Skip to content
Post Views: 3,688
சுப்ரஜா கூச்சத்துடன் ஜாங்கிரியை பிட…. ம்மா தங்கச்சி அது ஆளிவாய் “நாலு ஜாங்கிரியை எடுத்து திணிச்சு விடு!”என்றான் கதிர்.
மன்னர் முறைக்க நண்பர்கள் சிரிக்க ஒரே ரகளை தான் அங்கே…
மன்னர் வகையராக்கள் சேர்ந்து போட்டோ கிராஃபரை ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தனர்.
யோவ் இது என்ன ஃபிலிம் ரோலா? டிஜிட்டல் தானே… நீ பாட்டுக்கு எடுத்து தள்ளு! பிடிச்சா பிரிண்ட் போடுவோம் பிடிக்கலையா டெலீட் பண்ணிடுவோம் என்றனர் அறிவார்ந்த மாப்பிள்ளை தோழர்கள்.
Advertisement
நண்பர்களின் அலப்பறை கண்டு மன்னர் முறைத்துக் கொண்டிருந்தான்.
ஏய் கிங்கு கல்யாணம் காட்சின்னா இப்படி தான் சிலபல அலப்பறைகள் நடக்கும்.நீ இப்போ மாப்பிள்ளை மேன் கொஞ்சம் அடங்கு!அடங்கு! என்றான் சசி.
சுப்ரஜாவிற்கு தான் சங்கடமாய் இருந்தது அவள் தோழிகள் யாரும் அருகில் இல்லாதது.
Advertisement
அவளின் சங்கடம் உணர்ந்தவன் நீ போ… உன் பிரண்ட்ஸ் கூட ஜாயின் பண்ணிக்கோ என்றான்.
Advertisement
விட்டால் போதும் என்று தோழிளை நாடி வேகமாய் நடையை போட்டாள்.
விருந்து முடிந்து உறவினர்கள் தாம்பூலம் பெற்றுக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
தீபா என் நிச்சயத்தப்போ தாம்பூல பையில் தேங்காய்க்கு பதிலா பித்தளை விளக்கு வைத்து வந்தவங்களுக்கு கொடுத்தாங்க எங்க வீட்டுல என்றாள் சங்கீதா.
Advertisement
அக்கா என் நிச்சயத்துல பந்தியில் நாலு வித ஸ்வீட் வச்சாங்க உனக்கு ஞாபகம் இருக்கா என்றாள் தீபா.
எங்க நிச்சயம் எவ்வளவு பெரிய மண்டபத்துல நடந்துச்சு… ஜே ஜேன்னு எவ்வளவு கூட்டம் என்றாள் அஞ்சலி.
பெண் வீட்டார் கேட்க வேண்டும் என்றே பெருமை பீத்திக் கொள்ளும் மருமகள்களை என்ன செய்வது என்று பாப்பாத்தி தவித்துக் கொண்டிருந்தார்.
டேய் பெரியவனே இவளுங்க இன்னும் கொஞ்ச நேரம் பொத்திகிட்டு இருக்க மாட்டாளுங்களா?
இவளுக பெருமை இப்போ ரொம்ப முக்கியமா?சின்னவன் வந்தான்னா சுருக்குன்னு ஏதாவது கேட்டு வைப்பான். ஏதாவது ரசபாசமா ஆகிடப்போகுது கொஞ்சம் அடக்கி வை சொல்லிட்டேன் என்றார் பாப்பாத்தி.
ஜெயராமனுக்குமே இந்த பேச்செல்லாம் பிடிக்கவில்லை. பெண்கள் எத்தனை படித்து எத்தனை பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் இது போன்ற வம்பு பேச்சில் அவர்களுக்கு ஒரு பேரானந்தம்.
சங்கி நாம கிளம்பளாமா? என்றான் மனைவியிடம்…
ஏன் தாய்கிழவி ஏதாவது காதுல ஓதுச்சா என்றாள் சங்கீதா.
அதெல்லாம் இல்லை… குகன் தூங்கி வழியறான் பாரு என்று மூன்று வயது மகனை கை காட்டினான்.
டாடி இப்போவே போகணுமா? இங்கேயே இருக்கலாமே ப்ளீஸ் என்று கெஞ்சினாள் அவர்களின் எட்டு வயது மகள் ஸ்ருதி.
அங்கு நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களை பார்ப்பதில் அவளுக்கு குஷியாகி போனது.
நேற்று தான் பெங்களுருவில் இருந்து வந்திருந்தனர். ஓய்வில்லாத அலைச்சலில் பிள்ளைகள் சோர்ந்து போயிருந்தனர்.
அப்பா நாங்க வீட்டுக்கு கிளம்புறோம் நீங்க பொறுமையா எல்லாரையும் அழைச்சுட்டு வாங்க என்று தந்தையிடம் சொல்லிக் கொண்டு முடியனூர் கிளம்பிவிட்டான் ஜெயராமன்.
இங்கே மனைவி இருந்தால் எதையாவது கிளப்பி விடுவாள் என்ற பயம் அவனுக்கு.
“—————————“
எழில் அண்ணா காலுக்கு தகுந்தது தான் செருப்பு! என் தகுதிக்கு தான் பொண்ணு பார்க்க முடியும். என் மாமனார் வீடு அம்பானி இல்லை நானும் ஆனந்த் பிரமிள் இல்லை என்றான் சரவணனை பார்த்து.
சுரீரென்று நிமிர்ந்து பார்த்தான் எழிலரசன். என்றோ அவன் மனைவி சொன்னது…. இன்று சரியாய் சொல்லிக் காட்டுகிறான் தம்பி.
அண்ணிகள் பேசியது அவன் காதுக்கு வந்து விட்டது போலும்.
பொம்பளைங்க ஏதாவது பேசிட்டு போறாங்க… நீ அதை தோண்டி துருவணுமா? எழிலன் கடுகடுத்தான்.
எங்கே பேசறோம்கிறது முக்கியம். பொண்ணு வீட்டு ஆளுங்க சுத்திலும் நடமாடிட்டு இருக்கிறப்போ பேசுற பேச்சா இது…? எவ்வளவு முயன்றும் குரலில் அவ்வளவு கோபம்.
ம்ம்ம்மா நாங்க இப்படியே கோயம்புத்துருக்கு கிளம்புறோம் என்றான் எழிலன்.
என்ன எழிலு…. வீட்டுக்கு வந்துட்டு ஞாயித்து கிழமை போகலாமில்ல என்றார் பாப்பாத்தி.
வேலை இருக்கும்மா இஷ்டத்துக்கு லீவ் போட முடியாது. கல்யாணதுக்கு சேர்ந்த மாதிரி நாலு நாள் லீவு போட்டுட்டு வரேன் என்றான் தன்மையாய்.
எழில் கொஞ்சம் முன்கோபி. எதையும் ஆராயாமல் கோபம் கொண்டுவிடுவான். கொஞ்சம் சாந்தமடைந்து யோசித்த பிறகே தன் தவறை உணருவான்.
எழிலரசன் தன் மனைவி தீபாவுடன் கிளம்பிவிட்டான். அவளுக்கு கணவன் மீது செம்ம கோபம். இப்போ எதுக்கு கயிறு கட்டி இழுக்குற மாதிரி இழுத்துட்டு போறீங்க? சிடுசிடுத்தாள்.
ஹ்ம்….. நீ தேரை இழுத்து தெருவில் நிறுத்திடுவேன்னு தான். காரமாய் அவன் கொடுத்த பதிலில் அவள் கப்சிப்.
சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் விடைபெற்று கிளம்பினர். பெண் வீட்டார் வழி அனுப்பி வைக்க கூட்டமாய் வந்து வாயிலில் நின்றனர்.
மன்னரின் கண்கள் அவளை தேடியது.
கோயிலின் தூண் ஓரம் அவள் வளைகரம் தெரிந்தது.
வளைத்து வளைத்து அவளை பார்க்க முயன்றான்.
ஏய் சுபி மாப்பிள்ளை உன்னை காணோம்னு கூகுளில் போய் தேடுறார் என்றாள் மீனாட்சி.
சுபி தலையை முன்னே நீட்டி மெல்ல கண்ணுயர்த்த….
வருகிறேன் என்பதாய் தலையாட்டினான்.
அவள் தலையும் பதிலுக்கு தானாய் ஆடியது.
மீண்டும் தன்னை பார்ப்பான் என்று ஒரு எதிர்பார்ப்பு அவளுக்கு. அக்காவின் தோள் வளைவில் முகம் மறைத்து ரகசியமாய் பார்த்தாள்.
அவன் வேனில் ஏறிவிட்டான்.
அவளுக்கு சப்பென்று ஆகிவிட்டது.
வீட்டுக்கு சென்றடைந்த பின்னே Reached home என்று மெசேஜ் அனுப்பி இருந்தான் அவ்வளவு தான்.
“———————–“
என்னப்பா மாப்பிள்ளை வீட்டுல முகூர்த்த தேதி பார்த்துட்டாங்களா? கிருஷ்ணா தான் தந்தைக்கு அழைத்து கேட்டிருந்தான்.
ம்ம்ம்ம்…. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சம்மந்தி போன் பண்ணியிருந்தாரு. நானே உனக்கு போன் பண்ணனும்னு இருந்தேன் ஜூலை ஏழு முடிவு பண்ணியிருக்காங்களாம் என்றார் பூவராகன்.
மண்டபம் எங்கே பார்த்திருக்காங்க?
கள்ளக்குறிச்சியில் மகாலட்சுமி மஹால்.
ஓ…. AC ஹாலா?
இல்லை சாதாரணம் தான்.
ஏன்? ஏசி ஹால் பார்க்க கூடாதா?
மாப்பிள்ளை பார்த்து முடிவு பண்ணின மண்டபமாம்.
ஓ…. என்றான்.
“சரியான கஞ்சூஸ் போல….” மனதிற்குள் திட்டிக்கொண்டாள். ஹாலில் அமர்ந்து வார மலரில் குறுக்கெழுத்து குறித்துக் கொண்டிருந்தவள் தந்தை அண்ணனுடன் போனில் பேசுவதை கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.
சரிப்பா ஆக வேண்டியதை பார்க்க தொடங்கிடுவோம். நாற்பது நாள் தான் இருக்கு. நான் பத்து நாள் முன்னாடியே லீவ் போட்டு வந்துடறேன். பொறுப்புள்ள மகனாக கிருஷ்ணா பேசினான்.
“—————“
நிச்சயம் முடிந்து எட்டு நாள் ஆகிறது. ஒரு போன் கால் இல்லை ஒரு மெசேஜ் இல்லை.
ஒரு மெசேஜ் அனுப்ப கூட நேரம் இல்லாத போலீஸ் போலிருக்கு… உள்ளுக்குள் அவ்வளவு கடுப்பு சுப்ரஜாவிற்கு.
இதெல்லாம் 70’S கிட்ஸ் மாதிரி நடந்துக்குது. இந்த மன்மதனை தேடிப்பிடித்த அப்பாவை சொல்லணும்.தனக்குள்ளே புலம்பி கொண்டாள். பின்னே யாரிடம் போய் கொட்டி தீர்க்க முடியும்?
தோழி மீனாட்சியுடன் கோயிலுக்கு வந்திருந்த சுபியின் சிந்தனை எங்கெங்கோ அனாதாரவாய் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
என்னடி மாப்ஸ் மணிக்கணக்கா கடலை வருக்குறாரா? கேலியாய் பேசிய மீனாட்சியை நங்கென்று கொட்டி வைத்தாள்.
பின்னே அவள் கோபத்தை எங்காவது காட்ட வேண்டுமே…
எரும… ஏன்டி கொட்டுற? தலையை தேய்துக்கொண்ட மீனாட்சிக்கு கண்ணில் தண்ணீரே வந்துவிட்டது.
சாரிடி மீனு… உள்ளம் வருந்தியவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.
ஏய் சுபி என்னடி உனக்கு பிராப்ளம்? புது பொண்ணு மாதிரி ஒரு வெட்கம்,நாணம், பதட்டம் எதுவும் இல்லையே.. தோழியை ஆழமாய் நோக்கினாள் மீனு.
ஒண்ணுமில்ல மீனு.. இழுத்து ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
சுபி… நீ இயல்பாவே இல்லடி, உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு தானே….? சுற்றி வளைக்காமல் கேட்டுவிட்டாள்.
பதில் பேசாமல் வேப்பமரத்தில் வந்தமர்ந்த காகத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.
சுபி… தோளில் கைவைத்து உலுக்கிய மீனுவை வெற்று பார்வை பார்த்து வைத்தாள் சுப்ரஜா.
என்ன சுபி? ஆதுரமாய் தோழியின் கரம் பற்றினாள் மீனு.
தெரியல மீனு… என்னவோ ஒரு மாதிரி இருக்குடி.
ஒரு மாதிரின்னா?
அது தான் சொல்ல தெரியலைன்னு சொன்னேனே…
என்ன சுபி இப்படி பேசற?
இந்த கல்யாணம் சரி வருமா? நான் அங்கே தாக்கு பிடிப்பேனான்னு பயமா இருக்குடி…. துளிர்த்த நீரை நாசுக்காய் துடைத்துக் கொண்டாள்.
என்னடி சொல்ற? மீனு பதறிவிட்டாள்.
அவங்க அண்ணனுங்க எல்லாரும் பெரிய ஜாப்ல இருக்காங்க! அண்ணிங்க நிறைய படிச்சவங்க… நிச்சயத்தன்னைக்கு பார்த்த தானே அவங்க பேச்சும் நக்கலும்.
சுபி நீயாடி இது? கவலை கொண்டாள் மீனு.
எனக்கு அங்கே செட் ஆகுமா மீனு?
அடி லூசு இப்போ பேசற பேச்சா இது? அவங்க அண்ணன் அண்ணி எப்படி இருந்தா உனக்கென்ன? அவங்களை நம்பியா வாழப் போற? கொண்டவன் துணை இருந்தா கூரை ஏறி சண்டை பிடிக்கலாம்னு என் பாட்டி சொல்லும். மன்னரு உன்னை ராணி மாதிரி பார்த்துப்பாரு. முடிந்தவரை தேற்றினாள் மீனு.
என்ன பேசியும் சுபி முகத்தில் தெளிவு இல்லை.
விரல்களை கோர்த்து பிரித்துக் கொண்டிருந்த சுபியை சங்கடமாய் பார்த்தாள் மீனு.
சூட்சமம் தெரியாத இயல்பான கிராமத்து பெண். வாழ்க்கை பற்றிய எவ்வித யோசனையும் இல்லாமல் இருந்தவளுக்கு இந்த திருமண பந்தத்தை ஏற்றுக் கொள்ள பயம் வரதானே செய்யும்?
அவள் பயம் கொள்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்த மீனு சினேகமாய் தோழியின் தோள் தட்டினாள்.
சுபி கிராமத்தில் பிறந்தாலும் நீயும் நானும் காலேஜ் எல்லாம் போய் படிச்சவங்க. ஓரளவு வெளிவுலகம் பார்த்தவங்க. ஆனா உங்கம்மா எங்கம்மா எல்லாம் கல்யாணத்தப்போ எப்படி இருந்திருப்பாங்கன்னு யோசித்து பாரு! தோழியை தெளிய வைக்க முயன்றாள்.
மனசு பாரமா இருக்குடி!
சுபி கல்யாணம்னு வரும்போது எல்லா பெண்களுக்கும் இப்படி பயம் வரது சகஜம் தான். நான் நிறைய பேரை பார்த்திருக்கேன்.
தூரமா இருந்து பார்க்கும்போது தான் பயமா இருக்கும். அங்கே போய் வாழ தொடங்கிட்டா எல்லாம் பிடிபடும்.
சுபி கண்டதை யோசிச்சு மனசை குழப்பிக்காதேடி. மாப்பிள்ளை நல்லவரா தெரியுறாரு. அவர் உனக்கு உறுதுணையா இருப்பாரு.
அவளுக்கு விரக்தியில் சிரிப்பு வந்தது.
“மாப்பிள்ளை தானே.. ” நல்லா பார்த்துப்பாரு…
அப்படியே நாளைக்கு நாலு முறை போன் பண்ணி காதல் மொழி பேசி உனக்கு நான் இருக்கேன்னு தைரியம் சொல்லிடுவாரு பாரு.
அவனை பற்றி பேசினாலே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.
“———————–“
திருமண வேலைகள் இரதரப்பிலும் ஜருராக நடந்து கொண்டிருக்கிறது.
திருமண பத்திரிகை பாரம்பரிய முறைப்படி மஞ்சள் வண்ணத்தில் உட்புறமும் பிங்க் வண்ண வெளிவண்ணமுமாக அச்சட்டிக்கப்பட்டது.
அன்று தான் மன்னர் அழைத்திருந்தான் தன் வருங்காலத்திற்கு.
பிரண்ட்ஸ் இன்விடேஷன் கார்ட் தனியா போடப்போறியா? என்றான்.
நல்லா இருக்கியா? என்று ஒரு பார்மாலிட்டிக்கு கூட கேட்கவில்லை.
சுற்றி வளைத்து பேச மாட்டேன் பேச வந்ததை கனகச்சிதமாக பேசுகிறேன் பாரு என்ற தோரணையோ? உள்ளுக்குள் முனுக் என்று வலித்தது அவளுக்கு. இவன் என்ன அறுபதா? சலித்துக் கொண்டாள்.
“சுப்ரஜா” அழுத்தம் திருத்தமாக அழைத்தான்.
அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தாள்.
என் சைடு ஸ்டேஷனில் என்னோட வேலை பார்க்கிறவங்க, என்னோட பிரண்ட்ஸ் இவங்களுக்கு தனியா இருநூறு கார்ட் போடப்போறேன் உனக்கு எவ்வளவு வேணும்?
சற்று யோசித்தவள் அம்பது போதும் என்றாள்.
நிச்சயதார்த்த போட்டோஸ் நல்லா இருக்கு என்றான்.
ம்ம்ம்ம்ம் என்றாள்.
கிருஷ்ணா போட்டோஸ் லிங்க் அனுப்பி இருந்தான் மாப்பிள்ளைக்கு.
அவ்வளவு தான் பேச்சு.
மூச்சடைத்தது அவளுக்கு. இந்த கல்யாணம் வேண்டாம். என்னை விட்டுடுங்க நான் எங்காவது ஓடிப்போறேன் என்று கத்தலாம் போல் இருந்தது.
பயத்திலும் கவலையிலும் இளைத்து போனாள் சுப்ரஜா. அவளுக்குள் ஏற்பட்ட ஒவ்வாவமையும்,ஒட்டுதலின்மையும் யார் கண்ணுக்கும் புலனாகவில்லை.
error: Content is protected !!