Skip to content
Post Views: 3,571
படிப்பு வேண்டாமா? மீண்டும் கேட்டான் சிரித்துக்கொண்டே…
அய்யா சாமி ஆளை விடுங்க! மீண்டும் வலுவான கும்பிடு போட்டாள்.
ஏன்?
நான் படிப்ஸ் இல்லை. படிப்பு எனக்கு போர்… கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் உண்மையை உடைத்து சொன்னாள்.
Advertisement
அவனுக்கு இன்னும் சிரிப்பு விரிந்தது.
நீங்க படிப்பாளியா? திருப்பிக் கேட்டாள்.
இல்ல பாட்டாளி என்றான்.
Advertisement
போலீஸ்கார் இது எஸ்கேப்பிங் ஆன்சர்.
Advertisement
நானும் படிப்பில் சுமார் தான். டென்த்தில் முன்னூத்து முப்பத்திரண்டு, +2 வில் எண்ணூத்து பதினெட்டு .
அட அவ்வளவு மார்க் வாங்கினீங்களா? விழி விரித்து வியப்புடன் கேட்டாள்.
நானெல்லாம் டென்த்தில் இருநூத்து அறுபத்தெட்டு தான்.
Advertisement
சூப்பர் என்று கட்டிக் கொண்டான்.
இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது . முறைத்தாள்.
இதில் என்ன கிண்டல் இருக்கு? யாருக்கு என்ன கெப்பாகுட்டியோ அவ்வளவு தான்! இலகுவாய் சொன்னான்.
இதே தான் இதே மாதிரி தான் எங்கப்பா சொல்வாரு…. மலர்ந்து சிரித்தாள்.
தன் தந்தை போன்றே அவன் பேசியதில் அவளுக்கு அவ்வளவு சந்தோஷம். பூவராகன் கருத்தும் கிட்டத்தட்ட இப்படி தான்.
சொல்லு உனக்கு வேறென்ன பிடிக்கும்? சிரித்துக்கொண்டே கேட்டான்.
அவன் சிரிப்பு அவளுக்கு சங்கடத்தை கொடுத்தது.
ஸா… ஸாரி தட்டு தடுமாறினாள்.
ஏய் லூசு…. ரசித்து தான் சிரித்தேன். உன்னை நக்கல் பண்ணி சிரிக்கலை.
அப்போ சொல்லிடவா?
சொல்லு!
சொல்லிடுவேன்! அவளுக்கே சிரிப்பு வந்து தொலைத்தது.
சொல்லு! அவளை ஊக்கினான்
நல்லா சாப்பிட்டு தூங்க பிடிக்கும் என்றவள் நாக்கை கடித்துக் கொண்டாள்.
குட் ஆம்பிஷன் என்றான் வியப்பாய் பார்த்தபடி.
பார்த்தீங்களா கிண்டலா சிரிக்கிறீங்க…. சிணுங்கினாள்.
இந்த உலகத்துல யாருக்கும் இல்லாத கோல்(goal) என் பொண்டாட்டிக்கு இருக்குன்னு பெருமையா சிரிக்கிறேன்.
அவளை இறுக்கி கட்டிக் கொண்டான். நானெல்லாம் அப்படி படித்தேன் இப்படி படித்தேன். ஹையர் ஸ்டடிஸ்க்கு அப்ராட் போக இருந்தேன்னு அள்ளி விடாம வெகுளியாய் பேசுபவளை கொஞ்சாமல் என்ன செய்வான்?
சமையலில் இண்டிரஸ்ட்?
கண்டிப்பா இல்லை. திட்டவட்டமாய் மறுத்தாள்.
ஓ… வருத்தபடாத வாலிபி சங்க தலைவி போல… அடக்க மாட்டாது அனுபவித்து சிரித்தான்.
போங்க நீங்க கிண்டல் பண்றீங்க…. இனிமேல் எதுவும் சொல்ல மாட்டேன் அவள் முறைத்தாள்.
சரி சீரியஸா பேசவா? சமையல் கத்துக்கோ! தனிக்குடித்தனம் போனா சமாளிக்கணும் இல்ல.
தனிக்குடித்தனமா? போகிறோமா? குழப்பமாய் கேட்டாள்.
எப்போனாலும் போக வேண்டிய சூழ்நிலை வரும் தானே..? நீ எங்கம்மா கூட சண்டை போட்டு முட்டிகிட்டா? நான் பொண்டாட்டி பின்னாடி வந்தாகணுமே? அவ்வளவு சீரியஸாய் ஆனால் சிரித்தபடி பேசினான்.
நான் சண்டை எல்லாம் போடமாட்டேன்.
நிஜமாவா? ஆளு வாயாடி மங்கம்மாவா இருக்கியே… நெற்றிப்பொட்டில்தட்டி யோசித்தான்.
நீங்க என்னவோ யோசிக்கிறீங்க எனக்கு புரியல….! என்றாள்.
புரியும் போது தானா புரியும்!
“——————–“
மக்கு பொண்டாட்டி வாச்சிருக்கான்னு வருத்தமா இருக்கா? குறு குறுப்பாய் கேட்டாள்.
என் சிந்தனை எப்போவும் மாறுபட்டது சுப்பு. நம் வாழ்க்கை நாம செதுக்கியதா இருக்கணும்!
அதீத கற்பனை,அதிகப்படியான ஆசை இதெல்லாம் எனக்கு இல்லை. நிதர்சனம் என்னவோ அதை எந்தவித பாசாங்கும் இல்லாம ஏத்துக்கணும். இயல்பான வாழ்க்கையை எளிமையா வாழ்ந்து இந்த ஜென்மத்தை கடந்துடணும்.
எனக்கு என் படிப்பு போதும், கிடைத்த இந்த வேலை போதும். நான் சம்பாதிக்கிற சம்பாத்தியம் போதும். இந்த மக்கு பொண்டாட்டி போதும் மென்மையாய் அணைத்துக்கொண்டான்.
மன்னர் மன்னரானந்தா தத்துவம் ஒன்னும் புரியல… அவன் மீசையை முறுக்கி விட்டாள்.
சிம்பிளா சொல்லவா? நமக்காக வாழ்வோம்! என்றான் தீர்க்கமாய்.
அவள் புரியாமல் பார்த்திருக்க… ஒரே நாளில் புரிஞ்சுக்க முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும் பார்த்து புரிஞ்சுக்குவ… இப்போ தூங்குவோமா? கண்ணடித்து சிரிக்க… அது புதுமண தம்பதிகளுக்கான இன்பமான இரவாகிப் போனது
“——————–“
சரவணன் மனைவி குழந்தையுடன் கல்பாக்கம் கிளம்பினான். மன்னரும் பணியில் சேர கிளம்பிக் கொண்டிருந்தான்.
அத்த நல்லெண்ணெய், மிளகாய் தூள், மாங்காய் ஊறுகாய் எல்லாம் கேட்டேனே… அஞ்சலி ஞாபகப் படுத்தினாள்.
ராத்திரியே எடுத்து வச்சிட்டேன் மா!
அவருக்கு லன்ச்?
சாப்பாடு கட்டிட்டேன் பாரு என்றவர் மூன்றடுக்கு கேரியரை காட்டினார்.
நேற்று மாலையே கிளம்பியிருக்கலாம். ஆனால் கிளம்பவில்லை.அவள் எப்போது வந்தாலும் இப்படி தான் எவ்வளவு வேலை பாப்பாத்தியை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்கிவிடுவாள்.
அத்தை பால்…. ஞாபகப் படுத்தினாள் அஞ்சலி.
ரெண்டு லிட்டர் பாட்டிலில் வச்சிருக்கேன். நாட்டு முட்டை பத்து வச்சிருக்கேன். சிறு கீரை கிள்ளி வச்சிருக்கேன், சென்னா குன்னி பொடி கேட்டியே…. எல்லாமே வச்சிருக்கேன். கட்டை பையை காட்டினார்.
தாய் வீட்டில் இருந்து மூட்டைக் கட்டிக் கொண்டு போகும் பெண்களை போல் இவள் மாமியார் வீட்டில் இருந்து உரிமையாக மூட்டைக் கட்டிக் கொண்டு போவாள்.
எனக்கு செய்ய வேண்டியது உன் கடமை என்ற நினைப்பு.. கூடவே இந்த வீட்டில் எனக்கும் உரிமை இருக்கிறது என்ற மிதப்பு.
மன்னர் எதையும் கண்டு கொள்ளவில்லை. சாப்பிட்டுவிட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தவன் சுப்ரஜா என்று குரல் கொடுத்தான்.
ஆயுஷூக்கு தோசை ஊட்டிக் கொண்டிருந்தாள்.
அம்மாடி உன் புருஷன்காரன் கூப்பிட்டறான் போய் என்னன்னு பாரு என்றார் பாப்பாத்தி.
“——————–“
சுப்பு பதினோரு மணி போல தோட்டத்தில் மேயற கோழிக்கு இந்த கம்பு நொய்யை போடு. சாயந்திரம் நாலு மணிக்கு மேல செடிகளுக்கு தண்ணீர் விடு! அப்புறம் இந்த காசை வச்சுக்கோ… தன் வாலட்டில் இருந்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்டினான்.
காசு வேண்டாம்… அவள் மறுத்தாள்.
அவசரத்துக்கு ஏதாவது வாங்கணும்னா யூஸ் பண்ணிக்கோ!
என்கிட்ட இருக்கு.
பிடின்னு சொல்றேன்ல….. அவள் கையில் திணித்தான்.
நைட் எப்போ வருவீங்க? ஏக்கமாய் கேட்டாள்.
இன்னும் கிளம்பவே இல்லை… சிரிப்புடன் அவள் தலையில் முட்டினான். தன்னை மனைவி தேடுகிறாள் என்ற உணர்வு அவ்வளவு சில்லிப்பை கொடுத்தது.
அவள் அமைதியாய் அமர்ந்துவிட…. காக்கி உடையை அணிந்து கொண்டிருந்தான்.
இன்று தான் சீருடையில் அவனை பார்க்கிறாள். கம்பீரமாக தான் இருந்தான். அது சீருடை கொடுத்த நிமிர்வோ!
காக்கி ஷர்ட்டை இன் பண்ணி பேண்டில் பெல்ட் போட்டுக் கொண்டிருந்தவனை ஆர்வமாய் பார்த்தாள்.
இன்னும் கொஞ்சம் சதை பிடித்தால் நல்லா இருக்கும் என்று யோசனையாய் பார்த்திருந்தாள்.
ஓய் சுப்பு… தொப்பியை அவள் தலையில் கவிழ்த்தான்.
ஹான்… திரு திருவென விழித்தாள்.
நான் கிளம்பவா?
ம்ம்ம்ம்ம்ம் என்றாள் வருத்தமாய்.
நீ கால் பண்ணி நான் உடனே பிக் பண்ணலைனா வருத்தப்படாதே. ஏதாவது கேஸ் விஷயமா வெளியில் இருப்பேன், இல்லைன்னா பந்தோபஸ்தில் இருப்பேன். எப்படியும் உன் கால் பார்த்துட்டு கூப்பிடுவேன்.
ம்ம்ம்ம்ம்ம்ம் என்றாள்.
கிளம்பவா என்றான்.
ம்ம்ம்ம்ம்ம் என்றாள்.
கிளம்பவா? மீண்டும் கேட்டு மீசையை நீவிக் கொண்டான்.
ம்ம்ம்ம்ம் என்றாள் படபடக்கும் இமை விரித்து….
இவ இருக்காளே சரியான டியூப் லைட்….கடுகடுத்துக் கொண்டவன் மத்ததெல்லாம் சினிமா பார்த்து தெரியும். இது மட்டும் தெரியாது செல்லமாய் அவளை வசைபாடடி அவனே அணைத்து முத்தமிட்டு விலகினான்.
அவள் வாட்டத்துடன் முகம் சோர்ந்து நின்றிருக்க… மீண்டும் அணைத்துக்கொண்டான்.
சுப்பு சீக்கிரம் வர பார்க்கிறேன் என்று நெற்றியில் முத்தமிட்டான்.
அவள் கையசைத்து வழி அனுப்பினாள்.
மன்னரு ஒரு நாள் நம்ம வீட்டுக்கு உன் வைஃபை அழைச்சுட்டு வா என்று அழைப்பு விடுத்தான் சரவணன்.
சரிண்ணா என்றவன் கிச்சனில் இருந்த பாப்பாத்தியிடம் வந்தவன் அம்மா நான் கிளம்புறேன் சுப்ரஜாவை பார்த்துக்கோங்க என்றான்.
சரிப்பா… நீ ஜாக்கிரதையா போயிட்டு வா என்றார்.
சாப்பிடாம இருந்துடப் போறா…
சரிப்பா நான் சாப்பிட வைக்கிறேன் நீ கிளம்பு என்றார்.
மன்னர் ஒரு புறம் கிளம்பி போக சரவணன் குடும்பம் மறுபுறம் கிளம்பி கல்பாக்கம் சென்றது.
“————————–“
டிவி பார்த்து போரடித்து போனது. பின்வீட்டுக்கு சென்றாள் அங்கே பாப்பாத்தி புளி நறுக்கிக் கொண்டிருந்தார்.
என்னத்தை புளி வாங்கினீங்களா? தூக்கு எவ்வளவு? என்று அருகில் வந்தமர்ந்தாள்.
நம்ம மரத்து புளி தான் என்றார்.
மாமியாருக்கு உதவி செய்யும் பொருட்டு அவர் அரிந்து போட்ட புளியின் விதைகளை நீக்கி பக்கத்தில் இருந்த பானையில் போட்டு வைத்தாள்.
போரடிக்குதா என்றார்?
அப்படிலாம் இல்லத்தை என்றாள்.
காபி போட்டு தரவா என்றார்.
வேண்டாம் என்று மறுத்தவள் அவரோடு பேசிக் கொண்டே வேலை செய்தாள்.
உங்க சின்ன பிள்ளை ஏன் அழுத்தமாவே இருக்காரு? மனுஷன் எண்ணி எண்ணி பேசுறாரு….கேட்டு விட்டாள்.
அவன் சுபாவமே அப்படி தான். ஆளு ரொம்ப ரோஷக்காரன். எதை செய்தாலும் ஒன்னுக்கு நாலு முறை யோசித்து தான் செய்வான்.
பெருமை தான் போங்க….! சிரித்து விட்டாள்.
ஆமா பெருமை தான். எம்புள்ள சோத்துக்கு இளைச்சாலும் சொல்லுக்கு இளைக்காது என்றார் நிமிர்வுடன்.
ஓவரா மகன் புராணம் பாடறீங்க… கேலி பேசினாள்.
ஆமா எம்புள்ளைய பத்தி பேசினா எனக்கு சோறு தண்ணி கூட வேணாம். ஒரு நாளு முழுக்க கூட பேசுவேன். நாளைக்கு நீயும் அப்படி தான் உம்புள்ள புராணம் பாடுவ என்றார்.
அவர் பேச்சில் அவளுக்கு நாணம் சூழ்ந்து கொண்டது.
மன்னரு காலேஜ் படிக்கிறப்போ குடும்பத்துல அப்போ கொஞ்சம் கஷ்டமான நேரம்.பலத்த புயல் மழைன்னு விவசாயத்துல பலத்த நஷ்டம். அந்நேரம் கேரளா டூர் போகணும் ரெண்டாயிரம் கொடுங்கன்னு பெரியவன்கிட்ட கேட்டான்.
ரெண்டாயிரம் செலவு பண்ணி அவசியம் டூர் போகணுமா? குடும்பம் இருக்கிற சூழ்நிலை யில் ஊரு சுத்தணுமா? பணம் மரத்துலயா காய்க்குதுன்னு பெரியவன் பொண்டாட்டி சங்கீதா கொஞ்சம் இடக்கா சொல்லிட்டா.
பெத்தவங்க நாங்க பணம் புரட்டி கொடுத்து போக சொன்னோம். வேண்டவே வேண்டாம்னு மறுத்துட்டான். எவ்வளவோ சமாதானம் பேசி பார்த்தோம் அவன் கேட்கவே இல்லை.
அந்த மாசம் படிப்பு முடிந்த கையோட போலீஸ் வேலைக்கு எழுதி போட்டான். கடுமையா முயற்சி பண்ணி செலக்ட் ஆகிட்டான்.
ஓ…. அப்படி தான் போலீஸ் ஆனாரா? வியந்து விட்டாள்.
நாலு பிள்ளைகளும் படிக்கிறப்போ விவசாய குடும்பத்துல சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டம்!
பீஸ் கட்ட முடியாம நகை நட்டை அடகு வைத்து சிரமப்படுவோம்.
அப்போவே சொல்வான் கவலை படாதம்மா அண்ணனுங்க மாதிரி நான் பெருசா செலவை இழுத்து விடற மாதிரி படிக்க மாட்டேன். டிகிரி முடிச்சுட்டு சீக்கிரம் வேலை தேடிக்குவேன்னு சொல்வான்.
எம்புள்ள சொன்ன மாதிரியே வேலைக்கு போயிட்டான் என்றார் பூரிப்பாய்.
சிக்கனமா தான் செலவு செய்வான். வெட்டி ஆடம்பரம் அவனுக்கு பிடிக்காது. அடுத்தவங்களை பத்தி புறம் பேசறது…. அடுத்தவங்களை பார்த்து பொறாமை படறது இதெல்லாம் அவன்கிட்ட இல்லை.
எனக்கே அதிசயமா இருக்கும் எப்படி இவன் எனக்கு பிள்ளையா வந்து பிறந்தான்னு.
ஒன்னு சொன்னா சிரிச்சுடுவ…. பத்தாங்கிளாஸ் படிக்கிறப்போவே சிறுவாட்டு காசுல ஆடு வாங்கினவன் உன் புருஷன் என்றார்.
எதே…. அவளுக்கு விழிகள் பிதுங்கியது.
இப்போ அவங்கிட்ட நாப்பது ஆடுகளுக்கு மேல இருக்கு என்றார்.
என்னத்தை சொல்றீங்க? அவளுக்கு வியப்பாய் இருந்தது.
ஆடு மேய்க்க தனியா ஆள் போட்டிருக்கான்.
தோட்டத்துல இருக்கே அந்த ஆடா?
இது இல்லை. இது நம்ம ஆடுங்க. அவன் ஆடுங்க தனியா பட்டியில் அடைச்சு வச்சிருக்கான். பக்கத்து தெருவுல நமக்கு காலிமணை இருக்கு. அங்கே தான் கொட்டகை போட்டிருக்கான்.
ஆளு அம்பானியா இருப்பான் போல…. உள்ளுக்குள் ஜெர்க்கானது அவளுக்கு.
இப்போ தான் ஞாபகம் வருது. கோழிக்கு தீவனம் போடணும் என்று எழுந்து கொண்டார்.
அவளும் அவருடனே கிளம்பினாள்.
பானையில் நிறைந்திருந்த கம்பு நொய்யை படியில் அள்ளிவந்தார்.
போ போ போ….. என்று அவர் அழைக்க….. ஆங்காங்கே செடிகளுக்கு அடியில் கொத்திக் கிளறிக் கொண்டிருந்த கோழிகள் குதித்து குதித்து ஓடிவந்தது.
அவர் இரையை அள்ளி இரைக்க….. பக் பக் என்று நீண்ட அலகால் கொத்தி தின்றது.
அத்தை இதுவும் உங்க மன்னாதி மன்னரோட வளர்ப்பா? அவளும் தீனியை அள்ளி போட்டாள்.
“ஆமா” என்றார் சிரிப்புடன்.
உன் மாமனாருக்கு ஹிரண்ய ஆபரேஷன் பண்ணோம். அப்போ சத்தா சாப்பிட சொல்லி டாக்டருங்க சொன்னாங்க.
அடிச்சு ஆக்க நாட்டு கோழி வாங்கிட்டு வந்தான். அப்படியே வளர்க்கலாம்னு ரெண்டு கோழி வாங்கி வந்தான்.
தினமும் நாட்டு கோழி முட்டை சாப்பிட்டா நல்லதுதானேன்னு வளர்க்க ஆரம்பிச்சுட்டோம்.
எம்புள்ள கை ராசியான கை! எம்புள்ள கையால எதை தொட்டாலும் அது துலங்கிடும்.
எல்லா வேலையும் செய்வான். வயகாட்டுல இறங்கி அண்டை வெட்டுவான், வரப்பு கட்டுவான், அரப்பு அறுப்பான். அவனுக்கு தெரியாத வேலையே இல்லை. அவ்வளவு பெருமை பாப்பாத்திக்கு.
இவன் என்ன மாதிரி ஆளுடா சாமி…. வியந்துவிட்டாள். கடைந்தெடுத்த கில்லாடியா இருக்கானே…
“————————-“
ஹலோ ம்மா….
சொல்லு மன்னரு.
சுப்ரஜா என்ன பண்றா? போன் பண்ணினேன் எடுக்கலை
தூங்குறாப்பா.
சாப்பிட்டாளா?
ம்ம்ம்ம்ம்ம் ரெண்டு பேரும் சேர்ந்து தான் சாப்பிட்டோம்.
அப்பா வந்துட்டாரா?
இன்னும் இல்லப்பா.
மணி ஒன்னே முக்கால் ஆகுது. இன்னும் சாப்பிடாம… மெலிதான கோபம் கொண்டான்.
குச்சிக்கு (மரவள்ளி) மருந்து அடிக்கிறாங்கல்ல.
அதுக்கு? பசியை மறந்துட்டு வேலை பார்க்கணுமா? சோலை மவன் குமாரு வருவான் சோத்தை போட்டு கொடுத்தனுப்புங்க என்றான்.
தந்தை மீது மிகுந்த பாசம் உண்டு மன்னருக்கு.
————–தொடரும் ———–
error: Content is protected !!