Skip to content
Post Views: 5,262
தேவை… பாவை பார்வை – 5
விமல், ப்ரகதீஷ் அறையினுள் நுழைய, “ஏன்டா! டேய், உன்னைய நான் என்ன கேக்கச்சொல்லி அனுப்புனேன்… நீ என்னடா பண்ணிட்டு வந்திருக்க… உன்னைய போயிட்டு பாக்க சொன்னதுக்கு நானே போயிருக்கலாம் போல… உன்னயெல்லாம் என்ன பண்றது…” என்று அவனிடம் சரமாரியாக கேள்வி கணைகளை தொடுக்க,
“அப்போ நீயே என்னனு கேக்கவேண்டியது தானே… என்னைய எதுக்கு போக சொன்ன அப்பறம்…”
“இப்போ நல்லா வாய் கிழிய பேசு என்கிட்ட… இதுக்கெல்லாம் என் ப்ராஜெக்ட்க்கு கீழ வரும் போது, உன்னைய ஓட விடுறேன்…” என்றான் சவாலாக,
Advertisement
“அடேய்… இப்படி சொல்லித்தானே, ஒழுங்கா வேலை செஞ்சிட்டு இருந்தவனை, சின்ன பையன் கூட பாக்காம மிரட்டி போக வச்ச… இது உனக்கே அடுக்குமா?…”
“அப்படி பண்ணியும், சொன்ன வேலையை ஒழுங்கா பண்ணிட்டு வந்தியா?… தத்தி பயலே…”
“என்னால உன்னோட மல்லுக்கட்ட முடியல சாமி… உன் அருமை பிரெண்ட்ஸை முதல்ல லண்டன்லருந்து கிளம்பி வரச் சொல்லு… இல்லனா அந்த நிர்மலை கூப்பிடு…”
Advertisement
“அவனுங்க இருந்தா, நான் ஏன்டா உன்னைய கூப்பிட போறேன் ஸ்டுபிட்…”
Advertisement
“ஸ்டுபிட்? மீ?… உன்கூட பிரென்ட் ஆனதுக்கு, நல்ல மதிப்பு குடுத்தீங்க, மிஸ்டர். பிரகதீஷ்… யார் யாரோ நண்பன் எண்ணி ஏமாந்த நெஞ்சம் இது…” என்று தன் நெஞ்சை சுட்டி காட்டி, ஏமாந்தது போல் முகத்தை வைத்து அவனை பார்க்க,
“நான் என்ன நாடக கம்பெனி வச்சி நடத்துறேனா? நடிச்சி காட்டுற…”
“அய்யகோ… இதை நான் எங்கு போய் சொல்லுவேன்… என்னை பார்த்து நடிக்குறேன்னு சொல்லிட்டாயே ப்ரகதீஷா…” என்று மறுபடியும் வசனம் பேச,
Advertisement
“நீ எங்க வேணும்னாலும் போயி சொல்லிக்கோ… முதல்ல, மதுகிட்ட ஏதாவது கேட்டியா, நீ எதுக்கு இங்க வந்த, இப்போ என்ன பேசிட்டு இருக்கேனு மட்டும் பாரு…” என்று வார்த்தைகளை கடித்து துப்ப,
“ப்ரகதீஷ்… அது வந்து நான்… உடனே கேக்காம, அப்படியே பேசியபடியே கேட்கலாம்னு பாத்தேனா… இந்த மதன் அதுக்குள்ள வந்துட்டான்… நான் என்ன பண்ணுறது…” என்றான் பவ்யமாக,
“பதிலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” என்றான் முறைப்பாக,
“நானாவது பதில் சொல்லுறேன்… நீ என்னத்தையாவது வாயை திறக்குறியா?…” என்று பதிலுக்கு கேட்க,
“என்கிட்ட இவ்வளோ வக்கணையா பேசுறியே… இதை அவகிட்ட பேசி என்னனு கேட்டுட்டு வர வேண்டியது தானே?…” என்று திருப்பி கேட்க,
“சரி விடேன்… கேக்க வர்றதுக்குள்ள அந்த மன்மதன் வந்துட்டான்… நீ எனக்கு பதில் சொல்லுவியா? மாட்டியா?”
“நானே அந்த மதன் எதுக்கு காலைலலிருந்து, அவளை இழுத்தடிக்குறானு யோசிச்சிட்டு இருக்கேன்… இதுல உனக்கு பதில் சொல்லுறது ரொம்ப முக்கியம்…”
“என் பிரென்ட் அதுலாம் அசால்ட் பண்ணிடுவா…” என்றான் நம்பிக்கையாக,
“அடிங்க.., எனக்கு அது தெரியாதா?…” என்று கடுப்படிக்க,
“அப்படியா… அப்படியே எல்லாத்தையும் சொல்லு கேப்போம்…” என்று போட்டு வாங்க பார்க்க,
“உன் பெஸ்ட் பிரென்ட்ன்னு சொல்லிட்டு திரியுறல்ல… அவகிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கோ…” என்றான் பட்டென்று,
“மது தானே சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பா… ஆளப்பாரு…”
“அவளோட ஆளு தான் நான்…” என்றான் புன்னகை மன்னனாக,
“அது தான் வந்த நாள்ல இருந்ததே தெரிஞ்சதே… நீ அவளையே பார்த்துட்டு இருக்குறது…”
“அப்பறம் என்னடா கேள்வி…”
“அன்னைக்கே எனக்கு டவுட் வந்துச்சி… மாட்டிருப்ப என்ட, பட் தப்பிச்சிட்ட…”
“ஏதே… நான் உன்ட மாட்டிருப்பேனா?… கொஞ்சம் எதுக்குன்னு சொல்லுறது…”
“என் பிரென்டையே வச்சக்கண்ணு வாங்க பாத்தா, உன்னைய சும்மா விட சொல்லுறியா?…”
“ஓஹோ… நீங்க அப்படி சொல்லுறீங்க… நான் பாத்தது அவ்ளோ தெரிஞ்சிச்சா என்ன?… ஆனா, பாரு மது என்னைய பாக்கவே இல்ல…” என்றான் அவனிடம்.
“நீ என்ன பண்ணிவச்சின்னு சொன்னா தானே… இதுக்கு நான் பதில் சொல்ல முடியும்…”
“இப்போன்னு இல்ல… முன்னாடியும் இப்படிதான்… நான் இருக்குற பக்கம் கூட திரும்ப மாட்டா…” என்றான்.
“அப்பறம் எப்படி மேன் கல்யாணம் ஆச்சு?…” என்று நைசாக கேட்க,
“என்ன, நீ இப்படி நைசா கேட்டா… நான் சொல்லிடுவேனா?…” என்று எதிர்கேள்வி கேட்க,
“ஆனா ஒன்னு சொல்லுறென்டா… எதுல நீங்க பொருத்தமோ இல்லையோ… இப்படி உண்மையை சொல்லாம அடுத்தவங்க மண்டைய காய விடுறதுல, ரெண்டு பேருக்கும் ஏக பொருத்தம்…”
“அப்படின்ற?…” என்று குஷியாக கேட்க,
“நீயாச்சும் எதோ ஒன்னு சொல்லுற… பட் மது வாய தொறக்குறது என்ன… அவ மூஞ்சை பாத்து கூட ஒன்னும் கண்டுபிடிக்க முடியாது…”
“கரெக்ட் டா… அது என்னவோ உண்மை தான்…” என்று முடித்தான்.
“உனக்கு எப்படிடா மதுவோட ஹஸ்பேண்ட், நானுனு தெரிஞ்சது?…” என்று விமலிடம் சிரிப்புடன் கேட்டான்.
ப்ரகதீஷின் மனசாட்சியோ, “இந்த வாய் தான் அன்னைக்கு, மதுகிட்ட என்ன சொன்னுச்சி தெரியுமா?…” என்று அவனை காறித்துப்ப,
“என்னோட மனசாட்சியா இருந்துட்டு எனக்கு எதிர் ஆஹ் பேசுற… அப்படியே ஓடிடு…” என்று விரட்ட,
“மிஸ்டர் பிரகதீஷ், என்ன மதுவோட ஹஸ்பேண்ட்னு சொன்னதும் ட்ரீம்ஸ்க்கு போயிட்டியா?…” என்று அவனை உலுக்க,
“அதிருக்கட்டும்… நீ சொல்லுடா முதல்ல…” என்றான் சீக்கிரமாக,
“கனவு காணும் போது தெரியலையா அது… இப்போ இப்படி அவசர படுத்துற… நான் பொறுமையா தான் சொல்லுவேன்…”
“இதுக்கெல்லாம் பின்னாடி நீ ரொம்ப வறுத்த பட வேண்டியிருக்கும் பாத்துக்கோ…” என்றான் ஒருமாறியான குரலில்,
“தெரியாம உன்கிட்ட சிக்கிட்டேன் டா…” என்று தன்னையே நொந்துக் கொண்டு,
“நீ மதுவையே பாக்குறது தெரிஞ்சும், அவ உன்னைய கண்டுக்காத மாறி இருந்தாலே தவிர, வேற உன்னைய எதுவும் சொல்லல… இதுவே வேற யாராச்சும்னா பளார்னு கிடைச்சிருக்கும் கன்னத்துல ஒன்னு பலமா…” என்று சொல்ல,
ப்ரகதீஷ்ஷோ குடு குடுவென ஓடி வந்து, விமலை கட்டிப்பிடிக்க,
விமலோ அலறி, “டேய்… விடுடா என்னைய… நான் மது இல்லடா…” என்று கத்த,
“பாரேன்… நான் இதை அவகிட்ட டெஸ்ட் பண்ண மறந்துட்டேன்… அப்போ மதுக்கு, ஏதோ ஒரு ‘க்’ இருக்கு என் மேல… இது போதும், இதை நான் டெவெலப் பண்ணிடுறேன்…” என்றான் உற்சாகமாக,
“கிழிஞ்சது போ… இப்போவாது இந்த வேலையைவிட்டு வெளிய வந்து பேசேன் டா… டெவெலப், டெஸ்ட்ன்னுட்டு…”
“ஹா ஹா… சாப்ட்வேர் காதல்னு வச்சுக்கோயேன்…” என்று சொன்னான் பூரிப்பாக,
“என்னவோ… முதல்ல என்னைய விடுடா…” என்று அவனை தள்ள,
“இதுக்கும் சேர்த்து இருக்கு…” என்று சொல்லிக்கொண்டே,
“உன்கிட்ட லவ்வர் மாறி மணிக்கணக்கா பேசிட்டு இருக்கேன்… நீயும் பல்லைகாமிச்சிட்டு பேசுற… உனக்கு வெக்கமா இல்ல…” என்று தலையில் அடித்துக் கொண்டு சொல்ல,
“அடப்பாவி மக்கா… இது உனக்கே அடுக்குதா சொல்லு…”
“நீ வளவளன்னு பேசாத… நான் சொல்லுறதை பண்ற இப்போ…” என்று சீரியஸ் ஆக சொல்ல,
விமலும் என்னவோவென்று பொறுப்பாக அவனை பார்க்க,
மது அவளோட சீட்க்கு வந்து பத்து நிமிஷம் ஆச்சு… இந்த தடவை, “நானே அவகிட்ட பேசிக்குறேன்… நீ அவளை நிர்மல் கேபின்க்கு ஒரு ஃபைவ் மினிட்ஸ் கழிச்சு வர சொல்லு… ஒகே?… என்று கேட்க,
விமல் வாயை பொத்திக்கொண்டு அவனை பார்க்க,
“என்ன விமல்… சீக்கரம்… அவ இல்லனா கிளம்பிடுவா வீட்டுக்கு…”
“உனக்கு நல்ல இடத்துல கேபின் இருக்குடா… அவ சீட்க்கு அப்படியே உனக்கு தெரியுற போல… நல்லா வருவ நீ…” என்று இன்னும் பேசிவிட்டு, பின்பு
“நிர்மல் தான் இல்லையே… அப்பறம் என்னனு அவகிட்ட சொல்லுறது…” என்று புத்திசாலியாக கேட்க,
“அது உனக்கு மட்டும் தான் டா தெரியும்… அதுனால சொல்லறதை பண்ணு… அப்போ தான் உனக்கு ஹெல்ப் வேணும் போது பண்ண முடியும்…”
“வேற வழி… இந்தா போறேன்…” என்று வெளியேறினான்.
– – – — –
மதுவிற்கு இன்னும் கோவம் குறையாமல் ஆத்திரத்துடன் அமர்ந்திருக்க,
அவளை பார்த்த ரேகாவோ, “முதல்ல தண்ணி குடி… அந்த மதன்லாம் அவ்வளோ ஒர்த் இல்ல… விடு…” என்று தோழியை சமன் படுத்த முயல,
ஒன்றும் கூறாமல் அமைதியாக இருக்க,
“சரி வா… கஃபே போய்ட்டு வருவோம்…” என்று ரேகா அழைக்க,
“போடி… நான் வரல…”
“நிர்மல் வந்து ஒரு பைல் கேட்டாரு மது… அது என்னனு அவருக்கு சொல்லிட்டு வரியா… கேபின்ல தான் வெயிட் பன்றாரு…” என்று வந்தவுடன் விமல், மதுவிடம் சொல்ல,
“இப்பொவேவா… விமல்…” என்று கடுப்பாக கேட்க,
“ஹ்ம் போயிட்டு வா… அப்பறம் கிளம்பணும்ல…” என்று வேறு சொல்ல,
“இன்னைக்கு டே, செம்ம கடுப்பு…” என்று திட்டிக்கொண்டே எழுந்து சென்றாள்.
“டேய் விம்… நீயேன்டா, வந்ததும் வராததும் அவளை போக சொல்ற… அந்த மதன் கேபின்லருந்து, இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் செம்ம கோவத்துல வந்து உக்காந்தா…” என்று அவனை பேச,
“உனக்கு நான் பேசறதே ஒழுங்கா விளங்காது… இதுல நான் உனக்கு இதை சொன்னேன்… அவ்வளோதான்…” என்று அவனுக்கு அவனே பேச,
“என்னடா நீயா பேசுற…” என்று கேட்டு அவனின் முகத்தை பார்க்க,
“ஒன்னும் இல்ல… வா… மது வரவரைக்கும் நாம கஃபே போய்ட்டு வருவோம்…” என்று அவளை கூட்டிக்கொண்டு சென்றான்.
– – – – –
இங்கு நிர்மல் கேபினுள் மது நுழைய, வரும் அவளையே அறையின் ஒரு மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் பிரகதீஷ்.
உள்ளே வந்ததும், இருக்கையில் யாரும் இல்லாததை பார்த்துவிட்டு, திரும்பி நடக்க செல்ல,
“மது இங்க…” என்று அவளின் முன்வந்து நின்றான்.
அவனை பார்க்காமல், அங்கிருந்து வெளியேற முயல,
அவளின் எண்ணம் புரிந்தது போல, கதவின் முன்னால் வந்து நின்றான்.
அவள் இப்போது அவனை கோவமாக முறைக்க,
“இந்தா ஆரம்பிச்சிட்டா பாரு முறைக்க…” என்று மனதினுள் சலித்துக் கொண்டு,
“மது, நம்ம விஷயம் பேச உன்னைய கூப்பிடல… மதன் என்ன சொன்னான்னு சொல்லு… என்ன ஆச்சு, எதுக்கு உன்னைய அலைக்கடிச்சான்…” என்று பொறுமையாக வினவ,
“நீ கேட்டா… நான் சொல்லனுமா…” என்பது போல் பார்க்க,
“மது… உங்கிட்ட தானே கேக்குறேன்…” என்றான் கொஞ்சம் அழுத்தமாக,
மது சூடாகி அவனை முறைத்துக்கொண்டே, “என்ன?, என்ன சொல்லணும் உனக்கு… அது என்னோட பிரச்சனை… நான் பாத்துப்பேன்… பெருசா வந்துட்டான் ஹெல்ப் பண்றதுதுக்கு, தள்ளுடா நான் போனும்…” என்று சிலிர்த்துக்கொண்டு பேச,
“என்னது டா….வா…” என்று அவன் வாயை பிளக்க,
“என்னடா வான்னா… நீ என்ன பெரிய பருப்பா… டான்னு சொல்லி கூப்பிட கூடாதோ… அப்படி தான்டா கூப்பிடுவேன்… என்னன்ற இப்போ?…” என்று அவள் எகிற,
“மது… அது…” என்று எதோ சொல்லவர,
“உன்னைய நான் ரைமிங் ஆஹ் வா பேச சொன்னேன்?…” என்று அவள் பேசவிடாமல் பேச,
“இன்னைக்கு நீ சிக்கிட்டடா…” என்று அவன் மனதினுள் நினைக்க,
அவனின் மனசாட்சியோ, ” இன்னைக்கு மட்டும் இல்ல மவனே… இனி தான் ஆரம்பம்…” என்று அவனை பார்த்து கைகொட்டி சிரித்தது.
“என்ன நான் பேசிட்டு இருக்கேன்… நீ வாய மூடிட்டு இருக்க…” என்று அதற்கும் பேச,
“இல்ல மது… நீ பேசிட்டு இருந்தல்ல… அதான்…”
“ஓஹ்… பார்ரா… நான் பேசுறதெல்லாம் கேக்குற… அதுக்கெல்லாம் உனக்கு டைம் இருக்கா…” என்றாள் நக்கலாக,
“மது ப்ளீஸ்…” என்று எதுவோ கூறவர,
“ஓஹ்… இப்போ நான் ஆபீஸ் விஷயம் மட்டும் தான் பேசணும் இல்லையா…” என்று வேறு கேட்க,
“மது… ” என்று ஆரம்பிக்க,
“டேய்… நீ எதுக்கு இப்போ மது மதுன்னு கூவிட்டு இருக்க…”
“டேய் பிரகதீஷ் அமைதி… அமைதி…” என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு அவளையே பார்க்க,
“நான் எனக்கு அவுட்புட் வரலன்னு உங்கிட்ட வந்து சொன்னேன் ஆஹ்… பதில் சொல்லுடா… சொல்லு…” என்று கேட்க,
அவனோ ஒன்றும் சொல்லாமல் இருக்க,
“சொல்லுடா… இல்லைல… அப்பறம் என்ன டேஷ்க்கு வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுன?…”
“நீ பண்ண முடியாம இருந்தல்ல, அதுக்கு தானே பண்ணுனேன்… அதுக்கு என்ன இப்போ…” என்று அவனும் சற்று கோவமாக கேட்க,
“எல்லாருக்கும் இப்படி தான் போய்ட்டு பண்ணுவியா?…”
“நான் கிராஸ் பண்ணும் போது பார்த்திருந்தா, கண்டிப்பா என்னனு கேட்டிருப்பேன்…” என்றான் நிதானமாக,
“சரி அப்டினே வச்சிப்போம்… நீ வந்து கேட்டும் நான் தான் ரெஸ்பான்ஸ் பண்ணல… அப்பறம் என்ன ஈர வெங்காயத்துக்கு எனக்கு அவுட்புட் கொண்டு வந்து குடுத்த?…”
“மது… திஸ் ஈஸ் டூ மச்… நீ வரலன்னு ரொம்ப நேரமா பண்ணிட்டு இருந்ததை பார்த்து வந்து தான் பண்ணிகுடுத்தேன்… போதுமா?…” என்றான் இப்போது கோவமாக,
“உனக்கு ஏன் இப்போ கோவம் வருது… நான் தான் கோவப்படணும், நீ பண்ணதால…” என்று மேலும் சொல்ல வர,
இதுக்கு தான் அவன் உன்ன இன்னைக்கு இப்படி பண்ணுனானான்?…” என்று சரியாய் சிந்தித்து அவளிடம் அழுத்தமாய் கேட்க,
“அவன் என்னைய என்ன கேட்டான் தெரியுமா அதுக்கு…” என்று பல்லைக்கடிக்க,
பிரகதீஷ் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் மதுவை பார்க்க,
” அவன் என்கிட்டே டபுள் மீனிங்ல கேக்குறான்… புதுசா வந்த லீட் எல்லாம் பிடிச்சி ஹெல்ப் கேக்குற… நான் உனக்கு எப்ப, என்ன வேணும்னாலும் ஹெல்ப் பண்ண தயாரா இருக்கேன்… நீயேன் என்கிட்ட வர மாட்டுறனு…” என்றாள் இன்னமும் குறையாத கோபத்துடன்,
“பொறுக்கி… உன்னைய அப்படி பேசிருக்கான் என்னைய வச்சி… நீ என்கிட்ட வந்து சொல்லிருக்கணும் தானே… உன்னை யாரு அவனை அப்படியே விட்டுட்டு சைலன்ட் ஆஹ் வர சொன்னது…” என்று பற்களை கடித்து, வார்த்தைகளை துப்ப,
“நான் உன்கிட்ட சொன்னேன் ஆஹ், அவனை ஒன்னும் பண்ணலன்னு… அதுலாம் பேசுனப்பவே ரெண்டு கன்னத்திலும் பலமா பளார்னு விட்டாச்சு…” என்றாள் கூலாக,
அவள் அப்படி சொன்னவுடன் தான் அவனின் முகம் பளிச்சிட்டு, “அதான பாத்தேன்… நீ இப்படி பண்ணலைனா தான் அதிசயம்…” என்று அவனின் வாய் முணுமுணுத்தது.
“உன்னால தான் எல்லாம்… உன்னைய யாருடா இந்த கம்பெனில வேல பாக்க சொன்னது?…”
“என்னாது!…” என்று அதிர்ச்சியாகி பார்க்க,
“என்ன என்னாது?… நீ இந்த கம்பெனி வேல பாக்குறேன்னு எனக்கு முன்னவே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன்…” என்றாள் உறுதியாக,
நீ எனக்கு இங்க வேலை பாக்குறதே தெரியாது… இங்க ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்றதுக்கு, ரிசோர்ஸ் நேம் லிஸ்ட்ல உள்ள நேம் வச்சி தான் கண்டுபிடிச்சேன்… இல்லனா எனக்கும் தெரிஞ்சிருக்காது என்றான், உண்மையாக.
“அதுனால என்ன இப்போ… நான் இந்த கம்பெனில வேல பாக்குறேன்… நீ வேற கம்பெனி மாறிக்கோ…” என்று அவனை அதிரவைத்து,
“தள்ளி நில்லு… நான் வெளில போனும்… ஒழுங்கா வேற கம்பெனி மாறுற, சொல்லிட்டேன்…” என்று அவனை எச்சரித்து கூறிவிட்டு,
“இதுக்கு அந்த விமலும் உனக்கு உடந்தையா… இருக்கு அவனுக்கும்…” என்று பேசிக்கொண்டே வெளியே சென்றாள்.
இங்கு பிரகதீஷ்ஷோ “அடப்பாவி, நான் வேற கம்பெனி மாறணும்னு சொல்லிட்டு போறா பாரு… ஆண்டவா! இவளை எப்படி நான் கரெக்ட் பண்றதுனு சொல்லேன்…” என்று ஆண்டவனிடம் முறையிட்டு அவனும் கிளம்பி வெளியே சென்றான்.
பார்வை வீசும்…
error: Content is protected !!