Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 12.1

நல்ல தரிசனம் கோவிலில். தன் பின்னே குழந்தை போல் குழந்தை கை பிடித்து தான் செல்லும் திசையெல்லாம் வந்த பார்த்திபனை பார்க்கையில் பெரிய புன்னகை மனதினில் ஆரபிக்கு.

புரட்டாசியின் முதல் சனிக்கிழமை இன்று. பெருமாள் கோவிலில் கூட்டம் சற்று அதிகம் தான். முகத்தை சிறிதும் சுருக்கவில்லை, தன்னுடைய கையை அவள் இடித்த பொழுது குழந்தை கையை சேர்த்து இறைவனை வணங்க வைத்தான்.

‘ரொம்ப தான்’ ஆரபி உதட்டை சுளித்து மனதார வேண்டினாள். அவனுக்கும் சேர்த்து அவளே அத்தனை வேண்டுதலையும் வைத்தாள். அவள் வேண்டுதல் மொத்தமும் அவள் கணவனுக்காக மட்டுமே.

தான், மகள் கூட பின்னுக்கு தான் சென்றிருந்தனர். அவன் நன்றாக இருந்தால் இவர்கள் இருவரும் நிச்சயம் நன்றாக தான் இருப்பார்கள் என்கிற அழுத்தமான எண்ணம் அவளிடம்.



Advertisement

“ப்பா பலூன்” பூர்வி காற்றில் பறந்துகொண்டிருந்த பலூனை பார்த்து குதூகலிக்க மனைவியை அங்கேயே நிறுத்தி இவன் குழந்தைக்கு அவள் கேட்டதை வாங்கி வந்தான்.

கைகளில் இரண்டு பலூன் வீதம் நான்கு பலூனோடு வந்த மகளை முறைத்தாள், “ஏன்டி நோக்கு ஒன்னு போதாதா?”

“ம்மா டூ” என அவள் கையில் இரண்டை கொடுத்து அரிசி பற்கள் தெரிய சிரித்தது அந்த வாண்டு.

Advertisement

“நேக்கா?” கேலியாக மகளிடம் கேட்க,

Advertisement

“ம்ம்ம்” என்றது அந்த குட்டியும் தலை அசைத்து.

“வச்சுக்கோ ஆராம்மா” என்றான் கணவனும் கள்ள சிரிப்போடு.

“ஏன்னா, மனசு இதமா இருக்குல”

Advertisement

காற்றில் பறக்க போராடும் பலூனை சிறை செய்ததில் கொள்ளை இன்பமாய் சிரித்த முகமாய் நின்ற மகளை பார்த்து ஆமோதிப்பாய் தலை அசைத்தான் பார்த்திபன்.

“பார்த்தி…” அவன் காலை சுரண்டி ஆரபி அழைக்க, தலை தூக்கி அவள் கை காட்டிய திசையில் பார்த்தான். கோவிலிலுக்கு வந்திருந்தார் தாமோதரனும்.

“இந்த பெரியவா தானே அன்னைக்கு பூர்விய அழாம சமாதானப்படுத்தினா?”

அவரையே கண் சிமிட்டாது பார்த்தவன் ஆம் என தலை அசைக்க, அவன் பார்வையின் முள்ளோ, ஏதோ ஒன்று அவரை இவர்கள் பக்கம் திருப்பது. அவரோடு அந்த கோவிலின் ஐயர் இருவர், அதோடு கோவில் நிர்வாகி ஒருவர் என சுற்றி இருந்த கூட்டமே அவர் உயரத்தை காட்டியது.

“அன்னைக்கு ஏதோ பதட்டத்துல அவருக்கு தேங்க்ஸ் சொல்ல கூட மறந்துண்டேன். வர்றேளா நன்றி சொல்லிட்டு வரலாம்?” கணவனிடம் கேட்டாலும் அவன் பதிலுக்கு முன்பு தான் கூறியதை செய்ய எழுந்தவள் கை பிடித்து மீண்டும் மரத்தினால் பார்த்திபன்.

“அவர் வேலையா இருக்கார் ஆராம்மா. நீ வா நாம கிளம்பலாம் இருட்ட ஆரமிச்சிடுச்சு”

“இல்ல ன்னா ரொம்ப பேச மாட்டேன், ஜஸ்ட் நன்றி மட்டும் சொல்லிண்டு ஓடிறலாம். உதவி பண்ணவாளுக்கு வார்த்தை தானே நன்றியா தர போறோம்”

பார்த்திபனிடம் அவள் கெஞ்சிக்கொண்டிருக்கும் பொழுதே “பேத்தி நல்லா இருக்கீங்களா?”

சிரித்த முகமாய் எந்த கபடமும் இல்லாதவராய் பூர்வியின் முகத்தினை வருட போனவர் பார்வை பார்த்திபனிடம் வைத்து அவர்களை நெருங்கி விட்டார்.

“பூர்வி” பார்த்திபன் அழைத்த ஒரே அழைப்பில் தந்தை காலை கட்டி அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தது குழந்தை. தாமோதரனை பார்வையாலே எச்சரித்தவன் இப்பொழுதும் எதுவும் பேசவில்லை.

“பாப்பா நன்னா இருக்கா தாத்தா. ரொம்ப நன்றி. அன்னைக்கு படபடப்புல உங்ககிட்ட சொல்ல முடியல”

“இதுனால என்ன ம்மா, சாமியெல்லாம் கும்பிட்டாச்சா, இல்ல சாமிய பாக்க நான் எதுவும் ஏற்பாடு பண்ணவா?” பக்கவாட்டமாக பார்த்திபனை பார்த்து அவர் கேட்டதன் பொருள் உணர்ந்தவன் உடலில் தீ பற்றியது.

“அதெல்லாம் பகவானை நல்லா சேவிச்சுண்டு தான் செத்த ஒக்காந்தோம் தாத்தா”

“சரி மா அப்போ நான் வர்றேன்” ஆரபியிடம் கூறி குழந்தையை மீண்டும் வருட போனவர் செயல் உணர்ந்தவன் குழந்தையை கைகளில் அள்ளிக்கொள்ள அவர் செயல் பாதியிலே தடைபட்டு போனது.

பார்த்திபனை பார்த்து அர்த்த புன்னகை ஒன்றை உதிர்த்தவர் அவ்விடம் விட்டு கண்டார்.

“நீங்க என்ன ன்னா அவரை பாத்ததும் ஏதோ எதிரியை பாத்தாப்ல முறைச்சிண்டே இருக்கேள்? பூர்வியையும் அவாகிட்ட விடல என்ன நினைப்பா அவா?”

யதார்த்தமாய் கேட்ட மனைவியை பார்க்கும் முன் முகத்தை சீராய் மாற்றினான், “எல்லார்கிட்டையும் குழந்தையை பழக விட கூடாது ஆராம்மா. யார் என்னனு தெரியாம எங்க யார் கூப்பிட்டாலும் போகுற எண்ணம் அப்றம் வரும், சேப்டி இல்ல. யாருமே தெரியாத ஆள்கிட்ட பிள்ளையை விட சொல்றியா?”

என்ன முயன்றும் இறுதியில் கோவம் அவனையும் மீறி எட்டி பார்த்தது. கணவனின் இந்த கோவத்தை வியப்பாக பார்த்தவள், “என்னாச்சு ன்னா நீங்க சரியில்லையே”

ஆரபியின் விழிகள் கணவனின் கண்மணிகளே ஆராய கண் சிமிட்டி நிதானித்தான். ஒன்றுமில்லை என அவளை அழைத்து சென்றவன் சிந்தனை எல்லாம் தாமோதரன் பேசிய வார்த்தைகள் மீது தான்.

அடுத்த நாள் காலை தனக்கு முன் கணவன் எழுந்திருந்ததை கவனித்தவள் குளித்து உறங்கும் குழந்தையை கையில் அள்ளி தன்னுடைய வித்யா அறையில் படுக்க வைத்தாள்.

இதுவே தினசரி வழக்கம். காலை ஆறு மணிக்கே எழும் ஆரோபி குழந்தையை அவள் அத்தையிடம் ஒப்படைத்து வீட்டு வேலைகளை கவனிக்க துவங்கிவிடுவாள்.

முன்னதாக இருந்தால் கமலவல்லி உதவுவாள் சற்று நேரம் ஓய்வும் கிடைக்கும். அவள் கருவுற்ற பிறகு அதிகம் சமயலறையில் வேலை செய்வதில்லை. வித்யாவும் குழந்தைகளை கவனிப்பதில் ஈடுபட சற்று அதிகமாகவே ஆரோபிக்கு வேலை தான்.

“இன்னைக்கு என்ன அத்தை சமையல்?”

“ஞாயிற்றுக்கிழமை ஒன்னு தான் ம்மா என்ன சமைக்கிறதுனு கவலை இருக்காது. இன்னு ஒரு மாசம் என்ன பண்றதுனே பெரிய குழப்பமா இருக்க போகுது”

சிரிப்போடு கூறியவார் கணவனிடம் என்ன வேண்டுமென வெளியே சென்றுவிட ஆரபிக்கு மனம் கனத்தது.

எதார்த்தமாக இனி எவர் இதை பற்றி பேசினாலும் அவளுக்கு தானே மனம் வாடும். அனைவருக்கும் காலை தேநீர் வைக்க அதற்கான வேலையில் இறங்கிய ஆரபியை கணவனின் குரல் வரவேற்பறைக்கு இழுத்தது.

“ஏன்னா செத்த பொறுங்களேன் இப்போ தான் அடுப்படிக்கு வந்தேன், டீ எடுத்துண்டு வர்றேன்” என்றாள் இங்கிருந்தே. பதில் கொடுக்க அவனே சமையலறை வந்துவிட்டான்.

“வா மாமி” கையேடு அவளை அழைத்து சென்றான் வரவேற்பறைக்கு. அங்கு ஒரு பெண்மணி நின்றிருக்க, “இவங்க சுசிலா. நம்ம ஆடிட்டர் ஆபீஸ் ப்யூன் மணி அண்ணன் வைப். ஆபீஸ்ல வேலை பாத்துட்டு இருந்தாங்க. இனி நம்ம வீட்டுல வேலை பாப்பாங்க”

திடீரென அந்த பெண்மணியை வந்து நிறுத்திய பார்த்திபனை வீட்டினர் புரியாமல் பார்க்க ஆரபிக்கு கணவன் எண்ணம் புரிந்து நிம்மதி பிறந்தது.

“என்ன பார்த்திபா இது? ஏன் திடீர்னு” வித்யா மகனிடம் கேட்டார் அவனது திடீர் முடிவில். வீட்டில் ஒரு வார்த்தை விசாரித்திருப்பானே எதுவாக இருந்தாலும் என்கிற எண்ணம் வர தான் உடனே கேட்டும்விட்டார்.

“ஆரபிக்கு உதவியா இருக்கட்டும்னு தான் ம்மா வர சொன்னேன்” “அதான் நான் இருக்கேனே ப்பா”

“நீங்க பிரியா இருங்கம்மா” என்றதோடு முடித்தவன் ஒரு நிமிடம் என வெளியே சென்று வண்டியில் வைத்திருந்த ஒரு நெகிழிப்பையை அந்த பெண்ணிடம் கொடுத்தான்.

“மட்டன் குழம்பு, நாட்டுக்கோழி சூப்க்கு கறி, குழந்தைகளுக்கும் அண்ணிக்கும் ஈரல் எடுத்திருக்கேன். வேற எதுவும் வேணும்னா சொல்லுங்க”

“டேய் என்னடா வீட்டுல எல்லாரும் விரதம் இருக்கோம் நீ எதுக்கு இதை எடுத்துட்டு வந்துருக்க?”

மகனிடம் காட்டமாக கேட்டவர் அந்த பெண்ணிடம், “நீ இதை உன் வீட்டுக்கு எடுத்துட்டு போ ம்மா” என்றார் ராஜேந்திரன்.

“அக்கா நீங்க போங்க, ஆரபி அவங்களுக்கு கிட்சன் காட்டு” மனைவியை பார்த்து பார்த்திபன் கூற, அவன் தன்னை பார்த்த அந்த இரண்டு நொடியில் அவனுக்கு கண்ணாலே நன்றி கூறி அவருக்கு வழிகாட்ட சென்றுவிட்டாள் ஆரபி.

“இப்ப என்னடா, உனக்காக தான இங்க எல்லாரும் பேசுறோம்” அப்பொழுது தான் வந்த கிரி இளையவனை கடிந்தான் முறைத்து.

“அப்டி இல்ல ண்ணா, எனக்காக ஏன் எல்லாரும் கஷ்டப்படணும். ஒரு மாசம் தானே. நானும் ஆரபியும் மட்டும் பாத்துக்குறோம். குழந்தைகளுக்கு முட்டை, நான்வெஜ் எல்லாம் அவசியம் சேர்க்கணும்”

“ஏன் கடைல வாங்கிக்க முடியாதா?”

“ஒரு நாள்னா பரவால்ல ஒரு மாசம் ண்ணா. எவ்ளோ நாள் பசங்களுக்கு ஹோட்டல் சாப்பாடு வாங்கி தர முடியும்? யாருக்காகவும் யோசிக்கல. அவங்களுக்காக மட்டும் தான் யோசிச்சேன்”

அந்நேரம் ஆரபி தேநீர் வந்து அனைவருக்கும் கொடுக்க, தனக்கான தேநீரை எடுத்த கமலவல்லி, “என்ன ஆரபி தம்பிகிட்ட எதுவும் சொன்னியா?” உள்ளடக்கிய கேலியோடு கேட்டாள்.

“நீ எதுவும் சொன்னியா கமல்?” கிரி மனைவியை முறைக்க வீட்டினர் மொத்த கவனமும் கமலவல்லி மீது திரும்பியது.

“அக்கா என்ன என்ன சொல்லிட போறா மாமா” என்றாள் ஆரபி சிரிப்பு மாறாமல்.

“அப்டியும் சொன்னா தான் என்ன ப்பா?”

“டேய் வசந்த்” தேவையில்லாமல் வார்த்தை விட போகிறான் எந்த இளைய மகனை பற்றி தெரிந்து வித்யா அவனை அதட்ட அவனோ கேட்கும் நிலையில் இல்லை. கோவம் வார்த்தையாய் மாறி தாக்கியது என்னவோ ஆரபியை தான்.

“என்ன ஆப் பண்ணுங்க. அவனுக்காக அண்ணி விரதம் இருக்கலாம், இவன் இருக்கலாம். நாங்க எல்லாம் என்ன பண்ணோம்? என்னால எல்லாம் வீட்டு சாப்பாடு இல்லாம இருக்க முடியாது”

ராஜேந்திரன் , “ஏன் உன் அண்ணனுக்காக உன்னால சாப்பிடாம இருக்க முடியாதா? வீட்டுக்கு எவ்வளவு செஞ்சிருப்பான். அவனுக்காக சாப்பாடை விட்டு குடுக்குறதுல அப்டி என்ன பெரிய தியாகம் பண்ணிட்ட நீ?”

“அதெல்லாம் விட்டு குடுக்க முடியாது. இங்க எல்லாம் அவன் இஷ்டப்படி தான், அவனுக்காக தான்ல?”

அனைவருக்கும் தேநீரை கொடுத்த ஆரபி அவ்விடம் விட்டு சிரிப்போடு அகல அவளது சிரிப்பின் பின்னிருந்த வேதனை அவள் கணவனுக்கு புரியாமல் இருக்குமா,

“எங்களுக்காக யாரும் விரதம் இருக்க வேணாம். நாங்க மட்டும் இருந்துக்குறோம், இந்த வீட்டுல எப்பவும் போல யாரும் என்ன வேணாலும் சாப்பிடுங்க. ஆரபி சமைக்க மாட்டா அவ்ளோ தான்” என்றவன் எழுந்துகொள்ள,

“வசந்த், உனக்கு அதிகம் வாய் நீளுது. ஒரு மாசம் சாப்பிடாம இருந்தா தான் என்னடா. என்னமோ போங்க. நானும் உன் அப்பாவும் என் பையனுக்காக கறிக்கஞ்சி சாப்பிடாம இருப்போம்”

“உங்களுக்கும் சேர்த்து தான் ம்மா எடுத்துட்டு வந்துருக்கேன்” என்றவன் சமயலறையில் ஒளிந்திருந்த ஆரபியை அழைத்து, “நமக்கு வெறும் சட்னி போதும் ஆராம்மா”

அதுவே இறுதி என வீட்டில் இருந்த அனைவருக்கும் அன்று அசைவ உணவை உண்ண வைத்துவிட்டான். பெரியவர்கள் இருவருக்கு தான் அதை உண்ண மனமே இல்லை. பார்த்திபனிடம் பேசி பார்த்தும் அவன் அசையவில்லை.

சமையலறை சென்ற கமலவல்லி, “நான் சொன்னது புடிக்கலைனா நேரா சொல்லிருக்கலாமே ஆரபி, என் அம்மா வீட்டுக்கு போயிருப்பேன்ல”

பதறிவிட்டாள் ஆரபி, “ஐயோ அக்கா, நீங்க சொன்னதை நான் அவாகிட்ட சொல்லவே இல்ல, நீர் ஏதோ தப்பா புரிஞ்சிட்டேள்”

“என்னமோ போ ஆரபி, அவர் என்ன முறைக்கிறார்” என சென்றுவிட்டாள் அவளும். மனம் எல்லாம் வருத்தம் அவளுக்கு, கமலவல்லி பேசியது, வசந்த் பேசியது என.

பலனை, நற்பெயரை எதிர்பாராத செயல் தான் அவள் கணவனுடையது, அதுவே அவளுக்கும் பரவியிருக்க தீ சொற்களை ஏற்க முடியவில்லை.

அதன் பிறகு அந்த பேச்சுகள் அதிகம் வரவில்லை. பார்த்திபனின் எதிர்காலத்தை அவன் மனைவி கவனித்துக்கொண்டாள் தன்னுடைய வேண்டுதலை வைத்து.

சமைக்க வருபவர் செய்யும் அசைவ உணவுகள் சரியில்லை என்கிற குறை மட்டும் ஆங்காங்கு எழ தான் செய்தது. பூர்வி கூட பல நேரங்களில் கொடுக்கும் உணவை சாரல் மலை போல் துப்பிவிட்டு ஓடிவிடுவாள்.

“இவாளை…” என திட்ட மட்டுமே முடிந்தது ஆரபியால்.

*****

“என்னடா கெளம்பியாச்சா?” கைபேசியில் பார்த்திபனிடம் விசாரித்துக்கொண்டு குடவுனில் நுழைந்த விஷ்ணு உள்ளே நுழைந்த அலங்கார பொருட்களை பார்வையிட்டு அங்கேயே நின்றுவிட்டான்.

பார்த்திபன் ஆரபி குடும்பத்தினரோடு ஒரு விசேஷமாக திருப்பூர் வரை செல்ல வேண்டியிருந்தது. அதனால் ஆடிட்டர் அலுவலகம், இங்கு குடவுன் என எல்லா பொறுப்பும் இன்று இவன் ஒருவனே பார்க்க வேண்டிய சூழல்.

“இல்லடா மதியம் சாப்பிட்டு தான் கெளம்பனும்னு சொல்லிட்டாங்க. வெயிட் பண்றோம், அப்றம் ரத்னம் பைல் முடிக்கணும்னு சொன்னேனே”

விஷ்ணு, “அவர் கைலயே ஒப்படைச்சிட்டேன். பெமென்ட் தான் இழுக்குறார், பெரிய பார்டிட்யா இருக்க போய் தான் அமைதியா இருக்கேன்” என்றான் பெரியமானதோடு.

“இருக்கறவன் தான்டா இல்லாத கணக்கெல்லாம் பாப்பான்”

“ப்பா ப்பா வா” என பூர்வி குரல் கேட்க, “பெரிய மேடம்கிட்ட இருந்து அழைப்பு வந்துடுச்சா, சரிடா நீ பாரு. மெதுவா டிரைவ் பண்ணு”

அறிவுரையோடு விஷ்ணு இணைப்பை துண்டிக்க அவன் அன்னை அவன் உண்ண தாமதமானதால் தானே இங்கு உணவை எடுத்து வருகிறேன் என கிளம்பிவிட்டதாக சகோதரனிடம் செய்தி வந்திருந்தது.

சென்றிருந்த பொருட்கள் எல்லாம் வந்து சேர்ந்ததை அனாயா சரி பார்க்க இவனும் உடன் நின்றான்.

எல்லாம் வந்து சேர்ந்ததை உறுதி செய்தவள் அவனிடம் வர வேண்டிய பணத்தின் தகவல்கள் பற்றி கொடுத்து உள்ளே சென்றுவிட அதனை பார்த்தவனுக்கு அதில் சில சந்தேகங்கள் வந்தது.

அவளிருக்கும் இடத்திற்கு சென்றவன் மேஜையில் தலை சாய்த்து அவள் படுத்திருப்பதை பார்த்து அங்கே வந்து மேஜையில் தட்டினான். அசையவில்லை பெண்.

“ஹலோ” சாவியை வைத்து அவள் கையை சுரண்டி எழுப்ப பார்த்தான். அசைந்தாள் இல்லை.

“ஏய் தாமோதரன் பேத்தி” அவளிடம் துளியும் அசைவில்லாமல் போக திகில் பரவியது இவன் இதயத்தில்.

இவ்வளவு நேரம் நன்றாக தானே இருந்தாள் என தோன்றிய நொடி அவள் முகத்தை கவனித்தாயா என அடுத்த கேள்வி வைத்து முறைத்தது மனம்.

அவள் டெஸ்கில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து தெளித்து பார்த்தான், ஏதோ எழுப்பவே முடியாத ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றது போல் உறங்கிக்கொண்டிருந்தாள்.

‘என்னடா இது சோதனை’ செய்வதறியாமல் சிகையை தாறுமாறாக கோதியவன் உதவிக்கு ஆட்களை அழைக்கலாம் என அங்கே தேடினால் எவரையும் காணவில்லை.

ஆட்டோவை அழைப்பது தான் சரி என வெளியே வந்தவனுக்கு தெய்வமாய் அவன் அன்னையே வந்து நிற்க, “ம்மா” என வேகமாக ஓடியவன் அவர் கையை பிடித்து இழுத்தான்.

“டேய் என்னடா, ஏன் இப்டி இழுத்துட்டு போற?”

“ரொம்ப அவசரம் ம்மா. அந்த பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துட்டா” மகன் கூறியதை கேட்டு அவர் வேகமும் கூடியது, “ஐயோ என்னாச்சுடா. தண்ணி தெளிச்சு பாத்தியா?”

“பாத்தேன் ம்மா. ஆனா எந்திரிக்க மாட்டிக்கிறா” சட்டென அணைந்த என்ஜின் போல நின்று அன்னை முகம் பார்த்தான், “அந்த பொண்ணு தாமோதரன் பேத்தி” அவர் முகமே சட்டென மாறியது.

ஒரு வெறுப்பு கண்ணில் மின்ன, “அந்த கோவத்தை இங்க காட்ட வேணாம் ம்மா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!