Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

குழலினி தன் தந்தை தைத்த அந்த குர்தாவை துணி தாங்கியில் இட்டு, அதனை கடைக்கு முன்பாக அனைவருக்கும் தெரியும் படி மாட்டி கொண்டிருந்தாள்.

அதனை வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த ஜானவி, “இன்னும் இந்த பக்கம் நல்லா திருப்பி மாட்ட முடியுமான்னு பாரு?” என்று கூறிக் கொண்டிருக்க, அவள் சொல்ல அதன்படி செய்து அதை அழகாக அனைவருக்கும் தெரியும் படி மாட்டி வைத்த பின்னர் இரு பெண்களும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டு தங்களையே மெச்சி கொண்டனர்.

“உங்க அக்காக்கு ஆனாலும் இவ்ளோ ஐடியால மண்டைக்குள்ள இருக்கும்னு நான் யோசிக்கவே இல்ல. என்ன மூளை பாத்தியா?” என்று கடையை சுற்றி பார்த்தவாறு கூறிய ஜானவி,

“ஆமா, இந்த எம்பிராய்டரி எல்லாம் உனக்கு எப்படி தோணுச்சு? உங்க அக்கா மாதிரி உனக்கும் மூளை திடீர்னு வளந்திரிச்சோ?” என்று கிண்டலாகவே கேட்க,



Advertisement

“எங்க அக்காக்கு மூளை திடீர்னு வந்துடுச்சு தான். ஆனா எம்ராய்டரி எனக்கு முத இருந்தே ரொம்ப பிடிக்கும். நான் டென்த் முடிச்சு லீவ்ல இருக்கும்போதே, கத்துக்கிட்டேன்.

அப்பா இப்ப தான குர்த்தி தைக்க பழகினாரு. அப்பா அதை சிம்பிளா தான் தைக்கிறாரு இப்போ. நான் வேணா அதுல எம்ராய்டரி போட்டு தரேன்னு சொன்னேன். அப்பாவும் நம்பி என்கிட்ட கொடுத்தாரு. ஒரு டிசைன் போட்டு கொடுத்தேன்.

உடனே அதை கடை முன்னாடி மாட்டிட்டாரு. ஒரு வாரமா இதுதான் இருக்கு. இன்னைக்கு தான் இன்னொரு குர்த்தி ரெடியாச்சு. அது தான் இது”, என்று தான் குர்தியை அழகுபடுத்த பழகிக்கொண்ட கதையை குழலினி கூறினாள்.

Advertisement

நல்ல விஷயம் தான். ஆனா நீ அடுத்த வருஷம் பிளஸ் டூ போற , அதை ஞாபகம் வச்சுக்கோ. டிசைன் போடுறிங்கற பேர்ல படிப்ப கோட்டை விட்டுறாத”, என்று அவள் மிரட்டலாக கூற,

Advertisement

அதற்கு குழலினி, “ஐயோ…. என்னால தாங்க முடியல….எல்லோரும் இதையே சொல்றீங்க.

நான் டிசைன் போட உட்கார்ந்தாலே ‘நீ என்ன படிக்கலையா டிசைன் போட்டுட்டே இருப்பியா’ அப்படின்னு அம்மா வந்து நிக்கிறாங்க. அப்புறம் பாட்டி அப்புறம் அக்கா அப்பானு வரிசையா வந்து நிக்கிறாங்க.

நான் ஒரே ஒரு டிசைன் தான போட்டுக்கொடுத்தேன். அதுக்கு எவ்ளோ பேசுறீங்க எல்லாரும். இன்னும் 11த்தே நான் முடிக்கல”.

Advertisement

“ஐயோ பரதேவத என்ன மன்னிச்சிடு… தெரியாம சொல்லிட்டேன்”

“அது மட்டும் இல்ல அப்பா அழகா டிசைன்ஸ் குர்தி தைக்கிற வரைக்கும் தான் என்னோட எம்ப்ராய்டரி தேவைப்படும். அதுக்கப்புறம் எதுக்கு தேவைப்பட போகுது”.

“என்ன இப்படி சொல்லிட்ட, நீ? அழகா நம்ம கையால போடுற எம்பிராய்டரிக்கு எப்பவுமே ஒரு தனி மதிப்பு தான். இன்னைக்கு இப்படி சொல்ற பிற்காலத்துல உன்னுடைய கலை திறமைக்கு தனியா ஒரு ரசிகர் கூட்டமே வரும்.
அப்புறம் நீ பெரிய பிஸ்னஸ் வுமன் ஆகினாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை”.

“ஒரு சின்ன எம்பிராய்டரி போட்ட உடனே என்ன கதை எல்லாம் சொல்ல முடியுமோ சொல்லுங்க”

“என்ன இப்படி சொல்லிட்ட? உங்க அக்கா எல்லாம் எவ்ளோ பெரிய பிளான் வச்சிருக்கா தெரியுமா? நீ அதே மாதிரி நாளைக்கு நீயும் ஒரு பெரிய பிசினஸ் பண்ணலாம்”
“அக்காக்கு? அக்காக்கு என்ன பிளான்?”.

“உங்க அக்கா நிறைய பிளான் வச்சிருக்கா”

“அதுதான் என்ன பிளான்னு சொல்லுங்க ப்ளீஸ்…ஜானவி அக்கா”

“என்ன திடீர்னு ப்ளீஸ் எல்லாம் போட ஆரம்பிச்சுட்ட? நானே சொல்றேன். உங்க அக்காவோட பிளான் என்னன்னா.. இப்போ உங்க அப்பாக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிச்ச மாதிரி, உங்க அம்மாக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிக்கணும்.

“அம்மாவுக்கும் பிசினஸா? என்ன பிசினஸ்?” என்ற குழலினி யோசனையோடு “……….ஆனா ……..அப்பாக்கு கடை வைக்கவே நகை அடமானம் வச்சு தான் பிசினஸ் ஆரம்பிச்சோம். அதுவே முழுசா இன்னும் முடியல. அதுக்குள்ள எப்படி அடுத்த பிசினஸ் ஆரம்பிக்க முடியும்”

“இப்படில்லாம் நீங்க யோசிப்பீங்கன்னு தான் உங்ககிட்ட இந்த விஷயத்தை எல்லாம் சொல்லாம வச்சிருக்கா”

“சரி சரி சொல்லுங்க, சொல்லுங்க, ப்ளீஸ் ப்ளீஸ்”,

“ஒன்னும் இல்ல. அந்தா தெரியுது பாரு ஒரு கடை” என்று எதிர்த்த கடையை ஜானவி காட்ட,

“ஆமா குரு சரோட கடை”,

” அந்த கடையில தான். உங்க அக்கா உங்க அம்மாக்கு ஒரு ஹோட்டல் வெச்சு தரப்போறா”.

“நிஜமாவா ?அம்மா ஹோட்டல் நடத்த போறாங்களா?”

“ஆமா, இன்னும் கொஞ்ச நாள்ல நடத்துவாங்க”
“ஆனா பணத்துக்கு என்ன பண்ணுவா அக்கா. ஆல்ரெடி நகையை வேற வச்சு கடன் வாங்கி இந்த கடைய நடத்திறோம். அம்மா எல்லாம் அவங்களுக்கு பிசினஸ்ன்னு சொல்லி கேட்டா, சத்தியமா ஒரு சொம்பு கூட தர மாட்டாங்க அடமானத்துக்கு.

அப்பாக்காவது தொழில் நட்டமா போயிட்டு இருந்திச்சு. அதனால தரேன்னு சொல்லி தந்துட்டாங்க இதுக்கெல்லாம் தர வாய்ப்பே கிடையாது”

குழலினி அவ்வாறு கூறியதும் இயல்பான குரலில் அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தவள் சற்று தீவிரமான முகவாணியுடன்,

“உங்க அக்கா மேல ஏற்கனவே உங்க அப்பாக்கு நிறைய நம்பிக்கைதான். அதுவும் இந்த கடை தொழில் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ரொம்பவே நம்ப ஆரம்பிச்சுட்டாங்க.

உங்க அம்மா கூட இத்தனை நாள் இந்த சின்ன பிள்ளை பேச்சை கேட்கக்கூடாதுனு தான் நினைச்சிட்டு இருந்திருப்பாங்க ஆனா இப்போ உங்க அம்மாவும் அவ பேச்ச கேக்குற அளவுக்கு மாறிட்டாங்க.

பாட்டி எப்பவுமே உங்க அக்காவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. நீயும் சொல்ல வேணாம் உங்க அம்மாக்கு ஒரு பிசினஸ்னா சும்மாவா இருப்ப. அதனால கண்டிப்பா உங்க அக்கா ஹோட்டல் ப்ளானை இந்த டைம் சொன்னா கண்டிப்பா கேட்பாங்க.

அதைவிட முக்கியமா உங்க அக்கா இப்ப நகையை அடமானம் வச்சிருக்கோம்ல அதை திருப்பிக் கொடுத்ததுக்கு அப்புறம் தான் ஹோட்டல் ஆரம்பிக்கிற பிளான்ல இருக்கா. சரியா?

கவலைப்படாத. அது மட்டும் இல்ல இந்த தடவை நகைய வெச்சி கடன் வாங்கி பண்ண போறது இல்ல. பெண்கள் சிறு தொழிலுக்காக கூட்டுறவு வங்கிகள்ல இருந்து தர பணத்தை வச்சு தான் ஆரம்பிக்க போறா உன் அக்கா. அதனால் கவலை வேண்டாம்”

அனைத்தையும் கேட்டு குழலினி மிகவும் ஆச்சரியப்பட்டு போனாள், “உண்மையிலேயே அக்கா இவ்வளவு யோசிக்கிற ஆளா ஜானு க்கா?”

“ஆமா டி. உங்க அக்கா ரொம்ப யோசிக்கிறா இப்பவே என்னென்னமோ பண்ணனும் ப்ளான் பண்றா. வேலை எல்லாம் பின்னாடி கிடைக்குமோ கிடைக்காதோ? அதெல்லாம் பத்தி கவலைப்பட கூடாது. இன்னைக்கு நல்லா உழைக்கணும் அப்படின்னு நிறைய தத்துவம் எல்லாம் பேசிக்கிட்டு இருக்கா” என்று இப்போது மீண்டும் ஜானவி தன் இயல்பான கிண்டல் தொனியில் பேசினாள்.

குழலினிக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. நிச்சயம் அக்கா இப்படி இந்த அளவுக்கு யோசிப்பவள் இல்லை என்பது ஜானவிக்கு வேண்டும் என்றால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் குழலினிக்கு தெரியுமே.

தற்போதைய வாழ்க்கையை அழகாக வாழ்ந்து விட்டு நகர வேண்டுமென எண்ணுபவள். நாளை பற்றி இத்தனை தூரம் அக்கா யோசிப்பாள் என்று குழலினி எண்ணியதே கிடையாது.

அப்படி இருக்க ஏன் இத்தனை யோசனை வேண்டும் என்று குழலினிக்குள் ஒரு கேள்வி இருந்தது.

“ஏன் ஜானு க்கா? அந்த ஃபயர் ஆக்சிடென்ட் ஆச்சு இல்லை. அதுக்கு அப்புறம் தான் அக்காக்கு வாழ்க்கைய பத்தின பயம் வந்து இருக்குமோ?” என்று கேட்க,

“ஏன் இப்படி கேக்குற?”

“இல்ல அக்கா முன்னாடிலாம் இப்படி கிடையாது. இந்த ஃபயர் ஆக்சிடென்ட்க்கு அப்புறம் தான் ஒரு மாதிரி வித்தியாசமா மாறிட்டா. அதான் கேட்டேன்”

“உங்க அக்கா பத்தி எனக்கு முன்னாடியே தெரியாதுடி. அந்த ஃபயர் ஆக்சிடென்ட் ஆனதுக்கப்புறம் தான் அவக்கிட்ட நான் பேசவே செஞ்சேன்.

அதனால எனக்கு வித்தியாசம் தெரியல. ஆனா அவ எல்லா பொண்ணுங்க மாதிரி கிடையாது ரொம்ப ஸ்பெசல். அது மட்டும் எனக்கு தெரியும்”

“அக்கா, நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா?”

“என்ன?”

“நீங்க குரு சார் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“குரு சாரா…?” என்றதும் ஒரு நொடி ஜானவிக்கு பக்கென்று இருந்தது.

சின்ன பெண் இவள் எதைப் பற்றி கேட்கிறாள் என்று. “அவரைப் பத்தி என்ன? ஒன்னும் இல்லையே”

“சும்மா சமாளிக்காதீங்க. எனக்கு தெரியும் அக்காக்கும் அவருக்கும் ………”

“ஒன்னும் கிடையாது. எனக்கும் இந்த மாதிரி டவுட் வந்து உங்க அக்கா கிட்ட அசிங்கப்பட்டது தான் மிச்சம்”

“என்னாச்சு…. என்ன ஆச்சு ….?”

“என்ன இவ்வளவு ஆர்வமா இருக்க? நான் அசிங்கப்பட்டதுக்கா இல்ல உங்க அக்காவ பத்தி தெரிஞ்சுக்கறதுக்கா”

“ஐயோ …க்கா ..சொல்லுங்க”

“சரி சரி, உங்க அக்காகிட்ட நானும் இதை பத்தி சொன்னேன். இவளும் அவர்கிட்ட போய் கேட்டா. குரு சார் சொன்னாருருரு…அவருக்கு அவ ஃப்ரெண்டாம்மா. அதான் அக்கறைல இதெல்லாம் பண்றேன்னு சொல்லிட்டாரு. அதுக்கு மேல நான் என்னத்த பேச. ”

“அது சரி அவ்வளவுதானா?”

“இதுக்கு மேல என்ன இருக்க-னு உனக்கு?”

“ஒன்னும் இல்லையே” என்ற விட்டு குழலினி அமைதியாகி விட, மதிய உணவு உண்ண சென்றிருந்த ஆறுமுகம் திரும்பி இருந்தார்.

மகள் தான் அவரை வழுக்கட்டாயமாக அனுப்பி வைத்திருந்தாள். ஜானவியும் அப்போது அங்கு இருந்ததாள். சரி என்று கிளம்பிவிட்டார்.

வந்ததும், “சரிடா நீங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க. ரொம்ப நேரம் காத்துட்டு இருக்கீங்க பாருங்க” என்று கூறவும்
“சரிப்பா நான் போய் சாப்பிடுறோம்” என்று கிளம்பும் நேரம்,

“உங்க அக்கா என்னடி பண்றா? எப்பவும் கடையிலேயே கிடப்பா?” என்றாள் ஜானவி.

“அக்காவா ரெக்கார்டு எழுதிக்கிட்டு இருக்கு.”

“ஐய்யய்யோ………” ஜானவியின் அலறல் கேட்டு குழலினி என்ன என்று கேட்க,

“எனக்கும் ஒரு ரெக்கார்டு இருக்குடி. சுத்தமா மறந்து போயிட்டேன். அப்பா நான் அப்புறமா ஒரு நாள் வந்து சாப்பிடுறேன்” என்று தந்தையும் மகளும் நின்று விட்டு போ என்று கூறியும் கேட்காமல் வேகமாக ஸ்கூட்டியில் ஏறி பறந்தே விட்டாள் ஜானவி.

“சரிடா குழலி மா நீ போய் சாப்பிடு. அப்பா வேணா கடையை சாத்திட்டு வந்து உன்ன வீட்ல விட்டுட்டு வரவா?” என்று கேட்க,

“கடையை சாத்திட்டு வருவீங்களா? இந்த நேரத்துல தான் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிப்பாங்க. இப்ப நீங்க கிளம்புனீங்கன்னா அப்புறம் எப்படி விளம்பாரம் நடக்கும் வேண்டாம் நான் நடந்தே போறேன். பக்கத்துல தானே” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே ஒருவர் வந்து தன் குழந்தையை கூட்டிக்கொண்டு வந்து ஒரு பொருளைக் கேட்க,

அதனை எடுத்து கொடுத்து விட்டு திரும்பவும் மகள் அங்கே இருப்பதை கண்ட ஆறுமுகம், ” இன்னும் சாப்பிட கிளம்பலையா?”

“அப்பா, அக்காவோட யோசனை செமையா ஒர்க் ஆகுதுல?” என்றாள்.

“ஆமாடா உங்க அக்கா நல்லா யோசிச்சு தான் செஞ்சிருக்கா. என்னதான் ஸ்டேஷனரி பொருளை வித்தாலும். இந்த ப்ரீகேஜி பிள்ளைங்கள்ல ஆரம்பிச்சு டென்த் படிக்கிற பிள்ளைங்க வரைக்கும் எல்லாருக்கும் ஒருத்தர் விடாம ஆக்டிவிட்டீஸ்னு ஒன்னு குடுக்குறாங்க.

அதெல்லாம் தான் நல்லா வியாபாரம் ஆகுது. இந்த ஸ்டிக்கர், அட்டை, தெர்மாகோல்-னு இன்னும் வித்தியாச வித்தியாசமா என்னென்னமோ பொருள் எல்லாம் வந்துருச்சு. அதெல்லாம் கேட்டு வாங்கிட்டு போய் ஓட்டுறது வெட்டுறதுனு நிறைய வேலை பார்க்கிறாங்க இந்த பிள்ளைங்க.

அதை பத்தி எல்லாம் முன்னாடியே, பாடப்புத்தகத்தில பாத்து அலசி அதுல என்னென்ன எல்லாம் வாங்க வேண்டி இருக்குன்னு தேர்ந்தெடுத்து வாங்கி வந்திருக்கா பாரு என் மகள்”

” அப்பா, என்னை பொறாமை பட வைக்காதீங்க” என்று கண்ணை சுருக்கிக் கொண்டு தன் சின்ன மகள் செய்த பாவனையைக் கண்டு சிரித்து கொண்டே,

“நீயும் நான் பெருமைப்படுற மக தாண்டா. படிப்போட சேத்து எனக்கு எம்ப்ராய்டரி எல்லாம் போட்டு தரீயே” என்று அவளையும் விட்டுக் கொடுக்காது கொஞ்சினார் ஆறுமுகம்.

இப்படி சிறிது நேரம் தன் தந்தையுடன் கொஞ்சி விட்டு குழலினி அங்கிருந்து புறப்பட்டாள். அவள் புறப்பட்டதும் ஆறுமுகம் தன் மகள்களை எண்ணி சிரித்துக்கொண்டு, தனக்கு புதிதாக குர்தா தைக்க வந்திருக்க, அந்த வேலையை செய்ய தொடங்கினார்.

வீட்டில் வேலினி அலைபேசியில் குருவுடன் தான் பேசிக்கொண்டு இருந்தாள். அப்போதுதான் அவன் அழைத்திருக்க எடுத்ததும் அவன் அவளைப் புகழ்ந்து தள்ள ஆரம்பித்தான்.

“போதும் போதும் நீங்க என்னை ரொம்ப ஓவரா புகழ வேண்டாம். நீங்க எனக்கு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க நிறைய மோட்டிவேஷன் கொடுத்திருக்கீங்க.
அதனால தான் என்னால இதெல்லாம் பண்ண முடிஞ்சது. ரெண்டே நாள்ல நீங்க என்னலாம் பண்ணனும்னு சொல்லி யோசிச்சு செஞ்சதுனால தான், நான் அதுக்கு மேல என்ன எல்லாம் பண்ணலாம்னு யோசிச்சு இதெல்லாம் பண்ண முடிஞ்சது.

உங்களோட ஹெல்ப்புக்கு நான் பெரிய தேங்க்ஸ் சொல்லியே ஆகணும். ஆனா நீங்க என்னடானா என்ன புகழ்ந்துட்டு இருக்கீங்க”, என்றதும் அவன் மீண்டும் ஏதோ கூற வர,

அதற்குள் “போதும் பிரண்ட்ஷிப்குள்ள ஓவரா தேங்க்ஸ் இந்த மாதிரி புகழ்ச்சியெல்லாம் இருக்கக்கூடாது இது ரூல்ஸ்க்கு அகைன்ஸ்டானது” என்றாள் அவள்.

“சரி சொல்லு. வேற என்ன பேசலாம்?” என்று அவன் கேட்கவும், “ஒரு முக்கியமான விஷயம். உங்க கூட நான் சண்டை போடணும்னு இருக்கேன்”.

“என்கூட சண்டையா? ஏன்?”

“அன்னைக்கு கடைக்கு தேவையான பொருள் வாங்க போனதோட சரி. அதுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ணவே இல்ல. நீங்க எங்க தான் போனீங்க? அதுக்கு தான் சண்டை”

“ஓ, இது தானா… நீ எப்படி எனக்கு சர்ப்ரைஸ்ன்னு சொன்னியோ. அதே மாதிரி நானும் உனக்கு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். அது என்னன்னு வந்து சொல்றேன். அதுவரைக்கும் எனக்காக வெயிட் பண்ணு”

“ஓகே, ஆமா எத்தனை நாள் வெயிட் பண்ணனும்”

“கொஞ்ச நாள் தான் சீக்கிரம் வந்துருவேன்” என்று அவன் கூறவும், “சரி சரி ஓகே உன் வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க, அம்மா எப்படி இருக்காங்க?”

“ம்ம்ம் …சூப்பரா இருக்காங்க. நான் என்னன்னு வந்து சொல்றேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. வந்துட்டு பேசுறேன். ஓகேவா?” என்றதும், “ஓகே பாய்” என்று அவள் அழைப்பை துண்டித்தவள்,

குரு தன் மீது வைத்திருக்கும் அக்கறையை எண்ணி எப்போதும் போல் வியந்து விட்டு, மீண்டும் தன் ரெகார்ட் வேலையை தொடங்கினாள்.

இது முடிந்த கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் கடந்து இருந்தது. வேலினிக்கு இப்போது செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி இருக்க, அதற்கு தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!