Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 21

அத்தியாயம் 21

கோவில் வளாகத்திலிருந்து வேகமாய் வெளிவந்தவனின் பார்வையில் அசோக்கும், ஆரியும் விழுந்தனர்.



Advertisement

அவள் நின்றிருந்த விதமே கூறியது அசோக் அனைத்தும் கூறிவிட்டான் என்று. தான் கூறியதை எப்படியும் அவளிடம் பகிர்ந்து விடுவான் என்பது திண்ணம் தான் என்றாலும் அது இப்போதே நடக்குமென்று கிஞ்சதமும் எண்ணவில்லை.

வாயில் காற்றை நிரப்பி “உப்…” என வெளியிட்டவன்  அசோக்கிடம் பேசியதை அசைப்போட்டப்படியே அவர்களை நோக்கி நடந்தான்.

Advertisement

Advertisement

“ஹலோ அசோக் சார்?…”என ஆரம்பித்தவன் முறையாக தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

” ஏகலைவன் சொல்லுங்க, என்ன இந்த நேரத்தில? இம்போர்ட்டன் நியூஷா இருந்தா மட்டும் சொல்லுங்க இல்லைன்னா நான் ஈவினிங் கால் பண்றேன்…” என்றதும்

Advertisement

“ஆரியை பத்தி கொஞ்சம் பேசணும்…” எனக் கூறினான் பட்டென்று

“ஆரி பத்தி நீங்க என்ன பேச போறீங்க ஏகலைவன்…” என விசாரித்தான் அசோக். அவன் கேட்டதும் இன்று கோவிலில் நடந்த அனைத்தையும் கூறினான்.

” இன்னைக்கு சும்மா விட்டுட்டேன் மறுபடியும் இனி இது போல உங்கம்மா ஏதாவது பேசினா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது சார்…” கிட்டதட்ட மிரட்டவே செய்தான். அதற்கு அசோக்கிடம் பதிலில்லை  ஆழ்ந்த அமைதி. அவனின் அமைதியெல்லாம் இவன் கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை மேலும் பேசினான்.

“உங்க ப்ரெண்ட்ஷிப் வெளிய தப்பா போகுதுன்னு தெரிஞ்சும் நீங்க அதை கண்டுக்காம இருக்கிறது எனக்கு சந்தேகமா இருக்கு, அண்ட் உங்கம்மா உங்களை அடக்கி வைக்காம ஆரியை அடக்கி வைக்க நினைக்கிறாங்கன்னா எனக்கு என்னமோ சரியாப்படலை… ம்ம் வெளியே எல்லாரும் பேசிக்கிற   மாதிரி உண்மையாவே நடந்தா நல்லா இருக்கும்னு நீங்களும் நினைக்கிறீங்களோ…” எனக் கேட்டவன் குரலில் அத்தனை இறுக்கம்.

கலையின் பேச்சில் அசோக்கின் பொறுமை எல்லையை தாண்டியது “ஏகலைவன் திஸ் அ லிமிட்…”என கத்தினான்.

அவனின் கத்ததில் இடியென நகைத்தவன் “என்னைவிட, உங்கம்மா லிமிட் இல்லாம தான் சார் பேசனாங்க, அதை முதல்ல போயி கேளுங்க…” என்றதும் எதிர்ப்புறம் ஆழ்ந்த அமைதி.

தற்பொழுது அசோக்கின் இந்த அமைதி கலையை எரிச்சலுட்டியது. அதே எரிச்சலை குரலில் தேக்கி

“கூடிய சீக்கிரம் எங்க கல்யாணத்துக்கு உங்களை இன்வைட் பண்றேன் சார்…” என்றவன் மீண்டும்

“ஒன்ஸ் அகைன் இனிமே என் ஆராவை உங்க அம்மா ஏதாவது பேசினாங்கன்னு என் காதுக்கு வந்துச்சு. இன்னைக்கு சும்மா விட்ட மாதிரி விட மாட்டேன் என்னவென நடக்கலாம். இதை நீங்க மிரட்டறாத கூட நினைச்சுக்கோங்க எனக்கு அதைப்பத்தி கவலை இல்லை…” எனக் கூறவும்   குளியலறையிலிருந்து ஆரி வரவும் சரியாக இருந்தது..  அக்கணம் அசோக்கின் பதிலை கூட கேட்காது அழைப்பை துண்டித்தான் ஏகலைவன்.

அதற்கு பின் நடந்தவைகள்  நாம் அறிந்ததே

****

நடந்த அனைத்தையும் அசோக் சொல்ல சொல்ல அவனின்

பேச்சை துளியும் ஜீரணிக்க முடியாமல் நின்றிருந்தாள் ஆரி. முதலில் தாயின் பேச்சிற்கும், நடந்து கொண்ட விதத்திற்கும் மன்னிப்பை கேட்டவன் அடுத்தடுத்து கூறிய செய்தியிலும்,வாழ்த்திலும் ஆரியின் நயனங்கள் இரண்டும் கோபத்தில் சிவந்தது…

மங்கையின் விழியில் நேர்ந்த மாற்றத்தை  கண்டுகொள்ளாமல் தன் மனதின் சந்தோசத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தான் அவன்  “ஆர்யா. ஐம் சோ ஹாப்பி ஃபார் யூ.. ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் திஸ்.. யூவர் டெசிஷன் இஸ் ரியலி வார்ம் டூ மை ஹார்ட்.. எங்க நீ பழசை நெனச்சு மேரேஜ்ல  இன்ட்ரெஸ்ட் காட்டாம இருந்தது கில்டியா இருந்துச்சு ஆர்யா. பட் நவ்.. எனக்கு எந்த கில்டும் இல்ல.அண்ட் ஃபைனலி யூ சூஸ் கலை.. தட்ஸ் ஆடிங் செர்ரி டூ தி கேக்…” அசோக் பேச பேச கலையின் மீது அத்தனை கோபம் வந்தது அவளுக்கு.

‘கொஞ்சம் சிரித்து பேசிவிட்டால் ஆண் புத்தியை காட்டி விடுகிறான்…’ என நினைத்துக் கொண்டே அசோக் பேசுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் இதழ்களிலிருந்து அடுத்தடுத்த வெளிவந்த வார்த்தைகள் கலையின் மீதிருந்த கோபத்தை பின்னுக்கு தள்ளிருந்தது.

“வாட் ஆர் யூ டாக்கிங் அபவுட் மிஸ்டர் அசோக்.. என் லைஃப நினச்சு உங்களுக்கு என்ன கில்ட்?  ஐ கான்ட் கெட் இட். டூ யூ திங்க் தாட் யூவர் மெமரி மேக்ஸ் மி டம்.” எனக் கத்தவும் கலை அவளின்  அருகில் வரவும் சரியாக இருந்தது. தற்போது அசோக்கின் பார்வை தனக்கு ஆபத்பாந்தவனாய் வந்த கலையின் மீது விழுந்தது, அசோக்கின் பார்வையை  தொடர்ந்து ஆரியின் பார்வையும் எதிரில் வந்த கலையின் மீது விழுந்தது..

“ஐயோ பார்க்குறா…” என்று மனம் படபடவென அடித்துக் கொண்டாலும்  அதனை துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆரியின் பக்கம் சென்றான் ஏகலைவன்.

தன் அருகில் வந்தவனையும் அசோக்கையும் ஒரு பார்வை பார்த்தவள் அதற்கு மேல் பேசாமல் விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தாள், செல்லும் பெண்மானை பார்த்தவன் நேராக  அசோக்கிடம் சென்று  தற்போது நடந்ததை கூறி மீண்டுமொருமுறை எச்சரித்து விட்டு மங்கையை நோக்கி நகர்ந்தான்.

“ஆரியா நில்லு மா, ஆரா… ஆரா நில்லு…” என அழைத்தப்படியே மங்கையின் பின் சென்றவன் கண் இமைக்கும் நேரம் அவளின் முன் நின்றான். தன்னை வழிமறித்து நின்றவனை புருவங்கள் உயர்த்தி அழுத்தமாக பார்த்தாள். அவளின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தவன் “எதுவா இருந்தாலும் வீட்டுல போயி பேசிக்கலாம் வா…” என அழைத்தான். அவனின் இதழ் அசைவை கூர்ந்து கவனித்தவள் பதில் பேசாது முன்னால் நடக்க மீண்டும் அவளுக்கு முன் சென்று நின்றவன் “பிளீஸ்…” கண்கள் இரண்டும் கெஞ்ச ஆயிரம் பிளீஸ் போட்டவனை  ஆழ்ந்து பார்த்தாள்.

நிமிடம் கண்களை இறுக மூடி திறந்தவள் அவனை பார்க்காது திரும்பி நின்றுக் கொண்டாள். மங்கை மேலும் நடக்காமல் நின்ற விதமே அவள் தான் கேட்டதற்கு சரியென்று விட்டாள் என புரிந்து கொண்டவன் அவசரமாக காரை நோக்கி நடந்தான். அதே கணம் தந்தையிடம் கேப் புக் செய்து விட்டதாகவும் இன்னும் சில நிமிடங்களில் கேப் வந்துவிடும் என்பதையும் தெரிவித்திருந்தான்.

நேராக ஆரியின் முன் வாகனத்தை நிறுத்தியவன் காரில் அமர்ந்தபடியே  முன் கதவை திறந்து விட்டான். ஆடவனை ஒரு பார்வை பார்த்தபடி காரில் ஏறி அமர்ந்தவள் கண்களை இறுக மூடி அமர்ந்து விட்டாள். அப்போது தொடங்கிய மெளன போர் அவளின் வீடு வரையிலுமே தொடர்ந்தது…

எப்போதும் போல திட்டியிருந்தால் கூட  மனம் இத்தனை தவித்திருக்காதோ என்னவோ பாவையின் மெளனம் அவனை  தவிக்க வைத்தது..  அந்த தவிப்பும்,துடிப்பும் அவள் வீடு வரையிலும் தொடர்ந்தது…

வீட்டை நெருங்குவதற்குள் எப்படியாவது தன்னை பற்றியும் தான் கூறியதை பற்றியும் எடுத்து சொல்ல வேண்டுமென்று நினைத்தான். அதனாலயே ஆரியின் வீடு வந்தும் கார் கதவை திறக்காது லாக்கில் வைத்திருந்தான்.

வாகனம் நின்றதை கூட சில நிமிடங்கள் கடந்தே உணர்ந்தாள் ஆரி.. இறுக மூடியிருந்த கண்களை பட்டென திறந்தவள் பார்வையை சுழல விட அவள் மட்டுமே தங்கியிருக்கும் அந்த ஒற்றை வீடு தென்பட்டது.. நீண்ட நெடிய பெருமூச்சு விட்டு தன்னை சமன் செய்து கொண்டவள் கார் கதவை திறக்க அதுவோ திறக்காது அடம் பிடித்தது… நிமிடம் கதவுகளை திறக்க முயற்சித்தவள் அது முடியாமல் போனதும் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவனை கோபமாக பார்த்தாள்.

“உங்க கிட்ட பேசணும் மேடம்…” என்றான் மெல்லிய குரலில்.  அவனின் பேச்சை கண்டுகொள்ளாமல் வேகமாக கார் கதவுகளை திறக்க முயற்சிக்க எக்கி அவளின் கையை பிடித்தான்.

அவன் கையை பிடித்த அதே வேகத்தில் பட்பட்டென இரு கன்னங்களிலும் அறைந்தாள்.

அவள் அறைந்ததில் அத்தனை கோபம் வந்தது கலைக்கு… கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே விழிகளை இறுக மூடித் திறந்தவன்

“நான் சொல்றதை கேளுங்க, உங்களுக்காக தான் நான் இப்படி…” என சொல்ல சொல்லவே

“என்ன எனக்காகவா… எனக்காக பண்ண நீ யாரு டா…” எனக் கத்தினாள். ஆடவனை அடித்ததில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் பழைய நிலைக்கு திருப்பியது..

‘ டா வா, அது சரி…’ என மனதில் அதிர்ந்தாலும்  “எதுக்காக இப்படி கோப படறீங்க…” என பொறுமையாக கேட்டான். அவன் பொறுமையில் இவளின் பொறுமை ஏகத்திற்கும் பறந்தது.

“எதுக்காக கோபப்படறானா… ஏன்னு தெரியாதா உனக்கு, என்ன சொல்லிட்டு வந்து இருக்க அவங்க கிட்ட… ஆல்ரெடி கல்யாணமாவனை வளைச்சு போட்டுட்டேன்னு இருக்கற பேர் போதாதா, இப்ப ஒன்னை விட்டுட்டு இன்னொன்ன பிடிங்கர மாதிரி நீ வந்ததும் அவனை விட்டுட்டேன்னு பேர் வரணுமா எனக்கு…” எனக் கேட்டவளின் குரலில் அத்தனை ரௌத்திரம் இருந்தது.

ப்பூவையின்  கோபத்தை கண்டுகொள்ளாமல்  “அந்த காட்டெருமையையும்  உங்களையும்  தப்பா பேசும் போது எப்படி கண்டுக்காம இருந்தீங்களோ அப்படியே இப்பவும் இருங்க…” என்றான்.

ஆடவன் பேச்சில் வந்ததே கோபம் புசுபுசுவென மூச்சை வெளியிட்டவள் “அறிவுக் கெட்டத் தனமா பேசாத கலை…” எனக் கத்தினாள்.

“என்ன அறிவிக்கெட்டத்தனமா பேசிட்டாங்க இங்க… உண்மையை தானே சொல்றேன் இரண்டு மூணு வருசமா இப்படியான பேர்ல தானே சுத்திட்டு இருக்கீங்க… இப்ப நான் சொன்னதுல அந்த பேர் மறைஞ்சு தான் போகுமே தவிர புதுசா ஒன்னும் கிரியேட் ஆகாது…” என விராப்பாக கூறவும் இவள் பல்லைக் கடித்தாள்.

“உனக்கு அந்தம்மாவை பத்தி தெரியல, தான் பெத்த பிள்ளைன்னு கூட பார்க்காம நாக்கு மேல பல்லைப் போட்டு பேசுச்சு.  இப்ப சொல்லவா வேணும்? ஊருல இருக்கிற ஒரு ஆம்பளையை விடறது இல்லைன்னு ஊரு முழுக்க சொல்லி வைக்கும். கோவில்ல அது பேசும் போது சும்மா விட்டிருந்தா கூட வெறும் பேச்சோட போயிருக்கும்.ஆனா நீ பண்ண வேலைக்கு சும்மா மட்டும் போகாது கண்டிப்பா ஏதாவது பண்ணுவாங்க…” என்றாள் கடுப்பான குரலில்

“ஊரை பத்தி கவலைப்படற ஆளா நீங்க…”நக்கல் நார்தனமாடியது அவனது குரலில். அதற்கு அவளிடம் பதிலில்லை வெறும் முறைப்பு மட்டுமே அவளிடமிருந்து வெளிப்பட்டது.

அவளின் முறைப்பில் நீண்ட நெடிய பெருமூச்சுடன்   “அப்படி மட்டும் நடந்த நான் சும்மா விடுவேனா?…” எனக் கேட்டான் பொறுமையாக.

” காது கேட்காதவ, அப்பா அம்மா வேற இல்லை, யாரு என்ன பேசினாலும் கேட்க நாதி இல்லை, நம்மாளாவது கேட்போன்னு நினைச்சிட்டு  என் மேல  பரிதாபப்பட்டு இப்படியெல்லாம் பேசிட்டு வந்தியா?…” எனக் கேட்டாள்.  அவனிடம் ஆழ்ந்த அமைதி மட்டுமே பதிலாக கிடைத்தது. அவனது அமைதியில் இவளது சீற்றம் நிமிடத்திற்கு நிமிடம் எகிறி கொண்டே போனது.

“உன்னோட இந்த யூஸ்லெஸ் பரிதாபத்தையும் அக்கறையையும் காட்ட நான் தான் கிடைச்சனா… என்மேல பரிதாபப் படவும் அக்கறைபடவும் நீ யாரு டா… என்னை ஏன் டா நிம்மதியா இருக்க விட மாட்றீங்க…”எனக் கத்தினாள்.

‘ என்னை ஏன் டா நிம்மதியா  விட மாட்றீங்க…’ என்ற பாவையின் வார்த்தையில் கோபம் வர தன் சிம்ம குரலில் பேசலானன்.

“கொஞ்சம் வாயை மூடறீங்களா,  கோவிலுன்னு கூட பார்க்காம அந்த கிழவி அந்த பேச்சு பேசுது அதை ஒன்னும் சொல்லாம எருமை மாதிரி நிக்கறீங்க…”

“….”

“அப்பவே அந்த கிழவி பேசன பேச்சுக்கு நாக்கை புடுங்கர மாதிரி கேட்டுட்டு வரலாம் தான் நினைச்சேன் கோவிலுண்ணு தான் கம்னு வந்தேன்…”

“…”

” கார்ல வரும் போது,  உன் மூஞ்சிய  கண்கொண்டு பார்க்க முடியல. வாய்விட்டு கதற முடியாம அந்த அழுகையை அடக்கிட்டே நெஞ்சை தடவிட்டே வந்தயே, செத்துட்டேன் டி… உன்னை விட்டு நகர முடியாதளவுக்கு என் கண்ணுக்குள்ள வந்து நிக்குது உன் முகம். அதையும் மீறி உன்னை விட்டுட்டு எப்படி போவேன்…”

“அதுக்கு அப்பறம் அந்த ரூம்ல யாருமே இல்லாத அனாதை மாதிரி அழுதியே ஒரு அழுகை…எப்படி டி அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியும், ஆபிஸ்ல கெத்தா சுத்திட்டு இருந்தவ இப்படி மனசு உடைஞ்சு அழறயேன்னு பாவம் பார்த்து நான் அந்த காட்டேரி கிட்டயும் அவனோட அம்மாகிட்டயும் பேசிட்டு வந்தேன். ஆனால் நீ அதெல்லாம் கண்டுக்காம என்கிட்ட எகிறிட்டு நிக்கற, நான் உன் நிம்மதியை கெடுக்கிறானா…”

” அப்பறம் என்ன கேட்ட? உன்மேல எனக்கு என்ன அக்கறைன்னா?  இதோ பாரு நீன்னு இல்லை அந்த இடத்தில யாரா இருந்தாலும் அப்படி தான் பண்ணிருப்பேன்… பெருசா பேச வந்துட்டா…” என்று அவளுக்கு மேல் கத்தினான் அவன். அவனின் பேச்சை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தவள் கண்களை தாண்டி வழிந்த கண்ணீரை துடைத்தப்படி

“ஓ, எவளா இருந்தாலும்  எனக்கும்  அவளுக்கும் கல்யாணம் ஆக போகுதுன்னு சொல்லி இருப்பியா…” எனக் கேட்டதும் நிமிடம் அவனிடம் பதில் இல்லை…

“அது அப்படி சொன்னா தான் மறுபடியும் உன்னையும் அவனையும் தப்பா பேச மாட்டாங்கன்னு சொன்னேன்…” என்றான் மெல்ல

“ம்ம்…” என புருவத்தை உயர்த்தி பார்த்தாள்.  அவளின் பார்வையில் தெரிந்த கேலி இவனுக்கு இன்னும் கோபத்தை கொடுத்தது.

“இப்ப என்ன பண்ண வேணும்னு சொல்ற…”

“நீ பண்ண கிறுக்குத்தனத்தை சரி பண்ண வேணும்…” என்றாள். அவளின் பேச்சில் பல்லைக் கடித்தான் ஏகலைவன்.

“முதல்ல அவங்களை அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்கணும்… அண்ட் நாம கல்யாணம் பண்ணிக்க போறோம் சொன்னத பொய்யின்னு சொல்லணும். எனக்கும் உனக்கும் நடுவுல ஒன்னுமில்லைன்னு சொல்லணும்…” என்றதும் ஏனோ கோபம் வந்தது கலைக்கு.

அவனைப் பொறுத்தவரை அவன் அசோக்கிடம் கூறியதும் கோவிலில் நடந்து கொண்டது அனைத்தும் சரியே.. அப்படியிருக்க தன்னை முட்டாளாக்கி, கிறுக்கானாக்கி, பைத்தியமாக்கும் மங்கையை கோபம் மீதுற பார்த்தவன்

“முடியாது டி…  உனக்கும் எனக்கும் நடுவுல ஒன்னுமில்லைங்கறத வேணா பொய்யாக்கிடலாம் ” என்றவன் கண் இமைக்கும் நொடியில் மங்கையை தன் கைக்களுக்குள் கொண்டு வந்திருந்தான். அவனின் பிடியில் திமிறியப்படி “என்னை விடு, கலை…” எனக் கத்தினாள்

“முடியாது…” என்று மங்கையின் கைகளை தன் ஒற்றை கைகளுக்குள் அடக்கிக் கொண்டான்.

“இப்ப என்னை விட போறயா இல்லையா, என் கோபத்தை பத்தி உனக்கு முழுசா தெரியாது …” என பல்லைக் கடித்தாள்.

“சரி தெரிஞ்சுக்கிறேன்…” எனக் கூறியவனின் கை மங்கையின் இடையை வளைத்து  பிடித்து தன்னை நோக்கி இழுத்திருந்தது…

அவனை எதிர்க்க முடியாத தன் நிலையும் அவனின் பலமும், அவன் கைகளுக்குள் அடங்கி இருக்கும் தன்னை  நினைத்து அவமானமாக இருந்தது.

அவன் வாய் மொழியில் பாவையின் கன்னங்கள் கோபத்தில் சிவந்திருந்தது… இங்கு அவனோ கோபத்தில் என்ன செய்கிறோம் என உணராதவனாய் அவளின் இடையில் மேலும் அழுத்தம் கூட்டி  மங்கையின் கீழ் இதழ்களை

தன் இதழ்களுக்குள் வன்மையாக அதக்கிக் கொண்டான்.

***

கலை dea… சும்மாவே உனக்கு பொங்கல் தான்🤭🤭🤭 வா ஓடிடலாம்🚶🚶🚶🚶🚶🚶

லேட்டு லேட்டு மொத்தமா லேட்டு🤧🤧🤧🤧 சாரி dears.. இனி தினமும் வரும்.. இந்த வாரம் கதை முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!