Skip to content
Post Views: 3,762
கால்களை கட்டிக் கொண்டு அதில் தலை சாய்த்து சோர்ந்து அமர்ந்திருந்த மனைவியின் அகம் உணர்ந்தவன் “சுப்பு தோட்டத்துல ரோஜா செடியெல்லாம் இருக்கு வந்து பாரேன்” என்றான்.
சுப்புவா? அவள் முகம் சுருங்கிவிட்டது.
ஹே சுப்பு நாலு கலர் ரோஜா செடி வச்சிருக்கேன் வா போய் பாக்கலாம்… அவள் கரம் பற்றி எழுப்பினான்.
சுப்புனு கூப்பிடாதீங்க எனக்கு பிடிக்காது.
Advertisement
ஏன்? சிரிப்புடன் கேட்டான்.
என் பேரு சுப்ரஜா.
அப்புறம் ஏன் உன்னை சுப்பு சுப்புனு கூப்பிடறாங்க?
Advertisement
“சுப்புலட்சுமி எங்க பாட்டி பேரு”. அப்பா எனக்கு அவங்க அம்மா ஞாபகமா சுபான்னு பெயர் வச்சாரு. சுபா ரொம்ப சிம்பிளா இருக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு எங்க அத்தை சுப்ரஜான்னு மாத்தி வச்சாங்க.
Advertisement
“சுப்பு உன் பெயருக்கு பின்னால் இவ்வளவு பெரிய சரித்திரம் இருக்கா?” ஆச்சரியம் போல் கேட்டான்.
“மன்னாரை விட சுப்பு நல்லா தான் இருக்கு…” பழிப்பு காட்டிவிட்டு பின்னால் இருக்கும் ஓட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாள்.
கிச்சனில் உட்கார்ந்து வறுத்த வேர்க்கடலையை முறத்தில் கொட்டி தேய்த்து புடைத்துக் கொண்டிருந்தார் பாப்பாத்தி.
Advertisement
வாம்மா ஏதாவது சாப்பிடறியா? அன்புடன் கேட்டார்.
எனக்கு வேணாம் அத்தை. நைட் என்ன டிபன் பண்ண போறீங்க? நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா? வேர்க்கடலையை அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.
மதியம் வைத்த புடலங்காய் கூட்டு,ரசம் கொஞ்சம் இருக்கு. ஒரு ஆள் சாப்பிடற அளவுக்கு சோறு இருக்கு. உங்க மாமனார் ராத்திரியில் சோறு தான் சாப்பிடுவார். எனக்கு கூட ராத்திரியில் இட்லி தோசை சாப்பிடறது பிடிக்காது. ஆனா சுகரு வந்ததுல இருந்து ராத்திரிக்கு டிபன் தான். வயிரே நிறையறது இல்லை என்ன பண்றது நோவுநொடி வந்து வாயை கட்ட வேண்டியிருக்கு.
மன்னரு ராத்திரிக்கு டிபன் தான் சாப்பிடுவான். வேர்க்கடலை சட்னி அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதுதான் தோசை ஊத்தி வேர்க்கடலை சட்னி அரைக்கலாம்னு இருக்கேன். உனக்கு வேற ஏதாவது செய்யவா? ஆசையாய் கேட்டார்.
இல்லத்த எனக்கு தோசையே போதும் என்றாள்.
கேட்கறேன்னு தப்பா நினைக்க கூடாது.மன்னரு உன்கூட நல்லா பேசி பழகறானா? தயக்கத்துடன் கேட்டார்.
ம்ம்ம்ம்ம் என்றாள் முகசிவப்புடன். அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
அவன் அதிகம் பேச மாட்டான். அழுத்தம் அதிகம். அவனை சாமானியத்துல புரிஞ்சுக்க முடியாது. எங்க எல்லாருக்கும் கொஞ்சம் பயம் இருந்துச்சு கல்யாணம் பண்ணி எப்படி அந்த பொண்ணை நடத்துவானோன்னு.
நல்லா பேசுறாருத்தை என்றாள்.
நீங்க ரெண்டு பேரும் மனசு ஒத்து சந்தோஷமா வாழணும் சாமி என்றார்.
ஏன் அத்தை மூத்த பிள்ளைகளுக்கு நல்ல பெயரா வச்சுட்டு கடைக்குட்டிக்கு மன்னருன்னு பேர் வச்சிருக்கீங்க? சிரிப்புடன் கேட்டாள்.
மூனு பிள்ளை போதும்னு முடிவு பண்ணியிருந்தோம். மூனாவது பிள்ளை பொறந்த கையோட குடும்பகட்டுப்பாடு பண்ற ஐடியால இருந்தோம் ஆனா ஆபரேஷன் பண்ற அளவுக்கு உடம்பு இல்லை. நல்லா சத்து ஏத்திகிட்டு வான்னு பெரிய ஆஸ்பத்திரியில அனுப்பி விட்டுட்டாங்க.
அப்புறம் எங்கே ஆஸ்பத்திரிக்கு போக நேரம்…? காடு கழனி புள்ள குட்டி, குடும்பம்னு வேலை நெட்டி தள்ளுது. நாலாவது பிள்ளை வயித்துல தங்குனதே எனக்கு தெரியல….!
மூனு மாசத்துக்கு பிறகு தான் தெரிய வந்துச்சு. வேணாம் கலைச்சுடுவோம்னு என்னென்னவோ பண்ணி பார்த்தேன்.
மாசம் தான் கூடுச்சே தவிர கரு கலையவே இல்லை. மூனோடு நாலா வளர்ந்துட்டு போகட்டும்னு வீட்டுல சொல்லிட்டாங்க! ஆனா எனக்கு ரொம்ப பயம். கருவை கலைக்க என்னென்னவோ மருந்து சாப்பிட்டோமே…. குழந்தை ஆரோக்கியமா பிறக்குமா? அங்ககீனமா பிறந்துட்டா என்ன பண்றதுன்னு அவ்வளவு அழுதேன். வேண்டாத கடவுள் இல்லை.
ஒவ்வொரு நாளும் திக் திக்குன்னு இருந்துச்சு. ஆளாளுக்கு என்னென்னவோ பேசி பயமுறுத்திட்டாங்க. பிரசவம் வரைக்கும் நரக வேதனை தான். ஒருவழியா சுகபிரசவத்தில் ராசா மாதிரி பொறந்துட்டான் என் செல்லபிள்ளை. அது தான் ராசாதி ராசனா பொறந்தவனுக்கு மன்னர் மன்னன்னு பேரை வச்சிட்டாரு உம்மாமனார். அவ்வளவு ம(நெ)கிழ்ச்சி பெற்றவரின் குரலில்.
அவன் பெயர்காரணம் வரலாறுகளில் படித்த மன்னர்களின் பெயர்காரணத்தை விட வலுவாக இருப்பது கண்டு நகைத்துவிட்டாள்.
எதுக்கு சிரிக்கிற? சிரிப்புடன் தான் கேட்டார் மாமியார்.
ஹி ஹி… அதெல்லாம் ஒண்ணுமில்லத்த என்றாள் கேலி பார்வை பார்த்து.
எம்புள்ள இந்த குடும்பத்துக்கு மன்னாதி மன்னரு தான். கம்பீரமாய் சொன்னார் பாப்பாத்தி.
“மக்கு மன்னாரு ” மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
“——————-“
போரடிக்குதா? தோட்டம் எல்லாம் பார்த்தியா?
காலையில் பார்க்கிறேன்த்த என்றாள்.
உம்புருஷனுக்கு மரம்,செடி வளர்க்குறது ரொம்ப பிடிக்கும். நிறைய மரம் வச்சிருக்கான். பெருமையாய் கூறினார்.
ம்ம்ம்ம்ம்ம் என்றாள்.
மன்னரு ரொம்ப சமத்து பிள்ளைம்மா! இது வேணும் அது வேணும்னு கேட்டு அடம் பிடிச்சதில்லை. கொடுக்கிறதை சாப்பிடுவான். நல்லா இருக்கு, இல்லைன்னு வாய் திறந்து சொல்ல மாட்டான். சாப்பிடறதை பார்த்து நாமளே ஊகிக்கனும்.
இனி நீ தான் அவனை கவனிச்சுக்கணும் என்றார்.
ம்ம்ம்ம்ம் என்று தலை அசைத்தாள்.
ஏன் அத்தை போலீஸ் ஆகணும்னு அவருக்கு ரொம்ப ஆசையோ?
அதெல்லாம் இல்லை… சீக்கிரம் வேலை தேடிக்கணும். யாருக்கும் தொந்தரவா இருக்க கூடாதுன்னு நினைத்தான். காலேஜ் முடிச்ச உடனே போலீஸ் வேலைக்கு முயற்சி பண்ணுனான். உடனே வேலை கிடைச்சிடுச்சு. இருப்பதியொரு வயசுல வேலைக்கு சேர்ந்துட்டான்.
“ஆளு கேடியா இருப்பான் போல… ” உள்ளுக்குள் ஒரு பதட்டம் அவளுக்கு.
காசோட அருமை தெரிஞ்ச பிள்ளை. அனாவசியமா செலவு பண்ணமாட்டான். அலுங்காமல் அடுத்த குண்டை தூக்கி போட்டார்.
சுத்தம்… “இப்படி ஒரு பிசினாரி பயலா எனக்கு புருஷனா வந்து வாய்க்கணும்?” நொந்து கொண்டாள்.
பேசிக் கொண்டே சட்னி அரைத்தவர் மன்னரை கூட்டிட்டு வாம்மா சாப்பிடுவீங்க என்றார்.
அத்தை சாப்பிட வர சொன்னாங்க என்றாள்.
சுபி என்றான்.
ம்ம்ம்ம் என்று திரும்பியவளிடம் “நீ போய் தோசை ஊத்து!” என்றான்.
ம்ம்ம்ம் என்று முனங்கியபடி அவள் முன்னே சென்றுவிட்டாள்.
“அம்மா ஊத்துனா இறங்காதோ” மனதில் வசைபாடினாள்.
அத்தை நான் தோசை ஊத்துறேன் என்றாள்.
அவனுக்கு பேப்பர் மாதிரி சுடக்கூடாது மொறு மொறுனு இருக்க கூடாது. கொஞ்சம் மொத்தமா மெத்துன்னு இருக்கணும். சட்னி கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கணும்.
சாருக்கு தோசை சுட இவ்வளவு கண்டிஷன் போல… மனசுக்குள் நொடித்துக் கொண்டாள்.
அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி பாப்பாத்தி வெளியே போய்விட்டார்.
சுபி தோசை ஊற்ற அருகில் வந்து நின்றுவிட்டான் மன்னர்.
ரொம்ப நேரம் வேக வேண்டாம். சிவந்து வெந்தா போதும். திருப்பி போடு என்றான்.
தோசை சுட கிளாஸ் எடுக்கிறான் தீனி மாடு… பல்லை கடித்தாள்.
மூன்று தோசையுடன் முடித்துக் கொண்டவன் சாப்பிட்ட தட்டை சோப் போட்டு கழுவி வைத்துவிட்டு வந்தான்.
நீ சாப்பிடு என்று தோசை கரண்டியை அவளிடமிருந்து வாங்கி கொண்டவன் ஒரு கரண்டி மாவை ஊற்றி பேப்பர் போல் தேய்த்து விட்டான். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி நன்றாக வேகவைத்து மொறுமொறுவென ரோஸ்ட் போல் எடுத்து வைத்தான்.
அவங்கவங்களுக்கு ஒரு டேஸ்ட் இருக்குமில்லை. உனக்கு முறுகலா தான் பிடிக்கும்னு நினைக்கிறேன். பேசிக் கொண்டே இன்னொரு தோசை ஊற்றிக்கொடுத்தான்.
இன்னொன்னு என்று அவள் கேட்கும் முன் ஸ்டவ் ஆஃப் பண்ணினான்.
அவள் முறைத்து பார்க்க… நிறைய சாப்பிட்டா தூக்கம் வரும் என்று கண்சிமிட்டினான்.
நைட்டுல தூங்காம… அவள் முனுமுனுக்க….
“தூங்காம” அவன் கைகளை கட்டிக்கொண்டு அவளை குறுகுறுவென பார்த்தான்.
சட்டென்று அறிவு மின்னல் வெட்டியது…. ஷாக்காகி நின்றுவிட்டாள்.
ஹே குயின் ஷாக்கை குறைச்சுட்டு நாட்டு சர்க்கரை போட்டு பால் எடுத்துட்டு வா!
அவள் வெவெலத்து அப்படியே நின்றுவிட்டாள்.
“———————-“
பயத்துடன் நெடுநேரம் கிச்சனில் நின்றவளுக்கு பால் பொங்கி விழிவது கூட கவனத்தில் இல்லை.
என்ன சுப்பு சிந்தனை எங்கிருக்கு? சற்று குரல் உயர்த்தியவன் ஸ்டவ்வை அணைத்து விட்டு பாலில் நாட்டுசர்க்கரை போட்டு அவனே கலந்து கொண்டான்.
வேறு வழியில்லாது அவனை பின்தொடர்ந்து அறைக்கு சென்றாள்.
சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டியவன் கட்டிலில் அமர்ந்துவிட்டான்.
என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு கதவின் பின் நின்றாள் சுப்ரஜா.
சிரிப்புடன் எழுந்தவன் கதவை அடைத்துவிட்டு அவள் கரம் பற்றி அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தினான்.
அவளுக்கு முகமெங்கும் வியர்வை பூக்கள்.
சுப்பு… மென்மையாய் அழைத்தான்.
கோபம் கொள்ளகூட அவளுக்கு தைரியம் இல்லை.
பயமா இருக்கா? கிசு கிசுப்பாய் அவன் கேட்டது இன்னும் பயமாய் இருந்தது அவளுக்கு.
அவள் மென்கரம் பற்றி தன் உரமேறிய கரத்துடன் கோர்த்து இறுக்கமாய் பற்றிக் கொண்டான்.
அவளுக்கு சிலிர்த்ததோ நடுங்கியதோ… இமைகள் நிலையில்லாமல் அடித்துக் கொண்டது.
சுப்பு பேச மாட்டியா? அவள் காதுக்குள் உதட்டை பொருத்தி காதலுடன் கேட்டான்.
எ… என்ன…. தாய் மொழி மறந்து புது மொழி பிறந்தது அவளுக்கு.
“பேசி முடிச்சிடலாமா? இல்ல வேண்டாம் முடிச்சுட்டு பேசுவோம்…..” என்றவன் அவளை அள்ளி சுருட்டிக் கொண்டான்.
இன்னைக்கா…. அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. பயம், பதட்டம்… அழுகை வரும் போல இருந்தது
அவன் மார்பில் கையூன்றி அவள் திருதிருக்க… வேண்டிய டைம் கொடுத்தாச்சு சுப்பு. பர்ஸ்ட் நைட் தள்ளிப்போட்டு இன்னைக்கு பிஃப்த் நைட்.
அவள் விழிகள் அதிர்ந்து விரிந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பேதையவள் மூச்சுமுட்டி அவஸ்தைக்கு ஆளாகிக் கொண்டிருந்தாள்.
அவள் பதட்டம் புரிந்தவன் மார்பில் அவளை தாங்கி களைந்து கிடந்த கேசத்தை ஒதுக்கி காதோரம் சொருகிவிட்டவன் இன்னும் தள்ளிப்போட முடியாது சுப்பு. ஏற்கனவே என்னை சிரிப்பு போலீசா நினைச்சுட்டு இருக்க… இன்னும் அப்பாவியா இருந்தா காமெடியனா நினைச்சுட மாட்ட? அவளிடம் நியாயம் கேட்டுக் கொண்டே அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.
அவன் பேச்சில் அவள் கை வளையல்கள் சிணுங்க… அவள் சிணுங்களின் கீர்த்தனம் அவன் தாபத்திற்கான நர்த்தனம் என்று உணர்ந்தவன் முத்தமாய் கொடுத்து மொத்தமாய் அவளை எடுத்துக் கொண்டான்.
அவனின் ஆளுமையில் அவள் மையல் கொண்டு கட்டுண்டு கிடக்க…
அவன் முரட்டு போலீஸ் இல்லை என்பதை செயல்வழி உணர்த்திக் கொண்டிருந்தான்.
சுப்பு…. அவன் அழைத்த ஸ்வரமே அவளுக்கு குறுகுறுத்தது.
அவன் முகம் பார்க்க முடியாமல் கூச்சத்தில் கண் மூடினாள்.
“சுப்பு…. ” கிசு கிசுப்பான அவன் மோகன குரல் அவளுக்கு நாடி நரம்பை முறுக்கேற்றியது.
அவள் விழி திறப்பேனா என்று இமை கதவை இறுக்கிக் கொண்டாள்.
எப்படி அவன் முகம் பார்க்க என்று அவள் தவித்திருக்க… அவளை கண்டு அவன் சிரித்திருக்க…. அங்கே வள்ளுவன் வகுத்த இல்லறம் இருவரும் இணைந்து இசைந்து இனிதே நிறைவு பெற்றிருந்தது.
பரவசத்துடன் விலகிபடுத்தவன் மங்கலான இரவு விளக்கின் ஒளியில் மங்கை அவள் முகம் பார்த்தான்.
கலைந்த காந்தார சிற்பம் கவர்ந்து இழுத்தது. புது பெண்ணுக்கு என்று ஒரு அழகு இருக்கும் என்று பேசிக் கொள்வார்களே… உண்மை தான் போலும் சிலிர்த்துக் கொண்டான்.
இந்த மன்னனின் மகாராணி எவ்வளவு அழகு….! மனம் மத்தளம் கொட்டியது
சுப்பு…. சன்னமாய் அவன் அழைக்க… போர்வைக்குள் சுருண்டு கிடந்தவள் உதடு கடித்து கண்மூட….அவன் கைகள் அத்துமீறி எங்கெங்கோ பயணம் செய்ய… வெடுக்கென்று தட்டிவிட்டு முழுவதுமாய் மூடிக் கொண்டாள்.
நான் பார்த்த பிறகுமா? அவன் ரகசியம் பேச அவள் தாள முடியாத வெட்கத்தில் சுருண்டு கொண்டாள்.
பால் சாப்பிடறியா?
எனக்கு வேண்டாம்… கண்ணை திறக்கவேயில்லை அவள்.
எனக்கு தெம்பு வேணும்! வினயமாய் சிரித்தவன் ஒரு சொம்பு பாலை மொத்தமாய் குடித்தான்.
சுப்பு…. கிறக்கமாய் அழைத்துக் கொண்டே போர்வைக்குள் நுழைந்து மீண்டும் போர்க்கலமாக்கினான் மன்னன்.
அவள் களைத்(ந்)து படுக்க… அவளை அணைத்து நிறைவாய் நெகிழ்வாய் முத்தமிட்டான் மன்னன்.
சுப்பு…. ஆசையாய் முணங்கி மீசையால் கன்னம் தேய்க்க….. பட்டென்று முதுகில் வைத்தாள்.
என்னடி அடிக்கிற? லேசாய் வலிக்க தான் செய்தது.
தள்ளிப்படுங்க! பல்லை கடித்தாள். சிரிப்பும் வந்து தொலைத்தது.
பேச தான் கூப்பிட்டேன்…. அவள் கழுத்தை கட்டிக்கொண்டான்.
ஒன்னும் பேச வேண்டாம்…வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒழுங்கா தூங்குங்க! அதட்டினாள்.
நல்லா சாப்பிடு சுப்பு! ஒரு நாளையிலே அலுத்துக்குற… இன்னும் திகட்ட திகட்ட அனுபவிக்க எவ்வளவோ இருக்கு…. கவலையாகி போனவனை மீண்டும் அடித்தாள்.
என்னடி பொசுக்குன்னு கை நீட்டுற…?
யோவ் போலீசு வாயில ஏதாவது வந்துடும்.நான் என்ன மிஷினா? பட்பட்டென்று மார்பில் அடித்தாள்.
அவள் முக சிவப்பிலும், மத்தாப்பு சிரிப்பிலும் சிணுங்களிலும் பித்தாகிப் போனான்.
————தொடரும்————
error: Content is protected !!