Skip to content
Post Views: 4,074
நான் தேடும் காதல் நீ….6
அன்று சனிக்கிழமை காலை பத்து மணிக்கெல்லாம் விடுதியிலிருந்து சிவன்யா வந்துவிட்டாள்.தீர்த்தா அவளை வரவேற்றதோடு சரி அதன் பின் தன் கடை வேலைகளை பார்க்க போய்விட,சிவா வீட்டில் நுழைந்தவுடன் கண்டது அவளின் அன்னை புகைப்படம் உடைந்து நொறுங்கியிருந்ததை தான்,
“சரிதான் ஏதோ பெரிசா நடந்திருக்கு என்ன பிரச்சனைனு கேட்டாலும் சொல்லமாட்டா ராட்சஸி….ம்ம் என்ன பண்ணலாம்…”என்று சற்று நேரம் யோசித்தவள்,
“ஏதாவது பண்ணுவோம்….எனக்கு இதே பொழைப்பா போச்சு….இவளை பேச வைக்கறதுக்குள்ள என் ஆவி போயிடும்……சிவா பீ ரெடி….அதனால முதல்ல போய் வயிறு முட்ட சாப்பிடுறோம் அப்புறம் இவ கிட்ட பேசுறோம்….”என்று தனக்குள் கூறிக் கொண்டே திரும்ப,தீர்த்தா அவளை முறைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.
Advertisement
“அச்சோ…இவ எப்ப வந்தானு தெரியலையே…நான் பேசினதை கேட்டிருப்பாளோ….”என்று மனதில் சொல்லுகிறேன் என்று வெளியில் உளறிவிட,
“நான் எதையும் கேட்கல….நீ அடிக்கடி மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு வெளில பிணாத்திக்கிட்டு இருக்குறத விட்டுட்டு போய் குளிச்சிட்டு வா…சாப்பிடலாம்….”என்று கூறிவிட்டு செல்ல,சிவன்யாவிற்கு அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சு வெளிவந்தது.
சிவன்யா குளித்து வந்ததும் அவளுக்கான சாப்பாட்டை கொடுத்த தீர்த்தா,
Advertisement
“தூங்குடீ…மதியம் வெளில போகலாம்….”
Advertisement
“ஏன் க்கா மதியமே கடையை அடைக்கிற….மண்டி கூட அடைச்சிருக்கு….”
“ அவங்க தாமரையை பார்க்க போயிருங்காங்க போல….மண்டி திறந்திருந்தா ஆளுங்க வர போக இருக்கும் அதனால தான் மதியமே அடைக்கிறேன்….”
“அப்ப கதிர் கிட்ட கொடுத்துட்டு போவாங்க இல்ல….”
Advertisement
“ம்ம்….அவனுக்கு இன்னும் பத்து நாள்ல எக்ஸாம் வருது….அதான்….”
“என்ன எக்ஸாம்….”
“குரூப் 2 எழுதிக்கிட்டு இருக்கான் சொன்னேன் தான…அதுக்கு படிச்சிக்கிட்டு இருக்கான்….இங்க உட்கார்ந்தா படிக்கமாட்டான்னு அமரன் வரவேணாம்னு சொல்லிட்டான்…..”
“ம்க்கும்….வீட்ல இருந்தாமட்டும் சார் படிச்சிடுவாரு…..”என்று சிவா முணங்க,
“என்னடீ….”
“ஒண்ணுமில்லக்கா…நீ பாரு…எனக்கு தூக்கம் வருது….சாப்பாடோடு வந்து எழுப்புவியாம்….”
“எருமை தூங்கு…எழுப்புறேன்….”என்று அவளின் தலையில் லேசாக தட்டிவிட்டு தீர்த்தா சென்றுவிட,போகும் அவளையே பார்த்தபடி இருந்த சிவாவிற்கு மனது ஏதோ போல் இருந்தது.வந்ததிலிருந்து தமக்கையின் முகத்தை பார்க்கிறாள் தானே முகம் கருத்து,கண்கள் எல்லாம் சிவந்து இரவெல்லாம் தூங்காமல் இருந்திருக்கிறாள் என்று புரிந்தது.
என்ன தான் தீர்த்தா படிப்பை நிறுத்திவிட்டு கடையை பார்த்துக் கொண்டாலும் அதற்காக தன்னை என்றும் கீழா எடுத்துக் கொண்டதில்லை.எப்போதும் பொலிவுடன் தான் வளம் வருவாள் முகத்தில் எப்போதும் ஒரு குறுஞ்சிரிப்பு ஒட்டிய படி இருக்கும் ஆனால் சில காலமாக தீர்த்தாவின் முகத்தில் அது குறைந்துவிட்டது போல் சிவாவிற்கு தோன்றும்.ஆனால் இப்போது மொத்தமாக எதையோ பரிகொடுத்தவள் போல் அவள் இருக்க எதும் பெரிய பிரச்சனையாக இருக்குமோ என்று மனது கிடந்து அடித்துக் கொண்டது.கடவுளே என்ன பிரச்சனைனாலும் தான்டி வருதுக்கு எங்களுக்கு சக்தி கொடு என்று கடவுளிடம் ஒரு அவசர வேண்டுதலை வைத்துவிட்டு கண்யர்ந்துவிட்டாள் சிவன்யா.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அந்த கல்லூரி விடுதியின் வாயிலில் நின்று கொண்டிருந்த கற்பகம் நொடிக்கு ஒரு தரம் வாயிலையும் பின் கையில் வைத்திருந்த கைபேசியையும் பார்த்தபடி இருந்தார்.இன்று அவரின் செல்ல மகள் தாமரையை பார்க்க பெங்களூர் வந்திருந்தனர் அனைவரும்.தாமரை பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.
“ப்ச்…என்ன அகி இன்னும் காணும்…..”என்று கற்பகம் சலித்துக் கொள்ள,
“அண்ணி….கண்ணா வார்டனை பார்த்து ஏதோ கையெழுத்து எல்லாம் போட்டு தான் கூட்டிட்டு வரமுடியும்னு சொன்னான் தான….கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க….”என்ற அகிலாவும் வாயிலை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.அவர்கள் ஆவலாக எதிர்பார்த்தவளும் வந்தாள் பாதம் நோகாமல் நடந்து வந்தாள்.தேவதை போல் வருபவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.அமரன் முதலில் வேக எட்டுக்களுடன் வந்து கொண்டிருக்க அவனின் பின்னே பதுமை போல் தாமரை வந்து கொண்டிருந்தாள். ஐந்தரையடி உயரம்,பாலில் குளித்து எடுத்த நிறம் கண்கள் இரண்டும் கவிதை பேசும் அதுவும் இன்று தலை குளித்திருப்பாள் போலும் விரிந்த கூந்தலுடன் அந்த நீல நிற சுடிதாரில் வான்லோக பதுமை போல் தான் வந்தாள்.
“வாங்க அத்த….”என்று அவள் மென்மையிலும் மென்மையாக அழைக்க,
“அடியே சத்தமா தான் கூப்பிடேன்…ஏன் உன் வாயில என்ன நோவா….”என்று கற்பகம் மகளின் கன்னத்தில் ஒரு குத்துவிட,தன் தாயை முறைத்துவிட்டு சற்று சத்தமாக அழைத்தாள் அவ்வளவே.
“கண்ணாவை கூப்பிட்டியா இல்லை அப்படியே வந்திட்டியா….”என்று கற்பகம் அடுத்து ஆரம்பிக்க,அதுவரை பொறுமையாக தாய்,மகளை பார்த்துக் கொண்டிருந்த அகிலா,
“அண்ணி என்னதிது பிள்ளையே இப்ப தான் வந்திருக்கு….அவளை போட்டு படுத்தி எடுத்துக்கிட்டு…..நீ வா தாமரை கார்ல ஏறு…கண்ணா முதல்ல நாம ஹோட்டலுக்கு போகலாம்…அண்ணி வண்டில ஏறுங்க…”என்று அகிலா கூற,அமரனும் சரி என்று விட்டு காரை எடுத்தான்.
கார் பயணம் முழுவதும் கற்பகமும்,அகிலாவும் தாமரையிடம் பேசிக் கொண்டே வந்தனர்.தாமரை கேட்பதற்கு மட்டும் பதில் அளிப்பது போல் இருந்தது அமரனுக்கு அதை கவனித்தாலும் தனியாக கேட்டுக் கொள்ளலாம் இவர்கள் முன் கேட்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டான்.
காலை உணவு முடிந்து அனைவரும் தங்களின் அறைக்கு சென்றனர்.பேம்லி ரூம் தான் அமரன் எடுத்திருந்தான் இரண்டு அறைகள் கொண்டது.ஒரு அறையில் கற்பகமும்,தாமரையும் தங்கிக்கொள்ள அகிலாவும்,அமரனும் அடுத்த மற்றொரு அறையில் தங்கினர்.
தங்கள் அறைக்குள் வந்தவுடன் அகிலா,
“தாமரை முகமே சரியில்லை இல்ல கண்ணா….”என்று கேட்க,
“ம்ம்…நானும் பார்த்தேன்….நான் பேசிக்கிறேன்மா நீங்க கவலைபடாதீங்க….”
“சரிப்பா…”என்றுவிட்டு அவர் படுத்துவிட அமரன் வரவேற்பறையில் இருந்த குஷனில் படுத்துவிட்டான்.
“ஏன்டீ கண்ணா கிட்ட பேசவே மாட்டேங்குற….”என்று கற்பகம் கேட்க,
“ம்மா….இரண்டு மாசம் கழிச்சு பொண்ணை பார்க்குற…நான் எப்படி இருக்கேனு கேட்க மாட்ட….எப்ப பாரு உன் கண்ணா தானா….”என்று தாமரை குரல் உயராமல் சீற,
“அடிச்சேனா பாரு….என்ன எதிர்த்து பேசுற கழுதை…நீ தான கழுதை பரிட்சை படிக்கனும் நீங்க வந்தா என்னால படிக்க முடியாதுனு சொன்ன அதனால தான நாங்க வரலை….இப்ப பேச்சை பாரு….”என்றவுடன்,
“போமா….நீ எப்போதும் என்கிட்ட சண்டை போட தான் வருவியா….”என்று தாமரை முகத்தை தூக்க,அவளை தன் மடி சாய்த்து தலை கோதிவிட்ட கற்பகம்,
“அது இல்லடீ…கண்ணா எல்லாதிலேயும் வேகம் நீ என்னடானா பொறுமையின் சிகரமா இருக்க…..அதான்…”
“ப்ச்…பாரு இப்ப கூட உன் கண்ணாவுக்காக தான் யோசிக்கிற…..”என்றவள் வேகமாக தன் தாயின் மடியில் இருந்து எழுந்து,
“கொஞ்ச நேரம் கொஞ்சுண்டு எனக்காக யோசியேன்….”என்று கற்பகத்தின் கன்னத்தை கிள்ள,
“உன்னை நினைச்சு தான்டீ நான் பயந்து கிட்டு இருக்கேன்….”என்ற கற்பகம் மகளின் தலையை தடவ,
“போதும் நீ எனகாக பயந்தது….என்னை இப்ப தூங்க வை…..”என்றுவிட்டு அவரின் மடியில் வசதியாக படுத்துகொள்ள கற்பகத்திற்கு மகளை நினைத்து கவலை தான் அதிகரித்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அந்த மாலை மங்கும் நேரத்தில் கடற்கரையில் மிதமான கூட்டம் மட்டும் தான் இருந்தது.ஆங்காங்கே மக்கள் கூட்டமாக அமர்ந்து கடல் அலையில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்.
“இன்னைக்கு கூட்டம் இல்ல…..”என்று சிவன்யா காலை நினைத்துக் கொண்டே கூற,
“ம்ம்….அதனால தான் இன்னைக்கே வருவோம்னு சொன்னேன்….”என்று தீர்த்தாவும் கூற,
“சரி தான்….இன்னைக்கு பொழுது நல்லவே போச்சு…நாளைக்கு மூட்டை கட்டணும் நினைச்சா கடுப்பா இருக்கு க்கா….”என்று சிவன்யா சற்று சலிப்புடன் கூற,
“ச்சு….அதை அப்ப பார்த்துக்கலாம்….இப்பவே ஏன் யோசிக்கிற…..சரி நான் அப்படி உட்காருறேன் நீ வேணா நின்னுட்டு வா…..”என்றுவிட்டு தீர்த்தா மணலில் அமர,சிவன்யாவும் இது தான் சமயம் என்று அவளுடன் சென்று அமர்ந்து கொள்ள சற்று நேரம் சகோதிரிகள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை அமைதியாக கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தனர்.
“நம்ம கடைக்கு ஒரு பிரச்சனை….”என்று தீர்த்தா ஆரம்பிக்க,சிவன்யா தீர்த்தாவை புருவ முடிச்சுடன் பார்த்தாள்.அத்தனை எளிதில் தீர்த்தாவிடம் இருந்து எதையும் வாங்கிவிட முடியாது அவளை பேச வைக்க என்னனென்ன குட்டிகாரணம் அடிக்க வேண்டும் என்று சிவன்யா நினைத்துக் கொண்டிருக்க,இப்போது அவளாகவே பேசவும்,
“என்னக்கா எதுவும் பெரிய பிரச்சனையா….”என்று சற்று கவலையுடன் கேட்க,தீர்த்தா பதில் அளிக்கவில்லை கடலை வெறித்தபடி அனைத்தையும் கூறினாள் தான் அமரனிடம் பேசியதை தவிர்த்து அனைத்தையும் கூறிவிட,
“தாத்தா செத்து நாலு வருஷம் கழிச்சு இப்ப எதுக்கு இந்தம்மா நமக்கு இந்த நோட்டீஸ் அனுப்பனும்…..”
“அந்தாளுக்கு கை,கால் இழுத்துக்கிட்டு இருக்கு….”
“அப்பாவுக்கா….”என்ற சிவன்யா தீர்த்தாவின் பார்வையில் தலைகுனிந்து கொண்டாள்.
“இது தான் கடைசியா இருக்கனும் சிவா…”என்று தீர்த்தா முடிக்கும் முன்,
“இல்லக்கா இனி கேட்கலை…நீ சொல்லு….”
“செல்வத்துக்கு தான் ஒரு பக்க கையும்,காலும் இழுத்துக்கிட்டு இருக்கு…..அதுக்கு டிரிட்மெண்டுக்கு அமெரிக்கா போயிருக்காரு நாளைக்கு தான் வரார்….”என்ற தீர்த்தா மேலும் சிவன்யாவிடம்,
“அவர் இருந்தவரைக்கும் இதை செய்யவிடாம செஞ்சிட்டிருந்தார்…..அவரு போன மாசம் டிரிட்மெண்ட்க்கு போயிருக்காரு லதா தான் இந்த வேலை பார்த்திருக்கு……”
“ச்ச….இந்த அம்மாக்கு வேற வேலையில்லையா….”
“நம்ம உயிரோட இருக்கோம் இல்ல அது தான் அதுக்கு பிரச்சனை….”
“என்னக்கா சொல்லுற…நாம என்ன செஞ்சோம்….”
“நாம என்ன செஞ்சோம் செய்யலை அதெல்லாம் இப்ப முக்கியமில்ல…இப்ப எப்படி இதை சமாளிக்கிறதுனு தான் யோசிக்கிட்டு இருக்கேன்….லதா அனுப்புன நோட்டீஸால தான் எனக்கு இந்த உண்மை வெளில வந்தது…”
“அதான் வக்கீல் அங்கிள உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப தொந்திரவு பண்ணிக்கிட்டு இருந்தாரா….”
“ம்ம்…நான் அப்பவே சுதாரிச்சிருந்திருக்கனும் அவரு அப்பவே இதை ஏன் அழுத்தி சொன்னார் எனக்கு இப்ப தான் புரிஞ்சிது….எல்லாம் நம்ம தாத்தாவால வந்தது அவரு தான் பக்கவா பிளான் பண்ணியிருக்காரு எனக்கு இந்த விஷயம் முப்பது முடிய ஆறு மாசம் முன்னாடி தான் நீங்க அவ கிட்ட இதை சொல்லனும்னு சொல்லியிருக்காரு….அதனால சதாசிவம் அங்கிளும் மறைமுக இதை எனக்கு எச்சரிக்கை செஞ்சிருக்காரு….நான் தான் அவர் சொன்னதை பெரிசா எடுத்துக்கலை….”
“ஏன் தாத்தா இப்படி பண்ணாரு….இதனால உனக்கு எவ்வளவு பிரச்சனை…”
“கடைக்கு ஒண்ணுனா நான் எது வேணாலும் செய்வேன்னு தான் இப்ப பண்ணியிருக்கார்…அவரைஐஐஐ…”
“இதை முன்னாடியே சொல்லியிருந்தா நான் என் காமர்ஸ் பிரோப்பஸருக்கே உன்னை பேசி கல்யாணம் முடிச்சிருப்பேன்….போன மாசம் தான் அவருக்கு கல்யாணம் ஆச்சு…..”
“அடிங்க….என்னடீ சொன்ன….”என்று தீர்த்தா வேகமாக எழ,
“அச்சோ உளறிட்டேனா…ஆபத்து ஓடிடு சிவா….”என்று வாய்விட்டே புலம்பிய படி தீர்த்தாவின் கையில் சிக்காமல் சிவன்யா ஓட,
“உன்னை படிக்க அனுப்பினா…நீ என்ன வேலை பார்த்துக்கிட்டு இருக்க…சிவா நில்லு இல்லை….”
“நீ என்னை கொன்னே போட்டுவ…நான் சிக்கமாட்டேன்….”என்று கூறிக் கொண்டே அவள் ஓட தீர்த்தாவும் விடாமல் ஓடி அவளை பிடித்து முதுகில் இரண்டு மூன்று அடிகளை வைக்க,
“ஆஆஆ…அக்கா வலிக்குது விடுக்கா….அவரு நீ எப்ப வந்தாலும் சைட் அடிப்பாரு என் பிரண்ட் தான் சொன்னா….நானும் ஒருதடவை அதை கவனிச்சேன்…அதனால ஆஆஆஆ….தெரியாம சொல்லிட்டேன் விடுக்கா விடு….”என்று தீர்த்தா பிடித்திருந்த காதை விடுவிக்க பார்க்க,
“என்னடீ இதெல்லாம்…ஆங்…படிக்கிற இடத்துல….எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது சிவா….உன்னை நம்பி தான நான் இவ்வளவு தூரம் அனுப்பியிருக்கேன்….”என்று தீர்த்தா கோபமாக கேட்க,சிவாவும் தன் விளையாட்டை விட்டுவிட்டு,
“க்கா…நான் என் மனசுல பட்டதை சொன்னேன்….அதுக்கு என்னை தப்பா சொல்லுவியா…அவ்வளவு தான் பார்த்துக்க…”என்று மிரட்டுவது போல் ஒற்றை விரலை நீட்ட,
“விரலை முறிச்சிடுவேன்……”
“ஆத்தி…செஞ்சாலும் செய்வ…க்கா சும்மா தான் அக்கா சொன்னேன்…நான் என்ன அப்படியா….”என்று உண்மையான வருத்துடன் கேட்க,
“நீ அப்படி இல்லைனு தெரியும்……”என்று தங்கையின் தலையை வருடிவிட,
“போதும் இந்த பாச கீதம் வாசிச்சதெல்லாம் எனக்கு பசிக்குது வா சாப்பிட போவோம்….”என்று சிவன்யா அந்த சூழலை இலகுவாக்க,தீர்த்தாவும் அதை புரிந்து சிரித்தபடி தங்கையுடன் இணைந்து கொண்டாள்.
error: Content is protected !!