Skip to content
Post Views: 4,270
தேவை… பாவை பார்வை – 8
மதனின் அறையிலிருந்து வெளியே வந்த மது, தன் இருக்கையில் தொம்மென்று கடுப்புடன் அமர,
சிஸ்டெமில் வேலை பார்த்துட்டு இருந்த ரேகா, இவள் தொப்பென்று அமர்வதை பார்த்து, “ஹே என்ன மது?… உன்னைய ஏதாவது திரும்ப சொன்னான்னா அந்த மதன்?…” என்று கேட்க,
“அவனை ஏதாவது பண்ணனும் டி… என்கிட்டே அடி வாங்கியும் அவன் திரும்பியும் பேசுறான் ரேகா… ” என்று மது கோவமாக சொல்ல,
Advertisement
“என்ன ஆச்சு மது… நீ அடிச்சும்மா உங்கிட்ட திரும்ப வச்சிக்குறான்?… அப்படினா நாம கம்ப்லைன் பண்ணிடலாம் ஹச். ஆர்- ட்ட…. வேற எதையாவது இழுத்து விட்டுற போறான்…” என்று ரேகா பதற்றமாக சொல்ல,
“அவனை பத்தி கம்பளைண்ட் பண்ணிருக்க மாட்டாங்கன்னு சொல்லுறியா நீ?…” என்று மது அவளிடம் கேட்க,
“பண்ணியும் இப்படி பண்ணுறானா இந்த ராஸ்கல்…” என்று ரேகா கோவமாக வினவ,
Advertisement
“மேலிடம் கேட்டா, நான் ப்ராஜெக்ட் சம்மந்தமா தான் பேசுனேன்… இவங்களே அப்படி புரிஞ்சிட்டு வந்து என் மேல தேவையில்லாத கேஸ் பண்ணிருக்காங்க, அப்படின்னு அவன் பிளேட்டை மாத்தி போட்டு சொல்லுவான்… அவனுங்களும், சரி இனிமே பாத்து பேசுங்கன்னு சொல்லிட்டு விட்டுடுவாங்க…” என்று அவள் உண்மையான காரணத்தை சொல்ல,
Advertisement
“ஆமா மது… நீ சொல்லுறது கூட கரெக்ட் தான்…”
“அதே தான் ரேகா… இவன் அடுத்து ஒரு வாரம் ஒழுங்கா இருப்பான்… அப்பறம் திரும்பவும் இவன் வேலையை ஆரம்பிச்சிடுவான்…”
“ஆனாலும் நீ அடிச்சும் உங்கிட்ட அவன் திரும்ப வாலாட்டுறான்… என்ன சொன்னான் இப்போ?…” என்று ரேகா கேட்க,
Advertisement
“அன்னைக்கு நான் அடிச்சதே அவன் எக்ஸ்பெக்ட் பண்ணிருக்க மாட்டான் போல… உனக்கு எவ்வளோ திமிரு என் மேலையே கைய வச்சிட்டல்ல… எல்லாம் புது சகவாசம், பிணைப்புன்னு ரொம்ப ஓவர் ஆஹ் பேசுனான்… இதுக்கெல்லாம் சேர்த்து உன்னைய எப்படி கவனிக்குறேன்னு மட்டும் பாருன்னு கொஞ்சம் மிரட்டினான்…” என்று சொல்லி,
அடுத்து “நீ பேசுனதுக்கு நான் அடிச்சதே கம்மி தான்… அதுனால ஒழுங்கா பார்த்து இருந்துக்கோன்னு சொல்லிட்டு வந்துட்டேன்…”
“என்ன மது இவ்வளோ அசால்ட் ஆஹ் சொல்லுற… ” என்று கொஞ்சம் பயத்துடன் கேட்க,
“அவன் என்னைய கம்பளைண்ட் பண்ணுன்னா, நான் அடிச்சதை சொல்லுற மாறி இருக்கும்… அதுனால அவன் கண்டிப்பா பண்ணமாட்டான்…” என்று உறுதியாக மது பேச,
” என்ன மது, இவ்வளோ ஈஸி ஆஹ் சொல்லுற நீ… திரும்ப இப்போ உன்னைய பேசிருக்கான் தானே…” என்று ரேகா கொஞ்சம் கலவரமாக கேட்க,
“இன்னையோட அந்த ப்ரொஜெக்ட்ல என்னோட பார்ட்டை நான் முடிச்சிட்டேன்… இனிமேல் அவனால ஒன்னும் பண்ண முடியாது… பிரீ ஆஹ் விடு ரேகா…” என்று மது அவளை கூல் செய்ய,
“நீ பண்ணதை அவன் அக்செப்ட் பண்ணிட்டானா?…”
“அது தான் எனக்கும் புரியல… நானும் எதையாவது சொல்லி இழுத்தடிப்பான்னு நினச்சேன்… பட் ஒன்னும் சொல்லல… ஒகே சொல்லிட்டான்…”
“அது மட்டும் இல்லாம, புது ப்ராஜெக்ட்க்கு வாழ்த்துக்கள்ன்னு வேற லாஸ்ட்ல சொல்லி அனுப்பினான்…” என்று மது, அவன் சொல்லியதை சொல்ல,
“நீ அன்னைக்கு அடிச்சதை பாத்து பயந்துட்டு, வெளில சும்மா உங்கிட்ட போக்கு காமிக்குறதுக்கு திரும்ப உன்கிட்ட ஒருவேளை அது மாறி பேசிருப்பானோ…” என்று தனக்கு தோன்றிய சந்தேகத்தை ரேகா, மதுவிடம் கேட்க,
“யாருக்கு தெரியும்… அவன் என்னமோ பண்ணிட்டு போறான் விடு…” என்று சொல்லி அப்பேச்சினை விடுத்து,
“சரி வா… நீ பண்ணு, நான் ஹெல்ப் பண்றேன்…” என்று அவளுடன் தன்னை இணைத்துக் கொண்டாள்.
இவ்வளவு நேரம் யாரை பற்றி பேசினார்களோ, அந்த மதன் அவனுடைய கேபினில் “ஏய்… மது உன்னைய நான் இப்போ ஒன்னும் சொல்லாம விட்டுட்டேன்னு நினைக்கிறியா?…. கண்டிப்பா இல்ல, என்னைய அடிச்சதுக்கு, உன்னைய நான் அசிங்க படுத்தாம விடமாட்டேன்… அப்போ தெரியும் இந்த மதன் யாருன்னு…” என்று அவனுக்கு அவனே சூளுரைத்துக் கொண்டான்.
– – – – –
“ஏன்டா… உனக்கு வேலை இல்லையா?… இங்க என் கேபின்ல வந்து உக்காந்திருக்க?…” என்று பிரகதீஷ், விமலிடம் கேட்க,
“சும்மா தான் வந்தேன்…” என்று விமல் சொல்ல,
“அன்னைக்கு என் பிரெண்ட்ஷிப்பே வேணாம்னு சொல்லிட்டு போயிட்டு, இப்போ இங்க எதுக்கு வந்திருக்க?…” என்று விமலிடம் கேள்வி கேட்க,
“அங்க என்னனா… மது தான் பேச மாட்டுறான்னு பாத்தா, இப்போ அந்த ரேக்ளா ரேஸும், இப்போ திடீர்ன்னு மூஞ்சியை திருப்பிட்டு போறா… அதான் உன் கூட திரும்ப பிரெண்ட் ஆகலாம்னு வந்தேன்…” என்று பாவமாக சொல்ல,
“ஹா ஹா ஹா… கொஞ்சம் பாவமா தான் இருக்கு உன்னைய பாத்தா…” என்று சொல்லி இன்னும் சிரிக்க,
“நல்லா சிரி… உனக்கென்ன, அதுனால நீ நல்லா சிரிக்க தான் செய்வ…” என்று விமல் கடுப்பாக சொல்ல,
“ரேகா எதுக்கு அப்படி சொல்லுறா?… நீ என்ன பண்ணுன?…” என்று கேட்க,
“எதுக்குன்னு கேட்டா… சொல்லமாட்டேன்ன்னு சொல்லிட்டு திரும்பிகிட்டா… என் நிலைமையை பாத்தியா?…” என்று பரிதாபமாக சொல்ல,
“ஹா ஹா… நான் இதுல என்ன பண்ண முடியும் சொல்லு… உனக்காக வேணும்னா பண்றேன்…” என்று பிரகதீஷ் டீல் பேச,
“நீங்க சொன்னதே போதும் ராசா… உங்களை நம்ப நான் தயாரா இல்லை…” என்று தலையை இடவலமாக ஆட்ட,
“நம்பாம எதுக்குடா இங்க வந்து உக்காந்திருக்க…” என்று அவனை திட்ட,
“நீ திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்காத… அதுலாம் விடு… நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு…” என்று அவனிடம் கேட்க,
“என்னடா உனக்கு இப்போ வேணும்… நீ தான் வெட்டியா இருக்கேனா… என்னையும் வேலை செய்ய விடாம பண்ணுற…”
“உனக்கு என்னடா வேலை இருக்க போது… லீட்ன்னு சொல்லிக்கிட்டு எங்களை தானே போட்டு வேலை வாங்குறீங்க…” என்று அவனை பேச,
“எனக்கு மேல இருக்குறவனுக்கு நான் பதில் சொல்ல வேணாமா?… உங்க எல்லாரையும் கட்டி மேச்சு, நான் வேலை வாங்குறதுக்குள்ள, எனக்கு தான்டா தெரியும்… பேரு தான் லீட்… உங்களுக்கு அசைன் பண்ணுன, வேலையை மட்டும் பாத்தா போதும்… நீங்க எல்லார் பண்ணதையும், ஆர்கனைஸ் பண்ணி மொத்தமா சேர்த்து நான் பாக்கணும்… அப்பறம்…” என்று சொல்ல வர,
“தெரியாம சொல்லிட்டேன்… மன்னிச்சிடுங்க லீட்… உங்களுக்கு, எங்களுக்கு மேல வேலை இருக்கு தான்… ஒத்துக்குறேன்… நான் ஒத்துக்குறேன்…” என்று அவன் பெரிய கும்பிடு போட,
“யாரு வேலையையும் கொறச்சி சொல்லாதே விமல்…” என்று பிரகதீஷ் முறைப்புடன் கூற,
“நீ நல்லவனா, கெட்டவனா டா…” என்று அடுத்த கேள்வி கேட்க,
“உனக்கு என்ன தான் வேணும் இப்போ… எதுக்கு இப்போ மொக்க போட்டுட்டு இருக்க?…” என்று சலிப்பாக கேட்க,
“உனக்குலாம் உண்மையாவே பிரெண்ட் இருக்காங்களா பிரகதீஷ்… எப்படிடா இப்படி இருக்க நீ?…” என்று சீரியசாக அவனிடம் கேட்க,
“உண்மையாவே இப்படி தொண தொணக்குற பிரெண்ட் யாரும் இல்ல… போதுமா?…” என்று அவனும் சீரியஸ் மோடில் பதிலளிக்க,
“அதானே பாத்தேன். உனக்கு என்னைய மாறி பிரெண்ட் கிடைக்குறதுல்லாம், நீ போன ஜென்மத்துல பண்ணுன புண்ணியம் தான்…” என்று பெருமிதத்துடன் சொல்ல,
“ஆனாலும், நீ இருக்க பாரேன்… எனக்கு பிரெண்ட்ஸ் உன் அளவுக்கு யாரும் இல்லடா… இப்படிலாம் யாரும் தன்னையே பெருமையா பேச மாட்டாங்க…” என்று சொல்லி அவனை பேச,
“நிர்மல் என்ன ரொம்ப பிஸி ஆஹ், ஆளே பாக்க முடியுறது இல்ல…” என்று அவனின் நண்பனை பத்தி விமல் கேட்க,
“நீ எப்படிடா எல்லா நியூஸும் தெரிஞ்சி வச்சிருக்க?…” என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்க,
“அதுலாம் எல்லாம் தெரிஞ்சி வச்சுக்கணும்… உன்னையே மாறி மதுவை மட்டும் பாத்துட்டே இருந்த ஆச்சா…” என்று இவன் எதிர்கேள்வி கேட்க,
“எனக்கு அது போதும்… போடா… நானே அவளை எப்படி சரி கட்ட போறேன்னு தெரியல… அன்னைக்கு ரொம்ப ஓவர் ஆஹ் வேற பேசிட்டேன்…” என்று சொல்ல,
“என்ன தான் சண்டை அப்படி… இது எப்போ நடந்துச்சு?…” என்று கேட்க,
“அதுலாம் நல்லாவே நடந்துச்சி… இப்போ உனக்கு என்ன சொல்லணும்?…”
” எப்படி தான் உங்க கல்யாணம் நடந்துச்சி, இத மட்டும் சொல்லேன்… லவ் மேரேஜ்க்கு எல்லாம் வாய்ப்பில்லைன்னு மட்டும் தெரியுது…” என்று அவன் புரியாத பாவனையுடன் சொல்ல,
“லவ்வா! அவ என்னைய திரும்பி கூட பாத்தது இல்லடா… இத்தனைக்கும் அவ என்னோட அத்தை பொண்ணு தான்… எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் அப்படின்னே, எங்க கல்யாணம் மொத நாள் தான் தெரியும்…” என்று அவன் சொல்ல,
“இது என்னடா இப்படி சொல்லுற…” என்று அவன் ஷாக்காக கேட்க,
“ஆமான் டா… நீ எப்படி கேட்டாலும், அதுதான் உண்மை… சரி போதும்வா, கேன்டீன் போயிட்டு வருவோம்…” என்று அவன் எழ,
“டேய்… இது என்னடா இப்படி பாதியோட விட்டுட்டு போற… முழுசா சொல்லி முடிச்சிட்டு போ… எதுக்கு இப்படி ரெண்டு பேரும், தனித்தனியா இருக்கீங்க…” என்று அவன் எழாமல் கேட்க,
“எல்லாம் போதும் வாடா…” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றான்.
– – – – – –
தனது ஆஃபிஸில் அன்றைய தின வேலையை முடித்து விட்டு, மது பொறுமையாக வீட்டினுள் நுழைய,
மதுவின் தாயோ, ஒன்றும் பேசாமல் அமைதியாக, அவள் வருவதை பார்த்துவிட்டு, மீண்டும் தான் கட்டிக்கொண்டிருந்த பூவை கட்ட ஆரம்பிக்க,
மகளும் ஒன்றும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றாள்.
பிரகதீஷ் வீட்டிற்கு வந்து சென்றதிலிருந்து, தாயும் மகளும் உரையாடிக் கொள்வதில்லை.
பத்மா மகளிடம், அவளின் தனக்கு பிறகான வாழ்க்கையை பற்றி அன்று பேசவர, மகளோ விடாப்பிடியாக, அவரை பேசவிடாமல் செய்ய,
தாயும், நான் இனிமேல் உன்னிடம் பேசப்போவதே இல்லை என்று அவளிடம் கூறிவிட்டார்.
சிறிது நேரம் சென்று தனது அறையிலிருந்து வெளியே வந்த மதுவோ, பெருமூச்சுடன் தன் அன்னையின் அருகில் அமர,
அப்போதும் அவர் ஒன்றும் கண்டுகொள்ளாமல் இருக்க,
அவரின் முகத்தை தன் கைக்கொண்டு நிமிர்த்தி, தன்னை பார்க்க செய்ய,
அவரோ கையை தட்டிவிட,
“ம்மா… ப்ளீஸ், நீங்களே புரிஞ்சிக்காம இப்படி பண்ணுனா நான் என்ன பண்றது சொல்லுங்க…” என்று அவளே பேச,
“இப்போ இவ்வளோ பொறுமையா பேசுற நீ… அன்னைக்கு எங்க போயிருந்திச்சி இந்த பொறுமை…” என்று அவர் நிதானமாக கேட்க,
“மறுபடியும் ஏன் ம்மா, அதையே பேசுறீங்க… அந்த பேச்சையே விடுங்க… எனக்கு அது வேணாம்… ப்ளீஸ் ம்மா…”
“அதே தான் வாணி, நானும் சொல்லுறேன்… எவ்வளோ நாள் இப்படி இருக்க போற, இப்போன்னு இல்ல, நாம எப்போ இங்க வந்தோமோ, அதுக்கடுத்து எப்போ பேச வந்தாலும், என்னை எதையாவது சொல்லி பேச விடாம சண்டை போடுற…” என்று ஆதங்கமாக சொல்லி,
“இப்போ இவ்வளோ நிதானமா பேசுற நீ, உன் வாழ்க்கைல அடுத்துன்னு, பேச வரும் சமயம் எல்லாம் நீ இப்படி என்ன சொல்ல வரேன்னே காதுலயே வாங்காம காச் மூச்ன்னு கத்துற… உன் வாழ்க்கைக்காக தானே பேசுறேன்… ” என்று அவர் அடுத்து பேசிக்கொண்டே செல்ல,
அதில் மதுவோ இடையில், “எனக்கு நீங்க இருக்கீங்க ம்மா… வேற என்ன வேணும் சொல்லுங்க…” என்று அவரை அடுத்து பேசவிடாமல் சொல்ல,
“நான் என்ன சொல்ல வரேன்னு தெரிஞ்சும், தயவு செய்து இப்படி பேசாத வாணி… நான் நாளைக்கு இல்லாம போய்ட்டா…” என்று கேட்க,
“ம்மா… ப்ளீஸ்… ஏன் ம்மா… இப்படிலாம் பேசுறீங்க…”
“நெருப்புன்னு சொன்னா வாய் சுற்றாது வாணி… அப்படி நான் இல்லாம போயிட்டேன்னே வச்சிக்கோ, அப்போ நான் நிம்மதியா போயி சேர்ந்துருப்பேன்னு நினைக்கிறியா…” என்று சற்று அழுத்தமாக கேட்க,
“ஏன் ம்மா… இப்போ நான் என்ன தான் பண்ணனும்ன்னு நினைக்கிறீங்க?…” என்று அவள் அழுதுக் கொண்டே கேட்க,
“இது அழறதுக்காக நான் பேசல வாணி… நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு அப்போ…” என்று பத்மா தீர்மானத்துடன் பேச,
“சொல்லுங்க… என்ன கேக்கணும்…” என்று விசும்பிக் கொண்டே பேச,
“கண்டிப்பா நீ ஒரு நல்ல, சந்தோசமா வாழ்க்கை வாழுறதை பாக்கணும்… உனக்கு ஈஸ்வரை பிடிக்கலைன்னா சொல்லு… நான் உனக்கு வேற மாப்பிளை கூட பாக்குறேன்…” என்று அணுகுண்டை வீச,
“ம்மா…ஆ” என்று அதிர்ச்சியடைய,
“உண்மையா தான் வாணி கேக்குறேன்… நீ அன்னைக்கு ஈஸ்வர்கிட்ட, பேசி இருக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சிது… ஈஸ்வர் கிட்டயும் கேட்டேன்… மழுப்பலா பதில் சொன்னான்… அப்போவே புரிஞ்சது, நீங்க பேசவே இல்லனு… பிடிக்காம அவன் கூட வாழுன்னு நான் சொல்லல… நீ சொல்லு… ஆனா நீ ஒரு நிறைவான வாழ்க்கை வாழுறதை நான் பாக்கணும்…” என்று தெளிவாக பேச,
“ம்மா… ம்மா…” என்று என்ன பேசுவதென்று தெரியாமல் தன் அன்னையை பார்க்க,
“நான் ஈஸ்வர்கிட்ட பேசிக்குறேன் வாணி… அவன் சொன்னா புரிஞ்சிப்பான்…” என்று சொல்ல,
மதுவோ அமைதியாக அன்னையையே பார்க்க,
“நாம இங்க வந்ததுக்கு அப்பறம், எங்க அண்ணன் தான் பேசுவாரு, கொஞ்ச நாளுக்கு முன்ன தான் ஈஸ்வர் என்கிட்ட பேசுனான்… மதுவை நான் விட்டுட மாட்டேன்… நான் வந்து பேசுறேன்னு அத்தைன்னு மட்டும் தான் சொன்னான்… நீ எவ்வளோ அபத்தமா பேசிருக்கன்னு யோசி…”
ஒன்றும் சொல்லாமல் அன்னையை பாத்தபடியே இருக்க,
“எனக்கு நீ சந்தோசமா வாழுறதை பாக்கணும்… யோசிச்சி என்ன முடிவுன்னு சொல்லு வாணி…” என்று எழுந்து சென்றார்.
மதுவோ தாயின் பேச்சில், தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
அங்கு பிரகதீஷ்ஷோ, தந்தையின் பேச்சில் ஆடி தான் போனான்.
பார்வை வீசும்…
error: Content is protected !!