Skip to content
Post Views: 3,716
நான் தேடும் காதல் நீ…..19
மருத்துவமனையில் இருந்து அப்போது தான் வந்திருந்தான் நிமலன்.முகத்தில் அத்தனை கலைப்பு இன்று எப்படி தொடங்கிய நாள் தாமரையை நேற்றே பார்க்க சென்றுவிட்டான்.அவளை இன்று தன் வீட்டில் அறிமுகம் செய்து தன் குடும்பத்துடன் சென்று பேசி தங்கள் திருமணத்துக்கு சம்மதம் வாங்கலாம் என்று பல கனவுகளுடன் வந்தவனின் மனநிலை இப்போது முற்றிலுமாக மாறியிருந்தது.அதுவும் தாமரையின் அன்னையின் நிலையை கண்டவனுக்கு தன் தவறின் வீரியம் புரிய தன்னை குறித்தே கோபம் மேலோங்கியது.
“ச்சை நான் கொஞ்சம் யோசனை செஞ்சிருக்கனும்….அவ தான் புரியமா பேசுறானா நான் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வச்சிருக்கனும்…என் மேல தான் தப்பு….”என்று தன்னை திட்டிய படி இருந்தவனின் அறைக் கதவு தட்டப்பட்டது,
“யாரு….”
Advertisement
“பெரிய ஐய்யா உங்களை கூப்பிடுறாங்க….”என்று பணியாளின் குரல் கேட்க,
“ வரேன்னு சொல்லுங்க….”என்றுவனுக்கு இப்போதே இவர்களையும் பார்க்க வேண்டுமா என்று ஆயாசமாக இருந்தது.இருந்தும் வேறு வழியிருக்கவில்லையே தன்னை தயார் செய்து கொண்டு சென்றான்.
“நான் பேசுறேன் மாப்பிள்ளை நான் சொன்னா கண்டிப்பா என் பேரன் கேட்ப்பான்….”என்று ராஜாங்கம் கூறிக் கொண்டிருக்க,
Advertisement
“எனக்கு நம்பிக்கையில்லை மாமா…அதோட தீர்த்தாமா இனி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காது….”என்று செல்வம் கூறிக் கொண்டிருக்க,அந்த நேரம் சரியாக நிமலன் உள்ளே நுழைந்தான்.
Advertisement
“வாப்பா…இங்க வா….”என்று ராஜாங்கம் அழைக்க தலையசைத்து அவரின் அருகில் அமர்ந்தவனின் கைகளை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டவர் சற்று நேரம் பேசவில்லை அமைதியாக இருந்தார் நிமலனும் எதுவும் பேசவில்லை.
“எப்படி இருக்காங்க அவங்க….”என்று செல்வம் தான் கேட்டார்.
“ம்ம்…மைல்ட் அட்டாக்….எல்லாம் என்னால தான்ப்பா….நான் உங்க கிட்ட ஒழுங்கா பேசியிருக்கனும்….ப்ச் என்னால தான் அவங்களுக்கு இப்படி ஆகிடுச்சோனு தோணுது….”என்று வருந்தி கூற,
Advertisement
“நிமலா அது….நீ அந்த பொண்ணை….முடிவு பண்ணிட்டியா…..”என்று ராஜாங்கம் கேட்க,
“அவ தான் இந்த வீட்டு மருமக….அதுல எந்த மாற்றமும் இல்லை….”என்று நிமலன் உறுதியாக கூற,பேரனின் மனநிலை நன்கு புரிந்துவிட அவருக்கு மனது கஷ்டமாக இருந்தது,பேரனுக்கு தாத்தாவின் மனநிலை புரிந்துவிட,
“நீங்க கவலைபடாதீங்க தாத்தா உங்க பேத்திக்கு என்னை விட நல்ல பையன் இருக்கார்….அவர் பார்த்துப்பார்….”என்று கூற,
“யாருப்பா…இன்னைக்கு வந்தானே அந்த பையனா….அவன் ரவுடி போல இருக்கான் அவனா என் மருமகளுக்கு மாப்பிள்ளை இதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன்…..”என்று செல்வம் எகிறிக் கொண்டு வர,அவரை முறைத்த நிமலன்,
“நான் கேக்குறதுக்கு நீங்க முதல்ல பதில் சொல்லுங்க……எதனால சதா அங்கிள் உங்களை அடிக்க வந்தார்….”என்று நிமலன் கேட்க செல்வம் தலைகுனிந்துவிட்டார்.எப்படி சொல்ல முடியும் தான் செய்த காரியம் அதை தன் மகனிடம் கூட கூற முடியாத நிலையில் அல்லவா இருக்கிறது.
“ம்ம் என்கிட்ட சொல்லமுடியாத அளவுக்கு நீங்க ஏதோ செஞ்சிருக்கீங்க….அப்படி தான….”
“விடுப்பா….முடிஞ்சதை பேசி இனி பிரியோஜனம் இல்லை…இனி நடக்க வேண்டியதை தான் நாம பார்க்கனும்…..”என்று ராஜாங்கம் கூற,
“ம்ம்…அதை தான் நானும் சொல்ல வந்தேன்….அதுக்குள்ள அப்பா பேசி என்னை கோபப்படுத்திட்டார்…..யாரையும் அவங்க வெளி உருவத்தை வச்சி எடை போடக்கூடாது….அதுக்கு முதல் உதாரணமே நீங்க தான்….இதை நான் சொல்ல தேவையில்லை….”என்று நிமலனின் வார்த்தை செலவத்திற்கு சுருக்கென்று இறங்கியது.தன் தந்தையையின் கையை பற்றியவன்,
“ப்பா…..நான் இப்பவும் இதை தான் சொல்லுவேன் நீங்க செஞ்சது தப்பு இல்லை பாவம் அதுக்கு தண்டனையும் பெருசா தான் இருக்கும் அதை நாம ஏத்துக்க தான் வேணும்….அதோட நீங்க என்கிட்ட பேசுன மாதிரி தீர்த்தாக்கிட்ட அவரை பத்தி தப்பா எல்லாம் பேசிடாதீங்க….அவ்வளவு தான் உங்களை உண்டு இல்லைனு ஆக்கிடுவா….அவ்வளவு காதல் அவரு மேல…..”
“என்ன தீர்த்தாம்மாவும் விரும்புதா…..”என்று செல்வம் கேட்க,
“ஆமா….அவ ஒண்ணும் இந்த கல்யாணத்துக்கு முழுமனசோட எல்லாம் சம்மதிக்கலை….அவளோட கடை காப்பத்துனும் தான் இதுக்கு ஒத்துக்கிட்டது….”என்று நிமலன் கூற செல்வத்துக்கும் அந்த சந்தேகம் இருந்தது என்று கூறினார்.
“ம்ம் அதனால தான் சொல்லுறேன்….இது எங்க வாழ்க்கை நாங்க முடிவு எடுக்குறோம்….நீங்க பெரியவங்களா எங்களோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க…..ப்ளீஸ்….”என்று கூற செல்வம் வாஞ்சையாக மகனின் தலையை தடவிக் கொடுக்க,ராஜாங்கத்துக்கு தன் பேரன் பேத்திக்கு கல்யாணம் நடக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் தன் பேரன் கூறுவது போல இது அவன் வாழ்க்கை அவன் தான் முடிவு எடுக்க வேண்டும் அதனால் அவரும் தன்னை தேற்றிக் கொண்டு,
“சந்தோஷம்ப்பா….சீக்கிரம் இந்த வீட்டுக்கு பேத்தியை கூட்டிட்டு வா….நான் பார்க்கனும்……”என்று கூற,
“சீக்கிரமா நாமளே அவ வீட்டுக்கு போய் முறையா பேசலாம் தாத்தா…..”என்று கூற,
“என்ன அதுக்குள்ள அவங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்களா….”என்றார் செல்வம் அதிர்ச்சியாக கேட்டார் அவருக்கு அத்தனை எளிதில் தாமரையின் வீட்டார் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் அதற்குள் ஒருமுறை தீர்த்தாவிடம் பேசி பார்க்கலாம் என்ற எண்ணம்,
“நீங்க பேசினாலும் எதுவும் நடக்காது….அந்த முயற்சி எல்லாம் எடுத்து கஷ்டபடாதீங்க….”என்று தந்தையின் மனதரிந்து கூற,
“இல்லப்பா…”என்று ஏதோ கூற வந்தவரை தடுத்த நிமலன்,
“ப்பா….இந்த வீட்டுக்கு தாமரை தான் மருமக அது எக்காரண கொண்டும் மாற போறது இல்லை…..நீங்க தேவையில்லாத வேலை பார்த்து எல்லாரோட மனசை கஷ்டப்படுதிடாதீங்க…..”என்று நிமலன் கோபமாகவே கூறிவிட்டு வெளியேறிவிட,
“அவன் சொல்லறது புரியுது தான மாப்பிள்ளை….மேற்கொண்டு எந்த பாவத்தையும் செய்யாம இருங்க….நமக்கு அடுத்த தலைமுறையாவது நிம்மதியா இருக்கட்டும்……”என்றுவிட்டார் ராஜாங்கம்.அதன் பின் செல்வம் எதுவும் பேசவில்லை அமைதியாக கிளம்பிவிட்டார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தனது அறையில் ஏதோ யோசனையிலேயே அமர்ந்திருந்தாள் தீர்த்தா சிவன்யா அறையின் உள்ளே வருவதும் தன் அக்கா ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்துவிட்டு வெளியில் செல்வதுமாக இருந்தாள்.
“அப்படி என்ன தான் யோசிக்கிறாளோ தெரியலை…..”என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை அறையின் உள்ளே வர,
“ப்ச்….என்னதான்டீ வேணும் உனக்கு…..ஏதாவது கேட்கனும்னா கேளு….அதை விட்டுட்டு இப்படி ஏன் அலையிற….”என்று தீர்த்தா கேட்க,
“ஏன் சொல்லமாட்ட நான் உன்னை பார்க்க வந்தா நீ என்னை கிண்டல் பண்ணுற…..”என்றவள் தமக்கையின் அருகில் அமர,
“என்ன என்ன வேணும் மேடத்துக்கு….”
“அது…..அவங்க சொன்னதை நீ கேட்ட தான….”
“எவங்க….என்ன சொன்னாங்க….”
“க்கா விளையாடாத….அதான் அமரன் அவங்க தான் சொன்னாங்களே….இனி நீ அவங்க பொறுப்புனு….”என்று சிவன்யா கூற,
“போடி….அங்கிட்டு….அவனே தாமரை விஷயம் தெரிஞ்சு தான் வந்திருக்கான்….எனக்காக எல்லாம் இல்லை….அந்த சமயத்துல ஏதாவது சொல்லிருப்பான் நீ அதை எல்லாம் பெருசா எடுத்துக்காத….”என்று கூற,
“அப்ப இந்த கல்யாணம் நின்னதுல உனக்கும் வருத்தம் எல்லாம் இல்லையா….”
“உண்மையை சொல்லனுன்னா எனக்கு எதுவுமே தோணலை….நான் நம்ம கடைக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்….”என்று கூற,
“அறிவு இருக்கா க்கா உனக்கு…..கடைக்காக யாராவது கல்யாணம் செஞ்சுப்பாங்களா…..”என்று சிவன்யா கோபமாக கேட்க,
“நான் செஞ்சுப்பேன்….எனக்கு என் கடை தான் முக்கியம் அதுக்கு அப்புறம் தான் மத்தது எல்லாம்….”
“க்கா…இப்படி பேசுன நான் சதா அங்கிள் கிட்ட சொல்லுவேன்….நீ….எனக்கு பயமா இருக்கு…..உன்னோட நினைப்பு இப்படி இருக்கும்னு நான் நினைக்கலை….”
“என்ன நினைக்கலை…..இந்த கடை தான் நமக்கு எல்லாம் இது இல்லைனா நம்ம நிலைமை என்ன அதை யோசிச்சியா….நானே இப்ப என்ன பண்ணுறதுனு யோசனையில இருக்கேன்…போ போய் தூங்கு…”என்றுவிட்டு விட்டத்தை வெறித்தவாரே அமர்ந்துவிட,சிவன்யாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது தீர்த்தாவின் மனநிலையை நினைத்து அவள் தன் வீட்டின் பின் பக்கம் வந்து கதிருக்கு அழைத்துவிட்டாள்.
மண்டியை மூடிவிட்டு அப்போது தான் தன் வீட்டுக்கு வந்திருந்தான் கதிர்.
“டேய் சரவணா…சாப்பிட்டியாடா….”என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்கு செல்ல கதிரின் கைபேசி இசைத்தது.
“டேய் அந்த போனை எடு…அமரனா தான் இருக்கும்….”என்று கதிர் உள்ளிருந்தே குரல் கொடுக்க,சரவணன் பேசியை எடுத்தான்.
“ஹலோ கதிர்….”என்று சிவன்யாவின் குரல் கேட்க,
“ஹலோ அண்ணி….எப்படி இருக்கீங்க…”என்று சரவணன் கேட்க,
“அடேய் நீயா…எப்படிடா இருக்க….எங்க உன் நொண்ணன்…..”
“இருக்காரு….இருக்காரு….”என்று கூறிக் கொண்டே திரும்ப இடுப்பில் கை வைத்தபடி முறைத்துக் கொண்டு இருந்தான் கதிர்.
“என்ன சொல்லி கூப்பிட்ட…..”என்று கதிர் கோபமாக கேட்க,
“அது….”என்று சரவணன் திருதிருக்க,
“அண்ணினு சொன்னேன் சொல்லுடா….என்ன தான் செய்யுறார்னு பார்ப்போம்…..”என்று அலைபேசியில் சிவன்யாவின் குரல் கேட்க,
“நீ தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க…..இது நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்….”என்று கதிரின் குரல் கேட்க,
“நம்ம விஷயம் அப்புறம் பார்க்கலாம் கதிர்….நான் தீர்த்தாவை பத்தி பேச தான் கூப்பிட்டேன்….அவ சரியில்லை ஏதோ கடையை காப்பதனு அதுக்கு தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லுற….எனக்கு பயமா இருக்கு….”என்று சிவன்யா கூற,
“அமரன் சரியா சொன்னான்…கடைக்காக தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருப்பானு….அவளை….”என்று கதிர் கோபத்தில் பல்லை கடிக்க,
“இன்னும் ஒண்ணு….அது அமரன் அவங்க சொன்னது உண்மையா….”என்று கேட்க,
“அவன் பொய் சொல்லி பார்த்து இருக்கியா நீ….”
“இல்லை ஆனா அக்கா சொல்லுறா அவங்க சும்மா சொல்லிருப்பாங்கனு….”
“அவளுக்கு மண்டை குழம்பி போயிடுச்சு நினைக்கிறேன்….நீ பயப்படாத அமரன் பார்த்துக்குவான்….அப்புறம் இந்த மாதிரி பேசற வேலையெல்லாம் வேண்டாம்….”என்று கதிர் கூற,
“எனக்கு பிடிச்சிருக்கு….உங்களுக்கும் பிடிச்சிருக்கு ஆனா நீங்க அதை ஏத்துக மாட்டீங்க…..அதுக்காக நான் என் மனச மாத்திக்க முடியாது கதிர்….”என்று சிவன்யாவும் தன் மனதை கூறி வைத்துவிட்டாள்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சுத்த வைக்க போறாரோ தெரியலை….”என்ற தலையில் அடித்துக் கொண்டு சென்றாள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இங்கு மருத்துவமனையில் கற்பகத்தின் உடல்நிலை தெரிவருவதாக மருத்துவர் கூறியிருக்க நாளை அவரை நார்மல் வார்டிர்க்கு மாத்துவதாக இருந்தது.
“ம்மா….நீங்களும் தாமரையும் கிளம்புங்க….இனி தான் பயமில்லைனு சொல்லிட்டாங்களே நான் பார்த்துக்குறேன்….”
“இல்லப்பா….”என்று அகிலா தயங்க,
“ம்மா சொன்னா கேளுங்க…கிளம்புங்க தாமரை கிளம்பு…அம்மா கூட போயிட்டு நாளைக்கு வா…”என்று கூற,
“நான் இருக்கேன்….எனக்கு அம்மாவை பார்க்கனும்….”என்று அழுத்தமாக கூற,
“நீ உன் அம்மாவை பாரு யார் வேணாம்னு சொன்னா….நாளைக்கு காலையில பாரு இப்ப கிளம்பு….”என்று அமரனும் அதைவிட அழுத்தமாக கூற,
“எல்லாம் உங்க இஷ்டம் போல தான் நாங்க இருக்கனும்…”என்று முணகிக் கொண்டே அவள் எழுந்து கொள்ள,அகிலாவிற்கு தான் தாமரையின் இந்த வார்த்தைகள் மிகவும் சுட்டது.நாங்கள் என்ன செய்துவிட்டோம் இவளை இப்படி பேசுகிறாளே என்று அத்தனை வருத்தமாகிவிட்டது.
“ம்மா…நீங்க எதுவும் பேசாதீங்க…நான் பார்த்துக்குறேன்…”என்று தாயின் மனநிலை அறிந்து கூற,
“ம்ம்….ஆனா நாம என்னடா செஞ்சோம் இவ இப்படி சொல்லிட்டு போறா….கற்பகத்துக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்படுவாடா….”என்று கூற,
“அதெல்லாம் செய்யமாட்டா ம்மா….அவளும் பயந்து தான் இருக்கா….”என்றவன் இருவரையும் வீட்டில் விட்டுட்டு வந்தான்.ஆனால் தாமரை தன் மன அழுத்தங்களை கற்பகத்திடம் வெடித்துவிடுவாள் என்று அமரன் நினைத்திருக்கமாட்டான்.தன் தாயின் உடல்நிலை கூட அவளுக்கு பெரிதாக தெரியவில்லை இத்தனை நாள் அவளின் மனதில் அழுத்தி வைத்திருந்த அனைத்தும் கற்பகத்தின் முன்னே அவள் கொட்டிவிட ஒரு தாயாக மிகவும் உடைந்து தான் போனார் கற்பகம்.
error: Content is protected !!