியோடு அவனை பார்க்க,

அவன் ஒன்றும் சொல்லாமல், அவளை அழைத்துக் கொண்டு மதன் இருக்கும் ரூமிற்க்கு நுழைய,

அங்கு மதனோ, முகத்தில், கையில், காலிலும் கட்டுகள் போட்டிருக்க, பக்கத்தில் அவனின் மனைவி அழுதபடி இருந்தார்.

உள்ளே நுழைந்தவர்களை அவர் கேள்வியாக பார்க்க,

இதை சுத்தமாக மது எதிர்பாக்கவில்லை, அங்கே வைத்து அவனிடம் ஒன்றும் கேக்க முடியாமல் அமைதி காத்தாள்.

வணக்கம்… நான் பிரகதீஷ், இவங்க என்னோட மனைவி, மதன் கூட தான் வேலைபாக்குறோம். அடிபட்டுச்சின்னு கேள்விப்பட்டோம், அதான் பாத்துட்டு போலாம்னு வந்தோம்.

மதனோ அவனை உறுத்து விழித்து பார்த்துக்கொண்டிருந்தான். 

“படியிலருந்து கீழ விழுந்ததா கேள்விபட்டேன், எப்படி ஆச்சுங்க…” என்று அவன் பவ்யமாய் கேட்க,

“அத என்னனு சொல்லுறது சார்… எதோ வேலை போயிடுச்சி, யோசிச்சிட்டே வந்ததுல விழுந்துட்டேன்…அப்படின்னு தட்டு தடுமாறி சொல்லுறார்… குப்புற விழுந்திருப்பர் போல… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைங்க…” என்று அவர் அழுதவாறே சொல்ல,

“நீங்க பேசுங்க… நான் எங்க அப்பா மருந்து வாங்கிட்டு வரங்களான்னு பாக்குறேன்…” என்று அவனின் மனைவி  வெளியே செல்ல,

“உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்… என் பொண்டாட்டியை என் கூடவே மார்பிங் பண்ணி வேலை பாத்துருப்ப… என்னை யாருன்னு நினைச்ச, சாப்ட்வேர்ல வேலை பாத்தா சாப்ட் ஆஹ் எதுவும் கண்டுக்க மாட்டான்னு நினைச்சிட்டியா… போடு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன் சத்தமில்லாம…”

“உனக்கு கீழ பொண்ணு வேலை செஞ்சா, நீ என்ன வேணும்னாலும் பண்ணுவியா… இனிமே எந்த பொண்ணையாவது எதாவது பண்ணலாம்னு யோசிப்ப?…” 

“இந்த அளவோடு இப்ப நிறுத்திருக்கேன்… எதாவது வில்லத்தனம் பண்ணலாம்னு நினைச்ச… மவனே சங்கூதிடுவேன்…” என்று அவனிடம் எச்சரித்து சொல்லிவிட்டு வெளியேறினான்.

சத்தியமாக பிரகதீஷிடம் இப்படி ஒரு கொலைமிரட்டலை அவன் எதிர்பாக்கவே இல்லை. அவனின் முகமே அவன் பேசி சென்றதில் பேயறைந்தது போல் இருந்தது.

மறுபடியும் காரில் வந்து அமர்ந்ததும், மது அவனை கேள்வியாக பார்க்க,

“என்னனு வாயை திறந்து கேளு… நீ இப்படி என்னை பாக்க, நான் விரும்பல…” என்று அவளிடம் ஒற்றை கண்ணடித்து கேட்க,

“எப்படி அவனுக்கு அடிபட்டுச்சி…”

“அதன் அவங்க மனைவி சொன்னாங்களே…”

“நீ எனக்கு உண்மையை சொல்லணும்…” என்று சொல்லி அவனின் கண்ணை பார்க்க,

“லிப்ட் வேலை செய்யலன்னு ஸ்டெப்ஸ் இறங்கி வந்திருக்கான்… அப்போ எதோ பூரான் போச்சாம்… அதை பாத்து பயந்து தடுமாறி மேல இருந்து உருண்டு விழுந்துட்டானாம்…”

அவன் சொன்னதை நம்பாமல் பார்க்க,

“நீ வர வர என்னை, நிறைய மாடுலேஷன்ஸ்ல பாக்குற… ஆனா நான் எதிர்பாக்குறது தான் வர மாட்டேங்குது…” என்று உச்சிக்கொட்டி சொல்ல,

“நான் என்ன கேக்குறேன்… நீ என்ன பேசுற…” என்று கடுப்படிக்க,

“அதே தான் நானும் சொல்லுறேன்… உங்கிட்ட பொறுமையா பேசலாம்னு நினைச்சி இருந்தேன்… அப்படி இனிமே பண்ண முடியாதுன்னு இந்த விஷயத்துல முடிவெடுத்துட்டேன்… அதனால…”

“அதனால?”

“உன்னை நீயும் நானும் ஒர்க் ப்ரம் ஹோம்… இன்னைக்கு பேசிட்டு தான் மறுவேலை…”

“என்னால முடியாது…”

“எல்லாம் முடியும்… இன்னைக்கு பேசியே ஆகணும்… நாளைக்கு ஊருல இருந்து அப்பா, அம்மா, அக்கா எல்லாரையும் வர சொல்லிட்டேன்.”

“நாளன்னைக்கு உன்னை முறையா, அங்க நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துருவேன்…”

அவள் முறைத்து பார்க்க,

அவள் முறைப்பதை பொருட்படுத்தாமல் காரை அவனின் வீட்டை நோக்கி செலுத்தினான்.

அவள் சொன்ன விஷயத்தை கேட்டு, இவளை என்ன செய்தால் தகும் என்று அவன் இப்போது அவளை முறைத்து பார்த்தான்.

பார்வை வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!