Skip to content
Post Views: 4,511
தேவை… பாவை பாவை – 17
ஊரிலிருந்து தன் வீட்டிற்கு வந்திருந்த அவனின் பெற்றோர், அக்கா மற்றும் அவளின் கணவரை பொதுவாக வாங்க என்று வரவேற்று, அவளை உள்ளே அழைத்து சென்றான்.
“வாங்க மாமா… நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்…” என்று அவரிடம் கை குலுக்க,
“அட இதுல என்ன மாப்பிளை இருக்கு… நீ கண்டிப்பா வரணும்னு சொன்னியே… வராம இருந்தா நல்ல இருக்குமா சொல்லு…” என்றான் மனோகரன்.
Advertisement
மனோகரின் பதிலிற்கு சிரிப்புடன் தலையசைத்து அதனை ஏற்று,
பின்பு அப்பா மற்றும் மாமாவிடம் பொதுவாக சில விஷயங்கள் பேசவென்று, அவர்களின் அடுத்த கொஞ்ச நிமிடங்கள் அதில் கரைந்தது.
வந்ததிலிருந்து அவனின் தாய் காமாட்சி, அவனையே தான் நோட்டம் விட்டு கொண்டிருந்தார்.
Advertisement
இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து அவன் தன்னிடமும், மகளிடமும் சம்பிரதாயத்துக்கு கூட ஒன்றும் விசாரிக்காதது, அவருக்கு கொஞ்சம் பயம் கலந்த யோசனையை தந்தது.
Advertisement
இதே யோசனையுடன் அவர், அவளின் மகளை பார்க்க,
அவளுக்கு இதுயெல்லாம் ஒன்றும் தோணவில்லை போல, அந்த வீட்டையே மிகுந்த பொறாமையுடன் சுத்தி சுத்தி பார்த்து கொண்டிருந்தாள்.
இவளையெல்லாம் வச்சிக்கிட்டு, ஒன்னும் பண்ண முடியாது. என்னமோ பண்ணிட்டு போகட்டும்… இனிமே இவளை பாத்தா நமக்கு கதையாகாது.
Advertisement
நாம கொஞ்சம் பக்குவமா நடந்துக்கிட்டா தான் பொழைக்க முடியுமென்று சிரத்தையாக முடிவு செய்துகொண்டார்.
இங்கு லீலாவோ, ” இவனுக்கு எவ்வளோ சம்பளம்னு தெரியல… அதுக்குள்ள இங்க வீடெல்லாம் வாங்கிட்டான்…”
“ஹ்ம்ம்… இந்த அம்மாகிட்ட பாலிஷா, அதையும் இதையும் சொல்லி பேச சொல்லி, பேசிட்டியான்னு கேட்டா, என்னமோ மழுப்புர மாறியே பேசுது…”
“என்ன நடந்துச்சின்னு ஒன்னும் புரியல… இதுல நாம பண்ணிருக்க காரியம், தெரிஞ்சா அவளோ தான்…”
“தனியா பேச்சை ஆரம்பிச்சா தான், மாட்டிப்போம்… இப்போவே அப்படியே மெதுவா சொல்லி, அம்மாவை இழுத்து பேசிடனும்…”
“இந்த அப்பாக்கு எவ்வளவு தூரம் விஷயம் தெரியும்னு தெரியல… அன்னைக்கே நம்மளை அந்த வாங்கு வாங்கு வாங்குனாரு…”
“எப்படியாவது நாம இன்னைக்கு பேசுற மாறி சமயத்த உருவாக்கிக்கணும்…”
“நாம நினைச்சது மட்டும் நடந்ததா போதும்… அப்பறம் எல்லாம் நம்ம ராஜ்ஜியம் தான்…” என்று தன் மனதில் சிரித்துக்கொண்டே, ஒரு பெரிய மணல்கோட்டையை காட்டினாள்.
“நீங்க அப்பாகிட்ட பேசிட்டு இருங்க மாமா… நான் இதோ வந்துடுறேன்…” என்று பிரகதீஷ் அவர்களிடம் கூறிவிட்டு சமயலறைக்கு சென்றான்.
மகன் சென்றதை பார்த்து, தானும் பின்னால் சென்று,
“தம்பி… ஈசுவரா…” என்று பேச்செடுக்க,
அவன் திரும்பி பார்த்த பார்வையில், அவரின் வாய் கப்பென்று மூடியது.
அவர் இருப்பதாய் கண்டுகொள்ளாமல், பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை பற்றவைக்க,
காமாட்சியோ திரும்பி, “தள்ளு சாமி… நான் டீயை வைக்கிறேன்…” என்று பொறுப்பாக சொல்ல,
இம்முறை திரும்பி, அன்னையை பார்த்து, “எப்போவிருந்து நீங்க இவ்வளோ பொறுப்பா மாறுனீங்க…”
அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு அவனை பார்க்க,
“எதுக்கு இப்போ நீங்க இங்க வந்து, கையை பிசைஞ்சிகிட்டு என்னைய பார்த்துட்டு நிக்குறீங்க?… கிளம்புங்க, நீங்க பண்ண வரைக்கும் போதும்….”
“தம்பி அது வந்து…” என்று அவர் மறுபடியும் அவர் பேச ஆரம்பிக்க,
“என்ன?… என்ன திட்டம் போட்டுட்டு வந்திருக்கீங்க ரெண்டு பெரும் சேர்ந்து இந்த தடவை?…”
அவன் கேட்டதும், வேகமாக, “இல்ல இல்ல தம்பி… அப்படியெல்லாம் எதுவும் இல்ல தம்பி…” என்று ஒப்பிப்பது போல சொல்ல,
“உங்கள நம்ப சொல்லுறிங்களா என்னை?…”
“தம்பி… அது என்னவோ புத்திகெட்டு போயி…” என்று பேச வர,
“ஆன்… அப்பறம்…” என்று பிரகதீஷ் இடையீட்டு கேட்டு,
“உங்ககிட்ட நான் ஒன்னும் இப்போ கேக்கல…நான் பேச சொல்லும் பொது மட்டும் பேசுங்க… இப்போ போயி அங்க உக்காருங்க…”
“சாமி… ஈசுவரா… இத ஒன்னை மட்டும் சொல்லிட்டு போயிடுறேன்…”
அவன் என்ன என்பது போல் பார்க்க,
“எனக்கு தெரியாது தம்பி, உனக்கு அந்த பிள்ளையை இவ்வளவு பிடிக்கும்னு, நீ அன்னைக்கு என்கிட்டே கோவமா பேசும் போது தான் தெரிஞ்சிகிட்டேன் சாமி இந்த அம்மா…”
“முன்னாடியே தெரிஞ்சிருந்தா, உங்க அக்காகூட சேர்ந்து இப்படி புத்திகெட்டு போயிட்டு நடந்துருக்க மாட்டேன்… உன்கிட்ட பேசுனதை கூட, நான் உங்க அக்காகிட்ட ஒன்னும் சொல்லிக்கலை தம்பி…”
“நீ ஒத்தையா இருக்கியேன்னு நினைச்சி தான், உங்க அக்காக்காரி சொன்னதை, உங்கிட்ட கேட்டுட்டேன்… இப்போ நான் திருந்திட்டேன் தம்பி… நம்பு சாமி இந்த அம்மாவை…” என்று விளக்கமளித்து, அவனை ஆதங்கமாக பார்க்க,
அவனோ, “சரி சொல்லிட்டீங்களா… போயி உக்காருங்க… டீ எடுத்து வரேன்…” என்று அவர் சொல்லியதற்கு பதில் சொல்லாது கத்தரித்து பேச,
அவனை இப்போது கொஞ்சம் பாவமாக பார்த்தார், காமாட்சி.
“நீங்க இப்ப திடிர்னு இவ்வளோ நல்லவங்களா மாறிக்குறதை பார்த்து, எனக்கு அப்படியே புல்லரிக்குது… பண்ணறதையெல்லாம் பண்ணிட்டு நேக்கா இப்போ பேசி தப்பிக்குறீங்க…”
“இதுலாம் உங்களுக்கு எவ்வளோ கை வந்த கலையா இருக்கு…”
“நான் ஏதாவது கேவலமா கேட்டுட போறேன்… முதல்ல என் முன்னாடி நிக்காம கிளம்புங்க…” என்று உறுமிவிட்டு டீயை எடுத்து வெளியே சென்றான்.
அவன் டீ எடுத்து வரைதல் பார்த்த, மனோகரோ
“மாப்பிளை டீ எடுத்து வரான்… நீ இங்க அழுந்தி உக்காந்து என்ன கனவு கண்டுட்டு இருக்கியா… சீ, எழுந்து முதல்ல அதை வாங்கு…” என்று அமர்ந்திருந்த லீலாவை பேச,
அதுவரையில் தன் எண்ணத்திலே சுழன்றுகொண்டிருந்த லீலாவோ, கணவனின் பேச்சில் திடுக்கிட்டு அவனை பார்த்து விழித்தாள்.
“என் வீட்டுக்கு நீங்க வந்திருக்கீங்க… அப்போ நான் தானே மாமா குடுக்கணும்…” என்று பிரகதீஷ்ஷே குடுத்தான்.
பின்னால் வந்த காமாட்சியோ, இவர்களின் சம்பாஷணையை பார்த்து நிற்க,
“இதுலாம் ஒன்னும் சொல்லிக்குற போல இல்ல அத்தை… பாத்துக்கோங்க உங்க பொண்ணோட லட்சணத்தை…” என்று தன் அதிருப்தியை மாமியாரிடம் காட்டினான்.
“அப்பா, எங்க மாமா?…” என்று வினவ,
“கொஞ்சம் உக்கார முடியாம இருந்தாங்க… நான் தான் செத்த படுக்க சொன்னேன்…”
“நீங்க குடிங்க மாமா… நான் அப்பாக்கு எடுத்துட்டு போறேன்…” என்று அவன் உள்ளே செல்ல,
அங்கு படுத்திருந்த தந்தையை பார்த்து, “என்ன ப்பா… களைப்பா இருக்கா?…”
“அதுலாம் ஒன்னும் இல்ல தம்பி… ரொம்ப நேரமா உக்காந்திருந்தது கொஞ்சம் முதுகு புடிச்ச மாறி இருந்தது.
“இதை குடிச்சிட்டு நீங்க ரெஸ்ட் எடுங்க… நான் அப்பறம் வரேன்…” என்று சொல்லிவிட்டு எழ,
“என்ன தம்பி, என்னவாச்சும் சொல்லனுமா?…” என்று கேட்டு அவனின் முகத்தை பார்க்க,
“ம்ம்… அது ஒன்னும் இல்ல ப்பா… நீங்க படுங்க, நாளைக்கு பாத்துக்கலாம்…”
“என்னனு பட்டுன்னு சொல்லு ப்பா, ஈசுவரா… சும்மா இழுத்துட்டு நிக்குற…”
“இல்ல ப்பா… இப்போவே போயிட்டு உங்க மருமகளை அழைச்சிட்டு வரலாமான்னு கேக்க வந்தேன்…”
“நீங்க முடியலன்னு சொல்லுறீங்க… அதான் சொன்னபடியே நாளைக்கே போகும்…”
“இதுக்கு தான் இம்புட்டு யோசனையா… நாங்கூட வேற என்னமோ இருக்கும்னு நெனச்சேன்…”
“நேத்து கடை பையன் இல்லனு, கொஞ்சம் மூட்டையை நானே தூக்கிட்டு வந்து போட்டேன் தம்பி… அதுனால தான் வேற எதுவும் பெருசா இல்ல தம்பி…”
“ப்பா… ஏன் ப்பா… முடியாம எதுக்கு மல்லு கட்டிட்டு செய்யணும்… ஒரு ஒதுங்க வச்சிட்டு, நாளைக்கு அந்த பையன் வந்தா, எடுத்து வச்சிட்டு போறான்…”
“உங்க அப்பா லாரி டிரைவர் ஆஹ் இருந்தவன் தம்பி… இப்போதான் இந்த மளிகை கடை வச்சிட்டு உக்காந்திருக்கேன்…”
“அதுனால என்ன அப்பா… உங்களுக்கு இன்னும் இள வயசுன்னு நினைப்பா…”
“என்ன மாப்பிளை ரகசிய பேச்சு வார்த்தையா…” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் மனோகர்.
பிரகதீஷ், “அதுலாம் ஒன்னும் இல்ல மாமா… சும்மா அவங்க உடம்ப பத்திதான் விசாரிச்சிட்டு இருந்தேன்…”
“என்ன மாப்பிளை என்னவோ முக்கியமா விஷயம், உங்களுக்கு தெரியணும், அதுனால நீங்க கண்டிப்பா வாங்கனு சொன்ன… ஆனா இன்னும் என்னனு சொல்லவே இல்லையே…”
“மாப்பிளை நீ சொன்னதுக்காக தான், நான் தட்டாம வந்தேன்…”என்று சொல்லி அவனிடம் கேட்க,
“அதை பத்தி தான் மாமா, அப்பாகிட்ட கேட்கலாம்னு நானும் வந்தேன்…” என்று தன் மாமனுக்கு உரைத்து, தந்தையை ஒரு பார்வை பார்த்தான்.
அவரும் அவனை பார்த்து ஆமோதிப்பாக தலையசைக்க,
மனோகர், “என்ன எதுவும் பெரிய விஷயமா?”
“மாமா, நான் சொல்லுறதை பொறுமையா கேக்கணும், ஆத்திரப்பட்டு உடனே எதையும் பண்ணமாட்டீங்கனு, எனக்கு சொல்லுங்க…” என்று ஒரு வித தீவிரத்துடன் சொல்ல.
அவனின் பேச்சை கேட்ட மனோகரோ, விஷயம் பெரிதென்று மனதில் எண்ணி,
“சரி சொல்லு மாப்பிளை…”
பிரகதீஷ் தனக்கு தெரிந்த அனைத்தும் சொல்லிவிட்டு, அவனை பார்க்க,
கைகளை முறுக்கி கொண்டு, ஆத்திரத்துடன் “ஏன் மாப்பிளை இவ்வளோ நாளா என்கிட்டே சொல்லல…”
“மாமா, விஷயம் இவ்வளோ பெருசுன்னு எனக்கே இப்போ தான் தெரியும்…”
“இவளை என்ன பண்ணுறேன்னு மட்டும் பாருங்க…” என்று சொல்லி எழ,
“மாமா ப்ளீஸ்… கொஞ்சம் பொறுமையா இருங்க… எனக்காக…”
“மதுக்கு இவங்க பண்ணுனதை அவங்களே, சொன்னாதான் அவளுக்கும் புரியும்… அதுக்காக தான் மாமா…”
“இருந்தாலும், நான்… என்ன சொல்லுறதுனே தெரியல மாப்பிளை…”
“கனிமொழியா இப்படி?… அவ அண்ணிகூட சேர்ந்து இப்படிலாம் பண்ணிருப்பான்னு என்னால நினைச்சிகூட பாக்க முடியலை மாப்பிளை…”
“அப்பா இல்லாத பொண்ணு, எதுக்கும் ஏங்க கூடாதுனு, நான் இவளுக்கு ஒன்னொன்னும் பாத்து பாத்து பண்ணிட்டு இருக்கேன்…”
நான் இவளுக்கு, நல்ல சீர்செனத்தியோட கட்டி கொடுக்கணும்னு ராப்பகலா உழைக்குறேன்… ஆனா இவ என்ன காரியம் பண்ணிருக்கா…”
“எம் பொண்டாட்டி… இனிமே அவ என் மூஞ்சில கூட முழிக்க கூடாது…” என்று தீவிரமாக சொல்லி, எழும்ப,
“மாமா ப்ளீஸ்… கொஞ்சம் இருங்க மாமா…” என்று அவனின் கையை பிடித்து தடுக்க,
“அட விடு மாப்பிளை…” என்று அவனின் கையை உதறி,
இவர்கள் பேசுவதை அனைத்தும் கேட்டுக்கொண்டு, பார்வையாளராக இருந்த தன் மாமனாரிடம்,
“இங்க இவ்வளோ வேலை பண்ணிட்டு வந்துருக்கா, இதை பத்தி என்கிட்டே நீங்க ஒரு வார்த்தை கூடாத சொல்லாம இருந்திருக்கிங்க…” என்று கண்டமாக சொல்ல,
பெருமூச்சினை விட்டபடி, “இதுல கனிமொழி சம்பந்தம் பற்றுக்குறதுலாம் தெரியாது மாப்பிளை…”
“ஆத்தாளும், மவளும் வேண்டாதபடி பேசி தான், மருமகளை வீட்டை விட்டு கிளம்ப வச்சிருக்காங்கன்னு மட்டும் தான், நானும் நினச்சேன்…”
“தம்பி சொல்லி தான் இந்த விஷயமே தெரியும்…” என சொல்லி முடித்தார்.
“மாமா, உங்க பொண்ணை, நான் என்ன பண்ணாலும் நீங்க இடையில வர கூடாது… மாப்பிளை உனக்கும் தான் சொல்லிட்டேன்…”
“அவளுக்கும் பொண்ணு இருக்கே… அவ பொண்ணை இதே மாறி பண்ணுவாளா… எனக்கு சொல்லவே வாய் கூசுது…”
“ச்ச்சீ… இவயெல்லாம் பொம்பளையா… ஒரு பொண்ணோட வாழ்க்கையை அவளுக்கே தெரியாம அழிக்க பாத்துருக்கா… இதுல என் தங்கச்சியும் கூட்டு…”
“இதுக்கெல்லாம் இப்போவே ஒரு முடிவு கட்டுறேன்…” என்று ஆத்திரத்துடன் சொல்லி முடித்தான்.
“மாமா…” என்று பிரகதீஷ் பேச்சை தொடங்க,
“ஒன்னும் இப்போ என்கிட்ட கேக்காத மாப்பிளை…”
“மது வீட்டைவிட்டு போன விஷயம் கேள்விப்பட்டு, நான் கேட்டதுக்கு, உன்னை வேணாம்னு விட்டுட்டு போயிட்டதா, சொல்லி பூசி மொழிகிறுக்கா என்ட… இன்னும் என்னலாம் பண்ணிருக்கானு தெரியல…”
“வேலை வேலைன்னு நானும் வீட்டை, ஒழுங்கா கவனிக்காம விட்டுட்டேன்…”
“விடுங்க மாமா… என்னவா இருந்தாலும் யோசிச்சி முடிவு பண்ணிக்கலாம்… நீங்க ரொம்ப யோசிக்காதிங்க இப்போ…”
“இதுக்கு மேல என்ன யோசிக்குறதுக்கு இருக்கு… உன்னைய போல பொறுமையெல்லாம் எனக்கில்லை மாப்பிள்ளை…”
ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் பிரகதீஸ்வரன்.
“அட மாப்பிளை, இப்போவே போயி நாம மதுவை இங்க கூட்டியாந்துருலாம்… நீங்க என்ன சொல்லுறீங்க மாமா?”
சூட்டோட சூடா, முடிச்சி விட்டுட வேண்டியதுதான்…”
“இப்போதான் தெரியுது எனக்கு, நீ எதுக்கு வீட்டுல ஒன்னும் சொல்லாம வர சொன்னன்னு… இதுவும் நல்லதுக்கு தான் மாப்பிளை…”
“இதுதான் மாப்பிளை, ஈசுவரும் என்கிட்ட கேட்டுட்டு இருந்தான்…” என்று தன் மாப்பிள்ளையிடம் சொல்ல,
“அப்பறமென்ன, வாங்க மாமா போயி அழைச்சிட்டு வந்துடலாம்…” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
அவன் வெளியே சென்றபோது,
“அதானே பாத்தேன்… ஏற்கனவே குடிய கெடுத்தது பத்தாதுன்னு, அடுத்து இப்படி நாடகத்தை பாத்து, எவென் குடிய கெடுக்கலாம்னு திரிய வேண்டியது…” என்று எண்ணி அவர்கள் இருவரையும் முறைப்புடன் பார்த்து கொண்டே அங்குள்ள சோபாவில் அமர்ந்தான்.
இவன் அங்கு அமர்வது கூட தெரியாமல், அம்மாவும், பொண்ணும் தொலைக்காட்சி பெட்டியில் நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.
கன நேரத்திற்கு பிறகு, அப்பாவும், பிள்ளையும் பேசிக்கொண்டே வெளியே வர, அந்த சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.
“மாமா கிளம்பலாமா?…” என்று அங்கிருந்தவர்களை கண்டுக்காமல் பிரகதீஷ் கேட்க,
அவன் பதில் சொல்லுவதற்கு முன்பு,
லீலா வேகமாக, “எங்கடா? வெளில போறோமா…”
அவளுக்கு பதிலென்ன, அவளின் முகத்தை கூட ஏறெடுக்காமல், வெளியே சென்றான்.
மற்ற ஆடவர்களும் வெளியேற, போகும் அவர்களை பார்த்துக்கொண்டே,
“என்ன மோவ்… ஒன்னும் சொல்லாம போறாங்க…”
“இவன் என்னைய பெருசா கண்டுக்க கூட இல்ல… இதுலாம் என்னனு நீ கேக்க மாட்டியா அவன்கிட்ட…”
“நானும் உன்கூட தானே இருக்கேன்… எனக்கென்ன தெரியும்…”
“அவன் பேசலைன்னா அவன்கிட்டயே கேட்டுக்கோ இனிமே… என்கிட்ட இப்படி கேக்குற ஜோலி வச்சிக்காத…”
“என்னமோவ் வேற மாறி பேசுற… நானும் பாத்துட்டே தான் இருக்கேன்…”
“அந்த கனி பொண்ணை, உன் பிள்ளைக்கு கேக்க சொன்னதுல இருந்து, நீ கொஞ்சம் பட்டுக்கமா தான் பேசுற மாறி இருக்கு… என்ன சங்கதி?”
“நானே என்ன வரப்போகுதோன்னு பாத்துட்டு இருக்கேன்… இவ ஒருத்தவ…” என முணுமுணுக்க,
“என்ன மோவ் முணுமுணுக்குற…”
“இவ எவடி… சும்மா என்ன? என்னனு தொணக்குறவ… செத்த கம்மினு இரு…”
“அதுசரி… என்ன உம்மவன் வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் பவுசு கூடி போச்சா…”
“ஆமா, அப்டினே வச்சிக்கோ… நீ என்கிட்ட ஒரண்டைய இழுக்கமா இரு… நான் செத்த கட்டைய சாய்க்கப்போறேன்…” என்று சொல்லிக்கொண்டே கூடத்தில் ஒரு மூலையில் படுத்துவிட்டார்.
அன்னை இப்படி தன்னை பேசியதும், கொஞ்சம் யோசித்து,
“இப்போ எதுக்கு இந்த அம்மா இப்படி நடந்துக்குதுன்னு தெரியலையே… இருந்தாலும் இப்போ நம்ம கொஞ்சம் அடக்கி வாசிச்சிகிட்டா தான், விஷயம் பேசும் போது, சரியாய் இருக்கும்…” என்று முடிவெடுத்து அமைதியானாள் லீலாவதி.
—–
error: Content is protected !!