Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தேவை... பாவை பார்வை...

தேவை… பாவை பார்வை – 18 

தேவை… பாவை பார்வை – 18

அனைவரும் கிளம்பி சென்றதும், வீட்டில் எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது.

மதுவின் முகத்தை பார்த்த பிரகதீஷ், அவளின் யோசனையில் படிந்த அவளின் விழிகளை பார்த்து விட்டு,

ஒன்றும் சொல்லாமல், கிட்சேன் சென்று இருவருக்கும் காபி போட்டு எடுத்து வந்த பின்னரும் அவளின் யோசனையிலிருந்து வெளிவரவில்லை.



Advertisement

“என்னங்க மிஸ்ஸஸ் மதுரவாணி ஈஸ்வரன்…” என்று அழுத்தி சொல்லி, அவளை அழைக்க,

யோசனையில் உழன்றவள், இவன் அழைத்ததும், ஒரு திடிக்கிடலுடன் அவனை பார்க்க,

“யோசனை ரொம்ப பலமா இருக்கு… தியாகச் செம்மல், இன்னும் எத்தனை பேருக்கு, இப்படி வாரி வள்ளல் மாறி உன் சைன் போட்டு குடுத்துருக்கேன்னு  யோசிக்குறியா?…” என்று இலகுவாக கேட்டு, அவளின் கையில் காபி கோப்பையை திணிக்க,

Advertisement

அவன் சொன்னது, முதலில் விளங்கிக்கொள்ளாமல் மௌனமாய் அவனை ஏறிட, பின்பு அவன் சொன்னது விளங்கியதும்,

Advertisement

பல்லைக்கடித்து அவனை முறைத்து பார்த்தாள்.

“ஹப்பா… இப்போதான் நீனே எனக்கு தெரியுது…”

“இல்லனா, எனக்கே யாருடன்னு  பக்குனு ஆயிடுச்சினா பாத்துக்கோயேன்…” என்று அவன் நீட்டி முழக்க,

Advertisement

“உனக்கு என்னைய ஏதாவது இப்படி சொல்லிட்டே இருக்கணுமா…” என்று அவள் கடுப்பாக கேட்க,

“ஆமா… எனக்கு ஆசை பாரு… உன்னைய இப்படி பக்கத்துல வச்சிக்கிட்டு இப்படிலாம் பேசணும்னு…” என்று முன்பாதியை சத்தமாக சொல்லி, பின்பாதியை முணுமுணுத்து,

“நீ இப்படி என்கிட்டே பேசாம, கப்பல் கவுந்துடுச்சேன்னு உக்காந்திருந்தா, நான் அப்பறம் என்ன பண்ணுறது…”

“பச்… நான் எவ்வளோ முட்டாளா இருந்திருக்கேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்…”

“அது தான் தெரிஞ்ச கதையாச்சே…” என்று குறும்பாக சொல்ல,

“என்ன? நான் முட்டாள்ன்னு சொன்னதா…” என முறைப்புடன் கேக்க,

“இங்க பாரு… நீ தான் சொன்ன… நான் பதில் சொன்னேன் அவ்ளோதான்…”

“சும்மா இப்படி இனிமே முறைச்சி, முறைச்சி பாக்காத… அதான் முறை பொண்ணுலேந்து பொண்டாட்டி ஆஹ் மாறியாச்சுல… அப்பறம் எதுக்கு முறைக்குற…”

“இப்போ என்ன பண்ணனும்னு சொல்லுற…” என்று சலித்தவளாக கேட்டு,

“எனக்கு, நான் என்ன யோசிக்குறேனே புரியல… இதுல நீ வேற நொய் நொய்யின்னு இம்சை பண்ணுற…”

“அடப்பாவி… புருஷன் பேசுறது உனக்கு இம்சை ஆஹ் இருக்கா…”

“ஆமா பெரிய புருஷன்… போடா இம்சை…”

“அதுசரி… நல்லா வளந்திருக்குற ம்மா ஒத்த ரோசா…”

“மாமா பையன்னா இருந்த போதும் மதிப்பில்ல… இப்போ புருஷன் ஆகியும் ஒரு மட்டு மரியாதை இல்ல…”

“திடீர்ன்னு நீ வந்து நிப்பன்னு, நான் என்ன கனவா கண்டேன்…”

“ஆமாமா… என்கிட்ட ஒன்னும் கேக்காமயே, நீயா சைன் போட்டு கொடுத்தவளாச்சே… அப்போ கண்டிப்பா நான் வந்து தீடீருன்னு குதிப்பேன்னு நினைச்சிருக்க மாட்ட தான்…”

“இங்க பாரேன்… நீ சும்மா இதையே சொல்லி காமிக்காத…”

“ஒகே சொல்லி காமிக்கலை… நீ எப்படி நம்புன?

“ஒருவேளை நாம ஒழுங்கா அன்னைக்கு பேசிருந்தா, யோசிச்சிருப்பேனோ என்னமோ…”

“அந்த கனிமொழி பேசுனதும், எனக்கு தோணுனது இது தான்… நீ அன்னைக்கு என்கிட்ட இதை தான் பேச வந்திருப்பியோன்னு ஒரு எண்ணம்…”

 “நம்மால எதுக்கு வீண் பிரச்சனைன்னு நெனச்சி தான் சைன் போட்டு கொடுத்தேன்…”

“நானே அங்க இருந்து கிளம்பிடணும்னு, இருந்த அப்பதான், உங்க வீட்டுல உள்ளவங்க அவ்வளோ அசிங்கமா பேசுனாங்க… நான் அடிக்குற அளவுக்கு போயிட்டேன்… அதுக்கும் சேர்த்து வச்சி, அவங்களே இட்டுக்கட்டி பேசுனாங்க…”

“அதுக்கு மேல, அங்க இருக்க முடியாம கிளம்பிட்டேன்…”

பிரகதீஷ், “அத்தை, நீ வீட்டை விட்டு வந்ததுக்கு, காரணம் கேக்கலையா?…”

“கேட்டாங்க தான்… என்னால அவங்க பேசுனதை கேக்கக்கூட முடியலை… இதுல என்னைய அதையே சொல்ல சொல்லதிங்கன்னு சொல்லிட்டேன்…”

“அப்பறம் அவங்களுக்கு, என்ன தோணுச்சோ, என்கிட்டே கேக்கவே இல்ல…”

“அடுத்த ரெண்டு நாளுல, இங்க சென்னை வந்துட்டேன்… வேலை தேடிக்கலாம்னு… என் கூடபடிச்ச பொண்ணு தான், ஹெல்ப் பண்ணுனா… இப்போ அவ இங்க இல்ல… கல்யாணம் ஆகி பெங்களூரு போயிட்டா…” என்று முடித்தாள்.

“ம்ம்… அப்பறம் சொல்லு…”

“வேற என்ன சொல்லணும்…”

“உங்க மாமா, உங்களை பாக்க வரலையா?…”

“மாமாக்கு லாரி விட்டு, இறங்குன அன்னைக்கு விஷயம் தெரிஞ்சி, பதறி கால் பண்ணாங்க…”

“நாங்க நல்லா இருக்கணும்னு நினச்சா… நீங்க எங்களுக்கு போன் பண்ணாதிங்கன்னு சொல்லி வச்சிட்டேன்…”

“எங்க அம்மாகிட்டயும், கண்டிப்பா பேச கூடாதுன்னு, சொல்லிவச்சுட்டேன்… சிம் கூட மாத்திட்டேன்… எங்க அம்மா, எனக்கு தெரியாம, பேசிட்டு தான் இருந்திருக்காங்க, இப்போ கொஞ்ச நாளுக்கு முன்ன தான் கண்டுபிடிச்சேன்…”

“ம்ம்… அப்பா கால் பண்ணி எனக்கு விஷயம் சொன்னாங்க… நான் தான், நான் ஊருக்கு வரும் போது, பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்… அப்பறம் அத்தைக்கு மட்டும் ஒரு தடவை, பேசிட்டு வச்சிட்டேன்…”

“நான் ஒன்னு கேக்கவா…” என்று கொஞ்சம் தயங்கி கேட்டு, அவனை பார்க்க,

அவளின் தயக்கத்தை அவதானித்துக் கொண்டே, “என்ன கேக்கணுமோ, இப்படி தயங்காம கேளு… நான் உன் புருஷன் தானே…” என்று இலகுவாக சொல்ல,

“இல்ல… நீ எப்படி, இப்படி…” என்று கேக்கவராமல் அவனை பார்த்து முழிக்க,

“எதுக்கு இந்த முழி, முழிக்குற…”

“என்ன கேக்கணும் உனக்கு, நேரடியா கேளு…”

“அது வந்து, நீ இப்படி என்னை பொண்டாட்டி, புருஷன்னு…” என்று முடிக்காமல் அவனை பார்க்க,

“ஒகே… நீ என்ன கேக்க வரேன்னு எனக்கு புரியுது… எப்படி உரிமையா சொல்லுறேன்னு கேக்குற?, கரெக்ட்?”

அவள் ஆம் என்பதை தலையை ஆட்ட,

“அதுக்கு எல்லாம் காரணம், நான் உனக்கு கட்டுன தாலி தான்…”

“நீ அதை கழட்டி வச்சிருந்தீனா, நான் உங்கிட்ட இப்படி உரிமையா, கண்டிப்பா நடந்திருக்க மாட்டேன்… அது தான் எனக்கு இப்படி ஒரு உரிமையான பந்தத்தை, குடுத்தது…” என்று அவள் அணிந்திருந்த தாலியை பார்த்தவாறே சொன்னான்.

“நான் முதல் நாள் ஆபீஸ்ல, நீ வரும் போதே பார்த்துட்டேன்… அப்பவே, உம் முன்னாடி நின்னு, உன்னோட ரியாக்ஷன் பாக்கலாம்னு கூட யோசிச்சேன்… அப்பறம் மீட்டிங்ல என்னைய எப்படி பாப்பன்னு, பாக்கலாம்னு பாத்தா, செம பல்பு எனக்கு…”

அவளின் உதட்டில், மெல்லிய சிரிப்பொன்று தோன்ற,

அதனை பார்த்துக் கொண்டே, “நல்லாவே கூட சிரிங்க மேடம்…” என்று அவளின் சிரிப்பில் கண்ணுற்று,

“அப்பறம் இதுவும் கூட, நல்லா இருக்கேன்னு நினைச்சி, நீங்க சாப்பிடும் போது வந்தது…”

“இந்த விமல், அன்னைக்கு ஆபீஸ் முடிச்சிட்டு, கிளம்பும் போதே, லைட் ஆஹ் விசாரிச்சான்… நான் மழுப்பிட்டேன்… அதுக்கப்பறம் தான், அவன்கிட்ட ஹெல்ப் கேட்டது… எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா…” என்று சொல்லி முடித்தான்.

இப்போ மது கொஞ்சம் தெளிந்து, ” அப்போ ஏன், நீ வந்த அப்போவே, என்கிட்டே வந்து பேசல?…”

“உண்மையா சொல்லனும்னா, உங்கிட்ட அன்னைக்கே பேசிடலாம்னு தான் வந்தேன்… அப்பறம் அன்னைக்கு, நீ நடந்துக்கிட்டதை பார்த்துட்டு, நிதானமா பேசணும்னு இருந்தேன்…”

“எங்க?, ஒன்னும் கதைக்கு ஆகல… கடைசில இந்த மதன் புண்ணியத்துல, என் வாழ்க்கையை காப்பாத்திக்கிட்டேன்…”

அவன் சொன்னதை கேட்டது, என்னவென்பது போல் பார்க்க,

“ஆமா… அன்னைக்கு நான் என் பொண்டாட்டின்னு அங்க சொல்லும் போது, அம்மணி கம்முனு தானே இருந்தீங்க?… அப்போ உனக்கும் எதோ ஒரு மூலைல, என்னோட கணவன்னு ரெஜிஸ்டர் ஆகியிருக்கு…”

அவள் அப்படியா என்பது போல் இப்போது பார்க்க,

“இல்லனா… தியாக செம்மல் சைன் போட்டதை அப்பவே சொல்லிருப்பிங்க…”

அவனுக்கு இப்போது அவள் பழிப்பு காமித்து, வெவ்வவே,

“இங்க பாருங்க, பொண்டாட்டி… இப்படியெல்லாம் இப்போ செய்யாதீங்க… சொல்லிட்டேன்… அப்பறம் அன்னைக்கு மாறி நடந்தா, என்னை குத்தம் சொல்ல கூடாது…”

இப்போது அவனை முறைத்து பார்த்து, “அன்னைக்கு பத்தி நீ பேசுன, எனக்கு அப்பறம் கேட்ட கோவம் வந்துரும்…”

அவன் முகத்தில் சிரிப்பு தோன்ற,

“இப்போ எதுக்கு இந்த சிரிப்பு உனக்கு…”

“இன்னும் எவ்வளோ நேரம், இப்படி பேசிட்டே இருக்குறதுனு சொல்லு…” என்று அவன் மாத்தி பேச,

“நான் என்ன கேக்குறேன்?, நீ என்ன சொல்லுற…” என்று கொஞ்சம் பதத்ததுடன் கேக்க,

“நான் உண்மையை தானே கேக்குறேன்… மணியாச்சி, தூங்கணும் தானே… நீ என்ன யோசிச்சி, இப்படி பதட்டமா கேக்குற…” என்று அவளையே குறும்பாக பார்த்து கேக்க,

“நான் ஒன்னும் நினைக்கலையே…” என்று மிடுக்காக சொல்ல,

“ஹா ஹா… நம்பிட்டேன்…” என்று சொல்லி இன்னும் சிரிக்க,

“ரொம்ப ஓவர் ஆஹ் சிரிக்காத…” என்று கடுப்பாக சொல்ல,

“சரி சரி…” என்று சிரிப்பை அடக்கி கொண்டே,

“வரேன் இரு…” என்று சொல்லி, ரூமிற்க்கு சென்று ஒரு சின்ன பெட்டியுடன் வந்தான்.

அவள் என்ன என்பது போல் அவனை பார்க்க,

அவனின் இதழுடன் கண்ணும் சேர்ந்து சிரித்துக்கொண்டே அவளை பார்த்து,

                           ” ரகசியமாய் ரகசியமாய்

                            புன்னகைத்தால் பொருளென்னவோ ….”

என்ற பாடலை போனில் ஒலிக்கவிட்டு, அவளின் கையை பிடித்து எழுப்ப,

அவனின் இச்செயலில், அவளின் கண்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பெரிதாக விரிய,

அவளின் கண்களை பார்த்துக்கொண்டே, அந்த சின்ன பெட்டியில் இருந்த, இதய வடிவிலான டாலருடன் இணைத்திருந்த செயினை அவளுக்கு அணிவித்தான்.

அவள் அவனையே பார்த்தவாறே இருக்க,

“இந்த பாவையோட பார்வை என்னை எப்போது உரிமையா தீண்டும்னு பாக்குறதுக்காக ஆவலா இருக்கேன்…” என்று சொல்லி அவளின் நெத்தியில் மென்மையாக முத்தமிட்டான்.

அவள் ஒரு மோன நிலையில் இருக்க,

அவளை சககமாக்கும் பொருட்டு, “அப்பறம் திரும்ப, இப்போ கல்யாணம் பண்ணிருக்கேன்…” என்று இழுத்து சொல்ல,

“என்ன?…” என்று அதிர்ச்சியில் பார்க்க,

“ஆமா… இப்போவும் செயின் போட்டு தான் கல்யாணம் பண்ணிருக்கேன்…” என்று கண்ணடிக்க,

முழுவதுமாக தெளிந்து, “அதுக்கு இப்போ என்ன சொல்லவர…”

“முதல் கல்யாணம் நடந்தும், அதுக்கப்பறம் என்ன நடக்குமோ ஒன்னும் நடக்கல… இப்போவாச்சும் ஏதாவது நடக்கணும்ல…” என்று சொல்ல,

அவளோ அவனை அடிப்பதற்கு எதுவும் இருக்கா என்று தேட,

அவளின் தேடலை புரிந்து கொண்டு, அவன் “ரெடி… ஜூட்” என்று ஓட ஆரம்பிக்க, மது அவனை அடிக்க துரத்தினாள்.

அடுத்து இவர்களின் வாழ்வில் ஒரு பிரிவு வந்தது…

பார்வை வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!