Skip to content
Post Views: 2,239
“பிளான் சக்ஸஸ்” அனாயாகிட்ட இருந்து மெசேஜ் வந்தது என விஷ்ணுவுக்கு பார்த்திபனிடமிருந்து செய்தி வந்தது.
அடுத்த கட்ட வேலையை செய்துவிட்டு மெத்தையில் படுத்தவனுக்கு உறக்கம் வரவே இல்லை. ஏதோ அவள் நியாபகம் இன்று காலையில் இருந்து அதிகம் வந்தது.
கைபேசியை எடுத்து பார்த்திபன் கொடுத்த அனாயாவின் எண்ணிற்கு கேள்வி குறி ஒன்றை அனுப்பினான். இரண்டு நிமிடங்கள் எந்த பதிலும் இல்லை, ‘தூங்கிருப்பா’ புத்தியில் அடித்துரைத்தது நிதர்சனம்.
‘மணிய பாருடா விஷ்ணு மடையா, ஒன்னாக போகுது, தூங்காம அவளை கஷ்டப்படுத்துன உன்னையா நினைச்சிட்டு இருப்பா’ சலிப்பாக குப்புற படுத்தவனுக்கு அவன் கைபேசி சிணுங்கும் சத்தம் கேட்டது.
Advertisement
அரக்க பறக்க எழுந்து அமர்ந்தவன் அவளும் அனுப்பியிருந்த
‘?’ அதே கேள்விக்குறியில் சிறிது கடுப்பானது உண்மை தான்.
விஷ்ணு, “தூங்கலையா?”
Advertisement
அனாயா, “என்கிட்ட இப்போ வேற நியூஸ் இல்ல”
Advertisement
இவளிடம் நான் என்ன தகவல் தெரிந்துகொள்ளவா வந்தேன் என்கிற கோவம், “நான் அதுக்கு மெசேஜ் பண்ணல” என்று அனுப்பினான்.
“ஓ” என்கிற ஒற்றை வார்த்தை மட்டும் பதிலாய் வந்தது.
“நீ அங்க சேஃப் தான?” அவன் தூக்கத்தை களவாடிய கேள்வியை அவளிடமே கேட்டான்.
Advertisement
பார்த்திபனிடம் இதே கேள்வியை பல முறை இவன் கேட்டுவிட்டான், “அந்த ஆளோட பெரிய வீக்னஸ் அவனோட குடும்பம் தான். நம்ம கொல்ல அவனுக்கு எவ்ளோ தைரியம் இருக்கோ, அதே அளவு அந்த பொண்ணு மேல பாசம் இருக்கு. சோ நீ பயப்பிட வேணாம்” என்றிருந்தான்.
இருந்தும் இவனால் தான் அப்படியே இருக்க முடியவில்லை.
அனாயா – “தெரியல”
விஷ்ணு – “இது என்ன பதில், சரி நீ அங்க இருந்து பண்ண வர போதும், கெளம்பு. நான் வர்றேன்” எழுந்து ஷார்ட்ஸிலிருந்து கால்ச்சட்டைக்கு மாறவே துவங்கியிருந்தான்.
அனாயா – “வந்து என்ன பண்ண போறீங்க?”
விஷ்ணு – “உன்ன அங்க இருந்து வெளிய வர வைக்கணும்”
அனாயா – “என்ன இங்க யாரும் பிடிச்சு வைக்கல, நான் நினைச்சா இப்போ கூட வெளிய வர முடியும்”
விஷ்ணு – “அப்போ வாடி. இன்னும் அங்க இருந்து என்ன பண்ண போற?”
அனாயா – “உங்க வேலை மட்டும் தான் முடிஞ்சிருக்கு. எனக்கு இங்க இன்னும் வேலை இருக்கு”
விஷ்ணு – “அப்டி என்ன பெரிய இந்த வேலை இருந்துடும்?”
அனாயா – “அது என் பெர்ஸ்னல்”
ஆழ்ந்த அமைதி விஷ்ணுவிடம், என்ன செய்வதென புரியாமல் தலையை சரமாரியாக களைத்து வைத்திருந்தான். அவள் வீட்டிற்கு சென்று பெண் தாருங்கள் என கேட்டாகியது, ஆனால் உரியவளிடம் உரிய பாசத்தை சேர்க்க திண்டாடுகிறான்.
“உன் பெர்ஸ்னல் நம்ம பெர்ஸ்னலா மாறணும்னு ஆசைப்படுறேன் அனாயா”
பெரும் அமைதி இரண்டு பக்கமும் மற்றவரின் மூச்சுக்காற்று பலமாய் கேட்குமளவு அமைதி. அவளுக்கு தன் மேல் கோவமோ என விஷ்ணு எண்ணியிருக்க, அங்கு அமைதியாக இரவின் வெறுமையை கண்ணீர் கொண்டு நிரப்பிக்கொண்டிருந்தாள்.
“அனாயா?”
“என்ன?”
விஷ்ணு, “நான் உன் வீட்டுக்கு வந்து பேசுனது எல்லாமே உண்மை” அந்த சிறிய கைபேசியை நெற்றியில் வைத்த அனாயா கண் மூடி அமர்ந்துவிட்டாள்.
பல கேள்விகள் அவளிடம். இன்று மட்டுமல்ல, பல நாட்களாக. அவன் வந்து பேசிய நாளில் இருந்து. அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று கூட தெரியவில்லை.
ஏங்கி தவித்த வார்த்தைகள் தேனாய் வந்து காதினை நனைப்பதற்கு பதில் தயங்கி தயங்கி இதயத்திற்கு அனுப்ப வேண்டி இருந்தது. சுருண்டு மெத்தைக்கு கீழ் படுத்து திசை தெரியாத தன் காதலுக்கு பாதை தேடிக்கொண்டிருந்தாள்.
அவனிடமிருந்து அடுத்து எந்த குறுந்செய்தியும் வரவில்லை, வந்தாலும் அதற்கு பதில் கூறும் நிலையிலும் அவள் இல்லை. கண் மூடினாலே என்றோ ஒரு நாள் சிரிப்போடு பார்த்திபனிடம் பேசிய விஷ்ணுவின் பிம்பம் தோன்றி மறையாமல் இம்சித்தது.
கோவம் கோவமாக வந்தது அவளுக்கு, மெத்தையில் ஓங்கி மீண்டும் மீண்டும் குத்தினாள். கையில் வலி துளியும் இருக்கவில்லை, அதற்கு பதிலாக தான் மனதில் வலி பெருக்கெடுத்து ஓடுகிறதே.
நேரம் செல்ல இம்முறை குறுந்செய்திக்கு பதில் நேரடி அழைப்பு வந்தது. ஏற்காமல் விட்டுவிட்டாள். சத்தம் வராமல் வைப்ரேஷன் மோடில் வைத்திருக்க மீண்டும் மீண்டும் அழைப்பு வந்துகொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் எரிச்சலுற்றவள் அழைப்பை ஏற்க போக கதவு தட்டும் சத்தம் கேட்டு விறுவிறுவென கைபேசியை குளியலறைக்குள் சென்று மறைத்து விட்டு கதவை திறந்தாள்.
திறந்த நொடி பெண்ணவளை உள்ளே தள்ளிய உருவம் விஷ்ணு தான் என அவளுக்கு நொடிகள் பல கடந்த பிறகே உரைத்தது.
“போன் பண்ணா எடுக்க மாட்டியாடி?” காரமாக கேட்கும் முன்பு அவளை தலை முதல் பாதம் வரை ஆராய்ந்து நிம்மதியடைந்த பின்பு தன்னை அச்சுறுத்திய அவள் அமைதி மீது கோவம் காட்டினான்.
“நா… நான் எதுக்கு நீங்க போன் பண்ணா எடுக்கணும்?”
அவளது சிவந்த கண்ணை நீட்டி சுட்டிக்காட்டியவன், “இதுக்கு காரணம் நான் இல்லனு சொல்லு இனி உனக்கு போன் போடவே மாட்டேன்” என்றான் வேறு கேள்வி வைத்து.
மீண்டும் அழுகை வந்தது, அவனை பிடித்து தள்ளியவள், “போ. எதுக்குடா இப்போ வந்த? எவனோ ஒருத்தன் பண்ண தப்புக்கு என்ன உதறி தள்ளுனவன் தானே நீ? அப்டியே இரு. உன் அம்மா உனக்கு பொண்ணு பாத்துருக்காங்களாம். போய் சிரிச்சு சிரிச்சு பேசி அவளையே கட்டிக்கோ” சினத்தோடு சீறியது பெண் புறா.
“நீ அன்னைக்கு கோவிலுக்கு வந்தனு எனக்கு தெரியும் அனாயா”
மூச்சு வாங்க அவனை ஏறிட்டு முறைத்தாள், “தெரிஞ்சு தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்க” என்றவளுக்கு மேலும் அழுகை.
“அன்னைக்கு பைத்தியக்காரி மாதிரி உலகத்தையே மறந்து அழுதுட்டு இருந்தேன், உனக்கு அதெல்லாம் ரொம்ப ஈஸியா இருக்குல்ல? நீ அவளுக்கு ஓகே சொன்னா நான் உன்பின்னாடி வர மாட்டேன்னு நினைச்ச. கரெக்ட் தான். நான் வர மாட்டேன் போ”
அவள் கையை எட்டி பிடித்தவன், “நான் அங்க ஓகே சொன்னது உண்மை தான். அதே நான் தான் அந்த பொண்ணுகிட்ட தனியா பேசி கல்யாணத்தை நிறுத்தவும் வச்சேன்”
அவன் கையை உதறி தள்ளினாள், “பொய் பேசுறீங்க. உங்களால நான் நிறையா அழுதுட்டேன், எனக்கு நீங்க வேணாம். நினைச்ச நேரத்துக்கு ஒரு மாதிரி நடந்துக்குறிங்க. மொத என் குடும்பத்தை காரணம் காட்டி வேணாம் சொன்னிங்க, இப்போ உங்களுக்கு ஃபேவர் பன்றேன்னு சொல்லவும் வேணும்”
குரலை உயர்த்தி பேசியவள் வாயை மூடினான் விஷ்ணு.
“லூசு மாதிரி பேசாதடி. எடுத்த ஒடனே முடிவெடுக்குற விஷயம் இல்ல இது. உன் தாத்தாவால எந்த அளவு பாதிக்கப் பட்டிருக்கோம்னு என் அம்மாவோட ஆக்டிவிட்டில உனக்கே புரிஞ்சிருக்கும்.
எனக்கென்ன உன்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போய்டுவேன், அதுக்கு அப்பறம் அங்க உன் நிலைமை யோசிச்சியா?”
பதில் கூறவில்லை என்றாலும் மனம் உடனே சமாதானமும் ஆகவில்லை அவள், அப்போ எதுக்கு பொண்ணு பாக்க சிரிச்சிட்டே போனானாம்? என்கிற கேள்வி வீம்பாக வந்து நின்றது.
“நான் எவ்வளவு தான் அன்பா இருந்தாலும் வீட்டுல உனக்கு அமைதியான சூழல் வேணும் அனாயா”
அனாயா, “ரொம்ப நல்லவர் மாதிரியே பேச்சு எல்லாம் வரும். இதுல தானே நான் ஏமாந்து போனதே. அன்பா பாத்துக்குவாராம். அன்பா… ஒரு நாள் என்ன முறைக்காம பாத்துருப்பீங்களா?
எல்லாம் உங்க திடீர் ஆசைல வர்ற வார்த்தை. யாரும் பொண்ணு தர மாட்டேன்னு சொல்றாங்களா? இல்ல கரிசனம், பரிதாபத்துல வந்த பீலிங்ஸா”
இருவருக்கும் இடையே இருந்த இரண்டடி இடைவேளையை குறைத்து ஓரடி ஆக்கி தன்னுடைய சட்டை பாக்கெட்டிலிருந்து இரண்டு இஞ்ச் ராயல் ப்ளூ நிற சுருக்கு பை ஒன்றை அவள் கையில் வைத்தான்.
பளபளத்த அந்த பையை அவள் திறந்து பார்க்க கூட முற்படவில்லை. பிடிவாதமாக நிற்க, “திற அனாயா” கெஞ்சினான்.
அவளுக்கு தெரிந்துவிட்டது அது தன்னுடைய கைகளுக்கு வந்த பொழுதே. மோதிரம். பிளாட்டின மோதிரத்தில் ஒற்றை கல் வைரம் பதிந்திருந்தது. முகத்தை உர்ரென வைக்க அவள் பட்ட பாடு அப்பப்பா…
ஆனால் உள்ளுக்குள் மழைச் சாரல், பூங்காற்று, சுட்டெரிக்காத பனி கால சூரிய ஒளி என ஒரு குட்டி கால மாற்றமே நிகழ்ந்துக்கொண்டிருந்தது. நீ நினைப்பது தான் இந்த மோதிரத்திற்கும் பதில் என ஆழ் மனம் கூற என்ன உணர்விது என பிரித்தறிய முடியா தவிப்பு.
“நமக்கு செட் ஆகாதுன்னு பல மாசம் முன்னாடி வந்து சொன்னேன் நியாபகம் இருக்கா?”
மறக்க முடியுமா அதை? அவனாக தன்னை நோக்கி அன்று வரவும் துள்ளி குதித்த மனதை அருகிலே வராதே என வார்த்தைகளை அளவாய் அடுக்கி கொன்று போட்டு சென்றிருந்தான்.
“அதுக்கு ரெண்டு நாள் முன்னாடி இது வாங்குனேன்”
மௌனமாய் விழிநீர் வடித்தவளின் கண்ணீரை துடைத்தவன் மேவிய வருத்தத்தோடு, “உன்ன ரொம்ப புடிச்சிருந்தது. காரணமே தெரியாம புடிச்சிருந்தது. அப்டி இருந்தும் உன்கிட்ட வந்து வேணாம்னு சொன்னேனா அது உனக்காக மட்டும் தான். ப்ளீஸ்டி புரிஞ்சுக்கோ”
திமிறிக்கொண்டு விறைப்பாக சுற்றுபவன் உழைப்பு நேர்மையில் விழுந்தவளுக்கு, உறக்கம் இல்லாமல் தன்னை தேடி வந்து கெஞ்சி தவிக்கும் இந்த விஷ்ணுவின் அன்பில் குப்புற விழ தோன்றியது.
அவன் மேல் இருந்த கோவமெல்லாம் அவன் பக்க நியாயத்ததை ஏற்றுக்கொள்ளும்படியாக தான் இருக்க, இழுத்து பிடிக்க முடியவில்லை. மனமும் பெரிதாக சோர்ந்து போயிருந்தது.
இந்த இடத்தினில் இருக்கவே மூச்சு முட்டி உயிரே போகும்படி ஒரு வெறுமை. பேசி கவலை பகிர கூட ஆள் இல்லாத அதிகபட்ச மன அழுத்தம். அதனால் கூட அவனது வருகை திடீர் பாசத்தை விட்டுவிட கூடாதென்கிற தவிப்பு.
“என்ன அங்க பாக்கலனா இந்நேரம் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிருப்பீங்கள்ல?”
உண்மை மறைக்காமல் தலை அசைத்தான், “அதுக்காக தான் உன்ன நான் அங்க பாத்திருக்கலாம்”
“இப்போ உங்க அம்மா…”
“வீட்டுல பேசிட்டேன் அனாயா. உன்ன கஷ்டப்படுத்துனது போதும்னு தான் அவங்க சம்மதம் வாங்கி உன்கிட்ட பேசுறேன்”
இதுவே இறுதியாக அவனை பார்க்க போகிறோம், இனி அவன் யாருக்கு உடமையானவனோ என தேம்பி அழுது கரைந்தவள் கண் முன் இன்று அவனே நிற்கிறான். அதுவும் அவளது விஷ்ணுவாகவே.
எங்கு தன் காதல் முறிந்து எதிர்காலமின்றி போனதென தவித்தாளோ அதே இடத்தில் அவன் அவளது காதலை நிராகரிக்க முடியாமல் இவளை தேடி முதல் அடி எடுத்து வைத்திருக்கிறான்.
வாழ்க்கையை பங்குபோட முதல் படியான சம்மதம் வேண்டி மன்றாடி நிற்கிறான். பேச வார்த்தை வரவில்லை, அழுகை வெடித்து சிதறும் அளவு உணர்ச்சிகள் பீறிட்டு வந்தது. வீம்பு செய்து போ என துரத்தும் முட்டாளும் அவள் இல்லை.
“நீ…நீங்க என்ன ல… லவ் பண்ணிங்களா?”
“கேள்வி கேட்டே சாவடிகாத்தாடி. தெரியல போதுமா? சாத்தியமா தெரியல. ஆனா லவ் பண்ண ஆசையா இருக்கு. வித விதமா லவ் பண்ணி நீ அழுதத்துக்கு எல்லாம் சேர்த்து உன்ன சிரிக்க வச்சு, இங்க வருத்தப்படுறதுக்கெல்லாம் மேல உன்ன அன்பாலே குளிக்க வைக்கணும்னு வெறியை இருக்கு. சொல்லு என்ன பண்ணலாம்”
அவளது உதடுகள் பிரியும் பொழுதெல்லாம் அவள் சம்மதம் வந்துவிடாதா என தவித்தவன் அவளது தொடர் கேள்வியில் பொறுமை இழந்து தான் போனான்.
“கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றாள் அவனுக்கு எதிர் குணம் கொண்டு சாதுவாக ஆசையோடு.
இன்பமாய் அதிர்ந்த விஷ்ணு அவள் கையிலிருந்த மோதிரத்தை வாங்கி அவள் விரலில் அணிவித்து இதழ்களை நெருங்க, வேகமாக அவன் மார்பினில் கை வைத்து தடுத்தாள்.
“என்ன பண்றீங்க?” என்கிற பீதியோடு.
“ஹாலிவுட் படம் பாத்தது இல்ல, மோதிரம் மாத்தவும் கிஸ் பண்ணுவாங்களே”
‘டேய் எத்தனை ஷாக் தான்டா குடுப்ப’ மனதில் பிரமித்து தன்னவனை பார்த்த அனாயா, “விஷ்ணு, நீங்க கிளம்புங்க” என்றாள் தயங்கி.
அவனோ அசையவே இல்லை, பிடித்திருந்த விரல்களை உயர்த்தி முத்தமிட்டு, அவள் செவியினில் அடுத்த முத்தம் வைக்க, தன்னையும் அறியாமல் அவள் உடல் சிவந்தது. அடுத்த இதழ் பதிவு அவள் இதழ்களில் என அனாயா நினைக்க, அவளை இறுக்கமாக அணைத்திருந்தான் விஷ்ணு.
“நம்ம விசயத்துல எல்லாமே ஒரு அவசர கதில இருக்கு அனாயா, அதே அவசரம் நம்மளோட முதல் கிஸ்ல கூட இருக்க கூடாது நினைக்கிறன். என் பார்வையாலேயே உன்ன சிவக்க வச்சு அதுக்கு அப்பறம் தான் எல்லாம்” என்றான் அணைப்பிலிருந்து வெளிவராமல்.
நீண்ட நேரம் அவன் மார்பினில் புதைந்து போனாள் அனாயா. நிம்மதியாக இருந்தது. அமைதி மூளையின் நரம்புகளை எல்லாம் தளர்த்தி நிதானமாக வேலை செய்ய வைத்தது.
திடீரென அவன் மார்பினிலிருந்து வெளியே வந்தவள், “ஆமா நீங்க எப்படி உள்ள வந்திங்க?”
“இங்க ஆள் செட் பண்ணிருக்கோம்” என்றான் விஷ்ணு சாவகாசமாக.
“வேற யாரும் உங்கள பாத்திருந்தா?”
“எல்லாரும் பாக்க உன் ரூம் வந்திருப்பேன். சரி வா தூங்குவோம்”
அவளை இழுத்து மெத்தைக்கு செல்ல, “என்னது தூங்குவோமா? போங்க இங்க இருந்து” அவன் கெஞ்சி கூத்தாடி பார்த்தான், பெண்ணவள் அசையவே இல்லை.
முகத்தை தூக்கி வைத்தே வீட்டை விட்டு எங்கெங்கோ குதித்து சத்தமே கேட்காமல் வெளியேறி இருந்தான். மனம் நிறைந்த புன்னகையோடு இருவரும் அன்று உறக்கத்தை தழுவினர்.
*****
error: Content is protected !!